http://i62.tinypic.com/2cigs50.jpg
Printable View
இனிய நண்பர் திரு செல்வகுமார் சார்
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களால் அடையாளம் காட்டப்பட்டவர்கள் , உயர்வு பெற்றவர்கள் இன்று அவரையே மறந்து துதி பாடும் அவல நிலை பற்றி தாங்கள் மிக தெளிவாக பட்டியலிட்டு இருக்கிறீர்கள் . மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் இவர்களை பற்றி தான் வாழ்ந்த காலத்திலேயே மிக அழகாக கூறிவிட்டார் .
''பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு
கண் மூடி போகிறவர் போகட்டுமே
என் மனதை நான் அறிவேன்
என் உறவை நான் மறவேன்
எது ஆன போதிலும் ஆகட்டுமே
நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்''
கோடிக்கணக்காண மக்கள் திலகத்தின் உண்மையான ரசிகர்கள் - தொண்டர்கள் இருக்கும் நிலையில் நமது அடுத்த இலக்கு '' மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா '' தொடர்பான ஆரம்ப கட்ட பணிகளை துவக்க வேண்டும் .அதற்கான முயற்சிகளை இன்றே துவக்க ஆவன செய்ய வேண்டும் ..
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் அவரை பற்றிய செய்திகள் , நிழற்படங்கள் , ஆவணங்கள் , அன்றாட நிகழ்வுகள் ,மக்கள் திலகத்தின் படங்கள் வெளியான நாட்களின் நினைவலைகள் பற்றி நம்முடைய பதிவுகளை பகிர்ந்து கொள்ளலாம் .மீள் பதிவுகளை தவிர்ப்பது நலம் .தனி நபர் செய்திகள் ,படங்கள் ,தேவை இல்லாதவர்களை பற்றிய செய்திகள் ,குடும்ப விழா ,பதிவுகளை அறவே தவிர்க்கவும் .
நண்பர்களே
மக்கள் திலகத்தின் நிழற்படங்களை பதிவு செய்யும்போது அதற்குரிய செய்தியையும் சேர்த்து பதிவிடவும் .உங்கள் கருத்தையும் எழதவும் . ஏற்கனவே பதிவிட்ட நிழற் படங்களை மீண்டும் மீண்டும் பதிவிடுவதை தவிர்க்கவும் .மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் 1 முதல் மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -13 வரை முழுவதையும் பார்த்தவர்கள் -படித்தவர்கள் - மீள் பதிவை தவிர்ப்பார்கள் என்று நம்புகிறேன் .
இனிய நண்பர் திரு முத்தையன் சார்
உங்களின் 3000 முத்தான பதிவுகளுக்கு இனிய வாழ்த்துக்கள் பல வித்தியாசமான பார்வையில் மக்கள் திலகத்தின் நிழற் படங்களின் தொகுப்பு மிகவும் அருமையாக இருந்தது தொடர்ந்து அசத்துங்கள் .
TODAY 11.00PM WATCH SUN TV
http://i57.tinypic.com/sziyki.jpg
பேராசிரியர் திரு செல்வகுமார்
உங்களின் ஆதங்கம் நியாமானதே . அதே போல் மக்கள் திலகம் திரியில் தவிர்க்க வேண்டியவைகளை பற்றி சரியாக சொல்லி இருப்பதை மற்றவர்கள் உணர்ந்து கொள்வது நல்லது .திரு வினோத் கூறியது போல் மக்கள் திலகம் எம்ஜிஆர் -100 விழாவை சிறப்பாக நடத்திட எல்லோரும்ஒற்றுமையுடன் செயல் பட வேண்டிய நேரமிது .கவனத்தை திசை திருப்பாமல் எல்லா நண்பர்களையும் ஒருங்கிணைத்து நூற்றாண்டு விழா காண நீங்கள் முயற்சியை தொடங்கவும்.மக்கள் திலகத்தின் ஆசி நமக்கு என்றென்றும் உள்ளது .முனைப்போடு செயல் படுவோம் . வெற்றி காண்போம் . வரலாறு படைப்போம் .