-
இருநூறாவது அன்னதான நிகழ்ச்சி....
குரூப்ஸ் ஆஃப் கர்ணன் நடத்திவரும் தொடர் அன்னதானத்தின் 200-வது அன்னதான நிகழ்ச்சி அன்னை இல்லம் பிள்ளையார் கோயிலில் இன்று மாலை வாணவேடிக்கையுடன் ஒளிதீபம் ஏற்றி விமர்சையாக நடந்தேறியது. வருகை புரிந்த பொதுமக்களுக்கு சிற்றுண்டி மற்றும் இனிப்பு காரங்களோடு ஒரு சிலருக்கு புடவைகளும் வழங்கப்பட்டது.
எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல் நடிகர்திலகத்தின் திருப்பெயரால் நடைபெற்று வரும் இந்த தொடர் அன்னதானம் சிறப்புற நடந்தேற உதவிய சிகர மன்றத்தின் நல்ல உள்ளங்களுக்கும், பங்களிப்புச் செய்த ரசிக புரவலர்களுக்கும் எங்கள் சிரம் தாழ்ந்த நன்றி.
மூன்றாமாண்டு பயணத்தில் வெற்றி நடைபோடும் இந்நிகழ்ச்சி மேலும் சிறப்படைய தங்களின் மேலான நல்லாதரவை விரும்பும்....
குறூப்ஸ் ஆப் கர்ணன்
https://scontent-ort2-1.xx.fbcdn.net...a9&oe=5FD358E7
Thanks Nilaa
-
-
பெம்பிடு கொடுகு (தெலுங்கு) 13/11/1953
https://scontent.fybz2-1.fna.fbcdn.n...94&oe=5FD54ADF
Thanks Vcg Thiruppathi
-
-
-
-
மய்யம் இணைய உறவுகள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
https://scontent.fybz2-2.fna.fbcdn.n...0b&oe=5FD5A8D6
-
-
பரீட்ச்சைக்கு நேரமாச்சு 14/11/1982
https://scontent.fybz2-2.fna.fbcdn.n...e0&oe=5FD6BA8A
Thanks Vcg Thiruppathi
-
https://scontent.fybz2-1.fna.fbcdn.n...14&oe=5FD3D482
சிவாஜிக்கு அரசியல் தெரியாது ...எடப்பாடி சொன்னது உண்மைதான் ..
--------------------------------------------------------------------------------------------------------------
அரசியலை குறித்து தெளிவான ஞான அறிவு பெற்றவர் அய்யா எடப்பாடி அவர்கள் .அவர் வாயில் இருந்து முத்துக்கள் விழுகின்றது என்றால் அதில் உண்மை இருக்கத்தான் செய்யும் .சிவாஜி ரசிகர்களுக்கு ஏன்தான் கொதிப்பு வருகிறது என்று விளங்கவில்லை .
தன்மானம் தொலைத்து காலை வருடி அரசியல் பதவியில்உயர வாய்ப்புகள் பல இருந்தும் எடப்பாடி போல அதனை செய்யாமல் வாழ்ந்த சிவாஜி .அரசியல்வாதியா?எடப்பாடி சொல்லுவது உண்மைதானே ?
நம்பியவர்கள் கழுத்தை அறுக்காமல் நட்புக்கும் உயர்ந்த இடம் கொடுத்தது ,நண்பனுக்காக தான் வாழ்வை அழித்த சிவாஜியின் அரசியல் ,இன்றைய பீடை அரசியலுக்கு உகந்தது அல்ல என்பதை எடப்பாடி ஒத்து கொண்டு உள்ளார் ..நன்றி தான் எடப்பாடிக்கு சொல்ல வேண்டும் ..
சிவாஜி மன்றத்தில் உறுப்பினராக அரசியல் வாழ்க்கையை தொடங்கிய எடப்பாடி கொஞ்சம் சிவாஜியின் படைகளை குறித்து தெரிந்து வைத்து இருந்திருப்பார் என்று இதுவரை நம்பிக் கொண்டு இருந்தேன் ..ஆனால் காற்றில் பறந்த சருகுயென ஆட்சியில் ஏறிய மயக்கம் எடப்பாடியை மயக்கத்தில் வீழ்த்திவிட்டது ..
தமிழக அரசியல் காலத்தை பதிவு செய்தால் சிவாஜி இன்றி பதிவு செய்யமுடியாது .திராவிட இயக்கம் என்று மார்பு தட்டும் நீங்கள் இன்று அடையாளமாக இருக்க ஆணிவேராக இருந்தவர் சிவாஜி .
திராவிட முன்னேற்ற கழகத்தை அண்ணா ஆரம்பித்த போது,கருணாநிதியுடன் வீதிவீதியாக சென்று கட்சியை வளர்க்க நிதி
சேர்த்துக் கொடுத்தவர் சிவாஜி .இதனை திராவிட வரலாற்றை குறித்து கருணாநிதி எழுதிய நெஞ்சுக்கு நீதி நூலில் காணலாம் .
1953 ஆண்டு திருவாரூரில் நடைபெற்ற தி மு க மாவட்ட மாநாட்டில் அண்ணா .கருணாநிதி .எம் ஜி.ஆர் .ஆகியோர் மேடையில் இருந்த போதும் ,திமுக தொண்டர்கள் சிவாஜியை பேச சொல்லுங்கள் என்று கத்தி சிவாஜிக்கு திமுக தொண்டர்கள் மத்தியில் இருந்த ஆதரவை பகிரங்கபடுத்தினார்கள் .அண்ணா தொண்டர்களின் உணர்வை மதித்து சிவாஜி முதலில் பேச சொன்னார் .சிவாஜி பேசிமுடிந்ததும் கூட்டம் கலைந்துப் போனது .அன்று கூடிய கூட்டம் சிவாஜிக்காக கூடியது என்று திராவிட தலைவர்கள் புரிந்துக் கொண்டார்கள் .விவரம் வேண்டும் என்றால் பி.சி.கணேசன் எழுதிய திரும்பி பார்க்கிறேன் என்ற நூலை புரட்டி பாருங்கள் .
தமிழக அரசியல் களத்தில் நடிகன் ஒருவருக்கு முதன் முதலில் அரசியல் கட்சி போல மன்றத்தினர் தனிக்கொடி அமைத்தது சிவாஜிக்குத்தான் .திராவிட இயக்கத்தில் சிவாஜி இருந்த போது மன்றம் என்ற அமைப்பு ஒருங்கிணைப்பை காணவில்லை .ஆனாலும் காசினோ திரையரங்கில் சிவாஜி படம் ஓன்று வெளியானபோது ,சிவாஜியின் படத்தை வெள்ளை துணியில் வரைந்து கொடியாக்கி பறக்கவிட்டு இருந்தனர் .இந்த செயல் திமுகவில் சிவாஜிக்கு எதிரானவர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியது என்பது தனிக்கதை .எடப்பாடிக்கு இது தெரியுமா என்பது தெரியாது ?
தேசிய நீரோட்டத்தில் சிவாஜி தன்னை இணைக்கும் சூழல் வந்த போதும் ,அண்ணாவின் அன்பை மறக்கவில்லை .அண்ணாவை தான் உயிராக நேசித்தார் .அண்ணாவை கடைசி வரை பூஜித்தார் .அண்ணாவின் இதயக்கனிகள் என்றவர்கள் பின்னாளில் அண்ணாவுக்கு என்ன செய்தார்கள் என்பதை மருத்துவர் மில்லரிடம் கேட்டு எடப்பாடி தெரிந்து வைத்து இருக்கலாம் .
காமராஜர் என்ற பச்சை தமிழர் ஆட்சியில் இருந்த போது ,ஆட்சியை விட்டு வெளியேறியபோது ,ஒரு மனிதன் மட்டும் காமராஜர் என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு இருந்தான் .பதவிக்காகவோ , பணத்திற்காகவோ அல்ல ,விசுவாசத்திற்காக ..அந்த மனிதன் சிவாஜி .எடப்பாடி கொஞ்சம் தன் அரசியல் வாழ்வை பின்னோக்கி பார்க்கவேண்டும் .
அரசியல் வியாதிகளே ..1982 ஆம் ஆண்டு குமுதம் பத்திரிகை ஒரு கருத்து கணிப்பை வெளியிட்டது .யாருக்கு மக்கள் செல்வாக்கு அதிகம் என்று சிவாஜிதான் 52 சதவீதம் பெற்று முன்னிலையில் இருந்தார் .உங்க எம்ஜிஆர் கூட சிவாஜிக்கு பின்னிலையில் தான் இருந்தார் .
1977 ஆம் ஆண்டு எம் .ஜி.ஆர்.கட்சி ஆரம்பித்து தேர்தலில் வென்ற வாக்கு சதவீதம் என்ன ?தமிழகத்தில் மிகவும் குறித்த வாக்கு சதவீதத்தில் வென்ற கட்சி என்ற பெயர்தானே கிடைத்தது .சிவாஜியின் அரசியலை குறித்து பேச சாக்கடைக்கு தகுதி இல்லை எனபதுதான் உண்மை .எடப்பாடி அண்ணன் புரிந்தால் நல்லது ...இல்லைஎனில் விவாதிக்க நாங்களும் தயார்...
.இன்பா
(மீள்பதிவு)
நன்றி சேகர்
-
கக்கனுக்கு சிவாஜி செய்த உதவிகள் பற்றி தெரியுமா ? TR
https://youtu.be/MJjAs36bAGk
.................................................. ......
பின்னூட்டம்
ஸ்ரீபெரும்புத்தூரில் இருந்து சுங்குவார் சத்திரம் போகும் வாய்ப்பு கிடைத்தால் இரண்டு ஊர்களுக்கும் இடையில் உள்ள நசர த்பேட்டை என்ற ஊரில் உள்ள அரசாங்க நடுநிலை பள்ளியில் உள்ள வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் சுற்று சுவர்களு க்கும் நடிகர் திலகத்தின் நன்கொடையால் கட்டப்பட்டவை என்று கட்டிடத்தின் மேல் பொறிக்கபட்டு இருக்கும்.இது நாம் வாகனத்தில் இருந்து பிரயாணம் செய்யும் இடது பக்கம் பார்த்தாலே தெரியும்.(S N D )
.................................................
ஸ்ரீபெரும்புத்தூரில் இருந்து சுங்குவார் சத்திரம் போகும் வாய்ப்பு கிடைத்தால் இரண்டு ஊர்களுக்கும் இடையில் உள்ள நசர த்பேட்டை என்ற ஊரில் உள்ள அரசாங்க நடுநிலை பள்ளியில் உள்ள வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் சுற்று சுவர்களு க்கும் நடிகர் திலகத்தின் நன்கொடையால் கட்டப்பட்டவை என்று கட்டிடத்தின் மேல் பொறிக்கபட்டு இருக்கும்.இது நாம் வாகனத்தில் இருந்து பிரயாணம் செய்யும் இடது பக்கம் பார்த்தாலே தெரியும்.(I G )
-
1971 ஆண்டில் வெளிவந்த செய்தி என நினைக்கிறேன்,
எம்ஜிஆர் க்கு கண்டனம் தெரிவித்த ஜெயலலிதா ரசிகர்கள் மன்றத்தினர்,.
இன்றைய எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ் ஆகியோர் எல்லாம் ஜெயலலிதா ரசிகர்கள் மன்ற உறுப்பினர்களாக இருந்திருப்பார்களோ?
அதனால் தானே இது அம்மா ஆட்சி என சொல்லி வருகிறார்கள்,
https://scontent.fybz2-2.fna.fbcdn.n...5a&oe=5FD72B29
Thanks Sekar.P
-
நாளை 15-11-2020 மெகா டிவியில் பகல் 12 மணிக்கு "தங்கச் சுரங்கம்" ஒளி பரப்பாகிறது,
தங்கச் சுரங்கம் வசூலிலும் தங்கச் சுரங்கம் என நிரூபித்துக் காட்டியது,
வெளியான முதல் 25 நாட்களிலேயே 23 லட்சங்களை குவித்து பிரமிக்க வைத்தது,
கிடைத்த ஆவணங்கள் படி
சென்னை, கோவை,நீலகிரி,மதுரை, ராமநாதபுரம்,திருச்சி, தஞ்சை,சேலம் மற்றும் பெங்களூர் ஆகிய விநியோக மாவட்டங்களில் மட்டுமே
ரூபாய் 15,03,625-55 வசூலையும்
வேலூர், திருவண்ணாமலை, நெல்லை, விருதுநகர், நாகர்கோயில், தூத்துக்குடி, விழுப்புரம், கடலூர், பாண்டி, காரைக்கால், காஞ்சிபுரம், தாம்பரம் ஆகிய செண்டர்களில் 25 நாட்கள் வரை வசூலித்த ஒட்டுமொத்த தொகை ரூ 8,12,355-75 ஆகும்
ஒட்டுமொத்தமாக முதல் 25 நாளில் மட்டுமே ரூ 23,15,981.30 வசூலித்து மாற்றுக் கூடாரத்தை யோசிக்க விட்டது,
https://scontent.fymy1-1.fna.fbcdn.n...3e&oe=5FD4A7BA
Thanks Sekar .P
-
Thanks to Mr Neyveli Vasudevan
தீபாவளி சிறப்புப் பதிவு (புதிய பதிவு)
************************************
அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
.
அஞ்சலிதேவி 'பக்த துக்காராம்' படத்தை தெலுங்கில் எடுத்தார். அதில் 'வீர சிவாஜி' ரோலுக்கு தலைவரை புக் செய்திருந்தார். (வேறு யாரை தேர்வு செய்ய முடியும்!) ஆரம்பகாலங்களில் தனக்கு பூங்கோதை, பரதேசி படங்களில் அஞ்சலியம்மா வாய்ப்பு கொடுத்ததை நன்றியுடன், கடுகளவும் மறக்காத தலைவர் அஞ்சலிதேவியான தனது பாஸிற்கு ('முதலாளியம்மா') 'வீர சிவாஜி' பாத்திரத்தை இலவசமாக நடித்துக் கொடுத்தார்.
1973-ன் காலகட்டங்களில் தலைவர் செம பிஸி. (அவர் எப்பதான் பிஸி இல்லை!) தமிழ்த் திரையுலகின் வியாபாரத்தில் மூன்றில் இரண்டு பங்கு தலைவரை மட்டுமே நம்பி இயங்கி வந்தது. இது பொய்யோ புரட்டோ அல்ல...அப்படிப் புளுக அதற்கெல்லாம் தனித்திறமை வேணும். அப்படிப்பட்ட கேவலமான திறமை சிவாஜி ரசிகனுக்கு என்றும் வேண்டாம். வரவும் வராது. சந்தேகம் உள்ளவர்கள் தமிழ்வாணன் எழுதிய 'நடிகர் திலகம் சிவாஜி கணேசன்' என்னும் நூலைப் படித்து தெளிவடையலாம்.
இடைவிடாத ஷூட்டிங். ஒய்வு ஒழிச்சலில்லாத பணி. தொட்டதெல்லாம் இன்னும் துலங்கிய நேரம். அத்தனை படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட். கேமரா ஒருநாளில் இரண்டு மணி நேரம் மட்டுமே அவர் மேல் வெளிச்சத்தை உமிழாமல் இருந்தது. சரியான தூக்கம் இல்லை. உணவு இல்லை. ஆனால் நடிப்பில் பிரமாண்டம் வளர்ந்து கொண்டேதான் இருந்தது. படங்களின் வசூல் எதிரிகளின் வயிற்றில் வழக்கத்தைவிட அதிகமாக புளியைக் கரைத்தன என்பதுதான் நிதர்சனமான உண்மை.
அப்படிப்பட்ட நிலையில் 'பக்த துக்காராம்' படத்தில் 'வீர சிவாஜி' பங்கு கொள்ளும் குதிரைகள் சம்மந்தப்பட்ட சண்டைக்காட்சி ஒன்று மட்டுமே படமாக்கப்பட வேண்டி இருந்தது. மற்ற எல்லாக் காட்சிகளும் எடுத்து முடிக்கப்பட்டுவிட்டன
நடிகர் திலகம் அப்போது ஹைதராபாத்தில் ஷூட்டிங்கில் இருந்தார். சென்னை கிண்டியில் நிறைய குதிரைகள்...நூற்றுக்கும் மேற்பட்ட ஜுனியர் ஆர்டிஸ்ட்ஸ், குதிரை ஸ்டன்ட் வீரர்கள். எல்லோரும் அடுத்த நாள் ஷூட்டிங்கிற்கு ரெடி. ஹைதராபாத்தில் இருந்த தலைவர் அஞ்சலிதேவியிடன் போனில் "கரெக்டாக ஷூட்டிங் தொடங்குங்கள்... நான் காலை ஏழு மணிக்கெல்லாம் சென்னை கிண்டி மைதானத்திற்கு நேராக வந்து விடுவேன்" என்று தகவல் அளித்து விட்டார் .
சொன்னது போலவே அடுத்த நாள் ஹைதராபாத்திலிருந்து விமானத்தில் சென்னை வந்து நேராக 'அன்னை இல்லம்' கூட செல்லாமல் கிண்டியில் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கே தலைவர் வந்து விட்டார். வீர சிவாஜியாக மைதானத்திற்குள் மேக்-அப் போட்டு குதிரையில் அமர்ந்தவர் அப்படியே மயக்கம் போட்டு தரையில் விழுந்து விட்டார். (இடைவிடாது படப்பிடிப்புகளில் கலந்து கொண்டதால் நேர்ந்த சோகம்) அங்கிருந்த அஞ்சலிதேவி அதிர்ச்சியில் அலறியே விட்டார். மொத்த யூனிட்டும் அலறியது.
பின் முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிந்தவுடன் அஞ்சலி தேவியிடம்,
'பயப்படாதே... எனக்கு ஒன்றும் இல்லை... ஷூட்டிங் தொடங்கலாமா?' என்று அஞ்சலிதேவியிடம் சொல்லி சர்வ சாதாரணமாய் ஒரு சிங்கம் போல ஷூட்டிங்கிற்குத் தயாராகிவிட்டார் தலைவர்.
ஆனால் அஞ்சலி தேவி பயத்தில் இருந்து மீளாமல் 'இன்றைக்கு ஷூட்டிங் கேன்சல்' என்று குரல்தர, உடனே தலைவர்,
'அதெல்லாம் கேன்சல் கிடையாது'
என்று அதட்டலாகக் குரல் கொடுத்தார். அதுமட்டுமல்ல... காலை எட்டு மணியிலிருந்து மாலை மூன்று மணிவரை அந்த குதிரை சண்டைக் காட்சியில் அற்புதமாக நடித்த்துக் கொடுத்து விட்டார்.
நாமே எத்தனை தடவை அந்த வீர சிவாஜியின் குதிரை சண்டைக் காட்சிகளை ரசித்து இங்கே பதிந்திருக்கிறோம். அப்படி பார்க்கும் நமது தலைவர் மயக்கம் அடைந்த நிலையில் எழுந்து பின் நடித்துக் கொடுத்த காட்சிதான் அது. நம்மால் நம்ப முடிகிறதா? குதிரையில் அவ்வளவு உடல் சுகவீனமான போதும் கம்பீரமாக வீர சிவாஜியாகவே உருமாறி, கம்பீரம் காட்டி, வாள் வீசி, அந்தக் காட்சியை இன்றளவும் நம்மை சிலாகித்து ரசித்து பாராட்டும்படி செய்த அந்த மகானை என்னவென்று புகழ்வது!
அது மட்டுமா! அந்த தனது ஒருநாள் ஷூட்டிங் கேன்சல் ஆனால் அஞ்சலிதேவிக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்படும் அது கூடாது என்ற நல்மனது... பெருந்தன்மை... ஆரம்ப காலத்தில் தனக்கு ஆதரவளித்த அஞ்சலிதேவிக்கு செய்து தீர்த்த நன்றிக்கடன்...தொழில் பக்தி..தொழிலில் நேர்மை, உண்மை, சிரத்தை, அர்ப்பணிப்பு என்று அந்த மேதையின் நற்குணங்கள்தான் எத்தனை எத்தனை!...
ஷூட்டிங் முடிந்தவுடன் நேராக அஞ்சலியிடம் வந்து,
'அஞ்சலியம்மா... இன்னைக்கு ஒருநாள்தான் என் கால்ஷீட் பிரீ ஆ இருக்கு...நான் நடிச்சிக் கொடுத்துட்டா உங்களுக்கு ஒரு வேலை முடியும் ..படத்தை நீங்க சீக்கிரம் ரிலீஸ் பண்ணிடலாம்..அதுக்காகத்தான் கேன்சல் செய்யாதீங்க என்று சொன்னேன்'
என்று தலைவர் சொன்னாராம்.
'அதுதாங்க நடிகர் திலகம்' என்று அஞ்சலி அம்மா வியக்கிறார்.
தன்னால் படத் தயாரிப்பாளர்களுக்கு எவ்வித சங்கடமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று தன் உடல்நிலையையும் பொருட்படுத்தாது நடித்துக் கொடுத்த உத்தமன்...மற்றவர் போல் அடுத்துக் கெடுத்தவர் இல்லை நம் தலைவர்.
Thanks Vasudevan Srirangarajan
-
அன்னை இல்லம் 15/11/1963 57 வருடங்கள் நிறைவு
https://scontent-ort2-1.xx.fbcdn.net...3b&oe=5FD669C8
Thanks Vcg Thiruppathi
-
அன்னை இல்லம் 15/11/1963 57 வருடங்கள் நிறைவு.
1964 அக்டோபர் கடைசிவாரத்தில் இலங்கையில் திரையிடப்பட்ட
அன்னை இல்லம் 50 நாட்களுக்குமேல் ஓடி சாதனை செய்தது.
https://scontent-ort2-1.xx.fbcdn.net...4a&oe=5FD65961
-
லட்சுமி கல்யாணம் 15/11/1968....52 வருடங்கள் நிறைவு.
1/09/1969 ஆம் ஆண்டு இலங்கையில் திரையிடப்பட்டது
லட்சுமி கல்யாணம்.
கொமும்பு.ஜெஸிமா அரங்கில் ..81 நாட்கள்.
யாழ்நகர்..ராணி அரங்கில்..48 நாட்கள்
https://scontent-ort2-1.xx.fbcdn.net...c4&oe=5FD72C62
-
டைரக்டர் ஸ்ரீதர் வைரநெஞ்சம் படம் படப்பிடிப்பு நடந்தது கொண்டிருந்தபோதே உரிமைக்குரல் படத்தின் கதையின் கருவை ஐயன் சிவாஜி அவர்களிடம் சொல்லி அதற்கும் ஓ.கே வாங்கி வைத்திருந்தார்கள். வைரநெஞ்சத்தின் போது இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் ஸ்ரீதர் அவர்கள் வெளியேற நேரிட்டது.
வைரநெஞ்சம் வெளி இடப்பட்டது. அன்று டாக்டர் சிவா திரைப்படமும் வெளியாகியது. பிறகு அய்யனிடம் செல்லாத ஸ்ரீதர் அவர்கள் வருடங்கள் தாண்டி அந்த கதையை எம்.ஜி.ஆர் அவர்களுக்காக மாற்றி அமைத்து படத்தின் பெயரையும் உரிமைக்குரல் என்று மாற்றி தயாரித்தார்கள்.
பிறகு எம்ஜிஆரை நடிக்க வைத்த படம் மீனவ நண்பன். இதற்கு மீனும் கிடைக்கவில்லை, நண்பனின் வரமும் கிடைக்க
வில்லை. அன்றுதான் ஸ்ரீதர் அவர்களுக்கு சனி திசை தொடங்கியது. துக்கம், கடன்,மனவேதனை. மீண்டும் அய்யனிடம் ஸ்ரீதர் வந்தார்கள். அப்போதுதான் மோகன புன்னகை( சிவாஜி அய்யன், ஜெயபாரதி கேரள) தயாரிப்பதற்க்கான பேச்சு வார்த்தை நடந்தது . அய்யன் இந்த படத்திற்கு பணம் ஏதும் வாங்காமல் இனாமாக நடித்து கொடுத்தார்கள்.
ஐயனின் சிவந்த மண்ணும் , எம்.ஜி.ஆர் அவர்களின் நம்நாடும் ஒரே நாளில் வெளிவந்தது. நம்நாடு இப்போதைய தமிழ்நாடுபோலவே ஆகிவிட்டது. சிவந்த மண் முதலாவதாக வெளிநாட்டில் எடுத்த படம் என்பதாலும், இனிய பாடல்கள் என்பதாலும் வெற்றி படமாக அமைந்தது. சிவந்த மண் திரைப்படத்திற்கு முதல் இருவாரம் நுழைவு சீட்டு கிடைப்பதற்கே அரும்பாடாக இருந்தது. எம்ஜிஆர் ரசிகர்களே, சிவந்த மண் பார்ப்பதற்கு நம்மவர்களிடம் நுழைவு சீட்டு கேட்ட தாமசுகள் நடந்தது.
இனத்துரோகி திரு.சுந்தரராஜன் (நடிகர்) அவர்களுக்கு பண பிரச்னை வந்தபோது, அவர் ஐயனின் காலில் விழ முத்துக்கள் மூன்று (அய்யன் சிவாஜி, சத்யராஜ், பாண்டியராஜன் ) என்ற படம் நடித்து அவரின் பிரச்சனையை முடித்து வைத்தர்கள் அய்யன்.
எம்ஜிஆர் அவர்களின் படம், வருடத்திற்கு 2 அல்லது 3 படங்கள் மட்டுமே வெளி வரும். பிறகு அது சுருங்கி வருடத்திற்கு ஒரு படம் என்றானது. உண்மையிலே எம்ஜிஆர் வசூல் சக்கரவர்த்தி என்றால் அவர் ஏன் வருடத்திற்கு ஒரு படம் என்று சுருங்கினார். எங்கள் ஐயனை போல் வருடத்திற்கு 6 முதல் 11 படம் வரை நடித்திருக்கலாமே ? அனைத்தும் வெற்றியே. உரிமைக்குரலுடன் வெளியான சிரித்து வாழவேண்டும் என்ற படம் அழுதுகொண்டே ஓடியதே.
அய்யனை வைத்து படம் எடுத்தவர்கள் நட்டம் அடைந்தியிருந்தால் பெரிய, பெரிய தயாரிப்பாளர்கள் ஏன் அய்யனிடம் திரு அண்ணாமலை மூலம் காத்து கிடக்க வேண்டும்? இதே தயாரிப்பாளர்கள் எம்ஜிஆர் ரிடம் ஏன் தங்கள் படத்தில் நடிக வாருங்கள் என்று கேட்கவில்லை? சில நன்றி கெட்ட நாய்கள் அய்யனிடமிருந்து விலகி எம்ஜிஆரிடம் சென்றார்கள். பிறகு அவரை விட்டு ஓடியதும், இவுலகை விட்டு போனதும் அனைவரும் அறிவர். சிவந்த மண் சினிமா வெற்றியை தொடர்ந்தே தென்னிந்தியர்கள் வெளி நாடு சென்று படம் எடுக்க தொடங்கினார்கள் என்பதே மறுக்க முடியாத உண்மை.
ஸ்ரீதர் அவர்களுக்கு பணம் நட்டம் ஏற்படுத்தியது ஹிந்தியில் எடுத்த (தர்த்தி)சிவந்த மண். என்பதே உண்மை. அய்யன் அவர்கள், தன்னால் நட்டம் என்று தெரிந்தால் இனமாக நடித்து கொடுப்பதும், தேடி வருபவர்களுக்கு அவர்கள் குறைகள் தீர்க்க நடித்து கொடுப்பதும் தமிழ் திரை உலகம் தெரிந்த விஷயமே .அய்யன் திரையில் மட்டுமே கர்ணனாக நடிக்கவில்லை. வாழ்க்கையிலும் கர்ணனாகவே வாழ்ந்தார் என்பதை அவரிடம் பழகியவர்களுக்கு நன்கு தெறியும்.
அய்யன் சிவாஜியை வைத்து படம் எடுப்பதற்கு ஒரு சிண்டிகேட் அமைக்கப்பட்டது. பாலாஜி, ஸ்ரீதர் ஏ.வி.எம் , பீம்சிங், ஏ .பி நாகராஜன். இவர்களே நடிகர்திலகத்தின் தேதிகளுக்கு சொந்தக்காரர்கள். இது போன்ற ஆயிரமாயிரம் சரித்திரங்கள் எங்கள் ஐயனுக்கு உண்டு என்பதை விசிலடிக்கும் கூட்டங்களும், சுவரில் பசை ஒட்டிய நாய்களுக்கும் எப்படி தெரிய முடியும். சந்திரனை பார்த்து நாயும் குறைக்குமாம். அதே சந்திரனை பார்த்து மலர்களும் சிரித்து மலருமாம். எங்கள் அய்யன் சந்திரன். குறைப்பவர்கள் நாயாகட்டும். சிரிக்கும் மலர்களோ நாமாகட்டும் .
ஐயனே, சரித்திரமும் நீயே, சாதனையும் நீயே, வெற்றிகளும் நீயே, வெற்றி நாயகனும் நீயே. நடிகனும் நீயே, நடிக மன்னனும் நீயே. தூற்றுவார் தூற்றட்டும். போற்றுவோர் போற்றட்டும். என்றும் வசூல் சக்ரவர்த்தி நீயே. உன்னை வெல்ல ஐயனே, உன்னால் மட்டுமே முடியும் .வாழ்க அய்யன் புகழ்.
Thanks Selvaraj.f
.................................................. .........................பின்னூட்டம்
)]ஸ்ரீதர்-"சரியான நேரத்தில் டோப்பா என்னை கைதூக்கிவிட்டார் தொடர்ந்து அவரை வைத்து உரிமைக் குரல் போன்ற வெற்றிப்படங்களைத் தயாரிப்பேன்" இப்படி உரிமைக் குரல் படத்தின் வெற்றி விழாவில் பேசியவர் மீனவ நண்பனை எடுத்தார் அதோடு அவர் தொடர்ந்து என்கிற வார்த்தை டோப்பாவை வைத்துக்கு பொருந்தாமல் போனதும் இரண்டு வருடங்கள் முடிந்து இளமையை ஊஞ்சலாட வைத்தார் ஏ சென்டர்களில் வெற்றி பி சி செனடர்களில் 50 நாட்கள் ஓடியது பிறகு இளமையைத் தொடர்ந்து எடுத்தாரு பாருங்க ஒரு சரியான தகர டப்பா படம் சௌந்தர்யமே வருக வருக என்று ஒரே வாரத்துல நல்லவே ஓடியது எப்படி ரிலீஸான அனைத்து தியேட்டர்களையும் விட்டு அத்தோட ஐயா அம்பேல் ராணிப் பேட்டையிலுள்ள தனக்குச் சொந்தமான தோல் தொழிற்சாலையை கவனிக்கப் போயிட்டாரு அம்புட்டுத்தான்(S N R )
-
அன்றைய சில பிரபலமான பத்திரிகைகளில் வாசகர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு, ஆசிரியரின் சுவையான பதில்களும்...
பாவேந்தர் பாரதிதாசனின் குயில் பத்திரிகையிலிருந்து....
கேள்வி :
சிவாஜி கணேசனுக்கு திருச்சி நகரசபை வரவேற்பளித்தது பற்றி உங்கள் எண்ணம் என்ன?
பதில் :
இலக்கம் இலக்கமாகக் கல்வி முதலியவற்றிற்கு வாரிக் கொடுத்த, கொடுத்துவரும் கணேசனுக்கு வரவேற்பளிக்காவிடில் திருச்சி நகரசபை இருந்தென்ன! தொலைந்தென்ன!
******* ****** *******
2. பேசும்படம், ஜனவரி - 1963
என். முருகன், திருநெல்வேலி.
கேள்வி :
"ஆலயமணி" யில் ஓசையே இல்லையே?
பதில் :
யார் சொன்னது?
தயாரிப்பாளர் வீரப்பாவுக்கு கலகலவென்று சில்லறைகள் வந்து விழுந்து " ஆலயமணி "யின் ஓசையையும் தூக்கி அடித்து வருகிறதே!
********* ******** ********
3. பொம்மை, ஜூலை 1969
ப. பூலோகநாதன், சென்னை - 1.
கேள்வி:
சிவாஜி கணேசனின் சீரிய பண்புகளில் சிலவற்றைக் கூறுங்களேன்?
பதில் :
நண்பர்களுக்கு உதவ வேண்டும் என்ற நல்ல நோக்கம் கொண்டவர். S.V. சுப்பையாவின் " காவல் தெய்வத்தில்" இலவமாகவே நடித்துக் கொடுத்தார் அவர். தன்னடக்கம் நிறைந்தவர்.
********* ********** ********
4. பொம்மை, ஜூலை 1970
எஸ். சந்தானம், டேராடூன்.
கேள்வி:
பராசக்தியின் அருளால் நமக்குக் கிடைத்திருக்கும் உயர்ந்த மனிதரை வாழ்விலே ஒருநாள் பார்த்தால் ( என் ) பசி தீரும். ஏழைபால் அன்புக் கரங்களை நீட்டும் நான் வணங்கும் தெய்வத்தைக் காணும் அந்தநாள் விரைவில் வருமா?
பதில் :
ஆண்டவன் கட்டளை அதுவானால் நீர் நினைப்பது நடக்குமே. அப்போது பாலும் பழமும் உண்ட மகிழ்ச்சி உமக்கு ஏற்படும் இல்லையோ?
******** ********** *******
5. பேசும்படம், ஜூலை - 1964.
.மு. சுந்தரவதனம், மாயூரம்.
கேள்வி :
சிவாஜி கணேசன் தர்மம் செய்வதில்லை என்று கூறுபவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில் :
அவருக்கு நடிக்கத் தெரியாது என்று சொல்வதற்கு சமமாக....
********* ********* ********
6. பொம்மை, ஜுலை - 1970.
அ. ஞானபாஸ்கரன், திருவண்ணாமலை.
கேள்வி :
சிவாஜி கணேசன் கல்லூரி கட்டட நிதிக்காக பணம் உதவியது எதைக் காட்டுகிறது?
பதில் :
தான் படிக்காவிட்டாலும் பிறர் படிக்கட்டுமே என்ற உயரிய எண்ணத்தை.
******** ******** ********
7. கல்கண்டு, 24:08:1995.
உஷா செந்தில், கூந்தளிர்..
கேள்வி :
நான் ஏமாந்தவன் என்று சிவாஜி வருத்தப்படுகிறாரே?
பதில் :
தேவையில்லை. நம் காலத்தில் அரசியலில் நேர்மை காத்த ஒரே மனிதர் சிவாஜி. பதவியில் இருப்பவர்கள்கூட ஊட்ட முடியாத தேசப்பற்றை, பதவியில் அமராத போதும் தமிழக மக்களுக்கு உணர்த்தியவர். தொழிலில் ஈடுபாடு; நேரந் தவறாமை; திறமையை வெளிப்படுத்துவதில் 100க்கு 110 சதவிகிதம் முயற்சி ஆகியவை சிவாஜியின் வாழ்க்கையிலிருந்து மற்றவர்கள் கற்க வேண்டிய பாடங்கள். இந்தப் பொருள் பொதிந்த வாழ்க்கையைப் பற்றி சிவாஜிக்கு இப்படி ஒரு தாழ்மையான எண்ணம் தேவையல்ல.
******** ********* *********
தொகுப்பு : வான்நிலா விஜயகுமாரன் நன்றி : பம்மலார்.
கலைத்தெய்வம் இதழிலிருந்து
Thanks Nilaa
-
தயாரிப்பாளர்களை கோர்ட்டுக்கு இழுத்த எம்.ஜி. ஆர் - ஆலங்குடி வெள்ளைச்சாமி
https://youtu.be/BsAONDwXQD4
-
வசூல் சக்ரவர்த்தி அய்யன்தான் என்பதில் எவருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
கருப்பு வெள்ளை படங்களில், இன்றளவும் எவராலும் முந்திட முடியாத வசூல் படம், அய்யனின் பட்டிக்காடா பட்டணமா மட்டுமே.
வண்ண படங்களில் இன்றளவும் வசூலில் சக்ரவர்த்தியாக திகழ்வது அய்யனின் திரிசூலம்தான்.
திரு.எம்ஜி.ஆர் அவர்களின் படங்களும் வெற்றிகள் பெற்றன. ஆனால், எம்.ஜி.ஆர் அவர்களின் படங்களின் வெற்றியை மிக பிரமாண்டமான வெற்றி என்று மக்களிடம் மிகை படுத்தி சொன்னவர்கள், திராவிட கட்சியை வளர்ப்பதற்காக மேடைகள் தோறும் கூச்சமின்றி முழங்கியவர்கள். அதை மக்களும் நம்பினார்கள்.
உண்மையில் அய்யனின் படங்களை விட திரு. எம்.ஜி.ஆர் அவர்களின் படம்தான் வசூலில் உயர்வு என்றால், பெரிய நிறுவனங்கள், உயர்ந்த இயக்குன்கள் திரு.எம்.ஜி.ஆர் அவர்களை படம் எடுப்பதற்காக ஏன் அணுகவில்லை? என்பது ஆயிரம் கேள்விகள்.
திரு.எம்.ஜி.ஆர் அவர்களின் படங்கள் அய்யனின் படங்களை விட உயர்வான வசூல் என்றால், திரு. எம்.ஜி. ஆர் அவர்களின் படங்களின் எண்ணிக்கை அய்யனின் படங்களின் எண்ணிக்கையை விட ஏன் ?குறைந்தது என்ற கேள்விகளும் எழுகின்றது.
எம்.ஜி.ஆர் அவர்களின் படங்களும் வசூலித்தது. ஆனால் வசூலில் அய்யனின் படங்களை வென்றது என்பதை ஏற்க முடியாது.
அய்யனுக்கு முன்பே திரை உலகம் கண்ட திரு. எம்.ஜி.ஆர் அவர்ளை பிறகு வந்த அய்யன் அவர்கள் முந்தி செல்ல காரணம், அய்யன்தான் உண்மையான வசூல் ராஜா என்பதே சாட்சி.
மணமிருக்கும் மலர்களையே வண்டுகள் மொய்க்கின்றன. வியாபாரம், நல்ல லாபமும் ஈட்டுகின்ற பொருள்களுக்கே தேவைகள் கூடுகின்றன. நல்ல பொருள்களே சந்தையை அலங்கரிக்கின்றது.
எம்.ஜி.ஆர் அவர்கள் ஒரு கொள்கையை கடைபிடித்தார்கள். அதாவது, தனது படமானது ஓரவிற்கு ஓடிய பிறகே தனது அடுத்த படத்தை வெளியிட செய்வார்கள்.
ஆனால் அய்யனின் படங்கள் வெளியிட பட்டுக்கொண்டே இருக்கும். காரணம், அய்யனின் படங்களின் அசையாத வசூல் நம்பிக்கை.
திரு. எம்.ஜி.ஆர் அவர்களின் படங்கள் பி சென்றர்களிலும், அதிகமாக சி சென்றர்களிலுமே அதிகமாக ஓடும். எம்.ஜி.ஆர் அவர்களின் படங்கள் விளம்பரமாவதற்கு இந்த பி , சி சென்றரகளும் ஒரு காரணமே.
அய்யனின் படங்கள் எ , பி சென்றர்களிலே அதிகமாக வெற்றியை சூடியது என்பதும் ஒரு காரணம்.
அய்யனின் படங்களின் வெற்றிகள் மேடைகளின் முழங்கவில்லை. அதற்கான தேவையும் இருந்ததில்லை.
திரு.எம்.ஜி.ஆர் அர்களின் படங்கள் மேடைகளிலே மிகையாக முழங்கப்பட்டது. அதனால் மக்களும், விவேக் போன்ற நாய்களும் நம்பின. நம்புகின்றனர்.
திரை உலகில் அய்யன், திரு. எம்.ஜி.ஆர் இவர்களின் காலங்களில் வசூலின் சரித்திரங்களை கண்டது அய்யனின் சித்திரங்களே என்பதை மறுப்பவர்கள், தங்களையே தாங்கள் ஏமாற்றுகின்றார்கள். நன்றிகள்.
Thanks Selvaraj.f
-
நண்பர் அடிமைப்பெண் சென்னை வசூல் முதலில் ரூபாய் 13.6 என்றார்
அப்புறம் 14.4 என்கிறார்
ஒரே குழப்பமா இருக்காம்,
https://scontent.fybz2-2.fna.fbcdn.n...d0&oe=5FD53746
https://scontent.fybz2-2.fna.fbcdn.n...18&oe=5FD813DD
Thanks Sekar.P
.................................................
பின்னூட்டம்
ஏற்கனவே "ஜென்டாவின் கைதி" (ஜென்டா என்பது ஒரு இடத்தைக் குறிக்கும்)என்பதை அப்பட்டமாகக் காப்பி எடுத்து படமாக வெளியிட்டாரு டோப்பா நாடோடிமன்னன் என்ற பெயர்ல இப்படத்தின் முடிவில் எமது அடுத்த தயாரிப்பு அடிமைப்பெண் என்று டைட்டில் காட்டப்பட்டது கூட அடிமைப்பெண் படப்பிடிப்பின் போதுதான் சேர்க்கப்பட்டது சரி அடிமைப்பெண்? A SLAVERY MOTHER என்ற ஆங்கில நாவலின் அப்பட்டமான காப்பி ஆக "THE PRISONER OF ZENDA"-ஜென்டாவின் கைதி எழுதிய பிரபல ஆங்கில நாவலாசிரியர் அந்தோணி ஹோப் அதுபோல "ஸ்லேவரி மதர்" எழுதியது ஆலன் பேட்டன் என்ற மற்றொரு ஆங்கில நாவலாசிரியருடையது என்பது ஒரு விசிலடிச்சான் குஞ்சுகளுக்கும் இவ்விஷயம் தெரியவே தெரியாது டோப்பாவும் அவங்ககிட்ட சொல்லவே இல்ல என்பது ஒரு சிறப்பு ஆஹாஹாஹாஹா(S N)
-
(2018 ல் பதிவிடப்பட்டது மீள்பதிவாக)
எனக்கு தெளிவான விளக்கம் மட்டுமே தேவை,
14 நாட்களில் நாடோடி மன்னன் படத்தை பார்த்தவர்கள் 10,35,665 பேர்,
25 நாட்களில் கப்பலோட்டிய தமிழன் படத்தை பார்த்தவர்கள் 40,00,000 பேர்
அப்படியே நாடோடி மன்னன் படத்தை 25 நாட்களில் பார்த்தவர்கள் என்று பார்த்தால் 20 லட்சம் கூட வராது
அப்படி இருக்கும் போது நாடோடி மன்னன் பிரம்மாண்டமான வெற்றி
கப்பலோட்டிய தமிழன் தோல்வி என்று வரலாற்றில் இடம்பெற காரணம்?
தியேட்டர் எண்ணிக்கைக் கூட பெரிய வேறுபாடு இல்லை,
படங்களுக்கு இடையே மூன்று வருட இடைவெளி மட்டுமே,
நன்றி சேகர் .ப
.....................................
பின்னூட்டங்கள் சில
பெரும் சரிவை நோக்கி சென்ற எம்ஜிஆர் க்கு நாடோடி மன்னன் படத்தின் வெற்றிக்கு ஊடகங்கள் பெரிதும் துனை இருந்து இருக்கின்றன
.................................................. .
BOOM LIFT வைத்தாளும் எட்டாது. 1936 (சதி லீலாவதி)முதல் 1950(மந்திரி குமாரி) வரை MGR junior artiste போலத்தான் இருந்தார்.1950 மந்திரிக்குமாரியில் கூட S.A. Natrajanக்கு இருக்கும் வசனமோ, Heroismகாட்சிகளோ MGRக்கு இருக்காது. அடுத்து 1952ல் மலைக்கள்ளன்தான் அவரை முழு ஹீரோ ஆக்கியது.கிட்டதட்ட 17வருடங்கள்.(சிவாஜி நடிக்க வந்த அன்றிலிருந்து 17வருடங்களில்
உட்சத்தில் இருந்தார்)p.u.chinnappa 1951ல் இறந்தார். MKT சிறையில்..
T.R.M, K.R.R and M.K.R.ஆகியோர் இரண்டாம் கட்ட நடிகர்களே. இனி "நாம்தான்" என நினைத்த MGRன் கனவு 1952ல் சிவாஜியின் பிரவேசம் தகர்த்தது.
.................................................. ........
1958 ல் வெளிவந்த எம் ஜீ ஆரின் ஒரே ஒரு படம் நாடோடி மன்னன் மட்டுமே. அந்த வருடத்தில் ஒரு படத்தை மட்டும் வெளியிட்டும் 10 தியெட்டர் வரையில்தான் 100 நாட்கள் காட்டமுடிந்தது வெள்ளிவிழா கிடையாது ஆனால் சேலத்தில் 3 தியேட்டர் மாற்றி ஓட்டிவிட்டு கடந்த 50 வருடங்களாக சேலத்தில் நாடோடி மன்னன் வௌவெள்ளிவழா ஓடியதென எல்லோரையும் ஏமாற்றியதுமட்டுமல்லாமல் தங்களையும் ஏமாற்றி தங்களை சார்ந்தவர்களையும் ஏமாற்றிக்கொண்டு திரிந்தார்கள் தற்பொழுது இணையத்தளங்கள் பாவனைக்குவந்து அதன்மூலம் சிவாஜி ரசிகர்கள் முன்னைய சினிமா நிலவரங்களை தேடி எடுத்து பொக்கிஷங்களை கிளறியதில் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன நாடோடி மன்னன் தனி அரங்கில் வெள்ளிவிழா ஓடவில்லை என்ற விபரத்தை சிவாஜி ரசிகர்கள் ஆதாரத்துடன் நிரூபித்தபின் தற்பொழுது பொய்என்று தெரிந்தும் பொய்யான தகவலை எழுதிவந்த எம் ஜீ ஆர் ரசிகர்கள் ஒப்புக்கொள்கின்றார்ர்கள் அதேநேரத்தில் விடயம் தெரியாமல் பொய்மையால் வளர்க்கப்பட்ட எம் ஜீ ஆர் ரசிகர்கள் பொய்மையில் ஊறி வெளிவரமுடியாமல் உளறிக்கொண்டு திரிகிறார்கள். எம் ஜீ ஆர் சாதனை சக்கரவர்த்தி என்கிறார்கள் ஆனால் சேலம் நகரில் ஒரு வௌவெள்ளிவிழா படம் கிடையாது . பெரும் சோகம் என்னவென்றால் நாடோடி மன்னன் படத்தால் பெயர்தான் கிடைத்தது பணம் கிடைக்கவில்லை என்று எம் ஜீ ஆரின் அண்ணன் சாரங்கபாணி சொன்னதுதான்.
.................................................. .....................
அந்தத் தருணத்தில் தி.மு.க தலைகள் எல்லோரும் சிவாஜியைத்தான் எதிரியாகப் பார்த்தார்கள். அவரை வளர்ந்துவிட்டால், தங்கள் தலைமைக்கு ஆபத்து என்று நினைத்து ராமச்சந்தரை வளர்த்தார்கள். கடைசியில் அவர்தான் அவர்களுக்கு ஆப்பு வைத்தார். சிவாஜி தன்னை வளர்த்துவிட்டவர்களுக்கு எப்போதுமே விசுவாசமாக இருந்திருக்கிறார். உதாரணம், பராசக்தி பெருமாள் முதலியார். அரசியலிலும் காமராஜர் சிவாஜியை வளர்க்கவில்லை என்றாலும்கூட, அவர்பால், அவர் கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டு, ஆட்சியில் இல்லாவிட்டாலும், அவர் மறைந்தபிறகும் கூட அவர் புகழ் பாடினார். இதனை சிலர் மிகவும் லேட்டாகத்தான் உணர்ந்தார்கள்....
.................................................. ..........................
நடுநிலையற்ற
வீணாய்ப்போன மீடியாக்காரன்கள், சினிமாக்காரன்கள்,
அக்காலத்தில் கூட நிறையப் பேர் இருந்து இருக்கிறார்கள்போல!
.................................................. ...............
அனைத்தும் அவரது எடுபிடிகளால் பரப்பப்பட்ட பொய்கள்...
பத்திரிக்கைகளும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளனர்.
.................................................. ...........
எம்ஜிஆர் ஒரு வசூல் சக்ரவர்த்தி அவர் ஆரம்பித்த சாராயக்கடை இன்றைய தீபாவளி வசூல் 560 கோடி ஆதாரம் வேண்டுமா அவர்களிடம் உண்டு
-
Quote:
Originally Posted by
sivaa
நடிகர் திலகத்தின் படங்கள் சாதனை செய்துவிட்டால் அதனை தங்கள் நடிகரது படங்கள் முறியடித்துவிட்டது என காட்டுவது எம் ஜீ ஆர் ரசிகர்களது வழமையான ஒரு செயல்பாடு.1961 ல் பாவமன்னிப்பு சென்னை நகரில் முதன் முதலாக வசூலில் 10 லட்சம் கண்டு சாதனை படைத்திருந்தது.இதனை 4 வருடங்கள் கடந்து அவர்களது எ வீ பிள்ளை தாண்டியிருந்தது. எனினும் அதே வருடம் நமது திருவிளையாடல் வந்து எ வீ பிள்ளை வசூலை தாண்டி அவர்களது இன்பக்கனவை சிதைத்துவிட்டது. 4வருடங்கள் கடந்து அ பெண் முறியடிக்குமென எதிர்பார்த்தார்கள் முடியாமல்போய்விட்டது.எனவே அவர்களாக தங்களுக்கு ஏற்றவிதமாக வசூல்களை ஏற்றி இறக்கி வெளியிட்ட போலிவசூல்தான் இவை. அவர்களே வெளியிட்டுவிட்டு எது சரியென தெரியாமல் அவர்களுக்கே குழப்பம்.உண்மை ஒன்றிருந்தால் குழம்பத்தேவையில்லை.சென்னை வசூல் விபரங்கள் திருவிளையாடல் 13,82,000.00 எ வீ பிள்ளை 13,23,000.00 அ பெண் 13,60,000.00 எனவே அ பெண் திருவிளையாடல் வசூலை தாண்டிவிட்டதாக காட்ட 14,40,000.00 என வசூலை தயார்படுத்தி பதிவிட்டு தங்களுக்குத்தாங்களே மகிழ்ந்துகொண்டார்கள்.
-
எதிர் முகாமிலிருந்து கொண்டு தன்னை இழிவாக பேசிய அசோகன் ,தேங்காய் ஸ்ரீனிவாசன் , தங்கவேலு போன்றவர்களை காழ்ப்புணர்ச்சி இன்றி தன படங்களில் வாய்ப்பு அளித்தார் அவர் சொன்னது " ஒரு நடிகனின் இயல்பு வேறு தொழில் வேறு இரண்டையையுந் நான் ஒப்பிட்டு பார்ப்பதில்லை " என்று . பராசக்தி படம் ஒரு ரீல் படமாக்க பட்ட பின்பு ஏ.வி எம் செட்டியாருக்கு சிவாஜியின் நடிப்பு பிடிக்க வில்லை அப்போது பிரபலமாக இருந்த கே ஆர் ராமசாமியை அந்த வேடத்திற்கு நடிக்க வைக்க விரும்பினார் ஆனால் அவரது பாகஸ்தரான நேஷனல் பெருமாள் சிவாஜியை வைத்து படமெடுத்தால் நான் பாகஸ்தராக இருக்கிறேன் இல்லை என்றால் அதிலிருந்து விலகி கொள்ளுகிறேன் என்று சொல்லவே செட்டியார் வேண்டா வெறுப்பாக ஒப்புக் கொண்டார் . அந்த நன்றியை மறக்காத சிவாஜி ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் அன்று பெருமாளுக்கு பரிசளித்து அவரிடம் ஆசிர்வாதம் வாங்குவதை கடைசி வரை கடை பிடித்தார் . பராசக்தி படம் வருவதற்கு முன்பே அஞ்சலிதேவி சிவாஜியின் நடிப்பை ஒரு நாடகத்தில் பார்த்து தனது இரு மொழி படமான பரதேசி , பூங்கோதை அவரை ஒப்பந்தம் செய்தார் . பராசக்திக்கு முன்பாகவே பூங்கோதை வெளி வர தயாராக இருந்தது . பெருமாளின் வேண்டு கோளுக்கு இணங்க பராசக்தி முதலில் வெளிவந்தது சிறிது காலம் கழித்து அஞ்சலிதேவி " பக்த துக்காராம் ' தெலுங்கு படத்தில் சிவாஜியாக நடிக்க அழைத்தார் நன்றி மறவாத சிவாஜி சத்ரபதி சிவாஜிக்கான ராஜ உடைகளை தன செலவிலேதைத்து அந்த படத்தில் பணம் வாங்காமல் நடித்து கொடுத்தார்
Thanks Kumbakonam Srimanth Govindan
-
-
திரையுலக வரலாற்றில் ஒரு திரைப்படம் நூறு நாட்களைக் கடந்தும் தொடர் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிய திரைப்படம் "திரிசூலம்' எனத் தெரிந்து வைத்திருந்த எனக்கு இதற்கு முன் பாகப்பிரிவினையும் இதுபோன்ற சாதனையை நிகழ்த்திய வெற்றிக் காவியம் என தெரிந்து கொள்ளாமல் தான் வந்திருக்கிறேன்,
நடிகர் திலகம் திரைப்படங்களது வெற்றிச் செய்திகளை கொஞ்சம் உன்னிப்பாக கவனித்தால் அதிலிருக்கும் மேலும் பல சாதனைகளை பிடிக்க முடிகிறது,
கடந்த காலங்களில் நிகழ்ந்த நடிகர் திலகத்தின் திரைப்பட வெற்றிகளை அதுவும் மதுரை நகர சாதனைகளை ஆவணப்படுத்தும் தொடர் பதிவுகளை நண்பர் திரு Vaannila Vijayakumaran
அவர்கள் தொடர் பதிவுகளை செய்திருந்தார், அதில் பாகப்பிரிவினை திரைக்காவியம் மதுரையில் சிந்தாமணி திரையரங்கில் தொடர்ந்து 216 நாட்கள் ஓடியிருந்த தகவலோடு ஒட்டுமொத்த வசூல் தொகை ரூபாய் 3,36,184-54/- என்பதோடு விநியோகபங்குதாரர் பங்கீட்டு தொகையையும் கூட துல்லியமாக குறிப்பிட்டிருந்தார்,
அதிலிருந்து நமக்குத் தெரிய வருவது யாதெனில்
மதுரையில் முதன் முதலாக வசூலில் 3 இலட்சத்தை கடந்த திரைக்காவியம் உறுதியாக பாகப்பிரிவினை மட்டுமே.என்ற
இந்தச் செய்தியை நான் முன்னர் ஒரு பதிவில் காட்டும் போது நண்பர் ஒருவர் மதுரையில் முதன் முதலாக 1956 ல் மதுரை வீரன் தான் சாதனை செய்தது அதன் பிறகு தான் பாகப்பிரிவினை எனக் குறிப்பிட்டார்,
விவரங்களை அலசுவோம்,
பாகப்பிரிவினை வெளியான சிந்தாமணி திரையரங்கு 1560 இருக்கைகளை கொண்டது,
திரையரங்கு அன்றைய நாளில் தினம் இரண்டு காட்சி மற்றும் சனி ஞாயிறு நாட்களில் மூன்று காட்சிகள் என கணக்கில் கொண்டு பார்த்தால்
வாரத்திற்கு 16 காட்சிகள் நடைபெற்று இருக்கும்,
100 நாட்களுக்கான 15 வாரங்களில்
15weeksX16 shows
= 240 shows
240 showsX 1560 seats
= 3,74,400 viewers
1959 வெளியான பாகப்பிரிவினையின் 100வது நாள் வெற்றி அறிவிப்பில் பார்வையாளர்கள் எண்ணிக்கை மற்றும் வசூல் தொகையை அறிவித்து இருக்கிறார்கள்
100 நாட்களில்
3,72,446 பார்வையாளர்கள் அதன் மூலம் வசூலான தொகை ரூ 2,29,060
அதாவது ஓடிய 100 நாட்களும் அரங்கு நிறைந்து ஓடியதால் மட்டுமே இந்த வசூல் தொகை,
தொடர்ந்து 216 நாட்கள் ஓடியதால் அடுத்த 116 நாட்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொகையை வசூலாக பெற்றிட முடியும் என்பதால்
216 நாட்களில் வசூல் ரூ 3,36,184/- ஆகியிருக்கிறது,
சராசரியாக டிக்கெட் கட்டணம் ரூ 61 பைசா என கணக்கில் கொள்ளலாம்,
இல்லை மதுரை வீரன் தான் முதலில் மூன்று லட்சம் வசூலாகி இருக்குமா?
அதையும் பார்ப்போமே?
அதாவது மதுரை செண்ட்ரல் திரையரங்கில் வெளியான மதுரை வீரன் தொடர்ந்து 181 நாட்கள் ஓடியிருக்கிறது,
180 நாட்களில் வசூலான தொகை என சொல்லப்படுவது ரூ 3,67,000/- ஆகும்,
ஆனால் இந்தத் தொகையை மதுரை வீரன் வசூலித்து இருக்க வேண்டும் என்றால்
1620 இருக்கைகளை கொண்டிருந்த செண்ட்ரல் திரையரங்கு தொடர்ந்து 180 நாட்களும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியிருந்தாலும் வசூலித்து இருக்காது
எப்படி?
16shows X 26 weeks
= 416 shows
416 shows X 1620 seats
= 673920 viewers
பாகப்பிரிவினை 1959 ல் வெளியான திரைப்படம் அதன் டிக்கெட் கட்டணம் ரூ 0.61 பைசா என்றால்
1956 ல் வெளியான மதுரை வீரன் மேலும் குறைவான கட்டணமாகத் தான் இருந்து இருக்க வேண்டும்
6,73,920 viewers X 0.55 பைசா
= ரூபாய் 3,70,656-00
இதற்கு மேலும் விளக்கம் வேண்டுமா?( காட்சிகள் பற்றிய சந்தேகம் இருந்தால் அது பாகப்பிரிவினைக்கும் பொருந்தும்)
பாகப்பிரிவினை வசூலை ஏற்கனவே வசூலித்து விட்டதாக கூறுவதற்கு என்றே ஒரு தொகையை பின்னாளில் உருவாக்கி இருக்கிறார்கள்,
இதற்கு மேலும் புரியாதவர்களுக்கு
1956 ல் மதுரை வீரன் 180 நாளில் ரூ 3,67,000
1965 ல் எங்க வீட்டு பிள்ளை-176 நாளில்
ரூ 3,85,000
ஓடிய நாட்கள் ஏறக்குறைய ஒன்று தான்
ஆண்டு இடைவெளி 9 வருடங்கள்
எப்படி ஏறக்குறைய ஒரே தொகையை வசூலிக்க முடியும்?
தங்கம் தியேட்டரா?
அதில் 1960 கள் வரை எந்தத் திரைப்படமும் இரண்டரை லட்சத்தை கூட வசூலித்து இருக்க வாய்ப்பில்லை அங்கு கட்டணம் மிகவும் குறைவாகவே இருந்து இருக்கிறது,
என்னை ஒருத்தர் கணக்கில் நீ என்ன புலியா எனக் கேட்டிருந்தார்??
https://scontent.fymy1-1.fna.fbcdn.n...f3&oe=5FDDF2EE
Thanks Sekar.P
...........................................
மதுரைவீரன் ,நாடோடி மன்னன் இரண்டினதும் மதுரை வசூல் எம் ஜீ ஆர் ரசிகர்களால் வெளியிடப்பட்டவை இட்டுக்கட்டிய போலி வசூல்கள். நாடோடி மன்னன் மதுரை தங்கம் 133 நாள் சரியான வசூல் 2,13,935.58. ம.வீரன் சரியான வசூல் கிடைக்கவில்லை . பாகப்பிரிவினை 3 லட்சம் தாண்டிவிட்டதென்ற பொறாமையில் எம் ஜீ ஆர் ரசிகர்களால் ம வீரனும் நா மன்னனும் 3லட்சம் தாண்டியதாக காட்டுவதற்கு வெளியிடப்பட்ட போலி வசூல்கள்தான் அவை.(இனி கீழ்ப்பாக்கத்தில் இருந்து புலம்பப்போகிறார்கள் பாவம்.)
-
அரசியல் காழ்ப்புணர்வின் காரணமாக சிவாஜியின் படங்களை ஓட விடாமல் தடுத்து யாருக்கோ "வசூல் சக்கரவர்த்தி" என்ற மகுடத்தைச் சூட்ட, சில நாலாந்திர மனிதர்கள் செய்த சதி வேளைகளின் வெளிப்பாடே இதெல்லாம்.
1970 ஜனவரி 14 ல் கற்பகம் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் மாட்டுக்கார வேலன், எங்க மாமா இரண்டையும் சென்னையில் வெளியிட்டு இருந்தனர்.
நன்றாக ஓடிக்கொண்டிருந்த எங்க மாமாவை வெலிங்டன் திரையரங்கில் 50 நாட்களை கடந்த நிலையில் யாருடைய தூண்டுதலினாலோ திடீர் என மாற்றி விட்டார்கள். ஏன் மாற்றினார்கள் என்பது இன்றளவும் மர்மமாகவே உள்ளது.
மதுரை தங்கத்தில் 7 நாட்களில் 57000 ரூபாயை வசூலித்த எங்க மாமா வசூலில் புதிய சாதனை படைத்தது. முதல் வாரத்தில் அதிக வசூல் தந்த திரைப்படம் என்ற பெயரைத் தட்டிச் சென்றது. அதற்கு முன் அன்னை இல்லம் திரைப்படம் 51000 ரூபாயை வசூலித்து இருந்தது.
சிவாஜி நடித்து 40 க்கும் மேற்பட்ட படங்கள் தொண்ணூறு நாட்களை தாண்டிய நிலையில் எக்காரணமும் இன்றி நல்ல வசூல் நிலையிலும் மாற்றப் பட்டது.
சிவாஜி வானிஸ்ரீ நடித்த " நிறை குடம்" வசூல் மழையோடு ஓடிக்கொண்டிருந்த போதும் யார் தூண்டலிலோ திரையரங்கிலிருந்து எடுக்கப்பட்டது.
நேரிடையாக போட்டியிட முடியாதவர்கள் சிவாஜியின் திறமையைத் தகர்க்க மறைமுகமாக முதுகில் குத்தியதின் வலிகள் எங்க மாமாவுக்கும் ஏற்ப்பட்டது.
* செல்லுலாய்ட் சோழன் தொடரில் இனிய எழுத்தாளர் நாஞ்சில் இன்பா அவர்கள் எழுதி வருவது ( தமிழக அரசியல் வாரமிருமுறை இதழ்)
(மீள் பதிவு)
Thanks Sekar .P
-
பொய் பெருமைகள் கொண்ட செய்திகள் மக்களிடையே திணிக்கப்பட்டதற்கு ஓரு உதாரணம் சொல்லுங்க என்றார் நமது நண்பர்,
எங்களைப் பொறுத்த அளவில் நடிகர் திலகம் சிவாஜிக்கு எதிராக பின்னப்பட்ட செய்திகள் தான் பொறி தட்டும்,
அதற்கு ஓரு உதாரணம்
பேரறிஞர் அண்ணா அவர்கள் மேடையில் பேசினாராம்
"எம்ஜிஆர் பிரசார மேடையில் முகத்தை காட்டினாலே போதும் ஓரு லடசம் வாக்குகள் வந்து விடும் நான் முதல்வர் ஆகி விடுவேன்"
என்று,
ஆனால் நடந்த வரலாறு என்ன?
1957, 1962 தேர்தல்களில் தமிழகம் முழுவதும் பிரச்சார மேடைகளில் எம்ஜிஆர் மக்கள் முன் தோன்றி அண்ணா அவர்களுக்கு வாக்கு கேடடார்,
ஆனால் அந்த இரண்டு தேர்தல்களிலுமே அண்ணா அவர்களால் வெற்றி பெற்று முதல்வராக முடியவில்லை,
மாறாக எம்ஜிஆர் பிரச்சாரமே செய்யாத 1967 ல் நடந்த தேர்தலில் தான் அறிஞர் அண்ணா அவர்களால் முதல்வராக அமர முடிந்தது,
( ஓரு வேளை எம்ஜிஆர் அவர்கள் துப்பாக்கி சூடு படாமல் இருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல் இருந்து பிரசாரம் செயது இருந்தால் முடிவு மாறி இருக்குமோ? )
இப்படி நடந்த உண்மையான வெற்றி தோல்விகளை மறைத்து மக்களிடம் உண்மைக்கு நேர்மாறான கருத்துக்கள் தொடர்ந்து திணிக்கப்பட்டு வந்தன,
Thanks Sekar.P
-
வசூல் சக்கரவர்த்தி செவாலியே சிவாஜி கணேசனின் ஆலயமணி
வெளியான நாள் 23/11/1962 .இன்று 58 ஆண்டுகள் நிறைவு.
சென்னையில் 4 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடிய முதல் படம்.
Biggest box office movie - ஆலயமணி
சென்னையில் முதன் முதலாக திரையிடப்பட்ட நான்கு திரையரங்குகளிலுமே 100 நாட்களைக் கடந்த வெற்றித் திரைக்காவியம்,
1962 ல் அப்படியான வெற்றி அடைந்ததோடு தொடர்ந்து மறு வெளியீடு ஆகி வெற்றி நடைப்போட்ட நிகழ்வுகள் கணக்கிலடங்காது, (சேகர்.ப)
https://scontent-ort2-1.xx.fbcdn.net...18&oe=5FE0A738
-
-
-
-
-
-
1970 களின் துவக்கத்தில்,
1662 இருக்கைகள் கொண்டிருந்த மதுரைசெண்ட்ரல் திரையங்கில்,
84 நாட்களில் தோராயமாக நடைபெற்ற 276 காட்சிகளில் ( இதில் 139 காட்சிகள் தொடர் ஹவுஸ்ஃபுல்) படம் பார்த்தவர்களின் எண்ணிக்கை 4,22,464 பேர்.
வசூலான தொகை : ரூ3,71,310
#ஒருவரலாற்றுவெற்றி
#பட்டிக்காடா_பட்டணமா
( மேற்கொண்டு இப்படத்தின் வசூல் மற்றும் சாதனைகளை துல்லியமாக அலசி ஆராய்ந்து பதிவிடுமாறு திரு.சேகர்பரசுராம் அவர்களை வழிமொழிகிறேன்)
https://scontent.fybz2-2.fna.fbcdn.n...4d&oe=5FE114FF
-
#1974ல் கோயமுத்தூரில் எந்த நடிகரது படமும் பெறாத இமாலய சாதனை என்று விளம்பரம் சொல்கிறது...
அதனை மெய்ப்பிக்கும் விதமாக இரண்டாவது சுற்றில் 4-வது வாரமாக ஓடிக் கொண்டிருக்கிறது
#உடுமலை தாஜ் மற்றும்
#குன்னூர் டிலைட் அரங்குகளில்....
#தங்கப்பதக்கம்
வசூலில் ஒரு வரலாற்றுச் சாதனை!
https://scontent.fymy1-1.fna.fbcdn.n...ce&oe=5FE35B4B
Thanks Nilaa
-
வணக்கங்கள். முதற்கண் உங்களுக்கு நீங்கள் விரும்பும் விடியோவை போடுவதற்கு இந்த சுதந்திர நாட்டில் உரிமை உண்டு. இருப்பினும், நாமாக ஒரு controversy topic பதிவு செய்வது சரியா என்று தெரியவில்லை. சில விஷயங்கள் தினத்தந்தி சிந்துபாத் கதை போல, சில விஷயம், கோழியில் இருந்து மூட்டையா...முட்டையில் இருந்து கோழியா எனும் ரகம். நடிகர்திலகம் ...மக்கள் திலகம் நாம் போடும் ஒரு பதிவால் ..பத்து பதிவால் புகழ் அடையபோவதில்லை காரணம் ஏற்கனவே புகழ் உச்சியில் உள்ளவர்கள்...அவர் அவர் துறையில்.. சிவாஜியிடம் அல்பமான விஷயத்திற்காக கோபித்து போனவர்கள் என்ன நிலைக்கு ஆளானார்கள் என்பதை உலகரியும். அது அவர்கள் தலையெழுத்து..அதற்கு எம்ஜிஆர் பொறுப்பேற்க எப்படி சாத்தியமாகும்? ஒருவர் மனகசாப்பில் இருக்கும்போது மூட்டிவிட்டு தான் மற்றவரிடம் சன்மானமும், நல்ல பெயர் சம்பாதிக்கவும் செய்த முயற்சி தான் பந்துலு, ஏபிஎன், கூடார மாற்றம். ஏபின் சிவாஜியை வைத்து படம் பண்ணினேன், எம்ஜிஆர் வைத்து பணம் பண்ணினேன் என்று சொன்னால்....நவரத்தினம் எந்த அளவிற்கு பணம் கொடுத்து என்ற கேள்வி வரும். காரணம் அது அவருக்கு பணமே தரவில்லை என்பது திரையுலகமே அறியும். வேறு படமும் apn அவரை வைத்து எடுக்கவில்லை. அவர் இந்த உலகிற்கு வந்த வேலை முடிந்தது. இறைவன் அடி சேர்ந்தார். அடுத்து பந்துலு... சிவாஜியை வைத்து 10 படங்கள் தயாரித்தார்...அவர் குழப்ப மன நிலையில் இருந்தபோது, அவரை தூண்டி விட்டவர்கள் வேண்டுமானால் எம்ஜிஆர் அவர்களிடம் நல்ல பெயர் பெற்றிருப்பார்கள்...ஆனால் 1965 முதல் 1974 வரை, 4 படங்களை மட்டுமே பந்துலுவால் 9 வருடங்களில் எம்ஜிஆர் அவர்களை வைத்து தயாரிக்க முடிந்தது....அதே 9 வருடங்களில் சிவாஜியை வைத்து 10 படங்களை தயாரித்தவர் பந்துலு 1955 முதல் 1964 வரை..அனைத்து படங்களும் தெலுங்கு, ஹிந்தி, கன்னடத்திலும் வெளியிட்டு பணம் பார்த்தார். அடுத்து ஜி ஏன் வேலுமணி, 2 படங்கள் சிவாஜியை வைத்து தயாரித்தார்...பாகப்பிரிவினை மற்றும் பாலும் பழமும்..ரெண்டுமே மிக பிரம்மாண்ட வெற்றி படங்களை, வசூல் குவித்த படங்கள். ஆனால் அவர் சிவாஜியை விட்டு சென்றார்...கடைசி காலங்களில் அவர் பஸ் இல் சென்று வந்து கொண்டிருந்தது அணைவருக்கும் தெரியும். அடுத்து ஸ்ரீதர்....ஸ்ரீதருக்கு பத்து பைசா கையில் இல்லாத சமயத்தில், அவர் வேலை செய்வது பிடித்துபோக, நடிகர்திலகதிடம், என்னிடம் பணம் இல்லை, உங்களை வைத்து எடுக்க நல்ல கதை உள்ளது, உங்கள் கால்ஷீட் கொடுத்தால் நான் பைனான்ஸ் வாங்கிவிடுவேன் என்று சிவாஜியிடம் வேண்டுகோள் வைக்க, சிவாஜி பெருந்தன்மையுடன், ஒத்துழைக்க, ஸ்ரீதர் அவர்களை தயாரிப்பாளராக உயர்த்தியதே சிவாஜிதான். ஸ்ரீதர் அகல கால் வைத்தார் ...சிவந்த மண் எடுக்கும்போதே சிவாஜி எச்சரித்தார்...ஹிந்தியில் இப்போது கால் பதிக்க வேண்டாம்...என்று...அதையும் மீறி, ஹிந்தியில் தயாரித்தார்..பிறகு, ஓ மஞ்சு மற்றும் இன்னும் ரெண்டு படங்களை ஒரே சமயத்தில் எடுத்தார். சிவந்த மண் தமிழ் வடிவம், அந்த ஆண்டின் அதிக வசூல் படமாக அமைந்தது..இருப்பினும், ஹிந்தியில் இவருக்கு காசு வரவில்லை கணக்கு மட்டும் வந்தது. மீதி படங்களும் சருக்கியது.... உடனே , ஒரு சிலர் கதை கட்டி விட்டார்கள் சிவந்த மண் தோல்வி என்று...36 அரங்குகளில் 10 வாரமும், 9 அரங்குகளில் 100 நாட்களுக்கு மேலும் ஓடிய சிவந்த மண் எப்படி தோல்வி ஆகும்? மேலும் தமிழில் சிவந்த மண் மிக பெரிய வசூல் என்று திரு கோபு அவர்கள் காணொளி இதே Youtube இல் கூறியிருக்கிறார். அவர் அந்த தயாரிப்பில் ஸ்ரீதரின் பக்க பலமாக கூடவே இருந்தவர். ஆனால் ஒரு சில மாற்று கூடார ரசிகர்கள், அவர்கள் மன ஆறுதலுக்கு இப்படி இன்னும் பொய் பேசிக்கொண்டு திரிவது நல்ல வேடிக்கை.
Thank Nadigar Thilagam TV
-
சிவாஜி அவர் சார்ந்த துறையில் உலக சாதனைகள் பல புரிந்த முதல் இந்திய நடிகர். அவர் சாதனைகளை யாரும் அந்த கால கட்டத்தில் நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஒரு சில சரித்திர சாதனைகளை எந்த காலத்திலும் நடத்திகாட்டுவது மிக கடினம். சிவாஜியை வீழ்த்த ஒரு பெரும் கூட்டம் மற்றும் ராஜதந்திரிகள் முயன்றனர், எம்ஜிஆர் அவர்களை கேடயம் போல முன்னால் வைத்து. அதில் படு தோல்வி அடையவும் செய்தனர்...இதற்கும் எம்ஜிஆர் அவர்களுக்கும் நேரிடையாக எந்த தொடர்பும் இருக்க வாய்ப்பு இருக்குமா என்பது தெரியவில்லை..இருப்பினும், அந்த மாதிரி நிகழ்வில் தமக்கு சம்பந்தம் இல்லை என்பதை எந்த காலத்திலும் எம்ஜிஆர் அவர்கள் கூறிய தகவலும் இல்லை. ஆனால், தொழில் போட்டி மீறி இருவருக்கும் ஒரு பாச பிணைப்பு இருந்திருப்பதை இருவருவருமே வீடியோவாக பதிவு செய்துள்ளனர். ஒவ்வொரு காலகட்டத்தில் ஆனால் எம்ஜிஆர் திமுகாவில் 1953 முதல் 1972 வரை பதவியில் இருந்து சினிமாவில் நடிக்கும்போது திமுக வின் முழு பின்பலத்தையும் கொடுத்த கருணாநிதி, சம்பத், நாவலர், சௌந்தரா கைலாசம், ஐசிரி வேலன், அசோகன், ஆகியோர் அந்த சித்து வேலைகளை திரியை நிமிண்டி ப்ரகாசத்துடன் எரியும் , ஜொலிக்கும் என்று நினைத்து ஆவண செய்தார்கள் என்பது நிறைய விஷயங்கள், நிகழ்வுகளில் நாம் தெரிந்துகொள்ளலாம். பிற்காலத்தில் தேங்காய் சீனிவாசனும் இதில் அடக்கம். இதையெல்லாம் தாண்டித்தான் நடிகர்திலகம் இதுபோன்றவர்களுக்கு எட்டாகனியாகவும், இவர்கள் சதிகளை சர்வ சாதாரணமாக எதிர்கொண்டு மிக உச்சியில் துருவ நட்சத்திரமாக திகழ்ந்தார் பல பல அசுர வெற்றிகளை குவித்தார் திரை உலகில்.
Thank Nadigar Thilagam TV
-
அட டுபாகூர்,
எங்களது சந்தேகம் என்பது
1956 ல் வெளியான மதுரை வீரன் மதுரையில் 180 நாளில் ரூபாய் 3, 67, 000/- வசூலித்தது என்றால்
அதே மதுரையில் சென்ட்ரல் திரையரங்கில் 1965 ல் 9ஆண்டுகள் கழித்து வெளியான எங்க வீட்டு பிள்ளை 175 நாளில் ஏன் ரூபாய் 3, 85, 000 மட்டுமே வசூலித்தது,
9 வருஷமா டிக்கெட் விலை உயராமல் இருந்ததா என்ன?
எங்க வீட்டு பிள்ளை குறைந்த படசம் 5 லடசம் வசூலித்து இருக்க வேண்டுமே?
அல்லது
மதுரை வீரன் வசூல் என்பது உண்மையா?
எங்க விட்டு பிள்ளை வசூல் என்பது உண்மையா?
அதுக்கு விளக்கம் கண்டு புடி,
கர்ணன் 40 லடசம் செலவு என்றால் அடிமைப்பெண் செலவு எவ்வளவு?
1964 ல் கர்ணன் 40 லடசம் என்றால்
1969 ல் அடிமைப்பெண் 70 லடசம் ஆகியிருக்குமே,( உங்க வாத்தி சம்பளம் மட்டுமே பல மடங்கு அதிகமாச்சே?)
அப்படி பார்த்தால் லாபம் பெற அடிமைப்பெண் குறைந்த படசம் 1.4 கோடி ரூபாய் வசூலித்து இருக்க வேண்டுமே?
ஆனால் வசூலித்தது 55 லடசம் தானே?
இந்த கணக்கெல்லாம் போட தெரியாதா?
ஆனால் சிவந்த மண், கர்ணன் இந்த இரண்டு படங்களை பற்றிய கணக்கு மட்டுமே உங்க வாத்தி சொல்லி கொடுத்தாரா?
Thanks Sekar .P