http://i1065.photobucket.com/albums/...psto1l6eov.jpg
Printable View
வாசு,
மணமகன் தேவை பாடல் காட்சி பற்றிய உங்கள் பதிவை மீண்டுமொரு முறை படித்தேன். அந்த காட்சியமைப்பை அழகாய் சொல்லியிருக்கிறீர்கள். இந்த பாடலை ஒரு முறை ராகவேந்தர் சார்தான் அவர் வீட்டில் எனக்கு போட்டுக் காட்டினார் என்று நினைவு. அன்று பார்த்தபோது தோன்றிய உணர்வுகளை இப்போது உங்கள் எழுத்தில் பார்க்க முடிந்தது.
ராகவேந்தர் சார்,
Surprise தீபாவளி தொடருக்கு வாழ்த்துகள். பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன். ஒரே ஒரு request. 1970-லிருந்து தொடங்காமல் 1966 -லிருந்து ஆரம்பித்தால் இன்னும் பல சுவையான விஷயங்கள் பலருக்கும் தெரியாத விஷயங்களை உங்களால சொல்ல முடியும் என நினைக்கிறேன்.
அன்புடன்
வாசு சார்
முரளி சார் சொன்னது போல் மணமகன் தேவை படத்தைப் பற்றிய தங்களின் பதிவு, குறிப்பாக வெண்ணிலா ஜோதியை வீசுதே பாடலைப் பற்றி நாம் அடிக்கடி சிலாகிப்பது போல, தங்கள் எழுத்தில் அற்புதமாக கொண்டு வந்து விட்டீர்கள். உளமார்ந்த பாராட்டுக்கள்.
இதில் கே.ராணி பாடிய பாடல் ஒன்றில் தலைவர் கூலிங் கிளாஸுடன் அட்டகாசமான நடனமாடும் காட்சி மறக்க முடியாது. இன்னொரு சந்தர்ப்பத்தில் அந்தப் பாடலைப் பற்றியும் தாங்கள் எழுத வேண்டும் என விரும்புகிறேன்.
அடியேனுடைய தீபாவளி சிவாஜி ரசிகனின் சிறந்த நாள் குறுந்தொடருக்கு விருப்பும் வரவேற்பும் பாராட்டும் தெரிவித்த அத்தனை உள்ளங்களுக்கும் உளமார்ந்த நன்றி.
தீபாவளி சிவாஜி ரசிகனின் சிறந்த நாள் - தொடர்ச்சி
முரளி சார்
1966ல் தான் நான் என் முதல் பதிவில் தொடங்கியுள்ளேன். என்றாலும் உங்களுக்காகவும் நண்பர்களுக்காகவும் சற்றே விரிவாக...
http://i1110.photobucket.com/albums/.../Selvam1-1.jpg
அப்போது பள்ளிப் பருவமாகையால் அவ்வளவாக தனியாக வெளியே அனுப்ப மாட்டார்கள். அந்தக் காலத்துக் கெடுபிடிகள் எல்லோர் வீட்டிலும் அதிகம். நான் மட்டும் தப்ப முடியுமா என்ன. என்றாலும் நண்பர்களுடன் சென்றால் ஆட்சேபணை இல்லை. அந்த மாதிரி போன நாட்கள் சந்தித்த அனுபவங்கள் சற்றுக் குறைவு தான். இருந்தாலும் நினைவில் உள்ள வரை, சந்தித்த வரையில் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.
செல்வம் படம் நன்றாக நினைவிருக்கிறது. காலையில் தீபாவளி அன்று தினத்தந்தி பேப்பர் வாங்கி விளம்பரத்தைக் கத்தரித்து வைத்துக் கொண்டது ஞாபகம் உள்ளது. முழுப்பக்க விளம்பரம். வி.கே.ஆர். பிக்சர்ஸ் அளிக்கும் என்ற தயாரிப்பாளர் நிறுவனம் பெயரும் மனதில் ஊறிவிடும். நண்பனிடம் நச்சரித்து மாலையில் சித்ரா தியேட்டருக்குச் சென்றோம். கெயிட்டி தியேட்டரில் இறங்கி நடப்போம். சித்ரா தியேட்டர் அருகிலேயே ஸ்டாப்பிங் உண்டு என்றாலும் கட்டணம் அடுத்த ஸ்டேஜுக்கு ஏற்ப வாங்கி விடுவார்கள். ஸ்டாப்பிங் இறங்கி பாலத்தில் நுழையும் போதே மக்கள் வெள்ளம் மொய்த்து விடும். அப்போது பாலம் சற்றே குறுகியிருக்கும். போக்குவரத்து நெரிசல் இருக்காது என்றாலும் தியேட்டர் கூட்டம் அதிகம் வரும் போது வண்டிகள் சாலையில் ஊர்ந்து தான் செல்லும். கூவம் கரையோரம் சாலையில் பிளாட்பாரத்தை யொட்டி நான்கு அல்லது ஐந்து அடி உயரத்தில் மதில் சுவர் இருக்கும். அதில் ரசிகர்கள் அமர்ந்திருப்பார்கள். என்னுடைய ஞாபகம் சரியாக இருக்குமானால் அந்த கூலிங் கிளாஸ் போஸ் தான் கட்அவுட்டாக வைத்திருந்தார்கள் என்று நினைக்கிறேன். அப்போதெல்லாம் சித்ரா தியேட்டரில் 51 பைசா, 84 பைசா, ரூ 1.25 பைசா, ரூ 1.66 பைசா மற்றும் ரூ 2.50 பைசா. பெரும்பாலான தியேட்டர்களில் கட்டண விகிதம் 84 பைசா, 1.25 பைசா, 1.66 பைசா மற்றும் 2.50 பைசாவாகத் தான் இருக்கும். அதற்குக் கீழுள்ள வகுப்புக் கட்டணங்கள் மட்டும் சற்றே மாறு படும் ஒரு சில தியேட்டர்களில் 46 பைசா - உதாரணம் கெயிட்டி, பிளாசா, ஒரு சில தியேட்டர்களில் 51 பைசா, உதாரணம் சித்ரா, ஸ்டார், பாரகனில் 61 பைசா என வேறுபடும். குளோப், காசினோ, ஓடியன். ஆனந்த், மிட்லண்ட், வெலிங்டனில் குறைந்த பட்சம் 84 பைசா.என டிக்கெட் கட்டணமிருக்கும்.
அப்படி சித்ரா தியேட்டரைப் பொறுத்த மட்டில் 51 பைசா டிக்கெட்டுக்கான கவுண்டர் பின்புறம் இருக்கும் கேட் அருகில் இருக்கும். அதற்கான வாயிலும் பின்புறம் தான் இருக்கும். மற்ற டிக்கெட் கட்டணத்திற்கெல்லாம் தியேட்டர் பக்கத்தில் கார் பார்க் அருகில் இருக்கும்.
சித்ரா தியேட்டரில் மெயின் கேட்டும் தியேட்டரின் நுழைவாயிலும் அருகருகே இருக்குமாகையால் அங்கே நெரிசல் மிகவும் இருக்கும். மேனேஜர் அறையும் பரொஜக்டர் அறை அருகில் இருக்கும்.
2.50 டிக்கெட் மாடியில் பால்கனி வகுப்பாக இருக்கும். மாலைக் காட்சிகளில் நல்ல காற்றோட்டத்துடன் படம் பார்ப்பது சுகானுபவமாக இருக்கும்.
அப்படி ஒரு சூழலில் படம் பார்க்கும் ஆவலோடு தியேட்டருக்குச் சென்றோம். டிக்கெட் ஏதுமில்லை. கிடைத்தால் அதிர்ஷ்டம் என்ற வகையில் தான் சென்றோம். பள்ளியில் காலை ஷிப்ட். மதியம் 12.30 மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்து விடுவோம். சாப்பிட்டு விட்டு ஹோம் ஒர்க் முடித்து விட்டு கடற்கரையில் விளையாடப் போய் விட்டு மாலை வீட்டுக்கு வரும் பழக்கமுண்டு. ஆனால் அன்றைக்கு தீபாவளி, படம் வேறு ரிலீஸ். அதனால் கடற்கரை பள்ளி சமாச்சாரங்கள் இல்லை. டிக்கெட் கிடைத்தால் போகிறோம் என வீட்டில் சொல்லித் தான் கிளம்பியிருந்தோம். அதனால் சற்று வீட்டைப் பற்றிய கவலையை விட்டு டிக்கெட் கவனத்தில் லயித்தோம்.
பாலத்தில் தியேட்டரை நோக்கிச் செல்லும் போதே ஒரு பெண்மணி மறித்தாள், செல்வம் டிக்கெட் 84 பைசா 5 ரூபாய் என எங்களிடம் டிக்கெட் வேண்டுமா என்று கேட்டார். ஆனால் எங்களிடம் அவ்வளவு பணம் கிடையாதே. 84 பைசா டிக்கெட்டை ஒரு ரூபாய் கொடுத்தே வாங்க முடியாத நிலையில் அல்லவா அப்போதெல்லாம் இருந்தோம்.
அப்போதே தீர்மானித்து விட்டோம், இன்றைக்கு நம்மால் படம் பார்க்க முடியாது என்று. அந்த பைசாவை செலவு செய்யாமல் ஓரிரு நாட்களுக்கு இன்னும் சேரும் பைசாவை வைத்து ரூ 2.50 ரிசர்வ் செய்து கொள்ளலாம் அல்லது 84 பைசா கிடைத்தால் பார்க்கலாம் என்று தீர்மானித்து விட்டோம்.
அதற்கேற்ப சில நாட்களுக்குப் பிறகு ரிசர்வ் செய்யப் போனோம். அப்போதெல்லாம் டிக்கெட் ரிசர்வ் செய்து பார்த்தால் பெரிய தோரணை வந்து விடும். காலரைத் தூக்கி விட்டு நாங்கள் ரிசர்வேஷன் டிக்கெட்டாக்கும் என்று சொல்வது ஒரு பெரிய கர்வமாக இருந்தது. எனவே மிதப்பு கனவுடன் கவுண்டருக்குப் போனால் கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு பகல் மற்றும் மாலைக் காட்சி நிறைந்து விட்டது. இரவுக் காட்சிக்கு மட்டும் ரிசர்வேஷன் இருந்தது. எங்களால் இரவுக்காட்சிக்கெல்லாம் போக முடியாது. யோசனை பண்ணும் போதே ரிசர்வேஷன் நேரம் முடிந்து விட்டது. 12 மணியாகி விட்டது. அப்போது ஒரு பெண்மணி சொன்னார். 84 பைசா கவுண்டர் இன்னும் கொஞ்ச நேரத்தில் கியூவை அனுமதித்து விடுவார்கள். 84 முடிந்த பின் 51 பைசா கொடுப்பார்கள் எனவே இப்போதே 84 பைசாவுக்கு நின்று விடுங்கள் என்றார். அதைக் கேட்டு ஜம்பமாக கியூவில் போய் நின்றோம். 10வது அல்லது 15வது ஆளாக நின்றோம். நேரம் ஆக ஆக க்யூ நெருக்கமாகிக் கொண்டே இருந்தது. 10, 15 பேருக்குள் இருந்த நாங்கள் நெருக்கலில் சிக்கி 50 பேருக்குப் பின்னால் போய் விட்டோம். டிக்கெட்டும் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். நாங்கள் ஒரு வழியாக முட்டி மோதி நூறாவது ஆளாக இருக்கும் டிக்கெட் வாங்கி விட்டோம். கொஞ்ச பேருக்குப் பிறகு டிக்கெட் ஃபுல்.
ஆனால் உடம்போ நசுங்கி விட்டது. வேர்த்து விறுவிறுத்து தொப்பலாக நனைந்து உள்ளே போய் அமர்ந்து சட்டையைப் பார்த்தால் தண்ணீரில் முக்கி எடுத்தது போல் நனைந்து விட்டது. மற்றவர்களோ இன்னும் பாவம். பலர் சட்டை நனைந்தது மட்டுமின்றி சிராய்ப்பு காயங்களுடன் மல்லாடிக் கொண்டிருந்தனர்.
உள்ளே சீட் போட்டு விட்டு வெளியே வந்து பார்த்தால் ... ஆஹா... திருவிழா கூட்டம் போல் தியேட்டர் ஜேஜே என ரொம்பி வழிய மனசெல்லாம் குதூகலித்தது.
ஹவுஸ் புல் போர்டு மாட்டி விட்டார்கள்.
மெயின் கேட்டை மூடி விட்டார்கள்.
மணி அடித்து விட்டார்கள்.
உள்ளே சென்று அமர்ந்தோம்.. விளம்பரங்கள் ஓடி முடிந்தன. நியூஸ் ரீலும் ஓடி முடிந்தது. அதில் வரும் கிரிக்கெட் நியூஸில் மனம் லயித்து சிறிது நேரம் அந்த டெஸ்ட் மாட்சைப் பற்றி சுற்றி வந்தது.
எல்லாம் முடிந்து செல்வம் சென்ஸார் சர்டிபிகேட் வந்தது தான் தாமதம்..
காது ஜவ்வே கிழிந்து விடும் அளவிற்கு உள்ளே ஆரவாரம்.
சிறிது நேரத்தில் தலைவரின் தரிசனம்...
அங்கே தொடங்கிய அளப்பரை படம் முடியும் வரை ஓயவில்லை. இதுவும் ஞாபகம் இருக்கிறது. நான் சின்னப் பையனாக இருந்தாலும் மனதில் அன்றே பதிந்து விட்டது. ஒன்றா இரண்ட பாட்டில் கையைக் கடித்தவாறே ஒரு பார்வை பார்ப்பார், அப்போது, ஏர்போர்ட்டில் கூலிங் கிளாஸுடன் இறங்கி நடக்கும் போது, என பல காட்சிகளில்... அப்போது இடி விழுந்தது போல் ஆரவாரம்.. இத்தனைக்கு கைதட்டும் ஓசைதான். குரல் கூட தரமாட்டார்கள். விசில்.. ம்ஹூம்.. சுத்தம் யாரும் அடிக்க மாட்டார்கள். யாராவது விசில் தப்பித்தவறி அடித்தால் போதும் மற்ற ரசிகர்கள் அவரைக் கூப்பிட்டுத் திட்டி விடுவார்கள், சிவாஜி படத்திற்கு வந்து விசிலடிக்காதே... என்று.. அவர்கள் அந்த மாதிரி கண்டித்தது, எங்களைப் போன்ற அடுத்த தலைமுறையில் உருவான புதிய தலைமுறை ரசிகர்களுக்கு ஒரு ஆசிரியர் பாடம் எடுப்பது போல இருந்தது. அதற்கேற்ப உள்ள கைதட்டலே இடி இடிக்கும் ஓசையை மிஞ்சி விடும்.
சொர்க்கம் என்றால் அதுவல்லவோ சொர்க்கம்...
இப்படி அல்லவோ வாழ்க்கை அமைய வேண்டும்..
அந்த மதிமுகம் புன்னகை தவழ பவனி வரும் போது உலகில் நமக்கு வேறேது வேண்டும்..
படம் முடிந்து படத்தில் தலைவரின் நடிப்பைப் பற்றி அசை போட்ட படியே வந்தோம்..
சில நாட்கள் கழித்துப் பார்த்தால் படத்தின் ரிப்போர்ட் சரியில்லை .. சீக்கிரம் எடுத்து விடப் போகிறார்கள் என்று நண்பன் சொன்னான்..
எனக்கோ ஒன்றும் புரியவில்லை. நன்றாகத்தானே இருந்தது ... ஏன் மக்களிடம் வரவேற்பை பெற வேண்டிய அளவிற்குப் பெறவில்லை..
மண்டை குழம்பியது...
அன்று மட்டுமா..
இன்றும் தானே ..
... தொடரும்....
http://i1028.photobucket.com/albums/...psqgqywdcu.jpg
"இதுதான்..!
இதுவே தான்..!
என் மனம் விரும்புவது
இதுவேதான்..!"
-வெகுகாலமாக எதற்காகக்
காத்திருந்தோமோ.. அது
நமக்குக் கிடைத்து, அதை
அனுபவிக்கிற நிமிஷத்தில்,
மனம் இப்படித்தான் ஆனந்தக்
கூத்தாடும்.
அது, வெற்று ஆர்ப்பாட்டமில்லை.
வீண் கூச்சலில்லை.
அர்த்தமுள்ள சந்தோஷம்.
தேவையைத் தீர்த்துக் கொண்ட
இதயத்தின் இன்ப வெளிப்பாடு.
எழுத்துக்குள் அடங்காத அந்த
இன்பத்தை , எனக்கு நடிகர் திலகத்தின் படங்களே தந்திருக்கின்றன.
படம் முடிந்து, அவசர அவசரமாய் வீட்டுக்கு ஓடி வந்து, நுழைந்த மாத்திரத்திலேயே "அமிர்தாஞ்சன்" புட்டியைத்
தேட வைத்த படங்களுக்கு
மத்தியில், படம் பார்த்து விட்டு
வெளியே வருகிறவனின்
முகத்தில் ஒரு நிறைவையும்,
நடையில் ஒரு கம்பீரத்தையும்,
உள்ளத்தில் ஒரு மகிழ்வையும்
தந்த படங்கள் நடிகர் திலகத்தின் படங்களாகவே
இருந்தன. இருக்கின்றன.
இருக்கும்.
என் மட்டில், நடிகர் திலகத்தின்
படங்களை நான் காண நேர்ந்ததை நிகழ்வுகளாகக்
கருதவில்லை. காலமும்,
கடவுளும் எனக்குக் காட்டிய
கருணையென்றே கருதுகிறேன்.
அகன்ற வெண்திரையின்
முன்னால் அமர்ந்திருக்கும்
எனக்கு, நடிகர் திலகம் தருவது
வெறும் சினிமாக் காட்சியல்ல.
தன்னைக் கடவுளாக்கிக்
கொண்டவர், கவலை தீர்த்து
எனக்குத் தரும் "தரிசனம்."
-------------
நடிகர் திலகத்தின் படங்களில்
ஒவ்வொன்றாய் எடுத்துக்
கொண்டு, முழுப்படத்தையும்
அணு அணுவாய் ரசித்து
எழுத வேண்டும் என்கிற என்
ஆவலை அதிகப்படுத்திய
அன்பு நண்பர்
திரு. செந்தில்வேல் அவர்களுக்கும், திரியில்
இல்லாவிட்டாலும் தினமும்
திரியைப் பார்த்து விட்டு,
என் பதிவுகளை மெச்சி என்னை வாழ்த்தி மகிழும்
பெரியவர்.அய்யா. திரு.நடராஜன் அவர்களுக்கும்
அன்பின் திரு.பொன்.இரவிச்சந்திரன் அவர்களுக்கும்
எனது இதயப்பூர்வமான
நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.
இதய தெய்வம் நடிகர் திலகம் "இரு மலர்கள்" கொண்டு
என் "தரிசனத்தை "துவக்கி
வைக்கிறார்.
இதயக் கோயிலில் வீற்றிருப்பவர்...
என்னையும், என் எழுத்துகளையும் ஆசீர்வதிக்கிறார்.
தரிசனம்-1
------------
'இரு மலர்கள்'
---------------
http://i1028.photobucket.com/albums/...psjrv1ioaw.jpg
"இரு மலர்கள்."
நாற்பத்தெட்டு வருடங்களுக்கு
முன்பு, நான் பிறப்பதற்கும்
ஐந்து மாதங்களுக்கு முன்பு,
இதே போல் ஒரு தீபாவளி
அன்றைக்குத்தான் வந்தது
என்றறிகிறேன்.
இன்னும் பல நூறு வருஷங்களுக்குப் பிறகு வரும்
ஒரு தீபாவளியன்றும் என்னைப் போல் யாரையேனும் "இரு மலர்கள்"
எழுத வைக்குமென்பது நிஜம்.
-------------
எண்பதுகளின் துவக்கத்தில்,
எங்கள் ஊரில் ஏதோ ஒரு
கோவில் திருவிழாவை
முன்னிட்டு, தெருவில் திரை
கட்டி இரண்டு படங்கள் காட்டினார்கள்.
ஒன்று-'இரு மலர்கள்.'
இன்னொன்று, 'தம்பதிகள்'
என்ற படம்.
சரளைக் கற்கள் உறுத்த, மண்
தரையில் உட்கார்ந்து பார்த்த
'இரு மலர்கள்' தந்த மயக்கம்
இன்னும் தீரவில்லை.
---------------
அழகும், அறிவும் நிறைந்த
இளைஞன் சுந்தர். கல்லூரி
மாணவன்.உடன் பயிலும் உமா என்கிற பெண்ணுக்கும், சுந்தருக்கும் காதல் உருவாகிறது. உருவானது, வளர்கிறது. வளர்ந்தது, செழிக்கிறது.
சுந்தரின் தந்தை பண்பாளர்
சிவக்கொழுந்து. அவரின்
சகோதரி மகள் சாந்தி. அன்பும்,
பண்பும் நிறைந்த குணவதியான
சாந்தியை, தன் மகன் சுந்தருக்கு மணமுடித்து வைக்க பெரிதும் விரும்புகிறார் ..சிவக்கொழுந்து.
தான் வேறொருத்தியை விரும்புவதாய் சுந்தர் சொல்லி
விட கலங்கிப் போகிறார்.
தனக்கு சகலமுமான, ராணுவத்தில் மேஜராகக் கடமையாற்றும் தன் அண்ணனிடம், தனக்கும் சுந்தருக்குமான காதலைத்
தெரிவித்து, அதைத் திருமணமாக ஆக்க அனுமதி
பெறும் பொருட்டு ஊருக்குப் புறப்பட்டுச் செல்கிறாள்,உமா.
அண்ணனிடம் சம்மதம் பெற்றவுடன் கடிதம் எழுதுவதாக தேதி குறிப்பிட்டு
உறுதி சொல்லிப் போகிறாள்.
போன இடத்தில் அன்பான அண்ணனும், அண்ணியும்
விபத்தில் இறந்து விட, உமா
அண்ணனின் மூன்று குழந்தைகளையும் கவனித்துப்
பராமரிக்கும் கடமையை
நினைத்து காதலைத் தியாகம்
செய்கிறாள். தனக்கு வேறொரு
வாலிபனுடன் திருமணம்
நடக்கவிருப்பதாகவும், தன்னை
மறந்து விடும்படியும் கடிதம்
எழுதுகிறாள்.
கடிதம் கண்டு அதிர்ந்து கலங்கிப் போகும் சுந்தர் உடல்
நலம் குன்றிப் போகிறான். உயிர் வாழவே விருப்பமின்றி
உயிர்ப் பிணமாகி விடும் சுந்தருக்கு சாந்தியின் தூய்மையான அன்பு புத்துயிர்
ஊட்டுகிறது.
தன் தந்தையின் எண்ணப்படி
சாந்தியையே மணந்து கொண்டு, உழைத்துப் பெரிய
மனிதனாகி, ஒரு அழகான
பெண் குழந்தைக்கும் தகப்பனாகி இன்ப வாழ்க்கை
வாழ்கிறான்.
விதி, மீண்டும் உமாவை சுந்தரின் வாழ்க்கையில்
செருகிச் சிரிக்கிறது. சுந்தரின்
மகள் பயிலும் பள்ளிக்கே
ஆசிரியையாக வருகிறாள்..
உமா.
உண்மையறியாத சுந்தரின்
மனதில் துன்பப் புயல் வீசி
நிம்மதியைக் காணாமலடிக்கிறது.
கணவனின் நிம்மதியின்மை
கண்டு துடித்துப் போகும் சாந்தி,
உமாவோடு வாழட்டும் என்று
சுந்தரைப் பிரிந்து தன் உயிரை
மாய்த்துக் கொள்ள விழைகிறாள்.
இன்பம் தவழும் சுந்தர்-சாந்தி
வாழ்வுக்குத் தான் இடையூறில்லை.. மூன்று பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க வேண்டியது தன்
பொறுப்பென்று உணர்த்தி விட்டு, சுந்தரையும், சாந்தியையும் மீண்டும்
இணைத்து விட்டு, தியாகத்தின்
பெண் உருவமாய் கையசைத்து
விடைபெறுகிறாள், உமா.
-இது, "இரு மலர்கள்" படத்தின்,
நம் இதயம் வாழும் கதை.
---------------
காதலுக்கும், கடமைக்கும்
ஊடே உணர்வுகளோடு
அல்லாடும் ஒரு இளம்பெண்.
மாமன் மகன்தான் உலகமென்றும், அவன் பருகத்
தருவது நஞ்செனினும் அதுவே
தனக்கு அமிழ்தென்றும் திரியும்
ஒரு பெண்.
படத்தின் தலைப்பு மட்டுமல்ல..
படத்தின் கதையும் கூட இந்த
இரண்டு பெண்களைத்தான்
பேசுகிறது.
இந்த 'இரு மலர்களையும்'
முந்திக் கொள்கிறது.. நம்
நடிகர் திலகமெனும் கலை
மலரின் வாசம்.
இந்த "சுந்தர் "கதாபாத்திரத்தில்
நடிகர் திலகம் தவிர வேறு
யார் நடித்திருந்தாலும், அது
ஒரு தவிர்க்க முடியாத பாத்திரமாக மட்டுமே இருந்திருக்கும்.
நடிகர் திலகம் "சுந்தர்" வேடம்
தாங்கினார். அது, மறக்க
முடியாத பாத்திரமாயிற்று.
--------------
காலம் கொண்டாடும் நம்
காவிய நாயகரை அகிலத்திற்கு
பெருமையோடு அறிமுகம்
செய்வித்தது போன்றதொரு நாடக மேடையோடுதான்
"இரு மலர்கள்" படமும்
ஆரம்பமாகிறது.
சென்னைக் கல்லூரியில் பயிலும் சுந்தரும்-உமாவும்,
கோவலனும்-மாதவியுமாக
நடிப்பார்கள் என்று அறிவிக்கப்
பட்டவுடன், தலையோடு,தலை
மோதிக் கொண்டு சண்டை
போடுவதாய் நடிகர் திலகமும்,
பத்மினியும் காட்டப்படுகிறார்கள்.
குறும்பு கொப்பளிக்கும் நடிகர்
திலகத்தின் அந்த முகம் தான்
போகப் போக ஆயிரம் உணர்வுகளைப் பூசிக் கொண்டு
நம்மை மயக்கப் போகிறது
என்பது அப்போது நமக்குத்
தெரியாது.
"மாறுபட்ட இரண்டு துருவங்கள் நாம். நாம் ஒன்று
சேர முடியாது."-என்று வாதிடும் பத்மினியிடம்,
"மாறுபட்ட இரண்டு விஷயங்கள்தான் ஒன்றை
ஒன்று ஆகர்ஷிக்கும். வசீகரம்
செய்யும். "-என எதிர்வாதம்
செய்கையில் நடிகர் திலகத்தின்
அந்த கிண்டலான தொனியில்
வரும் உச்சரிப்பு, சுவாரஸ்யமான வியப்பு.
இருவரும் மல்லுக்கட்டும்
போதே மணியடித்து நாடகம்
துவங்க, திரை விலக, மயிலென
நாட்டியப் பேரொளி ஆட,
படுக்கவும் இல்லாத,
உட்காரவும் இல்லாத ஒரு
ஒய்யார இருப்பில், ஒளியற்ற
இருட்டகற்றி ஒளி வந்து பாய,
அந்த ஒளியையும் மிஞ்சும் தன்
ஒளி முகத்தை நம்மை நோக்கித் திருப்பி, "மாதவிப்
பொன்மயிலாளை" வர்ணிக்கும்
கோவலனாக நடிக்க, நடிகர்
திலகத்தைத் தவிர வேறொருவரைச் சிந்திப்பவன்
கேவலன்.
http://i1028.photobucket.com/albums/...psxfi0ac6s.jpg
( தொடரும்...)
"சூப்பர்...."Quote:
"மாதவிப்
பொன்மயிலாளை" வர்ணிக்கும்
கோவலனாக நடிக்க, நடிகர்
திலகத்தைத் தவிர வேறொருவரைச் சிந்திப்பவன்
கேவலன்.
நிகழ்வுகளோடும் நினைவுகளோடும் காலமெனும் நதியில் நீந்தியோடும் கற்பனை ஓடம், மெல்ல மெல்லத் தன் பயணிகளின் எண்ணிக்கையைக் கூட்டிக்கொண்டே போகிறது... வாசு, முரளி, ஆதவன் ரவி என பயணிகள் ஒவ்வொருவரும் ஓடத்தை சீராக அலையோட்டத்தோடு கொண்டு செல்கிறார்கள். பயணிகளாக மட்டுமின்றி துடுப்புக்காரனாகவும் அவர்கள் செயல்படுகிறார்கள்.
ஒவ்வொருவருக்கும் உளமார்ந்த பாராட்டுக்கள். பயணிகள் எண்ணிக்கை கூட வேண்டும் எனவும் விரும்புகிறது மனம்.
இந்த நினைவுகளில் மூழ்கி விட்ட என் மனது, மற்றொரு முக்கியமான பயணியை மறந்து விட்டது. சக பயணிகளின் மனம் சோர்வடையாமல் ஊக்குவித்து, அவர்கள் ஒவ்வொருவரின் சிறப்பையும் மற்றவரிடத்து எடுத்துரைத்து, தன் சிறப்பையும் மற்றவர்கள் அறியும் வண்ணம் எடுத்துரைத்து பயணத்தை சிறப்பாக்கும் அந்த பயணி, கடந்த 7ம் தேதி தன் பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளது.
ஏனோ மனம் மறந்து விட்டது.. என்றாலும் அதில் தவறுமில்லை. காரணம் அந்த பிறந்த நாளில் அந்தப் பயணியோடு இன்னோர் கலைஞனும் தன் பிறந்த நாளைக் கொண்டாடினான்றோ.. இவருவரும் ஒன்றெனத்தானே மனம் நினைக்கிறது.. ஒருவரை வாழ்த்தினால் அது இன்னொருவரை சேரும் அளவிற்கு ஆத்மார்த்தமான பிணைப்பன்றோ..
இருந்தாலும் தாமதமாக வாழ்த்துவதில் குறை ஒன்றுமில்லையே..
கோபால்,
தங்களுக்கு என் உளமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். எங்களைப் பொறுத்த மட்டில் எல்லா நாளும் நவம்பர் 7 அன்றோ..
கலை"வாணி" யின் அருள் பரிபூரணமாக கிடைக்கப் பெற்ற தாங்கள் வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.
பட்டிக்காடா பட்டணமா வெள்ளி விழாவில் என்ன நடந்தது...
முரளி சார் ... காத்திருக்கிறோம்...
ராகவேந்தர் ,
நான் ஒரு ஜெட் பைலட் .சிவாஜியை உலகத்தர பார்வையில் நவீன நடிப்பு கோட்பாடுகளில் அளந்தவன்.இன்னும் ஓடத்தில் போய் கொண்டிருக்கும் உங்களுடன் ஒப்பிட்டு என்னை அவமதிக்க வேண்டாம். நான் உங்களில் சக பயணியல்ல.அந்த நினைப்பே உங்களுக்கு வேண்டாம். ஓடக்கார மாரிமுத்துவாக நீங்களும் ,முரளியுமே இருந்து கொள்ளுங்கள்.
துரோக கும்பலை மட்டுமே வளர்த்து விட்ட சிவாஜி அண்ணே கோஷ்டிக்கு ,மாற்றாருக்கு புத்தகம் போட்டு அலையும் ஆட்களை மட்டுமே ஞாபகம் வைத்திருக்க முடியும். உண்மை விசுவாசிகள் தங்கள் வழி கண்டு கொள்ள வேண்டியதுதான். ஏன் அரசியலில் ஒரு புண்ணாக்கும் எடு படவில்லை என்று இப்போதாவது புரிகிறதா? நல்ல வேளை ,தப்பி தவறி ஆட்சி அதிகாரம் கிடைத்திருந்தால் ,நகைசுவையின் உச்சத்தையல்லவா தொட்டிருக்கும்?
belated என்பது ஓரிரு நாள் தவறலாம். ஒரு வாரம் கழித்து வாழ்த்துவது அருவருப்பான அநாகரிகத்தின் உச்சம். நான் கொண்டாட வேண்டிய முறையில் கொண்டாடி ஆயிற்று. உங்கள் வாழ்த்துக்களை திருப்பி அளிக்கிறேன்.
இன்று தற்செயலாக வந்ததால் இந்த கன்றாவி கூத்தை பார்க்க நேர்ந்தது. நான் 6 ஆம் தேதி வியட்நாமில் 20 பெண்களுடன் (எனது பணியாளர்கள்),7 ஆம் தேதி சிங்கப்பூர் எனது சகோதர சகோதரிகளுடன் ,8 ஆம் தேதி இந்தோனேசியாவில் எனது 10 பணியாள நண்பிகளுடன் , சிறப்பாகவே கொண்டாடி விட்டேன்.
தயவு செய்து தொடர்ந்து யாரும் இந்த கூத்துக்களை அரங்கேற்ற தேவையில்லை.
Gopal,
I thought you were beyond all those expectations of wanting birthday wishes. Last year every soul in this hub universe wished you but this time may be due to oversight people might have forgotten. To err is human. Why should you resort to harsh lamguage? I am not writing this just because you ahve mentioned my name also. But as a genuine well wisher who doesn't want his friend to be misunderstood all the times for all the wrong reasons. Hope you understand!
Regards
டியர் ராகவேந்தர் சார்,
1966 தீபாவளி வெளியீடான 'செல்வம்' நினைவலைகள் மிகவும் விவரமாக இருந்தது. படத்தைப்பற்றி மட்டுமல்லாது சித்ரா தியேட்டரைப் பற்றிய விவரங்களும் சிறப்பாக இருந்தன. அப்போதெல்லாம் கூவம் ஆறு(?) 'கொஞ்சம்' தெளிவாக இருந்ததால் இரவு நேரங்களில் சித்ராவின் விளக்கு அலங்காரங்கள் அதில் பிரதிபலித்து அழகை கூட்டும் என்பதாக மூத்த ரசிகர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதனை கெயிட்டி கரையிலிருந்து பார்த்து மகிழ்வார்களாம்.
உங்கள் பதிவின் கடைசி வரிகள்தான் சற்று புரியவில்லை. 'செல்வம்' ரிப்போர்ட் ஏன் ரிசல்ட் சரியில்லைஎன்று சொல்லப்பட்டது?. அந்த தீபாவளிக்கு வந்த படங்களிலேயே செல்வம்தானே நன்றாக ஓடியது. ஏற்கெனவே சரஸ்வதி சபதம் ஓடிக்கொண்டிருந்தபோதிலும் எல்லா ஊர்களிலும் செல்வம் நல்ல வசூல் ஆனது.
1966 தீபாவளிக்கு செல்வம், பறக்கும்பாவை, கௌரிகல்யாணம், வல்லவன் ஒருவன், தேன்மழை, மேஜர் சந்திரகாந்த் ஆகிய படங்கள் வெளியாகி திரையை கலக்கின.
Mr Raghavendra Sir,
Excellent recollection of Diwali Releases of NT's Movies. We are waiting for the next one.
Mr Athavan Sir,
Your Dharisanam of Thalaivar is super.
தீபாவளி - சிவாஜி ரசிகனின் சிறந்த நாள் - 3
... தொடர்ச்சி...Quote:
சில நாட்கள் கழித்துப் பார்த்தால் படத்தின் ரிப்போர்ட் சரியில்லை .. சீக்கிரம் எடுத்து விடப் போகிறார்கள் என்று நண்பன் சொன்னான்..
எனக்கோ ஒன்றும் புரியவில்லை. நன்றாகத்தானே இருந்தது ... ஏன் மக்களிடம் வரவேற்பை பெற வேண்டிய அளவிற்குப் பெறவில்லை..
மண்டை குழம்பியது...
அன்று மட்டுமா..
இன்றும் தானே ..
அந்தக் குழப்பம் இன்றும் இருக்கிறது.. நண்பன் ஏன் சொன்னான்.. அப்படி சொல்வதற்குக் காரணம் என்ன... இவையெல்லாம் விளங்குவதற்கு சில காலம் ஆனது... அந்த ஒரு பிராயத்தில் அவ்வளவாக தகவல் தொடர்பு இல்லாத காரணத்தால் யாராவது வாய் மொழியாக ஏதாவது சொன்னால் மனம் நம்பி விடும். வதந்தியாகப் பரவி விடும் அந்தத் தகவல்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.. சாந்தியில் சரஸ்வதி சபதம் சக்கைப் போடு போட்டுக்கொண்டிருந்ததால் அடுத்த படம் தோல்வி என பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலையில் இப்படி ஒரு செய்தி பரப்பப் பட்டது என மூத்த ரசிகர்கள் கூறினர். தேர்தலுக்கான முஸ்தீபுகள் தொடங்கிய நேரம். எனவே நடிகர் திலகத்தின் படம் தோல்வி என்று பரப்பி விட்டால் அது தேர்தலில் எதிரொலிக்கும் என்று கணக்குப் போட்டார்களோ என்னவோ இப்படி ஒரு பேச்சு நிலவியது. எங்கள் கண்ணெதிரிலேயே ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கும் படம் எப்படி சரியாகப் போகாமலிருக்கும் என்ற கேள்வி மனதில் ஓடியது. அதற்குப் பிறகு மாலையில் சாந்தியில் சில நண்பர்களிடம் பேச்சுக் கொடுத்த போது சில மூத்த ரசிகர்கள் எங்களிடம் விளக்கினார்கள். இது எப்போதும் நடப்பது தான். சிவாஜி படம் எவ்வளவு தான் நன்றாக ஓடினாலும் அது ஃப்ளாப், தோல்வி, நஷ்டம் என்றெல்லாம் சொல்வார்கள், அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாதீர்கள், படம் சூப்பராக ஓடுகிறது, என்று அவர்கள் விளக்கி, எங்களை சமாதானப் படுத்திய பிறகு தான் மனம் சமாதானம் அடைந்தது. ஆனால் அவ்வாறு செய்தி பரப்பப்பட்டது ஏன் என்ற குழப்பம் பல நாட்கள் நீடித்து பின் ஒரு கால கட்டத்தில் புரிய ஆரம்பித்தது.
அந்த நேரத்தில் வெவ்வேறு முனைகளில் நடிகர் திலகத்திற்கு எதிர்ப்பு இருந்தது. அரசியல் ரீிதியாகவும், தொழில் ரீதியாகவும் என அவர் எதிர்ப்பை சந்திக்க வேண்டிய சூழ்நிலை. செல்வம் படம் ஓடும் போது கிட்டத்தட்ட தேர்தல் பிரச்சாரம் ஆரம்பித்த நேரம். அதன் காரணமாக எதிர்ப்பையும் தாக்குதல்களையும் பிரச்சாரங்களில் தனிப்பட்ட முறையிலும் எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம்.
படம் தோல்வி என்ற பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டும், உண்மையை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என விரும்பிய மூத்த ரசிகர்களோடு நாங்களும் ஒரு சில வாரங்களுக்குத் தொடர்ந்து அவ்வப்போது சித்ராவில் முகாமிடுவோம். நான் அதிகம் போனதில்லை. ஒன்றிரண்டு முறையே. ஆனாலும் அத்தனை ரசிகர்களும் ஏகோபித்த முறையில் கூறியது.. படம் நிஜமாகவே சூப்பர் ஹிட். இந்த பிரச்சாரத்தை மீறி சிவாஜி படம் ஜெயித்துக் காட்டும் என்று தீவிரமாக நம்பினார்கள் அது உண்மையானது.
படம் மட்டுமல்ல, தேர்தலிலும் அவர் தன் பலத்தை நிரூபித்துக் காட்டினார். அத்தனை பெரிய திராவிட சுனாமியை எதிர்கொண்டு தன்னந்தனியாளாக காங்கிரஸைத் தோளில் சுமந்து அந்த அலையை எதிர்கொண்டார்.
முதன் முறையாக திராவிட ஆட்சியில் தீபாவளியில் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் வெளியான 1967ம் ஆண்டு...
அடுத்து...
ராகவேந்திரா சார்
வார இதழ்களில் வரும் தொடர்கதை போல் விறுவிறுப்பாக செல்கிறது.
தொடருங்கள்.
நன்றி
பிரமாதம்.அடுத்தபதிவை விரைவில் எதிர்பார்க்கிறேன்.
[QUOTE=Aathavan Ravi;1267732]தரிசனம்-1
------------
'இரு மலர்கள்'
---------------
"மாதவிப்
பொன்மயிலாளை" வர்ணிக்கும்
கோவலனாக நடிக்க, நடிகர்
திலகத்தைத் தவிர வேறொருவரைச் சிந்திப்பவன்
கேவலன்.
நான் தீபாவளி அன்று பார்த்த நடிகர் திலகத்தின் படம் கீழ்வானம் சிவக்கும். இந்த படத்தை ராக்ஸ் யில் பார்த்தேன். மிக அற்புதமான தருணம்.
என்னை பொறுத்தவரையில் தீபாவளியும் நடிகர் திலகம் படம் வரும் நாளும் ஒன்று தான்.
திரு ராகவேந்திரா சார் தங்களது தீபாவளி வெளியீடுகள்,அலப்பரைகள்,தோரணங்கள் எல்லாம் அருமை.
தீபவளி அன்று காலை 5 மணிக்கு விழித்து தலைகுளித்து உணவு அருந்தி நடிகர்திலகம் படம் பார்க்கபோவது போல் தான் ஒவ்வொரு படம் வெளியீட்டின் போதும் காலை 4 மணிக்கு எழுந்து குளித்து விட்டு ஆயா கடையில் பணியாரமும் ஆப்பமும் வங்கி சாப்பிட்டுவிட்டு 5 மணிக்கு தியட்டர்
வாசலுக்கு சென்று வரிசையில் காத்து நின்று டிக்கெட் கிடைத்தவுடன் உள்ளே ஓடுவோமே .என்ன சுகம்.மீண்டும் வராது அந்த இனிமையான நாட்கள்.
திரு ஆதவன் சார்
தங்களது தரிசனம் மற்றும் இருமலர்கள் பதிவுகள் மிக அருமை.
நான் தற்பொழுது தான் மாதவி பொன் மயிலாள் பற்றி எனது சக சிறு வயது ஊழியரிடம் பேசிவிட்டு வந்தால் உங்க பதிவு அப்படியே இருக்கிறது.
அந்த சக ஊழியர் subordinate debt என்றால் என்ன வென்று கேட்டார் .நான் அதற்க்கு தான் நடிகர் திலகம் படம் பார்க்க வேண்டும் .பார்த்திருந்தால் ஈசி யாக புரிந்திருக்கும் என்று இருமலர்கள் படத்தை உதரணமாக கூறினேன்.
கூறிவிட்டு மாதவி பொன்மயிலால் பாடலில் பத்மினி அவர்கள் பாடல் தொடங்கும் போது ஆடலில் தூள் கிளப்பி கொண்டிருக்கும் போது எங்களது தலைவர் சீன வரும் பொது முகத்தை திருப்பி தோளில் கிடக்கும் சால்வையை சரி செய்து பாடிகிட்டே ஒரு நடை நடப்பாரே முடிந்தது எல்லாமே என்றேன்.
subordinate debt is an additional debt to the main debt.
தரிசனம்-1. இரு மலர்கள்.
---------------------------
...தொடர்கிறது...
----------------
பத்து நிமிஷ நேரத்தில் முடிந்து
போகிற ஒரு சினிமாப் பாட்டு
அரை நூற்றாண்டு காலமாக
அத்தனை மனங்களிலும்
வாழ்கின்றதென்றால்...
"மாதவிப் பொன் மயிலாளில்"
என்ன வசிய மருந்து பூசினார்கள்..?
மிகச் சிறந்த இசையமைப்பையும்,
திறமை மிகுந்த ஒரு பாடலாசிரியரின் தேர்ந்த
எழுத்தையும்,நம் உயிரோடு நிறைந்து விட்ட ஒரு உன்னதக் குரலையும் மீறி இந்தப்
பாடலின் சூழலை அற்புதமாய்
உள்வாங்கிக் கொண்டு, நடிகர் திலகமும்,நாட்டியப் பேரொளியும் திறம்பட வெளிப்படுத்தும் பாவனைகள்...
மாதவிப் பொன் மயிலாளை
மகத்தான வெற்றியடையச்
செய்தன.
ஓயாமல் சண்டையிட்டுக்
கொள்ளும் ஒரு ஆணும்,பெண்ணும் மேடையில்
ஒன்றாக நடிக்க வேண்டிய
சந்தர்ப்பம் வரும் போது,
அவர்களுக்குள் நிலவும்
மென்மையான பூசலையும்
காட்ட வேண்டும். அதே சமயம்,
பார்த்துக் கொண்டிருக்கும்
நூற்றுக்கணக்கானோரை
பரவசப்படுத்தும் வகையில்
கோவலன்- மாதவியாக
நடிக்கவும் வேண்டும்.
பின்னியிருக்கிறார்கள்...
நம்மவரும்,நாட்டியப் பேரொளியும்.
அதுவும், கோவலனாய்,மாதவியின் கையைப் பற்றி
இழுத்துச் சுழற்றி விட, கட்டிலில் விழுந்த மாதவி
நொடியில் உமாவாய் மாறி
கோபம் காட்ட, சிரிப்பு மாறாத
கோவலன் ஓரிரு விநாடிகள்
சுந்தராய் மாற..
வாழ்ந்திருக்கிறார்கள்.
http://i1028.photobucket.com/albums/...psyqbuh5ny.jpg
அனுதினமும் சந்திக்கிற வாய்ப்பிருக்கிறது. அழகு மொத்தமும் உமாவிடம் இருக்கிறது. அவளைச் சீண்டும்
போதெல்லாம் சுந்தரின் காதல்
புரிகிறது.
அவர்களுக்குள் ஏன் காதல்
இல்லாமல்..மோதல்?
நமக்கு மனசு கிடந்து அடித்துக்
கொள்கிறது.
இருவரும், நாடகம் துவங்கும்
முன் சண்டை போட்ட போது
குறுக்கிட்டுத் தடுக்கும் பேராசிரியர் சுந்தரவதனமாக
வரும் நாகேஷ், "உங்க மிச்ச
சொச்ச சண்டையெல்லாம்
நாடகம் முடிஞ்ச பிறகு
கொடைக்கானல் போறோமே..
அங்கே வச்சுக்கங்களேன்"
என்றாரே?
அவர்களைப் பற்றி நமக்கு
கொடைக்கானலில்தான்
விபரமாகத் தெரிய வருமோ?
------------
கொடைக்கானல்.
"என்னைப் பார்க்காமல் போய்
விடுவாயா?"- என்று கர்வமாய்ச் சிரிக்கிறது.. அழகான இளம்பெண் போல.
துடிப்பு மிக்க மாணவர் குழாம்
அங்கே சந்தோஷமாய்ச் சுற்றி
வருகிறது.
தொப்பி தூக்கும் பாறை, தாங்கள் வீசிய தொப்பிகளை
திருப்பித் தரும் வேகம் பார்த்து
குதூகலிக்கிறது.
இயற்கையை ரசித்துக் கொண்டே சுற்றித் திரும்பும்
உமா மோதுவது, அவளையே
ரசித்துக் கொண்டு நிற்கும்
சுந்தரின் மீது.
நடிகர் திலகத்தின் அந்தப்
பார்வையில்தான் ( புன்னகை-
இலவச இணைப்பு.) எத்தனை
காதல்? எவ்வளவு எதிர்பார்ப்புகள்? எத்தனையெத்தனை கோரிக்கைகள்?
பட்டென்று நொடியில் கடந்து
போய் விடும் ஒரு சின்னஞ்சிறு
காட்சிக்குத் தன்னையும், தன்
அபாரத் திறமையையும் முழுமையாய் ஒப்படைத்து
விட்டு நிற்கும் அந்த ஒப்பற்ற
கலைஞனின் கலையொழுக்கம்
அங்குள்ள மலைகளைக்
காட்டிலும் உயரமானது.
மிக உயர்ந்த மலையின்
உச்சியிலுள்ள பாறை வரை
சென்று வரலாம் என்கிறாள்..
உமா.
சுந்தர் நடுங்குகிறான்.
( இந்தக் காட்சியில், பத்மினி
அந்தப் பாறையை சுட்டிக் காட்டி பேசப் பேசவே, நடிகர்
திலகத்தின் முகம், சாதாரண
நிலையிலிருந்து பயந்த நிலைக்கு மாறுவதை நாம்
தெளிவாகப் பார்க்கலாம்.)
நடுங்கி விலகிப் போகும் சுந்தரைப் பற்றி "பய நழுவுறான். விடாதே." என்று
உமாவை இன்னொரு மாணவன் உசுப்பி விட, உமா
ஒரு அறிவிப்பு செய்கிறாள்.
"உங்களுக்கெல்லாம் ஒரு
போட்டி வைக்கப் போறேன்.
பரிசு சின்னதுதான். ஆனா
அதை என் இதயத்தோடு
தர்றேன்." -என்றபடியே தன்
கூந்தலிலிருந்து ஒரு மலரை
எடுத்துக் கையில் வைத்துக்
கொண்டு.."யாருக்கு வேணும்
இந்த மலர்?" என்று கேட்கிறாள்.
ஏற்கெனவே, பயத்தில் அந்த
இடத்தை விட்டு நழுவி நடந்து
கொண்டிருக்கும் சுந்தர் தன்
நடை நிறுத்தித் திரும்பி ஆவலாய்க் கூவுகிறான்.
"எனக்கு... எனக்கு."
ஆர்வக் கூவலோடு திரும்பி
நிற்கும் அந்த உருவத்தில்,
நடிப்பன்றி வேறொன்றுமறியாத ஒரு
குழந்தையைப் பார்க்கிறோம்.
( ...தொடரும்...)
சரியான Punch.. சூப்பர் ரவி...Quote:
பட்டென்று நொடியில் கடந்து
போய் விடும் ஒரு சின்னஞ்சிறு
காட்சிக்குத் தன்னையும், தன்
அபாரத் திறமையையும் முழுமையாய் ஒப்படைத்து
விட்டு நிற்கும் அந்த ஒப்பற்ற
கலைஞனின் கலையொழுக்கம்
அங்குள்ள மலைகளைக்
காட்டிலும் உயரமானது.
super aathavan sir
சவாலே சமாளி கடைசிப்பதிவு
மாணிக்கம் சகுந்தலாவின்
திருமணம் முடிந்த அன்றைய நாள் இரவு.
மாணிக்கம் பேசுவது:
முன்பின் தெரியாம நாம ஒருத்தரையொருத்தர் சந்திச்சப்போ,அந்த ஒரு நிமிஷத்திலேயேஎன் மனச உங்கிட்ட பறி கொடுத்திட்டேன்.ஆனா அடுத்த நிமிஷமே உன் பணத்திமிராலே என்னை அவமானப்படுத்திட்டே.உன் திமிரை அடக்கனும்கறதுக்காக ஏழைக்கே உரிய ஆத்திரத்தில்,நானும் சரிக்கு சமமா பதிலுக்கு அவமானப்படுத்திட்டேன்.நாம ரெண்டு பேரும் புருஷன் மனைவி ஆவோமான்னு நினைச்சு பார்த்திருப்போமா?உன் மனசுக்கு புடிச்ச வாழ்க்கை உனக்கு கிடைக்காம இருக்கலாம்.ஆனா கிடைச்ச வாழ்க்கைக்கு தகுந்தாப்போலே உன் மனச மாத்திக்கிறதுதான் உனக்கு நல்லது.இந்தப்புது இடம்,புது உறவு, புது வாழ்க்கை உனக்கு புடிக்காம இருக்கலாம். ஏன் அறுவெறுப்பாக்கூட இருக்கலாம்.என்ன உனக்கு புடிக்கல்லனாக் கூட உன்ன எனக்கு ரொம்ப புடிச்சுருக்கு.குறிப்பா உன் பிடிவாதகுணம் எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சுருக்கு.ஏன் தெரியுமா?
(அவ கிட்ட எனக்கு புடிச்சதே அந்த அகம்பாவம்தான்—
"இது வசந்தமாளிகை"
இதுக்கு விழாத கைதட்டா,விசிலா)
நானும் ஒரு பிடிவாதக்காரன்தான்.நம்ம கல்யாணம் இருக்கே அதுதான்
"டிபிகல் சோசியலிசம்".நம்ம ரெண்டு பேரும் ரெண்டு வர்க்கம்.இந்த ரெண்டு வர்க்கமும் பக்குவப்பட்டு ஒண்ணா சேர்ந்தா அதுதான் உண்மையான சோசியலிசம்.அதுக்குத்தான் தலைவர்கள் எல்லாம் பாடுபடறாங்க.நான் உன்ன வெறுக்கல.உன் ஆணவம்,பகட்டு,பணக்காரதிமிறு இதத்தான் வெறுக்கிறேன்.என்கிட்ட ஏழ்மை,வறுமைசூழ்நிலை இதெல்லாம் இருக்கலாம்.அது நாயம்.ஆனா அதுக்காக என்னை ஏன் வெறுக்கற.?புரியல இல்ல. உனக்கு, என்ன , உங்க வர்க்கத்துக்கே புரியாது. ஏன் எங்கள வெறுக்கறோம்கறதே தெரியாம பாரம்பர்யமா அது உங்க ரத்தத்துலயேவிஷமா ஊறிப்போச்சு.
நான் ஒரு முட்டாள் உன்னை நிக்க வச்சே பேசிட்டு இருக்கறம்பாரு.
நீயும் பேசுவ .ஆனா பேசக்கூடாதுன்னு இருக்கற.இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் பெண்கள் ரொம்ப வெட்கப்படுவாங்கன்னு சொல்வாங்க.நீயும் வெட்கப்படுறே. எப்படின்னா,அய்யோ எனக்கு இப்படி ஒரு நிலமை ஏற்பட்டுப்போச்சேன்னு.
பரவாயில்ல.நீ படிச்ச பொண்ணு. நானும் உன் அளவுக்கு படிச்சவன்தான். எப்படின்னு கேட்கறியா?"ஆயிரம் புஸ்தகத்தை படிச்சவன விடஆயிரம் வயலை உழுதவன் அறிவாளி" ன்னு பெரியவங்க சொல்வாங்க.
(அடடா.என்ன ஒரு வார்த்தை மழை. அவர் பேசறத கேட்க கேட்கத்தான் எத்தனை ஆனந்தம்.)
பேசிக்கொண்டே போய் மனைவி என்ற உரிமையில் சகுந்தலாவை தொடப்போக,
http://i1065.photobucket.com/albums/...psqucpsswl.jpg
"தொடாதீங்ங்ஙக"
சகுந்தலாவின் ஆவேசக் கத்தத்தலில் மாணிக்கம் அதிர்ச்சியில் நிற்க,
"நீங்க ரோசமுள்ள ஆம்பளயாயிருந்தா என் உரிமையில்லாம என்னைத் தொடக்கூடாது "-
இது சகுந்தலா.
"நான் உன்ன தொட்டு தாலிகட்டின புருஷன்.உன்ன இப்ப நான் என்ன வேணாலும்செய்யலாம்.அதுக்கு எனக்கு உரிமையிருக்கு.என்னைக்கு நீ உண்மையா என்னை கணவனா ஏத்துக்கிறியோ அன்னைக்குத்தான் உன்னை நான் தொடுவேன்.இது என் அம்மா மேல ஆணை"-
இது மாணிக்கம்.
நாகரீகம் மனிதனை உயர வைத்தது.அதே நாகரிகம் மனிதர்களை தாழ்த்தவும் வைக்கிறது.நடந்து போனது சாஸ்திர சடங்கல்ல.அது நிர்ப்பந்தத்தால் நடந்த சம்பிரதாயம்.
...ஆகட்டும் பார்க்கலாம் ஆட்டத்தின் முடிவிலே.
பசி பொறுக்க மாட்டாமல் இரவில் யாருக்கும் தெரியாமல்பழைய சாதம் உண்ணும்படியான நிலைமை,அதை மாணிக்கம் பார்த்து கிண்டல் செய்வது,துணிகளை துவைத்து போடுமாறு மாணிக்கம் சொல்வது.,இது போன்ற நடத்தல்கள் சகுந்தலாவை அவள் வீட்டிற்கு ஓட வைக்கிறது. அவளின் அம்மா சொல்லும் சொற்கள் சகுந்தலாவை மாணிக்கத்திடமே திருப்பி அனுப்புகிறது.
இஷ்டப்படாத திருமணம் ஒரு பக்கம் நடந்திருந்தாலும்,மாணிக்கம் தன் குடும்பத்திற்கேற்றவாறு சகுந்தலாவை மாற்ற செயல்படுத்தும் சில கட்டுப்பாடுகள் சகுந்தலாவை நோக வைக்கின்றன.அது அவளை வேதனைப்படுத்தி ,இறந்துவிடலாம் என்று கிணற்றில் குதிக்க முயற்சிக்கும் போது,மாணிக்கம் வந்து தடுத்து விடுகிறார்.
என்னை ஏன் சித்ரவதை செய்கிறீர்கள் நான் இறந்து விடுகிறேன் என்று சகுந்தலா கூற,நீ இறந்து விட்டால் பழி என் மீதல்லவா வரும் எனவே கிணற்றில் தள்ளி விட்டுவிட்டு நீ நிம்மதியாக இரு என்று கிணற்றின் மேல் நின்று கொள்கிறார்.
பின்பக்கம் இருந்து தள்ள கைகளை கொண்டு வரும் சகுந்தலா தள்ளிவிட எத்தனிக்கையில்,
மனமா?
அது
மாறுமா?
யோசிக்கிறது மனம்.
சிந்தை தடுமாற பின் வாங்குகிறது கரங்கள்.
சகுந்தலாவின் மனம் தோற்றது.
தமிழ்ப்பண்பாடு வென்றது.
இந்த இடத்தில் மாணிக்கம் கூறும் வார்த்தைகள் கல்லையும் கரைக்கும்.சகுந்தலா என்ன இருந்தாலும் பெண்தானே.சற்றே கரைவது போல் தெரிகிறது.
மாணிக்கத்தின் சொற்கள் சகுந்தலாவிடம் மாற்றத்தை ஏற்படுத்துவது அவள் விழிகள் காட்டுகின்றன.
இவ்விடத்தில் சகுந்தலாவை தேடி வரும் காவேரியை ராஜவேலு மானபங்கப்படுத்தி விடுகிறான்.ஆவேசமடைந்த காவேரி
ராஜவேலுவின் வயலுக்கு "தீ"வைத்து விடுகிறாள்.அதை மாணிக்கம் பார்த்துவிடுகிறார்.காவேரியிடம் காரணம் கேட்க நடந்ததை கூறுகிறாள்.தீ பரவுவதை பார்த்து ஊர் மக்களுடன் அய்யாக்கண்ணுவும் சேர்ந்து வருவதைப்பார்த்ததும் மாணிக்கம் காவேரியின் கைகளில் இருந்து தீப்பந்தத்தை வாங்கி காவேரியை தப்பிக்க வைக்கிறார். தீப்பந்தத்துடன் மாணிக்கம் வருவதைப் பார்த்து ஊர்மக்கள் மாணிக்கம்தான் தீ வைத்தது என்று முடிவு செய்து பண்ணையாரின் வீட்டிற்கு பிடித்துச் செல்கின்றனர்.
அங்கே விசாரணை ஆரம்பிக்கிறது.
(சவாலே சமாளி முதல்பதிவு)ஆரம்பத்தில் குறிப்பிட்ட காட்சி இங்கேதான் அரங்கேற்றமாகிறது.
சாட்டையடியால் ரணமாகி,வலிகளுடன் கட்டிலில் படுத்திருக்கும் மாணிக்கத்தை பார்த்து கண்ணீர் விடுவதோடு,அவருடைய காலிலும் விழுந்து அழுகிறாள்.மாணிக்கத்தை தொட்டு தாய் மேல் இட்ட ஆணையை வாபஸ் வாங்க சொல்லுகிறாள்.
அப்புறம்,"
கேட்டுக்கோடி உறுமிமேளம்
போட்டுக்கோடி கோகோ தாளம்.
வ ண க் க ம்.
நடிகர்திலகத்தின் நடிப்பை விவரிக்க வேண்டுமென்றால் பிரேம் பை பிரேம் எழுத வேண்டி வரும்.அதற்கு பொருத்தமான வார்த்தைகள் தேடினால் பொழுதும் போதாது.
ஆரம்பகாட்சியில் பணிவுக்கு பணிவு,பதிலுக்கு பதில் அளிக்கும் அந்தபாந்தமான நடிப்பைச் சொல்வதா?
விஜயகுமாரியை கண்டிக்கும் போது கூட, காட்டும் கண்ணியத்தை சொல்வதா?
மரம் வெட்டும் போது ராகவனிடத்தில்
மறைத்து வைத்த பாசத்தை இயல்பாக வெளிப்படுத்துவதைச் சொல்வதா?
நாகேஷ் ஆடும் சகுனியாட்டத்தில்
பகவதியிடம் சவால் போடும் வித்தையைச் சொல்வதா?
அம்மாவாக வரும் காந்திமதியிடம் அவர் காட்டும் அந்நியோன்யமான அன்பைச் சொல்வதா?
தேர்தல்களத்தில் மஞ்சள் தாலியை கையில் வைத்து மதர்ப்பானநடை காட்டும் அந்த நடிப்பைச் சொல்வதா?
நம்பியாரை பொளந்து கட்டும் சண்டையில் அந்த ஆவேச நடிப்பைச் சொல்வதா?
தொடாதீர்கள் என்று சொல்லும் ஜெயாவிடம் காட்டும் அந்த ஆண்மையின் கம்பீரத்தைச் சொல்வதா?
தற்கொலைக்கு முயற்சிக்கும் ஜெயாவிடம் பேசும் அந்த சொற்பொழிவைச் சொல்வதா?
...அதனால்தான் கண்ணதாசன் சொன்னார்
http://i1065.photobucket.com/albums/...pslqvwvavt.jpg
$$$$$$$$$$$$ E N D $$$$$$$$$$$$$$$$$$
விரைவில் சென்னையில் நல்ல திரையரங்கில்!
நமது உள்ளம் கொள்ளை கொண்ட இரு மலர்கள்!
https://scontent-sin1-1.xx.fbcdn.net...63&oe=56EC4B5F
https://scontent-sin1-1.xx.fbcdn.net...71&oe=56ADF73B
வாசு ரெடியா?
அன்புடன்
நேற்று குருதட்சிணை பாடல் ஒன்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த பாடல் ஒன்றாம் கிரகம் அடி அதில் நான்காம் கிரகமடி என்ற வரியில் ஒரு நடை நடப்பாரே நடையா அது. அழகு நடை .
From Dinamani
மாடர்ன் தியேட்டர்ஸ் அலிபாபா அடுத்து வெளியானது. சேலத்தில் அதன் படப்பிடிப்பில் பானுமதிக்கு கிடைத்த இன்னொரு அற்புத இணை நடிகர் திலகம்!
முதன் முதலாக சிவாஜியைச் சந்தித்தது பற்றி பானுமதி விவரமாக கூறியுள்ளார்.
‘நெப்டியூன் ஸ்டுடியோவில் ஜூபிடர் பிக்சர்ஸ் ராணி படத்தில் நடித்த சமயம். ஒருநாள் அவர்களது ‘மனோகரா’ படக் காட்சிகளைப் பார்த்து விட்டு செட்டுக்குத் திரும்பினேன்.
அவரது நடிப்பு என்னைக் கவர்ந்து விட்டிருந்தது. அன்றைய தினம் அரங்கில் என்னுடன் நடித்தவர்களிடமெல்லாம், கணேசனின் திறமையைப் பற்றிச் சொல்லிக் கொண்டே இருந்தேன்.
சிவாஜிகணேசன் நடித்து நான் பார்த்த முதல் படம் இதுவே. பின்னர் நான் பார்த்த சினிமாக்களில் அவரது ஆற்றல் மேலும் மேலும் பெருகியது.
தவிர, ஒரு சிறந்த நடிகர் என்கிற முறையில் அவர் மீதுள்ள மதிப்பும் நம்பிக்கையும் என்னிடம் வளர்ந்தன. மனோகரா பார்த்துச் சில மாதங்கள் சென்றிருக்கும்.
சேலம் பக்கம் ஏதோ வேலையாக வந்த சிவாஜி, அன்றைக்கு மாடர்ன் தியேட்டர்ஸில் அலிபாபா ஷூட்டிங்கில் இருந்தார். அங்கே தான் அவரை முதன் முதலாக நேரில் பார்த்தேன்.
சிறிது நேரம் காமிராமேன் டபிள்யூ. ஆர். சுப்பாராவ் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்து விட்டு கணேசன் கிளம்பிச் சென்றார்.
அந்த சில நிமிஷங்களில்
என்ன அருமையாக நடிக்கிறார் இவர்! இவருடன் எப்படியாவது நான் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும். என்ற தன் விருப்பத்தை சுப்பாராவிடம் சொன்னாராம்.
சிவாஜி போன பிறகு, அதை என்னிடம் கூறிய சுப்பாராவ், ‘என்னம்மா உங்களுடன் நடிக்கணும்னு இவர் இப்படித் துடிக்கிறாரே!’ என்றார்.
சென்னைக்குத் திரும்பி வந்த சில நாள்களிலேயே அதற்குப் புதிய சந்தர்ப்பம் கிடைத்தது.
கல்கியின் ‘கள்வனின் காதலி’ கதையைப் படமாக்க என்னைத் தேடி வந்தார் ரேவதி ஸ்டுடியோ அதிபர், டைரக்டர் வி.எஸ். ராகவன்.
‘இந்தப் படத்தில் கதாநாயகி கல்யாணியாக நீங்கள் நடிக்க வேண்டும். முத்தையனாக சிவாஜி நடிக்கப் போகிறார்... உங்களுக்குச் சம்மதமா?’ என்றார்.
‘நான் என்ன சொல்வது...? கணேசன் மிகச் சிறந்த நடிகர். அவருடன் நடிப்பதில் எனக்கும் மகிழ்ச்சியே...! என உடனடியாக ஒத்துக் கொண்டேன்.- பானுமதி.
‘கள்வனின் காதலி’ 1955 தீபாவளி வெளியீடு. சென்னையில் கெயிட்டி, மகாலட்சுமி, சயானி, ராஜகுமாரி, பிரபாத் என ஐந்து தியேட்டர்களில் ரிலிசானது. அந்நாளில் அது ஓர் அபூர்வ நிகழ்வு. பிரம்மாண்டமான ஜெமினி சித்திரங்கள் கூட மூன்று அரங்குகளில் மட்டுமே நடைபெறும்.
அதே நாளில் சிவாஜியின் இன்னொரு படமான கோட்டீஸ்வரனும் வெளியானது. அதில் அவரது ராசியான பத்மினி ஜோடி. கோட்டீஸ்வரன் முழு நீள நகைச்சுவைச் சித்திரம். வீணை எஸ். பாலச்சந்தர் கூட சிரிப்பு காட்டினார்.
திரையிட்ட ஐந்திலும் கள்வனின் காதலி 80 நாள்களைக் கடந்து ஓடி நன்கு வசூலித்தது.
மூன்று தீபாவளிகளைக் கண்ட ஹரிதாஸ் பட இயக்குநர் சுந்தர்ராவ் நட்கர்ணியின், சொந்தத் தயாரிப்பு இயக்கத்தில் கோட்டீஸ்வரன் உருவானது. இருந்தும் கள்வனின் காதலி பிரமாதமாக ஓடியது. காரணம் சிவாஜி- பானுமதி இருவருமே விட்டுக் கொடுக்காமல் நடித்திருந்தார்கள்.
நூறாவது நாள் விழா எடுத்தால் ஐந்து தியேட்டர் ஊழியர்களுக்கும் போனஸ் தர வேண்டியிருக்கும். அதனால் கிடைத்த வசூலோடு ரேவதி ஸ்டுடியோ திருப்தி அடைந்தது. கள்வனின் காதலியில் பானுமதி பாடியதில் ‘வெயிலுக்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு’ சூப்பர் ஹிட்.
1955 தீபாவளி தொடங்கி தமிழ் சினிமாவில் ஆரோக்கியமான நடிப்புப் போட்டி முதன் முதலாக உருவானது.
‘கள்வனின் காதலியில்’ நடித்தது பற்றி நடிகர் திலகம்:
‘கள்வனின் காதலி’யில் பானுமதி ஹீரோயின் என்று டைரக்டர் ராகவன் சொன்னதும் எனக்குப் பெருமையாக இருந்தது. படப்பிடிப்புக்காகச் சென்றேன்.
ராகவன் என்னை பானுமதிக்கு அறிமுகம் செய்து வைத்தார். ஒரு பெரிய நடிகை, நான் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பிருந்தே, நடித்துப் பிரபலமாக விளங்கி வரும் சிறந்த நடிகை என்ற உணர்வோடு வணக்கம் என்றேன்.
அன்றைய தினம் நான் பெண் மாதிரியும், அவர் ஆண் பிள்ளை போலவும் பேசி கிண்டல் செய்யும் தமாஷான காட்சி ஒன்றை எடுத்ததாக நினைவு.
முந்நூறு படங்களில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஐம்பதுக்கும் மேற்பட்ட நாயகிகளுடன் நடித்தவர் சிவாஜிகணேசன். 1970ல் ராமன் எத்தனை ராமனடியோடு விரைந்து 140 படங்களை முடித்தத் திருப்தி !
சற்றே விரும்பித் தனது படப்பட்டியலை வாசித்து, அதில் ஒவ்வொன்றைப் பற்றியும் தன் எண்ணங்களை வரைந்தார்.
கள்வனின் காதலி பற்றிக் குறிப்பிடுகையில், ‘தலை சிறந்த நடிகையான பானுமதியுடன் இணைந்து எப்படி நடிக்கப் போகிறோம், என்று நான் பயந்து நடித்த படம்’ என்று எழுதினார். வேறு எந்த நடிகைக்கும் வழங்காத மதிப்பை பானுமதிக்குத் தந்தார்.
கிட்டத்தட்ட ஒரு தலைமுறை காலம்(1955 -1970) கடந்திருந்தும், அதே பழைய பணிவை, வி.சி. கணேசன் போன்ற யுகக் கலைஞரிடம் பெற பானுமதியால் மட்டுமே முடிந்தது!
‘மலைக்கள்ளன், - கள்வனின் காதலி’ எம்.ஜி.ஆர்.-சிவாஜியோடு முதன் முதலாக பானுமதி சேர்ந்து நடித்த இவ்விரு படங்களும் தமிழின் புகழ் பெற்றப் புதினங்கள்.
இரு கதைகளிலும் கதாநாயகன் திருடன். ஆனால் மிகவும் நல்லவன். இரண்டிலும் ஒரே நாயகி பானுமதி. பூங்கோதைக்கும், கல்யாணிக்கும் நடிப்பில் எத்தனை எத்தனை வித்தியாசம் காட்டி இருக்கிறார் பானுமதி!
ஆதவன் ரவி
தங்களுடைய நினைப்போம் மகிழ்வோம் தொடரில் நம் அனைவருக்குமே பங்கு கொள்ள விருப்பமாக உள்ளது.
இத்தொடரில் துணைப் பதிவுகளாக அடியேனும் சிலவற்றை அவ்வப்போது பகிர்ந்து கொள்கிறேன்.
இமயம் .. க்ளைமாக்ஸுக்கு முந்தைய காட்சியில் எல்லோரும் தலைவரை ஏளனமாய்ப் பேசி விட்டுப் போவார்கள். கடைசியாக அவருடைய மனைவியும் குழந்தையும் போவார்கள். அப்போது மனைவியை எதிர்பார்த்து ஒரு விஷமப் புன்னகை புரிந்தவாறே அவள் வயிற்றில் அலட்சியமாகத் தட்டி விட்டு போ என கையால் சைகை காட்டுவாரே...
ஆஹா... என்ன ஒரு அட்டகாசமான உடல் மொழி..
https://www.youtube.com/watch?v=u3q80QDiwUQ
16.18 நிமிடங்களில் பார்க்கவும்.
அண்மையில் திருச்சியில் நடைபெற்ற நடிகர்திலகத்தின் 88-வது பிறந்தநாள் விழாவின் பத்திரிக்கை செய்திகள்....
http://i1234.photobucket.com/albums/...pssun9v7ik.jpg
http://i1234.photobucket.com/albums/...psxs03vkyv.jpg
http://i1234.photobucket.com/albums/...ps3z3zpk5n.jpg
http://i1234.photobucket.com/albums/...psacmwriu6.jpg
Film list contd... http://i1065.photobucket.com/albums/...psfycnt0i7.jpg