ஜெயா டி.வி.யில் கடந்த திங்கள் முதல் வெள்ளி வரை வெளியான பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசத்தின் 'திரும்பிப் பார்க்கிறேன்' நிகழ்சி நடிகர்திலகத்தின் ரசிகர்களுக்கு ஏமாற்றமளிப்பதாக இருந்தது. ஐந்து நாள் நிகழ்ச்சியில் நான்கு நாட்களை எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா புகழ்பாடுவதற்கே செலவழித்து விட்ட அவர், கடைசி நாளான நேற்று நடிகர்திலகத்தின் 'அந்தமான் காதலி' ஒரே படத்தைப்பற்றி மட்டுமே குறிபிட்டு முடித்துக்கொண்டார். அவரது கதைவசனத்தில் வந்த 'இமயம்' மற்றும் அவர் இயக்கிய படங்களிலேயே 125 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றியடைந்த 'சாதனை' உள்பட வேறெந்தப்படத்தையும் குறிப்பிடவில்லை. 'அக்கரைப்பச்சை' போன்ற நல்ல படங்களைப்பற்றியும் கூட மூச்சு விடவில்லை.
அதே சமயம், நிகழ்ச்சியின் ஆரம்பத்தில், நடிகர்திலகத்தை முதன்முதலில் கொடைக்கானலில் சந்தித்து திரைப்பட பிரவேசம் குறித்து சொன்னபோது, தன்னை சினிமாவுக்கு வரவேண்டாம் என்று நடிகர்திலகம் DISCOURAGE செய்ததாக ஒரு வார்த்தையை விட்டிருந்தார்.