Quote:
...
பேசும் தெய்வம்' நடிகர்திலகத்துக்கும், வாலிக்கும் நெருக்கத்தை ஏற்படுத்திய படம். குறிப்பாக 'அழகு தெய்வம் மெல்ல மெல்ல' பாடலும், நான் அனுப்புவது கடிதம் அல்ல பாடலும் அப்போது ரொம்ப பாப்புலர். 1967ல் தங்கை, நெஞ்சிருக்கும் வரை, ஊட்டிவரை உறவு என்று மெல்லிசை மன்னர் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருந்த நேரத்தில் மாமாவுக்கு புகழ் வாங்கித்தந்த பாடல்கள் இவை. 'பத்துமாதம் சுமக்கவில்லை செல்லையா' பாடலின் இடையே 'கண்டவர் கண்ணு படும் செல்லாத்தா' என்று ட்யூன் வேகமாக மாறும்போது தியேட்டரே ஆட்டம் போடுமாம். சமீபத்தில் த்மிழ்சினிமா 75வது ஆண்டு கொண்டாட்டம் என்ற தலைப்பில் சன் டிவியில் இப்படம் ஒளிபரப்பப் பட்டபோது, பலருடைய கேள்வி 'இம்மாதிரி அருமையான படமெல்லாம் எப்போ வந்தது?. நாங்க பார்த்ததே இல்லையே' (பாவம், அவ்ங்களெல்லாம் 80களில் வந்த ப்டங்களைப்பார்த்து சிவாஜியை எடைபோட்டவர்கள்).