Quote:
//விழிக்குள் நுழைந்தவளே
விபத்தாகிப் போனவளே
விழுந்த கணம் முதலாய்
அவதிதான் படுகிறேன்
கண்ணே உள்ளே வந்தாய்
கலகம் துவக்கினாய்
உறுத்தத் துவங்கினாய்
ஒளிந்து விளையாடுகிறாய்//
விழிக்குள் நுழைந்து விபத்தாய் எனக்கே
விழுந்த கணமுதல் இன்னல் - உழந்திடக்
கண்ணேஉள் வந்தாய் கலகத்து உறுத்தியே
உள்ளே விளையா டொளிந்து.
கண்ணே என்பதைக் "கண்ணே" என்னும் வஞ்சப்புகழ்ச்சியாகவும், அன்றி ஏகாரத்தை (கண்+ஏ) வெறும் இசைநிறையாகக் கொண்டு கண்+உள் வந்தாய் என்று "கண்ணுக்குள் விழுத்துவிட்டாய்" என்றும் இருவாறாகப் பொருள் கொள்ளலாம்.
கலகத்து உறுத்தியே = கலகத்தில் ஈடுபடுத்தியே (பயமுறுத்து என்பதுபோல) என்றுகொண்டு, "இல்" உருபு தொக்கது எனவும் உரைக்கலாம். உறுத்தி என்பதை கண் என்பதனோடு இணைத்து, "கண்னை உறுத்தி" என்றுகொண்டும் "கலகத்து" என்பதை "உள்ளே" என்பதோடு இனைத்து, "கலகத்துள்ளே ஒளிந்து விளையாடு" என்றும் உரைக்கலாம். உரை கூறுவதும் ஒரு கலை. அதற்கான தனிக் கலைச்சொற்கள் (technical terms) இருந்தன., இப்படியெல்லாம் அந்தக் காலத்து உரையாசிரியர்கள் விளையாடுவார்கள்.
( " ஒழுக்கத்து நீத்தார்" என்பதை ஒழுக்கத்தைக் கைவிட்டவர் என்று பொருள்கொண்டால் தவறாகி விடும் அன்றோ?)
