உடற்பிணி வந்து
உன்னை அணைத்தால்
உடற்பொருள் ஆவி
வலியில் நிறைந்தால்
கிறுக்கல் கூட
இறுக்கமாய் மாறிடும்
உணர்ச்சிகள் அதிலே
உறுக்கம் நிறைந்திடும்
முகமதில் மின்னும்
மலர்ச்சி மறைந்திடும்
அதற்க்குச் சான்றாய்
முடிகள் முளைத்திடும்
உறக்கம் கூட
உறங்க மறுத்திடும்
உடலும் அதனால்
மெல்ல இளைத்திடும்
நோய்கள் இல்லா
வாழ்வை போல்
நிகரான செல்வம்
வாழ்வில் உண்டோ...
-
கிறுக்கன்