-
மலேசியா சிவாஜி கணேசன் கலை மன்றம் நடத்திய நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு நாள் நிகழ்ச்சியில் திரு மருது மோகன் அவர்கள் ஆற்றிய உரையின் தொடர்ச்சி - பாகம் 2 நம் பார்வைக்காக
http://youtu.be/haiNDSDShZ0
-
திரைக்காவிய முதல் வெளியீட்டு விளம்பரங்கள் :13
நடிகர் திலகத்தின் 235வது காவியம்
சந்திப்பு [வெளியான தேதி : 16.6.1983]
வெள்ளிவிழாக் கொண்டாடிய மெகாஹிட் காவியம்
பொக்கிஷாதி பொக்கிஷம்
சென்னையில் '307 CHF Shows' விளம்பரம் : தினகரன் : 20.7.1983
http://i1110.photobucket.com/albums/...GEDC6304-1.jpg
தொடரும்...
பக்தியுடன்,
பம்மலார்.
-
டியர் வாசுதேவன் சார்,
கோபாலன் எங்கே உண்டோ கோபியர் அங்கே உண்டு -
நடிகர் திலகம் எங்கே உண்டோ நாமெல்லாம் அங்கே உண்டு
என்று
சொல்லாமல் சொல்லி கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையை நடிகர் திலகத்தின் பாடலுடன் அமர்க்களமாக எல்லோரும் கொண்டாட செய்து விட்டீர்கள்.
பாராட்டுக்கள்.
-
டியர் கல்நாயக் சார்,
'சந்திப்பு' பதிவு தங்கள் நினைவுகளைக் கிளறி விட்டதனால் தங்களிடமிருந்து ஒரு ஜோரான பதிவு கிடைத்தது.. தாங்களும், தங்கள் தந்தையும் சந்திப்பை எங்கள் ஊரில் பார்த்த விதம் அருமை. எங்கள் ஊர்க்காரர்கள் கொஞ்சூண்டு ஏமாளிகள்தான். அதை எப்படியோ தெரிந்து கொண்டு நைசாக, சாமர்த்தியமாக டிக்கெட்எடுத்து விட்டீர்கள். அருமையாக எழுதுகிறீர்களே! ஏன் கன்டின்யூ செய்யக் கூடாது?
-
எள்ளி நகையாடியோரை எங்கே எனக் காணாமல் செய்த வெற்றிக் காவியமான சந்திப்பு திரைப்படத்தை எல்லோரும் அறியும் வண்ணம் செய்த வாசு சாருக்கும் அதனுடைய வெற்றியை 307 தொடர் அரங்கு நிறைவு காட்சி விளம்பரம் மூலம் ஆணித்தரமாக நிரூபித்த பம்மலாருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் எத்தனை முறை சொன்னாலும் சலிக்காது.
பாராட்டுக்கள் பம்மலார், வாசு சார்.
அன்புடன்
ராகவேந்திரன்
-
டியர் வாசுதேவன் சார்,
இதயத்தின் அடித்தளத்திலிருந்து தாங்கள் தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கும் இதயபூர்வமான பாராட்டுக்கள், எனக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் மிகப் பெரிய அளவில் தந்து கொண்டிருக்கின்றன. தங்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள்..!
அன்புடன்,
பம்மலார்.
-
இன்று ஒரு சொந்த வேலையின் காரணமாக நெய்வேலியில் இருந்து கடலூர் செல்ல நேரிட்டது. 'சந்திப்பு' படத்தைப் பற்றிய நினைவுகளே நெஞ்சில் நிழலாடிக் கொண்டிருந்ததால் சரி முத்தையா திரையரங்கை ஒரு முறை இப்போது பார்த்துவிட்டுத்தான் வருவோமே என்று டூ வீலரை முத்தையா தியேட்டர் பக்கம் திருப்பினேன். நேராக தியேட்டருக்கே சென்று பார்த்தேன். மிகப் பரிதாபமான நிலையில் முற்றிலும் சீர்குலைந்து சிதலமடைந்து சிதைந்து போய் இருந்தது. மேற்கூரைகளெல்லாம் சுனாமியில் பிய்க்கப்பட்ட நிலையில் இருந்தன. சந்திப்பை அந்தத் தியேட்டரில் கண்ட விதம் மனதில் நிழலாடியது. ஏதோ சொல்ல முடியாததொரு லேசான சோகம் என்னை என்னமோ செய்தது. சிறிது நேரம் தியேட்டரை உற்றுப் பார்த்து விட்டு தியேட்டரை செல் காமிராவில் 'க்ளிக்' செய்தேன். பின் திரும்ப வந்து விட்டேன். திரும்ப வந்து கொண்டிருக்கும் போதே தியேட்டரை கண்ணிலிருந்து மறையும் வரை, வண்டியை ஒட்டியபடியே (ஜாக்கிரதையாகத்தான்) திரும்பத் திரும்பப் பார்த்தபடியே வந்தேன். மனம் சற்று வலித்தது உண்மை.
இன்றைய முத்தையா தியேட்டர்.
http://i1087.photobucket.com/albums/...5/IMG0269A.jpg
http://i1087.photobucket.com/albums/...5/IMG0270A.jpg
http://i1087.photobucket.com/albums/...5/IMG0273A.jpg
http://i1087.photobucket.com/albums/...5/IMG0275A.jpg
http://i1087.photobucket.com/albums/...5/IMG0277A.jpg
http://i1087.photobucket.com/albums/...5/IMG0281A.jpg
http://i1087.photobucket.com/albums/.../Photo0121.jpg
-
3000 கண்ட பதிவரசர் போட்ட 307 chf ஷோஸ் 'சந்திப்பு' சூப்பரோ சூப்பர்.
-
டியர் வாசு சார்,
கடலூர் முத்தையா திரையரங்கைப் பற்றி அருமையான பதிவினை அளித்து, இன்று அதனைக் காட்சியாகவும் தந்து அசத்தி விட்டீர்கள். என்ன தான் வார்த்தைகளும் வாக்கியங்களும் அமைத்தாலும் ஒரு படம் ஓராயிரம் கதை சொல்லும் என்பதை தாங்கள் பதிவிட்ட நிழற்படம் நிரூபித்து விட்டது. அன்றைய நாட்கள் .... வருமா திரும்பவும் ?
Never .....
-
நம்முடைய நடிகர் திலகம் இணைய தளத்தில் கர்ணன் 150வது நாள் விழா வெவ்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டு பக்கங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இணைப்புகள் இங்கே ...
நிழற்படங்கள்
http://www.nadigarthilagam.com/Karnan150celebMain.html
காணொளிகள்
http://www.nadigarthilagam.com/Karna...lebvideos.html
பத்திரிகைகள் தொலைக்காட்சிகள் இணையதளங்களில் விழா பற்றிய செய்தி
http://www.nadigarthilagam.com/Karna...acoverage.html
ரசிகர்களின் சுவரொட்டிகள், கொண்டாட்டங்கள், பதாகைகள் போன்றவை
http://www.nadigarthilagam.com/poste...ansevents.html
-
டியர் பம்மலார் சார்,
3000 பதிவுகள் மேலும் 30 ,000 ஆக எல்லாம் வல்ல நம் இறைவன் தங்களுக்கு அருள் புரிவார்.
-
சந்திப்பு பதிவுக்காக அயல் நாட்டிலிருந்து அலைபேசியின் வழியே பாராட்டி மகிழ்ந்த கோல்ட் ஸ்டாருக்கு என் அன்பார்ந்த நன்றிகள். அதே போல வினோத் சாருக்கும் (esvee) என் ஆத்மார்த்தமான நன்றிகள்.
-
Dear Satish sir,
wonderful still from 100 days Jalli kattu function. Thanks.
-
டியர் வாசு சார்,
தங்களின் சந்திப்பு பதிவு மிக அற்புதம், தங்கள் அதை விவரித்த விதத்தில் பம்மலார் கூறியது போல் நாங்களும் தங்களுடன் திரைபடத்தை கண்ட உணர்வு ஏற்ப்பட்டது. மேலும் தற்போதைய முத்தையா திரை அரங்கின் புகை படத்தை பார்க்கும் போது தங்கள் சொன்னது போல் மனம் சற்று வலித்தது.
-
Quote:
Originally Posted by
vasudevan31355
நீங்கள் கடலூர் அடிக்கடி வருவீர்களோ!
தனிச்செய்தி அனுப்பியிருக்கிறேன் :)
-
Quote:
Originally Posted by
joe
தனிச்செய்தி அனுப்பியிருக்கிறேன் :)
டியர் ஜோ சார்,
பார்த்து விட்டேன். பதில் மடல் தனிச் செய்தியில் பார்க்கவும். நன்றி!
-
நடிகர் திலகத்துக்கு கௌரவம் : 1
ஃபிரான்ஸ் அளித்த அங்கீகாரம்
'செவாலியே' விருது விழா
22.4.1995 [சனிக்கிழமை]
எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம் : சேப்பாக்கம் : சென்னை
தமிழக முதல்வர் கலைச்செல்வி டாக்டர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் தலைமை வகிக்க, ஃபிரான்ஸ் நாட்டுத் தூதர் திரு. ஃபிலிப் பெடிட் அவர்கள், தங்கள் நாட்டின் மிகமிக உயர்ந்த விருதான 'செவாலியே' விருதை, உலக நடிகர் திலகத்துக்கு வழங்கினார். சிங்காரச் சென்னையில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, இந்தியத் திரையுலகமே திரண்டு வந்து, நமது சிங்கத்தமிழனை வாழ்த்தி, பெருமை தேடிக் கொண்டது. அந்தக் கோலாகலமான விழாவின் வரலாற்று ஆவணங்கள் இனி வரிசையாக:
பொக்கிஷாதி பொக்கிஷம்
வரலாற்று ஆவணம் : தினத்தந்தி : 23.4.1995
http://i1110.photobucket.com/albums/...GEDC6305-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC6306-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC6307-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC6309-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC6310-1.jpg
தொடரும்...
பக்தியுடன்,
பம்மலார்.
-
Quote:
Originally Posted by
vasudevan31355
Dear Vasudevan Sir,
Arumayaana Padhippu....Nadigar Thilagaththin AdhiradiVetrikaaviyam Santhippu oliparappiya Muthiah theater indru..Muthaiyaiyo aagivitadhu kandu enakkum manam valikkiradhu.
Satru Sindhiththoamae aanal, Indraya Thamizh Thirai Ulagin Unmai nilai puriyum. Endru Thagudhiilladha Nadigargalukku, Koadigalaai kotti producers kodukka arambithaargaloe, andrilirundhudhaan theater urimayalargalum sari thaiyaaripaalargalum sari Therukoadikku Vandhu Vittargal..!!
Hmm! Naana Sonnaen Theerppu..Satta Nool Dhaan Endhan Kaapu !!
"Am in the hands of Law ! Am not responsible if there is a Flaw"
:smokesmile:
-
Quote:
Originally Posted by
J.Radhakrishnan
டியர் பம்மலார் சார்,
3000 பதிவுகள் மேலும் 30 ,000 ஆக எல்லாம் வல்ல நம் இறைவன் தங்களுக்கு அருள் புரிவார்.
தங்களின் அன்பான பாராட்டுக்கும், மனமார்ந்த வாழ்த்துக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள், ஜேயார் சார்..!
-
டியர் வாசுதேவன் சார்,
தங்களின் அன்பான பாராட்டுக்கு நன்றி..!
1983-ம் ஆண்டு, ஜூன் 16-ம் நாள், "சந்திப்பு" வெளியீட்டின்போது கடலூர் 'முத்தையா'வில் நிகழ்ந்தவை, உள்ளத்தில் பரபரப்பை உண்டாக்கியது என்றால், இன்று 9.8.2012 அன்று, தங்களால் இடுகை செய்யப்பட்டுள்ள அந்தத் திரையரங்கின் நிழற்படங்கள், இதயத்தை கனக்கச் செய்துவிட்டது. பார்க்கும் எங்களுக்கே இப்படி என்றால், தங்களுக்கு எப்படி இருக்கும் என்பது புரிகிறது. இந்த நிழற்படஙகளை எடுக்க தாங்கள் மேற்கொண்ட பெருமுயற்சிக்கு பெருவாரியான நன்றிகள்..!
அன்புடன்,
பம்மலார்.
-
டியர் ராகவேந்திரன் சார்,
தங்களின் இதயங்கனிந்த பாராட்டுக்கு நன்றி..!
திரு. மருதுமோகன் அவர்கள் தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார், பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள்..!
அன்புடன்,
பம்மலார்.
-
நமது பத்தாவது பாக நடிகர் திலகம் திரியில், அடியேனுக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்த அடிகளாருக்கு அன்பான நன்றிகள்..!
கைபேசியில் பாராட்டி வாழ்த்திய அன்புள்ளம் திரு.சித்தூர் வாசுதேவன் அவர்களுக்கு கனிவான நன்றிகள்..!
-
-
என்றென்றும் மறக்க இயலாத 'எங்கமாமா' காவியப் பாடல்கள் (மிகத் தெள்ளத் தெளிவாக)
http://i1087.photobucket.com/albums/...EngaMama-1.jpg
கொள்ளை அழகு கொஞ்சும் கோமகனின் கோமேதகப் பாடல்கள்.
crystal clear ஆக எங்க மாமா காவியத்தின் பாடல்களை மிக அழகாவும், நேர்த்தியாகவும் சமீபத்தில் தரவேற்றி நம்மை சந்தோஷத்தில் மிதக்க வைக்கும் ராஜ் வீடியோ விஷனுக்கு நமது திரியின் சார்பில் உளம் கனிந்த நன்றி!
"நான் தன்னந்தனிக் காட்டு ராஜா... என் தோட்டத்தில் எத்தனை ரோஜா"...
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=YzqHAAsA9h0
"சொர்க்கம் பக்கத்தில்"....(ஸ்டைல் கிங்கின் அற்புத அசத்தல் மூவ்மென்ட்களில்)
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=7KqCOT4Qito
"செல்லக்கிளிகளாம் பள்ளியிலே... செவ்வந்திப் பூக்களாம் தொட்டிலிலே"....
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=yglkhIIxBf8
"என்னங்க ...சொல்லுங்க" .... (கலக்கல் டூயட்)
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=AcbTAGVyVFg
"பாவை பாவைதான் ... ஆசை ஆசைதான்" (ஜெயலலிதாஅவர்களின் அற்புத நடத்தில்)
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=TdzBf6IvccU
"எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்... நான் வாழ யார் பாடுவார்?"...
http://www.youtube.com/watch?v=vo00ogHbydI&feature=player_embedded
-
nadigar thilagam still - AVM function
-
-
அன்புள்ள வாசுதேவன் சார்,
'சந்திப்பு' திரைப்பட அனுபவத்தைப் பதித்ததைத் தொடர்ந்து, அத்திரைக்காவியம் வெளியான கடலூர் முத்தையா தியேட்டரின் இன்றைய நிலையையும் பல்வேறு கோணங்களில் படம் பிடித்து, அவற்றை சுடச்சுட இங்கே பதிவிட்டு தங்கள் முந்தைய பதிவுக்கு மேலும் சிறப்பு சேர்த்து விட்டீர்கள். அத்திரையரங்கின் இன்றைய கோலம் தங்களைப்போலவே எங்களையும் வருத்தமுறச்செய்தது. (பொதுவாக எங்காவது ஒரு தியேட்டர் மூடப்படுகிறது, இடிக்கப்படுகிறது என்றால் , அது நான் இதுவரை கண்டிராத தியேட்டராக இருந்தாலும், என் மனது வலிக்கும். ஒரு தியேட்டர் மூடப்படுகிறது என்றால், திரையுலக பொற்காலத்தின் ஒரு ஏடு கிழிக்கப்படுகிறதென்று அர்த்தம்). அந்த வகையில், சென்னையில் நாங்கள் படம் பார்த்து மகிழ்ந்த முக்கால்வாசி தியேட்டர்கள் இப்போது இல்லை.
சென்னையில் நடிகர்திலகத்தின் கோட்டைகளாக விளங்கிய சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி அரங்குகளில் இப்போது சாந்தி மட்டும்தானே இருக்கிறது. மற்ற இரண்டு கோட்டைகளும் இப்போது இல்லையே. அதிலும் சாந்தியை விட அதிகமாக நடிகர்திலகத்தின் படங்கள் வெளியான ( சாந்திக்கு முன் சித்ரா, கிரௌன், சயானி காம்பினேஷனிலும் கிரௌன் இருந்தது) வடசென்னை மிண்ட் ஜங்க்ஷன் 'கிரௌன்' தியேட்டர், எங்கள் கண்ணெதிரிலேயே இடித்து தரை மட்டமாக்கப்பட்டபோது எங்கள் மனம் என்ன பாடுபட்டிருக்கும். அந்தத்திரையரங்கினுள் அமர்ந்து எத்தனை படங்களைக் கண்டு களித்திருப்போம். எவ்வளவு வாழ்த்தொலிகள் முழங்கிய இடம் அது.
அதுபோல புரசைவாக்கம் 'புவனேஸ்வரி' அரங்கும். இடிக்கப்படுவதற்கு முன் அப்பகுதி வழியாகச்செல்ல நேர்ந்தபோது, தியேட்டர் மூடப்பட்டு பல காலம் ஆகியிருந்ததால் பாழடைந்து பிரதான நுழைவாயில் உள்பட பட இடங்களில் புதர்கள் மண்டிக்கிடந்தது. எவ்வளவு பொலிவுடன் அந்த ஏரியாவுக்கே அழகு சேர்த்த அரங்கம் அது. அதன் நிலையைப்பார்த்து கண்ணீர் விட்டபடியே சென்றேன். இப்போது அதுவும் இடிக்கப்பட்டுவிட்டதாக கேள்விப்பட்டேன். அதுபோல மற்ற கோட்டைகளான திருச்சி பிரபாத் அரங்கும், மதுரை நியூ சினிமா அரங்கும் கூட இப்போது இல்லை.
மன்னர்கள் மறையும்போது அவர்கள் ஆட்சி செய்த கோட்டைகளை விட்டுச்செல்வது வழக்கம். நமது மன்னரோ கோட்டைகளையும் தன்னோடு எடுத்துச்சென்று விட்டார்.
-
1 Attachment(s)
இடிக்கப்படுவதற்கு முன், பாழடைந்த நிலையில் சென்னை புவனேஸ்வரி தியேட்டர்....
-
திரு.வாசுதேவன் சார்,
கடலூர் முத்தையா தியேட்டர் நினைவுகளைப் பதிவு செய்து, எங்களின் பழைய நினைவுகளையும் கிளரிவிட்டீர்கள்.
திரு.கார்த்திக் அவர்கள் குறிப்பிட்டதுமாதிரி, புவனேஸ்வரி, மேகலா, பாரகன், பிளாசா போன்ற திரையரஙகங்கள் இருந்த பகுதிகளைக் கடந்து செல்லும்போது, நமது எண்ணங்கள் எங்கோ செல்கிறது.
தஙளுடைய எஙக மாமா பதிவு அருமை.
-
டியர் பம்மலார்,
செவாலியெ விருது வழங்கும் விழா பற்றிய பத்திரிகைப் பதிவு அருமை.
அதுபோல், நடிகர்திலகத்தின் அருமையான புகைப்படம், மற்றும் பாடல் இணைப்பு மூலம் சிறப்பான கிருஷ்ண் ஜெயந்தி வாழ்த்துக்க்ள் சொன்ன்து சிறப்பு
-
A MUST WATCH--GOOD SUBTITLING
(KARNAN subtitled by Rekha Haricharan)
Thanks to Mr.Y.G.M to sending me the link.
http://www.youtube.com/watch?v=oNMNQFyksoI
-
திரு பம்மல் சார்,
விலைமதிப்பில்லாத 3000 பதிவுகளை அதுவும் மிக குறுகிய காலத்தில் அளித்து எங்களையெல்லாம் மகிழ்ச்சிகடலில் ஆழ்த்தி கொண்டிருக்கும் தங்களுக்கு பலகோடி நன்றிகள்.
திரு வாசு சார்,
'சந்திப்பு' அனுபவம் அபாரம்.எவ்வளவு எளிமையான நடையில் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நெஞ்சைவிட்டு அகலாத வண்ணம் ஆழமாக பதித்துவிட்டீர்கள்,நன்றி.
-
Dear Esvee Sir,
Thanks to you for posting Rare Stills of NT & function stills.
-
Quote:
Originally Posted by
vasudevan31355
டியர் கல்நாயக் சார்,
'சந்திப்பு' பதிவு தங்கள் நினைவுகளைக் கிளறி விட்டதனால் தங்களிடமிருந்து ஒரு ஜோரான பதிவு கிடைத்தது.. தாங்களும், தங்கள் தந்தையும் சந்திப்பை எங்கள் ஊரில் பார்த்த விதம் அருமை. எங்கள் ஊர்க்காரர்கள் கொஞ்சூண்டு ஏமாளிகள்தான். அதை எப்படியோ தெரிந்து கொண்டு நைசாக, சாமர்த்தியமாக டிக்கெட்எடுத்து விட்டீர்கள். அருமையாக எழுதுகிறீர்களே! ஏன் கன்டின்யூ செய்யக் கூடாது?
vasudevan sir,
நான் 1978-க்குப்பின் கிட்டத்தட்ட 15 ஆண்டு காலங்கள் கடலூரில் வசித்தவன். இப்போது வசிக்காவிட்டாலும் நானும் கடலூர்காரன் என்று நினைப்பதினால், கடலூர்காரர்கள் கொஞ்சூண்டு ஏமாளிகள் என்றால் நானும் அந்த கொஞ்சூண்டு ஏமாளிதான். அந்த சம்பவத்தில் கூட ஒரு தவறு திருத்திகொள்ளப்பட்டது என்று தான் நினைக்கிறேன். தவறாக சொல்வதற்கு ஒன்றுமில்லை
கடலூரின் எல்லாத்திரை அரங்குகளிலும் நடிகர் திலகத்தின் பல படங்களை பார்த்து மகிழ்ந்தவன் நான். OT-யில் கமர் திரை அரங்கிற்கு சென்றது மட்டும் மிகக்குறைவு. மற்றபடி பின்னால் வந்த பாதிரிக்குப்பம் திரை அரங்கில் (பெயர் நினைவில் இல்லை) கூட படங்களை பார்த்திருக்கிறேன். முன்பே சொன்னதுபோல் வீட்டில் திரைப்படங்கள் பார்ப்பதில் கட்டுப்பாடு இருந்ததினாலும், அப்போது சிறியவன் என்பதினாலும் எனது அனுபவங்கள் மிகக்குறைவுதான். எனது எழுத்தை பாராட்டி மீண்டும் எழுதத்தூண்டிய தங்களுக்கு எனது நன்றியை காணிக்கையாக்குகிறேன். வாய்ப்பு கிடைக்கும்போது நிச்சயம் எழுதுகிறேன். மற்றபடி உங்களோடு ஒப்பிட முடியாத அளவிற்கு இன்னும் நான் மிகச்சிறியவனே.
அன்புடன்.
-
அன்புள்ள பம்மலார் சார்,
தாங்கள் பதித்துள்ள 'செவாலியர்' விருது வழங்கும் விழா ஆவணங்கள் படு சூப்பர். அந்த தினத்தந்தி செய்தியில் சிதம்பரம் ஸ்டேடியத்தில் 'விழாவைக்காண ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர்' என்று குறிப்பிட்டிருக்கிறார்கள் அல்லவா?. அவர்களில் நானும் ஒருவனாக இருந்து அந்த விழாவைக் கண்டுகளித்தேன் (அந்த வகையில் நான் 'லட்சத்தில் ஒருவன்').
இப்போது படிக்கும்போது அந்த மலரும் நினைவுகள் மனதில் வந்து அலை மோதுகின்றன. எவ்வளவு மகிழ்ச்சியான நாட்கள் அவை..!!. அந்த விழா குறித்து ஆனந்த விகடன் கவரேஜில் ஒரு விஷயம் குறிப்பிட்டிருந்தார்கள். ஜெயலலிதா முதல்முறையாக முதலமைச்சராக இருந்தபோது நடந்த விழா அது. அன்றைய காலகட்டத்தில் அவர் கலந்துகொள்ளும் எந்த விழாவானாலும் ஒரு பத்துபேராவது அவர் காலில் விழுந்து எழுவது வழக்கம். ஆனால் செவாலியர் விருது விழாவில் திரையுலகத்தினர் ஒருவர்கூட அவர் காலில் விழவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்கள்.
அதுமட்டுமல்லாது, விழாவில் அனைவரும் 'புரட்சித்தலைவி அவர்களே' என்று விளித்துக்கொண்டிருந்தபோது, நடிகர்திலகம் தனக்கு வழங்கப்பட்ட காஃபியை ஜெ.யிடம் நீட்டி "அம்மு, சாப்பிடுறியா?" என்று படு கேஷுவலாக கேட்க, நடிகர்திலகம் ஒருமையில் அழைத்ததை மிகவும் ரசித்த ஜெயலலிதா, புன்சிரிப்புடன் காஃபியை மறுத்து விட்டாராம். அதையும் விகடனில் குறிப்பிட்டிருந்தனர்.
-
அன்புள்ள வாசுதேவன் சார்,
'எங்க மாமா' படத்தைப்பற்றிய குகநாதனின் கட்டுரையைத் தந்த சூட்டோடு, அப்படத்தின் பாடல் காட்சிகளையும் தந்தமைக்கு மிக்க நன்றி. பாடல் காட்சிகளைஅனைத்தும் நீங்கள் குறிபிட்டதுபோல மிகத்தெளிவாக அமைந்துள்ளன. ஒவ்வொரு பாடலிலும் மெல்லிசை மன்னரின் அசுர உழைப்பு தெரிகிறது. குறிப்பாக 'பாவை பாவைதான்' பாடலில் இசையை அள்ளிக் கொட்டியிருக்கிறார். 'என்னங்க சொல்லுங்க' பாடலை இன்னும் சற்று சிறப்பாகப் படமாக்கியிருக்கலாம். குறிப்பாக இரண்டாவது சரணத்தில் இருவருக்கும் உடையலங்காரம் ரொம்ப சுமார்தான். அதுமட்டுமல்ல அந்த இரண்டாவது சரணத்தில், கலைச்செல்வியின் உடையும் சிகையலங்காரமும் திடீரென்று அவருக்கு வயதாகி விட்டது போலக்காட்டும்.
'சொர்க்கம் பக்கத்தில்' பாடலில் தலைவரின் உடல்வாகும், ட்ரெஸ்ஸும், ஸ்டைலும், நடன அசைவுகளும் சூப்பர். நடனத்தில் தேரந்த வெண்ணிற ஆடை நிர்மலாவை மிஞ்சுவார் தலைவர். இப்பாடலில் அவரது ஒல்லியான உடல்வாகைப்பற்றி நமது சாரதா அடிக்கடி சொல்லி மகிழ்வார். 'செல்லக்கிளிகளாம் பள்ளியிலே', 'நான் தன்னந்தனிக்காட்டு ராஜா', 'எல்லோரும் நலம் வாழ' பாடல்களைப்பற்றி சொல்ல்வே வேண்டாம். எல்லா டி.வி.சேனல்களிலும் வாரம் ஒருமுறையாவது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
இப்படத்தை முதலில் எம்.ஜி.ஆரை நடிக்க வைத்து தயாரிக்கலாம் என்று குகநாதன் சொன்ன செய்தியைப்படித்ததும் ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. ஜெயந்தி பிலிம்ஸ் அதிபர் கனகசபைக்கும், ஜேயார் மூவீஸ் அதிபர்கள் சங்கரன் - ஆறுமுகத்துக்கும் ஏற்கெனவே மதுரை ஏரியா திரைப்பட விநியோகத்தில் சற்று மனவருத்தம். இந்நிலையில் இந்தியில் வந்த 'பிரம்மச்சாரி' படத்தை தமிழில் எம்.ஜி.ஆரை வைத்து எடுக்க கனகசபை முயற்சித்தபோது, அதன் உரிமையை ஜேயார் மூவீஸார் வாங்கி விட்ட்டதையும் அதை நடிகர்திலகத்தை வைத்து 'எங்க மாமா' என்ற பெயரில் தமிழில் தயாரிக்கத்துவங்கியதையும் அறிந்து மனப்புழுக்கமடைந்தவர், இந்தியில் வந்த 'ஜிக்ரி தோஸ்த்' படத்தின் உரிமையை வாங்கி வந்து எம்.ஜி.ஆரை இரட்டை வேடங்களில் நடிக்கவைத்து 'மாட்டுக்கார வேலன்' என்ற பெயரில் தயாரித்தார்.
ஏற்கெனவே 'புதிய பூமி'யில் ஜேயார் மூவீஸுடன் ஏற்பட்ட மனக்கசப்பில் இருந்த எம்.ஜி.ஆர். மாட்டுக்கார வேலனுக்கு அதிக கால்ஷீட்டுகள் கொடுத்து மளமளவென்று படத்தை முடித்தார். நடிகர்திலகத்தின் படம் சீக்கிரம் முடிந்து விடுமென்றறிந்து அதற்குப்போட்டியாக விட வேண்டுமென்று படப்பிடிப்பை முடுக்கி விட, அதிசயமாக 'எங்க மாமா'வுக்குப்பிறகு துவங்கிய 'மாட்டுக்கார வேலன்' அதற்கு முன்னமேயே தயாராகி 1969 இறுதியிலேயே தணிக்கையும் ஆகி விட்டது. ஆனால் டிசம்பரில் வெளியிடவில்லை. 'எங்க மாமா' பொங்கலுக்கு ரிலீஸாகிறது என்பதால் அதே நாளில் வெளியிட காத்திருந்தனர்.
இந்த தாமதத்தை எம்.ஜி.ஆரும் கண்டுகொள்ளவில்லை. அதற்கு பல காரணங்கள் இருந்தன. அப்போது ஓடிக்கொண்டிருந்த 'நம் நாடு' படத்துக்கு போதிய இடைவெளி கொடுத்தது போலவும் ஆனது. ஜேயார் மூவீஸ் சங்கரன் ஆறுமுகம் சகோதரகளுக்கு இடையூறு செய்தது போலவும் ஆனது. தன்னுடைய தொழில் போட்டியாளரான சிவாஜியை எதிர்கொண்டது போலவும் ஆனது. (நடிகர்திலகத்தும், மக்கள் திலகத்துக்கும் தீபாவளி வெளியீடுகளான சிவந்த மண், நம்நாடு படங்களுக்குப்பின் பொங்கல் வரையில் வேறு படங்கள் வரவில்லை).
1970 பொங்கலன்று 'எங்க மாமா' மற்றும் 'மாட்டுக்கார வேலன்' வெளியானது. மாட்டுக்காரவேலன் அமோக வெற்றி பெற்று வெள்ளிவிழாப்படமாக அமைய, 'எங்க மாமா' பத்து வாரங்களைத்தொட்டு சுமாரான வெற்றியையே பெற்றது. ஒரு வெற்றிப்படத்துக்குரிய எல்லா அம்சங்களும் இருந்தும் போதிய விளம்பரமின்மை போன்ற காரணங்களால் எங்க மாமா சூப்பர் வெற்றியைப்பெற முடியவில்லை. அதே சமயம் மா.வேலன் எம்.ஜி.ஆர்.ரசிகர்களுக்கு மட்டுமல்லாது எல்லோருக்கும் பிடிக்கக்கூடிய படமாக அமைந்து போனது. அத்ற்கு முந்தைய படமான நம்நாடு படம் முழுக்க அரசியல் நெடி வீசியதற்கு நேர் மாறாக மாட்டுக்கார வேலனில் ஒரு அரசியல் வசனம் கூட இல்லாமல் ஜனரஞ்சகமான படமாக அமைந்து போனது.
ஜேயார் மூவீஸ் சங்கரன் ஆறுமுகத்தை தோற்கடித்ததில் ஜெயந்தி பிலிம்ஸ் கனசபைக்கு திருப்தி. நடிகர்திலகத்தின் படத்தை வெற்றி கொண்டதில் எம்.ஜி.ஆர். தரப்புக்கு மகிழ்ச்சி. அடுத்து என்னவாயிற்று?.
எங்கமாமா படத்தையடுத்து 'ஞான ஒளி' படத்தை ஜேயார் மூவீஸ் தயாரிக்கத் துவங்க, மாட்டுக்கார வேலனையடுத்து 'ராமன் தேடிய சீதை' படத்தை ஜெயந்தி பிலிம்ஸ் கனக சபை தயாரிக்கத் தொடங்கினார். ஞான ஒளி கருப்பு வெள்ளைப்படம். வெளிப்புறக்காட்சிகள் கொடைக்கானலில் படமாக்கப்பட்டன. ஆனால் ராமன் தேடிய சீதை கலரில் எடுக்கப்பட்டது மட்டுமல்லாது வெளிப்புறக்காட்சிகள் காஷ்மீரில் எடுக்கப்பட்டன. இரண்டும் ஒரே சீராக தயாரிப்பு நடந்து வர, கனகசபைக்கு மீண்டும் ஆசை. ஜேயார் மூவீஸ் படத்தை இம்முறையும் எதிர்கொண்டு தோற்கடிக்க வேண்டுமென்று.
நடிகர்திலகம் தொட்டதெல்லாம் பொன்னாகிய 1972 மார்ச் 11-ல் ஞான ஒளி வெளியானது. ஆனால் அதே நாளில் தேவர் தனது 'நல்ல நேரம்' படத்தை வெளியிட எம்.ஜி.ஆரிடம் ஒப்புதல் வாங்கிவிட்டதால், அதே நாளில் கனகசபையால் ரா. சீதையை வெளியிட முடியவில்லை. (ஒரே நாளில் இரண்டு படங்களை வெளியிட நடிகர்திலகமா என்ன?). ஞான ஒளி, நல்ல நேரம் இரண்டும் வெற்றி. ஒருமாதம் தாமதித்து ஏப்ரல் 13 அன்று ராமன் தேடிய சீதையை வெளியிட்டார் கனகசபை. தன் படத்தை வெளியிட்டதும் அப்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த ஞான ஒளி படுத்து விடும் என்று கணக்குப்போட்டார். ஆனால் அது தப்புக்கணக்காகிப்போனது.
இம்முறை கனகசபைதான் கவிழ்ந்து போனார். ஞான ஒளியை வீழ்த்த முடியவில்லை. ராமன் தேடிய சீதைதான் வீழ்ந்தது. பின்னாலேயே மே 6 அன்று இன்னொரு கருப்பு வெள்ளைப்படமான 'பட்டிக்காடா பட்டணமா' வந்து நெருக்க, கனகசபையின் பேராசை நிராசையானது. அதோடு எம்.ஜி.ஆருக்கு முழுக்கு போட்டுவிட்டு, சாமான்யர்களை வைத்து 'அன்புச்சகோதரர்கள்' படத்தை எடுக்கப்போய்விட்டது ஜெயந்தி பிலிம்ஸ் நிறுவனம்.
-
டியர் வாசுதேவன் சார்,
vcgன் கைவண்ணத்தில், 'சினிமா எக்ஸ்பிரஸ்' 16-30 நவம்பர் 2011 இதழில் வெளியான நமது vcgன் "எங்க மாமா" காவியக்கட்டுரை மிக அருமை. 'தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபத்தைக் கொடுத்த திரைக்காவியம்' என அவர் கூறியிருப்பது மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.
தெள்ளத் தெளிவான "எங்க மாமா" பாடல் வீடியோக்கள் பிரமாதம்..!
அன்புடன்,
பம்மலார்.
-
டியர் வாசுதேவன் சார்,
முத்தையா திரை அரங்க நிழற்பட காட்சிகள், சற்றே சோகத்தை ஏற்படுத்தி நினைவை பின்தள்ளுகின்றன. ஊரின் பிரதான இடத்தில் அமைந்தும் எடுபடாத அரங்கம், வரலாற்று சோகமாய் இன்னும் அங்கே நின்று கொண்டு இருக்கிறது. இன்றைய காலக்கட்டத்தில் நல்ல அரங்குகளே தாக்குப்பிடிக்க முடியாத போது, முத்தையாவெல்லாம் இப்படி நிற்பதுதான் எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை அளிக்கிறது. அதை ஏன் மாற்று உபயோகப் படுத்தவில்லை? உங்கள் நிழற்படத்தில் பார்க்கும்போது அதன் சிறிய பகுதிதான் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக பயனாவதாக தெரிகிறது.
8௦களில் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகையின் போது இங்கே புது திரைப்படங்கள் வெளியிடப்பட்டன. இங்கே ஆரம்ப காலத்து ரஜினி (அன்னை ஓர் ஆலயம், ரங்கா), கமல் (தாயில்லாமல் நானில்லை) படங்களும் மற்றவர்களின் புது திரைப்படங்களும் திரையிடப்பட்டன. மற்ற படி நீங்கள் சொன்னது போல் பழைய படங்கள் நிறையவும், மலையாளப் படங்களும், தெலுங்கு டப்பிங் படங்களும், அரிதாக சில ஆங்கிலப் படங்களும் திரையிடப்பட்டன.
நடிகர் திலகத்தின் பிரபலமான பல படங்களை இங்கே பார்த்திருக்கிறேன். நினைவில் நின்ற சில: உத்தம புத்திரன், பாகப்பிரிவினை, படிக்காத மேதை, பாலும் பழமும், கர்ணன்... என்ன சொல்வது? அடுத்த முறை கடலூர் வரும்போது அந்த உயர்ந்த சுவர்களை பார்த்து நினைவுகளை பின்தள்ளி பள்ளி, கல்லூரி வாழ்க்கையை அசை போட்டு வரவேண்டியதுதான்.
அன்புடன்.
-
திரைக்காவிய முதல் வெளியீட்டு விளம்பரங்கள் :14
நடிகர் திலகத்தின் 235வது காவியம்
சந்திப்பு [வெளியான தேதி : 16.6.1983]
வெள்ளிவிழாக் கொண்டாடிய மெகாஹிட் காவியம்
பொக்கிஷாதி பொக்கிஷம்
'35 நாட்களில் 75 லட்சம் ரூபாய் வசூல்' விளம்பரம் : தினத்தந்தி : 29.7.1983
http://i1110.photobucket.com/albums/...GEDC6344-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC6345-1.jpg
தொடரும்...
பக்தியுடன்,
பம்மலார்.
-
டியர் வாசுதேவன் சார்,
நீங்கள் வழங்கிய திரு. V.c. குகநாதனின் எங்க மாமா கட்டுரை அற்புதம். மற்றும் தெளிவான பாடல் காட்சிகளின் 'லிங்க்' களும் சிறப்பு. நன்றிகள் பல.
அன்புடன்.