http://i66.tinypic.com/fksdgi.jpg
http://i66.tinypic.com/140vqck.jpg
Printable View
படத்தில் இடம் பெறாத காட்சி .
http://i64.tinypic.com/2lbnkzq.jpg
http://i65.tinypic.com/n5ftc7.jpg
http://i65.tinypic.com/29nthk1.jpg
பூஜை நாளன்று எடுத்த காட்சி
http://i66.tinypic.com/2w4fp8n.jpg
கோவையில் எம்ஜிஆரின் "அடிமைப்பெண் 50"ஆண்டு விழா! ரசிகர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!! கோவை சண்முகா தியேட்டரில் அடிமைப்பெண் திரையிடப்பட்டது. இப்படம் 1969 ல் வெளியாகி 50 வது ஆண்டில் பயணிக்கிறது. இடையிடையே புதிய பிரிண்டுகள் போட்டு வெளியிடப்பட்டு வசூல் சாதனை படைக்கும் எம்ஜிஆர் படங்களில் இதுவும் ஒரு புரட்சிக் காவியம். 2017 ல் டிஜிட்டலில் வெளியிடப்பட்டு 2 வருடமாக மீண்டும் மீண்டும் குறுகிய கால இடைவெளியில் திரையிடப்பட்டு வருகிறது. குறிப்பாக கோவை நகரில் 4 வது தடவையாக வலம் வருகிறது. இதையொட்டி எம்ஜிஆர் பக்தர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். ' எம்ஜிஆர் படம் மட்டுமே ரிலீஸ் காலத்திலிருந்து இன்றுவரை வருடந்தோறும் திரையிடப்படுகிறது. அதிகமாக எம்ஜிஆர் படங்களே திரையிடப்படுகிறது. எம்ஜிஆர் படங்களுக்கே கூட்டம் அதிகமாக வருகிறது. வசூலும் லாபமும் இருப்பதால்தான் அடிக்கடி திரையிடப்படுகிறது. 3 மாத இடைவெளியில் மீண்டும் அதேபடம் வெளியிட்டாலும் பக்தர்கள் வந்து பார்ப்போம். என்ன படம்? சமீபத்தில்தானே பார்த்தோம் என்றில்லாமல் தலைவர் முகத்தைப் பார்ப்பதே மகிழ்ச்சி என திரும்பத் திரும்ப வருகிறோம். தலைவரின் படங்கள் எங்களுக்கு பாடங்கள். எனவே ஒரு நல்ல புத்தகத்தை மீண்டும் படிப்பதுபோல தலைவர் படம் பார்க்கும் போது உணருகிறோம்.' என்கின்றனர் கோவை எம்ஜிஆர் பக்தர்கள்............ Thanks mr. Samuel......
அன்பு நிறைந்த என் உறவுகளே உங்கள் அனைவருக்கும் அன்பான இனிய காலை வணக்கம் இன்றைய பொழுது மிக சிறப்பான பொழுது உங்கள் அனைவருக்கும் அமைய வேண்டும்.
டாக்டர் எம்.ஜி.ஆர் உலக ஆராய்ச்சி மையம் ( Dr.MGR Global Research Center Malaysia ) மலேசியா நாட்டில் அமைந்திட நாம் மேற்கொண்ட முயற்சிக்கு இன்று முழு உரிமையும், அதிகாரப்பூர்வமாக நாம் செயல் பட மலேசியா அரசாங்கம் நமக்கு சட்டப்பூர்வமாக அனுமதி சான்றிதழை வழங்கியுள்ளது என்பதனை உலக எம்.ஜி.ஆர் பக்தர்கள், தொண்டர்கள், அனைவர்களுக்கும் எல்லையற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.✌........... Thanks...
அப்போலோ பரபரப்பானது...!
காரணம் , பிரதமர் வந்து கொண்டிருந்தார் ..!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதல் அமைச்சரைப் பார்ப்பதற்காக ..!
இது நடந்தது இந்திராகாந்தி – எம்.ஜி.ஆர்.காலத்தில்..!
.
அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் , திடீரென அப்போலோ மருத்துவமனையில் , தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார் .. அக்டோபர் 1984 இல்..!
உடனே விரைந்து வந்தார் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி .
அது வரை யாருக்கும் எம்.ஜி.ஆரைப் பார்க்க அனுமதியில்லை..
ஆனால் இந்திரா காந்தி , அப்போல்லோ மருத்துவமனைக்கு சென்று கண்ணாடிக் கதவு வழியாக , எம்.ஜி.ஆரைப் பார்க்க அனுமதிக்கப் பட்டார்..
அதிர்ந்து போனார் இந்திரா..!
அவர் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் :
" IS THAT MGR ? OH MY GOD ,.. I CANT BELIEVE IT "
.
அருகில் இருந்த ஜானகி அம்மையாரின் கைகளைப் பிடித்துக் கொண்டு இந்திரா காந்தி சொன்னாராம் : “கவலைப்படாதீர்கள் .. இவரை காப்பாற்றுவது இந்த நாட்டின் கடமை .. என்னுடைய கடமை ..”
சொன்னதோடு நிறுத்திக் கொள்ளாமல் ,செயலில் இறங்கினார் இந்திராகாந்தி.
அடுத்த நாளே , பிரதமரின் சிறப்பு விமானத்தில் அமெரிக்காவிலிருந்து மருத்துவர்கள் , அப்போலோவுக்கு வரவழைக்கப்பட்டார்கள்.
அது மட்டுமா? இந்திரா காந்தியின் ஏற்பாட்டின் பேரில் , ஏர் இந்தியா போயிங் விமானம் ஒன்று , சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 24 மணி நேரமும் தயாராக , எம்.ஜி.ஆருக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது . அவசரமாக மருத்துவர்களை அழைத்து வருவதற்கும் , தேவைப்பட்டால் எம்.ஜி.ஆரை வெளி நாட்டு சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதற்கும் தயாராக இருக்கச் சொல்லி இருந்தார் இந்திராகாந்தி .
.
எம்.ஜி.ஆரின் நிலைமை இன்னும் சீரியஸ் ஆக ... 5.11. 1984 அன்று , ஏற்கனவே இந்திராகாந்தி ஏற்பாடு செய்திருந்த தனி விமானம் மூலம் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் எம்.ஜி.ஆர்..
.
ஆனால்...
இதை எல்லாம் ஏற்பாடு செய்து கொடுத்திருந்த இந்திராகாந்தி ....
அப்போது உயிரோடு இல்லை.
.
ஆம்.. அக்டோபர் 31 காலை வேளையில்தான் , கண் இமைக்கும் வேளையில் , அந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்து விட்டது...!
இந்திரா காந்தி தன் பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார். உலகமே அந்தச் செய்தியை உடனே அறிந்து கொண்டு விட்டாலும் , எம்.ஜி.ஆரிடம் மட்டும் , அதை சொல்லாமல் மறைக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் தவித்தார்கள் மருத்துவர்கள்..!
ஏனென்றால் ...இந்திரா காந்தி இறந்த அந்த வேளையில்தான் , எம்.ஜி.ஆர். உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு , உயிருக்குப் போராடிக் கொண்டு தீவிர சிகிச்சையில் இருந்தார்...
அந்த வேளையில் இந்த செய்தியை சொல்லி...அதைத் தாங்க முடியாமல் எம்.ஜி.ஆர். உயிருக்கு ஆபத்து ஏதாவது ஏற்பட்டு விட்டால்...?
.
சில நாட்களுக்குப் பின் , அமெரிக்காவில் மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டு, எம்.ஜி.ஆர். உடல் நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டது.
அதன் பிறகுதான் , மெல்ல மெல்ல , இந்திரா காந்தியின் மரணச்செய்தியை தயக்கத்துடன் எம்.ஜி.ஆரிடம் சொன்னார்கள் அதிகாரிகள்..!
அதைக் கேட்டவுடன் அதிர்ந்து போனார் எம்.ஜி.ஆர்.
உடனடியாக இந்திரா காந்தியின் இறுதி ஊர்வலக் காட்சிகளின் "வீடியோ"க்களை கொண்டு வரச் சொல்லி உத்தரவிட்டார் . வீடியோ ஓட ஓட , எம்.ஜி.ஆரின் விழிகளில் கண்ணீர் பெரு வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது...!
எதற்கும் கலங்காத எம்.ஜி.ஆர். , இந்திராவின் இறுதி ஊர்வலக் காட்சிகள் அடங்கிய அந்த வீடியோவைப் பார்த்து விட்டு , தேம்பி தேம்பி சிறு பிள்ளை போல் அழுதிருக்கிறார்...!
காராணம் .... தன் உயிரைக் காப்பாற்ற ஓடோடி வந்த இந்திராகாந்திக்கு நன்றி சொல்ல எம்.ஜி.ஆர். உள்ளம் துடிக்கிறது.
ஆனால் .. இந்திரா இப்போது உயிரோடு இல்லை.
பக்கத்தில் இருப்பவர் யாரிடமாவது இதை சொல்லி வாய் விட்டு அழலாம் என்றால் கூட... பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட எம்.ஜி.ஆருக்கு வாய் திறந்து ஒரு வார்த்தை கூட பேச இயலவில்லை.
.
இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் , மௌனமாக தனக்குள் அழுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் எம்.ஜி.ஆரால்..?
.
“வாழும் போது வருவோர்கெல்லாம்
வார்த்தையாலே நன்றி சொல்வோம்
வார்த்தை இன்றி போகும் போது
மௌனத்தாலே நன்றி சொல்வோம்
நாலு பேருக்கு நன்றி...”............ Thanks ...
19-07-2019 முதல் மதுரை - சண்முகா A/C dts ., தினசரி 4 காட்சிகள்... வசூல் சக்கரவர்த்தி பாரத் புரட்சி நடிகர் "ஆயிரத்தில் ஒருவன்" வெற்றி நடை காண வருகின்றார்... Thanks mr.Kumar...
வருகின்ற 19-07-2019 முதல் கோவை - சண்முகா dts தினசரி 4 காட்சிகள் ஒவ்வொரு வருடமும் தவறாமல் மறு வெளியீடு காணும் கலையுலக வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் அளிக்கும் " நேற்று இன்று நாளை".......... கலக்க வருகிறார்...
மக்கள் திலகம் பரம பக்தர் திரு. லோகநாதன் அவர்களின் திருமண திருநாள் இன்று... நம் எல்லோரின் சார்பாகவும் நல்வாழ்த்துக்கள் தெரிவிப்போம்...நன்றி...
எம்.ஜி.ஆர் பேச்சு
- R.P.ராஜநாயஹம்
விஜயா கார்டனில் தென்னிந்திய திரைப்பட இயக்குனர்கள் சங்கம் (SIFDA)நடத்திய திரைப்படத்தொழிலாளர் சம்மேளன விழா. எம்.பி.சீனிவாசனின் இசை நிகழ்ச்சியுடன் ஆரம்பித்தது. சீனிவாசன் இசையமைப்பாளர். அக்ரஹாரத்தில் கழுதை படத்தில் எம்.பி.சீனிவாசன் தான் protagonist.
முதல்வர் எம்.ஜி.ஆர் விழாவுக்கு வருகிறார் என்பதால் விஜயா கார்டன் களையுடன் இருந்தது. எம்.ஜி.ஆர் படங்கள் இயக்கிய பல இயக்குனர்கள் உள்பட அப்போது ஃபீல்டில் இல்லாத பல டெக்னீசியன்கள் உட்பட நிறைய கலைத்துறை பிரபலங்கள் ஆஜர்.
எம்.ஜி.ஆர் வந்தார். மேடையேறினார். விஜயாவாஹினி அதிபர் நாகிரெட்டி மேடையேறிவிட்ட எம்.ஜி.ஆரின் காலில் விழ முயற்சி செய்தார். எம்.ஜி.ஆர் காலில் நாகிரெட்டி விழுந்து விடக்கூடாது என்ற கெட்டியாக பிடித்துக்கொண்டார். விஜயாவாஹினி அதிபரோ எப்படியாவது காலில் விழுந்தே தீர்வேன் என்று கடும் பிரயத்தனம் செய்தார். எம்.ஜி.ஆர் அவர் முயற்சி ஈடேறி விடாமல் தன் கைகளால் lockசெய்து விட்டார். எப்படியோ சரிந்து காலில் விழுந்து எழுந்தார் நாகிரெட்டி! எல்லோருக்கும் ஆச்சரியம். எம்.ஜி.ஆர் முதலாளி என்று மரியாதை செய்யும் நபர் காலில் விழுந்தே தீர்வேன் என்று பிடிவாதம் பிடித்ததைக் காண நேர்ந்ததில்! அங்கிருந்த எல்லோரும் மலைத்துப் போய்விட்டார்கள்!
மேடையில் எம்.ஜி.ஆர் செல்லக்கோபத்துடன் ‘என்ன இப்படி? நீங்களுமா? என்று கையை விரித்து சைகையால் கேட்பதை எல்லோரும் காண முடிந்தது. நாகிரெட்டியிடம் தொடர்ந்து ஏதேதோ பேசி மீண்டும் கை விரித்து என்னமோ சொன்னார். ஸ்டுடியோ அதிபர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினார்.அவர்களுக்குள் Nostalgia எவ்வளவோ இருக்கும் தானே.
எங்கவீட்டுப்பிள்ளை படம் எடுத்தவர் அல்லவா?
எம்.ஜி.ஆர் பேச ஆரம்பித்தார்.
’உங்களுக்கெல்லாம் தெரியும். சென்ற பாராளுமன்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் எதிர்கொண்ட எதிர் பாராத தோல்வியைத்தொடர்ந்து என்னுடைய மதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் என்னுடைய ஆட்சியைக் கலைத்து விட்டார்கள். அந்த நேரத்தில் நாகிரெட்டியாரின் மூத்த புதல்வர் பிரசாத் அகால மரணமடைந்து விட்டார். நான் துக்கம் விசாரிக்க நாகிரெட்டி அவர்களின் வீட்டிற்கு போயிருந்தேன். என்னை கண்டதும் அவர் ஓடிவந்து என்னைக் கட்டிப்பிடித்து “உங்கள் ஆட்சியை கலைத்து விட்டார்களே” என்று கதறி அழ ஆரம்பித்துவிட்டார். ( இந்த இடத்தில் எம்.ஜி.ஆர் சற்று நிறுத்தி விட்டார்.) எவ்வளவு உயர்ந்த உள்ளம் பாருங்கள். அவர் பெற்ற பிள்ளை இறந்து விட்டார்.ஆனால் அவர் என்னுடைய ஆட்சியை கலைத்துவிட்டார்களே என்று அழுகிறார். என் மீது அவர் எப்படிப் பட்ட அன்பைக்கொண்டிருக்கிறார் பாருங்கள்.( ’ஆட்சி’ என்ற வார்த்தை எம்.ஜி.ஆர் ’ஆச்சி’ என்றே உச்சரிக்க முடியும்)
நான் இப்போது அவரிடம் மேடையில் ஏதோ கேட்டதை நீங்கள் அனைவரும் பார்த்தீர்கள். நான் கேட்டேன். ‘ இன்று எனக்கு ஆட்சி மீண்டும் கிடைத்து விட்டது. ஆனால் உங்களுக்கு உங்கள் மகன்? உங்கள் மகனை என்றென்றைக்குமாக நீங்கள் இழந்தே விட்டீர்கள்.’
( எம்.ஜி.ஆர் குரல் மிகவும் நெகிழ்ந்து தழுதழுத்தது)
1980களில் வந்த படங்கள் குறித்த தன் அதிருப்தியை தொடர்ந்து எம்.ஜி.ஆர் வெளிப்படுத்திய விதம் கீழ் வருமாறு:
”’இதயக்கனி’ படம் வெளிவந்திருந்தபோது நான் என் ரசிகர் ஒருவரிடம் படம் பற்றி கேட்டேன். அவர் எனக்கு பிடித்திருக்கிறது என்று சொன்னார். நான் அவர் சொன்னதைக் கேட்டு திருப்தியடைந்துவிடவில்லை.” உன் தாயார் இதயக்கனி படம் பார்த்தார்களா? அவர்கள் என்ன சொன்னார்கள்?” என்று மீண்டும் கேட்டேன். அவர் சற்று தயங்கினார். “ தயவு செய்து அவர் சொன்னதை அப்படியே சொல்” என்றேன். என் ரசிகர் மெதுவாக சொன்னார். ”வர வர எம்.ஜி.ஆர் படம் கூட இனி பார்க்க முடியாது போலிருக்கிறதே என்று என் தாயார் வேதனைப்பட்டார்.” இடி இறங்கியது போல நான் துடித்துப்போய் விட்டேன். அந்த படத்தில் நான் ராதா சலூஜாவுடன் நெருக்கமாக நடித்து விட்டேன் என்று பலரும் பேசியதை அறிய வந்தேன். மீண்டும் நானே எடிட்டிங் டேபிளில் உட்கார்ந்து அப்படிப்பட்ட காட்சிகளை நீக்கினேன். மீண்டும் படத்தை வெளியிட்டேன். அதற்கே அப்படி என்றால் இப்போது நடப்பது என்ன? எவ்வளவு ஆபாச காட்சிகள். எப்படியெல்லாம் கற்பழிப்பு காட்சிகள். இது தான் திரையுலகம் காணும் பண்பாடா? இது நியாயமா? நான் மிகுந்த பணிவோடு எச்சரிக்கிறேன். தயவு செய்து நல்ல படங்களை மக்களுக்கு கொடுங்கள்.உங்களை கை கூப்பி வேண்டிக்கேட்கிறேன். தயவுசெய்து கண்ணியம் மீறாதீர்கள்.வளர்ச்சியில் தான் மலர்ச்சியை காண்கிறோம். அதே நேரம் மலர்ச்சியில் வளர்ச்சியைக் காண்கிறோம்............ Thanks...
2 ஜி ஊழல் புகழ் ராசா போன்ற நபர்கள் புரட்சித்தலை வரை புகழ்ந்து பேசாவிட்டாலும், வசைபாடாமல் இருப்பது நல்ல து. ஏனெனில், நமது மக்கள் திலகம் தன்னுடைய பல திரைப்படங்களில், தாழ்த்தப்பட்ட மக்களின் நன்மைக்காக குரல் கொடுத்து ஆதரவு அளித்து வந்தார். இது, வேறு எந்த ஒரு நடிகனும் செய்யத்துணியாத செயல்.
சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னால், நமது தலைவர் அவர்களை அவ்வளவு எளிதாக புகழ்ந்து எழுதாத 'ஜூனியர் விகடன்' பத்திரிக்கை, தாழ்த்தப்பட்ட மக்கள், எம். ஜி. ஆர். அவர்களை இன்றும் தெய்வமாக மதிக்கிறார்கள் என்று வாரக்கட்டுரை ஒன்றில் எழுதியிருந்ததது. நன்றி மறவாத நல்ல மனம் கொண்டவர்கள் நிறைய பேர் இருக்கும் இந்த உலகத்தில், அரசியல் பிழைப்புக்காக உளறிக்கொண்டிருக்கும் ராசா போன்ற நபர்களால் தலைவர் புகழை என்றும் அழிக்க முடியாது.
பாஸ்கரன்,
கலைவேந்தன் எம். ஜி. ஆர். பக்தர்கள் அறக்கட்டளை........ Thanks...
கடந்த ஞாயிறு (07/07/14) அன்று சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சி பற்றிய விளம்பரம்
http://i66.tinypic.com/qs9utv.jpg
http://i68.tinypic.com/xksspc.jpg
http://i63.tinypic.com/14uf446.jpg
எனது 33 வது திருமண நாளுக்கு அலைபேசி, கைபேசி, வாட்ஸ் அப், முகநூல், எஸ்.எம்.எஸ். மூலமும் மற்றும் நேரிலும் நல்வாழ்த்துக்கள் தெரிவித்த அன்பர்கள், நண்பர்கள், உறவினர்கள், வங்கிதோழர்கள் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அபிமானிகள், ரசிகர்கள், பக்தர்கள், அ. தி.மு.க. பிரமுகர்கள் அனைவருக்கும்
கோடான கோடி நன்றிகள் .
ஆர். லோகநாதன்,
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு
http://i67.tinypic.com/2ltn0wl.jpg
கன்னிப்பெண் படத்தின் பூஜை நாளன்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் , மக்கள் கலைஞர் ஜெய்சங்கர்
http://i64.tinypic.com/29crp0.jpg
தெய்வத்தாய்", ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் தயாரிப்பு........18-07-1964 to 18-07-2019 55 ஆண்டுகள் நிறைவடைந்து 56 ம் ஆண்டு துவக்கம்...
இந்தப்படம் தயாரிக்கப்பட்ட காலக்கட்டத்தில், கே.பாலசந்தர் அக்கவுண்டன்ட் ஜெனரல் அலுவலகத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். நாடகம் எழுதி, இயக்குவதில் புகழ் பெற்று விளங்கினார். அவர் எழுதிய "மெழுகுவர்த்தி", "மேஜர் சந்திரகாந்த்" ஆகிய நாடகங்களில் ரசிகர்களிடம் மிகுந்த ஆதரவைப் பெற்றிருந்தன.
ஒருமுறை "மெழுகுவர்த்தி" நாடகத்திற்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், பாலசந்தரின் திறமையை வெகுவாகப் பாராட்டியதுடன், அவரைப்போன்ற இளைஞர்கள் படத்துறையில் நுழையவேண்டும் என்று வற்புறுத்தினார்.... Thanks...
தெய்வத்தாய் ஆரம்ப காட்சி தன் தாயாரை சந்திக்க வருவார் எம்ஜிஆர். ஏன் இவ்வளவு லேட் என்பார். அதற்கு என் எதிரிகள் என்னை தாக்க திட்ட மிட்டனர். அவர்களுடைய திட்டங்களை தவிடு பொடி ஆக்கிவிட்டேன் என்பார்....... Thanks...
தமிழ் சினிமாவில் எம்ஜியார் படம், சிவாஜி படம் ஜெமினி படம் எஸ்.எஸ்.ஆர். படம் ஸ்ரீதர் படம் பிறகு பாலச்சந்தர் படம் என்று பேசப்பட்டது. "தெய்வத்தாய் " படத்தில் வசனம் எப்படி இருக்க வேண்டும் மக்களுக்கு எளிதாக புரிய வேண்டும் என்று உணர்த்தினார்....... Thanks...
"தெய்வதாய்" வெற்றி காவியம் ...சென்னை பிளாசா கிரவுன் புவனேஸ்வரி 100 நாள் ஓடியது. மதுரை கல்பனா கோவை ராயல் தொழிலாளி வரும் வரை 69 நாள் ஓடியது. நெல்லை லட்சுமி 50 நாள் ஓடியது......... Thanks...
குமுதம் பத்திரிகை மக்கள் திலகம் படம் விமரிசனம் மட்ட மாக இருக்கும்....எம்ஜிஆர் .,அவர்களை தனிப்பட்ட முறையில் தாக்கி எழதும். தெய்வத்தாய் பற்றி தரக்குறைவாக எழுதியது. மறு வாரமே விளம்பரத்தில் கருத்துக் குருடர்களின், எழுத்துக் கணைகளை முறியடித்த படம் ...என்றுவிளம்பரம் செய்தார் தயாரிப்பாளர் திரு.ஆர்.எம்.வீரப்பன் அவர்கள்.......... Thanks...