-
http://4.bp.blogspot.com/_erb_nVDbrY...seenivasan.jpg
நண்பர் கோபால் அவர்களுக்கு
அண்ணா பற்றிய கருத்துகள் அருமை
ஆனாலும் நடிகர் திலகம் 1957 கால கட்டத்திற்கு பின் தான் மிக பெரிய வெற்றி படங்களை கொடுத்து இருக்கிறார்.
ஒரு சிறந்த நடிகனுக்கு அரசியலில் நடிக்கத் தெரியவில்லையே என்பது வேதனை தான்
ஒருவரை வெளியே அனுப்ப முடிவு செய்து விட்டால்அவர்களாகவே வெளியேறும் படி செய்வதில் சில கட்சிகளுக்கு நிகர் எதுவுமே கிடையாது.
சிவாஜி திருப்பதிக்கு சென்றதை அறிந்த பத்திரிகையினர் நாத்திகரான சிவாஜி ஆத்திகராக மாறினார் என்று செய்தி வெளியிட்டனர். திருப்பதியிலிருந்து சென்னை திரும்பும் வழிகளில் சுவரெங்கும் திருப்பதி கணேசா கோவிந்தா..கோவிந்தா என்று எழுதியிருந்தனர். இதை கவனித்த சிவாஜி மனம் வேதனை அடைந்தார். மேலும், சிவாஜியின் போஸ்டர்களில் சாணி அடித்த செய்தியும் அவரின் கவனத்திற்கு வந்தது. கடுப்பாகிவிட்டார்.
இனிமேலும், பொறுமையாக இருப்பதில் அர்த்தமில்லை என்று முடிவுசெய்து உடனே காமராஜரை சந்தித்து தன்னை காங்கிரசில் இணைத்துக்கொண்டார். தி.மு.க.வினர்தான் என்னை தூக்கிக்கொண்டு போய் காங்கிரசில் போட்டனர் என்று பேட்டியும் அளித்தார்.
-
It was a memorable evening at Russian Cutural Centre for the screening of NT's Magnum Opus Puthiya Paravai where the funcation was graced by Mr G Ramkumar. With the fine intro by Mr Murali and the subsequent speech by Mr GR about PP where he had shared an information that the climax scene been reshooted again due to damage of the film and the shooting took place every night for 3 hrs and ended after 12 days.
Everyone thought the super climax which was reshooted second time imagine the first one and he had also narrated the same situation took place for Annan Oru Kovil. He had also shared an info that Sigaram Thodu surpass the collection of Arima Nambi and Annai Illam specifically requested Mr Dhananjeyan of UTV Film to release the film on 12.09 since the release the date of PP also falls on that date.
Wonderful evening, tremendous response and it is a record of sort in terms viewers as the auditorium filled to the capacity. All the hubbers graced the function.
Regards
-
சில நடிகர்கள் அரசியல் இல்லையென்றால் பூஜ்யமே .படங்களின் ஓட்டம் கூட அரசியல் சார்ந்தே. ஆனால் நடிகர்திலகம் purple patch என்று சொல்ல படும் 1958- 1965 ,எந்த அரசியல் இயக்கத்திலும் இணையவில்லை. சார்ந்து நிற்கவில்லை. காமராஜரிடம் எனக்கு தலைவர் என்ற ரீதியில் மரியாதை உண்டு.ஆனாலும் ,இவர்களுக்கு விசுவாசமாக கைகாசு போட்டு உழைத்து ,உடலையும் கெடுத்து கொண்ட நடிப்பு தெய்வத்திற்கு ,நன்றியை எப்படி காட்டினார்கள்? காமராஜ் ,இவரை அடையாளம் காட்டி தனி அங்கீகாரம் கொடுத்தாரா?வளர்த்த கடா மூப்பனார் இவருக்கு செய்த பதில் மரியாதை என்ன? காமராஜ் படத்தை,சிவாஜி இல்லாமல் எடுத்திருக்கும் இந்த கும்பலுடன் இணைந்ததால் கண்ட பலன் என்ன?
அண்ணா அறிவாலயத்தில்,நன்றி மறக்காமல் சிவாஜி பற்றிய ஆவணங்களை வைத்தனர். சிலை வைத்தனர். தி.மு.க ,உழைப்பவருக்கு தரும் அங்கீகாரம் காங்கிரஸ் தந்ததேயில்லை.
அதனால்தான் சொல்கிறேன், அரசியல் என்ற எமனிடம் ,நடிகர்திலகம் நெருங்கியே இருக்க வேண்டாம். இந்தியாவில் செல்லுபடியாகும் தலைமை குணங்களை அவர் கொண்டிருக்கவும் இல்லை.
-
Recap of Mr Partha Sarathy old Post
நடிகர் திலகமும் அவர் நடித்த படங்கள் பிற மொழிகளில் (தொடர்ச்சி...)
8. ஞான ஒளி (1972) / தேவதா (1980) - ஹிந்தி
இந்தப் படம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான (எனக்கு மட்டுமா?) நடிகர் திலகத்தின் பத்து படங்களுள் ஒன்று.
வியட்நாம் வீடு சுந்தரத்தின் நாடகம், மேஜரால் நடிக்கப்பட்டுக்கொண்டிருக்கும்போது, இந்த நாடகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு, ஒரு நாள் நடிகர் திலகம் அதைப் பார்க்க விரும்பி, பார்த்த மாத்திரத்திலேயே, இதை படமாக எடுக்க வேண்டும் என்றும் மேஜர் நடித்த பாத்திரத்தைத் தான் ஏற்க விரும்புவதாகவும் மேஜரிடம் கூறியிருக்கிறார். இதற்குப் பிறகு, அந்த “அந்தோணி” கதாபாத்திரத்தை இன்னும் மெருகேற்றவும், ஒரு இடத்தில் கூட மேஜரின் சாயல் வந்து விடக் கூடாது என்பதற்காகவும், திரும்பத் திரும்ப, தொடர்ந்து அந்த நாடகத்தைப் பார்க்கச் சென்றாராம். மேஜர் ரொம்பவே தர்மசங்கடத்துக்குள்ளாகி விட்டாராம். இது படமாக்கப் பட்டபோது, மேஜர் நடித்த அந்தோணி பாத்திரத்தை நடிகர் திலகமும், அவரது மாமா திரு. வீரராகவன் நடித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் பாத்திரத்தில், மேஜரும் ஏற்று நடித்தார்கள்.
எனக்குத் தெரிந்து, நடிகர் திலகம் முதன் முதலில் படம் நெடுகிலும் ஒரு கிறித்தவராக நடித்த படம் இது தான். கிறித்தவர்கள் கடவுளை நோக்கி ஜெபம் செய்யும் முறையிலிருந்து அவர்கள் “ஆண்டவரே!” என்று அழைக்கும் முறை வரையிலும் அணு அணுவாக ஆராய்ந்து, அதற்குப் பின் தான் அந்த அந்தோணி கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கத் துவங்கினார். எப்போதுமே, அவர் புதிதாக ஏற்கும் எந்தக் கதாபாத்திரத்தையும், அந்த முதல் முயற்சியிலேயே, முழு வெற்றியடைய வைத்து விடுவார் - மிகுந்த ஆராய்ச்சி செய்து, முனைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் கற்பனை வளத்துடன் ஒரு தேர்ந்த சிற்பி போல் செதுக்குவதால் -
முஸ்லீம் அன்பராய் ஏற்ற ரஹீம் பாத்திரம் (பாவ மன்னிப்பு)
கிறித்தவ அன்பராய் ஏற்ற அந்தோணி பாத்திரம் (ஞான ஒளி)
பிராம்மண சமூகத்து ப்ரெஸ்டிஜ் பத்மநாபன் பாத்திரம் (வியட்நாம் வீடு)
கடமை தவறாத காவல் துறை அதிகாரி எஸ்.பி. சௌத்ரி பாத்திரம் (தங்கப்பதக்கம்)
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். நான் இதை சொல்லக் காரணம் - இதையே ஒரு சப்ஜெக்ட் ஆக வைத்து ஒரு புதிய கட்டுரையை ஏனைய அன்பர்களோ, ஏன் நானோ, எழுதத் துவங்கலாம்.
இந்தப் படம் திரு. பி. மாதவன் அவர்களின் சுவாரஸ்யமும், விறுவிறுப்பும் நிறைந்த திரைக்கதையால், கொஞ்சம்கூட தொய்வில்லாமல் செல்லும். இத்தனைக்கும் இந்தப் படம், பொழுதுபோக்கு அம்சங்கள் சொற்பமே நிறைந்த ஒரு கலைப்படம் போல் தான் இருக்கும். (படத்தின் ஆரம்பத்தில் வரும் நடிகர் திலகம் - விஜயநிர்மலா சம்பந்தப் பட்ட காதல் காட்சிகள் கலகலப்பாக இருக்கும். பிற்பாதியில் வரும் MRR வாசு / ISR போன்றோரின் மிகச்சில காட்சிகள் - கொஞ்சம் கேலிக் கூத்து தான்). பெரிய பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் தனியான காமெடி ட்ராக் இல்லாமல், உணர்ச்சி மிகுந்த சம்பவங்களையும் அதில் நடித்த நடிகர்களையும் மட்டுமே நம்பி, ஆனால் மிக வேகமாகவும் சுவாரஸ்யமாகவும் செல்லும். முக்கியமாக, நடிகர் திலகத்தின் அனாயாசமான, உணர்வுபூர்வமான, மற்றும் அலாதியான ஸ்டைலான நடிப்பாலும், அதற்கு ஈடு கொடுத்துச் சிறப்பாக செய்த மேஜரின் நடிப்பாலும், பி. மாதவனின் சாதுர்யமான இயக்கம் மற்றும் திரைக்கதையாலும், சாரதா, விகேயார் போன்ற கலைஞர்களின் சிறப்பான பங்களிப்பாலும், மெல்லிசை மாமன்னரின் அற்புதமான பின்னணி இசை (படத்தின் இரு வகையான தீம் ம்யூசிக் இடம் பெற்றிருக்கும். ஒன்று நடிகர் திலகத்தை ஒவ்வொரு முறையும் சோகம் கவ்வும்போது; மற்றொன்று, பின் பாதியில், அவரும் மேஜரும் சந்திக்கும்போதேல்லாம் வருவது; மற்றும் சிறந்த பாடல்களாலும் (குறிப்பாக, தேவனே என்னைப் பாருங்கள்) வசூல் சாதனை செய்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.
பொதுவாக, பொழுதுபோக்கு அம்சங்கள் பெரிதாக இல்லாத படங்கள் வியாபார ரீதியாக வெற்றி பெறுவதில்லை. அதை பெரிய அளவில் முறியடித்து, தொடர்ந்து, நல்ல கருத்துச் செறிவுள்ள படங்களையும் கொடுத்து, அவைகளை வியாபார ரீதியாக பெரிய வெற்றிப்படங்களாக்கியதும் நடிகர் திலகம் மட்டும் தான். இதைத்தான் ஒருமுறை திரு. கமல் அவர்கள் இப்படிச் சொன்னார்.
நடிகர் திலகம் மட்டும் தான் ஒரே நேரத்தில் நடிகராகவும், மக்களைப் பெரிதும் கவர்ந்த நட்சத்திரமாகவும் மிக, மிக வெற்றிகரமாக இருந்தார். அந்தப் பாதையைத் தான் ரொம்ப வருடங்களுக்குப் பிறகு தேர்ந்தெடுத்து அதில் பயணித்துக் கொண்டிருக்கிறேன் (எனக்குத் தெரிந்து நாயகன் படத்திலிருந்து) என்று கூறினார்.
ஞான ஒளியைப் பொறுத்தவரை, ஒரு மனிதனின் வாழ்க்கையில் வெவ்வேறு காலகட்டத்தில் நடக்கும் சம்பவங்களையும், அதில் நடிகர் திலகத்தின் நிலைமைகளையும் மிகவும் உணர்வுபூர்வாக எடுத்துரைத்த படம். படத்தின் கால ஓட்டங்களுக்கேற்ப அவரது வித்தியாசமான நடிப்பைப் படம் நெடுகிலும் கண்டு ரசிக்கலாம்.
முதலில் வரும் சில காட்சிகளில், வெறும் அரைக்கால் சட்டையை அணிந்து நடித்தாலும், படம் பார்க்கும் ஒருவரைக் கூட, அவர் நகைக்க விட்டதில்லை. அவரது உடல் மொழி, அந்த அளவிற்கு, அந்தக் கதாபாத்திரத்தோடு இழைந்து, இணைந்திருக்கும்.
இந்தப் படத்தில், அவரது கதாபாத்திரம் இடது கைப் பழக்கம் உள்ளவராக அமைக்கப் பட்டிருக்கும். இயற்கையாகவே ஒருவருக்கு இடது கைப் பழக்கம் இருந்தால் அவர் அந்தக் கையை எப்படிக் கையாளுவாரோ, அதை அப்படியே அச்சு அசலாக, ஆனால், மிக மிக இயல்பாக கண்முன் நிறுத்தியிருப்பார். இந்தப் படத்திற்கான எம்ப்ளமே, அவர் இடது கையால், மெழுகுவர்த்தி ஹோல்டரை ஓங்குவது போல் வரும் ஸ்டில் தானே. படத்தின் முற்பாதியில், இடது கைப் பழக்கம் உள்ள அந்தோணியாகவும், பின் பாதியில், கோடீஸ்வர அருணாக வரும்போது, வலது கைப் பழக்கம் உள்ளவராகவும் – அனாயாசமாக அந்த வித்தியாசத்தைக் காட்டியிருப்பார்.
ஆங்கிலத்தில் “intense performance” என்று சொல்லுவார்கள். When it comes to performing a role with intensity, none in the entire world can even stand near the shadow of NT.
இதில் முதல் பாதி, எல்லோருக்காகவும், இரண்டாம் பாதி, எல்லோருக்காகவும் பிளஸ் அவரது பிரத்தியேக ரசிகர்களுக்காகவும் பண்ணியிருப்பார் (பின்னியிருப்பார்). ஆனாலும், அவரது நடிப்பு வழக்கம் போல அந்தக் கதாபாத்திரத்தின் தன்மையை சிறிதளவு கூட சிதைக்காது.
முதலில், விஜய நிர்மலாவை மடக்கும் கட்டங்களில் சாமர்த்தியமான, ஜனரஞ்சகமான நடிப்பு;
ஆனாலும், அதே விஜய நிர்மலாவுடன் பாதிரியாரின் முன் நிற்கும் நிலை வரும்போது, அந்தப் பணிவு கலந்த நகைச்சுவையான நடிப்பு;
மனைவி விஜய நிர்மலா மறைந்தது தெரிந்ததும், யாருக்கோ செய்த சவப்பெட்டி தன் மனைவிக்கே பயன்படப்போவதை நினைத்துக் காட்டும் பாவங்கள் (ஆளாளுக்கு subtle நடிப்பு subtle நடிப்பு என்று இந்தக் காலத்தில் கூறிக் கொண்டே இருக்கிறார்களே – இதுதானே subtle நடிப்பு!)
தன் பெண் பெரியவளாகி படிப்பிற்கிடையே, லீவில் வரும் போது, அவருடன் உரையாடும் காட்சிகள்; பெண் சாரதா இரயிலில் பயணம் செய்யும்போது, தவறுதலாக ஸ்ரீகாந்த்துடைய பெட்டி கை மாறி, இவர் கைக்கு வந்து விட, அந்தப் பெட்டியை, நடிகர் திலகம் பார்த்து, வெள்ளந்தியாக, அதில் இருக்கும் ஆண் உடைகள் தனக்குத்தான் தன் பெண் சாரதா வாங்கி வந்திருக்கிறார் என்று நினைத்துக் கொண்டு அந்த உடைகளைப் போட்டுக் கொண்டு (முக்கால் பான்ட்) வந்து வெகுளியாக நிற்பது;
தன் பால்ய நண்பன் லாரன்ஸைத் (மேஜர் சுந்தரராஜன் அவர்கள்) திரும்பப் பார்த்தபின் அவர் கை கொடுக்கும்போது, இவர் தனது இடது கையை ஒருமாதிரி அவரது சட்டையில் துடைத்துக் கொண்டே கொடுக்கும் அந்த அப்பாவித் தனம்;
வயல் வரப்போரம் நடிகர் திலகமும் மேஜரும் பேசிக்கொண்டே வரும்போது, தன் பெண் பெரிய டாக்டராக வேண்டும் அதன் மூலம் அவரது வாழ்க்கையில் படிந்திருக்கும் கரையைத் துடைக்க வேண்டும் (கொலைகாரன் பெற்ற பிள்ளை!) என்று தன் கனவை வெளிப்படுத்திக் கொண்டே வந்து; வீட்டில், தன் கண்ணெதிரே, தன்னுடைய பெண் வேறொரு வாலிபனுடன் (ஸ்ரீகாந்த்) இருப்பதைப் பார்த்து பேரதிர்ச்சியடைந்து, கொந்தளித்துக் குமுறும் அந்தக் கட்டம் – முதலில், பெண்ணை இன்னொருவனுடன் பார்த்த மாத்திரத்தில் காட்டும் அதிர்ச்சி, இடது கண் துடிக்கும் – ஆஹா, இதற்காகத்தான் நான் உன்னை இவ்வளவு நாள் வளர்த்தேனா நான் பெத்த மகளே! என்று கதறிக் கொண்டிருக்கும்போது, ஓசைப்படாமல், ஸ்ரீகாந்த் அங்கிருந்து மெல்ல நழுவுவதைப் பார்த்து, ஒரே தாவலில் (என்ன ஒரு வேகம்), அவரைப் பிடித்து, அரிவாளும் கையுமாய் ஒங்க, அவரை மேஜர் பிடித்து இழுக்க – ஒரு action படத்தில் கூட இப்படி விறுவிறுப்பான ஒரு action பார்ப்பது கடினம் – இங்கு ஒரே நேரத்தில், நடிகர் திலகம், அதிர்ச்சி, அவமானம், கோபம், வேகம், வன்மம், கண்மூடித்தனமான ஆத்திரம் – அனைத்தையும் – அற்புதமாக உணர்ச்சிகரமாக சித்தரித்திருப்பார். திரை அரங்கிலிருக்கும் ஒட்டு மொத்த மக்களையும் கட்டிப்போட்ட அற்புதமான, உணர்ச்சிக்கொந்தளிப்பான கட்டம்.
உடனே, மேஜரின் வற்புறுத்தலின்பேரில், அவருடைய மகளுக்கும் அந்த ஊர் பேர் தெரியாத வாலிபனுக்கும் கிறித்தவ முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்பட, இப்படியா என் பெண் கல்யாணம் நடக்கணும், இதுக்காவா அவளை அரும்பாடுபட்டுப் படிக்க வச்சேன் என்று பொருமி, புலம்பி, அரிவாளை எடுத்துக் கொண்டே அத்தனை கோபத்தையும் வெறியையும், வாழைத் தோப்பின் மேல் காட்டி, அத்தனை வாழைக் குலைகளையும் சீவு சீவென்று சீவித் தன் கோபத்தை வெளிப்படுத்தும் விதம்! (நடிக்க ஆரம்பித்து இருபது வருடங்களுக்குப் பிறகும், ஒரு புது மாதிரியான நடிப்பு - இயலாமையை, கோபத்தை வேறு ஒரு புது மாதிரியாக வெளிப்படுத்திய விதம்!!).
இருந்தாலும், தன் பெண்ணுக்கு முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்பட வேண்டும் என்று ஒரு தந்தையின் மன நிலையோடு போய் ஸ்ரீகாந்த்தை அணுக, அவர் ஒரு ஸ்திரீலோலன் என்று தெரிந்து, எவ்வளவோ பொறுமையாகக் கெஞ்சியும், அவர் வர மறுத்ததோடு நிற்காமல், அவரின் பெண்ணையே கேவலமாகப் பேசியதைத் தாங்கிக்கொள்ள முடியாமால், ஒரே அடியில் அவரை அடித்துப் பிண்டமாக்கித் தோளில் போட்டுக் கொண்டு வந்து மாதா கோவிலுக்கு வந்து போட்டு விட்டு, அப்புறம் தான் ஸ்ரீகாந்த் இறந்தே போயிருக்கிறார், தான் செய்தது ஒரு கொலை என்றறிந்து, குழந்தையைப் போல் நான் கொலை செய்யவில்லை என்று கதறுவது; தன் பெண்ணின் வாழ்க்கைக்குத் தானே எமனாகி விட்டதை நினைத்து வெடித்துக் குமுறுவது (அவரே ஒரு கொலைகாரன் பெற்ற பிள்ளை, இப்போது அவரும் ஒரு கொலை செய்து விடுவார் - ஆனால் வேண்டுமென்றே இல்லை!);
"ஞான ஒளி" தொடரும்,
-
நடிகர் திலகமும் அவர் நடித்த படங்கள் பிற மொழிகளிலும் (தொடர்ச்சி...)
8. ஞான ஒளி (தொடர்ச்சி)
நடிகர் திலகம் சிறைக்குச் சென்ற பின் அடைக்கலம் பாதிரியாரின் உடல் நிலை மிகவும் மோசமடைந்து, அவரும் தான் மறைவதற்குள் மொரட்டுப்பயலைப் (அந்தோனி - நடிகர் திலகம்) பார்க்க விரும்புவதாக மேஜரை வற்புறுத்தி, அவரும் வேறு வழியின்றி அவரது மேலதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி வாங்கி, நடிகர் திலகத்துடன் பாதிரியாரைப் பார்க்க வருவார். அவரது அறையின் வாயிலுக்கு இருவரும் வந்தவுடன், நடிகர் திலகம் என்ன செய்வார் என்று தெரிந்து கொண்டு "பாதிரியாரிடம் போ.. ஆனால் தப்பிக்கக்கூடாது... தப்பிக்க நினைத்தால் ... என் ரிவால்வர் அதன் வேலையைச் செய்யும் ஜாக்கிரதை " என்று சைகையால் சொல்லி, அவரை அனுப்பியதும், ஒரு குழந்தைப் போல் ஓடி வரும்போதே, பார்க்கும் அனைவரையும், அந்தக் கட்டத்துக்குள் கூட்டிச் சென்று, தொண்டையை வலிக்கச் செய்து விடுவார். ஓடி வந்து,பாதிரியாரின் மடியில் முகத்தைப் புதைத்துக் குலுங்கிக் குலுங்கி சத்தமே கேட்காமல் அழும்போது கரையாத நெஞ்சமும் கரையும் (இப்போது
அழும் அழுகை சத்தமில்லாமல், முகத்தையும் பெரிதாகக் காட்டாமல், உடல் மொழியாலேயே வரவழைத்த அழுகை – இந்த அழுகை பார்க்கும் அனைவரையும் தொற்றிக் கொள்ளும்!) மொரட்டுப்பயலே, சொல்லு, இனிமே நான் மனுஷனா மாறுவேன்னு எனக்கு சத்தியம் செய்து கொடுடா!" என்று சொல்லி நடிகர் திலகம், மேஜர் இருவரது கைகளையும் பற்றிக் கொண்டே உயிரை விடும் திரு. கோகுல்நாத் அவர்கள் இந்தப் படத்தின் முக்கியமான தூண்களில் ஒருவர் - நாடகத்திலும், இந்தப் பாத்திரத்தை இவர் தான் செய்தார். இவர், மேஜரெல்லாம் ஒரு காலத்தில், கே. பாலசந்தர் அவர்களின் ராகினி கிரியேஷன்ஸ் நாடக ட்ரூப்பில் நடித்துக் கொண்டிருந்தவர்கள் தான். பின் அவரது படங்களிலும் தவறாமல் நடித்தார்கள்.)
பாதிரியார் இறந்தவுடன் நடந்தேறும் களேபரம் – நடிகர் திலகமும் மேஜரும் கண்ணை மூடி ஜபம் செய்ய – மேஜர் கண் விழிப்பதற்குள் நடிகர் திலகம் கண் விழித்து – தன் குறுக்கு மூளையால் யோசித்து – மேஜரின் ரிவால்வரில் இருக்கும் தோட்டாக்களை எடுத்துத் தன் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு – “என்ன விடு நான் போகணும்” என்று கூறி வெகு இயல்பாக அப்பாவித்தனம் கலந்த முரட்டு தனத்துடன் தப்பிக்க முயன்று, கடைசியில் மேஜரை மெழுகுவர்த்தி ஹோல்டரால் மண்டையில் அடித்து விட்டு – மன்னிச்சிக்க லாரான்சே என்று சொல்லித் தப்பித்து – மனது கேட்காமல் – மறுபடியும் பாதிரியார் அடக்கம் செய்யப்படும் இடத்துக்கு பாதிரியாரின் அங்கியில் வந்து மறுபடியும் மாட்டிக் கொண்டு தப்பித்து – கடைசியில் கடலில் குதித்துத் தப்பிக்கும் வரை - படம் போவது புல்லட் எக்ஸ்பிரஸ் வேகம்.
இடைவேளைக்குப் பின்னர், அதே பூண்டி கிராமத்துக்கு, பெரிய கோடீஸ்வர அருணாக வந்து கலக்கும்/கலங்கும் கட்டங்கள்!
பூண்டி கிராமத்துக்குத் திரும்பவும் கோடீஸ்வர அருணாக வரும்போது, காரில் அவர் அமர்ந்திருக்கும் தோரணை மற்றும் சிகை அலங்காரம், மீசை மற்றும் அந்த கூலிங் கிளாஸ் – ஆரம்பமே பெரிய அமர்க்களத்துக்கு அச்சாரம்!
அமலோற்பவ மாதா கோவிலுக்குள் நுழைந்தவுடன், நேரே அங்கிருக்கும் அடைக்கலம் பாதிரியாரின் போட்டோவைப் பார்த்து மௌனமாகக் கலங்குவது; அங்குள்ள பள்ளி நிர்வாகிகள் (திரு. எஸ்.ஏ.கண்ணன் அவர்கள் மற்றும் திரு வீரராகவன்) அங்குள்ள குழந்தைகளை – குறிப்பாக ஒரு குழந்தையைப் பார்த்து நெகிழ்வது – அவரை அங்குள்ள ஆசிரியைகளுக்கு அறிமுகப் படுத்தும் போது, கடைசியாக, அவருடைய பெண் மேரியைப் பார்த்து முதலில் மேரி! என்று சொல்லி, உடனேயே, அவருக்கே உரிய பாணியில் மேரி மாதா என்று சமாளிப்பது; தன்னுடைய பெண் இப்போது எங்கு வசிக்கிறார் என்று மற்ற விவரங்களைப் பற்றி அறிய முற்படும்போது, போட்டோவில் உள்ள கண்ணாடியில், சர்ச்சுக்குள், இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் (மேஜர்) நுழைவதைத் தன்னுடைய கூலிங் க்ளாஸ் மூலமாக ஸ்டைலாகப் பார்த்து விட்டு, மெல்ல அங்கிருந்து நகர்வது எல்லாம் பார்ப்பவரை நயமாக அந்த சூழலுக்குள் இட்டுச் செல்லும்.
தன் பெண் எங்கிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டு வீகேயார் வீட்டிற்குச் சென்று, அவரது பேத்தி ஜெயகௌசல்யாவைப் பார்த்து, அவர்தான் தன் பேத்தி என்று அறிந்து மகிழ்ந்து, அவருடைய பெயர் என்ன என்று கேட்டு, தன்னுடைய மனைவியின் பெயரான ராணியையே அவருக்கும் வைத்திருக்கிறார்கள் என்றறிந்து மேலும் மகிழ்வது.
அவரது பெண் சாரதா வந்தவுடன், தான் தான் அவரது அப்பா அந்தோனி என்று அவரது இடது கையால் வலது தோளை முன் போல் தடவி சைகையால் சொல்லிப் புரிய வைக்கும் நேரம் பார்த்து, பின்னால் மேஜர் கழுகு மாதிரி வருவதை சாரதா மூலம் தெரிந்து கொண்டு, கனைத்து சமாளிப்பது; தொவில்லாமல் சுவாரஸ்யமாக நகுரும் கட்டங்கள்.
உடனேயே, மேஜருக்குத் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி, அதே வேகத்துடன் தன் வீட்டிற்கு வந்து, வெறுப்பில் லாரன்ஸ் என்று கொஞ்சம் சத்தமாகச் சொன்னவுடன், உடனே லாரன்ஸ் என்ற ஒரு வேலையாள் வந்து நிற்க, அவரை நீ யார் என்று வினவி, கோபத்தின் உச்சிக்குச் சென்று, செக்ரடரியைக் கூப்பிட்டு, இவருக்கு உடனே பணம் கொடுத்து செட்டில் பண்ணிடு. – நோ மோர் லாரன்ஸ் ஹியர்! என்று ஆங்கிலத்தில் சொல்லும் அந்த ஸ்டைல் – என்ன ஒரு ஆங்கில உச்சரிப்பு!
மேஜர் நடிகர் திலகத்தின் வீட்டிற்குச் சென்று அவரது கை ரேகையை எடுக்க முயல்வதும், அவரிடம் பிடி கொடுக்காமல் நடிகர் திலகம் நழுவுவதும்; அவரது இடது கண் தான் தெரியாதே (ஏனென்றால் அந்தோணியின் வலது கண் திரை போடப்பட்டிருக்கும்; ஆனால், அருணாகிய இவர் எப்படியும் இந்தப் பரீட்சையில் பெயிலாகி விடுவார் என்று மேஜர் தீர்மானிப்பார்); அதை மறைப்பதற்காகத்தான் கறுப்புக் கண்ணாடி அணிந்திருக்கிறார் என்று ஊகித்து, சட்டென்று நடிகர் திலகம் எதிர்பாராத வகையில் அவரது முகத்திலிருந்து கண்ணாடியைப் பிடுங்க, நடிகர் திலகம் ரொம்பக் கூலாக, வலது கண்ணை மூடிக் கொண்டே, இடது கண்ணால் அவரைப் பார்க்க, மேஜரோ, உங்கள் இடது கண் வித்தியாசமாக இருக்கிறதே என்று சொல்ல, அதற்கு, நடிகர் திலகம், இல்லையே, "you are wearing a black tie and the time now is seven ten" என்று அலாதியான ஸ்டைலில் அவரை மடக்குவது – எல்லாமே அற்புதம்.
மேஜர் அங்கிருந்து கிளம்பும் போது, வீட்டின் கதவிலக்கம் என்ன என்று கேட்க, நடிகர் திலகம் 1/99 என்று சொன்னவுடன், மேஜர், நக்கலாக, நான் 199-ன்னு நினைச்சேன் என்று சொல்லி விட்டு நகருவார். அவர் முன்பு கைதியாக இருந்தபோது, அவருடைய கைதி எண் 199, அதைத் தான் சாடையாகக் குத்திக்காட்டி அவரை மடக்கி விட்டதாக நினைத்துக் கொண்டு மேஜர் அங்கிருந்து விலகியதும், கோபத்துடன், வேகமாக அவரது ரூமுக்குச் சென்று, மறுபடியும் அதே வேகத்துடன், படத்தின் முத்தாய்ப்பான பாடலான “தேவனே எண்ணிப்பாருங்கள்” பாடலைப் பாடுவது – வேக வேகமாய் நடந்து “தாய் மடியிலே மழலைகள் ஊமையோ; சேய் உறவிலும் நினைவுகள் மௌனமோ; நோய் உடலிலா மனதிலா தேவனே; நான் அழுவதா சிரிப்பதா கர்த்தரே” என்று முடிக்கும் போது இலேசாகக் காலை விரித்து இரண்டு கைகளையும் உயர்த்தும்போது அரங்கத்தில் எழும் ஆரவாரம் அடங்க வெகு நேரம் பிடிக்கும்! இந்தப் பாடலில், மேகக் கூட்டங்கள் நகர்வது படமாக்கப் பட்டது பற்றி பலர் எழுதி விட்டனர் (ஒளிப்பதிவு மேதை பி.என். சுந்தரம் அவர்கள் கூட இதைப் பற்றி விரிவாக சிலாகித்துக் கூறியிருக்கிறார்). மிகச் சரியாக அந்த மேகக் கூட்டம் நகரும்போது எடுக்கப்பட்டதால், அந்தக் காட்சி மிக மிக இயற்கையாக இருக்கும். அந்தப் பாடலின் முடிவில், கொண்டு வா இல்லை கொண்டு போ என்று ஒவ்வொரு கையாக உயர்த்தி சொல்லி, உன் கோவிலில் வந்து சேவை செய்கின்றேன் என்று இரண்டு கைகளையும் கூப்பி முடிக்கும் அழகு! ஒ!
தன்னுடைய பேத்தி ஜெய கௌசல்யா வேறொரு வாலிபனுடன் (மேஜரின் மகன்) நடந்து போவதைப் பார்த்து விட்டு, பின்னர், சாரதா அந்தக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தவுடன், ஜெய கௌசல்யா சர்ச்சுக்குச் சென்று ஜெபம் செய்யும்போது, அங்கு அவருடைய செக்ரடரியிடம் பேசிக்கொண்டே வருபவர் (கார்டன் க்ளம்சியா இருக்கு, சரி பண்ணு…. என்ன ஒரு ஆங்கிலம்!) இவரைப் பார்த்து விட்டு, ஜெய கௌசல்யாவை நெருங்கி, அவருடன் சேர்ந்து பைபிள் படிப்பது போல், அவருக்கு புத்திமதி சொல்லி, கவலைப் படாதே, நான் பார்த்துக் கொள்ளுகிறேன். அம்மா சொல்வதைக் கேள் என்று அவருக்கு தேறுதல் கூறி அனுப்பும் பாங்கு (இதைத் தான் அடிப்படையாக வைத்து, பின்னாளில், ரஜினி அவர்கள் தந்தை வேடம் ஏற்ற நல்லவனுக்கு நல்லவன், அண்ணாமலை மற்றும் படையப்பா போன்ற படங்களில், செய்திருப்பார்!).
இப்போதுதான் படத்தின் முக்கியமான காட்சி. மேஜர் அவருடைய மகனை சாரதா தங்கியிருக்கும், வீகேயார் வீட்டிற்குக் கூட்டி வந்து, அவருடைய மகள் ஜெய கௌசல்யாவிற்கு சம்பந்தம் பேச ஆரம்பித்து, அதற்கு, சாரதா மறுக்க, சரியாக அந்த நேரத்தில், நடிகர் திலகம் கைகளில் எப்போதும் அணியும் வெள்ளை நிற உரைகளை அணியாமல் அங்கு வந்து சேர, “ஆஹா! இந்த சந்தர்ப்பத்திற்காகத்தானே இத்தனை நாள் ஏங்கிக்கிடந்தோம்” என்று மேஜர் நினைத்து, அவரைப் பார்க்க, “என்னை உன்னால் ஒண்ணும் பண்ண முடியாது. என்னையா மடக்கப் பார்க்கிறாய்” என்பது போல், ஒரு பார்வை – அதற்கேற்றாற்போல் ஒரு நடை. வந்து அமர்ந்து பேசி முடிந்தபின், எல்லோரும் வெள்ளித் தம்ப்ளரில் (பாலோ, தேநீரோ ஏதோ ஒன்று) பருகிக் கொண்டிருக்கும்போதே, மேஜர் நடிகர் திலகத்தைக் குறி வைத்து, அவருடைய கை ரேகை படிந்த வெள்ளித் தம்ப்ளரை அவருக்குத் தெரியாமல் எடுத்து தன் பாக்கெட்டுக்குள் வைத்துக் கொள்ள; (இதை சாரதா பார்த்து அதிர்ச்சியடைந்து விடுவார்!) இதை நடிகர் திலகம் கவனிக்காதது போல்தான் முதலில் தெரியும். ஆனாலும், மேஜர் காரியத்தை முடித்து விட்ட திருப்தியில், கிளம்பும் போது, நடிகர் திலகம் “இன்ஸ்பெக்டர்!” என்று கூறி அவரை அழைத்து, அவர் அருகில் வந்தவுடன், சன்னமான குரலில், கௌரவமான நக்கல் தொனியில், “இன்ஸ்பெக்டர், மத்தவங்க செஞ்சா அது குற்றம். ஆனா, அதையே நீங்க செஞ்சா அது ஞாபக மறதி, இல்லையா?” என்று கேட்க, மேஜர் நடிகர் திலகத்தைப் பார்த்து “what do you mean?” என்று சீற, நடிகர் திலகம் தனக்கேயுரிய ஸ்டைலில் “I mean the silver tumbler” என்று கூறிக் கொண்டே, அவருடைய கைகளில் இருந்து, யாரும் எதிர்பார்க்காத வகையில், மெல்லிய உறையைக் கழற்றி டீபாவில் வைக்கும் போது , திரை அரங்கமே கூரை பிய்ந்து கொள்ளும் அளவுக்கு அலறும். மேஜர் அசடு வழிந்து சிரிக்க, இவரோ, எப்படி, பார்த்தியா? என்ன ஒங்களால கட்ட முடியாது என்று சைகையால் சிரித்து முடிப்பார்.
ஞான ஒளி தொடரும்,
-
ஞான ஒளி (தொடர்ச்சி...)
தொடர்ந்து, அவரது வீட்டிற்கு வந்து சாரதா வந்திருப்பதை செக்ரட்டரி சொன்னவுடன், உடனே, அந்த வாஞ்சையைக் காட்டி சட்டென்று முகத்தை சாதாரணமாக மாற்றி, அவரை வரச்சொல்லு என்று கூறுவார். சாரதா வந்தவுடன் மேரி வாம்மா! என்று கூறி பல வருடங்களுக்குப் பிறகு அவரைப் பார்த்தும் தன்னை அப்பா என்று சொல்ல முடியாமல் சில நாள் தவித்து, பின்னர் இப்போது பார்க்கும்போது அடைந்த அன்பு மற்றும் நெகிழ்ச்சியினை முழுவதுமாக ஆனால் மிக மிக subtle -ஆக காண்பித்து, அவரை இதமாக அணைத்து, அவரது நெற்றியில் முத்தமிட்டு, அன்பை வெளிப்படுத்தும் விதம்; சாப்பாட்டு மேஜையின் மேல், கஞ்சிக்கலயம் இருப்பதை சாரதா பார்த்தவுடன், என்னம்மா நான் கஞ்சி சாப்பிடறேன்னு பார்க்கிறியா? நான் எப்பவும் அதே பழைய அந்தோணி தாம்மா என்று சொல்லி, ஒரு குழந்தையின் குதூகலத்துடன் ஓடிச் சென்று ப்ரிட்ஜைத் திறந்து, பழங்களை இரு கைகளிலும் எடுத்துக் கொண்டு, பிரிட்ஜைக் காலால் முதலில் மூட முயன்று, முடியாமல், மறுபடியும் முயன்று காலால் மூடி, மேஜை அருகில் வந்து அமர்ந்து, பழத் துண்டுகளை சாரதாவுக்குக் கொடுத்து சாப்பிடச் சொல்ல, அவர் அதை மறுத்து, இல்லையப்பா, நான் உங்களோடு சேர்ந்து கஞ்சியே சாப்பிடுறேன் என்று சொன்னவுடன், ஸ்டைலாக, கைகளில் இருக்கும் பழத் துண்டுகளை வீசி எரிந்து விட்டு, கஞ்சியை அவருக்குக் கொடுக்க, இருவருக்கும் பழைய நினைவுகள் மலர்ந்து, கலங்கி நெகிழ.... பார்க்கும் அத்தனை பேரையும், இது படம்தான் என்பதை மறக்க வைத்து, அவர்களுடன் பயணம் செய்ய வைப்பார் நடிகர் திலகம், ஊர்வசி சாரதா அவர்களின் மிகச் சிறந்த ஒத்துழைப்போடு! சாரதா உண்மையில், நடிகர் திலகத்தை சந்தித்து, அவரை ஜெய கௌசல்யா திருமணத்திற்கு வரவேண்டாம், வந்தால், மேஜர் திட்டம் போட்டு அவரைக் கைது செய்து விடுவார் என்று கூறி, உடனே ஊரை விட்டுக் கிளம்புமாறு வேண்ட, முதலில் மறுத்து, பின், ஒத்துக் கொண்டு, செக்ரடரியைக் கூப்பிட்டு டிக்கெட் புக் பண்ணச் சொல்லும்போது, அங்கு வரும் மேஜர், "It 's too late உங்களை அவ்வளவு தூரம் கிளம்ப விட மாட்டேன் என்று கூற, நடிகர் திலகம் பதற, மேஜர், என் மகன் திருமணத்தை நீங்கள்தான் நடத்தி வைக்க வேண்டும் என்று கூற, ஒரு மாதிரி நடிகர் திலகம் பெருமூச்சு விடுவார். சாரதாவை வீட்டுக்குத் தன் காரில் கொண்டுபோய் விடுகிறேன் என்று சொல்ல, சாரதா இல்லை என்று கூறி தானே செல்லும் போது, வெறும் காலில் முள் தைத்துவிட, அதைப் பார்த்துக் கலங்கிய நடிகர் திலகத்தைப் பார்த்து, மேஜர் கிண்டல் செய்து பின்னர் கிளம்ப, வெறுப்பின் உச்சிக்கே நடிகர் திலகம் சென்று அங்கு perform செய்யும் அந்த "one act play " - "அலையறான் ... அலையறான்... என்னைப் பிடிக்க அலையறான் ... ஒன்கிட்ட நான் பிடிபட மாட்டேண்டா.... லாரன்ச்ச்சச்ஸ் என்று சொல்லி "you can't catch me " என்று கூறி முடிக்கும் அந்த ஸ்டைல்...... அரங்கில் கைத்தட்டல் ஓய வெகு நேரம் பிடிக்கும்!
கடைசியில், மாதா கோவிலில், மேஜர் அவரது பெண்ணை இழிவாகப் பேசப்பேச, நடிகர் திலகம் கோபத்தின் உச்சிக்கே சென்று, மேஜை மேல் இருக்கும், அந்த மரத்துண்டைப் பிடுங்கி (அவர் அதைப் பிடுங்கி எடுக்கும் விதம், அசலாக இருக்கும் ... அது ஏற்கனவே பிடுங்கி ஒப்புக்காக வைக்கப்பட்டிருந்தாலும்!) அந்த அளவுக்கு உக்கிரமாக நடிகர் திலகம் எடுக்கும் போது, மெய் சிலிர்க்கும். அப்படியே சென்று, மேஜரிடம், நான் யாருன்னு உனக்கு நிஜமா தெரியாது? சாரதாவைக் காட்டி இவள் யாரென்று தெரியாது? என்று கூறி கெஞ்ச, மறுபடியும் மேஜர் இல்லை நீங்கள் யார் என்று தெரியாது. அவரது பெண்ணைக் காட்டி, இவள் நடத்தை கெட்டவள் என்று மேலும் மேலும் கூற நடிகர் திலகம் கோபாவேசத்துடன் ஓடிச் சென்று மெழுகுவர்த்தி ஹோல்டரை எடுத்து மறுபடியும், மேஜரை அடிக்கப் போக, மேஜர் "ம்ம். ஏன் நிறுத்திட்ட. ஓங்கியது உன்னோட இடது கை. உன் மனசில் இருப்பது மிருக உணர்ச்சி" என்று சொல்ல, நடிகர் திலகம் இயல்பு நிலைக்குத் திரும்பி, இல்லை, நான் திரும்பவும் ஒரு தப்பு செய்ய மாட்டேன். என்று கூறி அங்கிருப்பவர்களிடம் "நான் தான் மாதா கோவில்ல மணி அடிச்சிக்கிட்டிருந்த அந்தோணி என்று ஸ்டைலாகக் கூறி மேஜரிடம் "இப்ப சொல்லு. என் பெண் களங்கமற்றவள் என்று சொல்லு" என்று கூறி, "Am I not your Friend" என்று கூறும்போது மேஜருடன் சேர்ந்து அனைவரும் (மக்களும் தான்!) கலங்கி, நடிகர் திலகமும், மேஜரும் தழுவிக் கொள்ள, இவ்வாறு மேஜரின் திட்டத்துக்கு பலியாகி மறுபடியும் கைதாகி, இருவரும் ஜீப்பின் பின் இருக்கையில், சிரித்துக் கொண்டே செல்லும்போது - ஒரு கதாநாயகன் கடைசிக் காட்சியில் கைதாகி செல்லுவதைக் கூட மக்களை ரசிக்க வைத்த படம். (சாலையிலுள்ள போர்டில் "நன்றி மீண்டும் வருக" என்று முடியும்போது, எல்லோரையும் திரும்பத் திரும்ப பல நாட்கள் ஏன் இன்னும் கூட வரவைக்கின்ற மகத்தான படமாக, ஞான ஒளி முடியும்.
இந்தப் படம் நடிகர் திலகம் நடித்த எண்ணற்ற முக்கியமான படங்களின் வரிசையில் - அதாவது ஒரு காட்சி கூட சோடை போகாத படங்களின் வரிசையில் - மிக மிக முக்கியமான படம். (தெய்வ மகன், வசந்த மாளிகை, அவன்தான் மனிதன் வரிசையில்.)
ஞான ஒளி, 1980 -இல் ஹிந்தியில், தேவதா என்ற பெயரில் படமாக்கபட்டபோது, சஞ்சீவ் குமார், நடிகர் திலகத்தின் பாத்திரத்தையும், டேனி (ஆம் ரஜினியின் ரோபோ வில்லன்தான்) மேஜர் பாத்திரத்தையும் ஏற்றனர். சென்னை தேவி வளாகத்தில், இந்தப் படம் நன்றாக ஓடியது. அதற்கான ஷீல்டை இப்போதும் அங்கு பார்க்கலாம். சஞ்சீவ் குமாரும் ஹிந்தியில், அந்தோணி பாத்திரத்தை சிறப்பாகவே செய்தார் என்று கூறினாலும், நடிகர் திலகத்தின் ரேஞ்சை அவரால் நெருங்க முடியவில்லை என்றுதான் கூற வேண்டும். இருந்தாலும், அவர் வட இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களுள் ஒருவர் எனலாம். மேலும், நடிகர் திலகத்தின் நெருங்கிய நண்பர் மற்றும் நலம் விரும்பியும் கூட.
-
-
Engineers' Day Greetings!
Sir Mokshagundam Visvesvaraya KCIE (popularly known as Sir MV; 15 September 1860[1] – 14 April 1962[1]) was a notable Indian engineer, scholar, statesman and the Diwan of Mysore during 1912 to 1918. He was a recipient of the Indian Republic's highest honour, the Bharat Ratna, in 1955. He was knighted as a Knight Commander of the Indian Empire (KCIE) by King George V for his contributions to the public good. Every year, 15 September is celebrated as Engineer's Day in India in his memory. He is held in high regard as a pre-eminent engineer of India. He was the chief designer of the flood protection system for the city of Hyderabad in Telangana, as well as the chief engineer responsible for the construction of the Krishna Raja Sagara dam in Mandya. (Courtesy : Wikipedia)
இன்று பொறியாளர் தினம் சர் விஸ்வேஸ்வரய்யா அவர்களின் நினைவாக அனுசரிக்கப்படுகிறது அனைத்து வகைப் பொறியாளர்கள் சார்பாக வாழ்த்துக்கள்!
என்னதான் பொறியாளராக இருப்பினும் கட்டுமானப்பணிகள் சிறந்திட நல்ல மேஸ்திரியும் களப்பணியாளர்களும்அமைந்தால்தான் பணி சிறக்கும். இந்தியத்
திரை வரலாற்றிலேயே ஒரு கட்டடப்பணி நிலைகளை ஒரே பாடல் காட்சியில் காட்டிய சாதனை நடிகர்திலகத்தின் தெய்வப்பிறவி படம் மூலமே ! நல்ல மேஸ்திரியாக நடிகர்திலகமும் அவரைச் சுற்றும் சித்தாளாக நாட்டியப்பேரொளியும் நம்மை மகிழ்வித்த பாடல் காணொளி (Besides a movie entertainment piece, this video can also be used along with a power point presentation on building materials and construction aspects to civil engineering students!!)
கட்டடத்துக்கு மனைப்பொருத்தம் அவசியம். காதலுக்கு?!...... மனப்பொருத்தம் அவசியம்
https://www.youtube.com/watch?v=wxt4..._tMcZSbH9pGXwB
In a Guru Dutt's Hindimovie "aar paar" too a similar song sequence but not elaborating building construction!
https://www.youtube.com/watch?v=DJFwNErOujc
-
அன்பு நண்பர் வினோத் அவர்களுக்கு,
என் பாராட்டு ஓரிரண்டு பதிவு பாராட்டாக இருக்க வேண்டாம். அது இரண்டு மூன்று பதிவு பாராட்டாக மாறட்டும். எண்ணிக்கையை வைத்து பாராட்டுவது என்பது எனக்கு ஏற்புடைய செயல் இல்லை என்றபோதினும் உங்கள் உழைப்பிற்கு என் வாழ்த்துகள்!
அன்புடன்
-
Hello!
senthilvel45 shared an album with you.
View Album, http://s1055.photobucket.com/user/senthilvel45/library/