http://www.youtube.com/watch?v=nA0uOFxXDzI
Printable View
CONGRATULATIONS MUTHAIYAN SIR [C
http://i1170.photobucket.com/albums/...ps7a7646ad.jpgOLOR="#000000"][/COLOR]
பிரான்ஸ் எம்.ஜி.ஆர்.பேரவை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள செயின்ட் தெனிஸ் என்ற இடத்தில் ஆண்டு தோறும் எம்.ஜி.ஆர். விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா, கடந்த 8-ந் தேதி நடைபெற்றது. விழாவில், நடிகர் அசோகனின் மகனான திரைப்பட நடிகர் வின்சென்ட் அசோகன், ‘இதயக் கனி’ மாத இதழ் ஆசிரியர் எஸ்.விஜயன் அகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
விழாவில், பிரான்ஸ் நாட்டின் அனுமதி பெற்று, இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் தபால் தலையை செயின்ட் தெனிஸ் துணை மேயர் பொதில் ஹமுதி வெளியிட நடிகர் வின்சென்ட் அசோகன் பெற்றுக் கொண்டார். இதே போன்று, தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தபால் தலையை மற்றொரு துணை மேயர் சிலிமான் ஏபல்லா வெளியிட எஸ்.விஜயன் பெற்றுக் கொண்டார்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டையொட்டி, பாரிஸ் நகரில் எம்.ஜி.ஆர். சிலை திறக்க வேண்டும் என்ற அறிவிப்பு இந்த விழாவில் வெளியிடப்பட்டுள்ளது. விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், கவிதை அரங்கம், இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில், பிரான்ஸ் மற்றும் அண்டை நாடுகளில் இருந்து ஏராளமான எம்.ஜி.ஆர். ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை பிரான்ஸ் எம்.ஜி.ஆர். பேரவை தலைவர் முருகு பத்மநாபன் செய்திருந்தார்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
congratulations muthaiyan sir for completing 1000 speed post in our god thread
http://i1170.photobucket.com/albums/...ps9051cf6a.jpg
ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே"..
ஆனால்..அதற்கொரு உருக்கமான காரணத்தையும் எம்.ஜி.ஆர். வைத்திருந்தார்...
அந்த உண்மையான காரணத்தை அவரே ஒருமுறை சொல்லி இருக்கிறார்..!
"ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே" என்று குறிப்பிடுவதை ஒரு சிலர் பொருத்தமாக இருப்பதாகக் கருதலாம். வேறு சிலர் இது பொருத்தம் இல்லை என்றும் நினைக்கலாம்.
என்னைப் பொறுத்தவரை நான் சுடப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது என் உடலிலிருந்து நிறைய ரத்தம் விரயமாகியிருந்தது.
அப்போது என் உடலில் ரத்தம் செலுத்தி என்னை வாழ வைக்க ஆவன செய்தார்கள் மருத்துவ நிபுணர்கள். இதைக் குறிப்பிடுவது எனது நீங்காக் கடமையாகும்.
அந்த ரத்தத் துளிகள் என் உடலில் இருப்பதால்தான் நான் மனிதனாக உலவுகிறேன். அப்போது என் உடலில் செலுத்தப்பட்ட ரத்தம் யாருடைய ரத்தம் என்பது எனக்கும் தெரியாது.
ஆனால், அந்த ரத்தத் துளிகள்தான் என்னை மீண்டும் மனிதனாக ஆக்கியது.
அந்த ரத்தம் பலருடைய ரத்தமானதால் அனைவரையுமே நான்."என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே" என்று உரிமையுடன் அழைக்கிறேன்.
அதனை நினைவுபடுத்திக் கொள்ளும் வகையில் அதன் பிறகு கடிதம் எழுதும்போதும் அல்லது மேடையில் பேசும் போதும் எனது உடன்பிறப்புக்களை "ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே"என்று குறிப்பிடுகிறேன்..”
1968ல் வெளிவந்த மக்கள் திலகத்தின் எட்டு படங்களில் இடம்பெற்ற மக்கள் திலகம் - ஜெயா
காதல் பாடல்கள் .அத்தனையும் தேன் சிந்தும் பாடல்கள் . மக்கள் திலகம் - ஜெயா இருவரின் காதல் பாடல்கள் கண்ணுக்கு விருந்து .இனிமையான பாடல்கள்
கண்ணே கனியே மணியே - ரகசிய போலீஸ் 115
பால் தமிழ் பால் ,,,- ரகசிய போலீஸ் 115
என்ன பொருத்தம் நமக்குள் இந்த -ரகசிய போலீஸ் 115
மழை முத்து முத்து பந்தலிட்டு ...தேர்த்திருவிழா
அடிக்கட்டுமா முரசு அடிக்கட்டுமா -தேர்த்திருவிழா
நீயாதான் எனக்கு மணவாட்டி ...குடியிருந்தகோயில்
குங்கும பொட்டின் மங்களம் ...குடியிருந்தகோயில்
சிரித்தால் தங்க பதுமை அடடா .. - கண்ணன் என் காதலன்
சின்னவளை முகம் சிவந்தவளை - புதியபூமி
விழியே விழியே உனக்கென்ன வேலை -புதியபூமி
மயங்கும் வயது மடி மேல் விழுந்து ...கணவன்
நாங்க புதுசா கட்டிகிட்டே ஜோடி .... ஒளிவிளக்கு
ருக்குமணியே பர பர .................... ஒளிவிளக்கு
வா பொண்ணுக்கு போட்டு வைக்கவா ....காதல் வாகனம்
http://i57.tinypic.com/160zk7r.jpgசபாஷ் மாப்ளே..டைட்டிலே கிடைக்கவில்லை நண்பர்களே...
காதல் வாகனம் - படத்தில் இடம் பெற்ற இந்த பாடல் காட்சியில் மக்கள் திலகம் - ஜெயா காதல் நடிப்பு மிகவும் மனதை கவர்ந்தது .
http://youtu.be/HhSNdkBvvwY