change of pronunciation in cognates, example from IE
சொல்லின் ஒலிப்பு முறை மாற்றம் அடைவதற்கோர் எடுத்துக்காட்டு வேண்டுமாயின், இந்தோ ஐரோப்பிய மொழிகளிலிருந்து ஒன்று தரலாமென்று நினைக்கின்றேன்.
The words chief and chef are etymological twins.
Chief ( Middle French chef, and its modern pronunciation preserves the Middle French consonant sound)
Chef ( the consonant had changed to a "sh"-sound in French.)
ஆங்கிலத்தில் நாவொலிப்பு மாறினாலும் எழுத்துக்கூட்டும் முறை மாறுவதில்லை என்பதறிவீர்கள்.
தமிழிலிருந்து தொடர்புடைய மொழிகளுக்கும் அம்மொழிகளிலிருந்து தமிழுக்கும் சொற்கள் மாறும்போது இங்ஙனம் ஒலிமாறுதல் அடையும்சொற்களை நீங்கள் கண்டறியுங்கள். மேலே நான் எழுதியுள்ளவற்றிலிருந்தோ அல்லது வேறு ஆய்வாளர்களின் வெளியீடுகளிலிருந்தோ இவற்றை நீங்கள் பொறுக்கியெடுக்கலாம்.
சீனிக்கு மலையாளத்தில் "பஞ்சார" என்றும் "ஜீனி" என்றும் சொல்வதுண்டு.
சீனி - ஜீனி : இதை மேற்கண்டபடி ஆன ஓர் ஒலிமாற்றம் எனல் பொருந்துமா?
Tamil word for Supreme God
A Tamil word for God the Supreme
"தற்பரன்"
ஒப்பிலா உயர்ந்தோனாகிய கடவுள் என்பதை
"தற்பரன்" என்ற சொல் குறிக்கும். தன்+பரன், தானே இயங்குபவனும் எங்கும் பரந்து (பரவி) நிற்பவனும் ஆகிய இறைவன்.
சீரார் கதிர்காமஞ் சென்றேன் அறுமுகவன்
பாராறு மாலைதன்னைப் பாடுதற்கு நீயிறங்காய்
தாரார் குழலுமையார் தானீன்ற தற்பரனே
காராறு மேனிக் கணபதியே காப்பாமே
பார் = பார்க்கின்ற (புகழ்கின்ற ); ஆறு= ஆறுபகுதிகளை யுடைய; மாலை = கதிர்காம மாலை என்னும் இந்நூல்; தார் = மாலை; ஆர் -அணிந்த. குழல் = கூந்தல்; கார் = அழகு;
ஆறு= ஆறுபோல் வழிகின்ற. காப்பாமே= காவலாக வேண்டும் என்றவாறு.
அன்றி, பாராறு மாலை = உலக இயல்புவழி நின்று இயற்றப்பெற்ற இம் மாலை எனும் நூலை எனினுமாம்.
இறங்காய் - மேலுலகினின்று இறங்கி வாராய்
chattiriyar (kSatriya) continued from Sep 08, 2010, 8.42am
Pl refer to post on Sep 08, 2010 8:42 am
"சத்திரியன் என்ற சொல்" என்ற தலைப்பில், ச- க திரிபுகளைக் கவனித்தோம்.
அதன் தொடர்பில்:
சாமி (தமிழில்) --காமி ( ஜப்பானிய மொழி)
காமி என்பதன் பொருள்: "Divine Power(s)" என்பதாம்.
Re: chattiriyar (kSatriya) continued from Sep 08, 2010, 8.
Quote:
Originally Posted by bis_mala
Pl refer to post on Sep 08, 2010 8:42 am
"சத்திரியன் என்ற சொல்" என்ற தலைப்பில், ச- க திரிபுகளைக் கவனித்தோம்.
அதன் தொடர்பில்:
சாமி (தமிழில்) --காமி ( ஜப்பானிய மொழி)
காமி என்பதன் பொருள்: "Divine Power(s)" என்பதாம்.
சாமி என்ற சொல் ஸ்வாமி என்ற சமஸ்க்ருத சொல்லின் திரிபல்லவே ?