-
நமது திரி நண்பர் தெனாலி ராஜன் உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு உள்ளார் வரும் வெள்ளிகிழமை அவருக்கு அறுவை சிகிச்சை நடை பெற உள்ளதால் அவர் மீண்டும் பூரண நலம் கண்டு மீண்டும் அவருடைய அன்றாட பணிகளும் மற்றும் திரிக்கு விரைவில் வரவேண்டும் என எல்லாம் வல்ல எங்கள் கடவுள் மக்கள்திலகத்தை வேண்டிகொள்கிறேன்
-
திரு. தெனாலிராஜன் பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனையும், எம்ஜிஆர் பக்தர்களின் இதய தெய்வத்தையும் பிரார்த்திக்கிறேன்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
இனிய நண்பர் திரு தெனாலி ராஜன் விரைவில் பூரண குணமடைய பிராத்திக்கிறேன் .
-
அன்பு சகோதரர் பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கு,
தங்களது ஆதங்கம் மிகவும் நியாயமானது. உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன். எந்த எதிர்பார்ப்பும் இன்றி தலைவரை இதயத்தில் வைத்து பூஜிக்கும் ரசிகர்கள், தொண்டர்கள், ஆதரவாளர்கள், விசுவாசிகள் அவரது நூற்றாண்டு விழா கொண்டாட்டத்துக்கான பணிகளை யாரையும் எதிர்பார்க்காமல் இப்போதிருந்தே தொடங்க வேண்டும். திரு.எஸ்.வி.சார், திரு.குமார் சார் ஆகியோர் சொன்ன கருத்துகளை வரவேற்கிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
தலைவரைப் பற்றிய செய்திகள் எந்த பத்திரிகையில் வந்தாலும் அதை உலகத் தமிழர்களின் பார்வைக்கு கொண்டு சேர்த்து தலைவருக்கும் புகழ் சேர்க்கும் 6,000 பதிவுகள் கண்ட திரு.லோகநாதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
அயராமல் உழைத்து தலைவரின் கவனிக்கப்பட வேண்டிய அரிய ஸ்டில்களை பதிவிட்டு 3,000 பதிவுகள் கண்ட திரு. முத்தையன் அம்மு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
உங்களையெல்லாம் பார்த்தால் எனக்கு ஒரு பக்கம் பொறாமையாகவும் இன்னொரு பக்கம் வெட்கமாகவும் உள்ளது. இப்போதுதான் நான் திக்கி, திணறி 482 பதிவுகளை கடந்துள்ளேன். 1,000 பதிவுகள் வருவதற்கே இன்னும் ஒரு ஆண்டு ஆகும் போலிருக்கிறதே?
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
சகோதரர் திரு.தெனாலிராஜன் அவர்களின் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து விரைவில் அவர பூரண உடல் நலம் பெற எல்லாம் வல்ல நம் இறைவனை வேண்டுகிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
சன் டி.வி.யில் இரவு 11 மணிக்கு மீண்டும் பழைய படங்களை போட ஆரம்பித்திருக்கிறார்கள். வழக்கம் போல முதல் மரியாதை தலைவருக்கே. திங்களன்று இரவு ரிக்க்ஷாகாரன், நேற்று உழைக்கும் கரங்கள், இன்று இரவு 11 மணிக்கு பறக்கும் பாவை. இந்த வாரம் தலைவர் வாரம் போலிருக்கிறது.
இது தவிர, கடந்த இரண்டு நாட்களில் தொலைக்காட்சிகளில் பட்டிக்காட்டு பொன்னையா, அரசகட்டளை, ஆயிரத்தில் ஒருவன், குமரிக்கோட்டம், தேர்த்திருவிழா 2 முறை (மெகா டி.வி. மற்றும் ஜெயா டி.வி.) ஆகியபடங்கள் ஒளிபரப்பாயின.
கடந்த ஞாயிற்றுக்கிழமை உலகக் கோப்பை கிரிக்கெட் ஒளிபரப்பானது. அது தவிர, டி.விக்களில் தலைவரின் இத்தனை படங்களையும் தாண்டி,
மதுரையில் -- பெரிய இடத்துப் பெண்
நெல்லையில் -- ஆயிரத்தில் ஒருவன்
தென்காசியில் - ஆயிரத்தில் ஒருவன்
கோவையில் --- புதுமைப்பித்தன்
சென்னையில் ------ குமரிக்கோட்டம்
என்று தமிழகத்தின் பல பகுதிகளிலும் தலைவர் படங்கள் வெற்றிகரமாக உலா வருகின்றன என்றால் அவரது கிரவுட் புல்லிங் கெப்பாசிட்டியையும் பாக்ஸ் ஆபிஸ் பவரையும் என்ன சொல்லி புகழ்வது?
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Quote:
Originally Posted by
makkal thilagam mgr
1969ம் ஆண்டு பொங்கல் திருநாளில் சென்னை தி.நகரில் வாணி மகால் அருகே கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலை திறப்பு விழாவின்போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படம். சிலையை பேரறிஞர் அண்ணா அவர்கள் திறந்து வைத்தார். (இப்போது அந்த சிலை சாலையின் நடுவில் இருந்து ஓரமாக இடம் மாற்றி வைக்கப்பட்டுள்ளது)
அண்ணாவுடன் (இடமிருந்து) கவியரசர் கண்ணதாசன் அவர்களின் மூத்த சகோதரர் ஏ.எல்.சீனிவாசன், ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன், கலைஞர் கருணாநிதி, இந்தி நடிகர் திலிப் குமார், புரட்சித் தலைவர்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் கலந்து கொண்ட கடைசி பொது நிகழ்ச்சி இது. கடைசி நிகழ்ச்சியாக கலைவாணர் சிலையை திறந்து வைத்தார். கலைவாணரும் இறப்பதற்கு முன் தனது கடைசி நிகழ்ச்சியாக பேரறிஞர் அண்ணா அவர்களின் படத்தைத்தான் திறந்து வைத்தார். என்ன ஒரு ஒற்றுமை.
வரலாற்று சிறப்பு மிக்க படத்தை பதிவிட்ட பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கு நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Quote:
Originally Posted by
makkal thilagam mgr
பழம்பெரும் நடிகரும் எனது மனங்கவர்ந்த பாடகர்களில் ஒருவருமான திரு.டி.ஆர்.மகாலிங்கம் அவர்களின் குடும்பத்தாருடன் தலைவரும் அன்னை ஜானகி அம்மையாரும் இருக்கும் மிக அரிய புகைப்படத்தை பதிவிட்ட பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கு நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
தலைவர் நடித்த எங்க வீட்டுப் பிள்ளை உட்பட ஏராளமான தமிழ்ப் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய திரு.வின்சென்ட் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்