http://i45.tinypic.com/28ckin9.jpg
Printable View
http://i46.tinypic.com/2e3wfh1.jpg
மீனவ நண்பர்களும் ரிக் ஷாக்காரனும்
http://i45.tinypic.com/307vom0.jpg
அன்புத் தலைவரும் அமெரிக்க தூதரகத்தின் பல்கிவாலாவும்
http://i47.tinypic.com/2lthx93.jpg
பந்துலு மற்றும் படப்பிடிப்புக் குழுவினருடன் பண்புப் பெட்டகம் எம்.ஜி.ஆர்
நாடோடிமன்னனின் நட்சத்திர இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா அவர்கள் http://i48.tinypic.com/4ikk8i.jpg
ரசிகர்களுக்கு நல்ல நேரம் மக்கள் திலகத்தின் படங்களைப் பார்க்கும் நேரங்கள் எல்லாமே
http://i46.tinypic.com/119y14w.jpg
நல்லநேரம் படப்பிடப்பின் போது
http://i48.tinypic.com/2aj13z6.jpg
பூக்களுக்கு புன்னகைக்கக் கற்றுக் கொடுத்த நம் பொன்மனச்செம்மல்
http://i48.tinypic.com/ehjee0.jpg
எம்.எஸ்.உதயமூர்த்தி, மணியன் ஆகியருடன் நம் மக்கள் திலகம்
அவர் ஒரு புதிர்
திரைப்படத் துறையிலும் சரி, அரசியலிலும் சரி எம்.ஜி.ஆர் தனது பாணி என்று ஒரு தனி முத்திரையைப் பதித்தவர். சினிமாவை எடுத்துக் கொண்டால், அவர் நடித்த படங்களில் ஆரம்பத்தில் பல இன்னல்களுக்கும் சோதனைகளுக்கம் ஆளாவார். ஆனால் கடைசியில் அவரே வெற்றி பெறுவார்.
அரசியலிலும் எம்.ஜி.ஆர். சாதனை இதுவே. தி.மு.கழகம் அவரைத் தூக்கி எறிந்த போது நடிகராவது அரசியல் கட்சி நடத்துவதாவது என்று கேலி பேசப்பட்டது. வீழ்ந்துவிடவில்லை அவர். சில ஆண்டுகளிலேயே தி.மு.கவைத் தூக்கி அடித்து தமிழக ஆட்சியைக் கைப்பற்றி முதலமைச்சராகிவிட்டார். பிறகு இந்திரா காந்தி அவருடைய ஆட்சியை டிஸ்மிஸ் செய்தபோது எம்.ஜி.ஆரின் அரசியல் அத்யாயம் முடிந்துவிட்டது என்று தப்புக் கணக்கு போடப்பட்டது. ஆனால் எம்.ஜி.ஆரோ தி.மு.க. இ.காங்கிரஸ் கூட்டணியை வெற்றி கண்டு மீண்டும் முதலமைச்சரானார். இப்படி தோல்விகளையும், தொய்வுகளையும் தாங்கிக் கொண்டு வாகை சூடியவர் அவர்.
ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னும் அவருக்குப் பிரச்னைகள் ஏற்படாமலில்லை. கட்சிக்குள் கோஷ்டிப் பூசல் வெடித்ததையும் எதிர்கோண்டார். தன் கண் எதிரே கோஷ்டி சேர்த்த அமைச்சர்களையும் கட்சித் தலைவர்களையும் பதவி நீக்கம் செய்து, அவர்களது அகம்பாவத்தை மட்டம் தட்டி மக்கள் முன் வெறும் செல்லாக்காசாக்கிக் காட்டினார். அதே சமயம் கட்டாயங்கள் ஏற்பட்ட போதும் தமது அரசியல் வாரிசு யார் என்பதை சொல்ல மறுத்தார். தலைமைப் பதவி தானாகக் கனிந்து உருவாக வேண்டிய ஒரு விஷயம். நான் யார் வாரிசை நியமிக்க என்பதைச் சொல்லாமல் சொன்னார்.
இதையெல்லாம் பார்க்கும் போது அவர் ஒரு புதிர். அவர் ஒரு தனி சாதனையார். அவர் ஒர் அதிசயம் என்று தான் எடைபோட முடிகிறது.
எம்.ஜி.ஆரின் வெற்றிக்குக் காரணம் என்ன? உண்மையில் யுகப் புரட்சியை உண்டாக்கிய பல தலைவர்களைப் போல அடித்தள மக்களை வசப்படுத்தி வைத்திருந்ததே எம்.ஜி.ஆரின் மாபெரும் வெற்றி ரகசியம்.
உலக சரித்திரத்தில் இன்னொரு எம்.ஜி.ஆர் தோன்ற முடியாது.
ஆனந்த விகடன் தலையங்கத்திலிருந்து