Thanks for VM 25th day celebrations photos & events to Mr Murali Sir &
Mr Raghavendra Sir.
Printable View
Thanks for VM 25th day celebrations photos & events to Mr Murali Sir &
Mr Raghavendra Sir.
ஆதிராம் சார்,
இது உங்களுக்கு சொந்தமான இடம். எனக்காக ஒழித்தெல்லாம் தர வேண்டிய அவசியமேயில்லை. நீங்கள் பாட்டுக்கு தொடரலாம். எனது கட்டுரை மிக நீண்ட நாட்கள் போகும். நான் இன்னும் எளிமையாக்க முயற்சிக்கிறேன். நீங்கள் பங்கு கொண்டால் எனக்கு இன்னும் மகிழ்ச்சி. ஒரு விஷயம்- நான் பாமரனாக உங்களுடன் விசிலடித்து மகிழ தயாராக இருக்கும் அடிப்படை உறுப்பினரே. 25 வது நாள் கொண்டாட்ட படங்களும் என்னை மகிழ்விக்கும்.
வசந்த மாளிகை 25 வது நாள். வாழ்த்துகள்
நடிகர் திலகம் திரிக்கு புதிய வரவாக வந்திருக்கும் சௌரிராஜன் ஸ்ரீ அவர்களுக்கு நல்வாழ்த்துகள். நல்ல இடம் நீங்கள் வந்த இடம்.
நடிகர் திலகத்தின் மறு வெளியீடுகளின் வெற்றிகளைப் பற்றி அதன் வசூல் விவரங்களைப் பற்றி இங்கே அவ்வபோது பதிவு செய்துக் கொண்டுதான் இருக்கிறோம். நமது தகவல்கள் எப்போதும் ஆதாரபூர்வமானதாகவே இரூந்திருக்கிரது. இனியும் அப்படியே. நீங்கள் விரும்பியபடி சில செய்திகள்.
நாஞ்சில் நகரம் என்றுமே நமது கோட்டை என்பதை மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். வசந்த மாளிகை புதன்கிழமை அதாவது ஏப்ரல் 3-ந் தேதி ராஜேஷ் திரையரங்கில் வெளியாகி இருக்கிறது. இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால் மற்ற ஊர்களில் வெளியாகி ஒரு மாதத்திற்கு பிறகு வெளியாகியிருக்கிறது. மெருகேற்றல் என்பதே நடைபெறவில்லை, வெளியாகியிருக்கும் பிரிண்ட்-ம் சரியில்லை என்ற விவரங்கள் அனைவருக்கும் தெரியும். இருப்பினும் முதல் மூன்றே நாட்களில் ரூபாய் ஒரு லட்சத்து எழுபத்தையாயிரம் என்ற அளவையும் தாண்டி வசூலித்திருக்கிறது.இத்தனைக்கும் முதல் மூன்று நாட்களுமே வேலை நாட்கள்.
நெல்லை மாநகரில் பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க மாளிகை மீண்டும் கணேஷ் திரையரங்கில் [பாப்புலர்] வெளியாகியிருக்கிறது.
மதுரை சரஸ்வதி திரையரங்கில் இரண்டாம் வாரம் ஞாயிறு மாலைக் காட்சி பற்றி இங்கே எழுதியிருந்தோம். சில பல தகவல்களை ஒப்பிட்டு பார்க்கும் போது ஒரு சுவையான தகவலை பகிர்ந்து கொண்டார்கள். ஒரு சில படங்கள் அதே சரஸ்வதி திரையரங்கில் ஒரு வாரம் ஓடி வசூலித்த தொகையை அந்த ஒரே நாளில் வசந்த மாளிகை தாண்டி விட்டதாம். இதற்கும் முதல் வாரத்தில் நான்கு தியேட்டர்களில் ரெகுலர் காட்சிகளில் ஓடி இரண்டாவது வாரம் ஞாயிறு [பத்தாவது நாள்] அன்று இந்த சாதனை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
கோவை நண்பர்கள் சொன்ன சில தகவல்கள். சென்னையில் எந்தளவிற்கு மாளிகை முதல் வாரம் வசூலித்ததோ அதற்கும் சற்றும் குறையாமல், அதாவது அர்ச்சனா திரையரங்கில் மட்டும் சுமார் மூன்றரை லட்சத்திற்கு மேல் வசூல் என்றும் அதை தவிர காவேரி திரையரங்கில் ஓடி வசூலித்து தனி என்றும் சொன்னார்கள்.
கோவை சாரதா திரையரங்கில் சென்ற வருடம் செப்டம்பர் 22 அன்று வெளியிடப்பட்ட திருவிளையாடல் முதல் மூன்று நாட்களில் மூன்று காட்சிகள் [சனிக்கிழமை இரவு, ஞாயிறு பகல் காட்சி மற்றும் ஞாயிறு மாலைக் காட்சி] ஹவுஸ் புல் என்றும் அதை தவிர சனிக்கிழமை பகல், மாலைக்காட்சி மற்றும் ஞாயிறு இரவு காட்சி கிட்டத்தட்ட ஹவுஸ் புல் என்றும் உறுதிப்படுத்தினார்கள். வினியோகஸ்த சங்கத்தை எதிர்த்துக் கொண்டு ஏதோ ஒரு மீடியேட்டர் மூலமாக வெளியிடப்பட்டது நினைவில் இருக்கும். தாண்டவம் 29-ந் தேதி அதே அரங்கில் வெளியாகப் போகிறது என்ற தகவலை பரமசிவன் அவர்களிடமிருந்து மறைத்து அந்த ஒரு வார இடைவெளியில் வெளியிட்டதால் திருவிளையாடல் மாறிக் கொடுக்க வேண்டிய சூழல் அன்று உருவானது.
சாரதா திரையரங்கின் capacity பற்றிய தகவல்கள் இதோ
Rs 10/- டிக்கெட் - 48 இருக்கைகள் - Rs 480/-
Rs 30/- டிக்கெட் - 110 இருக்கைகள் - Rs 3300/-
Rs 40/- டிக்கெட் - 228 இருக்கைகள் - Rs 9120/-
Rs 50/- டிக்கெட் - 64 இருக்கைகள் - Rs 3200/-
மொத்தம் 450 இருக்கைகள் - Rs 16,100/-
அன்புடன்
சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் இன்றோடு 30 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்து தொடர்ந்து 5-வது வாரத்தில் பவனி வருகிறது வசந்த மாளிகை.
Murali Sir,
Thanks a lot for the updates of Vasandha Maaligai in major cities of TN, and also the additional news about Thiruvilaiyaadal in Kovai.
very glad to know, it is running successfully in Chennai Albert.
சாரதா திரையரங்கின் capacity பற்றிய தகவல்கள் இதோ
Rs 10/- டிக்கெட் - 48 இருக்கைகள் - Rs 480/-
Rs 30/- டிக்கெட் - 110 இருக்கைகள் - Rs 3300/-
Rs 40/- டிக்கெட் - 228 இருக்கைகள் - Rs 9120/-
Rs 50/- டிக்கெட் - 64 இருக்கைகள் - Rs 3200/-
மொத்தம் 450 இருக்கைகள் - Rs 16,100/-
சென்னையில் எந்தளவிற்கு மாளிகை முதல் வாரம் வசூலித்ததோ அதற்கும் சற்றும் குறையாமல், அதாவது அர்ச்சனா திரையரங்கில் மட்டும் சுமார் மூன்றரை லட்சத்திற்கு மேல் வசூல்
THANKS FOR THE ABOVE INFORMATION MURALI SIR !
I happen to get this image from FB. I would like to hear your insight on the following image : Not sure..Why HYPE was extreme for ONE & There was not even Attachment 2315any word of mouth on the Other though, i think both were same year release (Again not sure on the month of release)
Thamizh Thirai Ulagilum Sari...Makkal Manadhilum Sari..Endrum Kudi Kondu irupavargal Irendu Thilagangalum. Iruvarumae Thamizh Thirai Ulagai 40 years + Kayil Vayithirundhu pala thiraipadangalai thandhu..Vyabaramaagattum..Thozhil Valarchi yagattum...Nalladhoru Pangallithirundhaargal..Aanal..Ippodhu Super Star aga irukattum..Super Actor aga irukattum...Once in 3 years or Once in 4 years oru thiraipadathai tharugindranar..Thozhilnutpam endra poarvayil Nam Naatu Thozhilaligalai Odhikki Vaikiraargalae...Idhu Arogyamana oru seyala?
Once again thanks Mr Murali sir for the
update of VM. Really happy that it is still
running in Albert inspite of the quality of the print.
NT rocks once again in BO.
// i think both were same year release (Again not sure on the month of release) //
Sowrirajan,
Bharatha Vilas : 24.03.1973
Ulagam Sutrum Vaaliban : 11.05.1973
8.3.2013 அன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் வசந்த மாளிகை திரைக்காவியம் 16.04.2013 அன்று 40வது நாளைக் காண்கிறது. இதனையொட்டி வெளியிடப் பட்டுள்ள 40வது நாள் போஸ்டரின் நிழற்படம்.
நிழற்படம் உபயம் - சுப்பு எ சுப்பிரமணியன், முகநூல் பகிர்வு
http://sphotos-e.ak.fbcdn.net/hphoto...86581077_n.jpg
சற்று முன் வந்த தகவல். நாகர்கோவிலில் வசந்த மாளிகை மிகப் பிரம்மாண்டமான வரவேற்பைப் பெற்றுள்ளது. வெளியான ஒரே வாரத்தில் ரூ. மூன்று லட்சத்திற்கு மேல் வசூலாகியுள்ளதாக செய்தி. ரசிகர்கள் அளப்பரையும் அமர்க்களமாக நடைபெற்றுள்ளது. நாஞ்சில் நகரம் நடிகர் திலகத்தின் கோட்டை என்பதும் இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது.
ஜோ சார்
காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளுங்கள்...
தவறான எண்ணத்தை ஏனையவர்களிடத்தில் ஏற்படுத்தியதால் டிலீற் செய்யப்பட்டது
தவறான எண்ணத்தை ஏனையவர்களிடத்தில் ஏற்படுத்தியதால் டிலீற் செய்யப்பட்டது
தவறான எண்ணத்தை ஏனையவர்களிடத்தில் ஏற்படுத்தியதால் டிலீற் செய்யப்பட்டது
தவறான எண்ணத்தை ஏனையவர்களிடத்தில் ஏற்படுத்தியதால் டிலீற் செய்யப்பட்டது
அன்புக்குரிய சிவா அவர்களுக்கு,
நடிகர் திலகத்தின் பால் மாறா அன்பு கொண்டு வாழும் லட்சக்கணக்கான இலங்கை தமிழர்களில் ஒருவரான உங்களின் ஆசையை நிறைவேற்ற நீங்கள் சென்னை வரும் போது ஆனந்த் சென்னைக்கு மீண்டும் விஜயம் செய்கிறார் ஆம், வரும் வெள்ளி மே 31 முதல் உட்லண்ட்ஸ் சிம்போனி திரையரங்கில் வசந்த மாளிகை திரையிடப் போவதாக செய்தி வந்திருக்கிறது. கண்டு மகிழுங்கள்!
அன்புடன்
அன்புள்ள சிவா சார் அவர்களுக்கு,
மன்னிக்கவும். தவிர்க்க முடியாத காரணங்களினால் வசந்த மாளிகையின் நாளைய வெளியீடு தள்ளிப் போடப்பட்டிருக்கிறது. அடுத்த வெள்ளியன்று வெளியாகும் என தெரிகிறது. நீங்கள் சென்னையிலிருந்து 15-ந் தேதி தான் கிளம்புகிறீர்கள் என்ற பட்சத்தில் அடுத்த வாரம் சிம்போனியில் வெளியானால் நீங்கள் படத்தை பார்க்கும் வாய்ப்பு அமையும்.
அன்புடன்
வருகின்ற 07.06.2013 வெள்ளி முதல் சென்னை ராயப்பேட்டை உட்லண்ட்ஸ் சிம்போனி திரையரங்கில் தினசரி மாலை மற்றும் இரவுக் காட்சிகளாக திரையிடப் படுகிறது, நடிகர் திலகத்தின் சூப்பர் டூப்பர் ஹிட் காவியம் வசந்த மாளிகை. உறுதி செய்யப் பட்ட தகவல்.
எத்தனை முறை திரையிடப்பட்டால் என்ன? எத்தனை முறை பார்த்தால் என்ன? அழகாபுரி சமஸ்தானத்தின் இளவரசன் அழகன் ஆனந்தை காண கசக்குமா என்ன? அதுவும் என்றென்றும் நடிகர் திலகத்தை நேசிக்கும் மதுரை மாவட்ட மக்களுக்கு?
இந்த வாரம் திருமங்கலம் - ஆனந்த், மானாமதுரை சீனிவாசா மற்றும் ராஜபாளையம் ஜெயா ஆனந்த் ஆகிய ஊர்களில் காலத்தை வென்ற காவியம் வசந்த மாளிகை வெற்றிகரமாக ஓடியது.
மாவட்டத்தின் மக்கள் மட்டும் பார்த்தால் போதுமா? அப்போது நாங்கள் மீண்டும் காண வேண்டாமா என்ற கேள்வியை மதுரை மாநகர் மக்கள் எழுப்ப, சரி அதற்கென்ன உங்களுக்கு இல்லாமலா என்று விநியோகஸ்தரும் வரும் வெள்ளி முதல் ஒன்றல்ல இரண்டு தியேட்டர்களில் வசந்த மாளிகை திரைக் காவியத்தை திரையிடுகிறார்கள்.
ஆம் வெள்ளி ஜூலை 19 முதல் மதுரை அலங்கார் மற்றும் சோலைமலை திரையரங்குகளில் வசந்த மாளிகை வெளியாகிறது.
அன்புடன்
நெல்லை - பம்பாய் திரையரங்கில் இன்று முதல் வசந்த மாளிகை திரையிடப்பட்டிருகிறது. அது போன்றே தூத்துக்குடி ஸ்ரீ முருகன் திரையரங்கிலும் வசந்த மாளிகை ரிலீஸ்.
மதுரையில் வசந்த மாளிகை திரையிடப்படும் அரங்குகளில் ஒரு சின்ன மாற்றம். புதிய தமிழ் திரைப்படமான மரியான் மதுரை சோலைமலை திரையரங்கில் வெளியிட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் படம் இந்த வாரம் வெளியாவது சந்தேகம் என்ற தகவல் வந்ததால் வசந்த மாளிகை வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் கடைசி நேரத்தில் மரியான் வெளியாகி விட்டதால் வசந்த மாளிகை மதுரையில் அலங்கார் திரையரங்கில் மட்டும் வெளியாகியிருக்கிறது.
அனைத்து தகவல்களுக்கும் நன்றி திரு ராமஜெயம் அவர்களே!
அன்புடன்
http://g.ahan.in/tamil/Vasantha%20Ma...gai%20(20).jpg
சென்ற வாரம் 02.08.2013 தொடங்கி ஒரு வாரம் திருச்சி மரியம் திரையரங்கில் வெற்றி நடை போட்ட வசந்த மாளிகை திரைக்காவியம், நாளை 09.08.2013 முதல் தினசரி 3 காட்சிகளாக சென்னை கிருஷ்ணவேணி திரையரங்கில் வாகை சூட வருகிறது.
இந்த இனிய செய்தியை நமக்களித்த முரளி சாருக்கும் ராமஜெயம் சாருக்கும் உளமார்ந்த நன்றி
திருச்சி மரியம் அரங்கில் வசந்த மாளிகையின் வெற்றி பவனி மற்றும் சென்னை T.Nagar கிருஷ்ணவேணி அரங்கில் வசந்த மாளிகை வெளியாகும் தகவலை பதிவிட்டதற்கு நன்றி ராகவேந்தர் சார் அவர்களே!
வெகு நாட்களுக்கு பிறகு T.Nagar ஏரியாவிற்கு விஜயம் செய்த ஆனந்திற்கு அமோக வரவேற்பு. கிருஷ்ணவேணி திரையரங்கில் இன்று மதியம் மற்றும் மாலைக் காட்சிக்கு வசந்த மாளிகை படத்திற்கு திரளான மக்கள் கூட்டம் திரண்டு வந்திருந்தனர். இரவுக் காட்சிக்கும் கணிசமான மக்கள் வந்திருகிறார்கள்.
அன்புடன்