-
"ம" -* வரிசை திரைப்படத்தில் நான்காவது மிகப்பெரிய வெற்றி காவியமாக மலைக்கள்ளன் உருவெடுத்தான். மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி, மர்மயோகி, மலைக்கள்ளன்*
4 காவியங்களில் முதன்முறையாக தமிழ் சினிமா வரலாற்றில் "ம" வரிசையில் வெற்றிக்கொடி நாட்டிய திரைப்படங்கள் ஆகும்.
தமிழகத்தில் மலைக்கள்ளன் திரைக்காவியம் முதல் வெளியீட்டில் 38 திரையரங்கில் 50 நாட்களை கடந்து மறு வெளியீட்டில் 27 திரையரங்கில் 50 நாட்களை கடந்தது.... இதில் 10 திரையரங்குகளில் 12 வாரங்களுக்கு மேல் ஒடி சாதனை படைத்தது.10 திரையரங்குகளுக்கு மேல் 10 வாரங்களை கடந்து வெற்றிக்கொடி நாட்டியது.*
தமிழகம் கர்நாடகா கேரளா சித்தூர் சேர்த்து மொத்தம் 75 திரையரங்குகளுக்கு மேல்**
50 நாளை முதன் முதலில் வெற்றி கொண்ட திரைக்காவியம்.... தமிழ் சினிமாவில் மலைக்கள்ளன் ஆகும்.
கோவை கர்னாடிக் 20 வாரங்கள் திருச்சி வெலிங்டன் 19 வாரங்கள் சேலம் ஓரியண்டல் 17 வாரங்கள் நெல்லை ரத்னா 105 நாட்கள் இலங்கை சென்ட்றல் 105 நாட்கள்.
மற்றும் ஈரோடு 92 நாட்கள் திண்டுக்கல் 96 நாட்கள் விருதுநகர் 91 நாட்கள் வேலூர் 84 நாட்கள் தஞ்சை 86 நாட்கள் குடந்தை 84 நாட்கள் புதுச்சேரி 85 நாட்கள் பெங்களூர் 12 வாரங்கள்.
இந்திய கலைத்துறையில் 1954 ம் ஆண்டின் சிறந்த. படமாக ஜனாதிபதியின் வெள்ளிப்பதக்கம் பெற்ற முதல் தென்னிந்திய காவியம் மக்கள் திலகத்தின் மலைக்கள்ளன் ஆகும்.
எந்த நடிகரும் தன் மொழியின் புகழை திரையில் பதித்த வரலாறு கிடையாது. ஆனால் மக்கள் திலகத்தின் மலைக்கள்ளன் திரைப்படத்தில்....* டைட்டிலில் வரும் பாடலான "தமிழன் என்றொரு இனம் உண்டு" என்ற பாடல் தமிழுக்குப் பெருமை சேர்த்து தமிழ் இனத்தின் முதல் மகனாக தமிழ்த்தாயின் தலைமகனாக* மலைக்கள்ளன் மூலம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பெயர் பெற்றார்.
எல்லாக் காலத்திலும் ஏற்றதொரு பாடலாக எங்கும் எப்பொழுதும் ஒலித்துக்கொண்டே இருக்கும் வெற்றிப் பாடலாக "எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" என்ற பாடல் சாகாவரம் பெற்ற பாடலாகும். அன்று முதல் இன்று வரை என்றுமே திகழும் ஒப்பற்ற பாடலாகும்.
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுடன் நடிகை பானுமதி* நாயகியாக நடித்த முதல் திரைப்படமாக மலைக்கள்ளன் திரைப்படம் வெளிவந்தது.
1958 ல் நாடோடி மன்னன் திரைப்படம் தென்னக மெங்கும் திரையிடப்பட்ட பொழுது மக்கள் திலகத்தின் மலைக்கள்ளன் திரைக்காவியம் அந்த நேரம் பல திரையரங்குகளில் திரையிடப்பட்டு நான்கு ஐந்து வாரங்கள் கடந்தது*..........
-
குறிப்பாக 1958 ஆம் ஆண்டு வரை வெளியான மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் நாடோடி மன்னன் ஓடிய சமயத்தில் நூற்றுக்கண க்கான திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருந்தது மிகப்பெரிய சாதனையாகும்.
மலைக்கள்ளன் திரைக்காவியம் சமீபத்தில் 2018 ல் மதுரை, கோவை ஈரோடு என பல ஊர்களில் திரையிடப்பட்டது.* மதுரை சென்ட்ரல் திரையரங்கில் 7 நாட்கள் ஓடி ஒரு லட்சத்திற்கும் மேல்* வசூலை வாரிக் கொடுத்தது.
1954 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களிலேயே பொன் போன்ற சாதனைகளை எப்பொழுதும் பதித்துக்கொண்டு வரும் ஒரே காவியம்.... மக்கள் பேரரசின் மலைக்கள்ளன் மட்டுமே ஆகும்.
மக்கள் திலகத்தின் மலைக்கள்ளன் திரைப்படம் கடந்த 66 ஆண்டு களுக்கு மேல் பல சாதனைகளை படைத்து வந்து உள்ளது.*
இது போன்ற ஒரு திரைப்படம் 1954 ஆம் ஆண்டுக்கு முன்* சாதனைகளை செய்ததில்லை. அது வரை எந்த படமும் மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்தும் சாதனைகள் தொடரும்..........
-
கலக்குது*எம்.ஜி.ஆர். வீடியோ*
-------------------------------------------------
திரை மலர் - வாட்ஸ் அப் செய்தி*
----------------------------------------------------
எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாற்றை 25 பாகங்கள் கொண்ட வீடியோ* ஆவணமாக மாற்றி* , யூ ட்யூப்* உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்* ஜெ.எம்.பஷீர் என்பவர் .* இவர் எம்.ஜி.ஆரிடம் உடையலங்கார கலைஞராக பணியாற்றிய எம்.எம்.ஜமாலின் மகன் .
பஷீர் பகிர்ந்த தகவல்*
-------------------------------------
எம்.ஜி.ஆரை நேரில் சந்திக்கும் பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை .* ஆனால் அவரை பற்றி அப்பா நிறைய* சொல்வார் .* அதை கேட்டு கேட்டு, எம்.ஜி.ஆர்.ரசிகனாகவே வளர்ந்தேன் .* இதனால், எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாற்றை இன்றைய இளைய தலைமுறை விரும்பும் வகையில் வீடியோ*ஆவணமாக மாற்ற ஆசை வந்தது .**
எம்.ஜி.ஆர். பற்றிய பல புத்தகங்களை படித்தேன் . மணவை* பொன் மாணிக்கம் எழுதிய எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர். , புகழ் மன செம்மல் எம்.ஜி.ஆர். என்ற இரு புத்தகங்களில் இடம் பெற்றுள்ள சுவாரஸ்ய சம்பவங்கள் என்னை கவர்ந்தன .அவற்றைத் தொகுத்து 25 பாகங்கள் கொண்ட எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாற்று*வீடியோ ஆவணத்தை 60 நாட்களில் தயாரித்தேன் .* மொத்தம்* 5 லட்சம் ருபாய் செலவு .
ஹிஸ்டரி ஆப்* லெஜெண்ட்* எம்.ஜி.ஆர். என்ற தலைப்பில்* இந்த வீடியோ ஆவணத்தை சமூக வலை தளங்களில் வெளியிட்டேன் .* அமோக வரவேற்பு வந்திருக்கிறது .* பார்த்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியிருக்கிறது .எம்.ஜி.ஆர். ரசிகர்களிடம் இருந்து வாழ்த்துக்களும் , பாராட்டுகளும், நன்றிகளும் குவிந்து கொண்டே இருக்கின்றன .* இலங்கை, சிங்கப்பூர், மலேசியா , ஜப்பான் , துபாய், அமேரிக்கா என பல வெளிநாடுகளில் இருந்தும் எம்.ஜி.ஆர். ரசிகர்கள்* எனக்கு போன் செய்து வாழ்த்துகிறார்கள் .கரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள மனசோர்வை நீக்கவும் , நம்பிக்கை உற்சாகத்தை பெறவும் எம்.ஜி.ஆர். ஆவண வீடியோக்கள்* உதவுவதாக கூறுகிறார்கள்.* இது எனக்கு மிகுந்த மன நிறைவையும் சந்தோஷத்தையும் தருகிறது .
-
எம்.ஜி.ஆர் மற்றும் மம்மூட்டியின் இந்த படம் சி.ஜி.டி.யுவின் வெள்ளி விழா கொண்டாட்டங்களை துவக்க எம்.ஜி.ஆரின் வருகையின் போது நான் எடுத்தது. (கொச்சின் துரைமுக தொழிலாளி யூனியன்). மட்டஞ்சேரியில் தொழிற்சங்கம் மிகவும் பிரபலமாக இருந்தது. மம்மூட்டியின் மாமனார் அந்த சுயாதீனமான தொழிற்சங்கத்தின் முக்கிய முன்னணி அதிகாரிகளில் ஒருவர்.
நான் எம்.ஜி.ஆரின் பெரிய ரசிகன். எம்.ஜி.ஆரை நான் சந்திப்பது இதுவே முதல் முறை. அவர் சென்னை (சென்னை) இலிருந்து கொச்சின் (பழைய விமான நிலையம்) வந்தார். பெரும்பாலான பத்திரிகையாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் அவரது வருகையின் படங்களை எடுத்து மற்ற வேலைகளைச் செய்ய முன்வந்தனர். அந்த நேரத்தில் நான் ஒரு சுயாதீனமான புகைப்படக் கலைஞராக இருந்தேன், எம்.ஜி.ஆருடன் இருக்க இந்த வாய்ப்பைப் பெற்றேன், இந்த புராணக்கதையைப் பார்த்து அங்கே நின்றேன். அவர் வந்தவுடன், அமைப்பாளர்கள் அவரை வெலிங்டனில் உள்ள ஒரு விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் சென்றனர். எம்.ஜி.ஆருடன் விருந்தினர் மாளிகைக்குச் சென்றேன். விருந்தினர் மாளிகைக்கு செல்லும் வழியில், விமான நிலையத்திற்கு முன்னால் இருந்த தங்கள் குடியேற்றத்திற்கு முன்னால் கூடியிருந்த தமிழ் தொழிலாளர்களை பார்த்து அவர் கை அசைத்தார்.
சுற்றியுள்ள ஒரே நபர் நான், அவருடன் தமிழில் தொடர்பு கொள்ள முடியும், அது "எனக்கு தெரிந்த அளவுக்கு தான் தமிழ்". எனவே, அவர் பல கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார். எனக்கு என்ன புரிந்ததோ ...பதிலளித்தேன். அவர் ஒரு மென்மையான கவனமுள்ள மனிதர்… சில மணிநேர அறிமுகத்திற்குப் பிறகு, அவரின் வெள்ளை ஃபர் தொப்பியை மற்றும் அவரது கண்ணாடியையும் அகற்ற முடியுமா என்று நான் பணிவுடன் கேட்டேன்… அவரது சுருள் முடிகளையும் கண்களையும் பிடிக்க எனக்கு ஆர்வமாக இருந்தது… அவருடைய அரசியல் படங்கள் பெரும்பாலானவை இந்த சின்னமான சின்னங்கள். அவருள் இருக்கும் கலைஞரை புகைப்படம் எடுப்பதே எனது கனவு… அவர் சிரித்தார்… ஒரு சிறிய மௌனத்திற்கு பிறகு , “சென்னைக்கு வாருங்கள்” என்றார். நான் ஒருபோதும் சென்னைக்குச் செல்லவில்லை அவரை மீண்டும் பார்க்கவில்லை.
புகைபட கலைஞர் : அப்துல் காலம் ஆசாத்.........
-
புரட்சி நடிகரின் புரட்சித் தயாரிப்பான முதல் காவியம் எம்.ஜி.ஆர் பிக்சர்ஸின் நாடோடி மன்னன்* திரைப்படத்திற்குப் பின் எந்ததொரு திரைப்படமும் வெளிவந்து நாடோடி மன்னன் பெற்ற மகத்தான வெற்றியை . ஆறு ஆண்டுகள் (1958 - 1964) வரை எந்தப் படமும் தமிழ் திரைப்பட உலகில் வென்றது கிடையாது.*
அதன் பின்பு 1965 ஆம் ஆண்டு எங்க வீட்டுப் பிள்ளை வெளிவந்து தமிழ் திரைப்பட உலகில் மிகப்பெரிய. வெற்றியை அரங்கேற்றியது.*
1956 ஆம் ஆண்டு மதுரை வீரன் திரைப்படம் 35 திரையரங்குகளில் 100 நாட்களை கடந்து சரித்திரம் படைத்தது. அதன் பின்பு 1958 ல் நாடோடி மன்னன் திரைக்காவியம் 13 திரையரங்குகளில் விழா கொண்டாடியது...
திருவண்ணாமலை நகரில் இரண்டாம் வெளியீடாக நாடோடி மன்னன் திரைக்காவியம் 113 நாட்கள் ஓடி 14 திரையரங்கில் நாடோடி மன்னன் சாதனை படைத்தது. அதுமட்டுமல்ல கரூர் நகரில் 99 நாட்களும், கடலூர் நகரில் 96 நாட்களும், சித்தூர் நகரில் 98 நாட்களும், தாம்பரம் எம். ஆர் .திரையரங்கில் 97 நாட்களும்,
குடந்தையில் 96 நாட்களும்.. நாடோடி மன்னன் 100 நாளை நூலிழையில் தவறவிட்ட திரைப்படமாகும்.*
நாடோடி மன்னன் காவியத்தை வென்றதாக.... வசூலை மிஞ்சியதாக எந்தத் திரைப் படத்திற்கும் ஆறு ஆண்டு காலம் வெற்றி வாய்ப்பில்லை ..**
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் கால் முறிவு ஏற்பட்டு 9 மாத இடைவெளிக்கு பின்பு தாய் மகளுக்குக் கட்டிய திரைப்படம்*
31.12 .1959யில் வெளியீட்டார்கள்.
ஆனால் சில நடிகர்கள் தாங்கள் தான் தமிழ் திரைப்பட உலகில் தான் தான் பெரிய நடிகர் என்ற* ஆணவத்துடனும், அகம்பாவத் துடனும் உலா வந்தனர் .*
சில படங்களில் நடித்து**
பெருமை அடித்துக் கொண்டனர்.
அதன் பின்பு 1961 ஆம் ஆண்டு வெளியான திருடாதே, தாய் சொல்லைத் தட்டாதே திரைப்படங்களில் புரட்சித் தலைவர் தனிப்பெரும் கதாநாயகனாக.... தனியாக நின்று மீண்டும் தன் இயற்கை பரிமாணத்துடன்..
[வெற்றிக்
கொடியை பறக்கவிட்டார்....
அகம்பாவத்தின் சின்னமாக போலி நடிப்பை....ஆங்கில நடிகரின் பாணியை வைத்து நடித்த நடிகரின் சாயம் வெளுத்தது...
மீண்டும் தமக்கு அடுத்தபடியான நடிக, நடிகையை தன் படங்களில் போடசொல்லி அதற்கேற்ப கதையை உருவாக்க சொன்னார்
அந்த 30 வயது பாலகன் நடிகர்.
தனியாக மக்கள் திலகத்தை வெல்ல அந்த 30 வயதுடைய பாலகன் நடிகனுக்கு தெம்பில்லை... தீராணியில்லை....
45 வயதான புரட்சித்தலைவரை கண்டு தொடை நடுங்கி கூனி குருகி நின்ற 30 வயது நடிகன்.
பல நடிக,நடிகையர் பட்டாளத்தை கொண்டு அவர்களின் நடிப்புடன் தன்* போலி நடிப்பையையும் சேர்த்து.... படத்தின் வெற்றியை தனக்கு சதகமாக்கி கொண்ட ஒரே இளைய பாலகன் நடிகர் ... மூர்த்தி ஒருவர் தான்....
திருடாதே, தாய்சொல்லைத் தட்டாதே சமூகப் படங்கள் மூலம் மிகப்பெரிய வெற்றியை தமிழக மக்களிடம் கொண்டு சேர்த்தார் மக்கள் திலகம்.*
பேண்ட், சர்ட் என வித விதமான அலங்காரம் தொப்பி
கண்ணாடி... கோட்... டி சர்ட் என பிரமிக்க வைக்கும் அளவுக்கு திரையில் தோன்றினார் மக்கள் திலகம்.*
பாலகன் நடிகர் வயதான தாத்தா வேடத்தில் நடிக்க தொடங்கினார்... கிழிந்த சட்டையும் தாடியுமாக*
60 வயது தாண்டிய கிழவனாக நடித்ததாவது சினிமாவில் நிற்க முடிவு செய்தார் அந்த பாலகன்....*.........
-
இந்த மூன்று திரைப்படங்களையும் வெல்ல.....* அன்று அது வரை அத்தனைப் படங்களிலும் நடித்த எந்த நடிகராலும் இத்திரைப்பட* வெற்றியைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சாதனை என்றால் ஒரு திரைக் காவியத்தின் வசூலை மிஞ்சி எழுச்சி பெற்று முதன்மை பெற்றால் தான் அந்த திரைப்படத்தின் சாதனை என்று சொல்லவேண்டும்.**
படத்தையும் கதாபாத்திரத்தையும் வைத்துக் கொண்டு ஓலமிட்டாள் அப்படம் வெற்றிக்கு அறிகுறி கிடையாது என்பது பொருளாகும்..
அன்றைய சினிமா உலகில் முன்னணி நடிகர்களையும் இரண்டாம் பட்ச கதாநாயகர்களை வைத்து தன்னுடைய படங்களை உயர்த்திக் காட்டிய சில நடிகர்களின் அகம்பாவம் சில படங்களில் அரங்கேறியது. கட்டபொம்மன், பாகப்பிரிவினை பாசமலர், நவராத்திரி, கை கொடுத்த தெய்வம், பச்சை விளக்கு, ஆலயமணி, பாவமன்னிப்பு போன்ற படங்களும் புராண படங்களில் பல நடிகர்களை ஒன்று கூட்டி வைத்து கதை அமைத்து திருவிளையாடல் சரஸ்வதி சபதம் கந்தன் கருணை
தில்லாணா.. போன்ற படங்களைக் கொடுத்தும் பின்னாளில் இப்படங்கள் திரையரங்குக்கு வராமல் ஓய்வு எடுத்த காலம் இன்று வரை தொடர்கதை தான்.*
மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் அனைத்து ஏரியாக்களிலும் சாதனை படைக்கும் என்பது முக்கிய சரித்திரமாகும். மற்ற நடிகர்கள் குறிப்பிட்ட சில ஊர்களில் மட்டும் சாதனை என்று பீற்றிக் கொண்டு 90 சதவீத ஊர்களில் வசூலில் கோட்டை விட்டனர் .*
கிழட்டு பாலகனாக பல படங்களிலும்,.சாமியார் வேடத்திலும் வந்தும்
அதிக* வயதுடைய பெண்ணுக்கு இந்த பாலகன் நடிகர் அப்பாவாக. தாத்தாவாக நடித்தார்...
அதன் பின் திரையில் நிற்க எந்த கதாபாத்திரத்தை தன் வளமான வாழ்வுக்கு பணம் ஒன்றே போதும் என நடித்தார்....100 ரூபாய்க்கு நடித்தால் போதும்... கையெழுத்து போட்டு பணம் வாங்கி கொள் என்றால்...1000 ரூபாய்க்கு* கட்டி பிரண்டு நடித்து ...கண்ணீர் விட்டு அழுதபின் கொடுப்பதை கொடுங்கள் என வாங்கிய 30.வயது கீழபாலகன் நடிகர்.
நாடோடி மன்னன் பெற்ற வசூலை
1965 ஆம் ஆண்டு வெளியான*
எங்க வீட்டு பிள்ளை திரைப்படம்*
வெளியாகி வென்று புதிய வெற்றியை.. வசூலை படைத்தது.
16 திரையரங்குகளில் 100 நாட்களை கடந்தும்*
15 திரையரங்கில் முதல் வெளியீட்டில்.... 100 நாள் ஆகும். தர்மபுரி நகரில் இரண்டாம் வெளியீட்டில் 100 நாட்களும் கொண்டாடி..... மூன்றாவது அதிக ஊர்களில் 100.நாட்களை கடந்த திரைப்படமாக தமிழ் திரை உலகில் சாதனை படைத்தது.*
ஈரோடு நகரில் 100 நாட்கள்.... விளம்பரத்தில் சேர்க்கப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கும்ப கோணத்தில் 98 நாட்கள் ஒடியது.*
1965 ஆண்டு வரை மிகப்பெரிய வெற்றியை பெற்ற காவியங்கள் மூன்று மட்டுமே.*
மதுரை வீரன் .... 35 அரங்கு
நாடோடி மன்னன்... 14 அரங்கு*
எங்க விட்டுப்பிள்ளை ... 17 அரங்கு.
மக்கள் திலகத்தின திரைப்படங்களுக்கு அடிபணிந்து வசூல் இல்லாமல் எடுக்கப்பட்ட காலங்கள் பல....*
சினிமா உலகம் என்றாலே மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஒருவர் என்ற மூன்றெழுத்து மந்திரத்தின் பெயரால் தான் பல ஆண்டுகள் நிலைத்து நின்றது. அதன் பின்பு பல திரைப்படங்கள்.... பல வெளியீடுகளில் ஆயிரக்கணக்கான திரையரங்குகள் வாழ்வாதாரம் பெற்ற வந்துள்ளது. மற்ற நடிகர்களின் குப்பை படங்கள் எல்லாம் மண்ணுக்குள் புதைந்தது. இது தான் கடந்த கால வரலாறு....
முதல் வெளியீட்டிற்கு பின் மண்ணோடு மண்ணாக*
மக்கி போன படங்களை தூசி தட்டி அலங்காரம் செய்து... முகநூலில் பொய் என்னும் பதிவில்..
சாதனை என பிதற்றுகிறார்கள்* சிலர்.....
தொடரும்............
-
கட்சி முக்கிய பிரமுகர் ஒருவர் ஒருமுறை முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரிடம் வந்து ' விதவைகள் தன் கணவரின் வேலையை வாரிசு முறைப்படி பெற்றுக்கொண்டு பின்பு மறு திருமணம் செய்கின்றனர். இது முதல் கணவருக்குச் செய்யும் துரோகம் இல்லையா? மறுமணம் செய்துகொண்டால் முதல் கணவரால் கிடைத்த வேலையை விட்டுவிட வேண்டும் என்று ஆணையிடுங்கள் தலைவரே 'என்று வேண்டினார்
அதற்கு எம்.ஜி.ஆர் ‘’ அந்த விதவைப்பெண்ணின் சம்பளத்துக்காகத்தான் பலர் மறு மணம் செய்கின்றனர். அவளுக்கு வேலை போய்விட்டால் அவனும் அவளை விட்டு போய்விடுவான். வேலைதான் விதவைக்கு பலம். அதை நாம் கெடுக்கக் கூடாது” என்று பதில் கூற. கேள்வி கேட்டவரோ வாயடைத்து நின்றார்.........
-
கொரோனா சூழ்நிலை காரணமாக ஏப்ரல், மே மற்றும் ஜூலை மாதங்களில்
'இதயக்கனி' இதழைக் கொண்டுவர முடியவில்லை என்பதன் பாதிப்பை தினமும் வாசகர்களின் அழைப்பின் மூலம் உணர்கின்றேன்.
இன்று மாலை 'இதயக்கனி' கோவை முகவர் திரு சண்முகராஜா தொடர்பு கொண்டு பேசினார். "நேற்று முதல் பேருந்து போக்குவரத்து தொடங்கியதால் கோவை காந்திபுரம்
மத்திய பேருந்து நிலைய பகுதி கடைகள் திறக்கப்பட்டன.
"நான் வழக்கம் போல புத்தக கடைகளுக்கு சென்றபோது,
இன்று மாலை அங்குள்ள கடையொன்றுக்கு தலையில் சுமையுடன் வந்த ஒரு பெண்மணி, 'இதயக்கனி' இதழ் அங்கிருப்பதறிந்து
ஆர்வத்துடன் வாங்கி அட்டை முகப்பிலிருக்கும் எம்.ஜி.ஆர். உருவத்தை வணங்கி முத்தமிட்டு,
"மூன்று மாதமாக இதயக்கனி புத்தகம் பார்க்க முடியாமல் தவித்துப் போனேன்.
என் தெய்வத்தை இன்று பார்த்த பின்புதான் நிம்மதியாக இருந்தது"
என்றவர், இதற்கு முன் மாதம் தவறாமல் அந்த கடையில் தான் புத்தகம் வாங்கி செல்வாராம். அவரது ஆர்வத்தை கண்ட மகிழ்ச்சியில் பெயரைக் கேட்க மறந்து போனேன்" என்றார்.
20 ம் ஆண்டிலும் இப்படியொரு நிகழ்வு அதிசயம்தான்.
Ithayakkani S Vijayan...........
-
1972 - #அண்ணா_திராவிட_முன்னேற்ற கழகம் என்ற ஓர் அரசியல் கட்சியை ஏற்படுத்தினார்.
1974 - #புதுவையில் அனைத்திந்திய அ.தி.மு.கழகம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
1977 - #புதுவையில் இரண்டாவது முறையாகவும், தமிழகத்தில் முதல் முறையாகவும் அ.இ.அ.தி.மு.க. போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
1980 - அ.இ.அ.தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. (பாராளுமன்ற தேர்தல் தோல்வியின் காரணமாக)
1980 - #தமிழகத்தில் நடந்த மறு சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு அ.இ.அ.தி.மு.க. ஆட்சி அமைத்தது.
1981 - #மதுரையில் 5ம் உலகத் தமிழ் மாநாடு இந்திய பிரதமர் இந்திராகாந்தி தலைமையில் சிறப்புடன் நடத்தினார்.
1982 - #மாநிலத்திற்கு அரிசி தேவைக்கு உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
1984 - #அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிட்டு ஆட்சி அமைத்தது.
1987 - #இலங்கைத்_தமிழர்கள் அமைதி காக்க இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி - இலங்கை பிரதமர் ஜெயவர்த்தனா ஒப்பந்தம் ஏற்பட பாடுபட்டார்.
24•12•1987 -புரட்சித்தலைவர் தெய்வம் ஆனார்
புரட்சி தலைவர்,&
அம்மாவின் தொண்டன் .........
செஞ்சி #முனியப்பன்.........
-
இந்த புகைப்படம் குறித்து சில நாட்களுக்கு முன் நம் தளத்தில் பதிவு வர பல தலைவர் நெஞ்சங்கள் ஆளுக்கு ஒரு முறையில் பதில் சொல்ல.
ஐம்பெரும் திமுக தலைவர்கள் அப்போது இருந்த நேரம்..சென்னையில் அப்போது இப்போது மாநகராட்சி தேர்தல் என்று அப்போது கார்ப்பரேஷன் தேர்தல் என்பர் அதை..
அதில் திமுக வெற்றி.
தலைவர் வழக்கம் போல கடும் பிரச்சாரம்.
வெற்றி அடைந்த பின் நன்றி அறிவிப்பு கூட்டம்.... எல்லா தலைவர்களும் மேடையில் இருந்து ஒருவர் பின் ஒருவர் பேசி நன்றி சொல்ல.
அமரர் அண்ணா அவர்கள் பேச துவங்கி சற்று நேரத்தில் இந்த தங்க மோதிரத்தை இந்த தேர்தல் வெற்றிக்கு பாடு பட்ட அவருக்கு உங்கள் முன் அணிவிக்கிறேன் என்று சொல்லி அணிவிக்க...
அவர் பெயர் இங்கே சொன்னால் கூட பாவம்......அனைவருக்கும் அதிர்ச்சி நாம் எல்லோரும் வெற்றிக்கு பாடு பட அண்ணா அவர்கள் அவருக்கு மட்டும் தங்க மோதிரம் போடுவது சரியா என்று மேடையில் சலசலப்பு.
தீயசக்தி மகிழ்ச்சி அடைந்தது...மறுநாள் அனைவரும் அண்ணா அவர்களை சந்தித்து என்ன எப்படி என்று கேட்க.
அண்ணா அவர்கள் சிரித்து கொண்டே தேர்தல் நிதி என்று பணம் வசூல் பண்ணி அதில் மீதி இருந்த பணத்தில் அவரே கட்சி பணத்தில் ஒரு மோதிரம் வாங்கி கூட்டம் நடக்கும் காலை வீட்டுக்கு வந்து..
இன்று மாலை நான் மேடையில் ஒரே வேண்டுகோள் வைப்பேன் அதை நீங்கள் தட்டாமல் செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்ள.
நானும் இந்த மோதிர விஷயம் தெரியாமலே ஒப்புக்கொள்ள அப்புறம் தெரிந்தது அவரின் உண்மை முகம்.
அடுத்த கூட்டத்தில் நீங்க வேணா பத்து மோதிரங்கள் வாங்கி கொண்டு வாங்க உங்க பத்து விரல்களுக்கும் போட்டு விட நான் தயார் என்கிறார் அமரர் அண்ணா சிரித்து கொண்டே..
முகம் காட்டி வாக்குகள் சேகரித்து கொடுக்கும் என் தம்பி ராமச்சந்திரன் அவர்களிடம் இந்த சம்பவம் சொல்லி நானும் சிரிக்க அவரும் சிரிக்க அதுவே இந்த படம்...
அண்ணா அவர்களையே மேடையில் அடகு வைத்த அப்படி பட்ட ஒருவரை தலைவர் மட்டுமே அடக்கி ஒடுக்கியது காலத்தின் கட்டாயமே..
வாழ்க தலைவர் புகழ்.
நன்றி...தொடரும்..
உங்களில் ஒருவன் நன்றி............
-
இலங்கையில் "நீரும் நெருப்பும் "...திரைக்காவியம் ஓடிய சாதனைகள்* சில!
01.01 1972 ல் திரையிடப்பட்ட மக்கள் திலகத்தின் மாறுபட்ட இரு வேடங்களில் பவனி வந்த நீரும் நெருப்பும் திரைக்காவியம் கொழும்பிலுள்ள ஜெயின்ஸ்தான் திரையரங்கில் 84நாட்களும் ஈரோஸ் திரையில் 45 நாட்களும் நவா திரையில் ஏழு நாட்களும் காண்பிக்கப்பட்டு மொத்தம் 136 நாட்கள் கொழும்பில் முதல் கட்டமாக ஓடிய திரைப்படம் நீரும் நெருப்பும்.
01.01 1972 ல் யாழ்ப்பாணம் நகரில் காலை 6 மணிக்கு முதல் காட்சி துவங்கியது. தொடர்ந்து ஆறு காட்சிகளும் அரங்கு நிறைந்து சாதனை. இரண்டாவது நாளில் 5 காட்சி நடைபெற்றது 5 காட்சியும் அரங்கு நிறைந்து சாதனை. தொடர்ந்து நான்கு காட்சிகள் வீதம் காண்பிக்கப்பட்டு மொத்தம் ராஜா திரையரங்கில் 65 நாட்கள் ஓடியது நீரும் நெருப்பும்.
16 .02 .1972 திரிகோணமலை சரஸ்வதி தியேட்டரில் திரையிடப்பட்ட நீரும் நெருப்பும் திரைப்படம் 50 நாட்களை கடந்து சாதனை படைத்தது. இலங்கையில் நீரும் நெருப்பும் திரைப்படம் பல பகுதியில் திரையிடப்பட்டு சாதனையாகும்.
அடுத்து இலங்கையில் ரிக்க்ஷாக்காரன் திரைக்காவியம் 18.2 .72 ல் திரையிடப்பட்டு சாதனை படைத்தது. கொழும்பில் 4 திரையில் திரையிடப்பட்டது மக்கள் திலகத்தின் ரிக்க்ஷாக்காரன். கொழும்பு கேப்பிட்டல், கிங்ஸ்லி பிளாசா, சபையர் ஆகிய நான்கு திரைகளில் .....
கிங்ஸ்லி அரங்கில் 20 நாட்களும், பிளாசா திரையில் 35 நாட்களும், சபையர் திரையில் 12 நாட்களும், கேப்பிட்டல் திரையில் 78 நாட்களும் ஓடி கொழும்பில் மொத்தம் 145 நாட்கள் ஒடி சாதனை படைத்தது.
யாழ் நகரில் வெலிங்டன் திரை மற்றும் லிடோ திரையரங்கில் திரையிடப்பட்ட ரிக்க்ஷாக்காரன் லிடோ அரங்கில் 29 நாட்களும், வெலிங்டன் தியேட்டரில் 72 நாட்களும் வெற்றி முரசு கொட்டி முதல் வெளியீட்டில் 101 நாட்கள் ஒடியது. ஒரே நாளில் ஆறு காட்சிகள்
காண்பிக்கப்பட்டு 12 காட்சிகளும் அரங்கு நிறைந்து அதன் பின்பு ஐந்து காட்சிகள் திரையிடப்பட்டு அரங்கு நிறைந்து தொடர் சாதனை புரிந்தது....
இலங்கையில் தொடர்ந்து இடைவெளி இல்லாது வந்து மகத்தான சாதனையை படைத்த இரண்டு காவியங்கள்...
நீரும் நெருப்பும்
ரிக்க்ஷாக்காரன்...
கணேசனின் இரண்டு படங்கள்
ராஜா... ச.சமாளி* சாதனையின்றி கிடந்தது....
மேலே மக்கள்திலகம் செய்த சாதனையை பார்த்து முக்காடிட்டு மூலையில் ஒதுங்கி நின்றனர்.*
தகவல்
அ.டேவிட்
57,டேவிட் ரோட்,
யாழ்பாணம்
இலங்கை.........
-
இலங்கையிலுள்ள திரிகோணமலையில் "நீரும் நெருப்பும்"... திரைக்காவியம் 50 நாட்களை கடந்து மாபெரும் வசூலை உருவாக்கியது அதே அரங்கில் அதன் பின்பு திரையிட்ட நடிகர் சிவாஜி கணேசனின் சவாலே சமாளி திரைப்படத்திற்கு கணேசன் ரசிகர்கள் ஒலிபெருக்கியில் நெருப்பை அணைக்க வரும் சவாலே சமாளி* என்று விளம்பரம் செய்தார்கள் ஆனால் நீரும் நெருப்பும் வெற்றிகரமாக 50 நாட்களை கடந்து ஓடியது. சவாலே சமாளி திரைப்படம் 33 நாட்களில் தூக்கி எறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
திரிகோணமலை ஜோதி அரங்கில் சவாலே சமாளி 33 நாளில் 19 ஆயிரத்து 555 பைசா வசூலை கொடுத்தது. அதற்கு முன் வெளியான காவல்காரன் திரைப்படம் அதே திரையரங்கில் 22 நாளில் 21 ஆயிரத்து 190 வசூலை*
3 ஆண்டு முன்னே கொடுத்தது.* நீரும் நெருப்பும் திரைப்படம் ஆறு ஆண்டுகளுக்குப் பின் திரிகோணமலையில் 50 நாளை கடந்து சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது..........
-
எம்ஜிஆர் பிறருக்கு கொடுப்பது என்று முடிவு செய்துவிட்டால் கையில் பணம் இல்லாவிட்டாலும் மற்றவர்களிடம் கடன் வாங்கியாவது கொடுத்து விடுவார். அப்போதுதான் அவருக்கு நிம்மதி. உண்பது, உறங்குவது போல, கொடுப்பதும் அவருக்கு இயல்பானது.
‘இதயவீணை’ படப்பிடிப்புக்காக காஷ்மீருக்கு எம்.ஜி.ஆர். சென் றிருந்தார். அங்கிருந்த பிரபல ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். இதை அறிந்து ராணுவத்தினர் அவருக்கு வர வேற்பு அளித்தனர். பின்னர், தங்களின் ராணுவ நலச் சங்கம் ஒன்றுக்கு வருகை தர வேண்டுமென்று அழைப்பு விடுத்தனர். அவர்களின் வேண்டு கோளை எம்.ஜி.ஆர். ஏற்றுக் கொண்டார். அவர்தான் எங்கு சென்றாலும் வெறும் கையோடு சென்று பழக்கமில்லையே. ராணுவ நலச் சங்கத்துக்கு நிதி கொடுக்க முடிவு செய்தார். அவரிடம் அப்போது பணம் இல்லை. படத்தின் தயாரிப்பாளரான மணியனிடமும் படப் பிடிப்பு செலவுக்கு வைத்திருந்ததைத் தவிர பெரிதாக தொகை இல்லை.
அங்கிருந்த தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபரிடம் ஒரு பெரும் தொகையை குறிப்பிட்டு ‘‘கடனாக கிடைக்குமா?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். அதற்கு தொழிலதிபர், ‘‘தாராளமாக. ஆமாம், அப்படி என்ன தேவை உங்களுக்கு?’’ என்று வினவினார். எம்.ஜி.ஆர். அவரிடம் விஷயத்தைச் சொன்னதும் தொழிலதிபர் அசந்துபோய்விட்டார். ‘கடன் வாங்கி இவ்வளவு பெரிய தொகையை நன்கொடையாக கொடுக்கிறாரே?’ என்று நினைத்தார். தனது எண்ணத்தை எம்.ஜி.ஆரிடமும் சொன்னார்.
‘‘தவறாக நினைக்காதீர்கள். ராணு வத்தினர் விரும்பி உங்களை அழைக்கிறார்கள். ஏதாவது தொகை கொடுக்க வேண்டுமென்றால் கொடுங்கள். ஆனால், இவ்வளவு பெரிய தொகை வழங்குவது தேவையா?’’ என்றார். எம்.ஜி.ஆருக்கு கோபம் வந்துவிட்டது.
‘‘நீங்களும் நானும் சென்னையில் இருந்து லட்சம் லட்சமாக சம்பாதித் துக்கொண்டு பாதுகாப்பாக இருப் பதற்கு நாட்டை பாதுகாக்கும் இந்த ராணுவத்தினர்தான் காரணம். அவர்களது உழைப்புக்கும் தியாகத்துக்கும் இந்தத் தொகை மிகவும் குறைவு. முதலில் பணத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள். சென்னை திரும்பியதும் தருகிறேன்’’ என்று தொழிலதிபரிடம் சொல்லிவிட்டு எம்.ஜி.ஆர். வேகமாகச் சென்றுவிட்டார். பிறகு தொழிலதிபரிடம் மறுப்பேது? அவர் ஏற்பாடு செய்து கொடுத்த தொகையை ராணுவ நலச் சங்கத்துக்கு நன்கொடையாக எம்.ஜி.ஆர். வழங்கினார். இதை எதிர்பார்க்காத ராணுவத்தினர் அளவற்ற மகிழ்ச்சி அடைந்து எம்.ஜி.ஆருக்கு நன்றி தெரிவித்தனர்.
- தி இந்து ..........
-
"உலகம் சுற்றும் வாலிபன்" படத்தின் புகைப்பட கலைஞர் ஏ.சங்கர்ராவ் சொல்கிறார். அந்த ஜப்பான் எக்ஸ்போ 70யில் நாள் ஓன்றுக்கு 10 லட்சம் பேர் இருப்பார்கள். அவ்வளவு பெரிய கூட்டத்தில் தான் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அன்று லதா மேடத்துக்கு அன்று ஷாட் இல்லாததால் ஜானகியம்மாவை அழைத்துக் கொண்டு எக்ஸ்போ 70 ஐ சுற்றிப்பார்க்கச் சென்று விட்டார். ஷுட்டிங் பிரேக்கில் மஞ்சுளாவும், சந்திரகலாவும் தனித் தனியாக சேரிலும் ஒரு 10 அடி தள்ளி தலைவரும் நானும் , நாகேஷும் ஒரு சேரில் அமர்ந்திருந்தோம் சண்டை பயிற்சியாளர் ஷ்யாம் சுந்தர் தூரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது ஜப்பான் கராத்தே ஸ்கூல் வேன் வர அதிலிருந்த கராத்தே மாணவர்கள் இறங்கியவர்கள் மஞ்சுளாவும் ,சந்திரகலாவும் புடவை கட்டிக் கொண்டிருந்த தைப் பார்த்து வேற்று மொழிக் காரர்கள் எனத் தெரிந்து கொண்டு அவர்கள் அருகில் நின்று ஜப்பானிய மொழியில் ஏதோ பேசி சிரித்து கமெண்ட் அடித்து வந்ததைப் பார்த்த நாகேஷ் என்னிடம் ஏதோ நடக்கப் போகிறது நம்மாளு (தலைவர்) கூலிங்கிளாஸ் வழியே அந்த கராத்தே ஸ்டுடண்ஸ் பார்த்துக் கொண்டே இருக்கிறார் எனக் கூறினார்.அப்போது தான் நானும் கவனித்தேன் . கேலியாக பேசிய மாணவர்களில் இரண்டு பேர் மஞ்சுளாவின் தோளில் கை வைத்து விட்டார்கள். உடனே கோட்டை கழற்றி வைத்தவர் முழுக்கை சட்டையை மடித்து விட்டு பத்தடி தூரத்தில் உட்கார்ந்திருந்த மாணவர்கள் மீது பாய்ந்து விட்டார் ஒரே பாய்ச்சலாக நானும் நாகேஷும் அரண்டு போய் ஓரத்தில் ஒதுங்கி விட்டோம் சினிமாவில் வருவது மாதிரி 2 பேரும் 5 அடி தூரத்தில் போய் விழுந்தார்கள். இது எல்லாமே ஒரு சில விநாடிகள் தான் புல்லட் கூட லேட்டாத்தான் போயிருக்கும் அதை விட ஸ்பீடூ என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் , நாகேஷ் பேயறைந்த மாதிரி நிற்க இங்க உட்கார்ந்திருந்த மனுஷன் அதற்குள் எப்படிப்பா அங்க போனார் என்று ஆச்சரிய்பட அதற்குள் கராத்தே ஸ்டூடண்ட்ஸ் தாங்கள் செய்தது தவறு தான் என்பது போல நின்றுவிட்டு கிளம்பி போனார்கள். ஸ்டண்ட் மாஸ்டர் ஷ்யாம் சுந்தருக்கு ஒரு பக்கம் பயம் ஒரூ பக்கம் ஆச்சரியம் 10 லட்சம் பேர் இருக்கிற இந்த கூட்டத்தில எம்.ஜி.ஆரோ 1 ஆள் ஸ்டுடண்ட் 40 பேர் நாம வெளிநாட்டினர் அவங்களோ உள்நாட்டுக் காரங்க எவ்வளவு துணிச்சலா அடிச்சிருக்காரு இந்த மாதிரி துணிச்சல் வேகமும் யாருக்கும் வராதுப்பா என்றார்..........
-
எம்.ஜி.ஆரின் பெயருக்குள்ள மதிப்பு !
*தனிமைப்படுத்தப்பட்ட நாட்களில் எப்படி பொழுதைக் கழிக்கிறீர்கள்?*
"நான் தீவிர எம்.ஜி. ஆர். ரசிகன். அவரது படங்களைப் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு ஒரே தலைவர் அவர்தான். அவரோடு நெருக்கமாக இருந்தவர்களைப் பார்த்தாலே தலைவரைப் போல்தான் பார்ப்பேன்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் பலரிடம் கேட்ட தகவல்கள் என்னை எம்.ஜி.ஆர். மீது அதிக பற்று கொள்ள வைத்தது. ஒரு முறை சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் படப்பிடிப்புக்குப் போயிருந்தேன் அங்கு ஒரு ‘ரிக்சா ஸ்டாண்ட்’. ‘ரிக்சாக்காரன்’ படப் பெயரிலேயே இருந்தது.
அங்கே நான்கு ரிக்சாக்களில் இரண்டில் ஓட்டுபவர்கள் இல்லை. அவர்கள் எங்கே என்று விசாரித்தபோது... 'இருவரும் மது அருந்திவிட்டார்கள். அதனால் தொழிலுக்கு வரமாட்டார்கள்' என்றார்கள். அவர்களை யாரும் வர வேண்டாம் என்று சொல்லவில்லை. அவர்களாகவே வரவில்லை. இதுதான் தொழில் மீது வைத்திருக்கும் பக்தி" என்றார் நடிகர் மயில்சாமி.
26-7-2020 ராணி இதழிலிருந்து
ப. இசக்கிபாண்டியன், திருநெல்வேலி
('இதயக்கனி' யின் ஜூலை/ஆகஸ்ட் 2020 இதழில் பிரசுரமான தகவல்)
Ithayakkani S Vijayan.........
-
புதுச்சேரியில் மீனவர் குப்பத்தைச் சேர்ந்த இளைஞர் கோவிந்தசாமி. எம்.ஜி.ஆரின் ரசிகர் என்பதைவிட வெறியர். தனது திருமணத்தை எம்.ஜி.ஆர். நடத்தி வைக்க வேண்டும் என்று கோவிந்தசாமிக்கு ஆசை. இது சம்பந்தமாக கோவிந்தசாமி எம்.ஜி.ஆருக்கு சிலமுறை கடிதம் எழுதினார். எம்.ஜி.ஆரின் உதவியாளர் களே கடிதத்தைப் பார்த்துவிட்டு, ‘புதுச் சேரியில் மீனவர் குப்பத்தில் இருக்கும் யாரோ ஒருவரின் திருமணத்தை நடத்தி வைக்க எம்.ஜி.ஆரால் போகமுடியுமா? ’ என்று நினைத்தார்களோ என்னவோ? கடிதம் எம்.ஜி.ஆரின் பார்வைக்கே போகவில்லை.
ஒருநாள் கோவிந்தசாமியின் பெற் றோரும் உறவினர்களும் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்துக்கு வந்துவிட்ட னர். தன்னை பார்க்க காத்திருந்தவர்களை ஒவ்வொருவராக சந்தித்த எம்.ஜி.ஆரிடம் விஷயத்தைக் கூறினர். ‘‘நாங்க எழுதின கடிதத்துக்கு உங்களிடம் இருந்து பதில் இல்லாததால் கோவிந்தசாமி பித்துப் பிடிச்சவன் போல இருக்கிறான். கடலில் மீன் பிடிக்கவும் சரியாக போவதில்லை. நீங்கதான் கோவிந்தசாமியின் திரு மணத்தை நடத்திவெச்சு அவனைக் காப் பாத்தணும்’’ என்று உருக்கமாக கோரினர்.
இது எம்.ஜி.ஆரை வெகுவாக பாதித்து விட்டது. ‘‘விரைவிலேயே புதுச்சேரிக்கு சுற்றுப் பயணம் வர இருக்கிறேன். நீங்கள் அப்போது அங்கு வந்து என்னை சந் தியுங்கள். உங்கள் மகன் திருமணத்தை நடத்தி வைக்கிறேன்’’ என்று அவர்களை எம்.ஜி.ஆர். சமாதானப்படுத்தினார். அந்த மீனவர்கள் நம்பிக்கையுடன் சென்றனர்.
சில நாட்கள் கழித்து புதுச்சேரிக்கு எம்.ஜி.ஆர். சுற்றுப் பயணம் சென்றார். அவர் தங்கியிருந்த இடத்துக்கு மீனவர் குப்பத்தைச் சேர்ந்தவர்கள் வந்தனர். விஷயம் எம்.ஜி.ஆருக்குத் தெரிவிக்கப் பட்டது. ‘‘திருமணத்தை நடத்தி வைத்து விட்டு கூட்டத்துக்கு போகலாம். மணமக் களையும் உறவினர்களையும் கூப்பிடுங் கள்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார். மண மக்களை அழைத்துவர எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் சென்றபோதுதான் அவர்களுக்கு விஷயமே தெரிந்தது.
கோவிந்தசாமியின் உறவினர்கள் தயங்கியபடியே, ‘‘மன்னிக்கணும். எங்க குப்பத்துக்கு எம்.ஜி.ஆர். நேரில் வந்து தாலி எடுத்துக் கொடுத்தால்தான் திருமணம் பண்ணிக்கு வேன் என்று கோவிந்த சாமி பிடிவாதம் பிடிக்கிறான்’’ என்று மென்று முழுங்கி தெரிவித்தனர். உதவியாளர் களுக்கு கோபம் வந்துவிட்டது. ‘‘அது எப்படி முடியும்? கடற்கரையோரம் உள்ள குப்பத்துக்கு மணலிலே வரணும். அங்கேயெல்லாம் வண்டி வராது’’ என்று சத்தமாக தெரிவித்தனர். பதிலுக்கு, ‘‘பாதையிலே மணலில் நாங்க செடி, தழைகளை போடுறோம். அதுமேல, வண்டி ஓட்டிக்கிட்டு வந்துடுங்க’’ என்று மீனவர்கள் கெஞ்சினர்.
வெளியே நடந்து கொண்டிருந்த கசமுசா, எம்.ஜி.ஆரின் காதுகளில் விழுந் தது. உதவியாளர்களை அழைத்து விவரம் கேட்டார். அவர்கள் சொன்னதும் சில விநாடிகள் யோசித்துவிட்டு, ‘‘சரி, போகலாம்’’ என்றார். உதவியாளர்கள் பதறிப்போய், ‘‘நாங்கள் விசாரிச்சோம். கடற்கரை மணலில் வண்டி நின்று விட்டால் நடந்துதான் போகணும். அவங்க குப்பம் இரண்டு கிலோ மீட்டருக்கு மேலே தூரமாக உள்ளது. நீங்கள் போக வேண்டாம்’’ என்றனர்.
எம்.ஜி.ஆர். கோபத்துடன், ‘‘என்ன பேசறீங்க? என்னோட ரசிகன். அவனுக்கு நான் எந்த உதவியும் செய்யலே. அவனை நான் பார்த்தது கூட இல்லே. ஆனாலும் என் மேலே வெறித்தனமான அன்போட இருக்கான். நான் வந்து நடத்தினால்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு பித்துப் பிடிச்சா மாதிரி இருக்கான். நான் போய்த் தான் ஆகணும். வண்டி நின்னுபோனா நடந்து போறேன். போய் ஏற்பாடு பண் ணுங்கய்யா’’ என்றார். அடுத்த விநாடி, மீனவர் குப்பத்துக்கு எம்.ஜி.ஆர். செல் வதற்கான ஏற்பாடுகள் தொடங்கின.
மணலிலும் பாதுகாப்பாக செல்லும் வகையில் ஃபோர் வீல் டிரைவ் எனப் படும் நான்கு சக்கரங்களும் ஒன்றாக இயங்கும் ஜீப்பில் எம்.ஜி.ஆர். சென்றார். கடலை ஒட்டிய மணல் பகுதியில் வழிநெடுக மீனவர்கள் திரண்டு நின்று எம்.ஜி.ஆர். தங்கள் குப்பத்துக்கு வரு வதை பிரமிப்பு நீங்காமல் பார்த்தபடியே அவரை வாழ்த்தி கோஷமிட்டனர்.
பாதி வழியில், உதவியாளர்கள் பயந்த படியே திடீரென மணலில் ஜீப் சிக்கிக் கொண்டது. டிரைவர் எவ்வளவோ முயன் றும் நின்ற இடத்திலேயே சக்கரங்கள் சுற்றிச்சுற்றி மணலை தோண்டியதே தவிர, நகரவில்லை. எம்.ஜி.ஆர். ஜீப்பை விட்டு இறங்கிவிட்டார்.
பாதையில் நின்றிருந்த மீனவர்கள் உதவிக்கு ஓடிவந்தனர். பலர் ஒன்று சேர்ந்து ஜீப்பை ‘அலாக்’காக தூக்கி வேறு இடத்தில் வைத்தனர். மீனவ மக்களின் ஆரவாரத்துக்கிடையே, எம்.ஜி.ஆர். தலைக்கு மேல் கைகளை உயரே தூக்கி வணங்கியபடி மீண்டும் பயணத்தைத் தொடங்கினார்.
கோவிந்தசாமியின் மீனவ குப்பத்தை ஜீப் அடைந்தபோது பெரிய கூட்டம் ஓடிவந்து வரவேற்றது. அதில் முதலில் ஓடிவந்தவர் இளைஞர் கோவிந்தசாமி. ‘எம்.ஜி.ஆர். வரும்வரை தாடியை எடுக்க மாட்டேன்’ என்ற சபதம் காரணமாக நீண்டு வளர்ந்திருந்த அடர்த்தியான தாடியுடன் கண்களில் நீர்வழிய, ‘‘எனக்காக நேரில் வந்த தெய்வமே’’ என்று கதறியபடி எம்.ஜி.ஆரின் காலில் விழுந்தார் கோவிந்தசாமி. அவரை வாரி அணைத்துக் கொண்டார் எம்.ஜி.ஆர்.!
பக்கத்திலேயே மேடான இடத்தில் சிறிய பந்தல் போடப்பட்டிருந்தது. பதினைந்து நிமிடத்தில் மணமக்கள் தயாராகி வந்தனர். எம்.ஜி.ஆர். தாலி எடுத் துக் கொடுக்க, மணமகள் கழுத்தில் கட்டினார் கோவிந்தசாமி. ‘‘இனிமே ஒழுங்கா குடும் பத்தையும் தொழிலையும் கவனி’’ என்று கோவிந்தசாமியிடம் கூறிய எம்.ஜி.ஆர்., மணமக்களிடம் தனித்தனியே கனமான கவர்களை பரிசளித்தார்.
மீனவர்கள் கொடுத்த கோலி சோடாவை மரியாதைக்காக சிறிது குடித்துவிட்டு ஜீப்பில் ஏறி நாலாபுறமும் திரும்பி கையசைத்தபடி எம்.ஜி.ஆர். விடைபெற்றபோது, கடல் அலைகளின் பேரிரைச்சலையும் அடக்கிவிட்டு, விண்ணை முட்ட எழுந்தது கோஷம்...
‘‘புரட்சித் தலைவர் வாழ்க!’’
- தி இந்து ............
-
வசூல் விவரம் பற்றி பதிவு போட்டால் வேறு வேலை இல்லையா என்று அலுத்துக் கொள்பவர்கள் அப்படி கஷ்டப்பட்டு இந்தப் பக்கத்தை படிப்பானேன்? அவர்கள் வேறு வேலையை பார்க்கலாமே? யார் அவர்களை தடுத்தது? இதெல்லாம் தேவையா? என்றும் சில நண்பர்கள் அங்கலாய்க்கிறார்கள். இன்னும் சிவாஜி கணேசன் குழுக்கள், தளங்கள், தனிப்பட்ட சிவாஜி கணேசன் ரசிகர்களின் முகநூல் பக்கங்களில் பாருங்கள். எவ்வளவு பொய்களை அவிழ்த்து விட்டு புரட்சித் தலைவரைப் பற்றியும் அவர் படங்களைப் பற்றியும் மோசமாக விமர்சிக்கிறார்கள் என்று தெரியும். சிவாஜி கணேசன் புகழை பரப்புவதை விட (???????!!!!! புகழ் இருந்தால்தானே பரப்புவதற்கு? வாழும் காலத்திலேயே செல்லாக் காசாகிப் போனவர் அவர்) புரட்சித் தலைவரையும் அவர் படங்களையும் மோசமாக விமர்சிக்கின்றனர். செல்லாக் காசை விமர்சிப்பானேன்? என்று கேட்கலாம். செல்லாக் காசை தங்கக் காசு என்று பொய் சொல்லி ஏமாற்ற நினைப்போருக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.
எங்க வீட்டுப் பிள்ளையை திருவிளையாடல் வசூலில் வென்றது.... உலகம் சுற்றும் வாலிபன் படத்தை தங்கப் பதக்கம் வசூலில் வென்றது என்று ஜமுக்காளத்தில் வடிகட்டிய மகா கேவலமான பொய்களை கூறி சிவாஜி கணேசன் ரசிகர்கள் தங்களுக்கு தாங்களே சொறிந்து கொண்டு சுகம் தேடுகிறார்கள். அது உண்மை என்றால் விநியோகஸ்தர்கள் கொடுத்த பத்திரிகை விளம்பரத்தை அவர்கள் வெளியிடலாமே. ரிக்ஷாக்காரன் 51 நாட்களில் 50 லட்சம் வசூல் செய்தது என விநியோகஸ்தர் கொடுத்த பத்திரிகையில் வந்த விளம்பரம் கொடுத்துள்ளோம். உலகம் சுற்றும் வாலிபன் விளம்பரமும் இருக்கிறது. அதை முறியடித்ததாக தங்கப்பதக்கம் படத்தின் அதிகாரப்பூர்வ விளம்பரம் அவர்களிடம் உள்ளதா? அதை வெளியிடலாமே? இருந்தால்தானே வெளியிடுவார்கள். வெறும் புளுகுமூட்டைகள். அவர்களுக்கு இதுபோன்று பதிலடிகள், விளக்கங்கள் கொடுத்தால்தான் இளைஞர்கள் உண்மைகளை உணர்ந்து கொள்வார்கள். இல்லாவிட்டால் அவர்கள் சொல்வது உண்மையாகிவிடும். அதை அனுமதிக்கக் கூடாது. நாட்டின் வளர்ச்சி, திட்டங்கள் என்று ஒரு பக்கம் இருந்தாலும் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கும் எதிரிகளுக்கு பதிலடி கொடுக்கவும் ராணுவம் நிச்சயம் இருக்கும். அப்படிப்பட்ட ராணுவம்தான் நடிகப் பேரரசர் எம்ஜிஆர் பக்கம். இதை புரிந்து கொள்ளுங்கள். தொடர்ந்து சிவாஜி கணேசன் ரசிகர்களின் பொய்கள் தோலுரிக்கப்படும். அடுத்த பதிவில் சொல்கிறேன்..........
-
லால் பகதூர் சாஸ்திரியிடம் போர் நிதியாக சிவாஜி கணேசன் 100 பவுன் தங்கப் பேனாவையும் 400 பவுன் நகைகளையும் கொடுத்தார் என்று அவரது ரசிகர்கள் புளுகுவார்கள். சிவாஜி கணேசன் ஏதோ கொஞ்சம் கொடுத்துள்ளார் என்பதை மறுக்கவில்லை. சிவாஜி கணேசன் மட்டுமல்லாமல் சாவித்திரி, ஜெயலலிதா உட்பட எல்லா நடிகர், நடிகைகளும் நகைகள், பணம் கொடுத்தார்கள். அவர்களைப் போலத்தான் சிவாஜி கணேசனும் கொடுத்துள்ளார். ஆனால், சிவாஜி கணேசன் கொடுத்த தங்கப் பேனா முதலில் 200 பவுன் என்றார்கள். இப்போது 100 பவுன் என்கிறார்கள். இதில் குறைத்துவிட்டார்களே என்று பார்த்தால் அதைத் தவிர 400 பவுன் கொடுத்தார் என்று லாரி லாரியாக பொய்களை அள்ளிக் கொட்டுகிறார்கள்.
இந்தப் படத்தைப் பாருங்கள். அந்தப் பேனாவை சிவாஜி கணேசன் எப்படி பிடித்திருக்கிறார் என்று பாருங்கள். ஆள்காட்டி விரல் மற்றும் கட்டை விரலால் அதுவும் மிகவும் லேசாக பிடித்துள்ளார். ஒரு பவுன் தங்கம் 8 கிராம். 100 பவுன் என்றால் 800 கிராம். முக்கால் கிலோவைவிட 50 கிராம் கூடுதல். ஒரு கிலோவுக்கு 200 கிராம் குறைவு. முக்கால் கிலோவுக்கும் மேற்பட்ட எடையை இப்படி இரண்டு விரலால் லேசாகப் பிடிக்க முடியுமா? அவர் பிடித்திருப்பதைப் பார்த்தால் பேனா 100 கிராம்தான் இருக்கும் போலிருக்கிறது. இதைத்தான் 100 பவுன் என்று புளுகுகிறார்கள். 400 பவுன் நகைகள் வேறு கொடுத்தாராம். இதில் விளம்பரம் தேடா வள்ளல் என்று போலி விளம்பரம் வேறு. புரட்சித் தலைவரை கலாய்க்கிறார்களாமாம். இதில் அவர்களை அறியாமல் உண்மையை சொல்லி இருக்கிறார்கள். இந்தப் பேனா சிவாஜி கணேசனுக்கு அன்பளிப்பாக பி.ஆர்.பந்துலு கொடுத்ததாம். இவர்கள் என்னதான் பொய் சொன்னாலும் சிவாஜி கணேசன் கஞ்சன் என்ற பெயர் மக்களிடம் மாறப்போவது இல்லை. இதேபோலத்தான் அவரது படங்களின் வசூல் சாதனைகள் என்று சிவாஜி கணேசன் ரசிகர்கள் புளுகி வருகிறார்கள். அந்தப் பொய்கள் தகர்க்கப்படும்..........
-
தமிழக ஊடக விவாதங்கள் இன்றுஒரு பார்வை !! இன்று மக்கள் இயக்கமாம் எங்கள் இதய தெய்வங்கள் வளர்த்த , மாபெறும் தொண்டர்கள் இயக்கம் !! அ.இ.அண்ணாதி.மு.கழகம் " இதனை முன்னிறுத்தியே தினமும் ஊடக விவாதங்கள் இதுவே எங்கள் பலம் !! எங்களை எந்த ஒரு அரசியல் சக்தியும் அல்லது எந்த ஒரு தனி நபரும் அசைத்துகூட பார்க்க முடியாது* !! இதுவே நேற்றும் , இன்றும் , நாளையும் எங்களின் அரசியல் பலம் , இது தொண்டர்கள் தலைமையில் உள்ள மாபெறும் மக்கள் இயக்கம் !! நன்றி ,, போத்தனூர் பாலு அரசியல் செய்தி சமூக கட்டுரையாளர் , சென்னை 28 !!!.........
-
'எம்ஜிஆர்' அது வெறும் பெயர் அல்ல... தமிழகத்தின் அரை நூற்றாண்டுக்கான வரலாறு
.....
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள், நாடக கலைஞர், இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர், அரசியல்வாதி என்று பன்முகத் திறமைகளை கொண்டவர், அரசியலிலும், சினிமாவிலும் யாரும் தொடாத உச்சத்தை தொட்டார். கட்சி ஆரம்பித்து ஆறு மாதங்களில் ஆட்சியை பிடித்த என்.டி ராமாராவ் தனக்கு குருநாதர் எம்ஜிஆர் தான் என்று கூறியதே அரசியலில் இந்திய அளவில் அவர் ஏற்படுத்திய தாக்கத்தின் வீச்சை புரிந்துகொள்ள போதுமானது. அத்தகைய ஆளுமையை அவர் ஒரே இரவிலோ அல்லது ஒரு படத்தின் வெற்றியிலோ அவருக்கு கிடைத்துவிடவில்லை. அளவிட முடியாத கடினமான உழைப்பே அவர் சினிமாவில் சாதிக்க உதவியது என்றால், தமிழக மக்களின் கனிவான பார்வை அவர் அரசியலில் சாதிக்க ஏதுவாக இருந்தது. 40-களின் ஆரம்பத்தில் திரையில் உதவி நடிகராக தலைகாட்டிய அவர், 50-களில் தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் ஆனார் என்றால் அவர் அதற்கு அவர் கொடுத்த விலை மிக அதிகம்.
நடிகராக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அவர் காட்டிய அந்த கடின உழைப்பை தன் உயிர் மூச்சு இருக்கும் வரையில் தொடர்ந்த காரணத்தால் தான், தமிழக மக்கள் அவரை மூன்று முறை அரியணையில் ஏற்றி அழகு பார்த்தனர். தனக்கு வாய்ப்பு தேடி அலைந்த அந்த நாட்களிலும், வாய்ப்புக்கள் வந்து குவிந்து கைநிறைய சம்பாதித்த அந்த நாட்களிலும் அவரிடம் மாறாதது, இல்லை என்று வந்தவர்களுக்கு, இல்லை என்று சொல்லாத அந்த கருணை உள்ளம்தான். சட்டமன்ற உறுப்பினராக அவர் இருந்தத போதும், பிறகு முதல்வராக பதவி வகித்த போதும் அவரிடம் மாறாதது தனக்கு ஆரம்ப காலத்தில் உதவியவர்கள், நண்பர்கள் என யாரையும் அவர் மறக்காததும், அவர்களின் இன்ப துன்பங்களில் தன்னை இணைத்துக்கொள்வது என்று அதில் உறுதியாக இருந்தார். எதுகை மோனைகளில் அவருக்கு பேச தெரியாவிட்டாலும், நம்பியவர்களை நட்டாற்றில் விடும் பழக்கம் இல்லாதவர் அவர், என்பதை பல சமயங்களில் அவரே நிரூபித்து உள்ளார்.
1977ம் ஆண்டு அவர் முதல்வர் ஆன சமயம், அவர் உதவியால் படித்து பட்டம்பெற்ற துரைமுருகன் அப்போது திமுகவின் சட்டமன்ற உறுப்பினர். அவரை எதிர்த்து சட்டமன்றத்தில் அரை மணிநேரத்திற்கு மேலாக மூச்சுவிடாமல் பேசுகிறார். அதிமுக உறுப்பினர்கள் எம்ஜிஆரின் கண்ணசைவுக்காக காத்துக்கிடக்கிறார்கள். ஆனால் அவர், துரைமுருகனை பார்க்கிறார், ரசிக்கிறார். இதை துரைமுருகனும் கவனிக்கிறார். ஒரு கட்டத்தில் திடீரென மயக்கமடைந்து கீழே விழுகிறார், கீழே விழுந்த அவரை ஒருசில வினாடி இடைவெளியில் ஒரு கை தாங்கி பிடிக்கிறது. அந்த கை வேறு யாரும் அல்ல. யாரை தாக்கி பேசி அவர் மயக்கமடைந்தாரோ அந்த வார்த்தை தாக்குதலுக்கு உள்ளான எம்ஜிஆர் தான் அவரை தாங்கி பிடித்தார். தன்னால் வளர்க்கப்பட்டு வாழ்க்கை கொடுத்த ஒருவரின் தாக்குதலை தாயை சீண்டும் குழந்தையிடம் தாய் காட்டும் கோவத்தை கூட அவர் காட்டவில்லை என்பதே அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் காட்டிய நேசத்துக்கு ஒரு சிறிய உதாரணம். தன்னை வாழ்நாள் எல்லாம் எதிர்ப்பதையே கடமையாக வைத்திருந்தவர்களை கூட முதலாளி என்று கூப்பிட்டு முதல் நபராக மதித்தார். தன்னை எதிர்த்தவர்கள் மீதே இந்த அளவு நேசம் காட்டினார் என்றால், தன்னை வாழ வைத்த தமிழக மக்கள் மீது அவர் காட்டிய நேசம் என்றும் அளப்பரியது யாராலும் அளவிட முடியாதது. முதல்வராக அவர் பதவி வகித்த நேரம் நிகழ்ச்சி ஒன்றிற்காக அவர் சிவகாசிக்கு செல்கிறார். உச்சி வெயில் முகத்தில் அடித்த அந்த மதிய நேரத்தில் தங்களின் குழந்தைகளை அழைத்துக்கொண்டு தாய்மார்கள் வயல்வெளிக்கு சென்றுள்ளனர். அவர்களை கண்ட அவர் தன்னுடைய வாகனத்தை நிறுத்தி குழந்தைகளிடம் உணவருந்தினீர்களா? என்று கேட்டுள்ளார். அவர்கள் தங்களின் அம்மாவை பார்க்கவே,நிலைமையை புரிந்துகொண்ட எம்ஜிஆர் அவர்கள் உடனடியாக தொடங்கியதே சத்துணவு திட்டம்.
பள்ளிக் குழந்தைகளின் நலன்களில் அவர் காட்டிய அக்கறை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பல்பொடி வழங்குவதில் தொடங்தி காலுக்கு காலணி வழங்கும் வரை அது தொடர்ந்தது. அவரின் இந்த மக்கள் நலத்திட்டங்களே அவரை பட்டிதொட்டி வரை கொண்டு சேர்த்தது என்றால் அது மிகையல்ல. கடவுளாக, கடவுளக்கும் மேலாக அவரை இன்றும் பொதுமக்கள் கொண்டாடுகின்றார்கள் என்றால் அதற்கான விதை, அவர் போட்ட மக்கள் நலன் கொண்ட திட்டங்களே ஆகும். அதனால்தான் என்னவோ மண்ணில் பிறந்த உயிரினங்கள் எல்லாம் தோன்றி மறைவது இயற்கை என்றாலும், மக்களுக்காக வாழ்ந்த அவரின் இறப்பை அதனால்தான் என்னவோ இன்றும் சிலர் ஏற்றுக்கொள்ளவில்லை போலும். உயிர் வேண்டுமானால் அவரை விட்டு போயிருக்கலாம், ஆனால் அவரின் புகழை கூட இதுவரை யாரும் நெருங்கவில்லை, நெருங்க போவதும் இல்லை,தலைவா உனக்கு நிகர் நீ மட்டுமே இருக்க வேண்டும் என்று தான் இறைவன் உனக்கு வாரிசு இல்லாமல் செய்து விட்டாரோ, எம்ஜிஆர் எனும் கலியுக தெய்வம் வாழ்ந்த காலத்தில் நாம் அனைவரும் வாழ்ந்தோம் என்பதே நம் பாக்கியம்❤️❤️.........
-
வட சென்னையை
கலக்கிய
வாத்தியார் ...........
___________________
எல்லாப் பகுதியிலும் மக்கள் திலகத்தின் படங்களுக்கு மக்கள் படையெடுப்பது வழக்கம் என் பதிவு வடசென்னையை பற்றியது...
வட சென்னையில் பெரும் பகுதி திரையரங்குகளை எம் ஜி ஆர் படங்களே ஆட் கொள்ளும்.
முருகன் திரையரங்கம் எங்களுக்கு பாடசாலை
இத் திரையரங்கில் பூத்த சின்ன சின்ன மலர்கள் நாம்.
சமிபத்தில் இத் திரையரங்கம் இடிக்கப் பட்ட செய்தியறிந்த எனக்கு ஒரு கனம் செய்வதறியாது நின்றேன் .
அங்கு சென்று இடிந்த தூண்களை தொட்டுப் பார்த்தேன் .
எங்களின் விழுதுகள்,
மக்கள் திலகத்தின் கல்வெட்டுக்களல்லவா அத் தூண்கள் .
"மந்திரி குமாரி", படம் மாலை காட்சி அரங்கம் நிறைந்திருந்தது வாராய் நீ வாராய் பாடல் காட்சியில் மக்கள் தன்னை மறந்திருந்தினர் படம் முடிய இன்னும் இருபது நிமிடங்களே உள்ள தருணத்தில் மின்சாரம் தடைபட்டது .
அப்பொழது ஜெனரேட்டர் கிடையாது அரை மணிநேரம் கடந்தும் மின் தடை தொடர்ந்தது பின் செயவதறியாது மக்கள் .
திரையரங்கின் உரிமையாளர் பரமசிவ முதலியார் அனைவரையும் அழைத்து மேனஜர் அறையில் அமர்ந்தவாறே டிக்கெட்டுக்களின் பின்னால் கையொப்பமிட்டு நாளை காலை 11 மணியளவில் வாருங்கள் படம் திரையிடுகிறேன் இப்பபொழது கலைந்து செல்லுங்கள் என்றார் .
அதிசயம்
ஆனால் உண்மை !
அடுத்த நாள் சரியாக 11 மணியளவில் நேற்றைய கூட்டம் மீண்டும் அரங்கு நிறைந்திருந்தது வாராய் நீ வாராய் பாடல் காட்சியிலிருந்து படம் தொடங்கி இருபது நிமிடங்களில் படம் நிறைவடைந்தது !
இது உனக்கு எப்பிடி தெரியும் ? என்ற வினா ? தோன்று கிறதல்லவா !
அக்கூட்டத்தில்
நானும் ஒருவன் ..........
-
ஜோடியில் ஜெ.வுக்கு அடுத்தபடியாக இருப்பவர் சரோஜாதேவி.
1.இந்த அபிநய சரஸ்வதி கன்னடத்துப்
பைங்கிளி தலைவருடன் 26 படங்கள் நடித்துள்ளார்.
2.நாடோடி மன்னனிலிருந்து ஆரம்பித்த இவர் அரசகட்டளை வரை
நடித்த இவர் தீவிர தலைவர் ரசிகை.
3.இவர் எம்ஜிஆருடன் 5
கலர் படம் நடித்துள்ளார்.
அத்தனையும் ஹிட்.
1.நாடோடி மன்னன் படம் பகுதி கலர்.
தலைவர் இயக்கிய படம்
வாழ்வின் திருப்புமுனை ஆக்கியது.
2.எங்க வீட்டுப் பிள்ளை
இந்த படத்தின் வசூல்
விஜயா நர்சிங் ஆஸ்பத்திரி கட்டினார்.
வெள்ளிவிழா படமாகும்.
3.அன்பே வா என்ன அற்புதமான நகைச்சுவைப் படம்.
இதில் நடித்த அனைவருக்கும் எம்ஜிஆர் தன் சொந்த செலவில் சிம்லாவில்
கம்பளி போர்வை
உணவு ஏற்பாடு செய்து
கொடுத்தார்.
தலைவர் வாங்கிய சம்பளம் அன்று 3 இலட்சம்.உடனே செலவு.
மீதி தனது அண்ணன்
குடும்பம் தன் செலவு
மற்றும் திராவிட கழகத்திற்கு தர்ம காரியத்திற்கு
செலவு செய்வதுதான்
தலைவரின் கடமையாகும்.
அப்போது சரோஜாதேவி வாங்கிய சம்பளம் 90000.00ரூபாய்
அவர் குடும்பம் காங்கிரஸ்காரர்கள்.
4.அடுத்து படகோட்டி
மீனவ சமுதாயத்தை
அப்படியே உள்வாங்கி
நடித்தார் செருப்புகூட
அணியாமல் படம் முழுவதும் நடித்திருப்பார்.
பாடல்கள் வாலி.அனைத்தும் ஹிட்
ஆனதால் அவருக்கு
தலைவர் கையிலிருந்த
தங்க மோதிரத்தை பரிசளித்தார்.
மிகவும் அருமை என பாராட்டினார் வள்ளல்.
5.பறக்கும் பாவை
இப்படமே சர்க்கஸ் உலகம்.
தத்ருபமாக இருந்தது.
தலைவர் படத்தில் தான்
நடிப்பார் என்றில்லை
நேரிலேயே தர்மம்
செய்வதலிம்
மக்களை நல்வழிப்படுத்தலும்
தாயை தெய்விம வழிபடுதல்
தமிழ் மொழியை
பாராட்டுதல் இப்படி
எண்ணற்ற காரியங்களகளை
செய்வதில்
அகாய சூரர்.
6.சரோஜாதேவி
தலைவருடன்
மீதி21 படமும் கருப்பு
வெள்ளைதான்.
ஒரு சில படங்கள்
கதை முடிவு சரியில்லாததால் தோல்வி அடைந்தது.
மற்றபடி அனைத்தும்
வெற்றியே.
அப்படியே தோல்வி
என அவருக்கு தெரிந்தால் உடனே
நஷ்ட ஈடு கொடுப்பதும்
தானே சம்பளம் வாங்க மாட்டார்.
நன்றி.........
-
நமது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., திரி 100001 பதிவுகள் வெற்றிகரமாக கடந்ததற்கும், நீண்டகால சாதனைகளை நீடுழி படைக்க வாழ்த்துக்கள் தெரிவிக்கும் பார்வையாளர்களுக்கு மிக்க நன்றிகள்... இத்தகைய சாதனை படைக்க வாய்ப்பளித்த மையம் உரிமையாளர்கள்/ நிர்வாகிகள் மற்றும் நெறியாளர் உட்பட சக உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.............
-
சினிமா உலகை தாக்கிய சுனாமி.
உரிமைக்குரல்.
------------------------------------------------------------
இத்தனை காலம் எம்ஜிஆர் நடித்த சாதாரண வெற்றிப் படங்களை பார்த்தோம். ஆனால் மகத்தான வெற்றி பெற்ற ஒரு படத்தை தற்போது பார்க்கலாம். சுனாமி, பிரளயம் இது போன்ற நிகழ்வுகளை பற்றி நாம் ஓரளவு புரிந்து வைத்திருப்போம். ஆனால் ஸ்ரீதர் ஒரு பெரும் சுனாமியில் சிக்கி மகிழ்ந்த கதை தெரியாமா? ஆம்.
அந்த சுனாமிதான் ஸ்ரீ தர் எம்ஜிஆரை வைத்து எடுத்த "உரிமைக்குரல்" படம்.
திரையுலகில் யாரும் இப்படி ஒரு வெற்றியை கண்டிருக்க முடியாது.
சிவாஜியை வைத்து தான் இழந்த சொத்துக்கள் அனைத்தையும் மீட்க எத்தனை படங்கள் எடுத்தாலும் அது வட்டிக்கே கட்டாது. அந்த சூழ்நிலையில் அவர் தயாரித்த "உரிமைக்குரல்" சினிமா உலகத்தையே தாக்கிய சுனாமி என்றுதான் சொல்ல வேண்டும்.
ஸ்ரீதரின் புதுமையும் எம்ஜிஆரின் திறமையும் ஆற்றலும் ஒன்று சேர்ந்து உருவானதுதான் "உரிமைக்குரல்" என்று சொன்னால் அது மிகையாகாது. அதுவரை வெளிவந்த அத்தனை தமிழ் தெலுங்கு இந்திப்படங்கள் அனைத்தையும் வாரி சுருட்டி கொண்டு போய் குப்பைகளாக கொட்டிய படம்தான் "உரிமைக்குரல்".
சுனாமியால் பேரழிவை சந்தித்தது உலகம். ஆனால் ஸ்ரீதர் தயாரித்த "உரிமைக்குரல்" எழுப்பிய சுனாமி ஸ்ரீதருக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் யாரும் ஸ்ரீதர் பக்கத்திலேயே வராத போது அத்தனை தயாரிப்பாளர்களும் ஸ்ரீதரை சுற்றிக் கொண்டு எம்ஜிஆரை வைத்து எங்களுக்கு ஒரு படம் பண்ணுங்கள் என்று கேட்ட அதிசயத்தை கண்டு அவர் பூலோகத்திலேயே சொர்க்கத்தை அனுபவித்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.
இதே காட்சியை சற்று பின்னோக்கி பார்க்கிறார். "சிவந்த மண்" வெளியான போது நடைபெற்ற காட்சி அது. கடன்காரர்கள் அத்தனை பேரும் அவரை சூழ்ந்து கொண்டதுடன் நில்லாமல் பணம் எப்போது எங்களுக்கு திரும்ப கிடைக்கும் என்று அனைவரும் ஸ்ரீதரை சுற்றி நெருக்கடி கொடுக்கும் சம்பவம் ஞாபகத்துக்கு வருகிறது.
அந்த மரணவேதனையை
அனுபவிக்கும் போது யாரும் அவருக்கு கைகொடுக்க முன் வரவில்லை. ஆனால் தன்னை கரையேற்ற ஒரு அற்புதமான மனிதன் வருவான் என்று அவர் கனவிலும் நினைக்கவில்லை. அதை நினைத்துதான் தலைவரை அண்ணனாக நினைத்து தனது அடுத்த படத்துக்கு "அண்ணா நீ என் தெய்வம்" என்ற பெயரை வைத்து
நிம்மதி அடைந்தார்.
படம் வெளிவருவதற்குள் அண்ணன் தன் குறையை தீர்த்தது போல். அனைத்து தமிழக மக்களின் குறை தீர்க்க தமிழக முதல்வராக பொறுப்பேற்றவுடன் ஆனந்த கணணீர் வடித்து நின்றார் ஸ்ரீதர்.
இனி அந்த சுனாமியின் ரிக்டர் அளவுகளைப் பற்றி பார்க்கலாம்.
இந்த சுனாமியை பொறுத்தவரை ஊர் ஊருக்கு வெவ்வேறு ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
முதல் சுற்றில் 44 திரையரங்குகளில்
வெளியாகி கிட்டத்தட்ட ஒரு கோடியை வசூலாக பெற்றது. அதன்பிறகு வெளியான இரண்டாவது சுற்று மட்டும் முதல் மூன்று ஆண்டுகளில் மட்டும் சுமார் 3
கோடியை வசூலாக பெற்று இந்திப் படங்களின் வசூலையும் தாண்டி புதிய ரிக்கார்டை உருவாக்கியது.
ஆரம்பத்தில் எம்ஜிஆருக்கும் ஸ்ரீதருக்கும் ஒத்து வராது, சீக்கிரம்
இருவரும் பிரிந்து விடுவார்கள் என்று மனப்பால் குடித்தவர்கள் "உரிமைக்குரலி"ன் வெற்றியை கண்டு திகைத்து நின்றார்கள்.
அவர்களில் முக்கியமான சிலர் அவரது ஏற்கனவே பாதி நின்று போன படத்தை தொடர விடாமல் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தார்கள். எம்ஜிஆர் தன்னோடு இருந்தும் ஸ்ரீதர் அடக்கமாக மேற்படி நடிகரிடம் படத்தை முடிக்க முயற்சி செய்தும்,
பல விதத்தில் இடைஞ்சல் கொடுக்க ஆரம்பித்தார். அவர் ஒழுங்காக நடித்துக் கொடுத்தாலே வரும் நஷ்டத்துடன் இந்த நஷ்டமும் சேர்ந்து கொண்டது.
ஏற்கனவே மூன்று படங்கள் மூலம் அவர் அடைந்த இழப்புடன் நாலாவதாக ஒரு டோட்டல் லாஸ் சேர்ந்து கொண்டது. ஆனால் இப்போது ஸ்ரீதர் அதைப்பற்றி கவலை கொள்ளவில்லை. மாறாக புது உத்வேகத்துடன் மீண்டும் களமிறங்கி தன்னை தவிக்க விட்டவர்களுக்கு பெரிய கலக்கத்தை உண்டு பண்ணினார் எப்படியோ பெரும் சிரமத்துக்கு இடையில் அந்த படத்தை முடித்து மீண்டும் நஷ்டத்தை அடைந்தார். குதிரை கீழே தள்ளியது மட்டுமல்லாமல் குழியையும் பறித்த கதையாக முடிந்தது.
அந்த படத்தை முடிக்காமல் இருந்திருந்தால் பிரிண்ட் செலவு மற்றும் விளம்பர செலவாவது மிச்சமாகியிருக்கும். எம்ஜிஆர் அருகில் இருக்கும் தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன் போராடி அதில் வெற்றி பெற்று மீண்டும் அனைவரும் விரும்பும் இயக்குநரானார். கோவையில் "உரிமைக்குரலி"ன் வசூல் யாரும் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத அளவு இமாலய அளவில் இருந்தது..
மொத்தம் 8,69 000 ஐ
வசூலாக பெற்றதை கண்டு சிவாஜி ரசிகர்கள் கொஞ்ச நாட்கள் வெளியில் தலைகாட்ட முடியாமல் முக்காடுடன் சென்றதாக ஒரு சிலர்
தகவல் சொன்னார்கள். மதுரையில் 200 நாட்கள் ஓடி இதுதான் சாதனை என்று சாதனைக்கு ஒரு புதிய அளவுகோல் நிர்ணயித்தது
என்றே சொல்ல வேண்டும்..
இது போல் நெல்லையில் வெள்ளிவிழா ஓடி நெல்லையில் ஒரு புதிய சாதனையை உருவாக்கியது.
பல ஊர்களில் புது புது சாதனைகளை உருவாக்கி சினிமா உலகை வியப்பில் ஆழ்த்தியது. தமிழ்ப்படங்கள் இவ்வளவு வசூலை பெற முடியும் என்று உலகுக்கு
உணர்த்திய படம் "உரிமைக்குரல்" என்றால் அது மிகையாகாது..
ஈரோடு ராயல். திரையரங்கில்
155 நாட்கள் ஓடி புதிய சாதனையை உருவாக்கியது..அதன்பிறகு அப்படி ஒரு சுனாமியை திரையுலகில் சந்திக்கவேயில்லை என்று சொல்லலாம். மொத்தத்தில்.
ஸ்ரீதரின் வாழ்வை கவ்விய சூது விலகி தர்மம் வென்று மீண்டும் திரையுலகில் தர்மம் வலம் வந்தது ஒரு ஆச்சரியமான நிகழ்வே..........
-
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.- வின் டிவியில் சகாப்தம் நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*17/08/20 அன்று அளித்த*தகவல்கள்*
-------------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். என்கிற மாமனிதரின் புற வாழ்க்கையின் ஆன்மாவிற்கு இருந்த துடிப்பு என்னவென்றால், பிறரை நேசி, பிறருக்கு உதவு, பிறருக்கு உன்னால் முடிந்ததை செய் என்பதுதான் .அப்படியான செயல்பாடுகளில் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள்* வாழ்க்கையில்**தங்களை இன்றும் அர்பணித்துக் கொண்டிருக்கிறார்கள் .என்பதை கேட்கும்போது எம்.ஜி.ஆரின் ஆன்மா உண்மையிலேயே வென்றிருக்கிறது .உயிருடன் இருக்கிறது .
எம்.ஜி.ஆர்.அவர்கள் அமெரிக்காவில் சிகிச்சையில் இருக்கும்போது ,நெடுஞ்செழியன் நிதி அமைச்சராக* இருக்கிறார் . அப்போது கடுமையான ரேஷன் அரிசி பற்றாக்குறை* வருகிறது .நெடுஞ்செழியன் ,சக அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனுடன்* அரிசி விலை உயர்வு பற்றி**ஆலோசனை நடத்துகிறார் .*ஆர்.எம்.வீரப்பன் ,பதில் அளிக்கும்போது முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஒருபோதும்**ஏழைகளுக்கு வழங்கும் ரேஷன் அரிசிமீது விலை உயர்வு அளிப்பதை விரும்பமாட்டார் .* அது இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் . எம்.ஜி.ஆர். அவர்களின் கொள்கை முடிவு அதில் மாற்றங்கள் செய்ய கூடாது என்றார் .ஆகவே விளிம்புநிலை மக்கள் மற்றும் ஏழைகள் மீது கருணை உள்ளம் கொண்டவர் எம்.ஜி.ஆர். என்பதை இந்த செய்தி தெரிவிக்கிறது .
ஒரு தந்தை ,5 வயதுள்ள தன் மகனை தோளில் சுமந்தபடி எம்.ஜி.ஆர். காரில் புறப்படும் சமயம் ஓடி வருகிறார். அதை கண்ட எம்.ஜி.ஆர். யார் நீங்கள்.எதற்காக*இவ்வளவு பெரிய பையனை சுமந்தபடி ஓடி வருகிறீர்கள் என்று விசாரிக்கிறார் .நீங்கள் இவனுக்கு நல்ல பெயர் வைக்க வேண்டும் என்பதற்காக என்கிறார் தந்தை .பெரிய பையனாக இருக்கிறான்.இன்னுமா இவனுக்கு பெயர் வைக்கவில்லை. வீட்டில் என்ன பெயர் வைத்து அழைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு மலைக்கள்ளன் என்று தந்தை சொன்னார் .வியந்து போன எம்.ஜி.ஆர். இப்படியா ஒரு குழந்தைக்கு பெயர் வைப்பது .என கேட்டதற்கு என் மனைவி மலைக்கள்ளன் படம் பார்க்கும்போது இவன் பிறந்ததால் மலைக்கள்ளன் என்று பெயர் வைத்தோம் என்றார் தந்தை ..சரி என்று சொல்லி அந்த குழந்தையின் கையில் ரூ.100/- கொடுத்தார் எம்.ஜி.ஆர். சுமார் பத்தாண்டுகள் கழித்து , அந்த குழந்தை மாணவனாக வளர்ந்த பின்* அந்த மாணவனுடன் தந்தை ஒரு நாள் ராமாவரம் தோட்டத்திற்கு வருகிறார் . எம்.ஜி.ஆர். கோட்டைக்கு காரில் புறப்படும் சமயம் தொடர்ந்து இரண்டு, மூன்று நாட்களுக்கு நூறு ருபாய் நோட்டை கண்ணாடிக்குள் வைத்து ,பிரேம் செய்து எம்.ஜி.ஆர். கண்ணில் படும்படி நிற்கிறார்கள்**. எம்.ஜி.ஆர். இதை கவனித்து ,காரை நிறுத்தி,யார் நீங்கள், தினமும் இப்படி நிற்கிறீர்கள்* ,என்ன வேண்டும் என கேட்கிறார் உங்களுக்கு நினைவிருக்கிறதா*.நான்தான் மலைக்கள்ளன் .பத்தாண்டுகளுக்கு முன்பு நீங்கள் எனக்கு அளித்த பணம்தான் இந்த ரூ.100/-என்கிறான். என்னை என் தந்தை நன்றாக படிக்க வைத்து நல்ல மார்க் வாங்கியுள்ளேன். எனக்கு மருத்துவம் படிக்க ஆசை. ஆனால் ,எனக்கு போதிய மார்க் இல்லை.அதனால் கிடைக்காது ,வாய்ப்பில்லை என்கிறார்கள் .நீங்கள் தமிழகத்தின் முதல்வராயிற்றே. அதனால் உங்கள் உதவி நாடி வந்துள்ளேன் என்றான் . உடனே,எம்.ஜி.ஆர். மலைக்கள்ளனையும் அவன் தந்தையையும் பின்னால் வரும் காரில் ஏற சொல்கிறார் .தமிழ்நாட்டில் மருத்துவத்திற்காக இருக்கைகள் நிரம்பிவிட்டதால்*கர்நாடகத்தின் முதல்வர் குண்டுராவுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்கிறார் .எனக்கு ஒரு மருத்துவ சீட் இடம் வேண்டும் என கேட்க,நீங்கள் கேட்டு நான் இல்லை என்று சொல்ல முடியுமா* யாருக்கு அண்ணா என்று குண்டுராவ் என்று சொல்ல ,என் மகனுக்குத்தான் என்று எம்.ஜி.ஆர். சொன்னாராம் குண்டுராவ் எம்.ஜி.ஆரின் பரம ரசிகர் . இந்த பதிலை சொன்னதும் ,மலைக்கள்ளனின் தந்தை ,ஐயா என் மகனை, உங்கள் மகன் என்று அறிமுகப்படுத்தினீர்கள் அதுவேபோதும் . எனக்கு சீட் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை என்று புளகாங்கிதம் அடைந்தாராம் ..
மலைக்கள்ளன் பெங்களுருவில் மருத்துவ கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார் .தொடர்ந்து பல்வேறு துறைகளில் நிபுணராக விளங்கினார் .* ஜப்பானில் இருந்து எம்.ஜி.ஆருக்கு சிகிச்சை அளிக்க டாக்டர் கானு வந்தபோது அவரது உதவியாளராக ஒரு மருத்துவர் வந்து இருந்தார் . அவர் யார் என்று* எம்.ஜி.ஆர்.தரப்பில்*வினவியபோது* *அவர்தான் மலைக்கள்ளன் என்று கூறப்பட்டது .
சென்னை பல்கலை கழகத்தில் எம்.ஜி.ஆருக்கு டாக்டர் பட்டம் தருவதற்கு முடிவு எடுக்கப்பட்டது .சிண்டிகேட் உறுப்பினர்கள் அதற்கு ஒப்புதல் தரவேண்டும் .அவர்களின் ஒப்புதல் இல்லாமலேயே முடிவுகள் எடுக்கப்பட்டன . இதுபற்றி சிண்டிகேட் உறுப்பினராக உள்ள திரு.துரை முருகன் அவர்களுக்கு தகவல்* தெரிவிக்கப்படுகிறது .உடனே, துரைமுருகன் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து. எம்.ஜி.ஆருக்கு டாக்டர் பட்டம் தருவதற்கு சென்னை பல்கலை கழகத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது .இந்த முடிவை நான் ஆதரிப்பதா, அல்லது எதிர்ப்பதா என்று ஆலோசனை கேட்கிறார் .* ஒருபோதும் எதிர்க்க கூடாது .வேறு யாராவது எதிர்க்கலாமே தவிர, நீ கண்டிப்பாக எதிர்க்க கூடாது .* நீ சட்ட கல்லூரியில் படிக்கும்போது மாதா மாதம் ரூ.500/- பணம் அனுப்பியவர் .அதுமட்டுமல்ல நீ படித்து பட்டம் வாங்கி நல்லமுறையில் வாழ்க்கையை அமைத்து கொள்ள வேண்டும் என்பதில் அக்கறை காட்டியவர் . உன் நலனில் எப்போதும் விருப்பம் உள்ளவர் .உன் திருமணத்திற்கு மும்பையில் இருந்து தனி விமானத்தில் வந்து ,திருமண பரிசாக 25 பவுன் தங்க சங்கிலி கொடுத்தவர் .**அவருடைய தயாள குணத்தை வாழ்த்தி, சிண்டிகேட் உறுப்பினர் என்கிற வகையில் நீதான் அவருக்கு பட்டமளிப்பதை வரவேற்று ஆதரிக்க வேண்டும்*என்று கருணாநிதி யோசனை சொன்னாராம் . உங்களுடைய அரசியல் வாழ்க்கை வரலாறில் ஏதாவது தவறிவிட்டதாக நீங்கள் கருதுகிறீர்களா என்று கருணாநிதியை விகடன் நிருபர்கள் கேட்டதற்கு ,ஆமாம், எம்.ஜி.ஆர். என்கிற ஒரு உற்ற நண்பரை நான் இழந்துவிட்டேன் என்று வருத்தத்துடன் சொன்னாராம் .அப்படி எம்.ஜி.ஆருக்கும் ,கருணாநிதிக்கும் இடையே,அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு ஒரு ஆழமான நட்பு இருந்திருக்கிறது .
மற்றவை அடுத்த அத்தியாயத்தில் தொடரும் .
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம் .
---------------------------------------------------------------------------------
1.ஏய் நாடோடி, போகவேண்டும் ஓடோடி - அன்பே வா*
2..கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - படகோட்டி*
3.ஆண்டவன் உலகத்தின் முதலாளி - தொழிலாளி*
4.எம்.ஜி.ஆர். பானுமதி உரையாடல் - மலைக்கள்ளன்*
5.எனக்கொரு மகன் பிறப்பான் - பணம் படைத்தவன்*
6.எம்.ஜி.ஆர். -எம்.ஜி.சக்கரபாணி உரையாடல் - மலைக்கள்ளன்*
7.அன்புக்கு நான் அடிமை - இன்று போல் என்றும் வாழ்க*
-
செப்டம்பர் மாதத்தில் நடந்த மக்கள் திலகத்தின் ...... திரை உலகத்தின் மலரும் நினைவுகள் .
1956
*********
மக்கள் திலகம் எம்ஜிஆர் - சின்னப்பா தேவர் கூட்டணியில் உருவான முதல் வெற்றி காவியம்
''தாய்க்கு பின் தாரம் ''
21.9.1956ல் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி .
1960
**********
மக்கள் திலகத்தின் ''ராஜா தேசிங்கு '' திரைப்படம் 2.9.1960ல் வெளிவந்தது .
மக்கள் திலகத்தின் இரட்டைவேட நடிப்பு மிகவும் அருமை .
மக்கள் திலகம் & பத்மினி நரிக்குறவ நடனம் பிரமாதம் .
1964
********
25.9.1964 அன்று ''தொழிலாளி '' திரைப்படம் வெளிவந்தது .
மக்கள் திலகம் தொழிலாளியாக அறிமுகமாகி பின்னர் உயர் பதிவிற்கு சென்று உழைக்கும் தொழிலாளருக்கு பல நன்மைகள் செய்யும் அருமையான காட்சிகள் படத்தின் சிறப்பாகும் .
1966
********
18.9.1966 அன்று வெளிவந்த திரைப்படம் ''தனிப்பிறவி ''
உழைப்பின் நோக்கத்தை எடுத்துரைத்த சிறப்பான காவியம் .
1967
*******
7.9.1967 அன்று வெளிவந்த ''காவல்காரன் '' பிரமாண்ட வெற்றி படம் .
1967ல் தமிழக அரசின் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட படம் .
1968
*******
மக்கள் திலகத்தின் 100 வது காவியம் ''ஒளிவிளக்கு ''
20.9.1968ல் திரைக்கு வந்து வெற்றி பெற்ற ஜெமினியின் முதல் வண்ணப்படம் ,
1969
********
சென்னை கிருஷ்ணா
மதுரை - சிந்தாமணி
சேலம் - சாந்தி
அடிமைப்பெண் திரைப்படம்
19 வது வாரம் ஓடிக்கொண்டிருந்தது .
நம்நாடு - படத்தின் பாடல்கள் ரிக்கார்ட் அமோக விற்பனையானது .அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட். ரசிகர்கள் படம் எப்போது வரும் என்று ஆவலுடன் காத்திருந்தார்கள் .
1970
*********
மக்கள் திலகம் எம்ஜிஆர் தன்னுடைய உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்பிற்க்காக ஜப்பான் பயணம் செய்தார் .
1971
********
ரிக் ஷாகாரன் 100 வது நாள் வெற்றி விழா. மக்கள் திலகம் பல ஊர்களில் நடந்த விழாக்களில் கலந்து கொண்டார் .
1972
********
மக்கள் திலகத்தின் ''அன்னமிட்டகை '' 15.9.1972அண்ணா பிறந்த நாளில் திரைக்கு வந்தது .
படத்தின் துவக்க காட்சிகளில் எம்ஜிஆர் கணீர் குரலில் [ 1966ல் படமாக்கப்பட்டது ] பேசும் காட்சிகள் மிகவும் அருமை .
1973
*******
உலகம் சுற்றும் வாலிபன் 150 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது .
பட்டிக்காட்டு பொன்னையா படமும் 50 வது நாள் கண்டது .
மக்கள் திலகம் மாஸ்கோ பயணத்தை முடித்து கொண்டு நாடு திரும்பினார் .
1974
*******
நேற்று இன்று நாளை வெற்றிகரமாக 11 வது வாரமாக ஓடிக்கொண்டிருந்தது ,
அதிமுக இயக்கம் அபார வளர்ச்சியில் முன்னேறிக்கொண்டிருந்தது .
1975
********
இதயக்கனி படம் தென்னாடெங்கும் வசூலில் புரட்சியை உருவாக்கியது .6 வது வாரமாக ஓடிக்கொண்டிருந்தது ,
1976
********
மக்கள் திலகம் பல படங்களில் மும்மரமாக நடித்து கொண்டிருந்தார்
1977
********
மக்கள் திலகம் எம்ஜிஆர் தமிழக முதல்வரானார் .
மீனவ நண்பன் - 50 வது நாளில் நெருங்கியது ,தமிழகம் முழுவதும் வெற்றி ..........
-
ஜாக்கிசானிடம் எம்.ஜி.ஆர். புத்தகம் அளித்த நடிகர் பில்லி வாங் !
இந்த கொரோனா ஊரடங்கு நேரத்தில் உருப்படியாக செய்து கொண்டிருக்கும் வேலைகளில் ஒன்று எனது பழைய சேகரிப்புகளை ஒழுங்குபடுத்துவது. அப்படி செய்த போது 1994 ம் ஆண்டின் 'பொம்மை' இதழ் ஒன்றில் தாய்லாந்து நடிகர், நமது நண்பர், எம்.ஜி.ஆர். ரசிகரான பில்லி வாங், உலகப்புகழ்
பெற்ற நடிகர் ஜாக்கிசானிடம்
'வேத நாயகன் எம்.ஜி.ஆர்.' புத்தகத்தினை பரிசாக அளித்த படம் இடம் பெற்றிருந்தது.
கதாசிரியர், எம்.ஜி.ஆரின் ஆஸ்தான, கதை ஆலோசனை குழுவிலுள்ள வசனகர்த்தா (நாடோடி மன்னன் உட்பட)
ரவீந்தர் எழுதிய புத்தகம் இது. இந்த விபரங்களை பில்லி வாங்கிடம் சொன்ன போது, "என்னிடம் கூட இந்த புத்தகம் இல்லை. என் கவலையை போக்கிவிட்டீர்கள்" என்று தன் மகிழ்ச்சியை, நன்றியை தெரிவித்தார்.
Ithayakkani S Vijayan with Plato Rajagopalan.........
-
சென்னையில் மக்கள் திலகத்தின் கலங்கரை விளக்கம் கடந்த 30 ஆண்டுகளில்...
35 திரையரங்கில்..
மாறி.. மாறி திரையீட்டு
சாதனை படைத்தது.
பாரகன் .. 3
பிளாசா...1
சித்ரா... 4
ஸ்டார்.... 3
காமதேனு... 3
கபாலி... 1
ராம்... 2
லிபர்ட்டி... 3
சீனிவாசா ...5
ஜெயராஜ் ...2
நேஷனல் ... 1
பத்மனாபா.. 3
பிராட்வே.... 2
சிவசக்தி... 2
பாரத் ... 1
மேகலா....5
சரஸ்வதி...1
சரவணா.... 13
பாலாஜி.... 6
முரளி கிருஷ்ணா.. 2
லஷ்மி.. 1
கோல்டன் ஈகின் ..2
ராஜோந்திரா.. 2
விருகை நேஷனல்.. 2
பழனியப்பா..2
செலக்ட்..... 6
தங்கம் .... 3
பிரைட்டன்... 3
பாட்சா.... 4
முருகன்... 4
கிரவுன்...1
நடராஜ்....5
நாகேஷ்...2
கிருஷ்ணவேனி... 2
சன்...1
கோபிகிருஷ்ணா ..1
ராதா...2
சயானி...1
மெலோடி... 1
பாலமுரளீ... 3
பாண்டியன் 2
எம்.எம். தியேட்டர்...1
கடந்த 30 ஆண்டில் மீண்டும் மீண்டும் திரையிடப்பட்ட கறுப்பு வெள்ளை காவியம்.
வசூல் பேரரசின்
கலங்கரை விளக்கம்.
எந்த நடிகரின் கலர்படங்கள் கூட வாழ்நாள் திரை ஒட்டத்தில் செய்யாத சாதனையில்..
கறுப்பு வெள்ளைபடமான காவியம் கலங்கரை விளக்கம் ஆகும்.
இன்னும் உள்ள 50 க்கும் மேற்பட்ட கறுப்பு வெள்ளை படங்கள் சென்னை மட்டுமே சாதனை இவ்வளவு... என்றால்... தென்னக வெளியீடு... மலைப்பாகவும், மிக வியப்பாகவும் இருக்கும்...........
-
தமிழ்ப்பட உலகில் மக்கள் திலகத்தின் சாதனை திரைக் காவியங்களின்* வெற்றிகள்...
தொடர்ந்து வெளியான.....*
102 வது காவியமான*
புரட்சியாரின் "அடிமைப்பெண்*"
103 வது காவியமான ......
மக்கள் திலகத்தின் நம் நாடு*
104 வது காவியமான கலைப்பேரரசின்....*
மாட்டுக்கார வேலன்*
105 வது காவியமான....*
நடிகப்பேரரசின் என் அண்ணன்*
ஆகிய நான்கு திரைப்படங்கள் தொடர்ந்து வெளிவந்து சரித்திரம் படைத்த வெற்றிகள் சில.
நான்கு திரைப்படங்களும் தொடர்ந்து ஓடி மிகப்பெரிய வெற்றியை பெற்றது போல் தமிழ் சினிமாவில் எந்த நடிகரும்* நான்கு தொடர் வெற்றி படங்களை கொடுத்து மிகப்பெரிய சாதனையை தக்க வைத்த வரலாறு இன்று வரை கிடையாது.
அடிமைப்பெண் திரைக்காவியம்..
பற்றிய சிறப்புகள் சில......*
1) தமிழகத்தில் முதல் வெளியீட்டில் திரையிடப்பட்ட 40 திரையரங்கு களிலும் 50 நாட்களை கடந்தது.
2) இரண்டாம் வெளியீட்டில் 16 திரையரங்கில் 50 நாட்களை கடந்தது. கர்நாடாவில் 5 அரங்கு
சித்தூர், கேரளா 2 அரங்கு
இலங்கை 4 அரங்கு*
மொத்தம் 68 அரங்கில் 50 நாளை கடந்து சாதனை.
3) சென்னையில் நான்கு திரையரங்கில் 100 நாட்களை கடந்த முதல் வண்ணப்படமாக* வெற்றி கொண்டது.
4 ) சென்னையில் நான்கு அரங்கில் 100 காட்சிகள் விதம் 444 காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனை.
5) திருச்சியில் 154 காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனை ஏற்படுத்திய முதல் தென்னிந்திய காவியம் அடிமைப்பெண்.
6) மதுரையில் 116 காட்சிகளும் சேலத்தில் 112 காட்சிகளும் கோவையில் 117 காட்சிகளும் அரங்கு நிறைந்து சாதனை....*
7) தமிழகத்தில் 15 திரைப்பட அரங்குகளில் 100 நாட்களை கடந்து மதுரை சிந்தாமணி அரங்கில் வெள்ளிவிழாவை கடந்து சாதனையாகும் . இலங்கையில் 100 நாட்களை வெற்றிக்கொண்டது.....
8) 32 திரையரங்குகளில் 75 நாட்களை கடந்து வெற்றி கொண்ட திரைக்காவியம் அடிமைப்பெண்....
9) ஆறு மாத காலத்தில் ஒரு கோடியே 10 லட்சத்தை கடந்து வசூலை உருவாக்கிய திரைக்காவியம்..........
-
10) சென்னை ஸ்ரீ கிருஷ்ணா, சேலம் சாந்தி, திருச்சி ஜுபிடர்.....ஆகிய அரங்கில்*
19 வாரங்கள் நடைபெற்றது அடிமைப்பெண் திரைக்காவியம்....
11) நெல்லையில் மிகப் பெரிய அரங்கான சென்ட்ரல்* அரங்கில் முதன் முறையாக அடிமைப்பெண் திரைக்காவியம் 100 நாட்களை கடந்து.... இரண்டு லட்சத்தை வசூலாக கொடுத்த முதல் காவியம்
12) சென்னையில் எங்க வீட்டுப் பிள்ளை திரைப்படத்திற்குப் பின் 13 லட்சத்திற்கும் மேல் வசூல் கொடுத்த இரண்டாவது திரைக் காவியம் அடிமைப்பெண் ஆகும்.
13 ) தூத்துக்குடி நகரில் முதன் முதலில் 100 நாளை கொண்டாடிய காவியம் அடிமைப்பெண் ஆகும்.
14) பெங்களூர் நகரில் முதன் முறையாக 5 திரையரங்கில் வெளியிடப்பட்டு மூன்று திரையரங்கில் 11 வாரங்கள் அதாவது முப்பத்தி மூன்று வாரங்கள் வெற்றி கொண்ட திரைக்காவியம் அடிமைப்பெண்.
15) இலங்கையில் 5 அரங்குகளில் வெளியிடப்பட்டு சென்ட்ரலில் 100 நாட்களை வெற்றிகொண்ட திரை காவியமாக அடிமைப்பெண் திகழ்ந்தது.
16) அடிமைப்பெண் காவியம் ஈரோடு, கோவை, தஞ்சை,காஞ்சி குடந்தை, வேலூர், கடலூர், மைசூர்
சித்தூர், பாண்டி என பல ஊர்களில் இரண்டு தியேட்டர் வெளியிடப்பட்டு சாதனையாகும்.
17) தஞ்சை, ஈரோடு இரண்டு திரையரங்குகளில் வெளியிடப்பட்டு 100 நாள் ஓடிய முதல் காவியம் அடிமைப்பெண்.
18) திருவண்ணாமலை நகரில் மூன்று திரையரங்கில் ஒரே சமயத்தில் வெளியிடப்பட்டு சாதனை ஏற்படுத்திய காவியம் அடிமைப்பெண் ஆகும்.
19)தென்னகமெங்கும் 1969 ல் மாபெரும் வசூலை ஏற்படுத்திக் கொடுத்து அதிக திரையரங்கு களில் 100 நாட்கள், எழுபத்தைந்து நாட்கள், 50 நாட்களை கடந்து வெற்றி கொண்ட முதல் காவியம்*.
20) சென்னையில் 2ம் வெளியீட்டில் 18 திரையரங்கில் வெளியிடப்பட்டு
33* வாரங்கள் ஒடி நகரில்* 6 மாத காலத்தில் 18 லட்சத்தை பெற்ற காவியம் அடிமைப்பெண் ஆகும்.
21) வடசென்னை பகுதியில் எந்தபடமும் செய்யாத சாதனையில் 133 நாளில் 4லட்சத்து 77 ஆயிரத்தை கடந்து பல வெள்ளிவிழா படங்களின் வசூலை
முறியடித்தது அடிமைப்பெண்.
22) அடிமைப்பெண் இந்தியில் டப் செய்யப்பட்டு பல லட்சங்களை வடநாட்டில் குவித்த முதல் தமிழ்படம்.
23)அடிமைப்பெண் தெலுங்கு மொழியில் டப் செய்யப்பட்டு பல ஊர்களில் சாதனை படைத்தது.
24)* ஆங்கில பத்திரிக்கையான பிலிம் பேர் பத்திரிக்கை அடிமைப்பெண் படத்திற்கு சிறந்தபடம் என்ற பரிசை வழங்கியது.
25) அடிமைப்பெண் போன்ற படத்தை* இந்தியாவில் யாரும் தயாரித்ததில்லை... சர்லதேச படங்களுக்கு ஆறைகூவல் விடும் ஒரே படமாக திகழ்கின்றது என பல முன்னனி பத்திரிக்கைககள் பாராட்டிய ஒரே காவியமாக அடிமைப்பெண் திகழ்ந்தது.
இப்படி அடுக்கடுக்கான சாதனைகளைப் படைத்த வண்ண காவியம் மக்கள் திலகத்தின் இரண்டாவது காவியம்* அடிமைப்பெண் ஆகும்.
அகிலம் போற்றிய அடிமைப்பெண் காவியத்தின் வரலாற்றை வெல்லமுடியுமா..
அடுத்து....அவ்வாண்டில் வெளியான புரட்சிப்பேரரசின்
நம் நாடு திரைப் படத்தைப் பற்றி பார்ப்போம்............
-
"அன்பிருந்தால் , ஆண்மையும் தாய்மையடையும்"
- இதை அன்றே நிரூபித்தவர் அன்னை உள்ளம் கொண்ட எம்.ஜி.ஆர்...!
.
இதோ ...எம்.ஜி.ஆருடன் கதாசிரியர் ஆரூர்தாசுக்கு ஏற்பட்ட அன்பு அனுபவங்கள்...
ஆரூர்தாசின் வார்த்தைகளில் :
"எம்.ஜி.ஆரின் ஒப்பனைஅறைக்குள் நுழைந்தேன்.
சுழல் நாற்காலியில் அமர்ந்து மேக்-அப் போட்டுக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர். , எதிர்க்கண்ணாடியில் என்னைப்பார்த்து திடுக்கிட்டுத் திரும்பி என் முகத்தைக் கையால் பிடித்துக்கொண்டு கண்களைக் கவனித்து ...
எ ம்.ஜி.ஆர் : "என்ன, கண் இப்படி ரத்தக் கோளமா இருக்கு ... சிவாஜி பிலிம்ஸ் படம் ராத்திரியில கண்ணு முழிச்சி எழுதுறீங்களா?"
நான்: "ஆமாண்ணே."
எம்.ஜி.ஆர்:- "சரி. என் குடும்ப டாக்டர் வி.ஆர்.எஸ்.கிட்டே போறீங்களா? போன் பண்ணி சொல்லட்டுமா?"
நான்:- "வேண்டாண்ணே....எனக்கு அப்படி ஒண்ணும் இல்லே. நல்லாத்தான் இருக்கேன். தூக்கம் இல்லே. அவ்வளவுதான். தூங்கினா சரியா போயிடும். "
.
மதிய வேளை வழக்கம்போல் மேக்-அப் அறையில் எம்.ஜி.ஆருடன் சேர்ந்து சாப்பிட்டேன். "குழம்பைக் குறைச்சிக்கிட்டு நிறைய தயிர் போட்டுக்குங்க. தினமும் காபி, டீக்குப் பதிலா மோர் நிறைய குடிங்க. கெட்டித்தயிர்ல சர்க்கரை கலந்து சாப்பிடுங்க. இளநீர் குடிங்க. உஷ்ணம் குறைஞ்சிடும்.."
"சரிண்ணே.."
சாப்பிட்டு முடித்ததும் எம்.ஜி.ஆர். வழக்கம்போல் ’பாக்கெட் ரேடியோ’வில் மாநிலச் செய்திகள்கேட்டுக்கொண்டு சோபாவில் அமர்ந்திருந்தார். நான் அவர் பக்கத்தில் உட்கார்ந்திருந்தேன்.
வயிறார சாப்பிட்டது ... ஏற்கனவே இருந்த களைப்பு! இரண்டுமாகச் சேர்ந்து என் கண்களைச் சொக்கிச் சுழல வைத்தன. அதை மட்டுந்தான் நான் உணர்ந்தேன். பின்னர் உணர்விழந்தேன்...!
.
எவ்வளவு நேரம் என்று தெரியாத நிலையில் திடுக்கிட்டு விழித்துப் பார்த்தேன். இப்பொழுது என் தலை எம்.ஜி.ஆரின் மடி மீது இருந்தது ..!
மிரள மிரள விழித்தபடி "அண்ணே.." என்றேன். ஏதோ கனவு கண்டதுபோல ...!
எம்.ஜி.ஆர். என் முதுகைத்தடவியபடி சொன்னார் :
"தூக்கத்திலே அப்படியே சோபாவுலே சரிஞ்சி விழுந்து ஒரு பக்கமா சாஞ்சிட்டிங்க. தலை தொங்குச்சி. சுளுக்கிக்கும் இல்லியா? அதனால ஒங்க தலையை என் மடியிலே வச்சிக்கிட்டேன். அதுகூட தெரியாத அளவுக்கு அடிச்சிப்போட்டதுபோல ஆயிட்டிங்க. பரவாயில்லே. இன்னும் நேரம் இருக்கு. அப்படியே என் மடியில படுத்து தூங்குங்க..."
.
ஆரூர்தாசின் இந்த அனுபவங்களைப் படிக்கும்போது , மீண்டும் என் நினைவுக்கு வரும் வார்த்தைகள் :
"அன்பிருந்தால் , ஆண்மையும் தாய்மையடையும்"...........
-
தனிப்பிறவி நெல்லை பார்வதி திரையரங்கில் 1966 செப்டம்பரில் வெளியானது. கருப்பு வெள்ளை திரைப்படங்களில் முதன் முறையாக 52 நாட்கள் மாட்னி ஷோ நடைபெற்று
பெரிய வெற்றியை பெற்ற படம்.
தேவரின் குறுகிய கால தயாரிப்பான
தனிப்பிறவியின் வெற்றி அனைவரையும் வியப்படைய செய்தது. 1968 ஏப் 13 ல் வெளியான
கலாட்டா கல்யாணம் வெறும் 13 நாளில் எடுக்கப்பட்டு கண்ணன் என் காதலன் ஏப் 25 ல் திரையிடப்பட்டது என்றால் நீங்கள் புரிந்து கொள்ளலாம் தனிப்பிறவியின் வெற்றியின் வீரியத்தை. அதனால் தேவர் படம் என்றாலே வெற்றி உறுதி என்று நாம் எடுத்துக் கொள்ளலாம்.
இதே திரையரங்கில் தான் புரட்சி நடிகரின் திருடாதே மாபெரும் வெற்றி பெற்று 100 நாட்கள் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது..........
-
எம.ஜி.ஆர் 100/ 1.
"அறிஞர் அண்ணா குறிப்பிட்ட கவிதை".
ஒருவர் ஒரு துறையில் வெற்றி பெறுவதே கடினம். அதிலும் முதலிடம் பெறுவது இன்னும் கடினம். அதைத் தக்க வைத்துக் கொள்வது அதைவிட கடினம். சினிமா, அரசியல் இரண்டு துறைகளிலும் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல், முதலிடம் பெற்று, அதை கடைசி வரை தக்க வைத்துக் கொண்ட அதிசயமே அசந்து போகும் அதிசயம் எம்.ஜி.ஆர்.
தமிழர்களை மயக்கும் மந்திரச் சொல்லாக அவர் பெயர் ஆனது ஏதோ மாயா ஜாலத்தால் அல்ல. அதற்கு பின்னணியில் இருக்கும் அவரது திட்டமிட்ட கடும் உழைப்பு. அவருக்கே அமைந்த வசீகரம். இந்த இரண்டும் கூட எல்லா நடிகர்களுக்கும் இருந்து விடலாம். ஆனால், மற்றவர்களுக்கு இல்லாத புகழும் பெருமையும் மக்கள் ஆதரவும் எம்.ஜி.ஆருக்கு மட்டுமே ஏன்? இவற்றை எல்லாம் தாண்டிய மனிதாபிமானம் என்பதே பதிலாக இருக்கும். இந்த குணத்தால் மக்களை அவர் நேசித்தார். அதனால்தான் மக்கள் அவரை நேசித்தனர். அதனால்தான், இதுவரை எந்த தமிழக முதல்வரும் செய்யாத சாதனையாக அடுத்தடுத்து மூன்று முறை ஆட்சியைக் கைப்பற்றினார்.
1917-ம் ஆண்டு ஜனவரி 17ல் பிறந்த எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கடந்த மாதம் 17-ம் தேதி தொடங்கியுள்ளது. இலங்கையில் கண்டியில் பிறந்து, தந்தையை இழந்து, தாய் மற்றும் தமையனுடன் தமிழகம் வந்து நாடகத்தில் சேர்ந்து சினிமாவில் சிறிய வேடங்களில் தலைகாட்டி, கதாநாயகனாக உயர்ந்து, பொதுவாழ்வில் ஈடுபட்டு, கட்சியின் தலைவராகி, அவர் தமிழக முதல்வரானது எல்லாருக்கும் தெரிந்ததுதான்.
ஆனால், எம்.ஜி.ஆரின் இந்த நெடிய சாதனை வாழ்வில் ஊடாடி இருக்கும் சினிமா, அரசியல், தனிப்பட்ட வாழ்க்கையில் அவரது அருங்குணங்களை, திறமைகளை, சாதுர்யங்களை, மனிதாபிமானத்தை, பண்பு நலன்களை விளக்கும் வகையில், அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர். 100 என்ற பெயரில் 100 முத்துக்களை தொகுத்து வாசகர்களுக்கு அளிக்கிறோம்.
‘‘மரத்திலே பழுத்த கனி தங்கள் மடியிலே விழாதா? என்று பலர் ஆவலாக காத்திருந் தனர். நல்லவேளையாக அது எனது மடியிலேயே வந்து விழுந்தது. அதை எடுத்து எனது இதயத்திலே வைத்துக் கொண்டேன். அந்த இதயக்கனிதான் எம்.ஜி.ஆர்.’’
எம்.ஜி.ஆரைப் பாராட்டி அறிஞர் அண்ணா கூறியதுதான் இது. அண்ணா எழுதிய ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’நாடகத்தில் நடிப்பதற்காக நடிகர் டி.வி.நாராயணசாமியால் அண்ணாவிடம் எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்தப்பட்டார். சினிமா வில் துணை வேடங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடிக்க முதலில் ஒப்பந்தமான படம் ‘சாயா'. படத்தின் கதாநாயகி டி.வி. குமுதினி. அப்போதே அவர் புகழ் பெற்ற நடிகை. புதுமுக நடிகரான எம்.ஜி.ஆருடன் நடிப்பதற்கு குமுதினியின் கணவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதுபோன்ற சில காரணங்களால் ‘சாயா' படம் நின்று போனது.
பின்னர், தீவிர முயற்சிக்குப் பிறகு வாராது வந்த மாமணிபோல, ஜூபிடர் நிறுவனத்தின் ‘ராஜகுமாரி’ படத்தில் கதாநாயகனாக நடிக்க எம்.ஜி.ஆருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் நடிக்க வேண்டி இருந்ததால் நாடகத்தில் நடிக்க நேரம் ஒதுக்க முடியவில்லை. அதனால், அந்த நாடகத்தில் எம்.ஜி.ஆரால் நடிக்க முடியாமல் போனது. என்றாலும் அண்ணாவோடு எம்.ஜி.ஆருக்கு பழக்கம் தொடர்ந்தது. அவரது பணத்தோட்டம், சந்திரோதயம் புத்தகங்களைப் படித்து அண்ணாவாலும் அவரது கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டு திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார் எம்.ஜி.ஆர்.
திமுக கொடியை முதன்முதலாக திரையில் காட்டியவர் எம்.ஜி.ஆர்.தான். அவரே தயாரித்து இயக்கி நடித்த ‘நாடோடி மன்னன்' படத்தில் ஆணும் பெண்ணும் இருவண்ணக் கொடியை ஏந்தியபடி திரும்புவது போன்ற எம்.ஜி.ஆர். பிக்சர்ஸின் இலச்சினை (லோகோ) படத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் காட்டப் பட்டது. எம்.ஜி.ஆரின் படங்களில் அண்ணாவைப் பற்றியும் திமுக கொள்கைகளைப் பற்றிய வசனங் களும் பாடல்களும் கட்டாயம் இடம்பெற்றன.
அண்ணா தமிழக முதல்வரானதும் சென்னையில் 1968-ம் ஆண்டு தொடக்கத்தில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது. அப்போது, சென்னையில் மையப் பகுதியான அண்ணா சாலையில் (அப்போது மவுண்ட் ரோடு) ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் அலுவலகம் எதிரே கையை உயர்த்தியபடி கம்பீரமாக நிற்கும் அண்ணாவின் சிலையை தனது சொந்த செலவில் எம்.ஜி.ஆர். நிறுவினார். சர்.ஏ.ராமசாமி முதலியார் சிலையை திறந்து வைத்தார்.
உலகத் தமிழ் மாநாட்டில் கருத்தரங்கு ஒன்றில் எம்.ஜி.ஆர். பேசினார். கவிதையைப் பற்றிய நயமான விளக்கம் அளித்தார். ‘அழகும் உள்ளத்து உணர்ச்சியும் சேர்ந்ததுதான் கவிதை ’ என்று கூறினார். கூடியிருந்த மக்கள் கரகோஷம் எழுப்பினர்.
பின்னர், அண்ணா பேச வந்தார். எம்.ஜி.ஆருக்கே குருவாயிற்றே? கேட்க வேண்டுமா? கவிதை பற்றி அவர் கூறும்போது,
‘அறிந்ததனை அறிந்தோர்க்கு
அறிவிக்கும் போதினிலே
அறிந்ததுதான் என்றாலும்
எத்துணை அழகம்மா? என்று
அறிந்தோரையும் வியக்க வைக்கும்
அருங்கலையே கவிதையாகும்’
... என்று கவிதையாலேயே கவிதைக்கு விளக்கம் அளித்தார் அறிஞர் அண்ணா. மக்களின் கரகோஷம் அடங்க வெகுநேர மாயிற்று.
தொடர்ந்து அண்ணா பேசும்போது, ‘அழகும் உள்ளத்து உணர்ச்சியும் சேர்ந்ததுதான் கவிதை என்று எம்.ஜி.ஆர். கூறினார். நீங்கள் கைதட்டினீர்கள். எதற்கு என்று யோசித்தேன். பிறகுதான் தெரிந்தது. அவர் தன்னைப் பற்றியே சொல்லியிருக்கிறார். ஆம். அழகும் உணர்ச்சியும் சேர்ந்த எம்.ஜி.ஆரே ஒரு கவிதைதானே...’ என்றார் அண்ணா.
மக்களின் ஆரவாரம் விண்ணைப் பிளந்தது. இதயக்கனியின் ஈர்ப்பு ரகசியம் அறிந்தவர் அண்ணா!
Publisher :
அதி உயர் தகவல் களஞ்சியம்.........
-
தமிழகத்தில் வருகின்ற 31-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுப்பு என்று அரசால் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதை பயன்படுத்தி நாம் ஒரு பதிவை வருங்கால சந்ததிகளுக்கு உதவுமே என்று பதிவிடுகிறோம் டாக்டர் புரட்சித்தலைவர் வாழ்ந்த வாழ்க்கை தொகுப்பை இட்டாள் பல ஆண்டுகள் பதிவிடலாம். ஆனால் மிகச் சுருக்கமாக இப்பதிவு இடுகிறோம். காரணம் வரக்கூடிய சந்ததிகளுக்கு சுருக்கமாக பதிவிட்டால் அதைப்பற்றி அவரிடம் பல கேள்விகள் உருவாகும், அதைப்பற்றி தெரிந்து கொள்வோம் என்ற ஆர்வம் உருவாகும் ஆகையால் பெற்றோர்கள் தன் குழந்தைகளுக்கு இப்பதிவை ஒரு கதையாக சொல்லி அவரவர் தன் குழந்தைகளின் மனதில் பதியவைத்து, இவ்வாறான ஒரு மாமனிதன் இவ்வுலகில் வாழ்ந்தார் என்பதை விளக்கிச் சொல்லி நீங்கள் ஒரு நல்ல வழிகாட்டியாக பெற்றோர்கள் இருப்பீர்கள் என்பதை உணர்ந்து இந்த சிறு விடுமுறை நாட்களை புரட்சித் தலைவரோடு இப்பதிவை பதிவிடுகிறோம்.
மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என்ற இவர், ‘எம்.ஜி.ராமச்சந்திரன்’ என்றும், ‘எம்.ஜி.ஆர்’ என்றும் அன்போடு அழைக்கப்பட்டார். இவர் இந்தியாவின் தலைச்சிறந்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தார். அவருடைய வாழ்க்கையில், நடிப்பும், அரசியலும் ஒரு முக்கிய பகுதியாக இருந்தது. அவருடைய இளமைக்காலத்திலேயே, பல நாடக குழுக்களில் பிரபலமாக திகழ்ந்தார். அவர் காந்தியின் மீதும் அவரது கொள்கைகள் மீதும் மிகவும் பற்றுடையவராக இருந்ததால், அவருடைய இளம்வயதிலேயே இந்திய நேஷனல் காங்கிரஸில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள், தமிழ் திரையுலகை முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆதிக்கம் செய்தார். பின்னர், திமுக அரசியல் கட்சியுடன் கைகோர்த்தார். ஒரு தமிழ் நடிகர் என்ற மகத்தான புகழ் பெற்றிருந்தாலும், எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் சமமான வெற்றிகரமான அரசியல் வாழ்க்கையையும் அனுபவித்தார். தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டப்பின், அவர் தனது சொந்தக் கட்சியான அ.தி.மு.கவை மிகச் சிறப்பாக வழி நடத்தினார். மக்கள் எம்.ஜி.ஆரை மிகவும் நேசிக்க முக்கிய காரணம், அவர் ஏழை மக்களின் இதய தெய்வமாக விளங்கினார். நாட்டின் மாநில முதலமைச்சர் நாற்காலியை ஆக்ரமித்த, முதல் இந்திய திரையுலக பிரமுகர் என்ற பெருமை எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களையே சேரும். ஒரு நடிகராக இருந்து அரசியலில் பதவி அடைந்த போதும், அவர் ஏழைகளின் தோழனாகவும், இல்லாதோருக்குக் கொடையாளியாகவும் விளங்கினார். தனது மனிதநேய பண்புகளால் அன்பு செலுத்தியதால் பெருமளவில் பிரபலமானார்.
பிறந்த தேதி: ஜனவரி 17, 1917
பிறந்த இடம்: நாவலப்பிட்டி, கண்டி, இலங்கை
இறந்த தேதி: டிசம்பர் 24, 1987
தொழில்: நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி
குடியுரிமை: இந்தியா
திரையுலக வாழ்க்கை
எம்.ஜி.ஆர் தனது இளமைப்பருவத்திலேயே, நடிப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அவர் சிறுவனாக இருந்த போதே அவரது தந்தை இறந்துவிட்டார். அவரது தந்தையின் மறைவுக்குப் பின், குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக படிப்பைத்தொடர முடியாமல், பணம் சம்பாதிக்கும் நிர்பந்தம் ஏற்பட்டதால், இவர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணத்தில், தனது பெயரை முதல்முறையாக ‘ஒரிஜினல் பாய்ஸ்’ என்ற நாடக குழுவில் பதிவு செய்தார். அவருடைய சகோதரரும் இந்த குழுவில் உறுப்பினராக இருந்தார். சில ஆண்டுகளுக்கு பிறகு, நாடகத்தில் நடிப்பதை விட்டுவிட்டு, 1935ல் தமிழ் திரையுலகில் சேர்ந்தார். 1936ல் ‘சதிலீலாவதி’ என்ற படத்தில் துணை கதாபாத்திரமாக முதல்முறையாக நடித்தார். 1940களில் தான் அவருக்கு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. தமிழ் சினிமாவிலேயே இதுவரை பார்த்திராத வர்ததகரீதியான ரொமாண்டிக் மற்றும் ஆக்க்ஷன் ஹீரோ என்று அவரை உருவாக்கிய படம், ‘இராஜகுமாரி’. இது கலைஞரால் எழுதி உருவாக்கப்பட்டது. 1947ல், இராஜகுமாரி’ திரைப்படம் தமிழக திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. பின்னர், தமிழ் திரையுலகம் மூன்று தசாப்தங்களுக்கும் எம்.ஜி.ஆரை முழக்கமிட்டனர். 1956ல், எம்.ஜி.ஆர், திரையுலகில் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் உருவெடுத்தார். அவர் இயக்கிய முதல் படமான ‘நாடோடி மன்னன்’, தமிழ்நாட்டில் பல திரையரங்குளில் ஓடி, பெரிய வெற்றிப்பெற்று, தமிழ் ரசிகர்களின் மனதில் ஒரு அங்கீகாரத்தைப் பெற்றது. ஒரு இயக்குனராக தனது முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அவர் இரண்டு படங்களை இயக்கி நடிக்கவும் செய்தார். அவை ‘உலகம் சுற்றும் வாலிபன்’ மற்றும் ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ ஆகும். 1971ல் வெளியான ‘ரிக்க்ஷாக்காரன்’ படத்தில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததால், எம்.ஜி.ஆர் அவர்களுக்கு, சிறந்த நடிகருக்கான ‘தேசிய விருது’ கிடைத்தது.
விருதுகள் மற்றும் அங்கீகாரம்
1960ல், எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் இந்தியாவின் ‘பத்மஸ்ரீ விருதுக்காகத்’ தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அவர் அரசாங்கத்தின் பற்றற்ற நடத்தையின் காரணமாக அதை ஏற்க மறுத்துவிட்டார். ஏனென்றால், விருதில் பாரம்பரிய ஹிந்தி வார்த்தைகளுக்கு பதிலாக தனது தாய்மொழியான தமிழில் இருக்க வேண்டுமென்று அவர் விரும்பினார்.
‘ரிக்க்ஷாக்காரன்’ படத்திற்காக, தனது நடிப்பிற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை 1972ல், எம்.ஜி.ஆர் பெற்றார்.
சென்னை மற்றும் உலக பல்கலைக்கழகமும் அவருக்கு ‘முனைவர் பட்டம்’ வழங்கி சிறப்பித்தது.
தமிழ்நாட்டின் சமுதாயத்தின் நன்மைக்காக அவருடைய பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக அவர் இறந்த பிறகு 1988ல் ‘பாரத ரத்னா விருதை’ வழங்கப்பட்டது.
தனிப்பட்ட வாழ்க்கை
எம்.ஜி.ராமச்சந்திரன் மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். அவரது முதல் இரண்டு மனைவிகள் நோயின் காரணமாக இறந்துவிட்டனர். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, அவரது மூன்றாவது மனைவியான ஜானகி ராமச்சந்திரன் அவர்கள் அ.இ.அ.தி.மு.கவின் பொறுப்பை ஏற்றார்.
இறப்பு
எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களுக்கு சிறுநீரக பிரச்சினைகள் இருந்தது. சிறுநீரகக் கோளாறு காரணமாக 1984ஆம் ஆண்டு அக்டோபரில், அமெரிக்காவின் புரூக்ளின் நகரில் உள்ள டவுன்ஸ்டேட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதே ஆண்டு, சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொண்டார். இறுதியாக 1987ல் நோய்வாய்ப்பட்டார். டிசம்பர் 24ஆம் தேதி, 1987ல் இயற்கை எய்தினார். எம்.ஜி.ஆருடைய மரணம் தமிழ்நாட்டில் பெருங்கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கட்டுக்கடங்காத மக்களையும், அதிகளவில் போராடி உயிரிழந்த உணர்ச்சித் தமிழர்களையும் நிர்வகிக்க தமிழக அரசும், போலீஸ் அதிகாரிகளும் கடுமையாக போராடினர். அவரது மறைவுக்குப் பின், அஇதிமுக இரண்டு பிரிவுகளாக பிரிந்தது. ஒன்று அவரின் மனைவி ஜானகி ராமச்சந்திரன் தலைமையிலும், மற்றொன்று ஜே.ஜெயலலிதா தலைமையிலும் தனித்தனி கட்சிகள் உருவாகின. அவரது ‘சத்யா ஸ்டுடியோ’ இப்போது ஒரு பெண்கள் கல்லூரியாக உள்ளது. சென்னை டி.நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டை தமிழக அரசு நினைவு இல்லமாக மாற்றி பராமரித்து வருகிறது.
காலவரிசை
1917 : எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் ஜனவரி ம் தேதி 17 பிறந்தார்.
1936 : தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
1947 : அவரின் முதல் வெற்றிப்படமான ‘ராஜகுமாரி’ வெளியானது.
1953 : அரசியல் கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்தில் சேர்ந்தார்.
1956 : முதல் முறையாக திரைப்பட இயக்குனராக மாறினார்.
1960 : பத்மஸ்ரீ விருதை ஏற்க மறுத்து விட்டார்.
1962 : மாநில சட்ட மன்றத்தின் உறுப்பினரானார்.
1967 : தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார்.
1967: எம். ராதாவால் கழுத்தில் சுடப்பட்டார்.
1969 : திமுக பொருளாளராக மாறினார்.
1972 : தனது சொந்த அரசியல் கட்சியான, அ.தி.மு.கவை உருவாக்கினார்.
1972 : ‘ரிக்க்ஷாக்காரன்’ படத்திற்காக தேசிய விருதை வென்றார்.
1977 : முதல் முறையாகவும், மூன்று முறை தொடர்ந்தும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார்.
1984 : சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார்..
1987 : டிசம்பர் 24ஆம் தேதி,1987ல் இறந்தார்.
1988 : இறப்பிற்கு பின், பாரத ரத்னா விருதை அரசு அவருக்கு வழங்கியது..........
-
நெல்லையில் ஸ்ரீலட்சுமி திரையரங்கில் ரிலீஸ் ஆனது. நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.
நூறாவது நாள் முடிந்தும் கூட்டம் அலைமோதும். பார்த்தவர்கள் மீண்டும் மீண்டும் பார்ப்பார்கள்.
தலைவர் குதிரை வண்டியில
திரையில் தோன்றியவுடன் விசில் சத்தம் காதைப் பிளக்கும்.
கடைசி பைட் சீன். நம்பியாருடன் மணல்மேட்டில் நடக்கும் சிலம்பு சண்டை சாட்டையை லாவகமாக தலைவர் கையாளும் விதம் என்ன ஒரு
ஆர்ப்பாட்டம் தியேட்டரில் நடக்கும் தெரியுமா?
இன்றைய சண்டைக்காட்சி கள் அனைத்தும் கிராபிக்ஸ் தொழில் நுட்பம். அனுபவித்து ரசித்து பார்த்த படம் பாடல்களும் இனிமைதான்.............
-
1974-ம் ஆண்டு சென்னை, மதுரை, சேலம், கோவை, ஈரோடு, திருச்சி, தஞ்சை, கும்பகோணம், நெல்லை, பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களில் 12 தியேட்டர்களில் 100 நாள் கொண்டாடி மதுரை, நெல்லையில் வெள்ளிவிழாவும் கொண்டாடி அந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது உரிமைக்குரல். உண்மையில் மதுரையில் 7 லட்சமும் கோவையில் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக அளவாக ரூ.8 லட்சமும் வசூல் சுனாமியாக சுழன்றடித்து உலகம் சுற்றும் வாலிபனை வசூலில் மிஞ்சியது. ஆனால், சிவாஜி கணேசன் ரசிகர்கள் தங்கப்பதக்கம் வசூலில் சாதனை செய்தது என்று மனசாட்சியே இல்லாமல் புளுகுவார்கள். நம்மிடம் உரிமைக்குரலுக்கும் உலகம் சுற்றும் வாலிபனுக்கும் விநியோகஸ்தர்கள் கொடுத்த வசூல் விளம்பரம் இருக்கிறது. ஆனால், அதை தங்கப்பதக்கம் மிஞ்சியதாக விநியோகஸ்தர்கள் கொடுத்த வசூல் விபரம் எதுவும் இல்லை. இருந்தால் அதை அவர்கள் வெளியிடுவார்களே. எல்லாம் வாய் பொய் வசூல்தான்..........
-
மக்கள் திலகம் எம் ஜி ராமசந்திரன் முதலமைச்சர்
பொற்கால ஆட்சி சாதனைகள்
எம்.ஜி.ஆர் தனது ஆட்சிக் காலத்தில் மாணவர்களுக்கு இலவச சத்துணவு திட்டம் கொண்டு வந்தார்.
தம் இளமைக் காலத்தில் பசிக்கொடுமை எப்படிப் பட்டது என்பதை முழுமையாக உணர்ந்து, துன்புற்ற அனுபவத்தை எப்பொழுதும் மறவாமல் நினைவில் கொண்டிருந்தார். புரட்சித்தலைவர். அவர் தமிழகத்தின் முதல் அமைச்சரானதும், பசிக்கொடுமையால் அவதியுறக் கூடாது. சாப்பிட உணவு கிடைக்கவில்லை என்பதற்காக எந்தக் குழந்தையும் பள்ளிக்கு வாராமல் இருந்துவிடக்கூடாது என்பதற்காக, இந்தியாவில் எந்த ஒரு மாநிலமும் நிறைவேற்றாத முதலமைச்சர் சத்துணவு திட்டத்தை அமல்படுத்தினார். ஆரம்பப்பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கும் 2 முதல் 14 வயதுக்குட்பட்டவர்கள் மதியம் ஒரு வேளை பள்ளிகளிலேயே சமைத்து வழங்கப்பட்டது.
அதுமட்டுமின்றி, சத்துணவுக் கூடங்களில் உணவு சமைத்து பரிமாற ஆயா வேலையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் அமர்த்தப்பட்டனர். அவர்கள் மாதம் ரூ.100 சம்பளம் பெறவும் வகை செய்யப்பட்டது. பெண்களின் வேலையில்லாத்த் திண்டாட்டமும் இதன் மூலம் ஓரளவுக்குக் குறைந்தது; குழந்தைகளின் பசியும் தீர்க்கப்பட்டது. இதற்காக ஆன செலவு ஆண்டுக்கு ரூ.200 கோடியாகும்.மக்கள் மத்தியில் இத்திட்டம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.
அரிசி விலை குறைப்பு
தமிழகத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் விளைச்சல் பாதிக்கப்படிருந்த போதிலும் தமிழ் நாட்டில் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் அரிசி விலையை ரூ.1.75 ஆகக் குறைக்க உத்தரவிட்டார். அதனுடன் மாதம் ஒன்றுக்கு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 20 கிலோ அரிசியும் வழங்க ஏற்பாடு செய்தார். ஒரு கிலோ அரிசியை இலவசமாகவும் வழங்கவும் ஏற்பாடு செய்தார்.
சென்னைக்கு குடிநீர் திட்டம்
சென்னை நகருக்கு கிருஷ்ணா நதி நீரைக் கொண்டு வந்து சென்னை நகர மக்களின் குடிநீர்த் தேவையைப்பூர்த்தி செய்யும் திட்டம் கடந்த பல ஆண்டுகளாகப் பல்வேறு அரசுகளாலும், மக்களாலும் பேசப்பட்டு வந்தது. 1983 ஆம் ஆண்டில் புரட்சித் தலைவர், ஆந்திர முதல்வர் என்.டி. ராமாராவுடன் கலந்து பேசி நனவாக்கினார். அதற்கான தொடக்க விழாவைப் பிரதமர் இந்திராகாந்தி, என்.டி.ஆர். ஆகியோரை சென்னைக்கு அழைத்து விழாவை நடத்தினார்.
இலவச காலணி, இலவச வேலை வாய்ப்பு வழங்கினார். நாட்டு மக்களுக்கு இலவச மின்சாரம், வீட்டு வசதி, திருமண நிதி உதவி, நதி நீர் திட்டம், 20 அம்சத் திட்டம், தாழ்த்தப்பட்டோர்களுக்கு உதவி, ஊனமுற்றோர்களுக்கு உதவி, தொழிலாளிகளுக்கு உதவி, அரிசி விலை குறைப்பு போன்ற திட்டங்களை நடைமுறை படுத்தினார்.
மேலும் எம்.ஜி.ஆரின் ஆட்சிகால திட்டங்களின் சாதனை பட்டியல்!
குழந்தைகளுக்கான திட்டங்கள்
1.முதலமைச்சர் குழந்தைகள் சத்துணவு பணியாற்றுவோர்- 1,98,990,
பயன்பெறும் குழந்தைகள்-62,43,662,பாலர் மற்றும் பள்ளி சத்துணவுக் கூடங்கள் 60,000.
2. இலவச சீருடை
3. இலவச பாடநூல்
4. இலவச பற்பொடி
5. இலவச காலணி
முதியோருக்கான திட்டங்கள்
1. மாத உதவித் தொகை
2. நாள்தோறும் மதிய உணவு
3. ஆண்டிற்கு இருமுறை இலவச உடை
வேலை வாய்ப்புக்கான திட்டங்கள்
1. வீட்டுக்கொருவருக்கு வேலைவாய்ப்பு
2. படித்து வேலையில்லாத இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை
3. கைவினைஞர்களுக்கான கருவிகள்
4. சுயவேலை வாய்ப்பு
மகளிருக்கான திட்டங்கள்
1. விதவை ஆதரவற்ற பெண்களுக்கு திருமண உதவி
2. தாலிக்கு தங்கம் வழங்குதல்
3. மகளிருக்கு சேவை நிலையங்கள்
4. பணிபுரியும் பெண்களுக்கு தங்கும் விடுதிகள்
5. தாய் சேய் நல இல்லங்கள்
ஏழைகளுக்கான திட்டங்கள்
1. நலிந்தோருக்கான மூன்று ஆண்டுகளில் 30 லட்சம் வீடுகள் கட்டுதல்
2. ஏழை ஏளியவர்களுக்கு இலவச மின்சாரம்
தன்னிறைவு திட்டங்கள்
1. குடியிருப்புகள் கட்டுதல்
2. குடிநீர் வசதி
3. சிறுபாசன ஆதாரங்கள்
4. இணைப்புச் சாலைகள்
5. சிறு பாலங்கள்
6. ஊரக மருந்தகங்கள்
7. ஆதி திராவிடர் மயான சாலைகள்
விவசாயிகளுக்கான திட்டங்கள்
1. சிறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்
2. இதர விவசாயிகளுக்கு குறைந்த மின் கட்டணம்
3. கடனை அடைக்கமுடியாத விவசாயிகளுக்கு கடன் தள்ளுபதி
4. பயிர் பாதுகாப்பு
5. இடுப்போருள்கள் மற்றும் விதைகள் மான்யம்
தொழிலாளர்களுக்கான திட்டங்கள்
1. விபத்து நேரிட்டால் உதவுதல்
2. ஈட்டுறுதியுடன் இணைந்த ஓய்வூதியம்
3. தொழிலாளர்களுக்கு விபத்து நிவாரணத் திட்டம்
4. மீனவர் மற்றும் நெசவாளர் வீட்டு வசதி
5. நெசவாளர், பனையேருவோர், தீப்பெட்டி தொழிலாளர் விபத்து உதவி திட்டம்
6. சேமிப்பு மற்றும் நிவாரணம்
7. கட்டிட தொழிலாளர், கிராமக்கை வினைஞர் வண்டி இழுப்போர், சுமை ஏற்றி இறக்குவோர் ஆகியோருக்கு ஆயுள் காப்புறுதி மற்றும் பணி ஓய்வு பலன் திட்டம்..........
-
1970 -2020
மக்கள் திலகம் எம்ஜிஆர்
.
பொன்விழா - மலரும் நினைவுகள் .
1969ல் வெளிவந்த நம்நாடு - திரைப்படம் 100 வது நாள் வெற்றிவிழா 1970 பிப்ரவரியில் மதுரை , சேலம் , திருச்சி நகரங்களில் கொண்டாடப்பட்டது ..மக்கள் திலகம் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார் .
1970ல் வெளிவந்த மக்கள் திலகம் திரைப்படங்கள் .
1. மாட்டுக்காரவேலன்
2. என் அண்ணன்
3. தலைவன்
4. தேடிவந்த மாப்பிள்ளை
5. எங்கள் தங்கம் .
மாட்டுக்காரவேலன் - சென்னை மற்றும் மதுரையில் வெள்ளிவிழா கொண்டாடியது .
சென்னை நகரில் 4 திரை அரங்கிலும் தொடர்ந்து 444 காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனை .
இப் படத்தின் வெள்ளிவிழா மற்றும் 100வது நாள் விழாக்கள் சென்னை மற்றும் மதுரையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது .
மக்கள் திலகம் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார் ..
என் அண்ணன்
சென்னை , மதுரை , திருச்சி , சேலம் நகரங்களில் 100 நாட்கள் ஓடியது ,
எங்கள் தங்கம்
சென்னை , மதுரை , திருச்சி 100 நாட்கள் ஓடியது
சென்னை நகரில் எங்கள் தங்கம் 100.வது நாள் வெற்றிவிழா நடந்தது .மக்கள் திலகம் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்
1969ல் வெளிவந்த அடிமைப்பெண் படத்திற்கு சிறந்த படத்திற்கான பிலிம் பேர் விருது.கிடைத்தது ,மக்கள் திலகம் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார் ..
1970ல் மக்கள் திலகம் எழுதிய சுய சரிதம் - ஆனந்தவிகடனில் '' நான் ஏன் பிறந்தேன் '' தலைப்பில் தொடர்கட்டுரை தொடங்கியது .
உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்பிற்காக ஜப்பான் மற்றும் கீழ் திசை நாடுகள் பயணம் .
டிசம்பரில் ராமன் தேடிய சீதை படத்திற்காக முதல் முறையாக காஷ்மீர் பயணம் .
மறக்க முடியாத இனிமையான நாட்கள் ................
-
1964 ஜூலை 18 ல் வெளியான வெற்றிப் படம்தான் "தெய்வத்தாய்".
சத்யா மூவிஸின் முதல் படமாக இருந்தாலும் தயாரிப்புக்கு பல்வேறு வகையில் துணையாக இருந்தவர்கள்தான் தென்காசி pkv
சங்கரன், ஆறுமுகம் மற்றும் ஜெயந்தி பிலிம்ஸ் கனகசபை செட்டியார் ஆகியோர்.
இந்த படத்திற்கு கதை வசனம் எழுதியவர் k பாலசந்தர்.
படத்தை இயக்கியவர் p மாதவன் .
இவர்கள் இருவரும் எம்ஜிஆர் படத்தின் மூலமாக உருவாகி பாலசந்தர் தனித்தன்மையுடன் தனியாகவும், p மாதவன்
சிவாஜியிடமும் ஒட்டிக் கொண்டவர்கள். சிவாஜியுடன் சேர்ந்து விட்டால் போதும் இவர்களுக்கும் எம்ஜிஆர் மீது வன்மம் உண்டாகி விடுகிறது.
இவருடைய சொந்த கம்பெனி அருண்பிரசாத் மூவிஸ் தயாரித்த "ராமன் எத்தனை ராமனடி" படத்தில் சிவாஜி ஓரங்க நாடகம் எம்ஜிஆரை
தாக்குவதற்கென்றே வைத்து சிவாஜி தனது இயலாமையை
உறுமிக்கொண்டே
புலம்புவதை பார்க்கலாம். "தெய்வத்தாயில்" எம்ஜிஆர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாறனாகவே வாழ்ந்திருப்பார்.
எம்ஜிஆருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கை பெருக்கிய படம்.
அருமையான பாடல்கள், அழகான கதாநாயகி, தெள்ளுத்தமிழ் வசனம், தெளிந்த நீரோடை இயக்கம், திட்டமிட்ட தயாரிப்பு சிறப்பான ஒளிப்பதிவு என அனைத்திலும் தனி முத்திரையை பதித்த படம்.
சென்னையில் பிளாசா, கிரவுன், புவனேஸ்வரியில் வெளியாகி மூன்றிலும் 108 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. "தெய்வத்தாயை" தொடர்ந்து "படகோட்டி" நவ 3 தீபாவளி அன்று அதே மூன்று தியேட்டர்களில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த பிளாசாவுடன் கிரவுன், புவனேஸ்வரி என்ற காம்பினேஷன்
"படகோட்டியு"டன் நின்று போனது.
"திருவிளையாடல்" படத்தில்தான் சாந்தியுடன் சேர்ந்து கொண்டது கிரவுனும் புவனேஸ்வரியும். அதன்பின்பு அந்த காம்பினேஷன் தொடர்ச்சியாக பல சிவாஜி படங்களுக்கு நீடித்தது. இதில் ஒரே ஒரு தடவை மட்டும் புவனேஸ்வரி, குளோப், கிருஷ்ணாவுடன் சேர்ந்து "குடியிருந்த கோயிலை" திரையிட்டது. "தெய்வத்தாய்"
மதுரையில் 93 நாட்களும் சேலத்தில் 93 நாட்களும் திருச்சியில் 86 நாட்களும் கோவையில் 84 நாட்களும் ஓடி வெற்றி பெற்றது.
ஈரோடு, நெல்லை, பாண்டிச்சேரி,
தஞ்சாவூர் குடந்தை ஆகிய ஊர்களில் 10 வாரங்களை கடந்து ஓடியது. மேலும் 18 ஊர்களில் 50 நாட்களை கடந்தும் ஓடியது. 1964 ல் பிளாக்பஸ்டர் வெற்றி "படகோட்டி" தான். 44 அரங்குகளில் வெளியாகி 32 அரங்குகளில் 50 நாட்களும் 15 திரையரங்குகளில் 10 வாரமும் பிளாஸாவில் மட்டும் 101 நாட்கள்
ஓடி வசூலில் மிகப் பெரிய
வெற்றியை பெற்றது.
தொடர்ந்து வந்த "எங்க வீட்டு பிள்ளை"க்காக மாபெரும் வெற்றியை "படகோட்டி" தியாகம் செய்ததென்றாலும் வசூலில் மிகப்பெரிய சாதனை செய்தது. கூட வந்த படத்தை ராத்திரி கண்விழித்து ஓட்டினாலும் 100 நாட்கள் ஓட்ட முடிந்ததே தவிர வசூலில் அவர்களால் சாதிக்க முடியவில்லை. அதிக தியேட்டரில் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்ற படம் "பணக்கார குடும்பம்." "வேட்டைக்காரன்" அதற்கு அடுத்தபடியாக வசூலை குவித்தது. "தெய்வத்தாய்" 4வதாக அந்த ஆண்டு வசூலில் வெற்றி பெற்றது..........
-
நமது புரட்சித் தலைவர் கண்ட இயக்கத்தில் சிலருக்கு புதிதாக காமராசர் மீது பாசம் பொங்கி வழிகிறது. ஒரு சிலர், காமராஜர் ஆட்சியை நமது தலைவர் வழங்கிய பொற்கால ஆட்சி போல் இருந்தது என கூக்குரலிடுகின்றனர் நல்லாட்சி தந்த நாயகன் எம்.ஜி.ஆர். அவர்களை விட காமராஜர் எந்த விதத்திலும் சிறப்பாக ஆட்சி செய்ய வில்லை என்று கீழ்கண்ட குறிப்புக்களின் மூலம் அறிந்து கொள்ளலாம். எனவே தயவு செய்து மீண்டும் அவ்வாறு ஒப்பிடாதீர்கள்.
பெருந்தலைவர் காமராசர் மதிய உணவு திட்டத்தை, மாநிலத்தின் சில பகுதிகளில் மட்டுமே அமல் படுத்தினார். அதிலும், எல்லா மாணவர்களும் பயன் பெற வில்லை. மதிய உணவு என்பது ஒரு கலவை சாதமாகவே இருந்தது. அதுவும் நல்ல அரிசியில் சமைக்கப் பட வில்லை. ஆனால், பொற்கால ஆட்சி தந்த பொன்மனச் செம்மலோ மாநிலம் முழவதும், மதிய உணவுத் திட்டத்திலிருந்து பெருமளவில் மாறுபட்டு, புதுமையான சத்துணவு திட்டத்தை அமல் படுத்தி, உலக நாடுகள் சபையால் பாராட்டப் பட்டார்.
காமராசர் ஆட்சி காலத்தில் இயற்கை வளம் மிகுந்து, மக்கள் தொகை சிறிய அளவில் இருந்தது. நல்லாட்சி தந்த நாயகன் எம்.ஜி.ஆர். ஆட்சி செய்த போது இயற்கை வளம் குன்றி, மக்கள் தொகை பெருகி இருந்தது. இருப்பினும், பொற்கால ஆட்சியை வழங்கினார் பொன்மனச் செம்மல்.
காமராசர் ஆட்சி செய்த பொழுது அவரது காங்கிரஸ் கட்சியே மத்தியில் ஆட்சி புரிந்து வந்தது. இதனால், திட்டங்களை தமிழகத்துக்கு பெறுவதில் சிக்கல் ஏதுமில்லை. ஆனால், புரட்சித் தலைவர் ஆண்ட போது மத்தியில் ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆட்சி செய்தது. தமிழக மக்களின் நல் வாழ்விற்கான திட்டங்களை போராடி போராடித் தான் பெற்றார், சமதர்ம சமுதாய காவலன் எம்.ஜி.ஆர்.
நமது இந்திய நாடு சுதந்திரம் பெற்ற பிறகு காங்கிரஸ் கட்சிதான் ஆட்சி பொறுப்பேற்றது. அப்போது, எந்த கட்சி ஆட்சி செய்திருந்தாலும், திட்டங்கள் பல தீட்டப்பட்டுதான் இருக்கும். இதில் ஒரு விந்தையும் கிடையாது. மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் உண்ண உணவு, இருக்க இடம், உடுக்க உடை போன்றவற்றைகளை ஏற்பாடு செய்து கொடுப்பது தான் ஒரு குடும்பத தலைவனின் கடமை. அது போன்றது தான் இதுவும். ஆனால், அதை மிகைப்படுத்தி கூறும் பொழுது, இந்த குடும்பத்தலைவன் பொறுப்புக்கள் தான் நினைவுக்கு வருகிறது. தன் மனைவி மக்களுக்கு உணவளித்து, இடமளித்து, உடைகள் வாங்கி கொடுத்தது பற்றி பெருமை பீற்றிக் கொள்வது ஒரு குடும்பத் தலைவனுக்கு அழகா ?
காமராசர் ஆட்சி செய்த காலத்தில், குறைந்த அளவில் மக்கள் தொகை இருந்த காரணத்தால், மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யும் அளவுக்கு அரசு ஓரளவு செயல்பட்டது. ஆனால், நம் எழில் வேந்தன் எம்.ஜி.ஆர். அவர்கள் ஆட்சிக் காலத்தில், குடிநீர் தட்டுப்பாடு மிகுந்து காணப்பட்டதன் காரணத்தால், கிருஷ்ணா நதி நீர் திட்டம் தீட்டப்பட்டு, அதன் மூலம் தலைநகர் வாழ் மக்களுக்கு குடிநீர் எளிதாக கிடைக்க வழி காணப் பட்டது. அரசு கஜானாவை தீயசக்தியும் காலி செய்தது வரலாற்று உண்மை. அண்டை மாநில அரசுகளுடன் கொண்டிருந்த நல்லுறவு காரணமாக காவிரி நீர் தமிழகத்துக்கு தங்கு தடையின்றி கிடைத்தது. இதன் மூலம் டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரும் பயனடைந்தனர். (அப்போது, மத்தியில் ஆண்ட காங்கிரஸ் கட்சியே கர்நாடகாவிலும், தமிழகத்திலும் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. காவிரி நீர் பிரச்சினைக்கு அப்போதே தீர்வு கண்டிருக்கலாம் என்பது வேறு விஷயம். அது போன்றே முல்லைப் பெரியாறு ஒரு பூதாகரமான பிரச்சினையாகி உள்ளது. - இப்போது காவிரி நீர் பிரச்சினையும், முல்லைப் பெரியாறு பிரச்சினையும் ஒரு தொடர்கதையாகி வருகிறது).
நமது மக்கள் திலகம் ஆட்சியில்தான், மேட்டூரிலிருந்து ஈரோடு வரை 4 தடுப்பணைகள் கட்டப்பட்டு, விவசாய பாசன வசதிகள் பெருகின.
அது மட்டுமல்லாமல், வால்பாறை அருகே காடம்பாறை நீரேற்று மின் நிலைம் உருவாகி மின்சக்தி உற்பத்தி செய்யப்பட்டது.
இந்த திட்டங்கள் எல்லாம் காங்கிரஸ் கட்சியின் காமராஜர் ஆட்சி புரிந்த பொழுது ஏன் செயல்படுத்தப் பட வில்லை. அது பற்றி ஏன் யோசிக்க வில்லை என்பதே நம் கேள்வி ?
தேவிகுளம், பீர்மேடு பகுதிகளில் பெரும்பான்மையாக வசிக்கும் தமிழர்கள் ஏன் உரிமை கொண்டாட வில்லை. அந்த பகுதிகளை கேரளாவுக்கு தாரை வார்த்து கொடுத்ததே இந்த காமராஜரின் காங்கிரஸ் ஆட்சியில் தான்.
பள்ளிக் கல்வியை மட்டுமே பிரதானமாக கொண்டு கல்விச் சாலைகள் பல காமராசர் காலத்தில் திறக்கப் பட்டாலும், உயர் கல்வி (பொறியியல், மருத்துவம் மற்றும் தொழில் சார்ந்த கல்வி) நிறுவனங்கள். மன்னாதி மன்னன் மக்கள் திலகம் ஆட்சியில் பல தொடங்கப்பட்டு, ஆண்டுதோறும் இன்று தமிழ் நாட்டில் இலட்சக் கணக்கான, கோடிக்கணக்கான பட்டதாரிகள் உருவாக காரணகர்த்தாவாக விளங்கியவர் சத்துணவு தந்த சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர்.
நம் இதய தெய்வத்தின் இதயக்கனி எம்.ஜி.ஆர். அவர்கள் 1963ல் காமராசர் அவர்களை என் தலைவர் என்றும், பேரறிஞர் அண்ணா அவர்களை என் வழிகாட்டி என்றும் , தி.மு.க.வில் இருந்த போதே தைரியமாக அன்புடன் கூறினார். ஆனால், பெருந்தலைவரோ, 1964ல் நடந்த சென்னை மாநகராட்சி தேர்தலில், "வேட்டைக்காரன்" வருகிறான், அவனிடம் ஏமாந்து விடாதீர்கள் என்று வெறுப்புடன் கூறினார்.
சொந்த விருதுநகர் தொகுதியிலேயே மக்களால் நிராகரிக்கப் பட்டார் காமராசர். தமிழகத்தின் எந்த தொகுதியில் நின்றாலும், வெற்றியே கண்டு, தமிழகத்தின் தொடர் முதல்வராக விளங்கி பெருமையை பெற்றார். நிருத்திய சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். இந்த 1967 சட்டமன்ற தேர்தலுக்கு முன்புதான் தமிழ் நாட்டில், காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்த போது, கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது, எலிக்கறி சாப்பிடச் சொனனதுதான் இந்த காங்கிரஸ் அரசாங்கம். இதனாலே காமராசர் தோற்ற சம்பவமும் அரங்கேறியது.
நம் எழில் வேந்தன் எம்.ஜி.ஆர். அவர்கள் கட்சி ஆரம்பித்த புதிதில், காமராஜரிடம் நிருபர்கள் கருத்து கேட்ட போது, ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்று காழ்ப்புணர்ச்சி கொண்டு கூறியது நாகரீகமானதா ?
தேசிய அளவில் எலியும் பூனையுமாக இருந்த இந்திரா காந்தியும், காமராஜரும், தங்கள் கொள்கைகளை கைவிட்டு, பொன்மனச் செம்மலின் வளர்ந்து வரும் செல்வாக்கை தாங்க முடியாமல், 1974 ஆம் ஆண்டு பாண்டிச்சேரி சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைத்தார்கள். இதை விட வெட்கக்கேடான செயல் இருக்குமா ?
காமராஜார் ஆட்சி சிறப்பானது என்று சொன்னால், நடிகர் சிவாஜி கணேசன் காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரம் செய்ததையும் அவர் ஆதரித்த விதத்தையும் ஏற்றுக் கொண்டதாகத்தான் பொருள் படும். எனவே இப்பதிவின் மூலம் கேட்டுக் கொள்வது என்னவென்றால், இன்னொரு முறை காமராஜர் பெருமைகளை பற்றி பேசாதீர்கள். அது காங்கிரஸ் கட்சிக்காரன் பேசட்டும். நம் தலைவர் ஆரம்பித்த இயக்கத்தில் இருந்து கொண்டு, காமராஜரை புகழ்வது என்பது ஏற்புடையது அல்ல !
இவ்வாறு பல ஒப்பீடுகள் செய்யப்படும் போது, என் கண்களுக்கு தமிழகத்தில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கி, பொற்காலத்தை வழங்கியவர் புரட்சித் தலைவர் ஒருவரே என்றுதான் புலப்படுகிறது.
இறுதியாக ஒன்று .... என் தங்கத் தலைவர் எம்.ஜி.ஆர். ஜாதி, இனம், மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு, அனைத்து தரப்பினராலும் எங்கள் வீட்டு பிள்ளை என ஏற்றுக் கொள்ளப் பட்டவர்.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி.ஆர். புகழ் !
என்றென்றும் என் தங்கத் தலைவன் எம்.ஜி.ஆர். புகழ் மட்டுமே பாடும்,
தங்கள் உண்மையுள்ள ..... சௌ. செ...........