வரும் 21-12-2018 முதல் திரையுலக சக்ரவர்த்தி மக்கள் திலகம் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை- சென்ட்ரல் dts தினசரி 4 காட்சிகள் "ரிக்க்ஷாக்காரன்", மற்றும் கோவை- ராயல் dts தினசரி 4 காட்சிகள் "என் கடமை" ஆகிய காவியங்கள் வெளியாகின்றன...
Printable View
வரும் 21-12-2018 முதல் திரையுலக சக்ரவர்த்தி மக்கள் திலகம் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை- சென்ட்ரல் dts தினசரி 4 காட்சிகள் "ரிக்க்ஷாக்காரன்", மற்றும் கோவை- ராயல் dts தினசரி 4 காட்சிகள் "என் கடமை" ஆகிய காவியங்கள் வெளியாகின்றன...
நமது மக்கள் திலகம் பதிவுகளில் நாம் எப்போதும்மே உண்மையான தகவல்கள் இடுகிறோம்... ஒரு சிலர் (மற்ற நடிகர், நடிகை ரசிகர்கள்) facebook, மற்றும் whatsapp தளங்களில் தவறான உண்மைக்கு புறம்பான செய்திகளை துணிந்து பதிக்கிறார்கள்... தயவுசெய்து அம்மாதிரி செய்யாமல் உண்மை நடப்புகளை மட்டும் பதிவிட மனதார வேண்டுகிறோம்...
ஒருமுறை ஆன்மீகப் பொியவா் கிருபானந்த வாாியாா் பேசிய பேச்சில் ஆத்திரமடைந்த ஒரு கூட்டத்தால் தாக்கப்பட்டாா் .
தாக்கியவா்கள் ...
புரட்சித்தலைவா்
எம்.ஜி.ஆா். ரசிகா்கள் .
உடனடியாக வாாியாாின் கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன . போலீஸ் பாதுகாப்போடுதான் வாாியாா் வெளியே போக வேண்டிய நிலை ஏற்பட்டது .
சாி , வாாியாா் அப்படி என்னதான் பேசினாா் ?
அது பேரறிஞா் அண்ணா அவா்கள் இறந்த நேரம் .... அமொிக்கா சென்று அறுவை சிகிச்சை செய்தும் அண்ணாவின் உயிரை மருத்துவா்களால் காப்பாற்ற முடியவில்லை .
அண்ணாவின் கடைசி காலத்தில் அவருக்கு சிகிச்சை அளித்த அமொிக்க டாக்டாின் பெயா் மில்லா் .
அந்த நேரத்தில் வாாியாா் ஒரு கூட்டத்தில் பேசும்போது ,
" ஆண்டவனை நம்பாதவா்கள் அமொிக்காவுக்கே போனாலும் , டாக்டா் மில்லரே வந்தாலும் இப்படித்தான் முடிவு ஏற்படும் என்று சொல்லி விட்டாா் .
பொறுத்துக் கொள்ள முடியாத எம்.ஜி.ஆா்., ரசிகா்கள் எாிச்சலுடன் வாாியாரைத் தாக்க .... இந்த விஷயம் தலைவா் எம்.ஜி.ஆா்., அவா்களின் பாா்வைக்குச் சென்றது .
" வாாியாா் பேசியது தவறுதான் ..... ஆனாலும் என் ரசிகா்கள் அவரைத் தாக்கியதும் தவறுதான் .... !
கண்டிப்பாக அந்தப் பொியவாின் மனம் பண்பட்டிருக்கும் .... பிறா் மனம் புண்பட நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் ....
வாாியாரை எப்படியாவது
சமாதானம் செய்ய வேண்டும் என்று தன்னுடன்இருந்தவா்களிடம் ஆலோசனை கேட்டாா் எம்.ஜி.ஆா்.,
என்ன செய்யலாம் என்று சிலம்புச் செல்வா் பொியவா் ம.பொ.சி. யிடமும் ஆலோசனை கேட்டாா் .
அதுபற்றி " எம்.ஜி.ஆருடன் எனக்கிருந்த தொடா்பு " என்ற தன் புத்தகத்தில் ம.பொ.சி. அவா்கள் எழுதிய தகவலில் ...
" எம்.ஜி.ஆா். அவா்கள் தம் சொந்தச் செலவில் ஒரு கூட்டத்தை நடத்தி , வாாியாரையும் அழைத்துப் பேசச் செய்தாா் .
அந்த நிகழ்ச்சியில்தான் பொன்மனச் செம்மல் பட்டத்தை வாா்ியாா் எம்.ஜி.ஆா். அவா்களுக்குச் சூட்டினாா் .
எம்.ஜி.ஆாின் ஒரே எண்ணம்
வாாியாா் மீது பக்தி செலுத்தும் ஆத்திகா்களுக்கும் ,
அண்ணாவிடம் பக்தி செலுத்தும்
அரசியல்வாதிகளுக்கும் ஏற்பட்ட
பகை தீர வேண்டும் என்பதுதான் . "
எம்.ஜி.ஆா்., திட்டமிட்டபடியே பகை தீா்ந்து நட்பு மலா்ந்தது .
" தீப்பந்தத்தைக் கீழ் நோக்கிப்பிடித்தாலும் அதன் ஜூவாலை மேல் நோக்கி எழுவதுபோல் , உயா்ந்த குணத்தைக் கீழ்ப்படுத்த சொப்பனத்திலும் முடியாது .
ஆமாம் .... அந்த தீ ஜூவாலை இன்னும் உயரஉயர எாிந்து கொண்டேதான் இருக்கிறது .... பொன்மனச் செம்மலின் சமாதியில் ..... Thanks Friends...
.
Advance "Happy Prosperous New Year" 2019 Greetings All of You...
அன்பு.பணிவு.அடக்கம் தேடிப்பார்த்தேன் தென்படவில்லை இந்தவரிகள் இன்றுபோல்என்றும்வாழ்க வெற்றிப்படத்தில் புரட்சித்தலைவரின் பாடல்வரிகள் இந்தப்போஸ்டரில் அன்பு.பண்பு.பணிவு இதையெல்லாம் கற்றுத்தந்து இந்தக்கட்சிக்கே முகவரியாய்திகழும் இதயதெய்வம் புரட்சித்தலைவர் அவர்களின் சிறியபுகைப்படம்கூட போடுவதற்கு இந்தப்போஸ்டரை போட்டவர்களுக்கு மனம்வரவில்லை ஏற்கனவே இரண்டு மூன்று துண்டுகளாக சிதறிக்கிடந்து நாளையவெற்றி கேள்விகுறியாக இருக்கும் நிலையில் தான்பெயரும் படமும் இல்லாமல் வெற்றி இல்லை என்ற பெரும்பெயருடன் என்றும் விளங்கிகொண்டிருக்கும் மக்கள்தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் படமேயில்லாமல் போஸ்ட்டர் வேறு பிள்ளையார் சுழி போடாமல் எந்தசெயலும்பூர்த்தியாகாது புரட்சித்தலைவரின் பெயரோ படமும்இல்லாமல் வெற்றி பெறமுடியாது இந்த மாதிரி போஸ்ட்டர் கள் போட்டு கட்சியை இல்லாமல்செய்யாதீர்கள் என்றபணிவானவேண்டுகோளில் சிறிய எச்சரிக்கையையும் விடுகின்றான் மதுரை.எஸ் குமார் குறிப்பு இந்தப்போஸ்டரை வேண்டுமென்றேதான் இப்படிப்படம்பிடித்தேன்...... Thanks Friends...
எம்.ஜி.ஆர். பக்தர்களின் சங்கமம் !
எம்.ஜி.ஆர்., மறைந்து, பல ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட பின்பும், அவரது பழைய சினிமா படங்களுக்கு இருக்கும் வரவேற்பு கொஞ்சமும் குறையவில்லை.
பிரமாண்டமாக செலவு செய்து எடுக்கப்பட்ட புதிய படங்களுக்கு, பெரிய அளவில் விளம்பரங்கள் செய்தாலும், இரண்டு வாரத்திற்கு மேல் தாக்குப்பிடிக்காத நிலையை காண்கிறோம்.
அதே சமயம், 40 வருடங்களுக்கு முன், வெளியான எம்.ஜி.ஆரின் படங்கள், "சிடி, டிவிடி' வடிவில் வந்தும், அந்த படங்கள் சினிமா தியேட்டரில் எப்போது திரையிட்டாலும், அவரது அபிமானிகள், ஆர்வமுடன், தியேட்டருக்கு படம் பார்க்க வருவதை காண முடிகிறது. சொல்லிவைத்தாற்போல், மதுரையில் ஒரு குரூப் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல், தமிழ்நேசன் என்பவரது தலைமையில், ஞாயிறு அன்று மாலை எம்.ஜி.ஆர்., படம் திரையிட்டுள்ள தியேட்டர் முன் கூடுகின்றனர்.
தங்களுக்குள், 20 ரூபாய், 30 ரூபாய் என வசூலித்து, அந்த பணத்தில், பெரிய பெரிய மாலைகள் வாங்குகின்றனர்.எம்.ஜி.ஆரின் தீவிர பக்தர், "மர்மயோகி மனோகர்' மற்றும் இருவருடன், கேட்டை பிடித்தவாறு, ஏணி ஏதும் இல்லாமலே, விறுவிறுவென்று, "ஸ்பைடர் மேன்' பாணியில், மேலே ஏறுகின்றனர். தியேட்டர் முகப்பில் மேலே இருக்கும் எம்.ஜி.ஆர்., கட்-அவுட் மற்றும் பிளக்ஸ் ஆகியவற்றிற்கு அந்த மாலைகளை அணிவிக்கின்றனர். இந்த சடங்குகள் பல நிமிடங்கள் நீடிக்கின்றன.
இதை மகிழ்ச்சியுடன், கை தட்டியவாறு, ரசிக்கின்றனர் எம்.ஜி.ஆர்., பக்தர்கள். விசேஷ தினம் என்றால், "பால் அபிஷேகம்' வேறு நடக்கிறது.மாலை அணிவிப்பு முடிந்ததும், அனைவரும் தியேட்டர் வாசலில் நின்று, உரத்த குரலில், எம்.ஜி.ஆர்., வாழ்க, பொன்மனச் செம்மல் வாழ்க, மக்கள் திலகம், புரட்சித் தலைவர் என்று என்னென்ன பட்டங்கள் உண்டோ, அதையெல்லாம் கூறி, "வாழ்க' கோஷம் போட்டு, பட்டாசுகளும் கொளுத்தி அந்த ஏரியாவையே அதிரவைத்து விடுகின்றனர். ஐந்து நிமிடம் கோஷம் போட்டபின், அவரவர் காசில் டிக்கெட் வாங்கி, தியேட்டருக்குள் செல்கின்றனர்.
தியேட்டரில் படம் ஆரம்பித்து, எம்.ஜி.ஆர்., வரும் முதல் காட்சி திரையில் தெரிந்தவுடன், மீண்டும் பலத்த கரகோஷம். அதில் சில முரட்டு எம்.ஜி.ஆர்., பக்தர்கள், கையில் சூடம் ஏற்றி, திரை முன்னால் உயர்த்தி காண்பித்து,"தலைவா...' என்று உணர்ச்சி பொங்க கோஷம் போடும் நிகழ்ச்சிகள் தொடர்கின்றன.இப்படி பழைய படங்கள், எத்தனை முறை திரையிட்டாலும், சலிக்காமல் எம்.ஜி.ஆர்., பக்தர்கள் ஞாயிறு மாலை, மழை வந்தாலும் குடைகளுடன் தியேட்டர் முன் தவறாமல் ஆஜராகி விடுகின்றனர்.நெல்லையைச் சேர்ந்த பிச்சம்மா என்ற மூதாட்டி, வாரம் ஒரு முறை மதுரை வரும் போதெல்லாம், எம்.ஜி.ஆர்., படம் எங்கே திரையிடப்பட்டுள்ளது என்று விசாரித்து, அந்த தியேட்டரில் படம் பார்த்தபின், இரவு ரயிலில் சொந்த ஊருக்கு திரும்புகிறார்; இப்படி இன்னும் பலர் உள்ளனர்!
எம்.ஜி.ஆர்., மறைந்து இத்தனை வருடங்களுக்குப் பின்னும், எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல், கடவுளாகப் பாவித்து, அவர் பெருமைகளை கூறும் இந்த எம்.ஜி.ஆர்., பக்தர்களை முறைப்படி வழி நடத்திச் செல்வது பற்றி, எம்.ஜி.ஆர்., பெயர் சொல்லி அரசியல் பண்ணும் இயக்கங்கள் யோசிக்க வேண்டும்!
யோசிப்பார்களா?
நன்றி : திரு.மதுரை எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன் - தினமலர்.
கதாநாயகிகளின் காதல் கீதங்களில் மக்கள் திலகம் எம்ஜிஆர் .
சரோஜாதேவி
தேக்கு மரம் உடலைத் தந்தது
சின்ன யானை நடையைத் தந்தது
பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது
பொன் அல்லவோ நிறத்தைத் தந்தது
ஜெயலலிதா
புண்ணியம் செய்தேனே நான் உன்னை அடைய புன்னகை புரிந்தாயே பூமுகம் மலர
தன்னலம் கருதாத தலைவா நீ வாழ்க பொன்னைப்போல் உடல் கொண்ட அழகே நீ வருக உள்ளமும் எண்ணமும் உன்னிடம் வந்தது அச்சமும் வெட்கமும் என்னுடன் நின்றது
வெண்ணிற ஆடை நிர்மலா
என்றும் இளமை மாறாமல் வாழும் சரித்திரமே -
நீ எந்தன் தலைவன் என்றெண்ணும் எண்ணம் இனித்திடுமே
மஞ்சுளா
அந்த நூற்றாண்டு சிற்பங்களும்உங்கள் பக்கத்திலே
வந்து நின்றாலும் ஈடில்லை என்று
ஓடும் வெட்கத்திலே
லதா
மன்னவன் உங்கள் பொன்னுடலன்றோ இந்திரலோகம்
அந்தி மாலையில் அந்த மாறனின் கணையில்
ஏன் இந்த வேகம் ஏன் இந்த வேகம
பத்மினி
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்
எந்தன் நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
ராஜ சுலோச்சனா
அன்புத் திருமுகம் காணாமல் -
நான்துன்பக் கடலில் நீந்தி வந்தேன்
காலப் புயலில் அணையாமல் -
நெஞ்சில்காதல் விளக்கை ஏந்தி வந்தேன்
உதய சூரியன் எதிரில் இருக்கையில்
உள்ளத்தாமரை மலராதோ ?
அஞ்சலி தேவி
அன்பு மிகுந்திடும் பேரரசே
ஆசை அமுதே என் மதனா
ராஜஸ்ரீ
இளமை பொங்கும் உடலும் மனமும்
என்றும் எனதாக
உரிமை தேடும் தலைவன் என்றும் அடிமை என்றாக
சாவித்திரி
அவன் தோட்டத்தில் எத்தனை மான்களோ
தோள்களில் எத்தனை கிளிகளோ
அவன் பாட்டுக்கு எத்தனை ராகமோ
பார்வையில் எத்தனை பாவமோ
பானுமதி
சிந்தைதன்னை கவர்ந்து கொண்ட சீதக் காதியே
திராட்சை போல இனிக்க பேசும் ஜீவ ஜோதியே
சிங்கார ரூபகாரனே என் வாழ்வின் பாதியே
கே.ஆர். விஜயா
நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே பொன்மேனி என்னாகுமோ ..
லக்ஷ்மி
தமிழில் அது ஒரு இனிய கலை
உன்னைத் தழுவிக் கண்டேன் அந்த கவிதைகளை
அழகில் நீயொரு புதிய கலை
உன்னை அணைத்துக் கண்டேன் இன்ப கனவுகளை
வாணிஸ்ரீ
அடிமை இந்த சுந்தரி
என்னை வென்றவன் ராஜ தந்திரி
ரத்னா
அல்லி மலராடும் ஆணழகன்கலைகள் தவழும் கண்ணழகன்
கன்னி மயிலாடும் மார்பழகன்
எல் .விஜயலட்சுமி
உள்ளங்கள் நேரான வழி காணட்டும்
உறுதியிலே துன்பம் தூளாகட்டும்
நன்மையே உன் வாழ்வில் தொழிலாகட்டும்
நாடெல்லாம் உன்னை கண்டு புகழ் பாடட்டும்
தேவிகா
இணையத் தெரிந்த தலைவா
உனக்கு என்னைப்j புரியாதா
தலைவா என்னைப் புரியாதா
பத்மப்ரியா
அமுத தமிழில் எழுதும் கவிதை
புதுமை புலவன் நீ
புவி அரசர்குலமும் வணங்கும் புகழின்
புரட்சி தலைவன் நீ
ராதா சலுஜா
இன்பமே உந்தன் பேர் வள்ளலோ..
உன் இதயக் கனி நான் சொல்லும் சொல்லில்மழலைக்கிளி
உன் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி..
காஞ்சனா
இதுவரை என் கண்களுடன் ... எவரும் பேசவில்லை ...
புதியவன் நீ பார்க்கும் வரை இந்த புதுமை தெரியவில்லை
இந்த பட்டியலில், நமது இதய தெய்வம் பாரத ரத்னா மக்கள் திலகம் அவர்களின் துணைவி அன்னை ஜானகி, நாயகியாய் அவருடன் இணைந்த "மருத நாட்டு இளவரசி" காவியத்தில், இடம் பெற்ற அருமையான காதல் பாடல் " நதியே நீராழி அதையே சேர்தல் நாம் சேர்ந்தோம் " என்ற பாடலின் இடையே, நம் மன்னவனைப் போற்றி வரும் அற்புதமான வரிகளாகிய "ஆனந்தக்கடல் நீ ! அதிலொரு மீன் போல் மகிழ்வேன், வாழ்வினில் மாறாப் பிரேமையினால்" (அன்பினால்) என்பது விடுபட்டு விட்டது.
அதே போன்று, "மோகினி" என்ற காவியத்தில், இடம் பெற்ற "வசந்த மாலை நேரம் மந்த மாருதம் குளிர்ந்து வீசிடும்" என்ற பாடலின் இடையே அன்னை ஜானகி அவர்கள் நம் பொன்மனசெம்மலை நோக்கி பாடும் " காதல் வேகம் போல் இல்லையே - உனது கால்கள் தாவும் வேகம், வேதை கொண்டு வரும் பாதை கண்டு மெலிவாரே வீர விஜயன் (மக்கள் திலகத்தின் கதா பாத்திர பெயர் விஜயன் என்பது குறிப்பிடத்தக்கது) காட்டும் நடையிலும், திராட்டிலும் - அந்த ஓட்டம் விரைவு வேணும் , செல்லு செல்லு பரியே " (பரி என்ற சொல்லுக்கு குதிரை என்று பொருள் உண்டு) என்ற
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் தன்னுடன் நடித்த கதாநாயகிகள் சிலருக்கு பிற்காலத்தில் தன்னுடைய படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார் .
பத்மினி - ரிக்ஷாக்காரன்
அஞ்சலி தேவி - உரிமைக்குரல்
எம்.என் ராஜம் - ஊருக்கு உழைப்பவன்
எஸ். வரலக்ஷ்மி - நீதிக்கு தலை வணங்கு
ராஜசுலோச்சனா - இதயக்கனி
ரத்னா - இதயக்கனி
மக்கள் திலகம் முதலவராக இருந்த நேரத்தில் நடிகை பானுமதி - எம்.என் ராஜம் இருவருக்கும் திரை துறை சார்ந்த பதவிகள் வழங்கி பெருமை படுத்தினார் .
நடிகை ஜெயலலிதா அதிமுகவில் இணைந்து கட்சி பொறுப்பை ஏற்றும் , ராஜ்ய சபா உறுப்பினராகவும் இருந்தார் என்பது குறிப்பிடதக்கது .......
தமிழகத்திற்காக நல்லாட்சி செய்து பலகடமைகளைச்செய்து என்றும் அசைக்கமுடியாத சக்தியாய்விளங்கும் மணிதமகான் எம்.ஜி.ஆர். அவர்களின் நிணைவுநாளுக்கு மறக்கமுடியாத சாதனையாக கோவை.ராயல். டீ.டீ.எஸ் மக்கள்திலகம் எம் ஜி ஆர் அவர்களின் என்கடமை படம் வெளியிடப்படுகிறது வழக்கம்போல் வெற்றிதான் வசூல்தான் ஆரவாரம் தான் தூள்கிளப்புங்கள் கோவை நண்பர்களே இங்கு அதேவேளை புரட்சித்தலைவருக்கு பாரத்பட்டம் வழங்க காரணமான இமாலயசாதனை படைத்த ரிக்சாக்காரன் மதுரை சென்ட்ரல்சினிமா டி.டி.எஸ் வருகின்றார் நீண்டநாட்களுக்குப்பிறகு நாங்கள் சென்ட்ரல் சினிமாவில் நுழைகின்றோம் சும்மாத்தூள்பரக்கப்போதுது மதுரை எஸ்.குமார் கோவை. ஜெய்குமார் .......
இன்றும் திரையுலகை ஆளும் இதய தெய்வம்
நம் புரட்சித்தலைவர் அவர்கள் அன்றிலிருந்து அரசியல் மற்றும் திரை உலகங்களை ஆண்டு வருவது அனைவரும் அறிந்த விஷயம். ஆனால் சுமார் அரை நூற்றாண்டுகளாக அனைத்து கதாநாயகர்களின் 9௦ சதவீத படங்களில் (திரு. சிவாஜி கணேசன் படம் உட்பட) அவரின் திருஉருவத்தையோ, அவரது பெயரையோ அவரது படங்களின் காட்சியையோ, அல்லது அவரின் படங்களின் பாடல் வரிகளையே பயன்படுத்தாமல் இல்லை என்ற உண்மை நம் போன்ற ரசிகர்கள் இல்லாமல் எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை. இதை ஒரு கின்னஸ் சாதனை என்றே சொல்லலாம். தற்போது ஓடிக்கொண்டிருக்கும் சர்க்கார் படமும் இதில் விதி விலக்கல்ல. அதே போன்று சமீபத்தில் வெளிவந்த திமிரு பிடிச்சவன் படத்திலும் இதே நிலைதான். கதாநாயகன் விஜய் ஆண்டனி ரௌடியான தன் தம்பியுடன் மார்க்கெட் பகுதிக்கு வரும்போது " பொய்யான சிலபேர்க்கு புது நாகரிகம், புரியாத பலபேர்க்கு இது நாகரீகம்" என்ற பாடல் வரிகள் வரும். ரௌடியைப்பார்த்தவுடன் நிற்கும் பாடல், அந்த ரௌடியை கதாநாயகன் சுட்டுகொன்றவுடன் "இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும் இவர்போல யார் என்று ஊர்சொல்ல வேண்டும்" என்று அந்த பாடகர் முடிப்பார். திரையிலும் சரி அரசியலிலும் சரி அனைவரும் எம்ஜிஆர் போல வரவேண்டும் என்றுதான் நினைக்கின்றனரே தவிர வேறு யாரையும் ரோல் மாடலாக நினைப்பதில்லை. இந்த உண்மையை யாரால் மறுக்க இயலும். இதற்கு ஓராயிரம் உதாரணங்கள் இருக்கின்றன. சொன்னால் ஒரு யுகம் போதாது.
தற்போது வெளிவந்திருக்கும் மாரி 2 படமும் இதில் தப்பவில்லை. எம்ஜிஆர் உருவத்தைக்காட்டினால் படம் வெற்றி பெறும் என்று சென்டிமெண்டாக பெரும்பாலான படங்களில் இது போன்ற காட்சிகளை வைக்கிறார்கள்.
உண்மை தொண்டன்
வி. கலியபெருமாள், புதுச்சேரி
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
21-12-2018 முதல் மக்கள் மனங்களை என்றும் தன்னகத்தே கொண்டிருக்கும் கலையுலக காவலன் சக்ரவர்த்தி ஆகவே திகழும் மக்கள் திலகம் "ஒளி விளக்கு" காவியம் சென்னை- பாலாஜி dts தினசரி 4 காட்சிகள் வெற்றி நடை போடுகிறது... வரு பொங்கல் திருநாள், பொன்மனச்செம்மல் பிறந்த நாள் நிகழ்வுகள் முன்னிட்டு இரண்டு காவியங்கள் வருகிறது எனவும் தகவல்......👌 👍
இனிய சகோதரர் திரு கலியபெருமாள் விநாயகம் தெரிவித்துள்ள கருத்துகள் முற்றிலும் உண்மை... இப்போது மட்டுமல்ல, எப்போதும் புதிய படங்கள் யார் நடித்தாலும் மக்கள் திலகம் திரு உருவம் காண்பிக்கவும்... அவரை முன்னுதாரணமாக கொள்ளவும் எவருமே விரும்புவர் என்றால் அது மிகையில்லை......
"ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் "
என்று சொன்னார் அறிஞர் அண்ணா, அதை வேதவாக்காக கடைபிடித்தவர் "ஏழைகளின் இதயம் "புரட்சி தலைவர்,
வருடத்திற்கு ஒருமுறை "நினைவுநாள் " நினைப்பது அல்ல புரட்சி தலைவரை,
உலக தலைவர்களில் 31 வருடங்களாக தினமும் மக்கள் மனங்களால் நினைத்துககொண்டிருக்கும் ஒரே தலைவர் புரட்சி தலைவர் மட்டுமே,
நாளை உலகெங்கும் புரட்சி தலைவருக்கு நினைவஞ்சலி செலுத்தபடுகிறது.... Thanks
எம்.ஜி.ஆர் போட்ட மாலை!!
----------------------------------------------
எம்.ஜி.ஆர் ஆல விழுதுகளில் இன்றைய விழுது நிச்சயம் உங்களை ஆர்ப்பரிக்க வைக்கும்! வாழ்த்து என்னும் வேர் பதிக்க வைக்கும்!!
முக நூல் சகோதரர் சிவ பெருமாள்!!
அது 1974!!
அந்த ஏழு வயது சிறுவனுக்கு எம்.ஜி.ஆர் மேல் அடங்காத ஆசை!!
இத்தனைக்கும் அவனது தந்தையோ தீவிர தி.மு.க??
ஒரு பள்ளியில் சேர்ந்தவன் தினமும் வேறு ஒரு பள்ளிக்குப் படிக்கச் செல்கிறான்??
பிளாசாவில்--நல்லவன் வாழ்வான்!
பாரகனில்-ஆயிரத்தில் ஒருவன்!!--இப்படி??
அந்தக் கூட்டத்தில் எம்.ஜி.ஆரை நேரில் பார்க்க முண்டியடித்துச் சென்றவன்--கூட்டத்தில் அடிபட்டு நொண்டியடித்துத் திரும்புகிறான்??--ஆனாலும்--
மண்டியடித்து அவன் மனதில் படர்ந்திருக்கும் உறுதி--
எப்படியும் எம்.ஜி.ஆரை நேரில் பார்த்து விட வேண்டும்!
மெரினாவில் மக்கள் திலகம் உரை நிகழ்த்துகிறார்!!
போதாதா அந்த சிறுவனுக்கு இந்த விஷயம்??
ஸ்கூலில் ஆங்கிலப் புத்தகம் வாங்க ,,பெற்றோர் தந்த இரண்டு ரூபாயுடன் கிளம்பிவிடுகிறான்!
அதிகாலையே அரங்குக்குச் சென்றவனை--மதியம் -மயக்கம் அரவணைக்கிறது? பசி கேள்வி கேட்கிறது??
எம்.ஜி.ஆரின் கார் உள்ளே நுழைகிறது!!
ஏராளமானவர்கள்--சால்வை மாலை சகிதம் எம்.ஜி.ஆரை சூழ்ந்து கொள்ள--
இழந்த சக்தியை எப்படித் தான் பெற்றானோ?? ஓடுகிறான் கடைத் தெருவுக்கு!!
ஒரு பூ வாங்கி பொன் மனத்தாரிடம் கொடுக்க!!
கடைக்காரர் ஒருவர்--இந்த சிறுவன்,, எம்.ஜி.ஆருக்கு பூ கொடுக்கப் போகிறானா என்று திகைப்பவர்-
ஒரு மாலையையே கொடுக்கிறார்??
ஆவேசத்தோடு மேடையில் ஏறுபவன் அங்கிருந்த பாதுகாவலர்களின் மறிப்பையும் மீறி எம்.ஜி.ஆருக்கு மாலையைப் போட முயல--
தன் தொப்பியில் அது சிக்காதபடி அதைத் தாமே வாங்கி போட்டுக் கொண்ட எம்.ஜி.ஆர்--அடுத்த நொடியே அந்த மாலையை அந்த மேடையிலேயே அந்த சிறுவனுக்கு அணிவிக்கிறார்!!
அந்தச் சிறுவன் தான் நம் சிவ பெருமாள்!!
அது 1983!
அரிசிக்கு,,அப்போதையப் பிரதமர் இந்திரா காந்தி போதிய மானியம் தராத நிலையில்--அரிசி விலை உயர்வைக் கண்டித்து முதல்வரே உண்ணாவிரத்தில் இறங்குகிறார்??
டெல்லியிலிருந்து முதல்வரிடம் இந்திரா பேசுகிறார்!
உண்ணாவிரதம் வேண்டாம்! நீங்களே களத்தில் இறங்கினால் மக்கள் மேலும் ஆவேசமடைவார்கள்! நான் முதற்காரியமாக அரிசி விலையைக் குறைக்க ஆவன செய்கிறேன்!!
இருவருக்கும் இடையில் நடந்த உரையாடலை செவியாறக் கேட்ட பெருமாள்--மக்களின் பசியாற போராட்டத்தில் இறங்கிய தன் தலைவனை பெருமிதத்துடன் பார்க்கிறார்!
எம்.ஜி.ஆர் பங்கேற்கும் அனைத்துக் கூட்டங்களுக்கும் ஆஜராகும் பெருமாள்--
பிரதமர்--ஜனாதிபதி ஆகியோருடன் கூடிய எம்.ஜி.ஆர் விழாக்களுக்கு மட்டும் செல்ல மாட்டாராம்??
என் தலைவன்,,தன் இருக்கையில் இருந்து இன்னொருவருக்காக எழுந்து நிற்பதை நான் ஏன் பார்க்க வேண்டும்??
1982இல் கலைவேந்தன் எம்.ஜி.ஆர் குழுவை ஆரம்பித்து நடத்தி வரும் இவர்கள்--
2000 லிருந்து கலைவேந்தன் அறக்கட்டளை என்ற பெயரில் அதை செயல்படுத்தி வருகிறார்கள்!!
வருடா வருடம் எம்.ஜி.ஆர்--நினைவு--மற்றும் பிறந்த நாட்களில் 500 பேர்களுக்குக் குறையாமல் அன்னதானம் செய்து வருகிறார்கள்!!
இந்தக் குழுவின் மிக முக்கியமான பெருமை?
ஒற்றுமை!!
எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் குழுவைச் சேர்ந்த அனைவரும் செல்கிறார்கள்! ஒரே கௌரவம் தான் அனைவருக்கும்!!
சுருங்கச் சொல்வதானால்--
இவர்களுக்கு எம்.ஜி.ஆர்!
இவர்களால் தான் எம்.ஜி.ஆர்!!!
உண்மை தானே உறவுகளே??? ...... Thanks Friends...
தலைவரின் நினைவு தினத்தினை முன்னிட்டு மெகா டிவியில் *** தலைவர் பற்றிய சிறப்புப் பட்டிமன்றம் *** டிசம்பர் 23 நாளை காலை 10 - 12 மணி வரை மலர்ந்து மணம் பரப்பும்.....தவறாது பார்த்து மகிழ அன்புடன் அழைக்கிறேன்...நன்றி ....என்றும் தலைவரின் உண்மை பக்தன் மாதாங்கோவில்பட்டி ஏ.மலையரசுப் பாண்டியன் .... அருப்புக்கோட்டை ( நாளை காலை 8 - 9 அமுதகானம் நேயர் விருப்பம் ....9 - 10, என்றும் M.S.V. & 10 - 12 தலைவர் பற்றிய சிறப்புப் பட்டிமன்றம் )..... Thanks Friends...
இருந்தாலும், மறைந்தாலும் என்றும் வாழும் மன்னர் மன்னவர் மக்கள் திலகம் வழி நடப்போம் என மீண்டும் உறுதி எடுத்து கொள்வோம்...
இருந்தாலும், மறைந்தாலும் என்றும் வாழும் மன்னர் மன்னவர் மக்கள் திலகம் வழிநடக்க மீண்டும் மீண்டும் உறுதியேற்போம்...
ஏழைக்கு ஒளி தந்த வள்ளலுக்கு
இன்று 31 வது நினைவு நாள்.!
கொடூர இருளில் குடிசையில் ஒண்டிக்
கிடந்த ஏழை...எளிய மக்களின் இன்னல்
போக்கிட "ஒத்தை விளக்கு" திட்டம் மூலம்
கட்டணம் இன்றி ஒளி தந்த. காவல்தெய்
வம் ஈகைத் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்க
ளின் 31 வது நினைவு நாள் இன்று.!
அந்த அற்புத தெய்வ மகனுக்கு அஞ்சலி
செலுத்தி வணங்கிடுவோம்.!
வீரக்கனல்மு.மாரிமுத்து..... Thanks Friends....
இந்த வாரம் வெளிவந்துள்ள கல்கி மற்றும் புதிய தலைமுறை வார இதழ்களில், புரட்சித்தலைவர் கட்டுரை வெளிவந்துள்ளது. சிரமம் இல்லையெனில், வாங்கி படிக்கவும்.
பாஸ்கரன்,
கலைவேந்தன் எம். ஜி. ஆர். பக்தர்கள் அறக்கட்டளை..... Thanks
எம்.ஜி.ஆர். நினைவு நாள்...இன்று
ஆரம்பகாலத்தில் எம்.ஜி.ஆர் தனது பெயரை எம்.ஜி.ராம்சந்தர் என்றே எழுதிவந்தார். இந்தப் பெயர் வட இந்தியர் பெயரைப் போல் இருக்கிறது எம்.ஜி.ராமச்சந்திரன் என மாற்றிக் கொள்ளுங்கள் என நடிப்பிசைத் திலகம் கே.ஆர்.ராமாசாமி யோசனை கூறியிருக்கிறார் , அதன் பிறகே எம்.ஜி.ஆர் தனது பெயரை எம்.ஜி.ராமச்சந்திரன் என மாற்றிக் கொண்டார் .
0
சக்கரவத்தித் திருமகள் படத்தில் பாட்டுக் கோட்டையார் எழுதிய பொறக்கும் போது பொறந்த குணம் போகப் போக மாறுது என்ற பாடலில் இடம்பெற்ற வரிகளை எம்.ஜி.ஆர் அடிக்கடி சிலாகித்துக் கொள்வாராம்.
வாழ்வின் கணக்குப் புரியாம ஒண்ணு
காசைத் தேடிப் பூட்டுது - ஆனால்
காதோரம் நரைச்ச முடி
கதை முடிவைக் காட்டுது
0
"வசதியும் புகழும் உள்ள பொழுது வராதவர்களெல்லாம் வருவார்கள் , நம்மிடம் வரவு இல்லையென்றால் அவர்கள் வரவும் இல்லை என்றாகி விடும் . ஒருவன் கஷ்டப் படும் பொழுது தேடிப் போய் உதவி செய்கின்ற பெருங்குணம் ராமச்சந்திரனிடம் இருக்கிறது " - என்.எஸ்.கிருஷ்ணன்
0
ஊருக்கு உழைப்பவன் படத்தில் நாகேஷ் நடிப்பதாகத் தான் இருந்தது . ஆனால் அவர் கால்ஷீட் கிடைக்கவில்லை , உடனே எம்.ஜி.ஆர் தேங்காய் சீன்வாசனை நடிக்க வைத்தார் . பொங்கலன்று எம்.ஜி.ஆர் வீட்டிற்குச் சென்ற முத்துலிங்கத்திற்கு ஊருக்கு உழைப்பவன் படத்திற்காக நீங்கள் எழுதப் போகும் பாடலுக்காக வீனஸ் பிக்ஸர்ஸ் உங்களுக்கு 1000 ரூபாய் கொடுத்திருக்கிறார்கள் என்று கூறி தனது 1000 ரூபாயை எடுத்துக் கொடுத்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.
0
எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம் கூட எடுக்காத பாலாஜிக்குக் கூட வருடம் பிறந்தால் 100 ரூபாயும் பொங்கலுக்கு கதர் வேட்டியும் சட்டையும் அளிப்பாராம் எம்.ஜி.ஆர். அந்நேரம் பாலாஜியிடம் "ஏம்பா பணத்தை இங்க வாங்கி அங்க(சிவாஜியிடம்) கொடுக்குற" என்று தமாஷாகப் பேசுவாராம் எம்.ஜி.ஆர்
0
எம்.ஜி.ஆர். வாலியிடம் நீங்கள் எழுதிக்கொடுத்த வரிகள் எல்லாம் என் வாழ்வில் பலித்து விட்டது
ஆனால் இந்த ஒரே ஒரு வரிமட்டும் பலிக்கவில்லை என்று வருத்தமாகச் சொல்வாராம். எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலவே இருப்பான்
0
தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன் ஒரு படக் கதையை எம்.ஜி.ஆருக்காக எழுதினார்.ஆனால் எம்.ஜி.ஆர் அரசியலுக்கு திரும்பி விட்டமையால் இந்தப் படத்தில் நடிக்கவில்லை.சிறிது காலம் கழித்து இநதக் கதை படமாகும் பொழுது ரஜினிக்கு அதில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.அந்தப் படம் தான் ராணுவ வீரன்.
0
சிவாஜி நடித்த பைலட் பிரேம்நாத் படக்காட்சி ஒன்றை இலங்கை கண்டி நகரில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் படமெடுத்திருக்கிறார்கள். பைலட் பிரேம்நாத் படத்தின் வசனகர்த்தா ஆரூர்தாஸ் கண்டியிலிருந்து ஒரு பிடி மண்ணை எடுத்துக்கொண்டு சென்னை திரும்பியதும் எம்.ஜி.ஆருக்குக் கொடுத்திருக்கிறார். தான் பிறந்த மண்ணைக் கையில் வாங்கிய எம்.ஜி.ஆர் கண்ணில் ஒற்றிக் கொண்டு வாயிலும் சிறிது அள்ளிப் போட்டுக்கொண்டாராம்
0
உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு குன்னக்குடி வைத்தியநாதனைத் தான் முதலில் இசையமைப்பளராக புக் செய்தாராம் எம்.ஜி.ஆர். உடனே எம்.ஜி.ஆரின் நண்பர்கள் " பாரின் போய் படம் எடுக்கப் போறேங்குற , பக்திப் படத்துக்கு இசையமைக்குறவறப் போயி ... " என்று கிலியூட்டியிருக்கிறார்கள் . அதன்பிறகு தான் எம்.எஸ்.வியைப் பிடித்திருக்கிறார் எம்.ஜி.ஆர். இந்தப்படத்துப் பாடல்கள் சிறப்பாக வரவேண்டுமென பல மெட்டுக்கள் போட வைத்து எம்.எஸ்.வியை ரொம்ப வறுத்தெடுத்திருக்கிறார் எம்.ஜி.யார். 9 பாடல்கள் ..அனைத்தும் ஹிட். கட்டுக் கட்டாக பணத்தை அள்ளி எம்.எஸ்.விக்கு வாரியிறைத்திருக்கிறார் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் இசையமைக்கும் வாய்ப்பை இழந்த குன்னக்குடிக்கு பின்னாளில் நவரத்னம் என்றொரு படத்தில் இசையமைக்கும் வாய்ப்பை வழங்கினார் எம்.ஜி.ஆர்.
0
கே.வி.மகாதேவன் அடிமைப் பெண் படத்திற்காக ஒரு பாடலுக்கு 52 விதமான மெட்டுகள் போட்டும் எம்.ஜி.ஆருக்கு பிடிக்கவில்லையாம் , இறுதியாக அமைந்த 53 வது மெட்டு எம்.ஜி.ஆருக்கு பிடித்துப் போய்விட்டதாம். அது ஆலங்குடி-சோமு எழுதிய தாயில்லாமல் நானில்லை என்ற பாடலாம்
0
நீரும் நெருப்பும் பட சண்டைக் காட்சியின் சூட்டிங்கை நேரில் கண்டு ரசித்து விட்டு , பின்னர் எம்.ஜி,ஆர் பயன்படுத்திய வாளை தொட்டுப் பார்த்த இந்தி நடிகர் தர்மேந்திராவிற்கு ஆச்சர்யம் ! எம்.ஜி.ஆர் பயன்படுத்தியது உண்மையான வாள் !
0
சின்னப்பா தேவரின் படங்களில் நடிக்கும் பொழுது அசோகன் சூட்டிங்கிற்கு ஒரு மணி நேரம் முன்பே வந்துவிடுவாராம். எம்.ஜி.ஆர் தாமதாமாக வந்தால் , எம்.ஜி.ஆரைத் திட்டாமல் அசோகனைத் திட்டுவது போல் ஜாடை மாடையாக எம்.ஜி.ஆரைத் திட்டுவாராம் தேவர். அந்தத் திட்டு தனக்கு இல்லை எம்.ஜி.ஆருக்குத் தான் என அறிந்தும் எம்.ஜி.ஆருக்காக பொறுத்துக் கொள்வாராம் அசோகன். எம்.ஜி.ஆருடன் மட்டும் 88 படங்களில் சேர்ந்து நடித்தவர் அசோகன்.
0
சூலமங்கலம் சகோதரிகள் (ஜெயலட்சுமி & ராஜ லட்சுமி), தரிசனம் , டைகர் தாத்தாச்சாரி , கற்பூரம் , தேரோட்டம் , பிள்ளையார் ,மகிழம்பூ போன்ற படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்கள். சூலமங்கலம் சகோதரிகளின் திறமையைக்கண்ட எம்.ஜி.ஆர் அவர்கள் இசையில் ஒரு படம் நடிக்க வேண்டுமென ஆசைப்பட்டிருக்கிறார். அந்தப் படத்திற்கு உங்களுக்காக நான் என்ற பெயரும் வைக்கப்பட்டு மூன்று பாடல்களும் பதிவாகி விட்டது. அதன் பிறகு எம்.ஜி.ஆர் அரசியலில் குதித்து விட்டதால் அந்தப் படத்தில் அவரால் நடிக்கமுடியவில்லை.
0
மிருதங்க சக்கரவர்த்தி படத்தைக் கண்ட எம்.ஜி.ஆர், சிவாஜி நடிப்பில் பிரமித்துப் போய் இருக்கையிலேயே சில நேரம் உறைந்துவிட்டு பக்கத்தில் அமர்ந்திருந்த இயக்குனர் கே.சங்கரிடம் " நடிகன்னு சொன்னா சிவாஜி ஒருத்தர்தான்யா" என உணர்ச்சி மேலிடக் கூறினாராம்.
0
சின்னப்பா தேவர் தயாரித்த ஒரு படத்திற்கு அதிசய ஆடு என்று பெயர் வைத்தார்கள் , இந்தப் பெயர் ஏனோ தேவருக்குப் பிடிக்க வில்லை. அந்நேரம் எம்.ஜி.ஆர் நடித்த மாட்டுக்கார வேலன் சுவரொட்டி ஒன்றைப் பார்த்தும் அதிசய ஆடு என்ற தலைப்பை நீக்கிவிட்டு ஆட்டுக்கார அலமேலு என்று வைத்தார். தொடர் தோல்வியை சந்தித்து வந்த தேவர் அவர்களுக்கு மீண்டும் ஒரு பெரிய வெற்றியை தேடி தந்த படம் "ஆட்டுக்கார அலமேலு " .
0
மாட்டுக்கார வேலன் படத்தில் வி.கே ராமசாமி எம்.ஜி.ஆருக்கு மாமானாராக நடித்திருப்பார், ஒரு காட்சியில் எம்.ஜி.ஆர் வி.கே ராமசாமியின் காலில் விழுவதைப் போல் நடிக்க வேண்டும் , எம்.ஜி.ஆர் என் காலில் விழுவதா ? ஊகூம் .. மாட்டேன்.. என்று அடம் பிடித்திருக்கிறார் வி.கே ராமசாமி .
எம்.ஜி.ஆரோ " கதைப்படி எனக்கு மாமனார் தானே சும்மா நடியுங்கள் " எனக் கூறி சம்மதிக்க வைத்திருக்கிறார். எனினும் எம்.ஜி.ஆர் , வி.கே ராமசாமியின் காலில் விழும் காட்சியின் சூட்டிங் நடந்த பொழுது வி.கே ராமசாமி சற்று தயக்கத்துடன் சாய்ந்தபடியே தான் நின்றாராம் !
0
புதிய பூமி படத்தில் பூவை செங்குட்டுவன் எழுதிய நான் உங்கள் வீட்டுப் பிள்ளை இது ஊரறிந்த உண்மை பாடலைக் கேட்டுவிட்டு எம்.ஜி.ஆர் , பூவை செங்குட்டுவனை மிகவும் பாராட்டினார்.
0
மீனவ நண்பன் படக்காட்சிகள் முடிந்து விட்ட தருவாயில் முத்துலிங்கத்திற்கு இந்தப் படத்தில் பாடல் எழுத வாய்ப்பு கொடுக்கவில்லையே என்று எம்.ஜி.ஆர் வருத்தப்பட்டிருக்கிறார். உடனே இயக்குநர் ஸ்ரீதரை அழைத்து முத்துலிங்கத்திற்கு இந்தப் படத்தில் ஒரு பாடல் கொடுங்கள் எனக் கூறியிருக்கிறார். அதற்கு ஸ்ரீதரோ " எந்த சூழலில் அவருடைய பாடலைச் சேர்க்கமுடியும் ? " எனக் கேட்டிருக்கிறார். : உங்களுக்குத் தெரியாதா ஒரு கனவுப் பாட்டா சேர்த்துக்கோங்க " என்று எம்.ஜி.ஆர் கூறியிருக்கிறார். அந்தப் பாடல் தான் தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து பாடல்.
Facebook share. Excuse me for sharing a good information on MGR.
# MGR Death Anniversary today ..... Thanks.....
2017ம் ஆண்டுதான் அனைவருக்கும் மின் இணைப்பு என்ற புதிய திட்டம் ( #SaubhagyaYojana ) இந்திய அரசால் கொண்டுவரப்பட்டது.
இலவச ஆம்புலன்ஸ் போன்றே இந்த திட்டத்திற்கும் முன்னோடி எம்.ஜி.ஆர்தான்.
1979லேயே இந்த திட்டத்தை தொடங்கியது புரட்சித்தலைவரின் தலைமையிலான தமிழ்நாடு அரசு.
'ஒரு குடிசைக்கு ஒரு விளக்கு' என்ற திட்டத்தை 1979ம் ஆண்டு அறிமுகப்படுத்தியவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். முதலில் மாதம் ரூ 2.50 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. பின்னர் 1984ல் கட்டணம் நீக்கப்பட்டு விட்டது - முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் பதிவு செய்திருக்கிறார்.( சட்டசபை விவாதம் - 21 ஜூலை 2014)
#MGR #எம்ஜிஆர்
#சௌபாக்யா_யோஜனா..... Thanks .. ....
2017ம் ஆண்டுதான் அனைவருக்கும் மின் இணைப்பு என்ற புதிய திட்டம் ( #SaubhagyaYojana ) இந்திய அரசால் கொண்டுவரப்பட்டது.
இலவச ஆம்புலன்ஸ் போன்றே இந்த திட்டத்திற்கும் முன்னோடி எம்.ஜி.ஆர்தான்.
1979லேயே இந்த திட்டத்தை தொடங்கியது புரட்சித்தலைவரின் தலைமையிலான தமிழ்நாடு அரசு.
'ஒரு குடிசைக்கு ஒரு விளக்கு' என்ற திட்டத்தை 1979ம் ஆண்டு அறிமுகப்படுத்தியவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். முதலில் மாதம் ரூ 2.50 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. பின்னர் 1984ல் கட்டணம் நீக்கப்பட்டு விட்டது - முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் பதிவு செய்திருக்கிறார்.( சட்டசபை விவாதம் - 21 ஜூலை 2014)
#MGR #எம்ஜிஆர்..... Thanks.....
#சௌபாக்யா_யோஜனா
விடுதலைப் புலிகளுக்கு 4 கோடி ரூபாய் பணத்தை கொடுத்த தமிழக அரசும் அதனால் எழுந்த எதிர்வினையும் :
முன்பே எம்.ஜி.ஆர் விடுதலைப்புலிகளுக்கு 2 கோடி ரூபாய் நிதி கொடுத்திருந்தார்.
சில காலம் கழித்து இயக்க வளர்க்குக் கூடுதல் நிதியுதவி தொடர்பாக எம்.ஜி.ஆரிடம் பேசிவிட்டுவருமாறு ஆண்டன் பாலசிங்கத்தை மீண்டும் அனுப்பிவைத்தார் பிரபாகரன்.
அவர்கள் சொன்ன விஷயங்களை எல்லாம் உள்வாங்கிக்கொண்ட எம்.ஜி.ஆர், ‘எவ்வளவு ரூபாய் தேவைப்படும்?’ என்று வினவினார். ‘ஐந்து கோடி வரை தேவைப்படும்’ என்று பதில் வந்தது பாலசிங்கத்திடம் இருந்து. என்ன செய்வது என்று அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனிடம் ஆலோசனை கேட்டார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் இருந்தவர்களுள் ஈழத்தமிழர் பிரச்னை குறித்து அறிவும் ஆர்வமும் நிரம்பியவர் பண்ருட்டியார். ஈழத்தமிழர் துயர் துடைப்புப் பணிக்காக தமிழக அரசு திரட்டிய நிதி இருக்கிறது. அதனை இவர்களுக்குத் தரலாம் என்று பரிந்துரை செய்தார் பண்ருட்டியார். அதற்கு எம்.ஜி.ஆர் சம்மதித்தார்.
அதன் தொடர்ச்சியாக பண்ருட்டியாரின் ஆலோசனையின் பேரில் நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான செலவினங்கள் கொண்ட புதிய செயல்திட்டம் ஒன்றைத் தயாரித்துக் கொடுத்தனர் விடுதலைப்புலிகள். அதனைப் பெற்றுக்கொண்டு நான்கு கோடிக்கான காசோலையை விடுதலைப்புலிகளுக்குக் கொடுத்தது தமிழக அரசு.
மறுநாளே விஷயம் வெளியே கசிந்துவிட்டது. உபயம்: இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்.
இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே பிரதமர் ராஜீவிடம் முறையிட்டார். அதன் தொடர்ச்சியாக முதலமைச்சர் எம்.ஜி.ஆரைத் தொடர்புகொண்டு தனது ஆட்சேபத்தைப் பதிவுசெய்தார் ராஜீவ். அதிருப்தியடைந்த எம்.ஜி.ஆர், உடனடியாக விடுதலைப்புலிகளிடம் தரப்பட்ட காசோலையைத் திரும்பப்பெற்றுக்கொண்டார். நான்கு கோடி ரூபாயைத் தன்னுடைய சொந்தப் பணத்தில் இருந்து எடுத்து விடுதலைப்புலிகளுக்குக் கொடுத்தார் எம்.ஜி.ஆர்.
கால் நூற்றாண்டுக்கு முன்னரே விடுதலைப் புலிகளின் வளர்ச்சிக்காக தன்னுடைய சொந்தப்பணத்தில் இருந்து ஆறு கோடி ரூபாயை எடுத்துக் கொடுத்திருக்கிறார் எம்.ஜி.ஆர். அந்தத் தொகையை இப்போதைய மதிப்பீட்டுடன் ஒப்பீடு செய்து பார்த்தால் வியப்பே மிஞ்சுகிறது.இதனை ஆண்டன் பாலசிங்கம் தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Source - தமிழக அரசியல் வரலாறு புத்தகம் - பாகம் 2...... Thanks....
http://i63.tinypic.com/123b4zs.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i67.tinypic.com/25zqrmt.jpg
Lawspet-Iyanar Koil Opp.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i63.tinypic.com/34yef5c.jpg
Muthialpet, Puducherry - Devotee Anand in his tailor shop
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i63.tinypic.com/wunk83.jpg
Puducherry, Muhialpet Junction
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i68.tinypic.com/54dqq9.jpg
Floral Tribute by MLA of Muthialpet Constituency, Puducherry
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i65.tinypic.com/2h30xfa.jpg
Puducherry, Ginjee Salai junction
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i67.tinypic.com/31502dy.jpg
Tribute by a Rickshaw wala
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i68.tinypic.com/2yuasgo.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i67.tinypic.com/289bzmu.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i64.tinypic.com/ixs50k.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i67.tinypic.com/etw5kh.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i65.tinypic.com/2ujsbpw.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i65.tinypic.com/1ta054.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i64.tinypic.com/essz29.png
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i67.tinypic.com/w1sqhj.png
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i66.tinypic.com/34pcsxw.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i63.tinypic.com/14n0d54.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்