http://i1065.photobucket.com/albums/...psebbbou5s.jpg
http://i1065.photobucket.com/albums/...psproyyruy.jpg
Printable View
படித்ததது
சந்திரபாபுவின் மரணச்செய்தி கேட்டு திகைத்துப்போன சிவாஜி கணேசன் தான் கலந்து கொண்டிருந்த சட்டக் கல்லூரி முத்தமிழ் விழாவை பாதியில் முடித்துக் கொண்டு திரும்பி வந்து பாபுவின் உடலை நடிகர் சங்கத் திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைத்தார்.
சாமான்யமான அந்தக் கலைஞனுக்கு அஞ்சலி செலுத்த பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்த அந்த மக்கள் கூட்டத்திற்கு நடுவே காமராஜரும் வந்து அஞ்சலி செலுத்தி விட்டுப் போனார். மறுநாள் மாலை 4.30 மணிக்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்ட அந்த இறுதி ஊர்வலம், ஜெமினி மேம்பாலம் வழியாக சாந்தோம் தேவாலயத்துக்கு வந்தது.
அந்த மரண ஊர்வலத்தில் ஒரு மனிதன் தள்ளாடியபடியே வந்தார். அது பாபுவின் தந்தை ஜோசப் பிச்சை ரொட்ரிகோ. அவரை சிவாஜி கைத்தாங்கலாக அழைத்துச் சென்றார். அந்த தந்தையின் கண்ணீருக்கு முன்னால் அவன் சலனமற்று கிடந்தான். அந்த கலைஞனின் வாழ்வு இவ்விதம் முடிவுக்கு வந்தது.
ோன்றுகிறது.
இன்று முதல் கோவை டிலைட் திரைஅரங்கில் நடிகர் திலகத்தின் 75வது திரைக்காவியம் "பார்த்தால் பசி தீரும்" திரையிடப்பட்டுள்ளது !
http://i501.photobucket.com/albums/e...psg5otd7la.jpg
TODAY 11.00AM WATCH SUNLIFE TV
http://i57.tinypic.com/2ihxd3r.jpg
http://i57.tinypic.com/33kvzlu.jpg http://i60.tinypic.com/mw8fh3.jpg http://i61.tinypic.com/1to58i.jpg
Watch Jaya Movies at 12.00 pm NT's Fantastic Film Raman Ethanai Ramanadi
நடிகர்திலகம் சிவாஜி மணிமண்டபத்தை அமைக்க தமிழக அரசை வலியுறுத்தி, நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் நடிகர்திலகத்தின் 14 ஆம் ஆண்டு நினைவு நாளான 21-07-2015, செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த உண்ணாவிரதத்தில், அனைத்துக் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். தமிழகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் குறித்து பருவ இதழ்களில் வெளியான செய்தி.
http://i1234.photobucket.com/albums/...psczcyohik.jpg
http://i1234.photobucket.com/albums/...psqnutffwr.jpg
http://i1234.photobucket.com/albums/...ps4iyafw5g.jpg
சிவாஜிக்கு வைக்கப்பட்ட டெஸ்ட்’ – எஸ்.ஜே. இதயா
http://justnowindia.com/wp-content/u...7idfv1mdlc.jpg
சிவாஜியை வைத்து அதிக படங்கள் இயக்கிய டைரக்டர்கள் பட்டியலில், முக்தா சீனிவாசன்க்கு முக்கிய இடம் உண்டு. இதனால் சிவாஜியின் திறமைகள் மீது மட்டற்ற மரியாதை வைத்துள்ளார் அவர். எவ்வளவு நீள டயலாக்காக இருந்தாலும், அதை இரண்டுமுறை கேட்டாலே, வார்த்தை மாறாமல் டெலிவரி செய்யும் சிவாஜியின் திறமை மீது மாபெரும் வியப்பு, முக்தா சீனிவாசனுக்கு இருந்தது. அவரே அதை விவரிக்கிறார்.
“நானும், ஜாவர் சீதாராமனும், ‘அந்த நாள்’ படத்திற்கு உதவி இயக்குநர்களாக பணியாற்றியபோது, சிவாஜியின் இந்தத் திறமை குறித்து மிகமிக வியந்து போனோம். மேக்கப் போடும்போது, வசனத்தை வாசிக்கச் சொல்லி, ஒருமுறை கேட்பார். ஷாட் ரெடியானதும் ஒருமுறை கேட்பார். இரண்டே முறைதான். அடுத்த கணம் எவ்வளவு நீள வசனமானாலும், வார்த்தை மாறாமல் ஒரே டேக்கில் ஓ.கே. செய்து விடுவார்
“உண்மையில் அவரது அந்த திறமை, பலரால் நம்ப முடியாத அளவுக்கு இருந்தது. அப்போதுதான் ஜாவர் சீதாராமன் காதுக்கு அந்த செய்தி வந்து சேர்ந்தது. ‘தினசரி ஷூட்டிங் முடிந்து போகும்போது, அடுத்த நாளுக்குரிய டயலாக் பேப்பர்கள் சிவாஜியின் கார் டிரைவரிடம் கொடுத்து அனுப்பப்படுகிறது’ என்பதுதான் அந்த செய்தி. உடனே ஜாவருக்கு சந்தேகம் எழுந்தது.
“தினமும் இரவில் அவர் மனப்பாடம் செய்து விடுகிறார். இங்கே ஷீட்டிங்கிற்கு வந்ததும் ஒன்றும் தெரியாதது போல், இரண்டு முறை டயலாக்கை கேட்டு விட்டு, எல்லார் முன்னாலும் அசத்தி விடுகிறார் – என்ற ஐயம் எழுந்தது ஜாவருக்கு. எனக்கு அதில் நம்பிக்கையில்லை. சிவாஜிக்கென்று சில அபூர்வ திறமைகளை இறைவன் தந்திருப்பதாக நான் நம்பினேன்.
“இதனால் ‘சரி… எதையும் நம்ப வேண்டாம். ஒரு டெஸ்ட் வெச்சு பார்த்திடுவோம்’ என்றார் ஜாவர். அதன் மறுநாள் சிவாஜி நடிக்க வேண்டிய காட்சிகளுக்கான வசனத் தாள்களை ஒதுக்கி விட்டு, வேறொரு நாளுக்கான வசன தாள்கள், கார் டிரைவரிடம் போய் சேர்கிற மாதிரியான ஒரு ஏற்பாட்டை செய்தார் ஜாவர்.
“மறுநாள் வழக்கம்போல் சுறுசுறுப்பாய் வந்து சேர்ந்தார் சிவாஜி”.
“மறுநாள் சுறுசுறுப்பாய் வந்த சிவாஜி, மேக்கப் போட்டுக் கொள்ளத் துவங்கினார். வழக்கம் போல என்னை அழைத்து ‘டயலாக் சொல்லு’ என்றார். நானும் அன்றைய டயலாக்கை வாசித்தேன். முதல் நாள் சிவாஜி வீட்டிற்கு கொடுத்தனுப்பப்பட்ட டயலாக் வேறு; நான் வாசித்த டயலாக் வேறு. எனவே சிவாஜி முகத்தில் ஏதேனும் தடுமாற்றம் தோன்றுகிறதா என என்னை விட, ஜாவர் உன்னிப்பாகக் கவனித்தார்.
“ஆனால் சிவாஜி முகத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. வசனத்தை ஒருமுறை கேட்டுவிட்டு, ‘ஓ.கே.’ என்று கூறி எங்களை அனுப்பி விட்டார். மீண்டும் ‘ஷாட்’டின் போது மற்றொரு முறை வசனத்தை கேட்டு விட்டு, அட்சரம் பிசகாமல் அதை டெலிவரி செய்து ‘ஷாட்டை ஒரே டேக்கில் ஓ.கே. செய்தார் சிவாஜி. மற்ற எல்லோருக்கும் சாதாரண நிகழ்வு அது. எனக்கும், ஜாவருக்கும் மட்டும் மிக பதட்டமான தருணமாக அமைந்தது.
“சிவாஜி மீதான மதிப்பும் மரியாதையும் எனக்கும், ஜாவருக்கும் மேலும் உயர்ந்தது. அபூர்வ திறமை படைத்த கலைஞர் அவர்” என்று முடித்தார் முக்தா வீ.சீனிவாசன்.
http://justnowindia.com/wp-content/u...bd533c569e.jpg
“சிவாஜியை வைத்து ‘கவரிமான்’, ‘ரிஷிமூலம்’, ‘வெற்றிக்கு ஒருவன்’ – ஆகிய படங்களை இயக்கிய டைரக்டர் எஸ்.பி. முத்துராமனும், முக்தா சீனிவாசன் கூறியதை அப்படியே வழிமொழிந்தார். உதாரணத்திற்கு அவர் ஒரு சம்பவத்தையும் நினைவு கூர்ந்தார்.
“சிவாஜியை வைத்து நான் இயக்கிய முதல் படம் ‘கவரிமான்’. அதில் ஜேசுதாஸ் பாடிய பாடல் ஒன்று ‘சரிகரி…பதநி’ என்கிற ரீதியில் நெடிய ஆலாபனை கொண்டதாய் இருந்தது. சிவாஜிக்கு க்ளோஸப் காட்சிகள் வேறு இடம் பெற வேண்டும். அந்த பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு நடப்பதற்கு முதல் நாள், நான் ஜேசுதாஸ் பாடிய கேஸட்டுடன், சிவாஜி வீட்டிற்குப் போனேன்.
“சிவாஜி ‘என்ன முத்து’ என்று கேட்க, நான் கேஸட்டை கொடுத்து விஷயத்தைச் சொன்னேன். ‘மனப்பாடம் பண்ணிட்டா கொஞ்சம் ஈஸியாக இருக்கும்’ என்கிற ரீதியில் இழுத்தேன். ‘அட இதுக்குப் போயா இவ்வளவு தூரம் வந்தே?’ என்றவர், சிரித்தபடி கேஸட்டை வாங்கிக் கொண்டார்.
“மறுநாள் அந்த காட்சி படமான போது, நான் பிரமித்துப் போனேன். சிவாஜி அந்த ஆலாபனையை சரியாக உச்சரித்தாரா, இல்லையா என்பது தெரியாது. ஆனால் அதை யாரும் பொருட்படுத்தாத விதத்தில், அந்தப் பாடலின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப அவர் காட்டிய முக அசைவுகள், கண் மற்றும் புருவ அசைவுகள் அவரே அந்தப் பாடலைப் பாடியது போன்ற எஃபெக்டைக் கொடுத்தன. பிரமித்துப் போனேன்.
“அதே போல் முக்கியமான காட்சிகளின்போது, வசனத்தைக் கேட்டுக் கொள்ளும் சிவாஜி, ஒரு சில நிமிடங்கள் ஓரமாய் போய் விடுவார். பின்னர் என்னை அழைத்து, அந்த வசனத்தை மூன்று விதமாய் டெலிவரி செய்து காட்டி, ‘எது வேணும்?’ என்று கேட்பார். அந்தளவு அபூர்வமான, அற்புதமான நடிகர் அவர். ஏ.வி.எம். குறித்து ஒரு டாக்குமென்டரி எடுத்தபோது, சிவாஜியை ஏ.வி.எம்.மிற்கு வரவழைத்திருந்தோம்.
http://justnowindia.com/wp-content/u...attabomman.jpg
“அவரிடம் ’பழைய வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தின் வசனத்தை ஒருமுறை நீங்கள் பேசிக் காட்டினால், பார்ப்பவர்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கும்’ என்று கூறிவிட்டு, உண்மையிலேயே அவருக்கு முழு வசனமும் ஞாபகம் இருக்குமோ, இருக்காதோ என்ற ஐயத்தில் ‘முழு டயலாக்கும் ஞாபகமிருந்தா பேசுங்க.. இல்லைன்னா’ என்று இழுத்தேன்.
“அவரோ, ’என்ன முத்து, என்னை டெஸ்ட் பண்றியா?’ என்று கேட்டு விட்டு, மளமளவென அந்த டயலாக்கை அதே ஏற்ற இறக்கங்களுடன் மூச்சு விடாமல் பேசிக் காட்டி, எங்களை மூச்சடைக்க வைத்து விட்டார். நடிப்பிற்கென்றே தன்னை அர்ப்பணித்து விட்ட அற்புத கலைஞர் அவர்.
http://justnowindia.com/rajinikamalsivaji/
http://justnowindia.com/sj-idhayathi...ajustnowindia/
தினத்தந்தி விளம்பரம்
http://i61.tinypic.com/281amvs.jpg