-
அன்பு நண்பர்களுக்கு,
நடிகர் திலகம் அவர்களுடைய 60வது படமான குறவஞ்சி திரைப்படத்தினை எத்தனை பேர் பார்த்திருப்பீர்கள் என்று தெரியாது. ஆனால் அவரும் கலைஞரும் இணைந்த படங்களிலேயே கலைஞரின் உரையாடலில் மிகச் சிறந்த படம் என நான் எண்ணும் படம் குறவஞ்சி. அதற்கு முன்னரும் அதற்கு பின்னரும் கலைஞர் உரையில் வெளிவந்த படங்கள் ஏராளம். ஆனால் குறவஞ்சி திரைப்படத்தின் உரையாடல்கள் பராசக்தி யைவிட அதிக தாக்கம் ஏற்படுத்தக் கூடியவை. குறிப்பாக அரசவையில் சாதியை அடிப்படையாக வைத்து வரும் உரையாடல்கள் எந்தக் காலத்திற்கும் பொருந்தக் கூடியவை. அந்தக் காட்சியில் தான் நடிகர் திலகம் உரையாடும் போது பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற மொழியை உயிருடன் உச்சரிப்பார். அதைத்தான் செம்மொழி பாடலுக்காக கலைஞர் பயன் படுத்தினார். அது மட்டுமன்றி ரா.கிருஷ்ணமூர்த்தி எழுதி சி.எஸ்.ஜெயராமன் குரலில் அவருடைய வாழ்க்கையில் சிறந்த பாடலும் இப்படத்தில் தான் இடம் பெற்றது. நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே என்ற பாடல். அது மட்டுமின்றி செங்கையில் வண்டு கலீர் கலீர் என்ற பாடல், என்னாளும் தண்ணியிலே என்ற பாடல், காதல் கடல் கரையோரமே என்ற பாடல் என அனைத்து பாடல்களும் தெவிட்டாத தேனமுது, கருத்துக்களின் பொக்கிஷம்.
இது மட்டுமா, பின்னாளில் மீனவ நண்பன் என்று சொல்லிக் கொள்ள பல படங்கள் வந்தாலும் மீனவர்களின் வாழ்க்கையைப் பற்றி இந்தப் படத்திலேயே அலசி விட்டார் கலைஞர். என்னாளும் தண்ணியிலே எங்க பொழப்பே இருக்கு என்கிற பாடல் முழுதும் மீனவர் வாழ்க்கையினைப் பற்றியதாகும்.
நடிகர் திலகத்துடன் சாவித்திரி, மைனாவதி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் வெளியான நாள் 04.03.1960. மேகலா பிக்சர்ஸ் தயாரித்து ஏ.காசிலிங்கம் இயற்றிய இப்படத்தைப் பற்றி இப்போது எழுதக் காரணம் ...
ஆம்.. தங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இப்படம் தற்பொழுது நெடுந்தகடு வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தை இதுவரை பார்க்காதவர்கள் அவசியம் பார்க்க வேண்டும். குறிப்பாக கலைஞர் உரையினை விரும்புவோர் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டிய படம்.
இதோ அந்த நெடுந்தகட்டின் முகப்பு மற்றும் பின் பக்கங்களின் நிழற்படங்கள்.
http://i872.photobucket.com/albums/a...ravanchiFA.jpg
http://i872.photobucket.com/albums/a...ravanchiRA.jpg
அன்புடன்
-
டியர் முரளி சார்,
நிச்சயம் "திருவருட்செல்வர்"-ஐ சாந்தியில் தரிசிக்க ஞாயிறு மாலைக் காட்சியில் கூடுவோம்.
-
பார்த்தா, ராதா
நிச்சயமாக ஞாயிறு மாலை சந்திப்போம். வேறு சில நண்பர்களும் வருகிறோம் என்று சொல்லியிருகிறார்கள்.
பாலா,
நீங்கள் சனிக்கிழமை வருவது பற்றி சந்தோஷம். சனிக்கிழமை மாலை காட்சிக்கு ஒய்.ஜி. மகேந்திரா மற்றும் அவருடன் சேர்ந்து திரையுலக கலைஞர்கள் சுமார் 20 பேருக்கு மேல் வருவதாக இருக்கிறார்கள்.
பொது மக்களின் வரவேற்பு இன்றே தொடங்கி விட்டது. ரசிகர்ளை விட இன்றைய தினம் பொது மக்களே அதிகம் வந்திருந்தனர். சென்ற வருடம் சாந்தியில் புதிய பறவை பெற்ற வசூலை இந்த ஒரு வருட காலத்தில் வேறு எந்த புதிய படமும் பெறவில்லை என்ற தகவலை அறிய நேர்ந்தது. திருவருட்செல்வரும் அது போல ஒரு சாதனை புரிய வாழ்த்துவோம்.
அன்புடன்
-
Raghavendra sir,
Nice intro about Kuravanji.
My f-i-l watched Thiruvarutchelvar y'day eve show along with Mr Swami & others. I went to the theatre to have a glimpse of the festive look...Murali sir also came there.
-
அன்பு நண்பர் மோகன்,
நேற்று முற்பகல் முதல் மாலை சுமார் 4 மணி வரையிலும் நான் சாந்தி திரையரங்கில் தான் இருந்தேன். அங்கு நம் இணைய தளம் சார்பாக ஒரு சிறிய எளிய பதாகையினை வைத்து விட்டு, அவசர வேலை நிமித்தமாக உடனே வீடு திரும்பி விட்டேன். உங்களையெல்லாம் சந்திக்க முடியாதது வருத்தம் தான். என்றாலும் நாம் அனைவரும் ஞாயிறு மாலை சந்திப்போம் என்ற ஆவல் எனக்கு ஆறுதல். தாங்களும் பார்த்திருப்பீர்கள். நீங்கள் திரும்புகின்ற திசையெல்லாம் நடிகர் திலகத்தின் திருவுருவம் தான் காட்சி யளிக்கும் என்பது போல் சகோதரி கிரிஜா அவர்கள் அட்டகாசமாக அலங்கரித்துள்ளார். அவற்றையெல்லாம் என்னுடைய கீழ்க்காணும் வலைப்பதிவில் காணலாம்.
http://ntfilmschennai2011.blogspot.com/
அங்கே வைக்கப் பட்டிருக்கும் நம் இணைய தள பதாகை
http://2.bp.blogspot.com/-b-bOo9ECOl...idisplay08.jpg
அன்புடன்
-
நான் விரும்பிய காட்சி - 4
நடிகர் திலகத்தின் ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற திரைக்காவியங்களில் முக்கியமானது பட்டு பிலிம்ஸ் நீலவானம். ஒவ்வொரு காட்சியிலும் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். குறிப்பாக தேவிகா இவருடைய காதலியைப் பற்றி விசாரிக்கப் போக அவளுடைய கேள்வியை தவறாகப் புரிந்து கொண்டு அவளுடைய உடல்நலமின்மையினைப் பற்றிய, அவளுக்குத் தெரியாத விஷயத்தை இவர் சொல்லிவிட தொடரும் உணர்ச்சிகள் வார்த்தைகளால் விவரிக்க இயலாது. எத்தனை ஆண்டுகளாயினும் மறக்க முடியாத இதுவும் நான் விரும்பிய காட்சியில் ஒன்றாகும். இதோ தாங்களும் அதைக் காண, உணர -
http://www.youtube.com/watch?v=STCBN60rIzc
தாங்களும் இக்காட்சியினைப் பற்றிய தங்கள் உணர்வுகளையும் கருத்துக்களையும் பகிரந்து கொள்ளலாம்.
அன்புடன்
ராகவேந்திரன்
-
அனைவருக்கும் கனிவான கர வருட தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !
-
டியர் முரளி சார்,
தங்களுடைய "சிவகாமியின் செல்வன்" சிறப்புப் பதிவு, தங்களை மட்டுமல்ல, அனைவரையுமே 1974 குடியரசுத் திருநாளுக்கு அழைத்துச் சென்று விட்டது. நாங்களும் உங்களோடு [உங்களது தயவில்] மதுரை ஸ்ரீதேவியில் அதிகாலை 7 மணி ஓபனிங் ஷோ [ரசிகர் காட்சி] பார்த்து விட்டோம். அழைத்துச் சென்ற உங்களுக்கு உளப்பூர்வமான நன்றிகள் !
டியர் பார்த்தசாரதி சார்,
நடிப்புலகப் பேரொளியின் "ஞான ஒளி" காவியத்தினுடைய அலசல் பதிவுகள் ஒவ்வொன்றுமே அருமை, அற்புதம், அபாரம் ! இக்காவியத்தை மீண்டும் ஒரு முறை தரிசித்த திருப்தியை உண்டாக்கி விட்டீர்கள். எளிமையும், நேர்த்தியும் கலந்த தங்களின் எழுத்துநடை பிரமாதம். பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள் !
சகோதரி சாரதா,
நடிகை சுஜாதாவின் மறைவிற்கு தாங்கள் வடித்துள்ள அஞ்சலிக் கட்டுரையை படித்து முடித்தவுடன் எனது கண்கள் குளமாயின !
"சிவகாமியின் செல்வன்" குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் 1970களில் சென்னையில் சாதனை படைத்த ஹிந்திப்படங்களின் புள்ளி விவரங்கள் அடங்கிய சிறப்புப் பதிவு சூப்பரோ சூப்பர். சென்னையில் நடைபெற்ற "ஆராதனா"வின் பொன்விழாவின் [50வது வார விழாவின்] போது, ராஜேஷ் கன்னாவுக்கு பொன்விழாக் கேடயத்தை வழங்கியவர் நமது நடிகர் திலகம்.
டியர் ராகவேந்திரன் சார்,
சாந்தி அரங்க "திருவருட்செல்வர்" புகைப்படக் களஞ்சியம் அருமையிலும் அருமை. அதனை உலகப் பார்வையாளர்களுக்கு உன்னத விருந்தாக்கிய உங்களுக்கு நன்றி ! தங்களது பதாகை தனித்தன்மையுடன் ஜொலிஜொலிக்கிறது.
அன்புடன்,
பம்மலார்.
-
டியர் பாலா சார்,
"திருவருட்செல்வர்" திரைக்காவியத்தைக் காண்பதற்காக பெங்களூரூவிலிருந்து சென்னை வரும் தங்களது சீரிய செயலும், சிவாஜி பக்தியும் பாராட்டுக்குரியது, போற்றுதற்குரியது !
டியர் முரளி சார், ராகவேந்திரன் சார், பார்த்தசாரதி சார், ரங்கன் சார், ஜேயார் சார்,
"திருவருட்செல்வர்"-ன் ஞாயிறு மாலைக் காட்சியின் அருட்பெருஞ்"ஜோதி"யில் கலந்து ஒன்று கூடி சங்கமிப்போம் !
அன்புடன்,
பம்மலார்.
-
மதுரை 'சென்ட்ரல்' : ஸ்டைல் சக்கரவர்த்தியின் "ராஜா"
[21.1.2011 - 27.1.2011]
23.1.2011 ஞாயிறு மாலை அலங்காரங்கள்
http://i1094.photobucket.com/albums/.../scan0059a.jpg
http://i1094.photobucket.com/albums/.../scan0059b.jpg
இப்புகைப்படங்களை எடுத்த மதுரை அரசமரம் செவாலியே டாக்டர் சிவாஜி குரூப்ஸ் குழுவைச் சேர்ந்த ரசிக நல்லிதயம்-புகைப்படக் கலைஞர்-நண்பர் திரு.சாந்தாராம் அவர்களுக்கும், புகைப்படங்களை அனுப்பி வைத்த இக்குழுவின் நிர்வாகி அருமை நண்பர் திரு.ஏ.என்.குப்புசாமி அவர்களுக்கும் கனிவான நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.