-
வாசு சார்
இளையராஜா பாடல்களை ஏற்கெனவே கேட்டிருந்தாலும் தங்களுடைய விளக்கவுரை பொழிப்புரை போன்ற விரிவான தகவல்களடங்கிய சிறப்புரையைப் படித்த பின் கேட்டால் அது வித்தியாசமாக இருக்கிறது. அது தங்கள் எழுத்துக்குள்ள மகிமை. தொடருங்கள். பாராட்டுக்கள்.
இதே போல் குதிரை நாயகர்கள் பதிவும் சூப்பர்...
கண்ணன் எங்கே... மதுரகீதம் இல்லையோ..
-
இன்னமொரு இனிமையான பாடல் - பாலமுரளியின் மற்றும் ஒரு சிகரத்தை தொட்ட பாடல் - கண்ணதாசன் , மனச்சாட்சி உள்ளர்வர்களுக்கு மட்டுமே எழுதிய பாடல் - படம் "நூல் வேலி " கண்ணதாசன் அவருடைய பாடல்களை அதிகமாக போட்டு கேட்பதில்லை - ஆனால் இந்த பாடலை அவர் கஷ்ட்டங்கள் வரும்போது போட்டு கேட்ப்பாராம் - MSV யின் இசையில் , ஆழமான , சத்தியமான , சிந்திக்க தூண்டும் வரிகள் - கேட்பவர்களை சுண்டி இழுக்கும் என்பது உண்மை ----
மௌனத்தில் விளையாடும் மனச்சாட்சியே -------- காரியம் தவறானால் கண்களில் நீராகி -------- ரகசிய சுரங்கம் நீ ; நாடக அரங்கம் நீ ; சோதனை களம் அல்லவா , நெஞ்சே துன்பத்தின் தாய் அல்லவா ---
ஒரு கணம் தவறாகி , மறைமுகம் துடிப்பாயே - ---------
உண்மைக்கு ஒரு சாட்சி ; பொய் சொல்ல பல சாட்சி - யாருக்கும் நீயல்லவா - நெஞ்சே ! மனிதரின் நிழல் அல்லவா ! ஆசையில் கல்லாகி ; அச்சத்தில் மெழுகாகி யார் முகம் பார்த்தாலும் ஐயத்தில் தவிப்பாய் நீ !
http://youtu.be/1YxUO0KXRlE
-
பொங்கும் பூம்புனல்
சில பாடல்கள் காதில் ஹெட்ஃபோன் வைத்துக் கேட்கும் போதுதான் முழுமையாக அதன் இனிமையை அனுபவிக்க முடியும். அப்படி ஒரு பாடல் தான் இப்போது தாங்கள் கேட்க இருக்கும் பாடல். நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற படத்தில் சந்திரபோஸின் இசையில் அன்று முதல் என்று தொடங்கும் இனிமையான பாடல். பாடும் நிலா மற்றும் வாணி ஜெயராம் குரல்களில் நெஞ்சை அள்ளும் பாடல். பின்னணி இசை சூப்பர்.. அதுவும் ஒரு இடத்தில் தனியாக ட்ரம்பெட் ஒலிக்கும் போது கேட்கக் கேட்க திகட்டாத இனிமையான பின்னணி இசை..
http://play.raaga.com/tamil/browse/m...llaye-T0003629
-
பொங்கும் பூம்புனல்
மானாமதுரை மல்லி... பழைய இசைத்தட்டுக் கடைகளில் தவறாமல் இடம் பெற்றிருக்கும்... புத்தம் புதியதாக கிடைக்கும்.. அப்படிப்பட்ட இசைத்தட்டுக்களில் ஒன்று மானாமதுரை மல்லி... கே.சி.ஸ்வாமிநாதன் என்ற இசையமைப்பாளர்... யாரென்று தெரியவில்லை.. இப்பாட்டைக் கேட்கும் போது நல்ல இசைப்புலமை வாய்ந்தவர் போலத் தோன்றுகிறது.. குறிப்பாக எஸ்.பி.பி. எஸ்.ஜானகி இருவருமே பாடல்களில் தந்துள்ள சங்கதிகளைப் பார்க்கும் போதும் பயன்படுத்தப் பட்டுள்ள இசைக்கருவிகளைக் கேட்கும் போது இவரைப் பற்றி அறிய மனம் ஆவல் கொள்கிறது.. இப்படி அதிகம் அறிந்திராத படங்களில் இது போன்ற அட்டகாசமான பாடல்கள் இடம் பெறுவது தமிழ்த்திரையுலகில் புதியதல்ல என்றாலும் இது போன்ற இனிமையான பாடல்கள் ஹிட்டாகாதது மனதுக்கு வருத்தமளிக்கிறது.
நாம் ஹிட் பண்ணுவோமே..
காதல் சொன்ன கண்ணன் அவன் நீயல்லவா..
http://play.raaga.com/tamil/browse/m...Malli-T0003623
-
பணம் படைத்தவன் - " பவழ கொடியிலே "
வாலி ஒரு சிரஞ்சீவி என்பதை நிரூபித்த பாடல் - அந்த வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களை எண்ணி விடலாம் - சுலபம் - நான் எத்தனை முறை இந்த பாடலை கேட்டுருப்பேன் , கேட்டு கொண்டு இருக்கிறேன் என்று என்னால் எண்ணி சொல்ல முடியவில்லை .. அந்த ஷாஜகானும் , மும்தாஜும் இந்த ஜோடிகளை போல இவ்வளவு அழகா இருந்திருப்பார்களா என்றால் அது சந்தேகமே - என்ன இசை ! எப்படியெல்லாம் தன் காதலியை உயர்த்தி வர்ணிக்கும் பாடல் - அந்த காலத்தில் இந்த பாடலை பாடுவதர்க்க்காகவே , பல ஆண்கள் காதலியை தேடுவார்களாம் ---- LRE 'யின் ஹம்மிங் கேட்க்கும் அனைவரையும் வேறு உலகத்திற்கு எடுத்து சென்று விடும் - MT மிகவும் அருமையாக பாட்டுடன் ஒன்றி நடித்திருப்பார் - இந்த பாடலில் அவர் TMS க்கு பின்னணி பாடினது போல இருக்கும் - அழகை அள்ளி தெளித்திருப்பார் - முதல் தடவை - MT கனவு கண்டு பாடும் பாடல் என்று நினைக்கிறேன்
இந்த பாடலில் ஒரு சில வரிகள் போதும் - கற்பனையின் திறனை காட்ட
"காலடி தாமரை நாலடி நடந்தால் இந்த காதலன் உள்ளம் புண்ணாகும் "
பவழ கொடியிலே முத்துக்கள் - புன்னகைக்கு ஒரு உதாரணம்
உயிருடன் வரும் ஒரு கன்னி ஓவியம் - அழகான பெண் மயிலுக்கு உதாரணம் ------
இந்த பாடலை கேட்க்கும் பொழுது - "கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா " என்ற பாடலும் , காவியமா ? நெஞ்சில் ஓவியமா ? என்ற காலத்தால் அழியாத பாடலும் நினைவிற்கு வருவதை தடுக்க முடியாது - தாஜ் மகாலின் அழகை இந்த இரு பாடல்களும் சொன்னது போல வேறு எந்த பாடல்களும் எடுத்து சொல்லியிருக்க இயலாது என்பது என் கருத்து
http://youtu.be/oFLYvDYxGls
-
பொங்கும் பூம்புனல்
முன்னரே குறிப்பிட்டிருந்தது போல், சங்கர் கணேஷ் - வாணி ஜெயராம் இணைந்த பாடல்கள் காலத்தால் அழியாத சாகா வரம் பெற்றவை. அதில் ஒன்று தான் பெண் மனம் பேசுகிறது படத்தில் இடம் பெற்ற சின்னஞ்சிறு தேராக என்ற இந்தப் பாடல்..
கேட்கும் போதே வாணி ஜெயராமின் குரல் நெஞ்சில் புகுந்து நாடி நரம்பெல்லாம் புத்துணர்ச்சி ஊட்டுகிற பாடல்.
http://play.raaga.com/tamil/browse/m...rathu-T0002304
-
நன்றி ராகவேந்திரன் சார்.
'கண்ணன் அங்கே... ராதை இங்கே... அன்பே வா வா வா' என்று நான் குறிப்பிட்டுள்ளது 'மாங்குடி மைனர்' படத்தில் வாணி ஸ்ரீப்ரியாவுக்காகப் பாடின பாடல்.(நான் இங்கே என்று குறிப்பிட்டு விட்டேன் என்று நினைக்கிறேன்).'இன்றைய ஸ்பெஷல்' தொடரில் கூட இந்தப் பாடலை நம் அன்பு சுந்தர பாண்டியன் சாருக்கு டெடிகேட் செய்தேன் என்று நினைவு.
https://www.youtube.com/watch?v=fzZE...yer_detailpage
தாங்கள் குறிப்பிட்டுள்ளது 'மதுர கீதம்' படத்தில் சந்திர போஸ் இசையில் சுசீலா அவர்கள் பாடிய 'கண்ணன் எங்கே கண்ணன் எங்கே... ராதை மனம் ஏங்குதம்மா' பாடல் (copy of 'SAPNA MERA TOOT GAYA TU NA RAHA'song from 'khel khel mein'). பாலாவும் பாடியிருப்பார்.
https://www.youtube.com/watch?v=_hfb8TgyLb4&feature=player_detailpage
-
மக்கள் திலகம் திரி பாகம் 12 ஐ அற்புதமான கட்டுரையோடு தொடங்கி வைத்த இனிய அருமை நண்பர் திரு.கலைவேந்தன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.
தங்களுக்காக நாளை ஒரு ஸ்பெஷல் பதிவு அதுவும் மதுர கானத்தோடு தொடர்புடைய பதிவை தங்களுக்கு வாழ்த்துப் பதிவாக அளிக்கவுள்ளேன். இந்த நடிகர் திலகத்தின் பக்தனின் வாழ்த்தை தாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
மீண்டும் தங்களுக்கு என் நெஞ்சு நிறைந்த வாழ்த்துக்கள்.
-
ரவி சார்,
அடி தூள். பாலமுரளியின் இரண்டு பாடல்களும் அட்டகாசம்.
அருள்வாயே நீ அருள்வாயே....
திருவாய் மலர்ந்து அருள்வாயே
அடிக்கடி விரும்பிக் கேட்கும் பாடல். பாடலுக்கான தங்கள் விளக்கமும் அருமை. மிகவும் ரசித்து உணர்ந்து எழுதி இருக்கிறீர்கள்.
'மௌனத்தில் விளையாடும் மனச்சாட்சியே' பாடலும் அருமை.
நல்ல ரசனை.
சாது மிரண்டால்..... காடு கொள்ளாது
ரவி சார் மிரண்டால்? கானங்கள் போட இடம் கொள்ளதோ?
-