ஆளுகைக்கு உன் தன் அடித்தாமரைகள் உண்டு, அந்தகன்பால்
மீளுகைக்கு, உன் தன் விழியின் கடை உண்டு, மேல் இவற்றின்
மூளுகைக்கு, என் குறை, நின் குறையே அன்று-முப்புரங்கள்
மாளுகைக்கு, அம்பு தொடுத்த வில்லான், பங்கில் வாணுதலே.
aaLukaikku, uNnthan adiththaamaraikaL uNdu; andhakanpaal
meeLukaikku, uNnthan vizhiyin kadai uNdu; mEl ivaRRin
mooLukaikku, en kuRai, nin kuRaiyE anRu;-muppurankaL!
maaLukaikku, ambu thoduththa villaan, pankil vaaNuthalE!
