மக்கள் திலகத்தின் அசத்தல் ஆவணங்களை அற்புதமான முறையில் காலவரிசைப்படி பதிவேற்றும் மகத்தான தொடர்ந்து புரிந்துவரும் பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கு நன்றி. இது உங்களால் தான் முடியும். தொடரட்டும் தங்களது பெரும்பணி.
Printable View
மக்கள் திலகத்தின் அசத்தல் ஆவணங்களை அற்புதமான முறையில் காலவரிசைப்படி பதிவேற்றும் மகத்தான தொடர்ந்து புரிந்துவரும் பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கு நன்றி. இது உங்களால் தான் முடியும். தொடரட்டும் தங்களது பெரும்பணி.
பொன்மனசெம்மலின் 32வது திரைப்படமாகிய "மலைக்கள்ளன்" படத்தில் இடம் பெற்ற பாடல்களின் முதலிரண்டு வரிகள் :
1. தனித்த குரலில் ஆண் பாடல் : தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு
2. தனித்த குரலில் பெண் பாடல் : உன்னை அழைத்தது யாரோ .... அவர் ஊரெதுவோ பேரெதுவோ (பல்லவி)
சின்ன வயதினிலே .... நான் எண்ணிய எண்ணங்களே ! (அனுபல்லவி)
வட்ட வடிவ நிலாவிலே .... ஒளி வந்து உலகினில் பாயுதே (சரணம்)
3. தனித்த குரலில் பெண் பாடல் : நாளை வதுவை மணமென்று நாளிட்டு பாளை கமுகு பரிசுடைப் பந்தற் கீழ் (விருத்தம்)
நீலி மகன் நீ அல்லவோ (பல்லவி)
மாலி உந்தன் மாமன் மாடோட்டும் ஜாதி .... வனமாலி (அனு பல்லவி)
4. தனித்த குரலில் பெண் பாடல் : பெண்களாலே உலகிலே பெருமை காணும் இன்பம் தோணும் (பல்லவி)
கல்லா மூடர் கணவனும் ஆனால் .... வாழ்விலே வார்த்தைகள் பேசி ஆனந்தம் (அனு பல்லவி)
குடித்தனம் காத்திட உதவுவான் .... என்றும் குலமது ஓங்கிட வழி தேடுவாள் (சரணம்)
5. தனித்த குரலில் ஆண் பாடல் : எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே ..... நம் நாட்டிலே
6. குறவன் - குறத்தி பாடல் : ஓ ..... ஓ ... அம்மே ...... ஓ ..... ஓ ... அய்யா ...... ஓ ஸாமி
மசியா வேலைக்கெல்லாம் மருந்திருக்குது பாருங்க
7. தனித்த குரலில் பெண் பாடல் : நல்ல சகுனம் நோக்கி செல்லடி ..... சென்று நான் படும் பாடு அவர்க்குச் சொல்லடி (பல்லவி)
அல்லகற்றி அன்பர்க்கானந்தம் தரும் நேசர் (அனு பல்லவி)
வண்ண மலர்கள் ஏதும் வாசம் தருவதில்லை (சரணம்)
8. தனித்த குரலில் பெண் பாடல் : வாராய் இன்பம் தாராய் (விருத்தம்)
நானே இன்ப ரோஜா நாடி வாராய் ஆசை ரோஜா (பல்லவி)
அறிவு வானிலே அழகுடன் மேவும் நிலவென இன்றே (அனு பல்லவி)
மாதரின் பெருமை விளங்க நானே (சரணம்)
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
"மலைக்கள்ளன்" படப்பிடிப்பின் போது நடந்த ஒரு சம்பவம் :
படத்தில் இடம் பெறும் ஒரு பாடலுக்கான பல்லவியை எழுதும்போது கவிஞர் ஒருவருக்கும், படத் தயாரிப்பாளர் பக்ஷிராஜா எஸ். எம். ஸ்ரீராமுலு வுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறில் முடிந்தது.
"இனிமேல் உங்கள் படத்துக்கு பாட்டெழுத மாட்டேன் என்று பக்ஷிராஜா எஸ். எம். ஸ்ரீராமுலுவிடம் கூறி விட்டு கோபமாக சென்று விட்டார் அந்த கவிஞர். அப்போது உடனிருந்த இசையமைப்பாளர் எஸ். எம். சுப்பையா நாயுடு எவ்வளவோ சமாதானம் சொல்லியும் அந்தக் கவிஞர் கேட்க வில்லை.
இந்த நிலையில் அந்த கவிஞர் எழுதிய ஒரு பல்லவி மட்டும் நமது மக்கள் திலகத்துக்கு மிகவும் பிடித்து போனது. எப்படியாவது, அந்தக் கவிஞரை திரும்பவும் அழைத்து வந்து அந்தப் பாடலை எழுதச் சொல்லலாம் என்றும், அப்பாடலை "மலைக்கள்ளன்" படத்தில் சேர்த்து விடலாம் என்று மக்கள் திலகம் கருதினார். அந்தக் கவிஞரை அழைத்து விஷயத்தை சொன்ன போது, அந்தக் கவிஞரோ, ஸ்ரீராமுலுவின் படம், அததற்கு தான் நான் பாட்டெழுத முடியாது எனவும், தன்னை மன்னிக்க வேண்டும், என்று கூறி விட்டு போய் விட்டார். நமது பொன்மனசெம்மலுக்கு என்ன செய்வதென்று புரிய வில்லை. அருகில் இருந்த இசையமைப்பாளர் எஸ். எம். சுப்பையா நாயுடு, "அய்யாமுத்து" என்பவர் கோவையில் இருக்கிறார் எனவும், அவரை அழைத்து அந்த பல்லவிக்கு ஏற்ப ஒரு பாடலை எழுதி வாங்கி விடலாம் என்று யோசனை கூறினார். நமது கலைவேந்தன் எம். ஜி. ஆர். அவர்களும் அதற்கு ஒப்புக் கொண்டார். உடனே, கோவை அய்யாமுத்துவைத் தேடி அலைந்தார்கள். வயலிலே, உழுது கொண்டிருப்பதாக கூறி அதே கோலத்தோடு அவரை அழைத்தும் வந்தார்கள். அவரும், அந்தப் பாட்டை முடித்துக் கொடுத்தார். பாட்டும், ஒரே நாளில் பிரபலம் ஆயிற்று. அப்படி, பிரபலம் ஆன அந்தப் பாடலில் பல்லவி எது தெரியுமா ? "எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ?" பல்லவி தான் அது ! இந்த சிறப்பு மிக்க பல்லவியை எழுதிய அந்தக் கவிஞர் தான் தஞ்சை இராமையாதாஸ்.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ.செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
பேராசிரியர் செல்வகுமார் அவர்களின் மலைக்கள்ளன் வரலாறு படைத்த திரைபடத்தை பற்றி அரிய பெரிய தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொள்ளும்போது இனிய உவகை ஏற்படுகிறது...மக்கள்திலகதிற்கு என்ன ஒரு தீர்க்க தரிசனம் இருந்தால் வேண்டிய பாடலை தேர்வு செய்யும் மனோதிடத்தை பெற்றிருப்பார் ? அவ்வாறே தேர்வு செய்ய பட்ட பாடலும் எக்காலதிர்க்கும் பொருத்தமான ஒன்ற திகழுகிறது என்பது உள்ளகை நெல்லிக்கனி என்றே கருதலாம்...
so many thanks to proffessor mr.selvakumar sir, for your kind loyally contribution to this ponmana chemmal thread...your sharing information is useful to the new visitors & other hubbers... where this song books of ancient films by thiru mgr, so rare collections, then you have mighty magnet power and blessings of sri mgr...
பொன்மனச்செம்மல் நடித்த 33வது திரைப்படமாகிய "கூண்டுக்கிளி" படத்தினைப் பற்றிய தகவல் :
1. படம் வெளியான தேதி : 26-08-1954
2. படத்தை தயாரித்த நிறுவனம் : ஆர். ஆர். பிக்சர்ஸ்
3. கதாநாயகன் : மக்கள் திலகம்
4. மக்கள் திலகத்தின் கதா பாத்திரம் : தங்கராஜ்
5. கதாநாயகி :
6. பாடல்கள் : தஞ்சை ராமையாதாஸ், .கவி. கா.மு. ஷெரிப், மருதகாசி மற்றும் விந்தன்
7. இசை அமைப்பு : கே. வி. மகாதேவன்
8. திரைக்கதை, வசனம் : விந்தன்
9. இயக்குனர் : டி.ஆர். ராமண்ணா
10. படத்தில் பங்கு பெற்ற ஏனைய கலைஞர்கள் : கே. சாரங்கபாணி, பிரண்ட் ராமசாமி, இ. ஆர். சகாதேவன், டி. கே. ராமராஜன், கொட்டாப்புளி ஜெயராமன், எதார்த்தம் பொன்னுசாமி, குசலகுமாரி , ஜி. சகுந்தலா, டி.பி. முத்துலட்சுமி,கே.எஸ்.அங்கமுத்து, ராகினி (நடனம்)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ ++++++++++++++++++++++++
படத்தின் சிறப்பம்சம் :
1. ஆர். ஆர். பிக்ஸர்ஸ் .சார்பில் தயாரிக்கப்பட்ட முதல் மக்கள் திலகத்தின் படமிது.
2. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் மக்கள் திலகத்துடன் இணைந்து நடித்த ஒரே படம்.
3. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் வில்லனாக நடித்திருப்பார்.
4. இப்படத்திற்கு பின்னணி பாடிய கலைஞர்கள் : (டி..எம். எஸ். தவிர) : இசைக்குயில் பி. ஏ. பெரியநாயகி, குமாரி ரத்னம், ராதா ஜெயலட்சுமி, ராணி, வி. என். சுந்தரம் ஆகியோர்.
இப்படத்தின் கதைச் சுருக்கம் மற்றும் பாடல்கள் அடுத்து தொடர்கிறது.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
தமிழ் திரைபட உலகின் ஒரு லேண்ட்மார்க் என கூறப்படும் படம்தான் கூண்டுக்கிளி- இதில் இரு திலகங்களும் சேர்ந்து நடித்த போதும் படத்தின் திரைகதை & இயக்கம் போதுமான அளவில் ருசிகரமாக படைக்க பட வில்லை என்பது படத்தின் எதிர்பார்த்த வெற்றியை அது அடையவில்லை என்பதே ஒரு காரணமாகும்...மக்கள்திலகம் மற்றும் நடிகர்திலகம் இருவரும் இனி சேர்ந்து நடிக்க வேண்டாம் எனவும் தீர்மானித்தது இந்த திரைப்படம் வெளிவந்த பொழுதுதான் என கூறப்பட்டதை கேட்டுருக்கிறேன்...
பொன்மனச்செம்மல் நடித்த 33வது திரைப்படமாகிய "கூண்டுக்கிளி" படத்தின் கதை சுருக்கம் :
================================================== =============
ஜீவா !
இவனைப் போன்ற ஒரு வேடிக்கை மனிதனை நீங்கள் இதுவரை உங்கள் வாழ்க்கையில் சந்தித்திருக்க மாட்டீர்கள். அவன் ஒரு தனிப் பிரகிருதி : பச்சையாக சொல்லப் போனால் பைத்தியம்.
எத்தனைப் பெண்கள் இந்த உலகத்தில் இருக்கிறார்கள் ? அந்தப் பெண்களுக்கு நடுவே எத்தனை ஆண்கள் "கோபியர் கொஞ்சும் ரமண" னாக, சாட்சாத் சியாமள வர்ணனாக எடுத்து திரிகிறார்கள் ? அதையெல்லாம் விட்டுவிட்டு, மங்களா தான் வாழ்க்கையின் ஜீவனாக வேண்டுமாம், இந்த ஜீவாவுக்கு !
ஆனால், அவளோ, தங்கராஜின் வாழ்க்கை ஜீவனாக ஆகிவிட்டாள் ......
இது முதல் சிக்கல்.
அந்த தங்கராஜோ ஜீவாவின் ஆருயிர் நண்பனாக இருந்து விட்டான் ......
இது இரண்டாவது சிக்கல்.
அவனை (தங்கராஜூவை) கைப்பிடித்த மங்களாவுக்கோ, முதல் கடவுள் கற்பு, இரண்டாவது கடவுள்தான் அவளைப் படைத்தவன். .....
இது மூன்றாவது சிக்கல்
இந்த சிக்கல்களுக்கிடையே அவள் தங்கராஜின் "கூண்டுக்கிளியாககவா இருந்தாளா ? அதுவும் இல்லை; கொஞ்சும் கிளியாக வேறு இருந்து விட்டாள்.......
இது நான்காவது சிக்கல்.
எல்லாவற்றுக்கும் மேலாக இன்னொரு சிக்கல் இருந்தது ! அதுதான் மங்களாவையும், குழந்தை கண்ணனையும் நண்பன் ஜீவாவிடம் ஒப்படைத்து விட்டு தங்கராஜ் அவனுக்காக ஆறு மாதங்கள் சிறைக்குக்ப் போன சிக்கல். ........
இது ஐந்தாவது சிக்கல்.
இப்படி எத்தனை சிக்கல்கள் அவன் கதையில் ? .......
இவை எல்லாவற்றுக்கும் விடை காண வேண்டுமானால் சொக்கியை சந்தியுங்கள் திரையில் : அவள் சொல்வாள் உங்களுக்கு பதில்..
குறிப்பு : ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தில், நமது மக்கள் திலகத்தின் பெயர் முதலில் இடது புறத்தில் இடம் பெற்றுள்ளது.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
"கூண்டுக்கிளி" படத்தில் நம் மக்கள் திலகம் மற்றும் பி.எஸ். சரோஜா தோன்றும் ஒரு காட்சி
http://i42.tinypic.com/i1libk.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
"கூண்டுக்கிளி" படத்தில் மக்கள் திலகமும் நடிகர் திலகமும் இணைந்து தோன்றும் காட்சி http://i43.tinypic.com/2i88ahh.png
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
திரு. செல்வகுமார் சார். தங்களின் கூண்டுக்கிளி திரைப்படத்தின் பதிவுகள் அருமை. பொக்கிஷம் போல் பாதுகாத்த தியேட்டர் பாட்டுபுத்தகத்திலிருந்து எடுத்து போட்டு அசத்தி விட்டீர்கள். உலக தமிழரின் நாயகன் இப்படத்தின் கதாநாயகன்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.
செல்வகுமார் சார்,
கூண்டுக்கிளி படத்தின் பதிவுகள் மிக அருமை. இந்தப் படத்தின் அபூர்வ புகைப்படங்கள் பலவற்றை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். நன்றி.
பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களுக்கு
தாங்கள் பதிவிட்ட கூண்டுக்கிளி படம் பற்றிய செய்திகள் மற்றும் புகைப்படம் அருமை. பாராட்டுக்கள்
BLAST FROM THE PAST
Goondukili 1954
Goondukili was the only film in Tamil cinema featuring both the top heroes, MGR and Sivaji Ganesan, which expectedly made history at many levels, some of it not so complimentary. Bringing the two stars together was indeed an achievement for Ramanna (T. R. Rajakumari’s brother, sound recordist-turned-producer-director). Written by Vindhan, a socially and politically conscious writer of his day, the film is a love triangle in which a man (Sivaji Ganesan) loses his mental balance as he cannot marry the girl of his dreams (Saroja). She becomes the wife of his best friend (MGR), who has no clue about his earlier disappointment in love. He provides solace to his disturbed friend in his home where the latter is shocked to see his heartthrob. It was a villainous role for Sivaji Ganesan who did similar anti-hero characters during the early 1950s in films such as Andha Naal, Thuli Visham, Thirumbi Paarand now Goondukili.
Though the film was well made, the casting of the two top heroes did not go down well with their fans who caused problems for the makers. The film was long under production due to differences of opinion between the actors and, as a result, certain scenes written by Vindhan could not be shot. When the film was released, it ran into more problems from the respective fan clubs of the heroes. It had to be withdrawn from circulation in many places. As a result, Ramanna and the production company, RR Pictures, lost heavily. Learning a bitter lesson from the sad experience, he launched a film based on folklore, Gulebakavali, which turned out to be a box office hit and compensated him for his earlier losses. (Ramanna told this writer later that his lack of experience — he was quite young at that time — in film direction and handling strong personalities such as MGR and Sivaji Ganesan were the main reasons for the debacle even though the film had an interesting storyline, good dialogue and music).
The film had excellent photography (M. A. Rehman assisted by Rajabathar, Ramanna’s brother). The music was by K. V. Mahadevan. Not many are aware that the tune composed for this film by Mahadevan, ‘Mayakkum maalai pozhudhu...’, could not be used for many reasons and was subsequently used by Ramanna in Gulebakavali for which the music composers were Viswanathan-Ramamurthy. This song is still popular. (The lyrics were by Thanjai Ramaiah Das, Ka. Mu. Sherif, Maruthakasi and Vindhan.) ‘Konjum kiliyaana pennai….sariyaa thappaa?’, written by Vindhan and rendered by T. M. Soundararajan, became a big hit. B. S. Saroja (Mrs. Ramanna in private life) as the wife caught in a vortex of emotions enacted the role admirably.
Remembered for: Being the only film featuring Tamil cinema icons M. G. Ramachandran and Sivaji Ganesan, a casting that was never repeated!
RANDOR GUY
Both Makkal thilagam and Nadigar thilagam contested a battle for best acting in this film.
மக்கள் திலகத்தின் 33வது காவியமாகிய "கூண்டுக்கிளி" யில் இடம் பெற்ற பாடல்களின் முதலிரண்டு வரிகள்
1. தனித்த் ஆண் குரலில் பாடல் : மாநிலத்தின் இருள் நீக்க வானில் வரும் ஜோதியே
(தொகையறா)
ஆனந்தமாய் வாழ வேணுமே மாந்தர் நாட்டிலே
(பல்லவி)
அமைதி சூழப் பசியும் பிணியும் பகையுமே அகல
(சரணம்)
2. தனித்த குரலில் பெண் பாடல் : ஓஹோ ....ஓஹோ.... ஹோ.... ஹோ....(பல்லவி)
அம்மா வாராளென்று சொன்னாடின்னுத்தான் இந்த
(அனு பல்லவி) தனித்த குரலில் பெண் பாடல் :
ஆடு தன் துருப்பு, அதையே நீ திருப்பு !
(சரணம்)
3. குழுப்பாடல் : ராமனே ஆண்டாலென்ன, ராவணனே ஆண்டாலென்ன ?
ராத்திரிப பூவாவுக்கே லாட்டரி .... வாழ்க்கை
லைட்டெரிய பணந்தானே பாட்டரி !
4. மீண்டும் குழுப்பாடல் : காயாத கானகத்தே நின்றுலாவும் நற் காரிகையே !
மேயாத மான் புள்ளி மேவாத மான்
5. தனித்த குரலில் பெண் பாடல் : எனக்குத் தெரியலே ! நெஜமா எனக்குத் தெரியலே ! (பல்லவி)
உங்களைக் கண்டவுடன் உடம்பெதுக்கு சில்லுக்கணும் ?
6. தனித்த் ஆண் குரலில் பாடல் : சொல்ல வல்லாயோ ? கிளியே சொல்ல நீ வல்லாயோ ? (பல்லவி)
வல்ல வேல் முருகன் தனை இங்கு வந்து கலந்து மகிழ்ந்து (அனு பல்லவி)
7. ஜோடியுடன் கூடிய குழுப்பாடல் : லல்லல ..... லல்லல .... லல்லலலா .....
வாங்க எல்லோருமே சேர்ந்து ஒன்றாகவே தீப நன்னாளை அன்பாக கொண்டாடுவோம்
8. தனித்த் ஆண் குரலில் பாடல் : கொஞ்சுங் கிளியான பெண்ணைக் கூண்டுக்கிளி யாக்கிவிட்டுக்
கெட்டி மேளம் கொட்டுவது சரியா, தப்பா ?
9. தனித்த குரலில் பெண் பாடல் : .... பார் !....பார்!.... பார்!......பார் என் மகளே பார், பார் .(பல்லவி)
இருந்த வீடு இரவல் வீடு, இருக்கப் போவதுன் சொந்த வீடு
குறிப்பு : இந்தக் காவியத்தில், பின்னணிக் குரலில் பாடல்களை பாடியவர்கள் (t.m.s. தவிர்த்து)
1. டி வி. ரத்தினம், 2. பி. ஏ. பெரிய நாயகி 3. மகாதேவன் 4. வி. என். சுந்தரம் மற்றும் ராணி ஆகியோர்.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
http://i39.tinypic.com/33ygvpt.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
நமது மக்கள் திலகத்தின் 33வது படத்தில் இடம் பெற்ற கீழ்க்கண்ட 6வது பாடலின் சிறப்பு என்னவென்றால் அப்பாடல் மகா கவி பாரதியார் அவர்களால் எழுதப்பட்டது.
அப்பாடலின் மொத்த வரிகள் வருமாறு :
(பல்லவி)
சொல்ல வல்லாயோ ? கிளியே சொல்ல நீ வல்லாயோ ?
(அனு பல்லவி)
வல்ல வேல் முருகன் தனை இங்கு வந்து கலந்து மகிழ்ந்து குலா வென்று
(சரணம்)
தில்லை யம்பலத்தே .....நடனம்
செய்யும் அமரர் பிரான் ! .... அவன்
செல்வத் திருமகனை ..... இங்கு வந்து
சேர்ந்து கலந்து மகிழ்ந்து குலா வென்று (சொல்ல)
அல்லிக் குளத்தருகே ... ஒரு நாள்
அந்திப் பொழுதினிலே .... அங்கோர்
முல்லைச் செடியதன்பால் .... செய்த வினை
முற்றும் மறந்திடக் கற்ற தென்னவென்று (சொல்ல)
பாலைவனத் திடையே ..... என் கை
பற்றி நடக்கையிலே .... தன் கை
வேலின் மிசை ஆணை வைத்துச் சொன்ன
விந்தை மொழிகளைச் சிந்தை செய்வாயென்று (சொல்ல)
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
[B][COLOR=#0000ff][COLOR=#0000ff]
பொன்மனச்செம்மல் நடித்த 34வது திரைப்படமாகிய "குலேபகாவலி" படத்தினைப் பற்றிய தகவல் :
1. படம் வெளியான தேதி : 29-07-1955
2. படத்தை தயாரித்த நிறுவனம் : ஆர். ஆர். பிக்சர்ஸ்
3. கதாநாயகன் : மக்கள் திலகம்
4. மக்கள் திலகத்தின் கதா பாத்திரம் : தாசன் முல்க்
5. கதாநாயகி :: T.R. ராஜகுமாரி
6. வசனம் மற்றும் பாடல்கள் : தஞ்சை ராமையாதாஸ் .
7. இசை அமைப்பு : விஸ்வநாதன் - ராமமூர்த்தி
8. இயக்குனர் : டி.ஆர். ராமண்ணா
9. படத்தில் பங்கு பெற்ற ஏனைய கலைஞர்கள் : கே. ஏ. தங்கவேலு, சந்திரபாபு, E.R. சகாதேவன், ஏ. கருணாநிதி, T.K. ராமராஜன், T.R. ராஜகுமாரி, G. வரலட்சுமி, ராஜம் சுலோச்சனா, E.V. சரோஜா, S.D. சுப்புலட்சுமி மற்றும் பலர்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ ++++++++++++++++++++++++
படத்தின் சிறப்பம்சம் :
1. ஆர். ஆர். பிக்ஸர்ஸ் .சார்பில் தயாரிக்கப்பட்ட இரண்டாவது படமிது.
2. மக்கள் திலகம் அவர்கள் புலியுடன் போரிடும் காட்சி பிரசித்தி பெற்றது. .
3. இப்படத்திற்கு பின்னணி பாடிய கலைஞர்கள் : (டி..எம். எஸ். தவிர) : திருச்சி லோகநாதன், ஏ. எம். ராஜா, வெங்கடேசன்,
பி. லீலா, ஜிக்கி, கே. ஜமுனாராணி, ஏ. ரத்தினமாலா
இப்படத்தின் கதைச் சுருக்கம் மற்றும் பாடல்கள் அடுத்து தொடர்கிறது.
http://i40.tinypic.com/hrem4y.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
பொன்மனச்செம்மல் நடித்த 34வது திரைப்படமாகிய "குலேபகாவலி" படத்தின் கதை சுருக்கம் :
----------------------------------------------------------------------------------------------------------------------
குலேபகாவலி , இல்லை இல்லை அவள் பலே பகாவலி. அதனால்தான், நகாவலி ராஜ்யத்தின் ராணி பகாவலியாக அவளால் இருக்க முடிந்தது.
அப்பப்பா ! அவளிடம் ஆண்கள் அகப்பட்டுக் கொண்டு பட்ட பாடு ............ கொஞ்சமா , நஞ்சமா ?
அந்தப் பெண் சிங்கத்தைப் பார்க்கும் பேதைகள் எல்லாம் தாங்களும் அவளைப் போல நகாவலி ராஜ்ஜியத்தின் ராணியாக இருக்கக் கூடாதா என
ஏங்குவார்கள் !
அவள்தான் அப்படியென்றால் பகடையாடி மன்னாதி மன்னர்களையெல்லாம் பைத்தியங்களாக்கிய லக்கு ----- எப்படி தெரியமா ? அந்த அழகியை பார்க்கும் ஆண்கள் எல்லாம் "சொக்கு, சொக்கு" என்று சொக்கிப் போனார்கள். அவளிடம், சொக்கட்டான் --- ஆடித் தோற்று அவள் சொன்னபடி நெல் குத்தி, மாவு இடித்து, தண்ணீர் இறைத்துத் தாசானுதாசர்களாகக் காலத்தை கழித்தார்கள்.
இந்தப் பெண் சிங்கங்களை வெல்ல இவ்வளவு பரந்த உலகத்தில் ஒரு ஆண் சிங்கம் கூட இல்லையா ? என்ற கேள்வி எட்டு திசைகளிலும் எதிரொலி செய்தது. "இதோ இருக்கிறேன்" என்று பாய்ந்து வந்தது ஆண் சிங்கம்...... அவன்தான் தாசன்முல்க் !
அவன் தந்தை ஜைனன் முல்க் எதிர்பாராத விபத்தால், தன் கண்களை இழந்திருந்தான். இழந்த கண்களை மீண்டும் பெற வேண்டுமானால், குலேப் பூ வேண்டும்......அந்தப் பூவோ, நகாவலி ஆட்சியின் கீழ் இருந்தது. எட்டிப் பறித்து விட முடியுமா ? ஊ ஹூம் !
அந்த அபூர்வ பூவை அடைய வேண்டுமானால் எத்தனயோ ஆபத்துக்களைக் கடக்க வேண்டும். என்ன செய்வான் தாசன் முல்க் ? அல்லாவின் அருளால், அவற்றில் பலவற்றை அவன் ....... கடந்து விட்டான். கடைசியில் ......
சிங்கம் அல்ல ........பசி தீர்ந்ததும் சும்மா இருந்து விட ! புலி எத்தனை பேரை அடித்து தின்றாலும் எப்போதும் பசியோடிருக்கும் பயங்கரப் புலி !
அதை வெல்ல வேண்டி இருந்தது தாசன்முல்க்.
இவன் ஐந்தடி உயரம். அந்தப் புலியோ பதினாறு அடி நீளம் ! இவன் கையில் ஒரே ஒரு கத்தி. அதன் கையிலோ இருபது கூர்மையான கத்திகள். ஆம், அடித்துக் கிழிக்கும் அதன் நகங்களைத் தான் சொல்கிறோம். இவன் தலை அதன் வாய்க்குள் நுழைந்து விடும். அதன் தலையோ இவன் வாய்க்குள்
நுழையவே நுழையாது. அப்புறம் ....... ?
இவன் கதி என்ன ? அதை வென்றானா ? அந்த அபூர்வப் பூவை அடைந்தானா ? அவன் தந்தை ஜைனன் முல்க் இழந்த பார்வையை மீண்டும்
பெற்றாரா ? எத்தனயோ ஆண்களை தங்கள் அழகால் அடிமை கொண்ட ..... பகாவலியும், லக்பெஷ்வாவும் தாசன் முல்கின் வீரத்துக்கு முன்
தலை வணங்கினார்களா ?
இவற்றுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருந்தால் நீங்கள் எப்பொழுதுதான் படத்தைப் பார்ப்பது.
அதோ இரண்டாவது பெல் கூட அடித்து விட்டது. ..... படத்தைப் பாருங்கள்.
================================================== ================================================== ==========
இவற்றுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருந்தால் நீங்கள் எப்பொழுதுதான் படத்தைப் பார்ப்பது ?
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !அனபன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
பொன்மனச்செம்மல் நடித்த 34வது திரைப்படமாகிய "குலேபகாவலி" படத்தி ல் இடம் பெற்ற பாடல்கள் :
================================================== =====================
1. இறை வணக்க பாடல் : ஜெயமே பெறவே ஜெகமே புகழவே (தொகையறா)
நாயகமே நபி நாயகமே நலமே அருள் நபி நாயகமே
2. நகைச்சுவை ஜோடிப்பாடல் பாராண்ட மன்னரெல்லாம் ... பதுங்கிருந்த பூமியில்
இந்த பச்சோந்திக் கூட்டமெல்லாம் பகல் வேஷம் போடுதய்யா
3. ஜோடிப்பாடல் வில்லேந்தும் வீரனெல்லாம் வீழ்ச்சி பெற்றார் பகடையிலே
என்னை வெற்றி பெற முடியாது .... நீர் கற்ற வித்தையும் செல்லாது
4. ஜோடிப்பாடல் வில்லேந்தும் வீரனெல்லாம் வீழ்ச்சி பெற்றார் பகடையிலே......
என்ன வேணும் துரையே .... இஷ்டம் போல் கேள் இனியே !
5. தனித்த ஆண் குரல் பாடல் மாயா வலையில் வீழ்ந்து, மதியே இழந்து தன்னை மறந்தான்
பெரும் பாவி மனமே ! காயாபுரிக் கோட்டையை கற்கோட்டையாய்
6. தனித்த குரலில் ஆண் பாடல் கையைத் தொட்டதும் மெய்யை சிலிர்க்குதே
காதலின் வேகந்தானா...(தொகையறா)
தெய்வீக காதல் கனிந்திடும் தேகத்திலே ஒரு சக்தியுண்டு
7. தனித்த பெண் குரல் பாடல் சொக்கா போட்ட நவாபு செல்லாது உங்கள் ஜவாப்பு
நிக்காப் புருஷன் போல வந்து ஏமாந்தும் என்ன வீராப்பு ?
8. குழுப்பாடல் அம்பாலா ..... பீம்பாலா .......... லீபாலா ... பீபா ..... ஹீ பாலா
ஸோலாஜி... பாலாஜி....... ஜாலாஜி ....ஜல் ஜல் ஜல் ஜல்.. லாஜி
9. தனித்த ஆண் குரல் பாடல் நகாவலி நாட்டிலே ... பகாவலி ஆட்சியிலே நியாயமாய்
வாழவும் வழியில்லே.
அநியாயம் இது அநியாயம் இந்த ஆட்சியிலே .... இது அநியாயம்
இங்கே ஆண்களை பெண்கள் அடிமையாக்குவது அநியாயம்
10. பெண்கள் குழுப் பாடல் கண்ணாலே பேசும் பெண்ணாலே .... ஆண்கள் தன்னாலே மயங்கும்
காலமே !
எந்நாளும் வீணில் காதல் வாழ்விலே ... ஓ ... ஓ ...ஓ . தன்னாலே
11. காதல் ஜோடிப்பாடல் மயக்கும் மாலை பொழுதே நீ போ, போ இனிக்கும் இன்ப இரவே
நீ வா வா .... ...... இன்னலை தீர்க்க வா
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அனபன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
குலேபகாவலி படத்தின் கதைச்சுருக்கம், பாடல்கள் பற்றிய அருமையான ஆவணங்களைப் பதிவிட்ட பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கு நன்றிகள் பல.
Thanks Professor Selvakumar Sir. Sometimes it is difficult to find this thread any idea apart from accessing this thread without bookmarking?
http://i62.tinypic.com/k0j8ms.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
நீண்ட இடைவெளிக்கு பின்பு, PONMANACHEMMAL M.G.R. FILMOGRAPHY NEWS & EVENTS என்கின்ற இந்த திரியினில், அன்பர்கள் பலரின் வேண்டுகோளுக்கிணங்க, மீண்டும் நம் மக்கள் திலகம் நடித்த காவியங்கள் பற்றிய தொகுப்பினை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன்.
நம் கலைச்சுடர் அவர்கள் நடித்த 35வது காவியம்
http://i62.tinypic.com/fcil2f.jpg
முதல்,
திரி தொடர்கிறது. திரி பதிவாளர்கள், பதிவிடப்படும் அந்தந்த காவியம் குறித்த பொதுவான தகவல்களை மட்டும் இந்த திரியினில் பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இந்த திரியில் இடம் பெறும் காவியங்கள் படைத்த மறு வெளியீட்டு சாதனைகளை, சகோதரர் திரு. ராமமூர்த்தி அவர்களால் துவக்கப்பட்ட " மறு வெளியிட்டிலும் மக்கள் திலகத்தின் சாதனைகள்" என்ற திரியினில் பதிவிடும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
பொன்மனச்செம்மல் நடித்த 35வது காவியம் " அலிபாபாவும் 40 திருடர்களும்" பற்றிய தகவல் :
1. படம் வெளியான தேதி : 14-01-1956
2. படத்தை தயாரித்த நிறுவனம் : மாடர்ன் தியேட்டர்ஸ்
3. கதாநாயகன் : மக்கள் திலகம்
4. மக்கள் திலகத்தின் கதாபாத்திரம் : அலி பாபா
5. கதாநாயகி :: பி.பானுமதி
6. கதை, வசனம் : ஏ. எல். நாராயணன்
7. பாடல்கள் : ஏ. மருதகாசி .
7. இசை அமைப்பு : என். தட்சிணாமூர்த்தி
8. இயக்குனர் : டி.ஆர். சுந்தரம்
9. பங்கு பெற்ற ஏனைய கலைஞர்கள் : பி.எஸ்.வீரப்பா, கே . சாரங்கபாணி, கே. ஏ. தங்கவேலு, எம்.ஜி. சக்கரபாணி , ஒ. ஏ. கே. தேவர், எம். என். ராஜம், வித்யாவதி
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ ++++++++++++++++++++++++
படத்தின் சிறப்பம்சம் :
1. தென்னகத்தின், தமிழகத்தின் முதல் முழு நீள வண்ணக்காவியம்.
2. நூறு நாட்களை கடந்த வெற்றிக்காவியம்.
================================================== ============================
இப்படத்தின் கதைச் சுருக்கம் மற்றும் பாடல்கள் அடுத்து தொடர்கிறது.
பொன்மனச்செம்மல் நடித்த 35வது காவியம் " அலிபாபாவும் 40 திருடர்களும்" கதை சுருக்கம் :
பாக்தாத் நகரின் ஆடலழகி மாறி மார்ஜியானா. அவள் ஆட்டத்திலே மக்கள் பரவசமடைந்திருக்கும் சமயத்தில், அமீர் காசிம்கானின் தளபதி ஷேர்கான், அவளை அரண்மனைக்கு இழுத்து செல்ல முயலுகிறான். அந்த சமயத்தில் அலிபாபா குறுக்கிட்டு ஷேர்கானை விரட்டி . அடிக்கிறான்.
அலிபாபா, அமீர் காசிம்கானின் உடன் பிறந்தவன். அமீரால் வஞ்சித்து விரட்டப்பட்டவன். அலிபாபாவின் தீரத்தை கண்டு மார்ஜியானா. தன் மனதை பறி கொடுக்கிறாள்.
தங்கைஆயிஷாவின் விருப்பப்படி, மார்ஜியானாவையும், அவளது சகாவான தவுலத்தையும், தன் வீட்டிலேயே தங்க வைக்கிறான், அலிபாபாவும். தவுலத்தும் ஒரு நாள் எதிர்பாராத விதமாக, கள்வர் தலைவன் அபு ஹுசேன் குகையை கண்டு பிடித்து விடுகிறார்கள் . அலிபாபா, அந்த குகைக்குள் நுழைந்து, தவுலத்தின் உதவியுடன் ஏராளமான பொன்னை மூட்டை கட்டிக்கொண்டு புறப்படுகிறான்.
அலிபாபா எப்படி அவ்வளவு பொன் தேடினான் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமென்ற அமீர்கான் அவனை விருந்துக்கு அழைக்கிறான். விருந்துக்கு சென்ற அலிபாபா அண்ணன் அமீர்கானின் கபட நாடகத்தில் மயங்கி, “மாய வார்த்தையை” அவனுக்கு சொல்லி விடுகிறான். உடனே, அபாண்ட பழி சுமத்தி, அலிபாபாவை கைது செய்து, மரண தண்டனை விதிக்கிறான் அமீர்.
மார்ஜியானா, அலிபாபாவை, தன் கையாலே நடனமாடிக் கொல்வதற்கு அனுமதி பெற்று, நடனமாடியபடி, தன் கையிலிருந்த கத்தியால் அலிபாபாவின் கட்டுக்களை அறுத்து விட்டு விடுகிறான்.
கட்டறுபட்ட அலிபாபா அங்கிருந்த வீரர்களுடன் கத்தி சண்டையிடும் பொழுது, அமீர் காசிம்கான், மர்ம குகையை அடைந்து அங்குள்ள பொருட்களை மூட்டை கட்டி கொண்டு திரும்புகையில், கதவு திறக்கும் மந்திரத்தை மறந்து விடுகிறான். அப்போது அங்கு வந்த அபு ஹுசைன் அமீர் காசிம்கானை கொன்று, தலைகீழாக தொங்க விடுகிறான்.
அமீரை தேடி வந்த அலிபாபா, அவனின் பிணத்தை தன் வீட்டுக்கு கொண்டு வந்து விடுகிறான்.
அபு ஹுசைன் பிணத்தை காணாததால் அலிபாபாதான் எடுத்துச் சென்றிருக் க வேண்டும் என அறிந்து, தன் சகாக்களை பீப்பாயில் அடைத்து, மாறு வேடத்தில், அலிபாபாவின் அனுமதியுடன், அவன் மாளிகையை அடைகிறான்.
மாறு வேடந்தாங்கியவனை அடையாளம் கண்டு கொள்கிறாள் மார்ஜியானா. இதையறிந்த அபு ஹுசைன், மார்ஜியானாவை இரகசியமாக சிறை செய்கிறான்.
மிகுதியை காண வெள்ளித்திரைக்கு வாருங்கள் !
பொன்மனச்செம்மல் நடித்த 35வது காவியம் " அலிபாபாவும் 40 திருடர்களும்" பாடல்கள் :
பாடல் 1 : அழகான பொண்ணு நான், அதுக்கேத்த கண்ணுதான் (தனித்த பெண்குரல் பாடல்)
பாடல் 2 : சின்னஞ்சிறு சிட்டே எந்தன் சீனா கற்கண்டே (ஆண் பெண் ஜோடிப்பாடல்)
பாடல் 3 : மாசிலா உண்மைக் காதலே, மாறுமோ செல்வம் வந்த போதிலே
(கதாநாயகன்-கதாநாயகி காதல் பாடல்)
பாடல் 4 : நாம் ஆடுவதும் பாடுவதும் காசுக்கு (நடனம் மற்றும் குழுப்பாடல்)
பாடல் 5 உன்னை விட மாட்டேன், உண்மையில் நானே ! (தனித்த பெண்குரல் பாடல்)
பாடல் 6 உல்லாச உலகம் உனக்கே சொந்தம் செய்யடா... செய்யடா
(தனித்த ஆண் குரல் பாடல்)
பாடல் 7 சலாம் பாபு சலாம் பாபு என்னைப் பாருங்க தனித்த பெண்குரலில் நடனப்பாடல்)
பாடல் 8 : அன்பினாலே ஆளவந்த அழகு பூபதி, அமீர் பூபதி (தனித்த பெண்குரல் பாடல்)
பாடல் 9 என் நா(ஆ)ட்டமெல்லாம் ஒரு வேட்டையிலே தானே, நானதில் தவறேனே
(தனித்த பெண்குரல் பாடல்)
*****
அன்பு பேராசிரியர் அவர்களுக்கு,
நன்றிகள் கோடி. எங்கள் வேண்டுகோளை ஏற்று மீண்டும் பொன்மனச் செம்மல் திரியை சுடர்விடச் செய்தமைக்கு.அலிபாபாவும் 40 திருடர்களும். தென்னகத்தின் முதல் வண்ணப்படம். (கேவா கலர்). சிவப்பு வண்ணம் சற்று தூக்கலாக இருக்கும் கேவா கலர் இயற்கையான வண்ணமாக இல்லாவிடினும் முதல் படம் என்ற அளவில் அது அளித்த பிரமிப்பு இன்னமும் மாறவில்லை. மக்கள் திலகத்தின் அழகு படிப்படியாக பொலிவு பெற்று மெருகேறி மலைக்கள்ளன் படத்தில் கலைச்சூரியனாக பிரகாசித்தது என்றால் இந்தப் படத்தில் அதற்கும் மேல் . சாகசச் காட்சிகளில் அதிக அளவு சிரமம் எடுத்துக் கொண்டு மக்கள் திலகம் அவர்களே தாவுவது வேகமாக குதிரை மீது ஏறிச் செல்வது உயரத்தில் இருந்து குதிப்பது மேசைகளின் மீது தாவி வழுக்கிய படி செல்வது என அத்தனை சண்டைவீரர்கள் செய்வதையும் டூப் போடாமல் தானே செய்து பிரமிப்பூட்டியிருப்பார் . ஆனால் சமீப காலமாக இந்தப் படத்தில் காதல் காட்சிகளில் கூட எம்.ஜி.ஆருக்கு டூப் போட்டு படத்தை முடித்தார் சுந்தரம். எம்.ஜி.ஆரால் கூட டூப் நடித்த காட்சிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்ற ஒரு கதை (எம்.ஜி.ஆர் இரண்டு நாள்கள் அவசரமாக சென்னைக்கு சென்று விட்டதால் டூப்பை வைத்து சண்டைக் காட்சி, காதல் காட்சி ஆகியவற்றை முடித்து படத்தை வெளியிட்டார் என்று ஒரு பத்திரிக்கையில் வந்தது . அதை அப்படியே பலரும் உண்மைத் தன்மையை அறியாமலே பிரசுரித்து வருகிறார்கள். பேராசிரியர் சார் நீங்கள் இது பற்றி உங்கள் கருத்தை தெரிவிக்க வேண்டுகிறேன். ) இசையமைப்பாளர் தட்சிணாமூர்த்தி இசையமைத்த ஒரே எம்.ஜி.ஆர் படம். இன்றைக்கும் ரசிக்கும் வகையில் உள்ள அருமையான படம்.
மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் சுந்தரம், மிக மிக கண்டிப்பானவர். படப்பிடிப்பின் போது, நமது மக்கள் திலகத்தின் எதிர் பாராத தாமத வருகையினால், ஒரு சில காட்சிகள் டூப் போட்டு, எடுக்கப்பட்டன என்பது உண்மையே. ஆனால், அந்த பத்திரிகை கூறியபடி, அந்த டூப் காட்சிகள், நம் பொன்மனசெம்மல் அவர்களால் அடையாளம் காண முடியவில்லை என்பது தவறான செய்தி. நான் கேள்விப்பட்ட வரையில், மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம், திரைக்கலைஞர்களை பயமுறுத்த இப்படிப்பட்ட தந்திரங்களை கையாள்வார் என்பதே ! ஆனால்,, காதல் மற்றும் சண்டை காட்சிகளில், முழுமையாக இறுதியில் நடித்தவர் நம் மனம் கவர்ந்த மக்கள் திலகமே !
இன்னும் ஓரிரு தினங்களில், நமது பொன்மனச்செம்மல் நடித்த 36வது காவியம் " மதுரை வீரன் " பற்றிய தகவல் பதிவிடப்படும்.
பொன்மனச்செம்மல் நடித்த 36வது காவியம் " மதுரை வீரன் " பற்றிய தகவல் :
1. படம் வெளியான தேதி : 13-04-1956
2. படத்தை தயாரித்த நிறுவனம் : கிருஷ்ணா பிக்சர்ஸ்
3. கதாநாயகன் : மக்கள் திலகம்
4. மக்கள் திலகத்தின் கதாபாத்திரம் : வீரன்
5. கதாநாயகி :: பி.பானுமதி
6. வசனம் : கவியரசு கண்ணதாசன்
7. பாடல்கள் : கவியரசு கண்ணதாசன், உடுமலை நாராயணகவி, தஞ்சை ராமையாதாஸ், .
8. இசை அமைப்பு : ஜி. ராமநாதன்
9. இயக்குனர் : டி. யோகானந்
10. பங்கு பெற்ற ஏனைய கலைஞர்கள் : பத்மினி, கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன், டி.ஏ. மதுரம் , திருப்பதி சாமி, ஒ. ஏ. கே. தேவர்,:டி எஸ். பாலையா, டி. கே. ராமசந்திரன், ஆர். பாலசுப்ரமணி, மற்றும் பலர்.
11. பின்னணி பாடியவர்கள் : டி எம். சவுந்தரராஜன், பி. லீலா, எம். எல். வசந்தகுமாரி, ஜிக்கி, பி. பானுமதி ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ ++++++++++++++++++++++++
படத்தின் சிறப்பம்சம் :
1. திரையிடப்பட்ட அனைத்து அரங்குகளிலும் 100 நாட்கள் ஒடிய முதல் தமிழ் திரைப்படம்.
2. 33 திரையரங்குகளில், நூறு நாட்களை கடந்த சாதனையை , இன்றும் எந்த கருப்பு-வெள்ளை படமும் முறியடிக்க வில்லை.
================================================== ============================
http://i61.tinypic.com/2vcgf3m.jpg
http://i58.tinypic.com/ifwrax.jpg
இப்படத்தின் கதைச் சுருக்கம் மற்றும் பாடல்கள் அடுத்து தொடர்கிறது.