Quotable Quote from VenkkiRam.
" யாரிடம் நாம் அதிக அளவு பாசம், அளவு கடந்த மதிப்பு வைத்திருக்கிறோமோ, அவர்களிடத்தில்தான் விமர்சனங்களை வைப்போம். இதுவும் ஒருவகையில் உலகநியதிதான். "
Printable View
Quotable Quote from VenkkiRam.
" யாரிடம் நாம் அதிக அளவு பாசம், அளவு கடந்த மதிப்பு வைத்திருக்கிறோமோ, அவர்களிடத்தில்தான் விமர்சனங்களை வைப்போம். இதுவும் ஒருவகையில் உலகநியதிதான். "
an interesting remix
https://www.youtube.com/watch?v=mI4LlEzH8ck
திரு கோபாலுக்கு நாற்பது ஆண்டுகளாக (வரும் 2016-ல்) நிலையாக நிற்கும் ராஜாவின் விஸ்வரூப ஆளுமை ரொம்பவும் படுத்துது என நினைக்கிறென். நீங்கள் நான் பதிவிட்டதை மீள்பதிவு செய்திருக்கிறீர்கள். நன்றி. ஆனால் ராஜாவின் இசை மகத்துவத்தை புரிந்து தெளிய தெளிய அதுபோன்ற விமர்சனங்கள் கூட பகலவன் பட்ட பனித்துளி போல காணாமல் போய்விடும். முழுவதும் சரணாகதி ஆகவேண்டியதுதான். வேற வழியேயில்லை. சூரியன் போல. நெருங்க நெருங்க உங்கள் மீது விழும் இசைஈர்ப்பு விசை அதிகமாகிக் கொண்டே செல்லும். கடைசியில் ஜோதியில் ஐக்கியமாகும் வரை. விமர்சனம் வைத்தாலும் அவரது இசை - வெறுப்பை வளர்க்கும் நெருப்பல்ல. ஒருநிலைப்படுத்தும் சக்தி. ஏனென்றால் அவருக்கு மாற்றாக இன்னும் யாருமே வரவில்லை. அவ்வளவு சீக்கிரம் வரப்போவதும் இல்லை. அது முழுக்க முழுக்க இசை சம்பந்தப்பட்ட ஞானம் மட்டுமே அல்ல. பாடும் நிலா பாலு சொல்வது போல , ராஜா போன்றவர்கள் ஐநூறு, ஆயிரம் வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே மண்ணில் தோன்றலாம். ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள். 'ராஜா ஒரு தன்னிகரற்றவர்' என்ற திரியில் பதியப்படும் பதிவுகளுக்கு மாற்று கருத்து இருந்தால் பதியவும். அது கலகப்பதிவாக இல்லாமல் இருக்கும் பட்சத்தில் தொடர்ந்து உரையாடுகிறேன்.
தலைவரே ,
இதெல்லாம் ஓவர். creativity peak (சந்தை நிலவரம் விட்டு விடுகிறேன். எனக்கு அதை பற்றி லட்சியமேயில்லை) என்று பார்த்தால் 1980 முதல் 1991 வரை 12 வருடங்களே. அதற்கு பிறகு அவரின் பலவீன நிழல் மட்டுமே அவ்வப்போது தோன்றி மறைந்தது. 1977- 1979 ஆர்வமான முன்னேற்றம் ,ரசிக்கத்தக்க மாறுதல்.
இது சிவாஜி,கண்ணதாசன், ஜெயகாந்தன்,அசோக மித்திரன்,பாலசந்தர்,பாலு மகேந்திரா,மகேந்திரன்,பாரதிராஜா ,ஸ்ரீதர் ,கமல் ,விஸ்வநாதன்,மகாதேவன் ,ரகுமான் அனைவருக்கும் பொருந்தும்.(அகால மரணம் தழுவியவர்,காலத்தின் கோலத்தால் ஒதுக்க பட்ட மேதைகள் விதிவிலக்கு அல்லது one time wonder மௌனி,கரிச்சான் குஞ்சு,பா.சிங்காரம் தொடர்ந்து கொடுக்காததால் ஒன்றும் சொல்ல இயலாது)
உங்களின் இதுவரையிலான பதிவுகள் மூலம் இதைத்தான் நான் முன்னரே புரிந்துகொண்டேன் . மேற்சொன்ன எல்லா ஆளுமைகளிடமிருந்தும் வேறுபட்டு ராஜா சாதித்தது என்ன என்ற தளத்திலேயே நீங்கள் பல கோணங்களில் வேறுபடுகிறீர்கள். இரண்டு விதமான அணுகலாம். இசை ரீதியாக, உணர்வு ரீதியாக.. இரண்டிலுமே நீங்கள் கருத்தான பல பதிவர்களிடம் தொடர்ந்து உரையாட வேண்டும்.
நீங்கள் இந்த ஒப்பீடு விஷயத்தில் முக்கிய காரணியாக கருதும் பாடல் ஆக்கங்களே ராஜாவின் படைப்புத்திறனில் இருபத்தைந்து சதவீதம்தான் ஆக்கிரமித்திருக்கிறது. மீதிமுழுதும் படக்காட்சிகளுக்கான பின்னணி இசை. இந்த நூறு சதவிதத்தையும் அலசி பகுப்பாய்வு செய்தால்கூட அதையும் தாண்டி இளையராஜா என்ற பின்னணி பாடகர் இருக்கிறார், பாடலாசிரியர் இருக்கிறார்.. விஸ்வரூபத்தின் ஒரு பகுதியை மட்டுமே நீங்கள் கணக்கில் கொண்டு அட்டைகத்தியை நினைக்கும் விதத்தில் காற்றில் சுழட்டுவதால் பயனில்லை.
சமீபத்தில் வந்த ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - பின்னணி இசை , நீதானே என் பொன்வசந்தம் படப் பாடல்கள் படைப்பாக்கத்தில் இன்னும் அணையாத எரிமலையாக கனன்று கொண்டிருக்கிறார் என்பதையே பறைசாற்றுகிறது. "1980 முதல் 1991 வரை 12 வருடங்களே. அதற்கு பிறகு அவரின் பலவீன நிழல் மட்டுமே அவ்வப்போது தோன்றி மறைந்தது. " - நீங்கள் வசதியாக ஒரே வரியில் இப்படி சொல்லிவிட்டு போய்விட்டீர்கள். இது ராஜா மீதான விமர்சனமாக படவில்லை. தனது விமர்சனம் மூலமாவது ராஜாவின் ஆளுமையை கூடிய மட்டும் சிறுமைபடுத்திப் பார்க்கலாமே என்ற பிரயத்தனமே மேலோங்கி நிற்கிறது.
இப்போதிருக்கும் தலை முறை இன்னும் சில ஆண்டுகளில் ஹாரிஸ், யுவன், இமான் போன்றோரை புறந்தள்ளிவிட்டு புதியவர்களை ஏற்று கொள்வார்கள். இப்போதே வித்யாசாகரை காணவில்லையே.
நமக்கு தான் ரசனை மாறி கொண்டே வருகிறதே தவிர, அவரென்னவொ சரியாக தன இருக்கிறார்.இன்னும் 10 ஆண்டுகள் கழித்தும் கூட ராஜா சார் எதிர் நீச்சல் போட்டு புதியவர்களோடு போட்டியில் இருப்பார். இதற்க்கு காரணம் காசு சம்பாதிப்பதற்காக இல்லை, அந்த நேரத்திலும் ஏதாவது கற்றுக்கொண்டு, இசை எழுதி கொண்டிருப்பார். தொழில் செய்யும் திரைப்பட எண்ணிக்கையை வைத்து மட்டுமே ஒருவரின் கிரியேட்டிவிட்டியை கணக்கிட முடியாது. அப்படி என்றால் சந்திரபோஸ், ஷங்கர் கணேஷ், தேவா, யுவன், ஸ்ரீ காந்த் தேவா, விஜய் ஆண்டனி இவர்கள் எல்லாருமே ஒவ்வொரு காலகட்டத்தில் நிறைய படம் பண்ணியவர்கள் தான். ஆனால் தரம்? ஆண்டுக்கு 30 கொடுத்த போதும் 3 கொடுத்த போதும் ராஜா சாரின் கிராப் கோடு எப்படி இருந்தது? நமக்கு அந்த இசை மண்டையில் ஏறாமல் போகலாம், அதற்கு காரணம் அவரா? இல்லை பதட்டமான இந்த உலகத்தில், நமக்கு அடிக்கடி மாற்றம் தேவை படுகிறதா? அதுவும் இந்தியாவில், மீடியாக்கள் எல்லோரையுமே, எல்லா நேரத்திலுமே பதட்டத்தில் வைத்திருக்கிறார்கள். ஏன் என்று தான் தெரியவில்லை.
தஞ்சை பெரிய கோவிலை எப்படி கட்டினார்கள் என்று 1000 ஆண்டுகளாக புரியாத ஒரு புதிரை பேசுவது போல் காலாகாலத்துக்கும் ராஜா சார், விஞ்ஞானி ஸ்டெபன் போன்றோர் அவரவர் துறைக்கு அளித்த பங்களிப்பு ஆராய்ச்சி செய்யப்படும்
Sivasub, nice catch. Interesting indeed. I could recognize "Panivizhum" song (mouna raagam), the intense music of "Nee thoongum nerathil". The third part (from 1:30) is so familiar...but could not catch it, probably because it is slightly tweaked here and there to suit the mood of the whole theme. Appears to me that most of it is sampled from original sound and tweaked a little.
thanks,
Krishnan
இளைய ராஜா பின்னணி இசை, பாடல்கள் இதை தாண்டி எதை அலசினாலும் மிக பெரிய பின்னடைவே. பாடகர்,பாடலாசிரியர், போகிற போக்கை பார்த்தால் இன்னும் என்னென்ன வருமோ.
நீங்கள் என்னை விவாதத்துக்குள் ஈர்க்க பார்க்கிறீர்களா அல்லது நீதானே என் பொன் வசந்தம் பாடல்கள் இளைய ராஜாவிடம் பொறி இருப்பதை காட்டுவதாக நிஜமாகவே நம்புகிறீர்களா?(எனக்கு இதில் பீடியின் முனையளவு கங்கு கூட படவில்லை)மூளை சலவை செய்ய பட்ட நாஜி படை வீரர்களுடன் உரையாடும் உணர்வே ஏற்படுகிறது. நான் தொடர் எழுதுவதாக இருக்கிறேன். தொடருங்கள்.
//நீங்கள் என்னை விவாதத்துக்குள் ஈர்க்க பார்க்கிறீர்களா அல்லது நீதானே என் பொன் வசந்தம் பாடல்கள் இளைய ராஜாவிடம் பொறி இருப்பதை காட்டுவதாக நிஜமாகவே நம்புகிறீர்களா?(எனக்கு இதில் பீடியின் முனையளவு கங்கு கூட படவில்லை)மூளை சலவை செய்ய பட்ட நாஜி படை வீரர்களுடன் உரையாடும் உணர்வே ஏற்படுகிறது.//
திரு கோபால்,
உரையாடிப் பயனில்லை. ஒண்ணு மட்டும் கடைசியாக சொல்லி முடிச்சிக்கிறேன். இந்த இடம் ( ராஜா பற்றிய திரிகளின் தொகுப்பு) பிரசித்தி பெற்றது. இசைமீதான மேன்மையான ரசனை கொண்ட, அனுபவமுள்ள பல இசை விமர்சகர்கள், ரசிகர்களின் கருத்துக்கள் பதித்த இடம் இது. அதையெல்லாம் ஒப்பிடுகையில் உங்களது ராஜா மீதான இதுவரையிலான பார்வைகள் மிகவும் மேலோட்டமாகவும், மலிவான முறையிலும் இருக்கின்றது. உண்மையில் இதுபோன்றவர்களே நாஜிப்படை. இணையத்தில் யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். ஆனால் ஒவ்வொருமுறையும் வாய்ப்பு அளிக்கப்பட்டும், நீங்கள் இங்கே சுழட்டுவது வெறும் அட்டைகத்திதான். நன்றி.
இன்று தீபம் தொலைகாட்சியில் மௌன ராகம் பார்த்தேன்.. எல்லா அம்சங்களும் சரிவர பொருந்திய படம். கம்பீரமான பாடல்களும், இசையும் புத்துணர்ச்சி ஊட்டுபவையாக, ராஜா சார் பின்னி பெடலெடுத்திருக்கிறார்.
மணிரத்னம் படங்களில் உயிரே படம் தான் நான் கடைசியாக பார்த்தது. இப்போதெல்லாம் அவர் எடுக்கும் படங்கள் என்னை இம்ப்ரெஸ் செய்வதில்லை. பழைய முகலாயர் கால கட்டிடங்களை தவிர, மௌன ராகம் படத்தில் காண்பிப்பது போல் நிஜத்தில் அந்த ஊர் அவ்வளவு அழகில்லை. நான் அங்கு தங்கி ஒரு வருடம் வேலை பார்த்திருக்கிறேன். இப்போது டெல்லி மாறி இருக்கிறதா, மணிரத்னம் நல்ல படங்கள் எடுக்கிறாரா? ரெண்டும் தெரியவில்லை.