anybody tell what function this photo taken
http://i1170.photobucket.com/albums/...psb9e6bc86.jpg
Printable View
anybody tell what function this photo taken
http://i1170.photobucket.com/albums/...psb9e6bc86.jpg
ENGALIN GULA THEIVAM
http://i1170.photobucket.com/albums/...ps31cbe2a7.jpg
இன்றும் திரையுலகை ஆளும் தர்மதேவன்.
இன்றைய திரையுலகிலும் மக்கள் திலகம் இல்லாத திரைப்படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவிற்கு அவர் பெரும்பாலான திரைப்படங்களில் வந்துவிடுகிறார். சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் '"வடகறி" திரைப்படத்தில் படம் ஆரம்பம் முதல் இறுதி வரை பெரும்பாலான காட்சிகளில் தலைவரின் முகம்தான். கதாநாயகன் ஜெய்யின் அண்ணன் எம்ஜிஆர் ரசிகராக நடிக்கிறார்.
http://i59.tinypic.com/29fwkra.jpg
http://i62.tinypic.com/2z7ftqr.jpg
http://i58.tinypic.com/2m51pxs.jpg
அவருடைய ஆட்டோவில் முன்னும், பின்னும் தலைவருடைய படங்களை ஒட்டியிருக்கிறார்.
http://i57.tinypic.com/16c274p.jpg
http://i58.tinypic.com/v6qdfa.jpg
பூஜை அறையில் எம்ஜிஆர் கடவுளாக.
http://i61.tinypic.com/hwg842.jpg
http://i61.tinypic.com/5nm41x.jpg
ஒரு காட்சியில் ஜெய்யின் அண்ணன் தான் கண்டெடுத்த நகையை போலீசில் ஒப்படைக்க, அவர் மனைவி ஏன் வீட்டுக்கு எடுத்து வரவில்லை என்று அவரை திட்டுகிறாள். அப்போது வரும் ஜெய் தன் அண்ணனிடம்:
ஜெய்:ஏன்னா வழியில் கிடைத்த நகையை போலீஸ்ல கொடுத்த
அண்ணன்: சின்ன வயசிலிருந்தே எங்கப்பா எம்ஜிஆர் பேரை சொல்லி வளர்த்தார்டா. இதை செய்யலைன்னா நான் எப்படிடா எம்ஜிஆர் ரசிகனா இருக்க முடியும்
ஜெய்: என்ன..சும்மா எம்ஜிஆர் fan..எம்ஜிஆர் fan என்று சொல்ற. நான்கூடத்தான் சிம்பு பேன்..இதமாரி நான் செய்றன்னா.
அண்ணன்: ஹீரோ நிறைய பேர் வருகாங்கடா. ஆனால் தலைவன் ஒருத்தந்தான்டா. மத்த ஹீரோ எல்லாம் தனக்கு ஒரு பிரச்சினை என்றால் அதை பொதுப்பிரச்சினையாக்கி தலைவர் ஆவாங்க. ஆனால் எங்க தலைவர் மத்தவங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால்தான் கோதாவிலே இறங்குவார். அவர்தாண்டா உண்மையான தலைவர். பிச்சை எடுக்கறதும், திருடுறதும்தான் கேவலம். மத்தவங்க பொருளை வச்சுக்கறதும் திருட்டுதான். அதை நான் செய்யமாட்டேன்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
தன் தலைவனை வணங்கி தொழிலுக்கு புறப்படும் தொண்டன்
http://i58.tinypic.com/25ionc9.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
வடகறி படத்திலிருந்து மக்கள் திலகத்தின் பின்னணியில் மேலும் சில காட்சிகள்
http://i62.tinypic.com/2elxf2b.jpg
http://i60.tinypic.com/e61ybr.jpg
http://i61.tinypic.com/295we48.jpg
http://i57.tinypic.com/ji2b75.jpg
http://i58.tinypic.com/2po5umq.jpg
http://i57.tinypic.com/2vtqoms.jpg
http://i57.tinypic.com/9gva6a.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
அண்ணன்: ஹீரோ நிறைய பேர் வருகாங்கடா. ஆனால் தலைவன் ஒருத்தந்தான்டா. மத்த ஹீரோ எல்லாம் தனக்கு ஒரு பிரச்சினை என்றால் அதை பொதுப்பிரச்சினையாக்கி தலைவர் ஆவாங்க. ஆனால் எங்க தலைவர் மத்தவங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால்தான் கோதாவிலே இறங்குவார். அவர்தாண்டா உண்மையான தலைவர். பிச்சை எடுக்கறதும், திருடுறதும்தான் கேவலம். மத்தவங்க பொருளை வச்சுக்கறதும் திருட்டுதான். அதை நான் செய்யமாட்டேன்.
கலிய பெருமாள் சார் தங்களுக்கு கோடி நன்றிகள் சொல்லலாம் . நான் வடகறி படத்தின் முழு வடிவில் லிங்க் கொடுத்தேன் அதில் இந்த நிமிடத்தில் இருந்து அந்த நிமிடம் வரை பாருங்கள் என்று குறிப்பு கொடுத்தேன் தாங்களோ பகுதி வாரியாக கொடுத்தது மட்டும் அல்லாமல் தலைவரின் புகழ் பாடும் வசன வார்த்தைகளை அப்படியே கொடுத்து எங்களையெல்லாம் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திவிட்டிர்கள்
மக்கள் திலகத்தின் ரசிகர்கள் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம் வடகறி
http://i58.tinypic.com/21ozert.jpg
http://i60.tinypic.com/3481xcy.jpg
ஜெய்யின் முதல் மாத சம்பளத்தை தலைவரிடம் வைத்து வணங்கி. 'தம்பியை நீதாம்பா பார்த்துக்கணும்' என்று வேண்டும் அண்ணன்
http://i59.tinypic.com/5mgwtu.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
அண்ணன்: ஹீரோ நிறைய பேர் வருகாங்கடா. ஆனால் தலைவன் ஒருத்தந்தான்டா. மத்த ஹீரோ எல்லாம் தனக்கு ஒரு பிரச்சினை என்றால் அதை பொதுப்பிரச்சினையாக்கி தலைவர் ஆவாங்க. ஆனால் எங்க தலைவர் மத்தவங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால்தான் கோதாவிலே இறங்குவார். அவர்தாண்டா உண்மையான தலைவர். பிச்சை எடுக்கறதும், திருடுறதும்தான் கேவலம். மத்தவங்க பொருளை வச்சுக்கறதும் திருட்டுதான். அதை நான் செய்யமாட்டேன்.
நட்சத்திரங்கள் பல உண்டு ஆனால் குளிர்ச்சியான ஒளி கொடுக்கும் சந்திரன் என்றும் ஒன்று தான் .
அவர்தான் எவர்க்ரீன் எங்கள் வசூல் சக்கரவர்த்தி இந்த அகிலமே வியக்கும் எங்களின் ஆயிரத்தில் ஒருவன்
தலைவர் திரையுலகை விட்டு 1978 ஆனால் இந்த 2014 வரை அவருடைய படங்கள் தான் இன்றும் ஒவ்வொரு வருடமும் மறுவெளிஈடுகளில் அதிகமாக திரைஈடபட்டு அதிக வசூலை வாரி குவிக்கிறது . நடித்த காலத்தில் மட்டும் இல்லாமல் திரைஉலகில் மற்றும் இந்த பூவுலகில் இல்லாத காலத்திலும் வசூலில் சாதனை செய்வதில் இந்த அகிலத்தில்தலைவரை தவிர வேறு யாரும் இல்லை
நாயகனாக நடித்த காவியங்களோ 115 அதில் சுமார் 80 திரைப்படங்கள் இன்றும் தமிழகத்தில் எங்காவது ஒரு இடத்தில ஓடிக்கொண்டு இருப்பது தான் சாதனை
வாரம் தவறாமல் பல்வேறு தொலை காட்சிகளில் தலைவரின் திரைப்படங்கள் திரும்ப திரும்ப ஒளிபரப்பி கொண்டே இருக்கிறார்கள் இன்று கூட வின் தொலைகாட்சியில் அன்னமிட்ட கை படமும் சன்லைப் தொலைகாட்சியில் தேடி வந்த மாப்பிளை திரைப்படம் 11.00 மணிக்கு ஒளிபரப்பானது .
கடவுள்களை கூட ஆடி, புரட்டாசி , கார்த்திகை என்று மாதங்கள் கொண்டு பிரித்து விழா கொண்டாடும் இந்த உலகத்தில் வருடம் முழுவதும் தங்களின் தங்க தலைவைனின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் கொண்டாடி மகிழ்கிறது அவரது ரத்தத்தின் ரத்தங்கள் (கட்சி தவிர) இது போல் விழா நாயகன் இந்த பாரினில் உண்டா ? இல்லை எங்கள் கடவுள் தவிர வேறு யாருக்கும் இல்லை .
அருள் வடிவானவன். ஆலயத்தில் இறைவனவன்.
சத்தியம் விதைத்தவன். தர்மத்தின் நாயகன்.
வாகைத்தலைவன். வெற்றி-திருப்புகழ் வேந்தன்.
பாட்டுடைத் தலைவன். அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=6BoO...ature=youtu.be
தென்றல் வீசும் ரம்மியமான இரவு நேரம் . அழகிய சிறு நீரோடை .சுற்றிலும் பசுமையான செடிகள் . மலர்கள் .
முழு நிலவு மேகத்தில் ஜொலிக்கிறது .. தென்றல் காற்றும் மலர்களின் நறுமணம் இரண்டும் இணைந்திட
அந்த பகுதி நந்தவனமாக காட்சியளித்தது . ஒரு அழகு தேவதை .அவள் .பக்கதில் ஒரு மன்மத ராஜகுமாரன் .
அந்த தேவதை பெயர் ராதா . மன்மதன் வேறு யாருமில்லை கண்ணன் . காதலர்கள் நெஞ்சங்கள் மதுர கானத்தில்
மிதக்க துவங்கினார்கள் .
கண்ணில் ஆடும் மாயவன் என்று ராதையும் நீல வண்ண பூங்குழல் என்று கண்ணனும் ஆராதனை செய்யும் அழகே அழகு .காதலர்களின் உவமைகள் - தமிழ் வார்த்தைகள் நம்மை அந்த சொர்க்கத்திற்கே அழைத்து செல்கிறது .
பாடகர் திலகம் - இசை அரசி இருவரின் குரலில் மெல்லிசை மன்னரின் இனிய இசையில் இந்த பாடல் காட்சியில்
நம் கண்களும் செவிகளும் அந்த தோட்டத்திற்கே நம்மை அழைத்து செல்கிறது .
மக்கள் திலகம் - ஜெயா இருவரும் இந்த பாடல் காட்சியில் மிகவும் மென்மையாக இளம் காதலர்களாக தோன்றி பாடலுக்கு உயிர் கொடுத்திருந்தார்கள் .இந்த காதல் கீதத்தை நீங்களும் ரசித்து பாருங்களேன் .
http://youtu.be/2qAI__2gIc4[/QUOTE]
52 ஆண்டுகள் முன் வெளிவந்த மக்கள் திலகத்தின் ''விக்கிரமாதித்தன் '' - படம் தற்போது மதுரை நகரில் ஓடிகொண்டிருப்பது மூலம் மக்கள் திலகம் படங்கள் என்றுமே ஜீவன் உள்ளது என்பதை அறிய முடிகிறது .இந்த படம் 1962 தீபாவளி வெளியீடு .அப்போது எதிர் பார்த்த வெற்றி பெறாத படம் .மறுமுறை வெளியீடுகளில் இந்த படம் தமிழ் நாடெங்கும் பட்டி தொட்டிகளில் பல முறை ஓடியுள்ளது . இதுதான் எம்ஜிஆரின் படங்களுக்கும் எம்ஜிஆருக்கும் கிடைத்த வெற்றி .
http://i60.tinypic.com/2iblrvb.jpg
மக்கள் திலகம் எம்ஜிஆர் - திரியின் பதிவாளர்களுக்கும் ,பார்வையாளர்களுக்கும் ஓர் இனிய செய்தி .
மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் 10 - 5 நட்சத்திர அந்தஸ்து இன்று கிடைத்துள்ளது .
நம் பதிவாளர்களின் தொடர் பங்களிப்பு மூலம் தந்த திரிக்கு பெருமை கிடைத்துள்ளது . இந்த இனிய
நேரத்தில் அனைவருக்கும் அன்பான நன்றியினையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கின்றேன் .
உலகம் சுற்றும் வாலிபன்
==============விமான நிலைய பாதையை தவற விட்ட டிரைவர் ஹியோட்டோ, பின், வண்டியை வேகமாக செலுத்தியதால், குறிப்பிட்ட நேரத்திற்குள், விமான நிலையத்தை அடைந்து விட்டோம். ஹியோட்டோவின் முகத்தில் அளவுகடந்த மகிழ்ச்சி; அவர் எனக்கும், மற்ற நண்பர்களுக்கும் மலர் செண்டுகள் கொடுத்தார். நானும், என் நினைவாக ஒரு சில பொருட்களைக் கொடுத்தேன்.
விமானத்திற்கு புறப்படுவதற்கு முன், அவரை மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டேன். என் கண்களில் நீர் ததும்பியது; அணைப்பிலிருந்து விடுபட்ட போது, அவருடைய கண்ணிலிருந்தும் கண்ணீர் வழிவதைக் கண்டேன். சில நாட்கள் மட்டுமே பழகிய இருவருக்கிடையில், மொழி, இன வேறுபாடுகளை கடந்து, அன்புறவு ஏற்படு வதையும், பல ஆண்டுகள் பழகியும், உள்ளம் ஒட்டாமல் அன்னியராகவே வாழ்கின்றவர்களையும் சிந்தித்த போது, மனித மனத்தின் விசித்திரத்தை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.
மதியம், 2:10 மணிக்கு, விமானம் புறப்பட்டு, மணி, 5:30க்கு ஹாங்காங் வந்து சேர்ந்தது. எங்கு பார்த்தாலும் தண்ணீர்! கரையைக் காண முடியவில்லை. 'நிலம் எங்கே இருக்கிறது... விமானம் எங்கே இறங்குகிறது...' என்று, நாங்கள் ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டோம்.
இரு பக்கத்திலும் தண்ணீர், இடையில் நிலம்; அந்த நிலப்பகுதியில்தான், விமானம் இறங்கியது.
விமான ஓட்டிகள் மிகச் சிறிய தவறிழைத்து விட்டாலும், தண்ணீருக்குள் விமானம் இறங்கி விடும். முன்பு ஒருமுறை, தரை இறங்க வேண்டிய விமானம் மூடுபனியால், தண்ணீரில் இறங்கி விட்டதாகக் கூடச் சொன்னார்கள். நாங்கள் பயணம் செய்த விமானம், பத்திரமாகத் தரை இறங்கியது.
ஹாங்காங் விமான நிலையத்தில் பல தமிழ் நண்பர்கள் அகமும், முகமும் மலர எங்களை வரவேற்றனர். அவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள்.
சென்னையில் அறிமுகமான ரஹ்மானும், அவர் தம் குடும்பத்தினரும், நண்பர் விஸ்வநாதனும் எங்களை வரவேற்றனர். இருவரும் எங்களை தங்கள் கார்களில், 'கவ்லூன்' என்ற பகுதிக்கு அழைத்துச் சென்றனர். வழியில், கார்களைப் படகுகளில் ஏற்றி, எதிர் கரையில் உள்ள ஹாங்காங்கிற்கு சென்றோம்.
பெத்ரீ என்றழைக்கப்படும் இயந்திரப் படகில், நாங்கள் சென்ற கார்களோடு, மேலும், பல கார்கள், டிரக்குகள் போன்றவைகளும் பயணம் செய்தன. தமிழகத்தில் ஒரு பழமொழி உண்டு... 'ஓடம் வண்டியில் ஏறும்; வண்டி ஓடத்திலும் ஏறும்...' என்று. இதை முன்பு நான் நேரில் கண்டிருந்தாலும், இன்று, அது எத்தனைத் தத்துவங்களை உள்ளடக்கிய சொல் என்பதை, நன்கு உணர முடிந்தது.
இரவு ஓட்டலில் உணவு உட்கொண்டோம். தூங்கச் செல்வதற்கு முன், மின் ஒளியில் அதன் அழகை பார்ப்பதற்கு வசதியாக, ஒரு குன்று இருக்கிறது என்று கூறினர். அந்த இடத்திற்குச் சென்று பார்த்தோம். நாங்கள் நின்றிருந்த இடத்தில், மிகக் கொஞ்சமாக வெளிச்சம் இருந்தது. பிறை சந்திரன் வடிவத்தில் தண்ணீர் பகுதியும், அதன் கரையில் பல்வேறு வண்ண விளக்குகளின் அழகொளி, எங்களை கவர்ந்து, மெய்மறந்து பார்த்துக் கொண்டே இருக்கச் செய்தது.
மறுநாள், படப்பிடிப்பிற்காக வேறு இடங்களைப் தேர்ந்தெடுக்கச் சென்றோம். ஓர் இடத்தில் படிகளில் இறங்கி நடந்த போது, கூட்ட நெரிசலில் இருந்து, 'அய்யா...' என்றொரு சத்தம், 'மிஸ்டர்...' என்று, இன்னொரு சத்தம் கேட்டு, திரும்பினேன். காலில் ஒரு சிறு கட்டுப் போட்டுக் கொண்டிருந்த ஒருவர், கையை நீட்டி பிச்சை கேட்டார். இந்தியாவிலிருந்து, 5ம் தேதி புறப்பட்டதற்குப் பின், அன்று, 25ம் தேதியன்று தான், முதன் முதலாக ஒரு பிச்சைக்காரரைச் சந்தித்தேன்.
பசி வந்தால், பத்தும் பறந்து போகும் என்பர். பசிக்காக சிலர் பிச்சை எடுக்கின்றனர் என்றால் மற்றும் சிலர், வறுமையின் கொடுமையால், பிச்சை எடுக்கின்றனர்.
ஜப்பானில், நான் பார்த்த வரை, பிச்சைக்காரர்கள் தென்படவில்லை. பிச்சை எடுப்பதை, அவர்கள் கேவலமாக கருதுகின்றனர் போலும்.
ஹாங்காங் நகரத்தின் அழகையும், செல்வச் செழிப்பையும் கண்டு, மதி மயங்கும் ஒவ்வொருவரும், நான் மேலே குறிப்பிட்ட இதையும் காணத்தான் வேண்டும்.
செஞ்சீனாவின் விடுதலை விழாவை, ஹாங்காங்கில் உள்ள சீனர்களில் பெரும் பாலானோர் மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.
எந்தப் பக்கம் பார்த்தாலும், எளிமை நிறைந்த சிறு கடைகள், சிறு படகுகள், வீதியை ஒட்டிப் பக்கத்திலிருந்த நதியில் மிதந்து கொண்டிருந்தன. அதன் முகப்பில், செங்கொடி பறந்து கொண்டிருந்தது.
'எல்லாப் படகுகளிலும், செங்கொடிகள் பறக்கின்றனவே... எல்லாரும் செஞ்சீனாவின் ஆதரவாளர்களா?' என்றேன் நண்பர் ஒருவரிடம்.
அதற்கு அவர் அளித்த பதில், எனக்குத் திகைப்பை தந்தது.
'சீனக் கடற்கரையோரத்தில், மீன் பிடிக்க வேண்டுமாயின், சீனாவின் அனுமதி வேண்டும். இக்கொடிகளோடு சென்றால், எளிதாக அனுமதி பெறலாம். அதனால் தான் இப்படி...' என்றார். ஆனால், அவருடைய கூற்று தவறானது என்பது, பின்பு புரிந்தது.
காரணம், மீன் பிடிக்க வேண்டுமே என்பதற்காக, படகுக்காரர்கள், செங்கொடிகளைத் தங்களது படகுகளில் கட்டியிருந்தார்களாயின், ஹாங்காங் நகரத்திற்குள் சினிமாக் கொட்டகைகளிலும், வீடுகளிலும், கடைகளிலும் அலங்கார விளக்குகளோடு, மாசேதுங்கின் சித்திரங்களைப் பெரிய பேனர்களாக அமைத்திருக்க மாட்டார்கள்.
இது போன்று தான், நாம் போடுகின்ற தப்புக் கணக்குகள், உண்மையைப் பொய்யாக்கிக் கூறுவதன் வாயிலாக, நம் மனதை வேறு வழியில் திருப்திப்படுத்திக் கொள்ள முயலுகின்றன.
ஹாங்காங்கின், அழகிய கடற்கரைகளில் ஒன்றான, 'பெல்ஸ் பீச்'சில், 'நிலவு ஒரு பெண்ணாக...' என்ற பாடல், படமாக்கப்பட்டது.
'கபர்டீன்' என்றழைக்கப்படும் அப்பகுதியில், நானும், மஞ்சுளாவும் அசோகனிடமிருந்து தப்பி தெருவில் ஓடிவரும் காட்சியும் படமாக்கப்பட்டது.
ஹாங்காங்கில், 'பிரின்ஸஸ் பில்டிங்க்ஸ்' என்ற, ஒரு வியாபாரத் தலம் உண்டு. எதிர் வரிசையிலுள்ள இக்கட்டத்திலிருந்து தொடர்ந்து மேலே சென்றால், இக்கடையின் மறு பகுதிக்குச் செல்ல, வீதியின் குறுக்கே தெருப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது. அது, அந்தக் கடைக்குச் சொந்தமானது.
அந்தப் பாலம், இரு பக்கமும் கண்ணாடிகளால் தடுக்கப்பட்டு, மிக அழகாக இருந்தது. அந்த இடத்தில், நானும் மஞ்சுளாவும் சந்தித்து உரையாடும் காட்சியைப் படமாக்கினேன். நாங்கள் அங்கு சென்றதும், அங்குள்ள தமிழன்பர்களும், இந்தியர்களும் எனக்கும் குழுவினர்களுக்கும் இரவு, 'ஹில்டன்' ஓட்டலில், விருந்து கொடுத்தனர்.
'டைகர்பாம்' என்பது, ஒரு மருந்து, அதை விற்றுச் சம்பாதித்த பணத்திலிருந்து, பல லட்ச ரூபாய் செலவு செய்து, 'டைகர் பாம் கார்டன்' என்ற தோட்டத்தை, அதன் உரிமையாளர் தோற்றுவித்திருப்பதாகக் கூறினர். அந்த இடத்தில், ஒரு பாடல் காட்சியைப் படமாக்கினேன்.
ஹாங்காங்கில் மட்டும் அல்ல; சிங்கப்பூரிலும், இதைப் போன்ற, டைகர்பாம் கார்டனை வேறு மாதிரியாக அமைத்திருக்கின்றனர். குழந்தைகளுக்கு, நல்லதொரு பொழுதுபோக்கு இடமாக இது உள்ளது.
அங்கு, இந்தியாவைச் சேர்ந்த மிகப் பெரிய கோடீஸ்வரரான, ஹரிலீலா என்பவர், தங்களது வீட்டிலேயே, படம் எடுக்க அனுமதித்ததுடன், 'தங்கத் தோணியிலே...' என்ற பாடலை, அவருடைய விசேஷ இயந்திர படகில், படமாக்க அனுமதித்தார்.
இவ்வாறு, நண்பர்களின் அன்பு, அரவணைப்பில், செல்லக் குழந்தைகளாக்கப்பட்டு, சிறப்போடு பாதுகாக்கப்பட்டோம். எங்கள் படத்தொழிலுக்கு அவர்கள் செய்த உதவி மறக்க முடியாதது.
மனிதனாக, இவ்வுலகில் ஒருமுறைதான் பிறக்கிறோம்; இறைவன் படைத்த உலகை முழுவதுமாகப் பார்த்து ரசிப்பது என்பது, எல்லாருக்கும் இயலாத காரியம்.
உலகத்தைச் சுற்றிப் பார்க்க எனக்குக் கிடைத்த, இந்த வாய்ப்பை, இறைவன் கொடுத்த நல்ல வாய்ப்பாகவே கருதுகிறேன். அதை முழுமையாகப் பயன்படுத்தி, இந்தப் படத்தை உருவாக்கியிருப்பதாக நினைக்கிறேன்.
தமிழகத்தில், ஒரு குக்கிராமத்தில் இருக்கும் ரசிகனும் ஜப்பான், ஹாங்காங், டோக்கியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளைப் பார்த்த உணர்வை, இந்த படத்தின் மூலம் பெறுவான் என்றால், அதுவே, 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தின் வெற்றி என்று சொல்வேன்!
— முற்றும் -
தொகுப்பு: வைரஜாதன்,
நன்றி 'பொம்மை'
விஜயா பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.
- எம்.ஜி.ஆர்.,
http://i62.tinypic.com/rj04df.jpg
இனிய நண்பர் கலியபெருமாள் சார்
முதற்கண் வணக்கங்கள்.
நான் இட்ட பதிவில் என்ன நாகரீக குறைவு என்பதை கூறுங்கள் சார்.
சைலேஷ் பாபு அவர்கள் பதிவு செய்ததற்கு என்னுடைய எண்ணத்தையும் கூறினேன் இதில் என்ன நாகரீக குறைவு ?
எல்லாவற்றிக்கும் இப்படி பதிவிடாதீர்கள் சார் . தவறு உண்மையாக இருப்பின் சுட்டிகாட்டுங்கள் திருத்திகொள்கிறேன் அதைவிடுத்து எல்லாத்துக்கும் ஒரு குற்றம் காணல், என்று எதற்கு இந்த பேதமை ?
அன்புடன்
rks
http://i57.tinypic.com/mwd4x4.jpg
நேற்று மாலை 6.30 மணியளவில் சென்னை ரஷ்யன் கல்சுரல் அகாடெமியில் (சோழா ஓட்டல் அருகில் ) மோகனா ரிதம்ஸ் வழங்கும்
இன்னிசை விருந்து நிகழ்ச்சியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பாடல்கள்
மற்றும் இதர நடிகர்களின் பாடல்களும் இசைக்கப்பட்டன.
http://i61.tinypic.com/zojrbc.jpg
இன்று பிற்பகல் 2.30 மணியளவில் சென்னை ராமராவ் கலா மண்டபம், தி.நகரில் மக்கள் திலகம்/நடிகர் திலகம் பாடல்கள் இன்னிசை நிகழ்ச்சி
நடைபெற்றது. அதன் சுவரொட்டி நமது திரி நண்பர்களின் பார்வைக்கு
http://i62.tinypic.com/1z527ud.jpg
.சென்னை பூக்கடை பேருந்து நிலையம் அருகில் திரு. குமார் என்கிற
ரிக்ஷாக்காரர் வண்டியில் புரட்சி தலைவரின் படங்கள்
எம். ஜி. ஆர். – சிவாஜி இருவர் மனங்களிலும் ஒரே எண்ணம்
ஒரே நேரத்தில் எம். ஜி. ஆர். படங்களுக்கும் சிவாஜி படங்களுக்கும் வசனம் எழுதிய ஒரே வசனகர்த்தா நானாகத்தான் இருக்க வேண்டும். 1962 ஆம் ஆண்டு ஒரே நாளில் நான் வசனம் எழுதிய எம். ஜி. ஆரின் ‘தாயைக் காத்த தனயன்’ படமும் சிவாஜியின் ‘படித்தால் மட்டும் போதுமா’ படமும் ரிலீஸானது. ஒன்று தேவர் படமும் இன்னொன்று ரெங்கநாதன் பிக்சர்ஸ் படமுமாக இருந்த போதிலும், முறையே ஒன்றை எம். ஜி. ஆர். பிக்சர்ஸ¤ம், இன்னொன்றை சிவாஜி ஃபிலிம்ஸ¤ம் சென்னை நகரில் வெளியிட்டிருந்தார்கள். இரண்டுமே சூப்பர் வெற்றியடைந்து 100 நாட்களைத் தாண்டி ஓடிக் கொண்டிருந்தது. மவுண்ட்ரோடு ஏரியாவில் பிளாசாவில் தாயைக்காத்த தனயனும், மிட்லண்டில் படித்தால் மட்டும் போதுமாவும் ரசிகர்கள் கூட்டத்துடன் ஓடிக்கொண்டிருந்தன.
அன்று காலை எம். ஜி. ஆரின் அடுத்த படத்துக்காக வசனம் எழுதச் சென்றிருந்தபோது எம். ஜி. ஆர். என்னை அழைத்து, ‘போன படம் வெற்றியடைஞ்சதுக்கு உனக்கு எந்த பரிசும் நான் கொடுக்கலை. இப்போ தாயைக்காத்த தனயன் பெரிய வெற்றியடைஞ்சிருக்கு, உனக்கு என்ன பரிசு வேணும்?’ என்று கேட்க, ‘அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்னே, உங்க அன்பு இருந்தா போதும்’ என்றேன். ‘அப்படியா அப்போ நானே ஏதாவது பண்றேன்’ என்று சொல்லிவிட்டார்.
அன்று பிற்பகல் சிவாஜி பட ஷ¥ட்டிங் போனபோது அவர் என்னை தனியே அழைத்து, ‘ஆரூரான், இதற்கு முந்தி நீ எழுதின பாசமலர் பெரிய வெற்றியாச்சு. அதுக்கு நான் பரிசு எதுவும் தரலை. இப்போது நீ எழுதின படித்தால் மட்டும் போதுமாவும் நல்லா ஓடிக்கிட்டிருக்கு. உனக்கு என்ன பரிசு வேணும் சொல்லு. அண்ணன் கிட்டே இருந்தா தர்ரேன். இல்லேன்னா வாங்கித் தர்ரேன்’ என்று கேட்டதும் நான் ஆடிப் போனேன். அதெப்படி அவர்கள் இருவரது மனதிலும் ஒரே மாதிரி எண்ணம் ஓடுதுன்னு ஆச்சரியப்பட்டேன். எம். ஜி. ஆருக்கு சொன்ன அதே பதிலையே இவருக்கும் சொன்னேன். ‘அன்புதான் நிறைய இருக்கே, வேறென்ன வேணும்?’ என்றார் நான் ஒண்ணும் சொல்லவில்லை. இரண்டு நாள் கழித்து எம். ஜி. ஆர். பிக்சர்ஸ் அலுவலகத்தில் இருந்து போன் பண்ணி வரச்சொன்னாங்க. போனபோது எம். ஜி. ஆர். இருந்தார். ஒரு பெரிய வெள்ளித் தட்டில் நான்கு மூலைகளிலும் சிறிய தங்கத் தகடுகள் பொருத்தியிருக்க, தட்டின் நடுவில் ‘எம்ஜியார் பிக்சர்ஸ் தாயைக் காத்த தனயன் வெற்றிக்கு ஆரூர்தாஸ¤க்கு அன்பளிப்பு’ என்று பொறிக்கப்பட்டிருந்த அந்த தட்டை எம். ஜி. ஆர். வழங்கினார்.
மறுநாள் பிற்பகல் சிவாஜி பிலிம்ஸிலிருந்து அழைப்பு வந்தது. போனால் அங்கே சிவாஜி மூன்றரை சவரன் எடையுள்ள, உள்ளங்கையை விட அகலமான தங்கப் பதக்கம் ஒன்றை எனக்கு அணிவித்தார். அதில் ‘சிவாஜி பிலிம்ஸ் படித்தால் மட்டும் போதுமா 100 வது நாள் வெற்றி விழா’ என்று சிவாஜி பிலிம்ஸ் எம்ப்ளத்துடன் பொறிக்கப்பட்டிருந்தது. அவ்விரண்டு பரிசுகளையும் என் வீட்டு வரவேற்பறை ஷோகேஸில் பக்கம் பக்கமாக வைத்திருக்கிறேன். அவற்றைப் பார்க்கும் போது அந்தப் பரிசுகளைவிட அவ்விரண்டு மேதைகளின் முகம் தான் என் கண்களில் காட்சியளிக்கும்.
Courtesy - Net
பொன்விழா கொண்டாடும் பொன்னான படங்கள்...!
வேகமாக சென்று கொண்டிருக்கும் வாழ்க்கையில் பெற்ற பிள்ளைகளின் பிறந்த நாளைக்கூட மனதில் வைத்துக் கொண்டாட முடியாமல் இருக்கிறோம். அப்படி இருக்கும்போது இந்த ஆண்டு 50 வயதை தொட்டு பொன்விழா கொண்டாடும் படங்களை பற்றி மட்டும் எப்படி நினைத்துக் கொண்டிருப்போம். இதோ தினமலர் இணையதளம் நினைவூட்டுகிறது.
இந்த ஆண்டிலிருந்து 50 ஆண்டுகளுக்கு முந்தைய 1962ம் ஆண்டு சினிமாவில் பொற்காலமாக இருந்தது. எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி என்ற மூவருக்கும் இடையில் ஒரு ஆரோக்கியமான போட்டி இருந்தது. இது ரசிகனுக்கு தரமான படங்களை கொடுத்தது. பா வரிசை படங்கள் அதிகம் வெளிவந்தது இந்த ஆண்டில்தான்.
மொத்தம் 51 படங்கள் வெளிவந்திருந்தாலும் மக்கள் கவனத்தை ஈர்த்தது சுமார் 20 படங்கள். அவை இப்போதும் காலத்தை கடந்து நிற்கிறது. இந்த ஆண்டில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அதிக பட்டசமாக 7 படங்களிலும், எம்.ஜி.ஆர் 6 படங்களிலும், ஜெமினி கணேசன் 5 படங்களிலும் நடித்திருந்தார்கள்.
எம்.ஜி.ஆர் நடித்த படங்கள்:
குடும்ப தலைவன்: தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில், எம்.ஏ திருமுகம் இயக்கி இருந்தார். கே.வி.மகாதேவன் இசை அமைப்பு. சரோஜாதேவி ஹீரோயின்
மாடப்புறா: பி.வி.என் பிக்சர்ஸ் தயாரித்து, எஸ்.ஏ.சுப்பாராமன் இயக்கிய படம். கே.வி.மகாதேவன் இசை அமைத்திருந்தார். சரோஜாதேவி ஜோடி.
பாசம்: டி.ஆர்.ராமண்ணா இயக்கிய படம் விசுவநாதன்&ராமமூர்த்தி இசை, ஆர்.ஆர்.பிக்சர்ஸ் தயாரிப்பு. சரோஜாதேவி ஹீரோயின்
தாயை காத்த தனயன்: தேவர் பிலிம்ஸ் தயாரித்து எம்.ஏ.திருமுகம் இயக்கிய படம். கே.வி.மகாதேவன் இசை. சரோஜாதேவி ஹீரோயின்.
விக்ரமாதித்தன்: பாரதி புரொடக்ஷன் தயாரித்து, டி.ஆர்.ரகுநாத் இயக்கிய படம். எஸ்.ராஜேஷ்வரராவ் இசை. பத்மினி ஜோடி.
(சிறப்பு குறிப்பு 4 படங்களில் சரோஜாதேவிதான் ஹீரோயின், ஒரு படத்தில் மட்டும் பத்மினி)
சிவாஜி நடித்த படங்கள்
ஆலயமணி: கே.சங்கர் இயக்கத்தில் பி.எஸ்.வி பிக்சர்ஸ் தயாரித்த படம். விசு&ராம் இசை. ஜோடி சரோஜாதேவி. இவர்கள் தவிர எஸ்.எஸ்.ராஜேந்திரன்-&விஜயகுமாரி ஜோடியும் நடித்திருந்தனர்.
பலே பாண்டியா: பத்மினி பிக்சர்ஸ் தயாரிப்பு, பி.ஆர்.பந்துலு இயக்கம், விசு&ராம் இசை. தேவிகா ஹீரோயின்
பந்த பாசம்: பீம்சிங் இயக்கம், சாந்தி பிலிம்ஸ் தயாரிப்பு, தேவிகா, சாவித்தி என இரு ஜோடிகள்.
நிச்சயதாம்பூலம்: ஜமுனா ஹீரோயின், விசு&ராம் இசை, வி.எஸ்.ரங்கா இயக்கம்.
பார்த்தால் பசி தீரும்: ஏவிஎம் தயாரித்த படம். இயக்கம் ஏ.பீம்சிங், ஜோடி சரோஜாதேவி. ஜெமினிக்கு ஜோடி சாவித்ரி, சவுகார் ஜானகி. கமல் குழந்தை நட்சத்திரமாக நடித்த படம்.
படித்தால் மட்டும் போதுமா: இதுவும் பீம்சிங் இயக்கிய படம், ரங்கநாதன் பிக்சர்ஸ் தயாரிப்பு, ஜோடி சாவித்ரி, விசு&ராம் இசை.
வடிவுக்கு வழைகாப்பு: புராண படங்களை இயக்கும் ஏ.பி.நாகராஜன் இயக்கிய சமூக படம். கே.வி.மகாதேவன் இசை. ஸ்ரீலட்சுமி பிக்சர்ஸ் தயாரிப்பு. ஹீரோயின் சாவித்ரி.
(சிறப்பு குறிப்பு வடிவுக்கு வளைகாப்பு தவிர மற்ற படங்கள் அனைத்திற்கும் எம்.எஸ்.விசுநாதன் இசை அமைத்துள்ளார்)
ஜெமினி கணேசன் நடித்த படங்கள்
காத்திருந்த கண்கள்: வசுமதி பிக்சர்ஸ் தயாரிப்பு, டி.பிரகாஷ்ராவ் இயக்கம், சாவித்ரி ஜோடி. விசு&ராம் இசை.
கொஞ்சும் சலங்கை: ராமன் புரொடக்ஷன் தயாரிப்பு, எம்.வி.ராமன் இயக்கம், சுப்பையா நாயுடு இசை. சாவித்ரி ஜோடி
பாத காணிக்கை: கே.சங்கர் இயக்க சரவணா பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. விசு&ராம் இசை. ஜோடி சாவித்ரி
சுமைதாங்கி: ஸ்ரீதர் இயக்க விசாலாட்சி பிலிம்ஸ் தயாரித்துள்ள படம். விசு&ராம் இசை. தேவிகா ஹீரோயின்
ஆடிப்பெருக்கு: கே.சங்கர் இயக்கம். ஹீரோயின் சரோஜாதேவி.
(சிறப்பு குறிப்பு 3 படங்களில் சாவித்ரி ஜோடி)
இதுதவிர டி.எம்.சவுந்தராஜன் நடிப்பில் உருவான பட்டினத்தார், முத்துராமன் நடித்த போலீஸ்காரன் மகள், எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடித்த சாரதா ஆகிய படங்களும் பொன்விழா கண்டுள்ளன.
காலத்தை வென்று நிற்கும் இந்தப் படங்களுக்கு நம்மால் பொன்விழா கொண்டாட முடியாவிட்டாலும் மனதளவில் நினைத்துக் கொள்வோமே...
THE PICTURE THAT I LIKE MOST & THAT HAS A GRACE !!
http://i501.photobucket.com/albums/e...psd75489b4.jpg