THE HINDU (17/01/16)
http://i68.tinypic.com/m9y6av.jpg
http://i65.tinypic.com/2j127og.jpg
http://i63.tinypic.com/2ai2cm9.jpg
Printable View
THE HINDU(Cinema Plus)
http://i67.tinypic.com/15ocj60.jpg
இதிலும் புதிய சாதனை!
மக்கள் திலகம் பிறந்த நாளை முன்னிட்டு தொலைக்காட்சிகளில் ஒரே நாளில் அவர் நடித்த 14 படங்கள். ஒரு நடிகருக்கு ஒரே நாளில் அவர் நடித்த 14 படங்கள் தொலைக்காட்சிகளில் காட்டியதில்லை. இதிலும் சாதனை படைத்து விட்டார் புரட்சித் தலைவர்.
ஒரே நேரத்தில் பல படங்கள் பல சேனல்களில் ஓடியதால் எந்த படத்தை பார்ப்பது, எந்த படத்தை விடுவது என்றே எனக்கு தெரியவில்லை. ஒன்றை பார்க்கும்போது அங்கே எந்த சீன் வரும் என்று நினைத்து சேனலை திருப்புவது, இப்படியே மாற்றி, மாற்றி பார்த்தேன்.
பல வகையான இனிப்புகள் இலையில் பரிமாறினால் ஒன்றையே தின்று தீர்த்தால் மற்ற இனிப்புகளை சாப்பிட முடியாது என்பதால், எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் சாப்பிடுவதை போல ரசித்தேன்.
தொலைக்காட்சிகளில் திரையிட்ட படங்களில் எனக்கு பிடித்த காட்சிகள்.
1. ஊருக்கு உழைப்பவன்: மக்கள் திலகம் மிக அழகாக தோன்றுவார். அழகெனும் ஓவியம் இங்கே... பாடலில் அழகு ஓவியமாகவே இருப்பார். குழந்தை இறந்ததை அறிந்ததும் வெறும் தூளியை அணைத்துக் கொண்டு அழும் சீன் (பின்னணியில் இரவுப் பாடகன்.. பாடல்) உள்ளத்தை உருக்கும். வாணி ஸ்ரீ பொருத்தமான ஜோடி. இதுதான் முதல் ராத்திரி பாடல் சூப்பர். வாணி ஸ்ரீ நல்ல அழகுதான். கூர்மையான மூக்கும் அகன்ற விழிகளும் கவரும். என்றாலும் வழக்கமாக அவர் மண்டைக்கு மேல் இரண்டு மடங்கு பெரிதாக இருக்கும் கொண்டை கொஞ்சம் பயமுறுத்தும். அந்த மண்டையும் கொண்டையும் இந்தப் படத்தில் இல்லாமல் இருப்பது ஆறுதல்.
2. நவரத்தினம்: தமிழ் படத்தில் முழு நீள இந்திப் பாடல் இடம் பெற்ற புதுமை. தான் திருடன் இல்லை என்பதை லதாவிடம் நிரூபிக்க எரியும் கொள்ளிக்கட்டையை சிரித்த முகத்தோடு பிடிக்கும் ஸ்டைல். குருவிக்கார மச்சானே... டான்ஸ். இயல்பாக வீணை வாசிக்கும் அழகு.
3:குமரிக்கோட்டம்: அசோகனை சிரிக்க வைப்பதற்காக பல வகையான மாறு வேடம் போடும் பாடல். அசோகன் சிரிக்காமல் இருந்ததால் போட்டி நிபந்தனைப்படி பணம் கிடைக்காதே என்று அழும் உருக்கம். எங்கே அவள்? பாடலில் ஒயிட் சூட்டில் அசத்தும் ஸ்டைல்.
4.நல்லநேரம்: குழந்தையை யானை ராமு கொல்ல முயன்றதாக கே.ஆர்.விஜயா சொன்னதைக் கேட்டு சங்கிலியால் யானையை அடித்து விட்டு பின்னர் பாசத்தால் ‘ராமு...’ என்று யானையை கட்டிப்பிடித்து அழும் காட்சி. ஓடி ஓடி உழைக்கணும்.. பாடலில் டூப் இல்லாமல் மூன்று முறை அடுத்தடுத்து அடிக்கும் பல்டி. பெண் பார்க்கப் போகும் முன் கண்ணாடியில் பார்த்தபடி நெற்றியில் சுருளும் முடியை தட்டி விட்டு அழகு பார்க்கும் ஸ்டைல். கம்பீரமாக சென்று அசோகனிடம் பெண் கேட்பதற்குள் திக்குமுக்காடும் அழகு.
5. குடியிருந்த கோயில்: அறிமுக காட்சியில் மின்னல் வேக சண்டை. தாயின் படத்தை மிதித்த நம்பியாரை கோபத்தால் அடித்து விட்டு, அவர் தன்னை சரிகட்ட முயல்வதை புரிந்து கொண்டு, கோபத்தை அடக்கி, லேசாக சிரித்து உனக்கும் நான் அப்பன்டா என்பது போல, ‘பா......ஸ்’ என்று இழுத்து நக்கலாக கூப்பிடும் அட்டகாசம்.
6.அடிமைப்பெண்: ஒக்கேனக்கலில் பண்டரிபாயை தன் தாய் என்று அறிந்து மலைச்சரிவில் பாய்ந்து சென்று அவரிடம் பேசியும், முகத்தை பார்க்க முடியாமல் காரணம் தெரிந்ததும் குமுறும் பரிதாபம். தாயிடம் விடைபெறும்போது ‘என்னை மறந்துடாதீங்கம்மா..’ என்று கும்பிடும்போது நாம் உருகுவோம். தாயில்லாமல் நானில்லை.... பாடலில் பறவை தன் குஞ்சுக்கு இரை ஊட்டும் பொருத்தமான இயல்பான அசத்தும் ஷாட். ஈட்டி முனை மீது கட்டப்பட்ட வலையில் ஒரு காலை கட்டியபடி அசோகனுடன் மோதும் வாள் சண்டை. கிளைமாக்ஸ் சிங்க சண்டையும் அதை மக்கள் திலகம் சிறு சிறு ஷாட்களாக பிரித்து வேகமாக படமாக்கியிருக்கும் விதம் பிரமிப்பு.
7. இதயவீணை: விவேகானந்தர் வேடத்தில் தன் வீட்டுக்கு வந்து தந்தையாக வரும் தன் அண்ணன் சக்ரபாணி அவர்களிடம் வாக்குவாதம் செய்வது. காஷ்மீர்... பாடலின் நடனம். கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, படம் வெளிவருவதற்குள் இடைப்பட்ட காலத்தில் எடுக்கப்பட்ட ‘ஒரு வாலும் இல்லே..நாலு காலும் இல்லே...’ பாடலை பொருத்தமாக படத்தில் புகுத்திய சாமர்த்தியம்.
8.விவசாயி: வயல்காட்டில் பேசிக்கொண்டே கடலையை இயல்பாக தின்னும் அழகு. உள்ளங்கையில் உள்ள கடலையின் தோலை ஊதும் ஸ்டைலே தனி. என்னம்மா..சிங்காரக்கண்ணம்மா பாடலில் சிறிய டேபிளில் ஆடும் புதுமை.
9.உலகம் சுற்றும் வாலிபன்: கேட்கவே வேண்டாம். எதை சொல்வது. புத்தர் கோயில் சண்டை, ஜஸ்டினுடன் சண்டை, தன்னை திருமணம் செய்யலாம் என்று நினைத்து ஏமாந்த மேட்டா ரூங்ரட்டாவிடம் காட்டும் அனுதாபம் கலந்த பரிவும் எல்லாருக்கும் பொருத்தமான அறிவுரையும். பாடல்கள், எக்ஸ்போ 70யை கேமராவில் அடக்கி மக்கள் கண்முன் காட்டிய திறமை.
10. அரசகட்டளை: சரோஜா தேவியின் இருப்பிடமான குகைக்கு வந்து நம்பியாரிடம் ‘என் நினைவா வெச்சுக்கங்க.‘ என்று கண் கட்டிய நிலையில், கத்தியை வீசிவிட்டு செல்லும் அபார ஸ்டைல். வாள் சண்டைகள். ஆடிவா... பாடலில் பாடிக் கொண்டே சண்டைக் காட்சி புதுமை. வேகமோ அருமை.
11.பறக்கும் பாவை: கண்ணைக் கவரும் கலரில் எல்லா பாடல் காட்சிகளும். புத்தூர் நடராஜனுடன் மோதும் காட்சி அனல் பறக்கும். வீட்டை விட்டு போன சரோஜாதேவியை சர்க்கஸில் பார்த்தவுடன் மக்கள் திலகம் முகத்தில் காட்டும் மகிழ்ச்சியும் நிம்மதியும் கலந்த முகபாவம். முத்தமோ... பாடலில் காஞ்சனாவுடன் நடனம் சூப்பர். டிரஸ் அமர்க்களம்.
12.நாளை நமதே: சங்கர் பாத்திரத்தின் சோகத்தையும் பழிவாங்கும் உணர்வையும் காட்டும் ஆழமான அமைதியான அழுத்தமான நடிப்பு. ‘நான் ஒரு மேடைப்பாடகன்...’ பாடலில் மக்கள் திலகத்தின் டிஸ்கோ நடனம். ‘நாளை நமதே..’ பாடலில் இரண்டு தம்பிகளும் சேர்ந்து ஆரத்தழுவிக் கொள்ளும்போது அவர்களை நாமும் அவர்களை தழுவிக் கொள்ள முடியவில்லையே என்று ஏக்கமாக பார்க்கும் பார்வை. இருந்த இடத்தில் இருந்தே அவர்களுக்கு பிளையிங் கிஸ் கொடுத்து விட்டு வில்லன் ஆட்கள் கவனிக்கிறார்களா? என்று சட்டென திரும்பி சுதாரிக்கும் வேகம். லவிங் ஈஸ் தி கேம்... பாடலில் மியூசியத்தில் நடராஜர் சிலையை திருடச் செல்லும்போது காட்டும் சுறுசுறுப்பு. ‘என்வழி தனி வழி’ என்று அப்போதே முன்னோடியாக பேசிய பஞ்ச் டயலாக். முதன் முதலில் கான்டாக்ட் லென்ஸ் அணிந்து நடித்தார்.
13:ரகசிய போலீஸ்: எல்லாப் படத்திலும் மக்கள் திலகம் ஜேம்ஸ்பாண்ட் போல டிப் டாப்பாக இருப்பார். இதில் ஜேம்ஸ்பாண்டாகவே நடிக்கிறார் என்றபோது ஸ்டைலுக்கும் டிரஸ்சுக்கும் கேட்க வேண்டுமா? கண்ணில் தெரிகின்ற வானம்... பாடலுக்கு ஸ்டைல் சக்ரவர்த்தியின் நடனமும் ஸ்டெப்பும் பாராட்ட வார்த்தைகள் இல்லை. அசோகனுடன் அறிமுகத்தின்போது பேசிவிட்டு திரும்பும் அசோகனின் கையை பிடித்து இழுத்து அவரது முகத்தை பார்த்து சிரிக்கும் அற்புதம். அசோகன் கொடுத்து வைத்தவர்.
14:பணக்கார குடும்பம்: பறக்கும் பந்து பறக்கும்... பாடியபடியே டென்னிஸ் பந்தை அடிக்கும் லாவகம். காலை உயரே தூக்கி அந்த இடைவெளியில் பந்தை அடிக்கும் ஸ்டைலை எல்லாம் அப்போதே செய்து விட்டார் மக்கள் திலகம். கிளைமாக்சில் மனோகருடன் ஜீப் ஒட்டியபடியே போடும் சண்டை. காலாலேயே ஸ்டீரிங்கை திருப்பி ஓட்டும் கலக்கல். ‘ஒன்று எங்கள் ஜாதியே...’ கருத்துள்ள பாடலில் ‘எங்கள் ஆட்சி என்றும் வாழும் இந்த மண்ணிலே..’ என்ற முத்தாய்ப்பான தீர்க்க தரிசனம்.
வாழும்போதும் வாழ்க்கைக்கு பிறகும் நாட் அவுட்!
மக்கள் திலகத்தின் புகழ் நாளுக்கு நாள், ஆண்டுக்கு ஆண்டு மேலும் மேலும் பரவி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் புரட்சித் தலைவர் நினைவு நாளில் லட்சக்கணக்கானோர் அந்த நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துவதும், பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செய்வதும் அதிகரித்து வருவதே உதாரணம்.
சென்ற டிசம்பர் 24-ம் தேதி மறைந்தும் மறையாத பொன்மனச் செம்மலின் நினைவிடத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடினர். வெளியூர்களில் இருந்தெல்லாம் சென்னைக்கு வந்துள்ளனர். நமது தொண்டர்களின் அணிவகுப்பால் சென்னையே திக்குமுக்காடியிருக்கிறது. அன்பு சகோதரர் பேராசிரியர் செல்வகுமார் கூட என்னிடம் தெரிவித்தார். காலை 11 மணிக்கு நினைவிடத்தின் வாயிலில் சென்ற அவரது குழுவினர் உள்ளே செல்வதற்கே பிற்பகல் 2 மணி ஆனதாம். ஏற்கனவே உள்ளே இருந்தவர்கள் மற்றும் செல்வகுமார் குழுவினருக்கு முன்பே வந்து காத்திருந்த தொண்டர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி விட்டு சென்ற பிறகே இவர்கள் செல்ல வேண்டியிருந்ததால் அவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டியிருந்திருக்கிறது.
முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வந்து சென்ற பிறகும் கூட்டம் அப்படியே இருந்திருக்கிறது. கட்சிக்காரர்கள், ஆதாயம் கருதி வருபவர்கள் என்றால் முதல்வர் சென்ற பிறகு அந்த கூட்டம் கலைந்திருக்க வேண்டும். மாலை வரை சாரி சாரியாக மக்கள் நம் புரட்சித் தலைவருக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.
சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் அவரது சிலைகளுக்கும் படங்களுக்கும் மாலை அணிவித்து மக்கள் நினைவு நாளை அனுசரித்தனர்.
அந்த நிகழ்ச்சிகளை சுற்றி அலைந்து படம் பிடித்து நமது திரியில் பதிவிட்ட நண்பர்கள் லோகநாதன். வேலூர் ராமமூர்த்தி, ரவிச்சந்திரன், மதுரை படங்களை அனுப்பிய எஸ்.குமார், புதுவையில் அஞ்சலி படங்களை பதிவிட்ட கலியபெருமாள் மற்றும் நண்பர்களுக்கு நன்றி.
அதே நிலைமைதான் நேற்றும். மக்கள் திலகத்தின் 99 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் அதிமுக தலைமைக் கழகத்தில் தலைவரின் சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா மாலை அணிவித்து மரியாதை செய்தார். சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் மக்கள் திலகத்தின் சிலைகளுக்கு ரசிகர்களும் தொண்டர்களும் பொதுமக்களும் மாலை அணிவித்தும், சாலைகளில் ஆங்காங்கே அவரது திரு உருவ படங்களுக்கு மாலை சூட்டியும் தேங்காய், பழம் உடைத்து வைத்து தங்கள் அன்பையும் பக்தியையும் காட்டியுள்ளனர். தமிழகம் முழுவதும் போஸ்டர்கள் அடித்தும் ஒட்டியுள்ளனர்.
அதுபற்றிய படங்களை நண்பர்கள் பதிவிடுவார்கள். அதற்காக அவர்களுக்கு முன்னதாகவே என் நன்றியை தெரிவிக்கின்றேன்.
தமிழகத்தில் மட்டுமில்லாமல், பெங்களூரிலும் பல இடங்களில் பொன்மனச் செம்மலின் திருஉருவ படங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்ததை நான் பார்த்தேன். மக்கள் திலகத்தின் பெயரில் ஃபுட்பால் கிளப் ஒன்று உள்ளது. அவர்களது லோகோ (logo)வே பணம் படைத்தவன் படத்தில் மக்கள் திலகம் ஃபுட்பால் வீரராக தோன்றும் புகைப்படம்தான் வைத்திருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் உள்ள புரட்சித் தலைவரின் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக பெங்களூரில் இருந்து எனக்குத் தெரிந்த நண்பர்கள் உட்பட 200 பேர் டெல்லி புறப்பட்டு சென்று, முறையான அனுமதி பெற்று புரட்சித் தலைவர் சிலைக்கு மாலையும் அணிவித்தனர்.
கட்சியில் முக்கியத்துவம் பெற வேண்டும் என்றால் இப்போது இருக்கும் தலைமையை திருப்திப்படுத்தினால் மட்டும் போதும். ஆனால், உடலால் மறைந்து 28 ஆண்டுகள் ஆனபோதும் புரட்சித் தலைவரை மக்கள் கொண்டாடுகிறார்கள் என்றால் எந்த பிரதிபலனும் அரசியல் எதிர்பார்ப்பும் இல்லாமல் அவரை தெய்வமாக கும்பிடும் கோடிக்கணக்கான மக்களின் அன்புக் கடல்தான் இந்தக் கூட்டம். இந்த கடலின் அலை என்றும் ஓயாது.
வாழும் போது சிலர் கொண்டாடப்படுவார்கள். அவர்கள் மறைந்த பிறகு காலப் போக்கில் மக்கள் அவர்களை மறந்து விடுவார்கள். வாழும் போது சிலரை மக்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால், மறைந்த பிறகு அவருக்கு புகழ் பெருகும். எடுத்துக்காட்டாக மகாகவி என்று பாரதியார் இப்போது எல்லாராலும் கொண்டாடப்படுகிறார். ஆனால், வாழும் காலத்தில் அவரை பெரிய அளவில் கொண்டாடவில்லை. அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் வெறும் 11 பேர்.
ஆனால், வாழும் போதும் மக்களால் கொண்டாடப்பட்டு, வரலாறாக வாழ்ந்து, உடலால் மறைந்த பிறகும் இன்றும் மக்களால் நேசிக்கப்படும் பெருமை புரட்சித் தலைவருக்கு மட்டுமே உண்டு.
பெங்களூரில் மக்கள் திலகத்தின் பெயரில் ஒரு கிரிக்கெட் சங்கமும் உள்ளது. 99 வது பிறந்த நாளை ஒட்டி அவர்கள் அடித்திருந்த போஸ்டர் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது. அதில் வாசகம் ‘தலைவா! இன்னும் 1 ரன்தான் செஞ்சுரிக்கு, நாட் அவுட்’ என்று இருந்தது. பொதுமக்கள் ரசித்து பாராட்டினர்.
வாழும்போதும் வாழ்க்கைக்குப் பிறகும் சகாப்தமாக திகழும் புரட்சித் தலைவர், அவரது படத்தின் பெயரால் சொன்னால் ‘நேற்று இன்று நாளை’ என்றுமே பொன்மனச் செம்மல் ‘ நாட் அவுட்’.
மக்கள் தலைவனுக்கு இன்று 99 வது பிறந்த நாள். போற்றுவோம் அவர் நாமம்.
எங்கள்
தங்கத் தலைவனுக்கு
நூறு அகவை
மங்காப் புகழ்
மன்னவனுக்கு
இன்று
நூறு அகவை
வங்கக் கடலோரம்
வதிந்து
உறையும்
உத்தமனுக்கு
இன்று
நூறு அகவை
இந்து மகா
சமுத்திரம்
தந்த
தாயின் தலை
மகனுக்கு
இன்று
நூறு அகவை
வள்ளலாய்
வாழ்ந்த
வள்ளலுக்கு
நூறு அகவை
எங்கள்
அண்ணனுக்கு
இன்று
நூறு அகவை
தமிழகத்தின்
மங்காத
மன்றம் தந்த
தமிழக
முதல்வனுக்கு
இன்று
நூறு அகவை
ஈழத்து
தமிழர்
துயர் துடைக்க
உள்ளன்போடு
உதவிய
ஒரே
இந்தியத்
தலைவன்
முதல்வன்
தமிழக
முதலவர்
எம் ஜி ராமச்சந்திரனுக்கு
இன்று
நூறு அகவை
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...ef&oe=574A303E
காணும் இடமெல்லாம் மக்கள் திலகம், ஆம் "காணும் பொங்கல் "
இதைவிட நமக்கு இந்த உலகில் என்ன மகிழ்ச்சி உண்டு இரத்தத்தின் இரத்தமே
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...22&oe=5706CCD7
வினோத்.
நான் சமீபத்திலே நமது திரியில் உருப்பினராக சேர்ந்தால் கூட 3 வருசமாக திரியை பார்த்து வருகிறேன். மலர் மாலை- 2 விளம்பரத்தை இதுவரை பல முறை நீங்கள் விரைவில் வருகிறது என்று போட்டதால்தான் சலிப்பாகி, புத்தக வெளியீட்டு தேதி நிச்சயம் ஆனாவிட்டு போடுங்கள் என்றேன்.
அதற்கு போய் கோவிக்கிறீர்கள். எனக்கு உங்களை யாரென்றே தெரியாது. உங்களுக்கும் என்னை தெரியாது. ஆனால், என் உள்நோக்கம் புரிகிறது என்று சொல்றீர்கள். என் உள்நோக்கம் என்ன? சொல்லுங்கள் தெரிஞ்சுக்கறேன்.
என் தரத்தை உயர்த்தாது என்று கூறுகிறீர்கள். யாராவது புரட்சித் தலைவரை தாக்கினால், எரும மாட்டு மேல மழை பெஞ்சா மாதரி என்னால் இருக்க முடியாது. அப்படி பேசாமல் இருந்தால்தான் தரம் என்றால் எனக்கு அது வேண்டாம்.
இன்று கூட மாற்றுத் திரியில் ஒரு அறிவிலி, மக்கள் தலைவர் பொன்மனத் தலைவன் நடித்து வெற்றி பெற்ற என் தங்கை படம் ஓடவில்லை என்று தமிழக அரசியல் வார பத்திரிகையில் வெளியானதை போட்டிருக்கிறார்கள். என் தங்கை படம் பெரிய வெற்றி பெற்ற படம். அந்த தொடரில் அந்த அறிவிலி ‘வீரா’ படத்தில் எம்ஜிஆர் தலைகாட்டினார் என்றும் சொல்லியுள்ளது. வீரா படம் ரஜினி காந்த் நடித்த படம். வீரா என்ற படத்தில் தலைவர் நடிக்கவே இல்லை. இந்த புளுகுணிகளுக்கு பதில் சொல்லாமல் இருக்க என்னால் முடியாது.
99வது பிறந்த நாள் காணும் புரட்சித் தலைவர் புகழ் வாழ்க.
செய்திகுறிப்பு:புதுடெல்லி தமிழ்ச்சங்கத்தில் மக்கள்திலகத்தின் பிறந்தநாள்விழா
இன்று (17-01-2016 - ஞாயிற்றுக்கிழமை) காலை பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 99-வது பிறந்த நாளை முன்னிட்டு, புதுடெல்லி தமிழ்ச்சங்கத்தில்
பொன்மனச்செம்மல், புரட்சித் தலைவரின் நிலைத்த புகழுக்குக் காரணம் அவரின் திரைப்பட காதல் பாடல்களா? சமுதாயப் பாடல்களா? என்ற தலைப்பில் கலைமாமணி, பேராசிரியர், முனைவர் கு. ஞானசம்பந்தன் அவர்களின் தலைமையில் சிறப்பு இயல், இசை பட்டிமன்றம் நடைபெற்றது. பேராசிரியை, டாக்டர் எஸ். மனோன்மணி காதல் பாடல்களே என்ற தலைப்பிலும், கவிஞர் என். மலர்விழி சமுதாயப் பாடல்களே என்ற தலைப்பிலும் பேசினார்கள். சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு என். கண்ணன், இணைச் செயலாளர்கள் திருமதி சத்யா அசோகன், திரு பி. குருமூர்த்தி, செயற்குழு உறுப்பினர்கள் திருமதி சீதாலட்சுமி ராமச்சந்திரன், திரு கே.எஸ். முரளி, திரு ஜி. பாலுச்சாமி, காத்திருப்பு உறுப்பினர் திரு பா. குமார், தில்லி முத்தமிழ்ப் பேரவையின் பொதுச் செயலாளர் திரு இரா. முகுந்தன் மற்றும் குர்கான் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு சக்தி பெருமாள் ஆகியோர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி, குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கிவைத்தார்கள்.
http://i65.tinypic.com/29n9vki.jpg
படம்-தகவல் உதவி:மேஜர்தாசன்
மக்கள் திலகத்தின் தீவிர பக்தர் தெய்வத்திரு ராஜ்குமார் அவர்களின் மறைவு உலகெங்கும் உள்ள எம். ஜி. ஆர். பக்தர்களுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவரைப்போல் ஒரு செயல் வீரனை பார்ப்பது அரிது. அவரின் 16வது நாள் நினைவு தினம் வரும் 21ம் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது. அதனையொட்டி பிரசுரிக்கப்பட்ட "உத்திரகிரியை" பத்திரிகை.
திரியின் பதிவாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் கவனத்துக்கு :
http://i67.tinypic.com/wjcu1t.jpg