பொக்கிஷமான பதிவுகள் நன்றி வினோத் சார்
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
Printable View
Attachment 3588நன்றி
http://i62.tinypic.com/2edp09f.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
http://youtu.be/nhVztpWRldY
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
சென்னை மகாலட்சுமியில் இன்று (03/10/2014) முதல் நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். அளிக்கும் "அலிபாபாவும் 40 திருடர்களும் " தினசரி 2 காட்சிகள் நடைபெறுகிறது . அதன் சுவரொட்டிகளை காண்க.:
http://i57.tinypic.com/11rroky.jpg
என் உள்ளத்தை கவர்ந்த பாடல்
http://youtu.be/irdVkVXjaKI
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாகம் -11ல் புதிதாக தன்னை இணைத்துக் கொண்டுள்ள திரு.முத்தையன் அம்மு அவர்களின் வரவு நல்வரவு ஆகுக.
தங்களிடமிருந்து மக்கள் திலகம் புகழ் பாடும் செய்திகள்,புகைப்படங்கள் , ஆவணங்கள் ஆகியன அதிகம்
பதிவிடப்படும் என்கிற நம்பிக்கையோடு வாழ்த்துக்கள்.
மக்கள் தீர்ப்பை ஏற்று மக்களை வழி நடத்திய மக்கள் திலகத்தின் மகோன்னத புகழ் ஓங்குக !
http://i60.tinypic.com/25zjk35.jpg
ஆர். லோகநாதன் ,
இணை செயலாளர் ,
அனைத்துலக எம்.ஜி.ஆர். .பொதுநல சங்கம் .
http://i60.tinypic.com/152gbyu.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
நண்பர் திரு. வினோத் அவர்களே, தமிழை மழை போல் பொழியும் சிவஞானம் அவர்களின் பிறந்த நாள் புகைப்படங்கள் , மற்றும் புரட்சி தலைவரின் பல அரிய புகைப்படங்கள் பதிவுகள் நன்று. புகைப்படங்களில் மற்றவர் பெயர்களை பதிவிடல் என் போன்றோருக்கு அறிந்திட நலம்.
மக்கள் திலகமும் , மாதங்களும் தொகுப்பு அருமை.
மக்கள் திலகம் திரி பற்றி எம்.ஜி.ஆர். அவர்களின் கற்பனை வளம் ,கருத்துக்கள் அபாரம் .குடும்ப , அலுவலக அலுவல்களுக்கு இடையில் நேரம் கிடைக்கும்போதெல்லாம்
திரியில் பதிவிடும் , உழைப்பின் பாங்கு மனதை நெருடுகிறது.
நண்பர் திரு. ரவி அவர்களே, தங்களின் கோவை- டிலைட்டில்
தர்மம் தலை காக்கும் படசெய்தி , மதுரை-மீனாட்சியில்
மாட்டுக்கார வேலன் செய்தி -தகவல்களுக்கு நன்றி.
நண்பர் திரு. கலியபெருமாள் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் .தங்களின் பழைய புகைப்படங்கள் பதிவு அருமை. அதே வேளையில் புகைப்படங்களில் புரட்சி தலைவர் தவிர மற்றவர் பெயர்களை தயவு செய்து குறிப்பிடவும் (தெரிந்தால் ).புரட்சி தலைவர் யாருக்கு அஞ்சலி செலுத்துகிறார் . யாருக்கு ஆறுதல் கூறுகிறார் .
என்று புரியவில்லை.குரூப் புகைப்படம் எப்போது, எந்த நிகழ்ச்சிக்காக எடுக்கப்பட்டது -என்கிற விவரம் தெரிவித்தல் நன்று.
நண்பர் திரு. கலைவேந்தன் அவர்களுக்கு, எனது பதிவுகள் குறித்து பாராட்டு தெரிவித்தமைக்கு நன்றி.
ஒரு தாய் மக்கள் நாமென்போம்.
ஒன்றே எங்கள் குலம் என்போம் .
தலைவர் எம்.ஜி.ஆர். தானென்போம்.-ஒற்றுமையாய்
அவர் புகழ்பாடுவதே எங்கள் வாழ்வென்போம் .
நண்பர் திரு. ராமமூர்த்தி அவர்களே, அலிபாபாஜியின் புகைப்படங்கள் பதிவிற்கு நன்றி.
ஆர். லோகநாதன்.
மக்கள் திலகத்துடன் பல குண சித்திர நடிகர்கள் , வில்லன் நடிகர்கள் நடித்திருந்தாலும் மக்கள் திலகத்திற்கு மாமனாராக நடித்த நடிகர்கள் - படங்கள் பட்டியல் . [ ஒரு வித்தியாசமான அலசல் ]
எஸ்.வி சக்ஸ்ரநாமம் -ஆனந்த ஜோதி - தேவிகா
எம்.என் நம்பியார் .- காவல்காரன் - ஜெயலலிதா
எஸ்.ஏ அசோகன் - நல்ல நேரம் - கே .ஆர் .விஜயா
எஸ்.வி .ராமதாஸ் - படகோட்டி - சரோஜாதேவி
வி எஸ் ராகவன் - உரிமைக்குரல் - லதா
ரங்கா ராவ் - எங்க வீட்டு பிள்ளை - சரோஜாதேவி
எம் .ஆர் .ராதா - வேட்டைக்காரன் - சாவித்திரி
வி.கே . ராமசாமி - குமரி கோட்டம் - ஜெயலலிதா
எஸ்.வி .நாகையா - பறக்கும் பாவை -சரோஜாதேவி
எஸ்.வி.சுப்பையா - தாலி பாக்கியம் - சரோஜாதேவி
சந்தானம் - ரகசிய போலீஸ் 115-ஜெயலலிதா
மேஜர் சுந்தரராஜன் - தேடி வந்த மாப்பிள்ளை -ஜெயலலிதா
எஸ்,ஏ .கண்ணன் - ஊருக்கு உழைப்பவன் - வாணிஸ்ரீ
டி .கே .பகவதி - சங்கே முழங்கு - லக்ஷ்மி .
WELCOME TO MAKKAL THILAGAM MGR - THREAD. THIRU MUTHTHAIYAN SIR
http://i1273.photobucket.com/albums/...svee6/32-1.jpg
http://i58.tinypic.com/331ooqe.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i60.tinypic.com/wch0l2.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i60.tinypic.com/uwoqx.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i62.tinypic.com/2s91ywx.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i62.tinypic.com/219s7zl.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i60.tinypic.com/2q1rywi.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i62.tinypic.com/9lhimq.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i57.tinypic.com/ou4p75.jpg[SIZE=6என் முதல் முயற்சி ][/SIZE]
It is good to hear that MGR's bodyguard K.P.Ramakrishnan's son Govindarajan has logged into Makkal Thilagam thread, you are welcome sir.
Welcome MGR Devotee Muthaiyan to Makkal Thilagam thread. I expect many creative posts from you sir.
I also welcome Chandrasekar Sir. Expecting many posts from you.
SUPER STILL
NAN ANAYAITTAL
http://i61.tinypic.com/b9ydi.jpg
WELCOME MR.CHANDRASEKARAN AND SOUNDARAJAN
http://i1170.photobucket.com/albums/...ps09ef7a52.jpg
http://i1170.photobucket.com/albums/...psb05a0f3f.jpg
தெருத்தெருவாய் கூட்டுவது பொது நலத்தொண்டு ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலமுண்டு
மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார் தம் மக்கள் நலம் ஒன்றே தான் மனதில் கொள்ளுவார்.
பதவி வரும் போது பணிவு வர வேண்டும், துணிவும் வர வேண்டும், பாதை தவறாமல் பண்பு குறையாமல் பழகி வர வேண்டும் தோழா.
நாடென்ன செய்தது நமக்கு என்ற கேள்விகள் கேட்பது எதற்கு
நீ என்ன செய்தாய் என்று நினைத்தால் நன்மை உனக்கு
ஒர் உயிர் தான் யாவருக்கும் உள்ளது
அது ஒருமுறை தான் நம்மை விட்டு செல்வது,
செல்வம் இன்று வந்து நாளை போவது
செய்த சேவை என்றும் மக்கள் நெஞ்சில் வாழ்வது
ஆறு கரையில் அடங்கி நடந்திடில் காடு வளம் பெறலாம்
தினம் நல்ல நெறி கொண்டு பிள்ளை வளர்கையில் நாடும் நலம் பெறலாம்.
நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்.
அறிவில் தெளிவிருக்கு நம் உடம்பில் வலுவிருக்கு
மனதில் துணிவிருக்கு தன் மானமும் துணையிருக்கு
நடந்ததை மறப்போம், நடப்பதை நினைப்போம்
நேர்வழி சென்றால் பயமேது.
மனதுக்கு மட்டும் பயந்து விடு
மானத்தை உடலில் கலந்துவிடு
இருக்கின்ற வரையில் வாழ்ந்து விடு
இரண்டினிலொன்று பார்த்து விடு
உனக்கொரு பங்கும் எனக்கொரு பங்கும்
உலகில் நிச்சயம் இண்டு ஒவ்வொரு மனிதன்
உழைப்பினாலும் உலகம் செழிப்பதுண்டு
எது வந்தாலும் ஏற்றுக்கொண்டால்
துணிவே துணையாய் மாறும்
இளையோர் கூட்டம் தலைமை தாங்கும்
பூமியே புதிய பூமி.
எம்.ஜீ.ஆரின் நல்ல கொள்கைகளை, கருத்துக்களை, உயர்ந்த நோக்கங்களை, தனதாக்கி உண்மையாக வாழ்வில் பின்பற்றுவோர்க்கு சோதனைகள் சாதனைகளாகும்.
அள்ளிக் கொடுத்து வாழ்பவர் நெஞ்சம் ஆனந்த பூந்தோப்பு !
நல்லவர் என்றும் கெடுவதில்லை இது நான்குமறை தீர்ப்பு !
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மீண்டும் தர்மமே வெல்லும் !
எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் உள்பட பிரபல நடிகர்கள் நடித்த படங்களுக்கு பாடல் எழுதியவர், கவிஞர் முத்துலிங்கம். இவருடைய சொந்த ஊர் சிவகங்கை. பெற்றோர்: சுப்பையா சேர்வை - குஞ்சரம் அம்மாள். சிவகங்கையில் உள்ள அரசர் உயர்நிலைப்பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தார்.
சிறு வயதிலேயே கவிதை எழுதுவதில் மிக்க ஆர்வம் கொண்டிருந்தார். கவிஞர் சுரதா நடத்திய "இலக்கியம்'' என்ற கவிதை இதழில், இவருடைய முதல் கவிதை பிரசுரமாயிற்று.
1958-ல் எம்.ஜி.ஆரின் "நாடோடி மன்னன்'' படம் வெளிவந்தது. அந்த படம் பற்றி, சுரதா ஒரு கவிதைப்போட்டி நடத்தினார். "நாடோடி மன்னன் போல் நல்ல திரைப்படமும் ஓடோடி வாரா உயர் தமிழில்...'' என்று தொடங்கும் கவிதை எழுதி பரிசு பெற்றார், முத்துலிங்கம்.
இந்தப் பாடலைப் பார்த்த முத்துலிங்கத்தின் நண்பர்கள், "கவிதை நன்றாக இருக்கிறது. சுரதா மூலம் எம்.ஜி.ஆரை சந்தித்தால், நீயும் சினிமாவுக்குப் பாடல் எழுதலாம்'' என்று கூறினார்கள். நண்பர்கள் கொடுத்த ஆர்வம்தான், திரைப்பட பாடலாசிரியர் ஆக வேண்டும் என்ற ஆசையை முத்துலிங்கத்தின் உள்ளத்தில் வளரச் செய்தது.
படிப்பு முடிந்தது, திரைப்படக் கவிஞர் ஆகவேண்டும் என்ற ஆசையுடன் முத்துலிங்கம் சென்னைக்கு வந்தார். ஆனால், உடனடியாக அந்த ஆசை நிறைவேறவில்லையென்றாலும், "முரசொலி'' பத்திரிகையில் துணை ஆசிரியர் ஆனார்.
அப்போது கலைஞர் கருணாநிதி தலைமையில் நடந்த கவியரங்குகளில் கலந்து கொண்டு கவிதை பாடும் வாய்ப்பைப் பெற்றார்.
இந்தக் கட்டத்தில், வசனகர்த்தா பாலமுருகனின் நட்பு கிடைத்தது. அவர் முயற்சியால், டைரக்டர் மாதவனுக்கு சொந்தமான அருண்பிரசாத் மூவிஸ் தயாரித்த "பொண்ணுக்கு தங்க மனசு'' என்ற படத்துக்கு பாடல் எழுதும் வாய்ப்பு, முத்துலிங்கத்துக்கு கிடைத்தது.
இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ். அப்போது இளையராஜா அவரிடம் உதவி இசை அமைப்பாளராக இருந்தார்.
இளையராஜா போட்டுக்காட்டிய மெட்டுக்கு, முத்துலிங்கம் "தஞ்சாவூருச் சீமையிலே - கண்ணு தாவி வந்தேன் பொண்ணியம்மா'' என்ற பாடலை எழுதி, திரை உலகில் காலடி எடுத்து வைத்தார்.
இந்தப் படத்தில் சிவகுமார், விஜயகுமார், ஜெயசித்ரா, விதுபாலா ஆகியோர் நடித்தனர். விஜயகுமாருக்கு இது முதல் படம்.
தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆர். விலகி, அ.தி.மு.க.வை தொடங்கியபோது, முத்துலிங்கம் அ.தி.மு.க.வில் சேர்ந்து பொதுக்கூட்டங்களில் பேசினார்.
இந்த சந்தர்ப்பத்தில் ஒரு நாள், தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆரின் அலுவலகத்துக்கு முத்துலிங்கம் சென்றார். எம்.ஜி.ஆர். மாடியில் இருந்தார். அவருடன் `இன்டர்காம்' டெலிபோனில் முத்துலிங்கம் பேசினார்.
"நீங்கள் வேலை இல்லாமல் சிரமப்படுகிறீர்கள். மானேஜர் குஞ்சப்பனிடம் சொல்லி உங்களுக்குக் கொஞ்சம் பணம் தரச் சொல்கிறேன். வாங்கிக் கொள்ளுங்கள்'' என்று எம்.ஜி.ஆர். கூறினார்.
அதற்கு முத்துலிங்கம், "பணம் வேண்டாம். எனக்கு வேலை கொடுங்கள்'' என்றார். "வேலை கொடுக்கும்போது கொடுக்கிறேன். இப்போது பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள்'' என்று எம்.ஜி.ஆர். கூறியும், முத்துலிங்கம் பணத்தை வாங்கிக் கொள்ளவில்லை.
முத்துலிங்கத்தின் மனதைப் புரிந்து கொண்ட எம்.ஜி.ஆர்., தொடர்ந்து தன் படங்களில் பாட்டு எழுதும் வாய்ப்பை கொடுத்தார்.
எம்.ஜி.ஆர். நடித்த "உழைக்குமë கரங்கள்'' (1976) படத்துக்கு, முத்துலிங்கம் இரண்டு பாடல்கள் எழுதினார். "கந்தனுக்கு மாலையிட்டாள் கானகத்து வள்ளி மயில்'' என்று தொடங்கும் பாடலை வாணி ஜெயராம் பாடினார். "முத்துலிங்கம் எப்படி எழுதுகிறார்?'' என்று இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் எம்.ஜி.ஆர். கேட்டபோது, "முத்துலிங்கம் பாடலில் மீட்டரும் சரியாக இருக்கிறது; மேட்டரும் சரியாக இருக்கிறது'' என்றார், விஸ்வநாதன்.
எம்.ஜி.ஆர். நடித்த "இன்றுபோல் என்றும் வாழ்க'' படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பாடல் எழுதிக் கொண்டிருந்தார், முத்துலிங்கம். "ஏர்கண்டிஷன்'' அறையில் அவருக்கு சிந்தனையோட்டம் தடைபட்டது. எனவே, அறைக்கு வெளியே வந்து, அங்கிருந்த சவுக்குக் கன்றுகளை தொட்டபடி, பாடலுக்கான கருத்தை சிந்தித்துக் கொண்டே நடந்தார்.
அதைப்பார்த்த பட அதிபர், "என்னய்யா இவன்! மரத்தைப் பிடிக்கிறான், மட்டையைப் பிடிக்கிறான்! பல்லவியை படிக்கமாட்டேன் என்கிறானே!'' என்று கூறினார்.
இது, முத்துலிங்கத்தின் காதில் விழுந்தது. "ஆம். நான் அதைப் பிடிப்பேன், இதைப்பிடிப்பேன். எதையும் பிடிக்காதவர்களாகப் பார்த்து, உங்களுக்குப் பிடித்தபடி பல்லவியை எழுதிக்கொள்ளுங்கள்'' என்று சொல்லிவிட்டு, கோபமாக வெளியேறினார்.
பின்னர் டைரக்டர் கே.சங்கரும், எம்.எஸ்.விஸ்வநாதனும் அவரை சமாதானப்படுத்தினார்கள். "சினிமா உலகில், பலரும், பலவிதமாகப் பேசுவார்கள். அதற்காகக் கோபப்பட்டால் முன்னுக்கு வரமுடியாது. பாடல் எழுதுவதில் உங்கள் திறமையைக் காட்டுங்கள்'' என்றார்கள்.
அதன்பின் முத்துலிங்கம் எழுதிய பாட்டு, "சூப்பர்ஹிட்'' பாடலாக அமைந்தது.
அன்புக்கு நானடிமை - தமிழ்ப் பண்புக்கு நானடிமை - நல்ல கொள்கைக்கு நானடிமை - தொண்டர் கூட்டத்தில் நானடிமை - இதுவே அந்தப் பாடல்.
எம்.ஜி.ஆருக்கு பாட்டெழுதும்போது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி முத்துலிங்கம் கூறியதாவது:-
"எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரை இசைக்கும் முக்கியத்துவம் கொடுப்பார். கருத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பார். இசைக்கேற்றபடி கருத்துக்கள் வரவில்லையென்று கருதினால், பாடலை எழுதச்சொல்லி அதற்கேற்ப மெட்டமைக்கச் சொல்வார்.
``மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்'' படத்திற்குப் பாடல் எழுதும்போது, ஒரு காட்சிக்கான பாடலை, அவருக்கு மன நிறைவு ஏற்படும்வரை எழுத பலநாட்களாகி விட்டன.
"இதில் கவித்துவம் இருக்கிறது; கருத்துக்கள் இல்லை. இதில் கருத்துக்கள் இருந்தாலும், வன்முறையைத் தூண்டுவதுபோல் இருக்கிறது. இதில் எல்லாம் இருக்கிறது என்றாலும், நான் நினைப்பது போல் இல்லை'' என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றைக் குறை கூறிக் கொண்டே இருந்தார். `நான் நினைப்பதுபோல் இல்லை'யென்றால், என்ன நினைக்கிறார் என்று அவர் சொல்ல வேண்டுமல்லவா? சொல்லமாட்டார்.
அவர் சொல்லாமலேயே அவர் நினைப்பதை யார் புரிந்து கொண்டு எழுதுகிறார்களோ அவர்கள்தான் அவர் படத்தில் தொடர்ந்து பாடல்கள் எழுதமுடியும். அப்படிப் புரிந்து கொண்டு எழுதியவர்களில் நானும் ஒருவன்.
ஒரு நாள் அந்தப் படத்திற்குப் பாடல் எழுத வேண்டிய அந்தக் காட்சிக்கு சில மெட்டுக்களைப் போட்டு அதற்குப் பல்லவியும், அனுபல்லவியும் அண்ணன் எம்.எஸ்.வி. அவர்கள் என்னை எழுதச் சொன்னார். எழுதிய பிறகு அதை `டேப்'பில் அவரே பாடிப் பதிவு செய்து, மைசூரில் இதே படத்திற்காகப் படப்பிடிப்பிலிருந்த எம்.ஜி.ஆரிடம் சென்று காண்பித்து ஒப்புதல் வாங்கி வாருங்கள் என்று என்னை அனுப்பி வைத்தார்.
அதை எம்.ஜி.ஆர். கேட்டுவிட்டு "எல்லாமே நன்றாக இருக்கிறது. இதை இப்படியே ஒரு பாட்டாக்கி ஒலிப்பதிவு செய்து விடுங்கள்'' என்றார். அந்தப்பாடல் இதுதான்:
"தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்
ஒற்றுமையால் பகைவர்களை ஓட வைப்போம்
உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்''
இந்தப் பாடல், உலகெங்கும் உள்ள இலங்கைத் தமிழர்கள் விரும்பக்கூடிய பாடல். அதே நேரம், இலங்கை வானொலியில் 1983-க்குப்பிறகு தடை செய்யப்பட்ட பாடல்! இந்தப்பாட்டின் இறுதியில் "வீரம் உண்டு வெற்றி உண்டு; விளையாடும் களம் இங்கே உண்டு; வா வா என் தோழா; பூனைகள் இனம் போலப் பதுங்குதல் இழிவாகும்; புலியினம் நீயெனில் பொருதிட வாராய்'' என்று எழுச்சியோடு சில வரிகள் வரும்.
இதனால் தடை போட்டார்களோ என்னவோ தெரியவில்லை.''
இவ்வாறு முத்துலிங்கம் கூறினார்.
1980-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சியை மத்திய அரசு கலைத்தபோது, "இதுதான் பதில்'' என்றொரு படத்தை அவரே தயாரித்து இயக்குவதாக இருந்தார். அப்போது அவரைப் பார்க்கச் சென்றேன்.
"படத்துக்கு எம்.எஸ்.விஸ்வநாதன்தான் இசை அமைக்கிறார். நாளை மறுநாள் பாட்டு எழுதவேண்டும். சத்யா ஸ்டூடியோவுக்கு காலை 8 மணிக்கு வந்து விடுங்கள்'' என்றார். அதன்படி நான் சென்றேன்.
எம்.எஸ்.வி. அவர்கள் போட்ட டிïனுக்கு நான் பல்லவி எழுதினேன்.
"வண்ணப் பூஞ்சோலை; வாழ்க்கை பொன் மேடை. வளமோடு நீ வாழலாம்'' என்று ஆரம்பமாகும் அந்தப் பாட்டு.
சரணத்திற்கான டிïனை மட்டும் வாசித்துக் காட்டுங்கள், என்றார், எம்.ஜி.ஆர். எம்.எஸ்.வி. வாசித்துக் காட்டினார். "இந்தப் பாடல் நாளைக்கு ரிக்கார்டிங் ஆகவேண்டும். அதனால் இன்று இரவு 10 மணிக்கே எனக்குப் பாடலை எழுதிக்காட்டு என்றார், எம்.ஜி.ஆர்.
இரவு 10 மணிக்கு எம்.ஜி.ஆர். நடித்த "தாழம்பூ'', "விக்கிரமாதித்தன்'' முதலிய படங்களை இயக்கிய இயக்குனர் ராம்தாஸ் என் வீட்டிற்கு வந்து எம்.ஜி.ஆர். அலுவலகத்திற்குக் கூட்டிச்சென்றார். அங்கிருந்து தொலைபேசியில் எம்.ஜி.ஆரிடம் சரணங்களைப் படித்துக் காட்டினேன். நான் எழுதியது சரியில்லை என்று சொல்லி அவரே சில கருத்துக்களைக் கூறினார். அதற்கேற்ப சரணங்களை எழுதி அவரிடம் வாசித்துக் காட்டி ஒப்புதல் பெற்றபோது இரவு இரண்டு மணி ஆகிவிட்டது.
மறுநாள் பாடல் ஒலிப்பதிவின்போது ஒலிப்பதிவு கூடத்திற்கு வந்திருந்து ஒலிப்பதிவு முடியும் வரை இருந்து பாடலை மிகவும் பாராட்டினார்.
எம்.ஜி.ஆர். சென்ற பிறகு டைரக்டர் நீலகண்டனிடம், "இந்தப் பாடலை பதிவு செய்தது வீண் வேலை'' என்றேன். `என்னய்யா இப்படிச் சொல்கிறாய்?'' என்று கேட்டார், நீலகண்டன்.
"ஆம். தேர்தல் அறிவிப்பு நாளையோ நாளை மறுநாளோ வரப்போகிறது. தேர்தலில் ஜெயித்து மீண்டும் தலைவர் ஆட்சிக்கு வரப்போகிறார். அதனால் இந்தப் படத்தில் அவர் நடிக்கப் போவதில்லை. அதனால் பாடலுக்காக செய்யும் செலவும் வீண்'' என்றேன்.
அதை எம்.ஜி.ஆரிடம் அப்போதே போய் அவர் சொல்லிவிட்டார்.
"முத்துலிங்கம் அப்படியா சொன்னார்? தேர்தல் வரும்போது வரட்டும். இப்போது வேலையைப் பார்ப்போம். நாளை சந்திப்போம்'' என்று சொல்லியிருக்கிறார் எம்.ஜி.ஆர்.
ஆனால், அன்று மாலையே தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டது!
படம் தயாரிப்பதை ஒத்திவைத்துவிட்டு எம்.ஜி.ஆர். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். நான் சொன்னதைப் போலவே, அமோகமான வெற்றி பெற்று ஆட்சியில் மீண்டும் கம்பீரத்துடன் அமர்ந்தார். "இதுதான் பதில்.'' படம் கைவிடப்பட்டது.
அதற்குப் பிறகுதான், எனக்கு "கலைமாமணி விருது'', "பாரதி தாசன் விருது'' ஆகிய விருதுகளை வழங்கினார்.
மீனவ நண்பன்'' படம் கடைசி கட்டப் படப்பிடிப்பின்போது, எம்.ஜி.ஆர். கட்டளைப்படி கவிஞர் முத்துலிங்கத்தின் பாடல் சேர்க்கப்பட்டது. இதுபற்றி முத்துலிங்கம் கூறியதாவது:-
"ஒருமுறை எம்.ஜி.ஆரைச் சந்திக்க சத்தியா ஸ்டூடியோ சென்றிருந்தேன். அப்போது "மீனவநண்பன்'' படத்திற்குப் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. என்னைப் பார்த்ததும், "இந்தப் படத்தில் நீ எழுதிய பாடல் எது?'' என்று எம்.ஜி.ஆர். கேட்டார். "நான் எழுதவில்லை'' என்றேன். "ஏன்?'' என்றார். "என்னை யாரும் அழைக்கவில்லை'' என்றேன்.
அப்போது புரொடக்ஷன் மானேஜர் வந்தார். "முத்துலிங்கத்தை வைத்துப் பாடல் எழுதச் சொன்னேனே! ஏன் அதன்படி செய்யவில்லை?'' என்று கோபத்துடன் கேட்டார். "நாங்கள் தேடும்போது அவர் ஊரில் இல்லை'' என்றார்.
"இப்போது வந்துவிட்டார் அல்லவா? இவரை வைத்து ஒரு பாடல் எழுதி வாருங்கள்'' என்றார். "படம் முடிந்து விட்டதே'' என்றார்.
உடனே, டைரக்டர் ஸ்ரீதரையும், தயாரிப்பாளர் சடையப்ப செட்டியாரையும் அழைத்து வரச்சொன்னார். அவர்கள் வந்ததும், "இவர்தான் நான் சொன்ன முத்துலிங்கம். இவரை வைத்து ஒரு கனவுக்காட்சி பாடலை எழுதுங்கள். அதற்குப்பிறகு படப்பிடிப்பு நடத்தலாம்'' என்றார்.
அவர்களும் புரொடக்ஷன் மானேஜர் சொன்னது மாதிரி "அதற்கான சிட்டுவேஷன் (சம்பவம்) இல்லையே'' என்றார்கள்.
"ட்ரீம் சீன் பாடலுக்கு என்ன சிட்டுவேஷன் வேண்டும்? சாப்பிடும்போது, தூங்கும்போது, நடக்கும்போது நினைத்துப் பார்ப்பதுபோல் வருவதுதானே ட்ரீம்சாங்? அதற்குத் தனியாக என்ன சிட்டுவேஷன்? பாடல் எழுதுங்கள்; அதன் பிறகு படப்பிடிப்பை வைத்துக்கொள்ளலாம்'' என்று சொல்லிவிட்டு காரில் ஏறிச் சென்றுவிட்டார்.
அதன்பிறகு நான் எழுதிய பாடல்தான் அந்தப் படத்திலேயே ஹிட்டான பாடலாக அமைந்தது.
"தங்கத்தில் முகமெடுத்து
சந்தனத்தில் உடலெடுத்து
மங்கையென்று வந்திருக்கும் மலரோ - நீ
மாலை நேரப் பொன் மஞ்சள் நிலவோ''
என்ற பாடல்தான் அது.
இந்தப் படத்திற்குப் பாடல்கள் எல்லாம் முடிந்து விட்டது என்று தெரிந்திருந்தும் என்னை வைத்துப் பாடல் எழுத வேண்டும் என்று எம்.ஜி.ஆர். ஏன் கூறினார்? தன்னை நம்பி இருப்பவர்கள் இவர்கள். இவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் நாம் உதவ வேண்டும் என்ற எண்ணம்தான் காரணம்.''
இவ்வாறு முத்துலிங்கம் கூறினார்.
வனிதா விஜயகுமார்-ராபர்ட் இணைந்து தயாரிக்கும் புதிய படம் ‘எம்.ஜி.ஆர். சிவாஜி ரஜினி கமல்’. இப்படத்தை டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் இயக்குகிறார். ராபர்ட், ராம்ஜி, பிரேம்ஜி, பவர் ஸ்டார், வனிதா, ஐஸ்வர்யா, நிரோஷா ஆகியோர் நடித்துள்ள இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். இப்படத்தின் ஆடியோ வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில், இசையமைப்பாளர் தேவா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ஆடியோவை வெளியிட்டார். மேலும் ஸ்ரீகாந்த் தேவா புதிதாக தொடங்கியுள்ள ஸ்ரீ மியூசிக் என்ற நிறுவனத்தையும் தொடங்கி வைத்தார்.
விழாவில் இப்படம் உருவான விதம் குறித்து வனிதா விஜயகுமார் கூறும்போது, என்னுடைய வீட்டில் ஒரு பார்ட்டியில் கலந்துகொள்ள வந்த ராபர்ட் தன்னிடம் சில கதைகள் இருக்குமாறும், அதை படமாக எடுக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறினார். அப்போது அவர் கூறிய ஒரு கதை என்னை மிகவும் கவர்ந்தது. அதை படமாக எடுக்க முடிவு செய்தோம். இருந்தாலும் கைவசம் பணம் இல்லாததால் முதலில் இப்படத்தின் ஒரு பாடலை மட்டும் ராபர்ட்டை வைத்து படமாக்க முடிவு செய்தோம். அந்த பாடலுக்கு பர்மிஷன் வாங்குவதற்காக கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றபோது, பத்திரிகையாளர்கள் சந்தித்து படம் குறித்த தகவல்களை பெற்றுக் கொண்டனர். இதையடுத்து, தயாரிப்பாளராக களமிறங்கியிருக்கும் எனக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். ஆகையால் இதனை படமாக எடுக்க முன்வந்தோம். நண்பர்களின் உதவியோடு படத்தை எடுத்து முடித்துள்ளோம் என்று கூறினார்.
மேலும் படத்தின் தலைப்புக்கான காரணம் குறித்து அவர் கூறும்போது, என்னுடைய வீட்டில் எந்த காரியம் தொடங்கினாலும் பிள்ளையார் சுழி போட்டு தொடங்குவது வழக்கம். அதனால், சினிமாவின் பிள்ளையார் சுழியாக இருக்கும் ‘எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல்’ ஆகியோரின் பெயரை என்னுடைய முதல் படத்துக்கு தலைப்பாக வைக்க முடிவு செய்தேன். இவர்கள் நான்கு பேரும் என் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவர்கள். அதனாலேயே இந்த படத்திற்கு ‘எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல்’ என பெயர் வைத்தேன். மற்றபடி யார் மனதையும் புண்படுத்தும்விதமாக இந்த பெயர் வைக்கப்படவில்லை என்று கூறினார்.