https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...e3&oe=5A112A9A
Printable View
Puvai Srr
அமரர் எம்எஸ்வி அவர்கள் சொல்லக் கேட்டது:
பட்டிக்காடா பட்டிணமா படத்தில் வரும் கேட்டுக்கோடி உருமிமேளம் பாடலுக்கு ட்யூன் போட்டு situation சொல்லியும் கவியரசுக்கு முதலடி வரவே இல்லை. அப்போது பக்கத்து அறையில் ஜெயலலிதாவோடு பேசிக்கொண்டிருந்த நடிகர்திலகம் வெளியே வந்து கேட்டுக்கோடி உருமி மேளம்னு வெச்சிக்குங்கப்பா, சரியா இருக்கும் என்று சொல்ல அதையே அவர்கள் வைக்க பாட்டு படத்தைப் போல சூப்பர் ஹிட்டானது. படத்தின் வெற்றிவிழாவில் சிவாஜி அந்தப் பாட்டுக்கு முதலடி எடுத்துக் கொடுத்தது யார் தெரியும...ா என்று கேட்க எம்எஸ்வி, கவியரசு முதலானோர் சிவாஜி எப்போதும் தன்னைப்பற்றி பொதுமேடையில் பெருமை பேசிக்கொள்ள மாட்டாரே என்று வினோதமாக அவரைப் பார்க்க சிவாஜி அந்த முதலடி எடுத்துக்கொடுத்தது நம்ம அம்முதான் என்று சொன்னாராம். அதாவது அந்த முதல்வரியை ஜெ சிவாஜியிடம் சொல்ல அவர் வந்து மற்றவர்களிடம் சொல்லியிருக்கிறார். மற்றவர்களின் பெருமையில் ஒருபோதும் பங்கு கேட்காத மாபெரும் கலைஞன் சிவாஜி என்று உணர்த்த மெல்லிசை மன்னர் இந்த நிகழ்ச்சியை கூறினார். அதோடு அந்தப் பாடலின் வெற்றியில் ஜெ வுக்கும் பங்குண்டு என்பதையும் சொல்லாமல் சொல்லிவிட்டார் நடிகர் திலகம்!
Nagarajan Velliangiri
· 5 hrs
அன்பு நெஞ்சங்களுக்கு இனிய காலை வணக்கம்.
உலகில் வெவ்வேறு மூலைகளில் வெவ்வேறு நாடுகளில் விரிந்து பறந்து பிரிந்து இருக்கும் நடிகர் திலகத்தின் அன்பு உள்ளங்களுடன் நம் குழுவின் முகநூல் மூலமாகத் தினமும் தொடர்பில் இருந்து திலகம் சம்பந்தப்பட்ட பல செய்திகளையும், புகைப்படங்களையும், வீடியோக்களையும், கருத்துக்களையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொள்கிறோம், மிகவும் மனமகிழ்ச்சி கொள்கிறோம்.அதே மாதிரி, தமிழகத்தின் மூலை முடுக்குகளில் உள்ள நம் நண்பர்களுடனும் தொடர்பில் இருந்து சுவைகளைப...் பங்கிப் பகிர்கிறோம். மகிழ்ச்சி.
நம் குழுவில் பொள்ளாச்சிப் பகுதியைச் சேர்ந்த நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலானோர் முகமறியா நண்பர்களாகவே இருக்கின்றனர்.அது மிகவும் வருத்தத்திற்கு உரிய விசயம். உலகம் முழுவதும் தொடர்பு, உள்ளூருக்குள் தொடர்பின்மை என்றால் எப்படி ?
எனவே, பொள்ளாச்சி நண்பர்களே! திலகத்தின் புகழ் பரப்பும் இக்குழுவில் உள்ள நாம் அனைவரும் கண்டிப்பாக ஒன்று சேர வேண்டும். முகநூல் வாயிலாக மட்டும் அன்றி, நேரிலும் அனைவரும் அடிக்கடி சந்தித்து, ஆக்க பூர்வமான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.மற்ற ஊர்களில் நம் திலகத்தின் படங்கள் அடிக்கடி திரையிடப் படுவது போல , நம் பொள்ளாச்சியிலும் திரையிடப்பட வேண்டும். மதுரை , நாகர்கோயில் நண்பர்களைப் போலத் திலகத்தின் எல்லா ரசிகர்களும் மகிழ வேண்டும் , பொள்ளாச்சி நண்பர்கள் உட்பட. அதற்கான முயற்சிகளில் நாம் ஈடுபட வேண்டும்.
மேலும் பல ஊர்களில் இருந்தும் நம் நண்பர்கள் பொள்ளாச்சி வருவதற்கு விருப்பம் தெரிவிக்கின்றனர். அவர்களுடன் சந்திப்பும், கலந்துரையாடலும், அனுபவப் பரிமாற்றங்களும் நடந்தால் இன்னும் சுவையாக , மனதுக்கு மகிழ்வாக இருக்கும்.
எனவே, பொள்ளாச்சி மற்றும் சுற்றுப் பகுதியில் இருக்கும் திலகத்தின் உள்ளங்கள் அனைவருக்கும் என் அன்பு வேண்டுகோள் இதுதான். நமக்குள் இனிய தொடர்பை ஏற்படுத்த வேண்டும் எனில், தயவு செய்து தங்கள் பெயர், தொடர்பு எண் இரண்டையும் நம் குழுவில் பகிர்ந்து கொள்ளுங்கள்.நம் குழுவில் இல்லாத, ஆனால் திலகத்தின் அன்பு நெஞ்சங்களாக விளங்கும், நீங்கள் அறிந்த உங்கள் நண்பர்களின் பெயர், மற்றும் தொடர்பு எண்களைப் பகிர்ந்தால் இன்னும் உதவியாக இருக்கும்.இதன் மூலம் நம் தொடர்பு எளிதாகும்.
என்ன நண்பர்களே! விரைவில் இணைவோமா ?
நன்றி, வணக்கம்.
Nagarajan Velliangiri
· 5 hrs
விதை ஒன்று போடச் சுரை ஒன்றா முளைக்கும் ?
விதை...
யார் போட்டது ?
நம் ஐயன் , அன்புத் திலகம் போட்டது.
அன்னை இல்லத்தின் ஆணிவேர் கமலா அம்மா அவர்கள் போட்டது....
அன்னை இல்லத்தின் மேல் லட்சக்கணக்கான கண்மணிகள் கொண்டுள்ள அன்பையே உரமாகக் கொண்டு வளர்ந்தது.
தன் முதல் படத்திலேயே அந்த கணேசன் அள்ளிய 'சக்சஸ்' போலவே, தன் முதல் படத்திலும் அந்த 'கணேசப் பெருமானையே' மாணிக்கம் என்ற உயிர்த்துணையாகக் கொண்டு 'சக்சஸ்' பெற்ற விக்ரம் பிரபு தம்பிக்கு, நெஞ்சம் நிறைந்த அன்பு வாழ்த்துக்கள்.
இதுவே துவக்கமாக இருக்கட்டும்.பரிசுகளும் பட்டங்களும் மற்றவர்களுக்கு வேண்டுமானால் பெருமையாக இருக்கலாம். ஆனால் நம் அன்னை இல்லத்துக்கு வருவதால் அப்பரிசுகள்தான் பெருமை அடைய வேண்டும்.
நாம் எல்லோரும் இந்த சமயத்தில் மகிழ்வதைப் போலவே விண்ணுலகில் இருந்து திலகம் அவர்களும் இந்தச் சமயத்தில் மகிழ்ந்து ஆசிர்வதிப்பார் என்பதில் சற்றும் ஐயமில்லை.
இதில் இன்னொரு மகிழ்ச்சியான விசயம். திலகத்தின் அன்பு வெறியன், அன்பு அண்ணன் YG மகேந்திரன் அவர்களுக்கும் தமிழக அரசின் பரிசு அறிவிக்கப் பட்டிருப்பது நம் அனைவருக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி.
From Vikatan Emagazine,
https://scontent.fdoh1-1.fna.fbcdn.n...a5&oe=59FE8599
Most of songs are NT's song. Great.
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...83&oe=5A05857F
Sundar Rajan
அன்பு இதயங்களே,
ஜூலை 21
மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின்
நினைவுநாளை முன்னிட்டு
... மதுரை சென்ட்ரல் திரையரங்கில்
தினசரி 4 காட்சிகளாக வெற்றிநடை போட வருகிறார்
நமது நடிகர்திலகம்
007 ஜேம்ஸ்பாண்டாக.....
தொடர்ந்து மதுரையில்
சாதனை படைத்து வரும்
மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின்
சாதனை பட்டியலில்
வைர நெஞ்சமும் இடம் பெற
அன்பு இதயங்களே, உங்களின் அன்பான ஒத்துழைப்பை தாருங்கள்.
என்றும் மதுரை சிவாஜி கோட்டை என நிரூபிப்போம்.
தமிழ்நாட்டு மக்களை கற்றவர்களாக மாற்றிய
பெருமைக்குரிய தலைவர் காமராஜர் அவர்களின்
115 வது பிறந்த நாள் இன்று
அன்னாரின் புகழ் ஓங்குக
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...6d&oe=59F6D9A3
Sekar Parasuram
15-07-2017
நாடெங்கிலும் பெருந்தலைவரின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்,
இந்த நன்னாளில்
சின்னத் திரையெங்கிலும் கலைத் தலைவரின் நடிப்புக் கொண்டாட்டம்,
...
காலை 11 am- சன் லைப்- வாணி ராணி,
http://www.nadigarthilagam.com/paper...s/vanirani.jpghttps://cdn.shopclues.com/images/thu...1486977157.jpg https://upload.wikimedia.org/wikiped...-Vani_rani.jpg
இன்று
பிற்பகல் 1 pmக்கு ஜெயா மூவி- கௌரவம்
http://reelbox.tv/catalog-admin/imag...30x330.jpg?3.1https://upload.wikimedia.org/wikiped...9/Gauravam.jpg,
Sekar Parasuram added 5 new photos.
· 12 hrs ·
15-07-2017
நாடெங்கிலும் பெருந்தலைவரின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்,
இந்த நன்னாளில்
சின்னத் திரையெங்கிலும் கலைத் தலைவரின் நடிப்புக் கொண்டாட்டம்,
...
பிற்பகல் 1:30 - கேப்டன் டிவி- நவராத்திரி,
https://qph.ec.quoracdn.net/main-qim...4376e980081a-c
Sekar Parasuram added 5 new photos.
· 12 hrs ·
15-07-2017
நாடெங்கிலும் பெருந்தலைவரின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்,
இந்த நன்னாளில்
சின்னத் திரையெங்கிலும் கலைத் தலைவரின் நடிப்புக் கொண்டாட்டம்,
...
இரவு 7 pmக்கு- சன் லைப்- தெய்வ மகன்,
https://i.ytimg.com/vi/np62aSNeRAE/maxresdefault.jpg
http://i18.photobucket.com/albums/b126/cdjm/deiva5.jpg
Sekar Parasuram added 5 new photos.
· 12 hrs ·
15-07-2017
நாடெங்கிலும் பெருந்தலைவரின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்,
இந்த நன்னாளில்
சின்னத் திரையெங்கிலும் கலைத் தலைவரின் நடிப்புக் கொண்டாட்டம்,
...
இரவு 7:30 க்கு- முரசு டிவியில்- ஆனந்தக் கண்ணீர்,
https://i.ytimg.com/vi/J7MAjv6k91w/hqdefault.jpghttps://i.ytimg.com/vi/RBEwGdnvdUw/hqdefault.jpg
Sekar Parasuram added 5 new photos.
· 12 hrs ·
15-07-2017
நாடெங்கிலும் பெருந்தலைவரின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்,
இந்த நன்னாளில்
சின்னத் திரையெங்கிலும் கலைத் தலைவரின் நடிப்புக் கொண்டாட்டம்,
இரவு 10pmக்கு - ஜெயா மூவி- ஆண்டவன் கட்டளை
https://i.ytimg.com/vi/j0WcXBs4eeM/maxresdefault.jpg
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...5a&oe=5A02A9F5
Sundar Rajan · 3 mins
அன்பு இதயங்களே,
ஜூலை 21
மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின்
நினைவுநாளை முன்னிட்டு
... சென்னை மகாலெட்சுமி திரையரங்கில்
ஒரு வாரம் 7 முத்தான,
மாபெரும் வெற்றிக் காவியங்கள்.
அடித்தது பம்பர் பிரைஸ் சென்னை இதயங்களுக்கு.
மேலும் தற்போது வியாழன் முதல்
மகாலெட்சுமி திரையரங்கில்
வெற்றிநடை போடுகிறது நடிகர்திலகத்தின் எங்க மாமா.
அதன் தொடர்ச்சியாக நடிகர்திலகம் வாரம்.
தொடர்ந்து 15 நாள் மகாலெட்சுமி திரையரங்கில் மக்கள்தலைவரின் அன்பு முகம் காண, அன்பு இதயங்களே, அணிவகுப்பீர், மகாலெட்சுமி திரையரங்கிற்கு.
நாளை மாலை எங்கமாமா ரசிகர்கள் சிறப்புக் காட்சி. சென்னை வாழ் இதயங்களே, தவறாமால் கலந்து சிறப்பியுங்கள்.
சாதனைச்சக்ககரவர்த்தியின் 164வது திரைக்காவியம்
எங்கள் தங்க ராஜா வெளிவந்து
சாதனை நிகழ்த்திய நாள் (15.யூலை 1973)
https://encrypted-tbn0.gstatic.com/i...q7_0X3tIXQgveg
https://i.ytimg.com/vi/Ogv_5o3Ejw8/hqdefault.jpg
https://tamilmusicz.com/files/5/Enga...ja/preview.jpghttps://upload.wikimedia.org/wikiped...hanga_Raja.jpg
-----------------------------------------------------------------------------------------------------------------------
சாதனைச்சக்ககரவர்த்தியின் 157வது திரைக்காவியம்
தர்மம் எங்கே வெளிவந்த நாள்
தர்மம் எங்கே (15.யூலை 1972)
https://i.ytimg.com/vi/6gZwkaBiiH0/maxresdefault.jpg
https://i.ytimg.com/vi/xNXf0dIXz7Q/hqdefault.jpghttps://upload.wikimedia.org/wikiped...rmam_Engey.jpg
வெற்றித்திலகத்தின் 261வது திரைக்காவியம்
தாய்க்கு ஒரு தாலாட்டு
வெளிவந்த நாள் இன்று
தாய்க்கு ஒரு தாலாட்டு 16 யூலை 1986
https://i.ytimg.com/vi/DYvl1FeDtSk/maxresdefault.jpg
http://runtamil.com/wp-content/uploa...05/images1.png
எங்க மாமா
சென்னை தியேட்டர் வீடியோ
https://www.facebook.com/vaannila.vi...5216745914627/
asu Devan
'பந்தம்' வளர்த்த 'பாசத் தலைவன்'
கார் விரைந்து வந்து கொண்டிருக்கிறது. மேடான பகுதியில் இருந்து சற்று சரிவான பாதையில். எதிர்பாராதவிதமாக காரின் டயர் பஞ்சராகி கார் மெதுவாக நிற்கிறது. உள்ளே அமர்ந்திருக்கும் ஜெனரல் ஆப்ரஹாமிடம் கார் டிரைவர் வண்டியை விட்டு கீழே இறங்கி வந்து நிலைமையைச் சொல்கிறார். உடனே ஸ்டெப்னி மாற்றி விடுவதாகவும் கூறுகிறார். நிலைமை தெளிவாகப் புரிகிறது. 'சரி' என்று தலையசைவில் ஒரு சம்மதம். அந்த இடைப்பட்ட ஒரு சில வினாடியில் அழகாக இடது கைவிரல்களை மடக்கி வாயருகே கொண்டு சென்று சற்றே வாயைப் பிளந்து (கோட்டுவாய் விடுதல் என்பார்களே!.. அது போல) சிறு ரிலாக்ஸ். வலது கை விரல்கள் தன்னையுமறியாமல் சிறு அசைவுகளில் கணநேர களிநடம் புரிகின்றன. நேரான நேர்கொண்ட பார்வை. டிரைவரின் போதாத காலம் ஸ்டெப்னியிலும் காற்றில்லை. பயந்து போய் மிரட்சியுடன் மெதுவாக ஆப்ரஹாமிடம், "அய்யா... ஸ்டெப்னியிலும் காற்று இல்லீங்க...என்று நடுக்கத்துடன் டிரைவர் கூற, அதுவரை நேர்க்கொண்டிருந்த பார்வை வன்மத்துடன் டிரைவரின் மேல் திரும்புகிறது. டிரைவரை மேலும் கீழுமாக நோக்கும் சுட்டெரிக்கும் சூர்யப் பார்வை. ("ஏதோ டயர் பஞ்சராவது சகஜம்... இயற்கை... பொறுத்துக் கொண்டேன். 'ஸ்டெப்னி மாற்றுகிறேன்' பேர்வழி என்றாய்... சரி... செய்ய வேண்டியதுதான்...ஆனால் ஸ்டெப்னியிலும் காற்று இல்லை என்று வந்து என்னிடம் தைரிமாகச் சொல்கிறாய்...உன் பொறுப்பற்ற தன்மைக்காக நான் காரில் அனாவசியமாக தேவையிலாமல் உட்கார்ந்திருக்கவா?... நான் யார்! என் ஸ்டேடஸ் என்ன! ஸ்டெப்னியைக் கூட கவனியாமல் இந்த ஆர்மி ஜெனரலிடம் கார் டிரைவராக வேலை பார்க்க உனக்கு இனியும் யோக்கியதை இருக்கிறதா?") இவ்வளவு விஷயங்களும் அந்த ஒரு பார்வையில், அந்த ஒரு வினாடியில் டிரைவருக்கு உணர்த்தப்பட்டு விடும். இதுவரை பின்னணி இசை இல்லாமல் சென்று கொண்டிருக்கும் காட்சி, இப்போது டிரைவருக்கு ஏற்படப் போகும் ஆபத்துப் பின்னணியை இசைப் பின்னணி மூலம் அற்புதமாக எடுத்துக் காட்ட ஆரம்பிக்கிறது. (நன்றி சங்கர் கணேஷ்) கார் கதவைத் தானே திறந்து அந்த ரோட்டின் சரிவில், உச்சி வெயிலில், உச்ச கோபத்தில் பேன்ட் பாக்கெட்டுக்களில் தன் இரு கைகளையும் நுழைத்த வண்ணம் அமைதியான கொந்தளிப்புடன் ஆர்ப்பாட்டமாக, கனகம்பீரமாக ஜெனரல் ஆப்ரஹாம் நடந்து வரும் அந்த ஒரு நடையிலேயே நமக்குப் புரிந்து விடுகிறது அந்த டிரைவரின் கதி அதோகதிதான் என்று. (தியேட்டர் கைத்தட்டல்களில் கிழியும்)
ஜெனரல் ஆப்ரஹாம்- நடிப்புலகச் சக்கரவர்த்தி.
ராஜாங்கம் நடத்திய காவியம்- 'பந்தம்'
அண்மையில் தொலைக்காட்சியில் பார்த்து செயல் இழந்து போய் நான் உறைந்து நின்ற காவியக் காட்சி.
மேற்கண்ட குறிப்பிட்ட அந்த அருமையான காட்சியை நீங்களே பாருங்களேன். நம் அனைவருக்காகவும் தரவேற்றி இதோ அந்த ஒரு சில வினாடி காவிய சீன்.
இந்தக் காட்சியை இப்போது பார்த்து விடுங்கள். சரியாக ஒரே ஒரு நிமிடம்தான். பார்த்து விடுங்கள். (youtube லிங்க் கீழே)
காட்சியை பார்த்து விட்டீர்களா? காட்சியைப் பார்த்ததும் மீண்டும் இப்போது பதிவுக்கு வாருங்கள் இப்போது மேற்குறிப்பிட்ட காட்சி முடிந்து, அடுத்த நாள் டிரைவர் வேலைக்கு வரும் போது அவர் வேலைலிருந்து தூக்கப்பட்டிருப்பார். ஒழுக்கம், சின்ஸியாரிட்டி, நேர்ந்தவறாமை, வேலையில் பொறுப்பு இதையெல்லாம் கடைபிடிக்கும் நமது ஜெனரல் ஆப்ரஹாம் டிரைவர் தவறு செய்தால் சும்மா விட்டு விடுவாரா?
பின் தன் அன்பு மகள் அந்த டிரைவருக்காக தந்தை ஆப்ரஹாமிடம் பரிந்து பேசி மீண்டும் அந்த வேலையை அதே டிரைவருக்குத் தருமாறு வேண்ட அதைக் கூட பிடிவாதமாக மறுத்து விடுவார்.ஆப்ரஹாம். காதலித்தாள் என்பதற்காக தன் மகளை வெறுத்து, அவளைப் பிரிந்து, மகள் கணவனை இழந்து விதவையாகியும் கூட அவளை மன்னிக்காமல் வெறுத்து, பின் பேத்தியுடன் பேத்தி என்று தெரியாமலே உயிரோடு பழகி அந்த குழந்தைக்கு இறுதியில் சுவாச நோய் என்று அறிந்து, பின் அந்தக் குழந்தைக்காக தன் குணங்களை மாற்றிக் கொண்டு, கோபம் தணிந்து, ஒரு சமயம் தன வேலையை விட்டு நீக்கிய அதே டிரைவரை மன்னித்து, மீண்டும் அந்த டிரைவரை வேலையில் சேர்த்துக் கொள்வார் ஆப்ரஹாம்.
இப்போது நடிகர் திலகத்திடம் வருவோம். நடிகர் திலகம் தன் சொந்தப்படமான 'அண்ணன் ஒரு கோயி ல்' படத்தை இயக்கும் பொறுப்பை இயக்குனர் கே.விஜயனிடம் தந்திருந்தார். ஏனென்றால் 1976-ல் வெளியான என்.வி.ஆர் பிக்ச்சர்ஸ் தயாரித்த 'ரோஜாவின் ராஜா' படத்தை விஜயன் இயக்கியிருந்தார். (அதற்கு முன் 'காவல் தெய்வம்' படத்தையும் விஜயன் சுப்பையாவிற்காக இயக்கியிருக்கிறார்.) இதற்கு முந்தைய படமான பி.மாதவன் இயக்கிய 'சித்ரா பௌரணமி' நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருந்து ஒருவழியாக வெளியாகி சுமாரான வெற்றி பெற்ற நிலையில் 'ரோஜாவின் ராஜா' வெற்றி நடிகர் திலகத்திற்கு விஜயன் மேல் இருந்த நம்பிக்கையை அதிகமாக்கியது.
அது மட்டுமல்ல. பல்வேறு சந்தர்ப்ப சூழ்நிலைகளினாலும், அரசியல் காரணங்களினாலும் அன்பே ஆருயிரே, வைர நெஞ்சம் பாட்டும் பரதமும், உனக்காக நான், சத்யம் போன்ற படங்கள் சுமாரான வெற்றிகளை பெற்ற நிலையில் (கிரஹப் பிரவேசம், உத்தமன், அவன் ஒரு சரித்திரம் தவிர்த்து) பாலாஜி அவர்கள் தயாரிப்பில் மது, ஸ்ரீவித்யா நடித்த மலையாளத் 'தீக்கனல்' தமிழில் 'தீப'மாகி விஜயனின் இயக்கத்தில் 1977 குடியரசு தினத்தன்று வெளிவந்து சக்கை போடு போட 'இவர் எப்படா விழுவார்' என்று எதிர்பார்த்திருந்த கூட்டம்' தீபத்தின் மாபெரும் வெற்றியினால் சின்னாபின்னமாகி சிதறித் தெறித்து, பதறி ஓடியது.
'நடிகர் திலகத்தின் சகாப்தம் முடிந்தது' என்று எழுதியவர்களெல்லாம் வெட்கித் தலை குனிந்து போனார்கள். சூரியன் என்றும் வீழுமா? சூதுமதி என்றும் வெல்லுமா? 1000 பேர் பிறக்கலாம்...லட்சம் பேர் பிறக்கலாம்,.. கோடி பேர் பிறக்கலாம் ..ஒரு 'நடிகர் திலக' சூரியன் போல் இனி எவரும் பிறக்க முடியாது.
'சிவாஜி மாதிரி ஒரு நடிகன் பிறந்து வரவேண்டும் என்று சொல்லாத வாய் தமிழ்நாட்டில் உண்டா? வேறு எவருக்கேனும் அந்த பாக்கியம் உண்டா? கொடுப்பினை உண்டா?
விரல் விட்டு எண்ணக் கூடத் தெரியாத ஒரு கூட்டம் சினிமாவில் அண்ணன் சிவாஜியிடம் வழக்கம் போலத் தோற்று, வேறு திசைக்கு ஓடி, தன் பாதையை மாற்றிக் கொண்டது. தீபத்தின் ஒளிக்கு முன்னால் நவரத்தினங்கள் ஜொலிக்க முடியாமல் திணறின. லட்சக்கணக்கில் இருந்த ரசிகர் கூட்டம் நடிகர் திலகத்திற்கு கோடிக்கணக்கில் ஆனது. 'திரிசூல'த்தின் திகைக்க வைத்த வெற்றியால். மதுரை மிரண்டது மிரட்சியளித்த பிரம்மாண்ட வெற்றி விழாவினால். நடிகர் திலகம் மாதிரி பிறப்பது ஒருபுறம் இருக்கட்டும்..முதலில் இந்த ஒரு வெற்றி விழா போல இன்னொரு விழாவை இந்த தமிழகம் இனி காணுமா?
'தீபத்தின்' அமர்க்களமான வெற்றியினால் விஜயன் மேல் இருந்த நம்பிக்கை நடிகர் திலகத்திற்கு இன்னும் அதிகமானது. அதுவரை நடிகர் திலகத்தை இயக்கிய மாதவன், திருலோகச்சந்தர் போன்றவர்கள் கொஞ்சம் 'அவுட் ஆப் பார்மி'ல் இருக்க, விஜயன் நடிகர் திலகத்தின் ராசியான இயக்குனர் ஆனார். அவரின் செல்லப் பிள்ளையும் ஆனார்.
இளைய தலைமுறை,(கிருஷ்ணன் பஞ்சு) நாம் பிறந்த மண் (வின்சென்ட்) இவைகளின் வெளியீட்டிற்கு பின் மேலே குறிப்பிட்ட அண்ணனின் 'அண்ணன் ஒரு கோயில்' விஜயன் இயக்கத்தில் மாபெரும் வெற்றி. 1977 தீபாவளி சூறாவளி அது. கலக்கல் ஹிட். படத்தின் வெற்றி எட்டுத் திக்கும் எதிரொலித்தது. பட்டி தொட்டியெங்கும் பாடல்கள் பிரபலமானது கல்யாண வீடுகளில் பாசமலர், சாரதா படங்களுக்குப் பிறகு அண்ணன் ஒரு கோவிலாகவே ஆதிக்கம் செய்தார். இன்னொன்றும் இந்த இடத்தில் குறிப்பிடத்தான் வேண்டும். இதே தீபாவளியில் இன்னொரு சுனாமி கலக்கல் தேவரின் 'ஆட்டுக்கார அலமேலு'
விஜயன், நடிகர் திலகம் ஜோடி வெற்றிக் கூட்டணி ஆனது. பாலாஜி தயாரிப்பில் 'தியாகம்' சூப்பர் டூப்பர் ஹிட். (பெங்காலி 'அமானுஷ்' படத்தின் தழுவல்) நம் முரளி சாரின் செல்ல மதுரையில் சிந்தாமணியில் வெள்ளி விழாக் கண்டது 'தியாகம்'. தவறாக விமர்சனம் செய்த 'விகடர்'களுக்கு சரியான சவுக்கடி கொடுத்தது 'தியாகம்'. தமிழ்நாடெங்கும் வசூல் மழை பொழிந்தது 'தியாக'த்தால். தியாகத் தலைவனால். இத்தனைக்கும் நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த 'என்னைப் போல் ஒருவன்' படம் 'தியாகம்' வெளியான 15 தினங்களுக்குள் அதற்கு போட்டியாக வெளியாகி அதுவும் சக்கைப் போடு போடுகிறது.
ஆனால் பின்னால் ஒரு சிறு பின்னடைவு நடிகர் திலகம் விஜயன் கூட்டணிக்கு திருஷ்டிப் பரிகாரம் போல 'புண்ணிய பூமி' படத்தால் ஆனது. அப்போதய ஹிந்தி ஹிட் 'மதர் இந்தியா' கால மாறுதல்கள் பல ஏற்பட்ட நிலையில் காலந்தாழ்ந்து 'புண்ணிய பூமி'யாக உருவெடுத்து நம்மை ஏமாற்றியது. ('இரு துருவம்' போல) இது வெளியானது 1978-ல். 'புண்ணிய பூமி'க்குப் பிறகு அடுத்து வந்த ஜெனரல் சக்கரவர்த்தி, தச்சோளி அம்பு பைலட் பிரேம்நாத் (ஜஸ்டிஸ் கோபிநாத் தவிர) அனைத்தும் 'போடுபோடு' வென்று வெற்றி நடை போட்டு நடிகர் திலகம்தான் திரையுலகில் நிரந்தரச் 'சக்கரவர்த்தியடா' என்று எப்போதும், என்றும் நெ.1 என்ற நிலையை அளித்து, யாருமே அசைக்க முடியாத சூழலில் வழக்கம் போல தன்னிகராட்சி புரிந்து கொண்டிருந்தது
இந்த நிலையில் நடிகர் திலகத்தின்
வெற்றிக்கெல்லாம் மகுடம் சூட்டியது போன்று சுனாமி 'திரிசூலம்' 26.01.1979 அன்று வெளியாகி தமிழ்த் திரைப்பட உலகின் சரித்திரத்தையே மாற்றி எழுதி இதுவரை எந்த ஒரு படமும் வசூலில் விஞ்ச மிஞ்ச முடியாத அளவிற்கு (ஆறே வாரங்களில் அறுபது லட்ச ரூபாய்) விஸ்வரூபம் எடுத்து அப்படியே இன்றுவரை எவரும் தொட முடியாத சிகரமாய் நிற்கிறது. விஜயன் நடிகர் திலகம் தன் மேல் கொண்ட நம்பிக்கையை மிக அழகாக 'திரிசூல'த்தை இயக்கி அருமையாக அதைத் தக்க வைத்துக் கொண்டார்.
'திரிசூல'த்தை அடுத்து 'நல்லதொரு குடும்ப'மும் விஜயன் இயக்கத்தில் பாலாஜி தயாரிப்பில் நல்ல வெற்றி பெற்றது. வெற்றிகள் குவியக் குவிய விஜயனின் போக்கு சற்று மாறியது. நடிகர் திலகம் மிக நம்பிக்கையுடன் விஜயனை தனது அடுத்த சொந்தப் படமான 'ரத்த பாச'த்திற்கு இயக்குனர் ஆக்கினார். படமும் வெளிநாடுகளில் வளர்ந்து வந்த வேளையில் யாருடைய துர்ப்போதனையோ அல்லது போதாதா காலமோ விஜயன் 'ரத்த பாசம்' படத்தின் மேல் காட்டும் அக்கறையை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்க்க ஆரம்பித்தார். எக்காலத்தும் நெ.1 சூப்பர் ஸ்டாரான நம் திலகத்தின் கால்ஷீட்டுகள் விஜயனின் தாமதப் போக்கினால் வீணாயின. சொந்தப் புரொடக்ஷன் வேறு. வெளிநாடுகளில் அதிக செலவு செய்து படப்பிடிப்பு.
இதற்கிடையில் விஜயன் விஜயகாந்த், பூர்ணிமாவை ஜோடியாக வைத்து 'தூரத்து இடிமுழக்கம்' என்ற படத்தை வேறு தொடங்கி, அதில் முழுக்கவனமும் செலுத்த ஆரம்பித்தார். படம் முழுக்க எங்கள் கடலூர் துறைமுகத்தில்தான் படப்பிடிப்பு. அங்கே 'ரத்த பாச' குழுவினர் விஜயனுக்காக பல நாட்களாக காத்துக் கிடக்க இங்கே அதைப்பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் தன் சொந்தப்படத்தை இயக்குகிறார் விஜயன்.
இப்போது சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிர்வாகம் இனி விஜயன் தேவை இல்லை என்று முடிவெடுக்கிறது. இயக்குனர் இல்லாமலேயே சிவாஜி புரொடக்ஷன்ஸ் 'ரத்தபாசம்' படத்தை முடிக்கிறது. (ரத்தபாசம் படத்தில் இயக்குனர் யார் என்று காட்டாமல் பதிலுக்கு நடிகர் திலகத்தின் 3 ஸ்டில்களை போடுவார்கள்) 'ரத்தபாசம்' 14.06.1980 அன்று வெளியாகிறது. திரிசூலம் ஏற்படுத்தியிருந்த பிரம்மாண்ட வெற்றியை மக்கள் மறக்க இயலாத நிலையில் அதே எதிர்பார்ப்பை பொது மக்களும் ரசிகர்களும் 'ரத்தபாச'த்தில் எதிர்பார்க்க, 'திரிசூலம்' அளவிற்கு வெற்றி இல்லையென்றாலும் ரத்தபாசம் வசூலில் நல்ல வெற்றியே.
(விஜயன் முழுப் படத்தையும் இயக்கியிருந்தால் 'ரத்த பாச'த்தின் வெற்றியே வேறு விதமாக இருந்திருக்கும் என்போர் உண்டு...நானும் அந்தக் கட்சியே... அனாவசியக் காட்சிகள் எதுவுமில்லாமல் நச்சென்று காட்சிகளை வைத்து படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்வதில் கில்லாடி விஜயன். திரிசூலம் படததில் நடிகர் திலகத்தின் காட்சிகளை மூன்று ஷெட்யூல்களாகப் பிரித்து, கொஞ்சம் கூடக் குழப்பமில்லாமல் தெளிவாக படமெடுத்திருப்பார் விஜயன். ராஜசேகரன், சங்கர், குரு பாத்திரங்களை தனித்தனியாக பிரித்து, ஒவ்வொரு கேரக்டரையும் ஒவ்வொரு ஷெட்யூலாக வைத்து நடிகர் திலகத்தை அம்சமாக வேலை வாங்கியிருப்பர் விஜயன்)
'ரத்தபாசம்' வெளியான அதே 1980 ன் இறுதியில் அநேகமாக டிசம்பர் மாதம் என்று நினைவு விஜயன் இயக்கிய அவரது சொந்தப்படம் 'தூரத்து இடி முழக்கம்' வெளியாகி படுதோல்வியடைகிறது. விஜயனுக்கு வாழ்வு தந்தவர் நடிகர் திலகம். இப்போது விஜயன் யாரும் ஆதரவு தராத நிலையில் 'ரத்தபாசம்' வெளியாகி பின் நடிகர் திலகம் 38 படங்கள் முடிந்த நிலையில் (அடேங்கப்பா!) விஜயன் பல இன்னல்களுக்கு ஆளாகியிருந்தார். கிட்டத்தட்ட 1984 இறுதி வரை. கிட்டத்தட்ட 4 ஆண்டுகள்.
இந்த 4 ஆண்டுகளில் பாலாஜியும் அவரது 'பில்லா' ராசி இயக்குனராக 'பில்லா' கிருஷ்ணமூர்த்தி அமைந்துவிட, அவரையே தீர்ப்பு, நீதிபதி படங்களுக்கு பாலாஜி இயக்குனராக்க, இரு படங்களும் மகா, மெகா வெற்றி. அதனால் பாலாஜியும் விஜயனை தன் படத்திற்கு அழைக்கமுடியாமல் போயிற்று. இரண்டாவது நடிகர் திலகத்தின் விஜயன் மீதான கோபமும் பாலாஜி அறிந்ததே. அது நியாயம் என்றும் உணர்ந்ததே.
தன்னை மிகவும் வளர்த்தவர், வாய்ப்பளித்தவர் என்ற முறையில் விஜயன் பாலாஜியிடம் சென்று தன் நிலைமைகளுக்கு வருந்தி மீண்டும் ஒரு படத்தை அதுவும் நடிகர் திலகம் நடிக்கும் படத்தை தனக்கு இயக்கத் தருமாறு பலமுறை வேண்டி கேட்டுக் கொள்ள, பாலாஜியும் அப்போது நடிகர் திலகத்தை வைத்து 'பந்தம்' படம் தயாரிக்கும் நிலையில் இருந்ததால் இது பற்றி நடிகர் திலகத்திடம் பேச, நடிகர் திலகம் மறுப்பேதும் கூறாமல் விஜயன் ரத்த பாசத்திற்கு செய்த துரோகங்களை மன்னித்து, அதே சமயம் உயிர் நண்பர் பாலாஜி அவர்களின் வேண்டுகோளையும் ஏற்று விஜயனை தன்னை இயக்க 'பந்தம்' மூலம் சம்மதித்தார். மேலும் 'விஜயன் மிகச் சிறந்த வெற்றி இயக்குனர் அவர் கேரியரில் மேலும் கேப் விழ வேண்டாம்' என்ற நல்ல எண்ணமும் கொண்டார் நடிகர் திலகம்.
விஜயனும் நடிகர் திலகத்திடம் வருத்தம் தெரிவித்துக் கொண்டு 'பந்தம்' படத்தை மிகச் சிறப்பாக இயக்கி, மீண்டும் பாலாஜிக்கும், நடிகர் திலகத்திற்கு மாபெரும் வெற்றியை தேடிக் கொடுத்து தன் பாவங்களுக்கு பரிகாரம் தேடிக் கொண்டார்.,
இப்போது முதல் பாராவுக்கு வருவோம். நான் முதலில் கூறியிருந்த 'பந்தம்' படக் காட்சிக்கும், இவ்வளவு நேரம் நீங்கள் படித்த விஜயன் விஷயத்திற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது.
நம் 'ஜெனரல் ஆப்ரஹாம்' நடிகர் திலகம் இயக்குனர் விஜயனிடம் இந்தக் காட்சி பற்றி விவாதிக்கும் போது 'எதற்கு அந்த டிரைவரை மன்னிப்பது போல இப்படி ஒரு காட்சியை வைத்தாய்/ என் கேரக்டர் கண்டிப்பான கேரக்டர். அது எப்படி சரியாகும்? நான் டிரைவரை வேலையை விட்டு நீக்கின காட்சியை மட்டும் வை' என்று சொன்னாராம்.
அதற்கு விஜயன் நடிகர் திலகத்திடம் 'நானும் இக்காட்சியில் வரும் டிரைவர் போலே உங்களுக்குத் தவறிழைத்து விட்டு 'ரத்த பாச'த்தை சரிவர இயக்காமல் வெளியேறி விட்டேன். நீங்களும் என் மேல் கோபமானீர்கள். இந்த 4 ஆண்டுகள் கழித்து மீண்டும் என் தவறுகளை மறந்து, மன்னித்து நீங்கள் என்னை மீண்டும் ஏற்றுக் கொள்ளவில்லையா? அதனால்தான் அந்த டிரைவர் கேரக்டருக்கு நீங்கள் மீண்டும் வேலை கொடுப்பது போன்ற காட்சியை என்னை, உங்களை மனதில் வைத்து உங்கள் மேல் நான் கொண்ட நன்றி உணர்வால் எடுத்தேன். என்னையே பெருந்தன்மையுடன் மன்னித்து ஏற்றுக் கொண்ட நீங்கள் அந்த டிரைவரை மன்னிப்பது எப்படி குற்றமாகும்? அதனால்தான் அந்தக் காட்சியை வைத்தேன்' என்று சமயோசிதமாகச் சொல்லி நடிகர் திலகத்தை நெகிழ்வடைய செய்துவிட்டாராம் விஜயன்.
இப்போது புரிகிறதா நான் சொன்ன குறிப்பிட்ட அந்த 'பந்தம்' காட்சிக்கும், விஜயன் அவர்களின் உண்மைக் கதைக்கும் எவ்வளவு தொடர்பு இருக்கிறது என்று.
எதிராளியையும், அவர் செய்யும் தவறுகளையும் மறந்து, மன்னித்து மனிதனாக வாழ என்றும் நமக்கு கற்றுத் தந்தவர் நமது இதய தெய்வம்..அவர் மீது நமக்குண்டான நிரந்தர 'பந்தம்' என்றும் நிலையானது. நிதர்சனமானது. உண்மையானது. உயர்வானது. உன்னதமானது. போலியற்றது கள்ளமற்றது. கபடமற்றது.
ஆனால் நடிகர் திலகத்தின் டிரைவருடனான அந்தக் கோபக் காட்சியை, அந்த 'கெத்து' கம்பீர 'ராஜ' நடையை மட்டும் பார்த்து ரசிக்க மறந்து விடாதீர்கள். அந்தக் காட்சி ஒரு உலக அதிசயம் நம் ஆண்டவரைப் போலவே.
காட்சிக்கான லிங்க்
https://www.youtube.com/watch?v=SmRBJcoRN5E
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...59&oe=5A023179
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...e3&oe=5A0F10C2
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...b9&oe=5A00EE82
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...f4&oe=59F72FB2
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...72&oe=5A02D107
Nagarajan Velliangiri
வாசுதேவன் சார்,
உங்கள் பதிவைப் படிக்கும் போது நெஞ்சம் நெகிழ்கிறது.
எங்கள் ஊர்ப்பக்கம் ஒரு பழமொழி சொல்லுவார்கள், 'பொம்மி குத்துனா என்ன திம்மி குத்துனா என்ன, நமக்கு வேண்டியது அரிசிதான்' னு. அது மாதிரி, திலகத்தின் புகழை நம்மில் யார் ரசித்துப் பாராட்டி எழுதினாலும் சந்தோசம்தான். நம் அனைவரின் நோக்கமும் ஒன்றுதான், அது யார் மூலமாக நடந்தாலும் ஐயன் சந்தோசம்தானே அடைவார்?
நீங்க அநியாயத்துக்கு எதேதோ என்னைப் பத்தி புகழ்ந்து எழுதியிருக்கீங்க. அப்படி எல்லாம் ஒரு சிறப்பும் என் கிட்ட இல்லை என்பதுதான் உண்மை. ஆனால் ஒன்று மட்டும் நிஜம். நான் எதையும் யோசித்து எழுதுவது இல்லை. மனதில் என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே எழுதி விடுவேன். எந்த விதமான குறிப்புக்களோ ஆதாரங்களோ என்னிடம் இல்லை.எழுதும்போதும் எந்த விதமான தயாரிப்புக்களும் செய்வது இல்லை. அதே மாதிரித் திலகம் பற்றிய விசய ஞானமும் பெரிதாக ஒன்றும் கிடையாது. எனவேதான் என் பதிவுகள் எல்லாம் மேலோட்டமாக, நுனிப்புல் மேய்ந்த மாதிரி தான் இருக்கும். முரளி சீனிவாஸ், நீங்கள் மற்றும் ஜாஹிர் அவர்கள் எல்லாம் எழுதுவது போல கனமான கருத்துக்கள் எல்லாம் என் பதிவுகளில் இருக்காது. ஒரு சாதாரணமான, அதே சமயம் , வெறித்தனமான ஒரு சிவாஜி ரசிகனின் பார்வைதான் என் பார்வை. எதாச்சும் எழுதனும்னு தோணினா அப்படியே அதை எழுதி விடுவேன். அதுதான் என் பலவீனம், அதே சமயம் பலமும் கூட அதேதான்.
அடுத்தவர் மனதை அறியும் சக்தி என்றெல்லாம் உயர்த்தி இருக்கிறீர்கள், சும்மா தமாசுக்குத் தானே சொன்னீர்கள்? அதே மாதிரித்தான் தமிழறிந்ததாகத் தாங்கள் சொன்னதும். நான் தமிழைப் பள்ளியில் படித்ததோடு சரி. கல்லூரியிலும் ஒரே ஒரு பேப்பர், அதுவும் முதல் வருடம் மட்டும் நான் டீடெய்ல் மாதிரி இருந்தது. அவ்வளவுதான் தமிழுடன் என் உறவு. ஆனால் தமிழார்வம் உண்டு என்பது உண்மை. காரணம் பள்ளியில் போதித்த தமிழாசிரியர்கள் ஒரு புரமும், என் ஐயன் நடிகர் திலகம் பேசிய தமிழ் மறுபுரமும்.
அப்புறம் ஒரு சிறிய எக்ஸ்ட்ரா தகவல். எனக்கு இனப் பற்று ரொம்ப ரொம்ப அதிகம். என் ஐயனின் பிள்ளைகள் எல்லாம் என் இனம். அதுதான் என் உயிரினம். அவர்கள் எந்த நாடு எந்த மொழி பேசுபவர்களாக இருந்தாலும் சரி, என் ஐயனின் அன்பை மொழியாகப் பேசுபவர்களாக இருந்தால் போதும். அவர்களுடன் நான் எந்தவிதத் தயக்கமும் இன்றி ஐக்கியமாகி விடுவேன், எந்த வயதினராக இருப்பினும் சரி. அந்த ஒரு விசயத்தில் எந்த விதமான காம்ப்ரமைசும் நான் செய்தது கிடையாது. இனியும் செய்ய மாட்டேன்.
அப்புறம் நம் அன்புத்திலகத்தின் ரசிகர்களிடம் நாம் சொல்லும் கருத்துக்கள் பற்றி. நீங்கள் சொன்னதை அப்படியே ஆமோதிக்கிறேன். நம் ஆட்கள் எல்லாம் எல்லா விசயங்களையும் விரல் நுனியில் வைத்துக் கொண்டு அமைதியான கடலைப் போலச் சாந்தமாகத்தான் இருப்பார்கள்.இந்தக் கொல்லன் தெருவில் அவ்வளவு எளிதில் நம் ஊசியை விற்று விட முடியாது. ஒரு சிறு தவறான செய்தியைக் கவனக் குறைவாகச் சொல்லி விட்டால் போதும், அப்படியே சுனாமியாகப் பொங்கி எழுந்து விடுவார்கள்.இப்போது கூடப் பாருங்கள், கொஞ்ச நேரம் முன்பு 'எங்க மாமா' படத்தின் ஒரிஜினல் 'ஹிந்தி'யில் நடித்தது ஷம்மி கபூரும், ஆஷா ஃபாரேக் என்றும் வேறொரு பதிவில் சொன்னேன். உடனே ஆஷா இல்லை, அது ராயஸ்ரீ, பழம் பெரும் இயக்குநர் ,தயாரிப்பாளர் சாந்தாராம் அவர்களின் மகள் என்று தவறைச் சுட்டிக் காட்டி விட்டார் நண்பர் பூபால் சிங். இதிலிருந்து என்ன தெரிகிறது ? திலகம் நடித்த படங்கள் பற்றி மட்டும் அல்ல, அவற்றின் நதிமூலம் , ரிஷிமூலம் எல்லாம் கூட நம்மவர்களின் நெஞ்சத்தில் பதிந்து போனவை என்று.இது கூடப்பரவாயில்லை சார், அந்த நடிகையின் மூலத்தைக் கூட விரல் நுனியில் வைத்திருக்கும் அந்த அற்புதத்தை எந்த வார்த்தை சொல்லிப் பாராட்டுவது. நான் அம்பேல். உண்மையிலேயே இவ்வளவு அருமையான, விசய ஞானம் நிறைந்த அதே சமயம் வெறித்தனமான , நம் திலகத்தின் ரசிகர்கள் போல உலகில் வேறெந்த நடிகருக்கும் இருக்க முடியாது. இப்படிப்பட்ட ஒரு கூட்டத்தில் நானும் ஒருவன் என்பது மிகவும் சந்தோசமாகவும், பெருமையாகவும் இருக்கிறது எனக்கு.
நீங்கள் சொன்ன இன்னொரு விசயம் நிச்சயம் எல்லோருமே கவனித்தில் கொள்ள வேண்டிய ஒன்று. இந்த அவசரமான வாழ்க்கை முறையில், பல வேலைகளுக்கு இடையில், திலகத்தைப் பற்றிப் புதிது புதிதாக, அதே சமயம் ஆழ்ந்த செய்திகளும் கருத்துக்களும் கொண்டதாகவும் , தவறில்லாமலும் ஒரு பதிவைப் பகிர்ந்து கொள்ள ஒரு பதிவர் நிறைய நேரம் செலவழித்து அதை உருவாக்க வேண்டி உள்ளது. அப்படிப் பட்ட பதிவுகளுக்குக் கிடைக்கும் பாராட்டுக்களும், சிறந்த பின்னோட்டங்களும் தான் அவரை மேலும் ஊக்குவிக்கும் உற்சாக டானிக் என்பது கலப்படமற்ற அக் மார்க் உண்மை. நிச்சயம் எனது பாராட்டுக்கள் உங்களுக்கு உண்டு இதைச் சொன்னதற்கு. எனவேதான் நான் யாரையும் பாராட்டுவதில் எந்த விதமான கஞ்சத்தனத்தையும் காட்டுவதில்லை. மனமாறப் பாராட்டி விடுவேன், யாராக இருப்பினும்.அப்படிப் பாராட்டும் போது, பாராட்டப் படுபவர் மகிழ்கிறாரோ இல்லையோ, எனக்கு நிஜமாகவே மனசு சந்தோசமாக இருக்கும்.
( பதிவர்களைப் பாராட்ட வேண்டியதன் அவசியத்தைச் சமீபத்தில்தான் ஒரு தனிப்பதிவாக நான் பகிர்ந்திருந்தேன்)
பதிவுகளின் நீளத்தைச் சுருக்காமல், எடிட் செய்யாமல் அப்படியே பகிருமாறு சொன்னீர்கள்.முயற்சி செய்கிறேன் சார். (உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியத்தைச் சொல் கிறேன், யாருக்கும் சொல்லி விடாதீர்கள்.பெரிய அளவில் எழுதும் அளவுக்கு என்னிடம் சரக்கு ஒன்றும் ஸ்டாக்கில் இல்லை.எதோ சின்னச் சின்ன விசயங்கள் கேள்விப்பட்டதை வைத்துக் கொண்டு கொஞ்சம் சொந்தக் கற்பனைச் சரக்கைக் கலந்து, கலப்படம் செய்து, பதிவுகள் என்ற பெயரில் எதையோ எழுதி ஒப்பேத்திக் கொண்டு காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறேன். பெரிய பதிவுகளுக்கு நான் எங்கே போவேன்? மயில் ஆடுகிறது என்று வான்கோழியும் ஆட ஆசைப்படலாமா ? அதுதான் என்னுடைய உண்மை நிலைமை, திறமை எல்லாம்.எனவே என் பதிவுகளின் மேல் பெரிதாக எதிர்பார்ப்புகளை வைக்காமல் இருப்பது உங்களுக்கு நல்லது. ஏமாற்றங்களைத் தவிர்க்கும்).
என்னுடைய ஆசையெல்லாம் இப்படி ஒரு சிலபேர் மட்டுமே எழுதிக் கொண்டிருக்காமல் , நிறையப் பேர் எழுத முன் வரவேண்டும் என்பதுதான். பல்லாயிரக் கணக்கில் நம் குழுவில் இருக்கிறார்கள். அதில் நல்ல விசய ஞானமும், அறிவுக் கூர்மையும், எழுத்தாற்றலும், மொழி நடையும் உள்ளவர்கள் குறைந்தது ஆயிரம் பேருக்கு மேல் நிச்சயம் இருப்பார்கள்.அவர்கள் எல்லாம் ஏன் எதையுமே எழுதாமல் தவிர்க்கிறார்கள் ,தயங்குகிறார்கள் என்றுதான் எனக்குப் புரிபடவில்லை. என்னைப் போன்ற குறை குடமெல்லாம் கூத்தாடும் போது, நிறைகுடங்கள் எல்லாம் தளும்பாமல் அமைதி காப்பதுதான் ஆச்சரியமாக இருக்கின்றது. இன்னும் நிறையப் பேர் எழுத ஆரம்பித்து, இந்தக் குழு முழுவதும் திலகத்தின் புகழாறு பாய வேண்டும் என்ற என் விருப்பத்தை மீண்டும் சொல்லி, இப்பதிவை நிறைவு செய்கிறேன்.
வாசு தேவன் சார், உங்களின் அருமையான 'பந்தம்' எனக்குக் கிடைத்த மிகப் பெரும் பாக்கியம்.
மீண்டும் நன்றி, வணக்கம்.
Sundar Rajan
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...c0&oe=5A0CA60A
ரசிகர்களின் எண்ணங்களை நிறைவேற்றுபவர் மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள்....
மதுரையில் நடைபெற்ற சரித்திரம் வாய்ந்த மக்கள்தலைவரின் ராஜபார்ட் ரங்கதுரை திரைப்படத்தின் 50வத...ு நாள் விழாவில்,
திருச்சியில் இருந்து கலந்து கொண்ட அருமை இதயங்கள் பன்னீர், ராஜேந்திரன், வெங்கட், மகேஷ், முரளி, ராமச்சந்திரன் ஆகியோர் திருச்சியில் தலைவர் படம் வந்து வெகுநாளாகி விட்டது, என மிகவும் வருத்தப்பட்டார்கள்.
இதோ உங்கள் மனவருத்தத்தை போக்க வந்து விட்டார் நமது மக்கள்தலைவர் அவர்கள்.
ஆம்,
மக்கள்தலைவரின் நினைவுநாளை முன்னிட்டு
ஜூலை 22 சனி முதல் நடிகர்திலகம் அவர்கள் இருவேடங்களில் நடித்த மாபெரும் சாதனை காவியம் வெள்ளை ரோஜா திரைப்படம் கெயிட்டி திரையரங்கில் வெளிவருகிறது.
சென்ற முறை இதே கெயிட்டி திரையரங்கில் வெளியான வெள்ளை ரோஜா திரைப்படம் மாபெரும் வசூல் சாதனை செய்தது என்பது திருச்சியில் உள்ள அனைத்து சிவாஜி ரசிகர்களும் அறிந்ததே.
இந்த முறையும் உங்கள் ஒத்துழைப்புடன் மாபெரும் வசூல் சாதனை செய்யும் என்பது உறுதி.
தகவல்- அண்ணாதுரை, திருச்சி.
Sundar Rajan
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...19&oe=5A11F9A6
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
ஜூலை 21 முதல்
நடிகர்திலகம் அவர்கள்
முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் நடித்த வைரநெஞ்சம் (ஹீரோ 2017) திரைப்படம் மதுரை சென்ட்ரல் திர...ையரங்கில் தினசரி 4 காட்சிகளாக வெளிவருகிறது.
ராஜபார்ட் ரங்கதுரையும் தனது 9வது வாரத்தை தொடர்கிறார்.
மதுரையில் இரண்டு சிவாஜி படங்கள் ஒரே வாரத்தில்,
கலையுலக சக்கரவர்த்தியே
நீங்களே உங்களுக்கு என்றும் நிகரானவர்
என்பதை ஒரு முறை அல்ல
ஒவ்வொரு முறையும் நிரூபித்துக்
கொண்டிருக்கிறீர்கள்.
சிவாஜி ரசிகன் என்று சொல்லுவோம்....
நெஞ்சை நிமிர்த்தி செல்லுவோம்...
வைரநெஞ்சம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற செய்திடுவோம்.
சாதனைச்சக்ககரவர்த்தியின் 97 வது திரைக்காவியம்
கை கொடுத்த தெய்வம் வெளிவந்து
சாதனை நிகழ்த்திய நாள் இன்று
கை கொடுத்த தெய்வம் (18.யூலை 1964)
https://i.ytimg.com/vi/95TlllAAOYg/maxresdefault.jpg
https://i.ytimg.com/vi/YCZ-cIZchh4/maxresdefault.jpg
https://upload.wikimedia.org/wikiped...tha_deivam.jpg
கை கொடுத்த தெய்வம் (18.யூலை 1964)- A great Film by Iyakkunar thilagam K.S.G ,who started his Career as dialogue writer with Padikkatha methai.
Murali's Great write-up on our next Epic Film.
கை கொடுத்த தெய்வம்
தயாரிப்பு: பொன்னி புரொடக்ஷன்ஸ்
திரைக்கதை வசனம்: கே.எஸ். ஜி.
இயக்கம் : கே.எஸ்.ஜி.
வெளியான நாள்: 18 07.1964
அமிர்தசரஸ் நகரம். ரயிலிருந்து இறங்கும் இளைஞன் ரவி வேலை தேடி அலைந்து ஒரு பார்க்கில் மயங்கி விழுகிறான். அவனை தன் அறைக்கு கொண்டு வந்து உணவு கொடுத்து காப்பாற்றுகிறான் ரகு. தற்கொலை எண்ணத்தோடு வந்த ரவி, ரகு காட்டும் அன்பிற்கு கட்டுப்படுகிறான். தனக்கு கிடைத்த மானேஜர் வேலையை ரகு, ரவிக்கு விட்டுக் கொடுக்கிறான். தன்னைப் பற்றி எதுவும் சொல்ல மறுக்கும ரவி, ரகுவின் பெற்றோர்கள் ஊரில் கஷ்டப்படுவதை அறிந்து அவர்களுக்கு பணம் அனுப்புகிறான். இது அவர்களுக்கிடையே உள்ள அன்பை வலுவாக்கிறது. இருவரும் ஒரே அலுவலுகத்தில் பணி புரிகிறார்கள். ரவி மானேஜர், ரகு பியூன்.
மற்றொரு கதைக் களம் சென்னை. பெரிய செல்வந்தர் மகாதேவன். அவருக்கு இரண்டு மகள்கள். ஒரு மகன். மூத்த மகள் கோகிலா. இளைய மகள் சகுந்தலா. மூத்த மகள் கோகிலா வெறும் அப்பாவி. வெளுத்ததெல்லாம் பால் என நினைப்பவள். இரக்க குணம் அதிகம். வரதன் என்ற அயோக்கியனுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் மாட்டிக் கொள்கிறாள்.
அவள் பண உதவி செய்யாவிட்டால் தற்கொலை செய்துக் கொள்ள போவதாக மிரட்டியே அவளை தினமும் சந்தித்து பணம் வாங்குகிறான். இதை பார்க்கும் ஊர் மக்கள் அவளை தவறாக பேசுகிறார்கள். தன் பங்கிற்கு அந்த வரதனும் தனக்கும் கோகிலாவிற்கும் தொடர்பு இருப்பதாக செய்தி பரப்புகிறான். அவளின் கல்யாண ஏற்பாடுகளை தடுக்கும் விதமாக பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை வீட்டாருக்கு மொட்டை கடுதாசி எழுதுவதிலிருந்து அவர்களை சந்தித்து அவதூறு பரப்புவதையும் வாடிக்கையாக வைத்துள்ளான். அவன் ஒரு பிக் பாக்கெட் கும்பலுக்கு தலைவனாக இருக்கிறான்.
ஊரார் பேசும் அவதூறு, அதன் காரணமாக நடக்காமல் போகும் கல்யாணம் இவையெல்லாம் அவளது தந்தையை மனமொடியச் செய்கிறது. இந்த அவமானம் தாங்காமல் கோகிலாவின் அண்ணன் ஊரை விட்டே ஓடிப போய் விடுகிறான். அந்த குடும்பத்திற்கு நெருக்கமான வக்கீல் மட்டுமே அவர்களுக்கு ஆறுதலாக இருக்கிறார் .
அங்கே அமிர்தசரசில் அலுவலகத்தில் வேலை பார்க்கும் டைப்பிஸ்டும் ரவியும் ஒருவரை ஒருவர் விரும்பிகின்றனர் என்பதை அறியும் ரகு அவர்களது திருமணத்தை நடத்தி வைக்கிறான். திருமணத்திற்கு பின்னும் ரகுவும் ரவியும் ஒரே வீட்டிலேயே சேர்ந்து வாழ்வது பற்றி அலுவலகத்தில் சிலர் தவறாக பேச அவர்களுடன் ரகு சண்டைக்கு போகிறான். ஒரு கட்டத்தில் இது அதிகமாகவே வீட்டை விட்டு வெளியேற முடிவெடுக்கும் ரகுவை ரவி தடுக்கிறான். ஊரார் பேச்சுக்கெல்லாம் பயந்து நமது வாழ்க்கையை நாம் நாசப்படுத்திக் கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்துகிறான். அவன் அன்புக்கு கட்டுப்பட்டு ரகு அந்த வீட்டிலேயே தங்குகிறான்.
சென்னையில் மகாதேவனின் குடும்ப வக்கீல் ஒரு ஏழைக் குடும்பத்திற்காக வாதாடி அவர்களது சொத்தை மீட்டுக் கொடுக்கின்றார். எந்த வரனும் ஒத்து வராத நிலையில் மனம் உடைந்து நிற்கும் மகாதேவனுக்கு உடல் நலக் குறைவு ஏற்படுகிறது. அவரைப் பார்க்க வரும் வக்கீலுக்கு தான் கேஸ் ஜெயித்துக் கொடுத்த பெற்றோர்கள் தங்களின் ஒரே மகனுக்கு கல்யாணத்திற்கு பெண் இருந்தால் சொல்லும்படி சொன்னது நினைவுக்கு வருகிறது. அவர்களை தொடர்பு கொள்கிறார்.
அமிர்தசரசில் ரகுவிற்கு கல்யாணத்திற்கு பெண் பார்க்க வரும்படி கடிதம் வருகிறது. ரவி அலுவலக வேலை காரணமாக வர முடியாத சூழ்நிலையைச் சொல்ல, பெண் பார்த்து விட்டு பெண்ணின் புகைப்படத்தை அனுப்புவதாக சொல்லி விட்டு ரகு கிளம்பிச் செல்கிறான்.
சென்னையில் ரகு பயணம் செய்யும் கார் ரிப்பேராகி விட அந்த வழியாக வரும் கோகிலா தன் காரில் ரகுவிற்கு லிப்ட் கொடுக்கிறாள். முன் பின் தெரியாத அவனிடம் தன் மொத்த கதையையும் அவள் கூற, ரகு அவளை நன்கு புரிந்துக் கொள்கிறான். மறுநாள் பெண் பார்க்க செல்லும் ரகுவைப் பார்த்து கோகிலாவும் கோகிலாவைப் பார்த்து ரகுவும் சந்தோஷ அதிர்ச்சி அடைகிறார்கள். கலயாணத்திற்கு முழு சம்மதம் தெரிவிக்கும் ரகு கோகிலாவின் போஃட்டோவை வாங்கி ரவிக்கு அனுப்புகிறான். மகாதேவன் குடுமபத்திற்கு மிகப் பெரிய சந்தோஷம்.
புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைகிறான் ரவி. இந்த பெண் உனக்கு ஏற்றவள் அல்ல என்று பதில் எழுதி விடுகிறான். அதை பார்த்து துடித்துப போகும் ரகு, கோகிலா வீட்டிற்கு கடிதத்தோடு வருகிறான். அங்கே சகுந்தலாவை பார்த்து விஷயத்தைச் சொல்ல அவள் அதிர்ந்து போகிறாள். கடிதத்தை படித்து பார்க்கும் அவளுக்கு அது தன் அண்ணன் எழுதிய கடிதம் எனப் புரிகிறது. இப்போது இந்த விஷயத்தை சொன்னால் தன் தந்தையால் அதை தாங்கிக் கொள்ள முடியாது என்றும் நேரம் வரும் போது தானே சொல்வதாகவும் சொல்லி கடிதத்தை வாங்கி கொண்டு ரகுவை அனுப்பி விடுகிறாள். தன் அண்ணனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறாள்.
மீண்டும் அமிர்தசரஸ் செல்லும் ரகு கையில் அந்தக் கடிதம் கிடைக்கிறது. அதை படித்து பார்த்து உண்மையை தெரிந்துக் கொள்ளும் ரகு, ரவியிடம் கேட்க, கோகிலா தன் தங்கைதான் என ஒப்புக் கொள்கிறான் ரவி. என்னை பற்றி அவதூறு பேச்சு வந்த போது எனக்கு அவ்வளவு அறிவுரை சொன்னாயே, இப்போது உன் தங்கையைப் பற்றியே இப்படி பேசுகிறாயே என்று ரகு கேட்க அதற்கு ரவி, என் தங்கை நல்லவளா கெட்டவளா என்று எனக்கு தெரியாது. ஆனாலும் தெரிந்தோ தெரியாமலோ அவப் பெயர் சுமக்க நேர்ந்த அவள் உனக்கு வேண்டாம், என் நண்பனுக்கு வேண்டாம் என்பதால் தான் அப்படி சொன்னேன் என்கிறான். அவனின் நட்பை எண்ணி பெருமைப்படும் ரகு தான் செய்ய வேண்டியதை முடிவு செய்து சென்னைக்கு செல்கிறான்.
அங்கே கல்யாண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. எப்படி சொல்வது என்று தெரியாமல் சகுந்தலா தடுமாறிக் கொண்டிருக்க அவள் ஒளித்து வைத்த ரவியின் கடிதம் அவளது தந்தையின் கையில் சிக்கி விடுகிறது. தன் மகனே இந்த கல்யாணத்தை நிறுத்தி விட்டான் என்பது தெரிந்ததும் இடிந்து போகும் மகாதேவன் அந்த கோபத்தை எல்லாம் கோகிலாவிடம் கொட்ட அந்த நேரம் ரகு அங்கே வந்து கோகிலாவை தான் ஏற்றுக் கொள்வதாக சொல்கிறான். அனைவரும் மகிழ்கிறார்கள்.
ஆனால் முடிவு?
இந்தப் படத்தை பொறுத்த வரை நடிப்புக்கென்றே எடுத்த படம் எனச் சொல்லலாம். இரு திலகங்களின் அபார நடிப்பு வெளிப்பட்ட படம் இது.
நடிகர் திலகத்தை பொறுத்த வரை மிக மிக இயல்பாக அதே சமயம் அவரின் ஒவ்வொரு உணர்வும் ஆழமாக பார்வையாளன் மனதில் பதியும் வண்ணம் நடித்திருப்பார். முதல் காட்சியில் மயங்கி கிடக்கும் எஸ்.எஸ்.ஆரை தூக்கிக் கொண்டு வைத்து அவரை உபசரிக்கும் இடத்திலிருந்து இறுதிக்காட்சியில் சாவித்திரியின் சோக முடிவை சொல்லி கலங்குவது வரை - டாப்.
அறிமுக காட்சியில் தனக்கே உரிய பாணியில் ஸ்டைலாக சிகரெட் பிடித்துக் கொண்டே எஸ்.எஸ்.ஆரை விசாரிக்கும் காட்சியே களை கட்டி விடும். வாசலில் போஸ்ட் குரல் கேட்கிறது.[அனேகமாக அதிகமாக போஸ்ட் என்ற குரல் கேட்டது இந்த படத்தில் தான் இருக்கும்]. லெட்டரை பிரிக்கிறார். படிக்கிறார். முகம் மாறுகிறது. கண்ணை மூடி திறக்கிறார். கண்ணில் நீர் கட்டி நிற்கிறது. [அவருக்கு தான் அது "கண்" வந்த கலையாயிற்றே]. என்னவென்று கேட்கும் நண்பனிடம், அப்பாக்கு உடம்பு சரியில்லையாம் ஆயிரம் ரூபாய் பணம் வேணும்னு அம்மா லெட்டர் போட்டுருகாங்க. நம்மாலே பணம் அனுப்ப முடியாது,ரெண்டு சொட்டு கண்ணீர் தான் விட முடியும். அந்த கடமையை செஞ்சாச்சு. நீ போய் ஷேவ் பண்ணு என்று சொல்லும் போது அந்த பாத்திரத்தின் உணர்வோடு நாமும் இணைந்து போவோம். நண்பன் தன் நிலை புரிந்து ஊருக்கு பணம் அனுப்பி வைத்தான் என்று தெரிந்ததும் அதிக வசனங்கள் இல்லாமல் அந்த நன்றியை கண்களில் சொல்வதும் அவரால் மட்டுமே முடிந்த ஒன்று.
தமிழ்நாட்டு சாப்பாடுக்கு அவர் ஏங்கும் ஏக்கம், அலுவலகத்தில் ஒரு பெண் சாப்பிடும் சாதத்தையும் குழம்பையும் அவ்வளவு ஏக்கத்துடன் பார்ப்பது, எப்போதும் சப்பாத்தி சாப்பிட்டு வெறுத்து போயிருக்கும் நேரத்தில் நண்பனுக்கு திருமணம் ஆக, அவன் மனைவியாவது நன்றாக சமைத்து போடுவாள் என ஆசையோடு காத்திருக்கும் போது அவளும் சப்பாத்தி செய்துக் கொண்டு வைக்க அவர் முகம் மாறும் பாவம் இருக்கிறதே, பிரமாதம். பிறகு தானே சமையல் அந்த பெண்ணிற்கு சொல்லிக் கொடுப்பதும் [அரிசியிலே கல்லை களையணும். அரிசியை களைஞ்சிரக் கூடாது] இருந்தாலும் என்னவோ குறைகிறதே என்று யோசித்து கணவன் புடவை கட்டி விட, இவர் தலை வாரி பூ சூட்டுவதும் ரசிக்க தகுந்த காட்சிகள். தன் தங்கையாய் பாவிக்கும் நண்பனின் மனைவியையும் தன்னையும் தியேட்டரிலும் அலுவலகத்திலும் அவதூறு பேசும் ஆட்களை அடித்து துவைப்பது ஆவேசம் என்றால் அதன் காரணமாக வீட்டை விட்டு வெளியேறும் தன்னை உன் மேலயே உனக்கு நம்பிக்கை இல்லை. அதனாலே தான் வெளியே போறே என்று சொல்லும் நண்பனை சட்டையை பிடித்து உலுக்கும் உக்கிரம் அதே நேரத்தில் அவன் வார்த்தைகளில் இருக்கும் உண்மையை உணர்ந்து உடைந்து அழுவது எல்லாமே டாப்.
இப்படி கலகலப்பாக இருக்கும் அவர் சென்னைக்கு சென்றவுடன் சாவித்திரியைப் பார்த்தவுடன் அவர் பேச்சைக் கேட்டவுடன் அவர் பாத்திரத்திற்கு ஒரு சீரியஸ்னெஸ் வருவதோடு அந்த பெண்ணின் மேல் உருவாகும் இரக்கத்தையும் முகபாவத்திலேயே வெளிப்படுத்தியிருப்பார். பெண் பார்க்க போகும் இடத்தில் எதிர்பாராமல் சாவித்திரி தான் பெண் என்று தெரிந்தவுடன் அவருக்குள் ஏற்படும் பலவேறு உணர்வுகளை அழகாக செய்திருப்பார். நண்பனுக்கு காண்பிக்க போஃட்டோ வேண்டும் என்று வெட்கத்துடன் கேட்பதாகட்டும், பதில் வரவில்லையே என்று தவிப்பதாகட்டும், கடிதம் வந்தவுடன் அந்த முகத்தில் வரும் சந்தோஷம் ["நான் சொன்னேன்லே கரெக்டா பதில் போட்டுட்டான் பாரு"], கடிதத்தை பிரித்துப் படிக்க ஆரம்பிக்க அந்த குரலில் ஏற்படும் தடுமாற்றம், அந்த பெண் உனக்கு ஏற்றவள் அல்ல எனபதை படித்து விட்டு இடிந்து போவது, தன் நிலையை எப்படிச் சொல்வது என்று தெரியாமல் புஷ்பலதாவிடம் வார்த்தை வராமல் தவிப்பது, தன் வீட்டிற்கு வந்து பெண்ணை குறை சொல்லும் ராதாவை கன்னத்தில் ஒரு அறை கொடுத்து ஊர்காரர்களை சத்தம் போடுவது, இறுதியில் சாவித்திரியை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கை கூடாமல் போய் விட, அவளின் உயர்வுகள் பற்றி குமுறி பேசுவது இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு சில படங்களில் ஆரம்பம் முதல் முடிவு வரை நடிகர் திலகத்தின் சிறப்பான நடிப்பை பற்றி சொல்ல வேண்டி வரும். அப்படிப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று.
நடிகையர் திலகம் சாவித்திரி படத்தின் நாயகி. மொத்தம் ஒரு எட்டு அல்லது பத்து காட்சிகளில் தான் வருவார். ஆனால் அனாயசமாக செய்திருப்பார். இரு திலகங்களும் இணைந்து நடித்த படங்களில் பாசமலருக்கு பின் மிக சிறந்த படம் கை கொடுத்த தெய்வம். அந்த உடல் வளர்ந்த ஆனால் குழந்தை மனம் படைத்த கோகிலா பாத்திரத்தை வேறு யாராலும் இவ்வளவு சிறப்பாக செய்திருக்க முடியாது. ஒவ்வொரு முறையும் தங்கை தன் நடவடிக்கைகளைப் பற்றி ஏதாவது சொல்ல, அவர் அதற்கு கொடுக்கும் பதில், அப்பாவின் மேல் வைத்திருக்கும் பாசம், ராதாவிடம் முதலில் காட்டும் இரக்கம், பிறகு பயம் மற்றும் கோபம்,சிவாஜியை முதலில் பார்க்கும் போதே தன் கதை முழுக்க சொல்லும் அப்பாவித்தனம், முதல் நாள் பார்த்த சிவாஜியே மறு நாள் பெண் பார்க்க வர, ஓடி வந்து சேரை இழுத்துப் போட்டு பக்கத்தில் உட்கார்ந்து "ஆமா, நேத்து அப்புறம் உங்க பிஃரண்டை பார்த்திங்களா" என்று காஷுவலாக விசாரிப்பது, இறுதியில் தந்தையே தன்னை கடுமையாக திட்டி விட மனம் உடைந்து தூக்க மாத்திரை சாப்பிட்டதை சொல்வது - நடிகையர் திலகம் பின்னியிருப்பார் நடிப்பில்.
இந்த படத்தின் மிக பெரிய ஆச்சரியம் எஸ்.எஸ்.ஆர். வழக்கமான தன் பாணியை விட்டு விட்டு வெகு இயல்பாக செய்திருப்பார். சிவாஜியும் அவரும் இணைந்து வரும் எல்லாக் காட்சிகளுமே நன்றாக மிளிரும். பல்வேறு உணர்வுகளையும் வெளிப்படுத்தியிருக்கும் விதத்தில் அவரது அனுபவம் பளிச்சிடும். குறிப்பாக வீட்டை விட்டு வெளியே போகிறேன் என்று சொல்லும் சிவாஜியிடம் உன் மேலயே உனக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்லுவது, கோபப்பட்டு தன் கழுத்தை நெரிக்கும் சிவாஜியிடம் நீ வீட்டை விட்டு வெளியே போறேன்னு சொன்னா, நான் அப்படிதாண்டா சொல்லுவேன் என்று அசராமல் சொல்லும் இடம் எல்லாம் பிரமாதம். ஆனால் இவ்வளவு நன்றாக செய்து விட்டு அதற்கு ஒரு திருஷ்டி பரிகாரம் போல ஆயிரத்தில் ஒருத்தியம்மா பாடலின் போது நண்பனுக்கு கடிதம் எழுதுறேன் பேர்வழி என்று அவர் காட்டும் அபிநயம் இருக்கிறதே! -----
கே.ஆர்.விஜயா மராத்தி பெண்ணாக வந்து தமிழ் பெண்ணாக மாறும் ரோல். நடிப்பை கொடுப்பதற்கும் ஒன்றுமில்லை. கெடுப்பதற்கும் ஒன்றுமில்லை. புஷ்பலதா சாவித்திரியின் தங்கை சகுந்தலாவாக ஒரு perptual சோகத்தோடு காட்சியளிக்க வேண்டிய பாத்திரம். குறை சொல்ல முடியாது.
ரங்காராவ் - கோகிலாவின் அப்பா. அவர் எப்போது சோடை போனார் இதில் போவதற்கு? சமூத்தினால் வீண் அவதூறு பரப்பப்படும் ஒரு பெண்ணின் தந்தையை அப்படியே கொண்டு வந்து நிறுத்தியிருப்பார். எம்.ஆர்.ராதா - வில்லன் வரதன். அவருக்கு பெரிய அளவில் பேசும்படியான பாத்திரம் இல்லை. குறிப்பிடத் தகுந்த இன்னொருவர் வக்கீலாக வரும் சகஸ்ரநாமம். கர்நாடக சங்கீதத்தை ஹம்மிங் செய்தபடியே அவர் ஒவ்வொரு விஷயத்தையும் டீல் செய்வதே அழகு.
கே.எஸ்.ஜியின் படங்களிலே, மிகச் சிறந்த படம் இதுவென்றால் மிகையாகாது. சென்னையிலும் அமிர்தசரசிலும் நடக்கும் கதைகளை அழகாக எந்த நெருடலும் இல்லாமல் இணைப்பதை செவ்வனே செய்திருப்பார். சாதாரணமாக பக்கம் பக்கமாக வசனம் எழுதும் கே.எஸ்.ஜி. இதில் முற்றிலும் மாறுபட்டு இயல்பான வசனங்களை எழுதியிருப்பார். சிவாஜி முதலில் எஸ்.எஸ்.ஆரை தன் வீட்டிலேயே தங்குமாறு சொல்லும் போது வரும் வசனங்கள் அதற்கு சாட்சி. "சில பேருக்கு கூட்டம் பாரமா இருக்கலாம்.ஆனால் எனக்கு தனிமை பாரமாக இருக்கு" என்று சிவாஜி சொல்ல "உங்கள் அன்புக்கு கட்டுபடறேன். ஆனால் வார்த்தைக்கு கட்டுப்பட முடியவில்லை" என்று சொல்லும் எஸ்.எஸ்.ஆர். இது போல் சில பல நல்ல வசனங்கள் படம் முழுதும் தூவி விடப்பட்டிருக்கும். இப்படி பட்ட ஸ்டார் காஸ்ட் அமைந்து விட்ட பிறகு இயக்குனர் வேலை வெகு சுலபம். நடிகர் திலகத்தை வைத்து கே.எஸ்.ஜி. இயக்கிய முதன் முதல் படமே மறக்க முடியாத படமாக அமைந்தது தனிச் சிறப்பு. குறிப்பிடத் தகுந்த மற்றொரு விஷயம் நகைச்சுவை படத்திற்கு வெகு முக்கியம் என்று கருதப்பட்ட காலத்தில் காமடி டிராக் இல்லாமலே காமடி நடிகர்கள் இல்லாமலே படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்லலாம் என்பதை உணர்த்தியிருப்பார்கள்.
கர்ணன் காமிரா. ஆனால் கண்ணை உறுத்தும் angle-கள் இல்லாத சீரான ஒளிப்பதிவு. இசையைப் பொறுத்தவரை நான்கே பாடல்கள். ஆனால் நான்கும் வெகு பிரபலமான பாடல்கள்
1. குலுங்க குலுங்க சிரிக்கும் சிரிப்பில் இவள் ஒரு பாப்பா- சாவித்திரி தோழி பெண்களோடு கடற்கரையில் பாடும் பாடல்.
2. சிந்து நதியின் மிசை நிலவினிலே- மகாகவியின் மறக்க முடியாத பாடல். சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து என்ற வரிகளுக்கேற்ப இரண்டு சரணங்களுக்கிடையே தெலுகு வரிகள் மனதை வருடும் மெட்டில் அமைக்கப்பட்ட விதத்திற்காகவே மெல்லிசை மன்னர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஆலப்புழையின் காயலில் [Back Waters] ஓடும் படகு பாட்டிற்கு மேலும் அழகை கொடுக்கும். அது மட்டுமா? மீசையும் தலைப்பாகை கட்டும் உள்ள முகம் மட்டுமே பெரும்பாலும் தெரியும் க்ளோஸ் அப் காட்சிகள் உள்ள இந்த பாடல் பாரதியை இன்றைக்கும் தமிழ் நாட்டிற்கு நினைவுபடுத்திக் கொண்டிருக்கும் ஒன்றல்லவா.
மேலும் கங்கை நதி தீரத்திலும் காவிரி நதி ஓரத்திலும் வாழும் விவசாயிகளை அவர்களின் பாரம்பரிய உடையோடு காண்பித்ததோடு மட்டுமல்லாமல் சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று வீர முழக்கமிட்ட சிங்க மராட்டிய திலகரை அந்த ஒரு கணத்தில் நடிகர் திலகம் நமக்கு அறிமுகப்படுத்தினாரே அது என்றும் மனதில் நிற்கும் காட்சியல்லவா. யானை தந்தம் தரும் நம்பூதிரி மட்டும் என்ன குறைந்தவரா என்ன?. எப்படிப் பார்த்தாலும் மறக்க முடியாத பாடல் மற்றும் காட்சி.
3. ஆஹா மங்கள மேளம் - நடிகர் திலகம் பெண் பார்க்க போகிறார் என்று தெரிந்ததும் விஜயா பாடும் பாடல். எஸ்.எஸ்.ஆர் சேலை கட்டி வருவார்(!)
4. ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ - மற்றொரு காவியப் பாடல். பாடல் வரிகளில் கண்ணதாசனும், இசையில் மன்னர்களும், பாடுவதில் டி.எம்.எஸ்ஸும் நடிப்பதில் சிவாஜியும் பின்னியிருப்பார்கள். சாந்தியில் வரும் யார் அந்த நிலவு பாடலில் முகத்தை காட்டாமல் முதுகை காட்டி கைதட்டல் வாங்குவார் நடிகர் திலகம் என்று சொல்லுவார்கள். ஆனால் அந்த படம் வருவதற்கு முன்பே வெளியான இந்த படத்தின் இந்தப் பாடலில் இரண்டாவது சரணம் தொடங்கும் போது பெண்ணோடு தோன்றி பெண்ணோடு வாழ்ந்தும் என்ற வரிகளுக்கு முதுகை மட்டும் காட்டியபடி தன் வலது கை விரல்களை மட்டும் உயர்த்தி கைதட்டல் வாங்கிய ஒரே நடிகன் நடிகர் திலகம் மட்டுமே.
இப்படி எல்லாம் அமைந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது என்பது சந்தோஷமான செய்தி. சென்னையில் வெளியான நான்கு தியேட்டர்களிலும் மதுரை கோவை முதலிய ஊர்களிலும் நூறு நாட்களைக் கடந்து ஓடியது இந்தப் படம்.
அந்த ஆண்டைப் [1964] பொறுத்த வரை தான் எப்படிப்பட்ட படங்களில் நடிகர் திலகம் நடித்தார்? தமிழ் சினிமா வரலாற்றில் மறக்க முடியாத படங்கள்.
1. கர்ணன் - அதுவரை புராணத்தில் வில்லனாக இருந்த கர்ணன் நாயகனாக மாறினான். இன்று வரை அப்படியே நிலைக்கிறான்.
2. பச்சை விளக்கு - ரயில் என்ஜின் டிரைவர். குடும்பத்திற்காக தன்னை அழித்துக் கொள்ளும் சாரதி.
3. ஆண்டவன் கட்டளை - விவேகானந்தர் வழி நடந்தவர் சபலங்களினாலும் சலனங்களினாலும் திசை மாறி வாழ்வை கிட்டத்தட்ட தொலைத்து பின் மீண்டு எடுத்த கிருஷ்ணன்.
4. கை கொடுத்த தெய்வம் - நட்புக்காக எதையும் செய்யும் இதயம் படைத்த ரகு.
5. புதிய பறவை - வாழ்க்கையில் எல்லா விதமான வசதிகள் இருந்தும் ஒரு நிமிடம் உணர்ச்சி வசப்பட்டதால் நிம்மதியை இழந்து தவித்த கோபால்.
6. முரடன் முத்து - கண் மூடித்தனமான பாசமும் முரட்டு சுபாவமும் கொண்ட முத்து.
7.நவராத்திரி - ஒன்ற இரண்டா எடுத்து சொல்ல! நவரசமும் ஒன்று சேர்ந்து வந்த கொடையல்லவா இது!
இப்படிப்பட்ட ஒரு வருடத்தில் வந்த இந்த படத்தைப் பற்றி பேச எழுத வாய்ப்பு கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி.
[/B]https://i.ytimg.com/vi/95TlllAAOYg/maxresdefault.jpg
https://i.ytimg.com/vi/YCZ-cIZchh4/maxresdefault.jpg
https://upload.wikimedia.org/wikiped...tha_deivam.jpg[/COLOR][/SIZE][/QUOTE]
திருச்சியில் நடிகர்திலகத்தின் 16ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுக்காக இதுவரை 11 வகையான போஸ்டர்கள் தயாராகி விட்டன. அரசியல் பலம் பண பலம் இன்றி இறந்து 16 ஆண்டுகள் ஆன பின்பும் தலைவரின் ரசிகர்கள் ஆர்வம் பிரமிக்க தக்க அளவில் உள்ளது
புதிய பதிவு
நடிகர் திலகத்தின் 'one of the best' பாடல் பதிவு. ('நான் பட்ட கடன்')
அல்லது
கவிஞர் வாலி அவர்களின் நினைவு சிறப்புப் பதிவு
https://i.ytimg.com/vi/9MzlpUZfHDY/maxresdefault.jpg
வாலி அவர்கள் நடிகர் திலகத்திற்காக எழுதியுள்ள பல பாடல்கள் கண்ணதாசனின் பாடல்களுக்கு இணையாக அற்புதமாகவே இருக்கும். 'மாதவிப் பொன் மயிலாள்' ஒன்று போதுமே! ('இரு மலர்களி'ல் அனைத்துப் பாடல்களுமே வாலிதான்) நடிகர் திலகத்தின் படங்களுக்கு பாடல் வரிகளால் அர்ச்சனை செய்யும் 'இரு மலர்களாக' கண்ணதாசன் அவர்களும், வாலி அவர்களும் அவருடைய நடிப்பிற்கு பாடலாசிரியர்கள் என்ற முறையில் தீனி போட்டனர். அந்தப் பாடல்களின் வரிகளை அப்படியே உள்வாங்கி நம் திலகம் ஒப்புயர்வற்ற தன் நடிப்பால் அவ்வரிகளி மெருகேற்றி நம் அனைவருக்கும் அமிர்த விருந்து அளித்துக் கொண்டே இருக்கிறார்.
வாலி பாடல்களில் பழைய பாடல்கள் நிறைய உண்டு. அவற்றை இங்கே சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு நடிகர் திலகத்திற்கு பின்னாளில் அவர் எழுதி பட்டி தொட்டியெங்கும் பட்டை கிளப்பிய ஒரு 'விஸ்வரூப'ப் பாடலை இன்று வாலியின் நினைவு தினத்திற்காகவும், தினம் தினம், மணிக்கு மணி, நிமிடத்திற்கு நிமிடம், நொடிக்கு நொடி நம் நெஞ்சை விட்டு நினைவகலாதிருக்கும் நடிகர் திலகத்திற்காகவும் இங்கே காண்போம்.
06.11.1980 அன்று வெளியான 'விஸ்வரூபம்' படத்தில் நடிகர் திலகத்திற்காக டி.எம்.எஸ்.பாடிய 'திலக'ப் பாடல். இந்த பாடல் வரிகள் எழுதியதற்காக வாலிக்கு நாம் எவ்வளவு வேண்டுமானாலும் கடன் படலாம்.
இந்த வரிகளுக்கு தன் மெல்லிசையால் உயிர் கொடுத்து இன்றுவரை நம் காதுகளில் ரீங்காரமிடச் செய்த மெல்லிசை மன்னருக்கு நாம் எவ்வளவு வேண்டுமானாலும் கடன் படலாம்.
பாடலுக்கேற்றவாறு உருக வைக்கும் நடிப்பைத் தந்து நம் கண்களில் கண்ணீர் நிறையச் செய்த நம் 'கண்மணி' க்காக நாம் எவ்வளவு வேண்டுமானாலும் கடன் படலாம்.
இவ்வளவு அழகிய பாடலை மைசூர் அரண்மனையிலும், அதன் பின்னணியிலும், ஒற்றைக்கல் நந்தி கோவிலிலும் ஒளிப் படமாக்கிய ஒளிப்பதிவாளர் விஸ்வநாதராய் அவர்களுக்காக நாம் எவ்வளவு வேண்டுமானாலும் கடன் படலாம்.
இப்பாடல் காட்சியை உயிரோட்டமாய் எடுத்து உன்னதமாக நம் உள்ளங்களில் உலாவச் செய்த 'தெய்வ மகனி'ன் இயக்குனர் ஏ சி டி க்காக நாம் எவ்வளவு வேண்டுமானாலும் கடன் படலாம்.
நடிகர் திலகம் திரையில் நடித்தால் தானும் அது போலவே பாடல் ரிக்கார்டிங் அறையில் ஓரளவிற்கு நடித்துப் பாடினால்தான் அந்த சிங்கப் பசிக்கு தன் குரலால் தீனி போட முடியும் என்று உணர்ந்து பாடும் 'பாடகர் திலக'த்திற்காக நாம் எவ்வளவு வேண்டுமானாலும் கடன் படலாம்.
ஆமாம்!
'நான் பட்ட கடன் எத்தனையோ பூமியில் பிறந்து
அடைபட்ட கடன் எதுவுமில்லை ஆயிரம் இருந்து
செல்வம் ஆயிரம் இருந்து'
கிராமத்தில் அமைதியாய் விவசாயம் பார்த்து, ஏர் பிடித்து, உழவு செய்த அப்பாவி நாயகன் தன் அன்பு மனைவியுடன் காலக் கொடுமையால் தங்கையை இழந்து, பட்டணம் வந்து கெட்டு, கடத்தல் கூட்டத்தில் சேர்ந்து அல்லது சேர்க்கப்பட்டு, அல்லல்பட்டு, பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி இறுதியில் கள்ளக் கடத்தல் தொழிலின் 'டான்' ஆகிறான். அப்போதும் அவனுக்கு நிம்மதி இல்லை ஆசை மகனே அவனை 'டான்' என்று வெறுத்து ஒதுக்குகிறான்.
ஆயிரம் இருந்தும், வசதிகள் இருந்தும் நிம்மதி இல்லாமல் தவிக்கிறான். ஆனால் அவன் மனையாள் மட்டும் அவனுடைய சுக துக்கங்களில் பங்கு கொண்டு அவனே தெய்வமென வாழ்கிறாள். மலை போனற மணாளன் வெறும் மணல் மேடாய் குன்றிப் போகாமல் இருக்க இறைவன் தந்த வரம் அவன் மனைவி சாவித்திரி.
அவள் தன் கணவனிடம் இதுவரை எதுவுமே கேட்டதில்லை. உலகையே கேட்டாலும் வாங்கிக் கொடுத்து விடுவான். ஆனால் அவள் ஆசைப்பட்டாளில்லை. அவளுடைய உலகமே அவன் ஒருவன்தான்.
https://i.ytimg.com/vi/jwIo7kBTXX4/maxresdefault.jpg
அவன் வாழ்க்கையில் பட்ட துன்பங்களின் காரணமாக கடவுள் நம்பிக்கை வெறுத்து கோவில் செல்லாமல், கோபுரம் பார்க்காமல் கோபமாய் இருப்பவன் இறுதியில் மனைவியின் பொறுமை அவனை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி அவனை அவளுடனேயே கோவிலுக்கு கூட்டிச் செல்கிறது. அவனுக்கு நன்றாகத் தெரியும் மனைவியைத் தவிர தன்னை உண்மையாக நேசிப்பவர்கள் யாருமில்லையென்று. அவன் தொழில் எப்போதும் அவனை 'காலி' பண்ணைக் காத்திருக்கிறது. அதையும் அவன் உணர்ந்தே இருக்கிறான்.
மனைவி கோவிலில் என்றும் கேட்காத திருநாளாய் அவனிடம் பூ வாங்கித் தரச் சொல்லி கேட்கிறாள். ஆனந்த அதிர்ச்சி அவனுக்கு. பூ விற்கும் பெண்மணியிடம் சென்று தன் 'பூவை'க்காக பூ வாங்குகிறான். நூறு ரூபாயும் அதற்காக நீட்டுகிறான். பூக்காரி 'சில்லறை இல்லை' என்று சொன்னவுடன் கொஞ்சம் சிதறுபவன் 'இதுவரை எதுவும் கேட்காத மனைவி இன்று என்னிடம் பூ கேட்டிருக்கிறாள் அவளுக்கு வாங்கிக் கொடுத்தே தீர வேண்டும்' என்று பூக்காரியிடம் சொல்ல, அந்த பெரிய மனது பூக்காரி 'நீங்க பணமே கொடுக்க வேண்டாம்....இந்தாங்க பூ...மனைவிக்கு வச்சு விடுங்க' என்று சொல்லி பெருந்தன்மையுடன் பணம் வாங்காமல் நகர, சற்றும் அதை எதிர்பாராதவன் 'இந்தக் கடனை நான் எப்படி தீர்க்கிறது?' என்று தனக்குள் புலம்பிக் கொள்கிறான்.
பூக்காரியால் அவனுக்கு அப்போது உண்டான 'கடன்' என்ற வார்த்தை தன் வாழ்க்கையில் எப்படியெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறது என்று அவன் என்ன ஆரம்பிக்கிறான். தன் வாழ்வில் இதுவரை தீர்க்க இயலாத கடன்களை பற்றி நினைக்க ஆரம்பிக்கிறான். அவன் பட்ட கஷ்டங்களைவிட அவன் பட்ட கடன்கள்தான் அவன் மனதில் நிழலாய் இப்போது ஓடுகிறது. ஆனால் அது காசு வாங்கிய கடன் அல்ல...'பெத்த கடன், வளர்த்த கடன், குரு கடன், மனைவி கடன்' என்று அது மனைவியின் மேல் படரும் அன்பான, வாஞ்சையான பார்வையுடன் அருமையான பாடலாக அவனிடமிருந்து வெளிப்பட ஆரம்பிக்கிறது.
நான் பட்ட கடன் எத்தனையோ பூமியில் பிறந்து
நான் பட்ட கடன் எத்தனையோ பூமியில் பிறந்து
அடைபட்ட கடன் எதுவுமில்லை ஆயிரம் இருந்து
செல்வம் ஆயிரம் இருந்து
பெத்த கடன் தாயிடத்தில் பாக்கி இருக்கு
என்னை வளர்த்த கடன் தகப்பனிடம் வளர்ந்து கிடக்கு
பெத்த கடன் தாயிடத்தில் பாக்கி இருக்கு
என்னை வளர்த்த கடன் தகப்பனிடம் வளர்ந்து கிடக்கு
கல்வி கற்ற கடன் குருவினிடம் சேர்ந்து கிடக்கு
இதில் மற்ற கடன் அனைத்துமென்ன அமைதியிருக்கு
நான் பட்ட கடன் எத்தனையோ பூமியில் பிறந்து
அடைபட்ட கடன் எதுவுமில்லை ஆயிரம் இருந்து
செல்வம் ஆயிரம் இருந்து
என் கைப்பிடித்திவள் வந்தாள் வந்த கடன் தீர்ப்பேனோ
என் காவலுக்கிவள் நின்றாள் நின்ற கடன் தீர்ப்பேனோ
என் கைப்பிடித்திவள் வந்தாள் வந்த கடன் தீர்ப்பேனோ
என் காவலுக்கிவள் நின்றாள் நின்ற கடன் தீர்ப்பேனோ
ஹோ,,,,,,ஓ
என் தேவைகள் இவள் தந்தாள் தந்த கடன் தீர்ப்பேனோ
பல சேவைகள் இவள் செய்தாள் செய்த கடன் தீர்ப்பேனோ
நான் பட்ட கடன் எத்தனையோ பூமியில் பிறந்து
அடைபட்ட கடன் எதுவுமில்லை ஆயிரம் இருந்து
செல்வம் ஆயிரம் இருந்து
என் தாய் போல் பிழை பொறுத்தாள் அந்தக் கடன் தீர்ப்பேனோ
ஒன்றும் தெரியாதிவள் நடித்தாள் அந்தக் கடன் தீர்ப்பேனோ
என் தாய் போல் பிழை பொறுத்தாள் அந்தக் கடன் தீர்ப்பேனோ
ஒன்றும் தெரியாதிவள் நடித்தாள் அந்தக் கடன் தீர்ப்பேனோ
ஹோ,,,,,,ஓ
எந்தக் கடலிலும் மிகப் பெரிது நல்ல மனைவியின் சேவை
அதை அடைத்திட எண்ணும் போது பல பிறவிகள் தேவை
நான் பட்ட கடன் எத்தனையோ பூமியில் பிறந்து
அடைபட்ட கடன் எதுவுமில்லை ஆயிரம் இருந்து
செல்வம் ஆயிரம் இருந்து
https://i.ytimg.com/vi/UvJDwBvlSJw/maxresdefault.jpg
வாலியை நினைவுகூறும் போது நடிகர் திலகத்தை மறந்து விட இயலுமா? முடியுமா? வாலி வணங்கிய 'ராமனை'க் கூட மறக்கலாம்...நம் கணேசரை மறக்க முடியுமா?
இந்தப் பாடலில் ஆண்டவன் அடக்கி வாசிக்கும் அற்புதங்கள் நிகழுமே! பாடலின் ஒவ்வொரு 'கடனை'யும் அவர் பாடி கலங்கும் போது கல்பட்டது போல நம் நெஞ்சங்களும் கலங்குமே! அவரோடு சேர்ந்த ஒரு கடன் பட்ட கணவனாய் நாமும் மாறி விடுவோமே! மனைவியின் இத்தனை கால பொறுமையும், சகிப்புத் தன்மையும் அவர் முகம் காட்டும் அந்த 4 நிமிட பாவங்கள் பார்ப்போரிடம் அப்படியே பதியுமே! மனைவியை வெறுப்பவன் கூட ஒரு முறை இந்தப் பாடலில் திலகத்தின் நடிப்பைப் பார்த்தால் திருந்திப் போவானே!
வாக்கிங் ஸ்டிக் வைத்து வகைவகையான பாடல்களை வாகாக நடித்துத் தந்த நடிக தெய்வம் இதிலும் அதை நடிக்க வைக்கிறதே 'செல்வம் ஆயிரம் இருந்தும் என்ன பயன்?...கிடக்கிறதே ஆயிரம் கடன்' என்று கலங்கும் உள்ளத்துடன், கனத்த இதயத்துடன் காட்டும் முகபாவங்கள் அளவெடுத்து தைத்த நடிப்புச் சட்டையாக நம் நாடி நரம்பெல்லாம் சென்று நிறைகிறதே!
'செல்வம் ஆயிரம் இருந்து; எனும் போது முகத்தில் காட்டும் சிரிப்போடு கலந்த சலிப்பு.. வேதனை...இடையிசையில் சுஜாதாவுடன் கடந்த கால நினைவுகளை வேதனையுடன் அசை போட்டவாறு வரும் அலட்டாத நடை,.. அப்படியே சைடில் நடந்து வரும் மனைவியை ஒரு வினாடி பார்க்கும் அந்த கருணைப் பார்வை...(அடிப்பாவி மகளே! இத்தனை நாள் என்ன சுகத்தை நான் உனக்கு கொடுத்தேன்? என்னிடம் என்ன இன்பம் கண்டாய்?..எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் எனக்காக இப்படி ஓடாய்த் தேய்ந்து உருக்குலைந்து போய்க் கிடக்குறியே') 'ஹோ' என்ற விரக்தியில் தலை தூக்கும் தவிப்பு... அவருக்கே உரித்தான 'நான் பட்ட கடன்' எனும் போது செய்யும் தலையாட்டல்...பொங்கும் அழுகையை கட்டுப்படுத்தி அவள் பக்கம் கை நீட்டி 'ஒன்றும் தெரியாதிவள் நடித்தாள்... அந்தக் கடன் தீர்ப்பேனோ' என்று அவள் மீது பொய்க் கோபம் காட்டி பொருமும் சோகம்... 'எந்தக் கடலிலும் மிகப் பெரிது நல்ல மனைவியின் சேவை... அதை அடைத்திட என்னும் போது பல பிறவிகள் தேவை' என்று 'அவள்மீது பட்ட கடனை அடைக்கவே முடியாது' என்ற அன்புப் பெருக்கில் விக்கி அழும் கடன்காரக் கணவனின் பச்சாதாப பரிதாப நிலை என்று பாடல் முழுதும் படுபாந்தமாக கடன் தீர்க்க முடியாத கணவனாக மனைவி மேல் மாறாத அன்பு செலுத்தும் கணவனாய், கண்ணியவானாய் கலக்கி எடுக்கிறார் நடிகர் திலகம். கிராமங்களில் மோட்டார் பம்ப் இறக்கையில் வாய்க்காலில் தெள்ளது தெளிவாக ஒரே சீராக ஓடும் தண்ணீர் போல சிறப்பான நடிப்பை வழங்கி தாய்க்குலங்களில் நெஞ்சில் மட்டுமல்ல...நம் அனைவர் நெஞ்சங்களிலும் நிறைகிறார் திலகம். அந்த மூன்று நிமிட நேரத்தையும் நம் வாழ்க்கையின் தருணங்களாக ஆக்கி, நம்மை அவருடன் இணைத்து, அவர் சோகங்களை நமக்கு 'கடன்' கொடுத்து, நம் வாழ்க்கையின் கடன்களையும் நினைத்துப் பார்த்து விடச் செய்கிறார். இது அவரால் அன்றி வேறு எவரால் முடியும்?
https://i.ytimg.com/vi/SxeODtxmL9M/maxresdefault.jpg
சுஜாதா நடிகர் திலகத்தின் மனைவி சாவித்திரியாக பாந்தம்தான். இருந்தாலும் திலகத்தின் முன் சம்திங் மிஸ்ஸிங் ஆனா மாதிரி தெரியும். பேலன்ஸிங் பண்ண கொஞ்சம் கஷ்டப்படுவார். ஆனால் அது சுஜாதாவின் குற்றம் அல்ல. திலகத்தின் மீதுதான் குற்றம். ஏனென்றால் பாடலின் முழு ஆக்கிரமிப்பும் அவரே. அவருக்கப்புறம்தான் வரிகள், இசை, பாடகர்கள், நடிகர்கள் என்று விமர்சிக்கவே முடியும். இந்தப் படாலில் மட்டுமல்ல...எந்தப் பாடலிலும்.
(இன்னொன்று..இந்த மாதிரி மனைவி மேல் அன்பு கொண்டு கொட்டும் பாடல்கள் திலகத்திற்கு பல உண்டு. ஒவ்வொரு பாடலுக்கும் வேறு வேறு ஜோடி. ஒவ்வொரு ஜோடிக்கும் வேறு வேறு மாதிரி பக்குவ நடிப்பு)
பத்மினியுடன் வயதான காதலைக் காட்டினால் அங்கு நிலைமையே வேறு. பத்மினி கண்ணில் நீர் வழிந்தால் நிஜமாகவே இவர் நெஞ்சில் உதிரம் கொட்டி விடும். நெருக்கத்தோடு ஆழம் அதிகமாகும். செல்லக் கோபமும் கண்டிப்பும் பதமினியிடம் நைசாக காட்டப்படும். நெருக்கத்தைவிட உரிமை அதிகமாக இருக்கும்.'பாலக்காட்டு அப்பாவி ராஜா' இளமையில் பாடும் போது பார்க்கலாம். அதே முதுமையில் பிள்ளைகளால் புறக்கணிக்கப்படும் போது வேரென இருந்து வீழ்ந்து விடாமல் தாங்கிப் பிடிக்கும் பத்மினி மனைவியின் மடி ஆறுதல் தரும் இடமாய் இருக்கும்.
இதில் '50 லும் ஆசை வரும்' என்று ரிஷிமூலம் பார்க்காது 'புன்னகை அரசி'யுடன் திலகம் குதூகலம் கொண்டு பாடும் போது சிறுவயதுக் காதலன் தோற்பான். 'ஓ..மை டியர் டாக்டர்' என்று குறும்பு கொப்பளிக்க அதே புன்னகை அரசியுடன் 'ஜெனரல்' பாடும் போது கணவன் மனைவியின் அந்தரங்கம் அன்னியோன்யம் அருமையாக வெளிப்படும். காமக் குறும்பு கொப்பளிக்கும்.. விஜயா என்றால் நெருக்கமும், நேசமும் வேற மாதிரி. ('புருஷன் பொண்டாட்டின்னா சிவாஜி, கே.ஆர்.விஜயா மாதிரி இருக்கணும்' என்று பலர் சொல்லக் கேட்டு ரசித்திருக்கிறேன்)
சுஜாதாவுடன் இம்மாதிரிப் பாடல் என்றால் விஜயாவுடன் இருப்பது போல் அவ்வளவாக நெருக்கம் பிளஸ் ஓட்டுதல் இருக்காது. ஆனால் மாறாக ஒரு இரக்கம் இருக்கும்...ஒரு கருணை இருக்கும். கண்ணியம் இருக்கும். 'நினைவாலே சிலை செய்து' காதலி சுஜாதாவுக்காக 'அந்தமானில்' வைத்தாரே! ஆனால் ரொம்பப் பெருந்தன்மை காட்டுவார் இப்பாடல் போலவே.
நடுத்தர வயது பாடல் என்றால் ஸ்ரீவித்யாவுடன் வேறு மாதிரி இருக்கும். கை கோர்த்து விரல்கள் பிடித்து, ஒரு சிறு முத்தம் பதித்து, அழகான நடை நடந்து வருவதோடு 'இமய'த்தின் காதல் முடிந்து போகும். ('கங்கை, யமுனை இங்குதான் சங்கமம்.')
இப்படி தன்னுடன் நடிக்கும் நாயகிகளுக்குத் தகுந்தவாறும் மாற்றி மாற்றி 'நடிப்பரசன்' நடிப்பில் நங்கூரம் பாய்ச்சுவார். இது சும்மா உதாரணத்திற்கு கொஞ்சமே...நிறைய எதிர்பார்த்தீர்களானால் பதிவின் நீளம் அதிகமாகிவிடும்.)
'மெல்லிசை மன்னரி'ன் இசையைப் பற்றிக் குறிப்பிடத்தான் வேண்டும். பாடலின் வரிகள் முடியும் போது பின்னணியில் விடாமல் ஒலிக்கும் கிடாரின் ஒலி இனிமையோ இனிமை. பாடகர் திலகம் நடிகர் திலகத்தின் குரலை தன்னுடையதாக்கி வழக்கம் போல வளமை காட்டுவார்.
மனைவியின் மீது கணவன் பட்ட கடன்களை மாண்புடன், பண்புடன், பாங்குடன் எடுத்துச் சொல்லும் அருமைப் பாடல். சக்கை போடு போட்ட ஹிட் பாடல். பழைய ஹிட் பாடல்களுக்கு கொஞ்சமும் குறையாத சவால் விடும் சாகசப் பாடல். சாகா வரம் பெற்ற பாடல். சரித்திர நாயக்கரின் பாடல். பொதுவான ரசிகர் அல்லாது குறிப்பாக 80 களின் நடிகர் திலகத்தின் இளம் ரசிகர்கள் மத்தியில் இன்று வரை கோலோச்சும் மிகப் பிரபலமான பாடல்.
https://www.youtube.com/watch?v=UvJDwBvlSJw