Hearty welcome to Mr. Gurunathan sir & Mr. A.R Hussain sir to our beloved makkal thilagam MGR Thread.
Thank you,
Sathya
Printable View
Hearty welcome to Mr. Gurunathan sir & Mr. A.R Hussain sir to our beloved makkal thilagam MGR Thread.
Thank you,
Sathya
அன்பு நண்பர் திரு. ராமமூர்த்தி அழைப்பின் பேரில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரிக்கு வருகை புரிந்துள்ள திரு. குருநாதன் அவர்களை வரவேற்பதில் உவகை.
தங்கள் சார்பில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பற்றிய செய்திகள் /புகைப்படங்கள்
பதிவுகள் எதிர்நோக்கும்.
http://i62.tinypic.com/2rwkj2c.jpg
ஆர். லோகநாதன்.
தந்தையை இழந்து வாடும் அன்பு பி.எஸ்.ராஜ் அவர்களுக்கும் அவரது குடும்பத்திற்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
https://www.youtube.com/watch?v=eAFHdzD0dCs
மக்கள் திலகத்தின் பக்தர் திரு பி எஸ் ராஜ் அவர்களின் அன்பு தந்தை மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
மக்கள் திலகம் திரியின் புதிய வரவுகள் திரு.குருநாதன், திரு.ஹுசைன் அவர்களுக்கும் நல்வரவு நல்வாழ்த்துக்கள். .
மதுரை மீனாட்சி மினி பாரடைசில் நாளை முதல் (22/09/2015) மக்களின் ஏகோபித்த
ஒரே தலைவர் எம்.ஜி.ஆர். முழக்கமிடும் "நான் ஆணையிட்டால் " தினசரி 4 காட்சிகள் - 3 நாட்களுக்கு மட்டும் திரையிடப்படுகிறது.
கடந்த 2014 தீபாவளி திருநாளில் மதுரை சென்ட்ரல் சினிமாவில் வெளியாகி, மறுவெளி யீட்டில் , கருப்பு வெள்ளை படங்களில் மகத்தான வசூலை பெற்று
தகர்க்க முடியாத சாதனை புரிந்த படம். மீண்டும் திரைக்கு வருகிறது.
http://i61.tinypic.com/2mcsyyq.jpg
தகவல் உதவி : மதுரை திரு. எஸ். குமார்.
திரு pammalar
அவர்களுக்கு
இனிய பிறந்த
நன்னாள் வாழ்த்துக்கள்
அன்புடன்
எஸ் ரவிச்சந்திரன்
பம்மலார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
ஒளிவிளக்கு மக்கள் திலகத்தின் மகத்தான காவியம் 100வது படம்.பூல் அவுர் பத்தர் ஹிந்திப் படத்தின் ரீமேக். இவையெல்லாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்தப் படத்தில் தலைவரின் ஒவ்வொரு அசைவும் (Movement) ஒரு கவிதை . ஒலியே இல்லாமல் பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் . அவ்வளவு அமர்க்களமாக இருக்கும். மக்கள் திலகத்தின் ஸ்டைல் எல்லா படங்களிலும் அருமையாக இருக்கும் என்றாலும் ஒளிவிளக்கு, நினைத்ததை முடிப்பவன் இரண்டு படங்களும் அதன் உச்சங்கள்.
இயல்பான நடிப்பு மனதைத் தொடும். மரத்தடியில் இருக்கும் ஏழைக் கிழவியிடம் அவர் காட்டும் அன்பு அவ்வளவு இயல்பாக இருக்கும். அந்தக் காட்சியில் அந்தத் தாய்க்கு உணவளிக்காத ஜஸ்டினை அவர் பார்க்கும் பார்வை கிளாஸ்.
சோ பண்ணையார் வீட்டு நகைப் பெட்டியைப் பற்றிப் பேசும் போது டிக்கு நொடிக்கு நொடி மாறும் அவரது நளினமாக முகபாவங்கள் அபாரம். கொடிய நோய் பாதித்த கிராமத்தில் அஞ்சாமல் உள்ளே நுழையும் துணிச்சல். திருட வந்த இடத்தில் ஏமாற்றம். பின்னர் பண்ணையார் மருமகளிடம் பரிவு, அவள் தன்னைப் பற்றி விசாரிக்கும் போது சிறிதும் தயங்காமல் தன்னை திருடன் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும் அலட்சிய மனோபாவம்,எதுவுமே கிடைக்கவில்லையே என்னும் அங்கலாய்ப்பு, மோதிரம் ஒன்றைக் கொடுத்து விட்டு தன்னைக் கொன்றுவிடச் சொல்லி சௌகார் ஜானகி வேண்டும் போது திகைப்பு, வைத்தியரை மிரட்டி அழைத்து வரும் தோரணை என அத்துணை பாவங்களையும் அழுத்தமாகவும் அழகாகவும் இயல்பாகவும் வெளிப்படுத்தி நடிகர் பேரரசர் என்பதை நிரூபித்திருப்பார்.
மதுப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்த கவிஞர் வாலியை தனது மனசாட்சியோடு பேச வைத்து அதை ஒரு அருமையான பாடலாக்கியிருப்பார் எம்.ஜி.ஆர். அது தான் தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா. அந்தப் பாடல் காட்சியில் ஐந்து எம்.ஜி.ஆர் தோன்றும் காட்சி அருமையிலும் அருமை. மேலும் அந்த ஒரே பாடல் காட்சியில் அத்தனை தந்திரக் காட்சிகளையும் பயன்படுத்தி அழகூட்டியிருப்பார் எம்.ஜி.ஆர். இதை எழுதும் போது ஆனந்த விகடன் வார இதழில் பாலா பாக்கம் என்ற தலைப்பில் ஆனந்த விகடன் ஆசிரியர் எழுதிய தொடர் நினைவுக்கு வருகிறது. இரவு இரண்டு மணி வரை படப்பிடிப்பும் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட காட்சிகளை உடனுக்குடன் பிரிண்ட் போட்டு பார்த்து அந்தக் காட்சியை மெருகூட்டுவதும் மாற்றி எடுப்பதுமாகப் பொழுது கழிந்து அனைவரும் களைப்படைந்திருந்த தருணத்தில் எல்லோரையும் ஓய்வெடுக்கச் சொல்லி அனுப்பி விட்டு தான் மட்டும் ஓய்வெடுக்காமல் பலவிதமான யுக்திகளை யோசித்து வைத்து அனைவரும் அடுத்த நாள் காலை படப்பிடிப்புக்கு வரும் போது முன்னரே காத்திருந்து அனைவரையும் அசத்திய நிகழ்ச்சியை ஆனந்த விகடன் ஆசிரியர் வர்ணிக்கும் நேர்த்தி இன்றும் மனதில் நிழலாடுகிறது. அந்தப் பொக்கிஷத்தை பாதுகாத்து வைத்திருப்போர் யாராவது அதை இந்தத் தருணத்தில் பதிவிட்டால் பொருத்தமாக இருக்கும்.சாதாரணமாக ஒரு எம்.ஜி.ஆரின் உடலிலிருந்து மற்றொரு எம்.ஜி.ஆர் தோன்றவதாக அமைக்காமல் வெளிவரும் மற்றொரு உருவம் சுற்றிச் சுழன்று வரும் தந்திரக் காட்சி ஒரு புரட்சி தான். இதற்கு முன் அப்படி வந்ததில்லை.
சௌகார் ஜானகியை கேவலமாகப் பேசிய ஜஸ்டினை புரட்டி எடுக்கும் காட்சியும் வேகமும் , உடனேயே சௌகார் ஜானகி அடித்தவுடன் திகைத்துப் போய் அறைக்குத் திரும்பிய தருணத்தில் மன்னிப்புக் கேட்கும் அவரிடத்தில்தன்னை அவமானப்படுத்தியதாகக் குமுறுவதும், உடனேயே இப்படி சிறுவயது முதலே தன்னைத் தட்டிக் கேட்க ஆளிருந்திருந்தால் தான் இப்படித் தடம் மாறிப் போயிருக்க மாட்டேன் என வருந்துவதாகட்டும் அபாரமாக இருக்கும். நீ யாரு உனக்கு என்ன வேணும்னு கேட்க பூமியில நடக்கிற மனுசனுக்கு மனசில்லை. மேலிருக்கிற ஆண்டவனுக்கு நேரமில்லை. நான் திருடினேன். எனச் சொல்லி உருகுமிடம் உருக்கும். திருடன் திருடன் எனச் சொல்லித் துரத்தும் மனிதர்களிடம் தன் நிலையைச் சொல்லி அப்பாவித் தனமாக வேலை கேட்பதும் அவர்கள் விரட்டியவுடன் மனம் வெதும்பி விலகுவதும் அத்தனை பாந்தமாக இருக்கும்.
நாங்க புதுசா கட்டி கிட்ட ஜோடி தானுங்க சூப்பர் டூப்பர் ஹிட் . நடனமும் மிகச் சிறப்பாக இருக்கும். இந்த நடனக் காட்சியைப் பார்க்கம் போது ஏச்சி பிழைக்கும் தொழிலே சரிதானா நடனம் ஞபாகத்துக்கு வரும். ஆனால் குண்டடிபட்டதன் காரணமாக ஏற்பட்ட உடல் நலிவு உருக்கு உடலை சற்று குலைத்து கண்ணீரை வரவழைக்கும். தேக்கு மரத் தேகத்திற்கா இந்த கதி என கலங்க வைக்கும்.
சௌகார் ஜானகியைத் தேடி வரும் போலீசை ஏமாற்ற பெண் வேடமிட்டு அமர்ந்திருக்கும் சோவை கண்டவுடன் கட்டுப்படுத்தமுடியாமல் வரும் சிரிப்பை துணியை வாயில் வைத்து மறைத்தபடி கட்டுப்படுத்தி சிரிக்கும் சிரிப்பை காணக் கண் கோடி வேண்டும். வங்கியில் கொள்ளையடித்தவர்களைக் கண்டுபிடிக்க உதவ வேண்டும் என வி.எஸ்.ராகவனிடம் கேட்கு முன் நடந்து வருவாரே அந்த நடையழகை எப்படி வர்ணிப்பதென்றே தெரியவில்லை. சைலேஷ் பாசு அவர்களைக் கொண்டு ஒரு புதிய தொடரே தொடங்கலாம் மக்கள் திலகத்தின் விதவிதமான நடையழகுகளை மட்டும் பதிவு செய்து.
ருக்குமணியே பாடலில் அந்தரத்தில் தொங்கியபடியே பாடி நடித்திருப்பது புதுமை. நெருப்புக்குள் நுழைந்து குழந்தையைக் காப்பாற்றும் காட்சி பரபரப்பான விறுவிறுப்பு. திரில்லிங்கான காட்சி. மனம்மாறி பாவச் செயல் செய்யக்கூடாது என முடிவெடுத்திருந்த எம்.ஜி.ஆர் நிர்பந்தத்தின் காரணமாக மீண்டும் திருடச் செல்லும் போது தடுத்தாட்கொண்ட இறைவன் செயல்தானோ அந்த தீவிபத்து. குருட்டுப்பாட்டியின் மறைவு கேட்டுத் துடிக்கும் போது கலங்காத மனம் கல்மனமாகத் தான் இருக்க முடியும்.
மாம்பழத் தோட்டம் மல்லிகைக் கூட்டம் சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் ஒலிக்கும் போது துள்ளாட்டம் போட வைக்கிறது. இறைவா உன் மாளிகையில் ... ... பி.சுசீலாவின் குரலில் நெஞ்சை நெகிழச் செய்து இந்தத் திரைப்படத்தில் மக்கள் திலகத்தைப் பிழைக்க வைத்தது 1968ல். அதே பாடல் பட்டி தொட்டியெல்லாம் ஒலித்து மற்றொரு பிறப்பைத் தந்தது 1984ல். உலகில் அதிக முறை ஒலிபரப்பப்பட்ட பாடல் என்ற சாதனையைப் படைத்தது அந்தப் பாடல். 1984ஆம் ஆண்டு அத்தனை திரையரங்குகளிலும் எந்தப் படம் திரையிடப்பட்ட போதும் முதலில் இந்தப் பாடலை ஒளிபரப்பிய பின்னரே மெயின் படம் ஓட்டப்பட்டது. வீதியெங்கும் ஒலிபெருக்கிகளில் இந்தப் பாடல் ஒலிபரப்பப்பட்டது. ஊரே கூடி வந்து உனக்கு என்ன வேண்டும் என்று கேட்கும் காட்சி நல்லதொரு பாசிட்டிவ் அப்ரோச்.
தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த ஐந்து ரூபாயை எட்டி உதைத்த மனோகரைப் புரட்டி எடுக்கும் காட்சியில் உழைப்பின் உயர்வை அருமையாக கண்முன் கொண்டு வந்திருக்கிறார். மொத்தத்தில் தித்திக்கும் திரைவிருந்து மக்கள் திலகத்தின் ஒளிவிளக்கு. பூல் அவுர் பத்தர் படத்தை தமிழில் எடுக்கிறார்கள் எனக் கேள்விப்பட்டவுடன் மக்கள் திலகத்தைத் தொடர்பு கொண்டு அந்தக் கதாபாத்திரம் தனக்கு வேண்டும் என்று கேட்டு வாங்கினேன். நான் கேட்டு வாங்கிய ஒரே வாய்ப்பு அதுதான் என்று பெருமையுடன் பேட்டியளித்துள்ளார் சௌகார் ஜானகி அவர்கள். அந்தப் பெருமை மிகவும் நியாயமானது தான். சௌகார் ஜானகி நடித்த படங்களிலேயே , ஏற்ற பாத்திரங்களிலேயே மிகவும் அற்புதமான கதாபாத்திரம், அற்புதமான நடிப்பாற்றல் வெளிப்பட்ட படம் இதுதான் என்று சொன்னால் அது மிகையாகாது. பூல் அவுர் பத்தர் படத்தில் விதவைக்கு வாழ்வளிப்பான் கதாநாயகன். ஆனால் எம்.ஜி.ஆருக்கு அப்படிப்பட்ட முற்போக்கான சிந்தனை இல்லை எனவே அந்தக் காட்சி மாற்றப்பட்டு அவர் இறந்து போவதாக அமைக்கப்பட்டது என சமீப காலம் வரை சில வாரஇதழ்கள் குறைகூறின. (என்ன செய்வது அவர்களுக்கு எதாவது ஒரு காரணத்தைத் தேடிக் கண்டுபிடித்து மக்கள் திலகத்தைக் குறைகூற வேண்டும்.) அந்தமான் கைதி திரைப்படத்திலேயே விதவைக்கு வாழ்வளித்து முற்போக்கு எண்ணங்களுக்கு வித்திட்டவர் நம் தலைவர். மேலும் அதைக் காட்டிலும் இந்த கதையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றமானது அந்தக் கதாபாத்திரத்தை மேலும் உயர்வாகக் காட்டுகிறது. இவ்வளவு அருமையான படம். அதன் சிறப்பான பிரிண்ட் நம்மிடம் இல்லை என்பது தான் மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. வண்ணம் மங்கி சிதைவடைந்த நிலையில் தான் டிவிடி கூட கிடைக்கிறது.