புகைப்படத்தில் திரு.ஆர். லோகநாதன், நடிகர் ராஜேஷ், திரு.தமிழ்நேசன் .
http://i67.tinypic.com/2qs750n.jpg
Printable View
புகைப்படத்தில் திரு.ஆர். லோகநாதன், நடிகர் ராஜேஷ், திரு.தமிழ்நேசன் .
http://i67.tinypic.com/2qs750n.jpg
புகைப்படத்தில் திரு.ஆர். லோகநாதன், , திரு.தமிழ்நேசன் .திரு.காந்தி கண்ணதாசன்
http://i64.tinypic.com/1222eyg.jpg
புகைப்படத்தில் திரு.ஆர். லோகநாதன், , திரு.தமிழ்நேசன் திரு.கலீல் பாட்சா .திரு.காந்தி கண்ணதாசன்
http://i63.tinypic.com/52gl1e.jpg
குமுதம் ரிப்போர்ட்டர் வார இதழ்
http://i64.tinypic.com/2yno01w.jpg
காவிரி நடுவர் மன்றம் அமைக்க முதல் குரல் எழுப்பிய முதல்வர் எம்.ஜி.ஆர்.
---------------------------------------------------------------------
http://i68.tinypic.com/35a3clu.jpg
சினி சாரல் ஜூலை 2018
--------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி. ஆர்.-திரைப்பட வரலாறு - ஓர் அலசல்
----------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பிறந்த தேதி 17/01/1917.
1936 முதல் 1978 வரையில் 137 திரைப்படங்களில் நடித்தார் .மற்ற நடிகர்களுடன் ஒப்பிடும்போது ஆரம்ப காலத்தில் சிறு வேடங்களில் நடிக்க தொடங்கினாலும் , 1947ல் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்த பின்னர் கடைசிவரை கதாநாயகனாகவே நடித்தவர் .கதாநாயகன் ஆன பின்பு, சிறு வேடங்களிலோ, துணை வேடங்களிலோ நடிக்காதவர்
அரசியலில் ,தி.மு.க.வில் சேர்ந்து அதன் கொள்கை பிடிப்பில் இருந்தாலும் ,
விதிவிலக்காக கடவுள் வேடங்களில் சில படங்களில் நடித்தார் .தேவர் விருப்பத்திற்கிணங்க தனிப்பிறவி படத்தில் முருகன் வேடத்திலும் , உழைக்கும் கரங்கள் படத்தில் இயக்குனர் சங்கர் வேண்டுகோளுக்கிணங்க சிவன் வேடத்திலும்
நடித்தார் .
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு தங்கமணி,சதானந்தவதி ,.வி.என்.ஜானகி என மூன்று மனைவிகள் இருந்தனர் . வி.என்.ஜானகியுடன் , நாம், மோகினி, மருத நாட்டு இளவரசி ஆகிய படங்களில் நடித்திருந்தார் .
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி குணச்சித்திர வில்லன் நடிகர் .எம்.ஜி.சக்கரபாணியின் மகன் எம்.ஜி.சி.ராமமூர்த்தி "அரச கட்டளை "படத்தை தயாரித்துள்ளார் .எம்.ஜி.சக்கரபாணியின் அடுத்த மகன் எம்.ஜி.சி.பாலு
3 படங்களில் பாடல் பின்னணி பாடியுள்ளார் . எம்.ஜி.சக்கரபாணியின் மூன்றாவது மகன் எம்.ஜி.சி.சுகுமார் 3 படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார் .மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மனைவி வி.என். ஜானகி கதாநாயகியாக நடித்தவர் . வி.என்.ஜானகியின் தந்தை ராஜகோபால் அய்யரும் இளைய தந்தை பாபநாசம் சிவனும் சினிமா பாடலாசிரியர்கள் . வி.என்.ஜானகியின் உறவுக்கார இளைஞர் தீபன் "முதல் மரியாதை " படத்தில் இளம் கதாநாயகனாக நடித்துள்ளார் .
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின், எம்.ஜி.ஆர். பிக்ச்சர்ஸ் நிறுவனம் , நாடோடிமன்னன், அடிமைப்பெண் , உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய படங்களை வெற்றிகரமாக
தயாரித்து , வெளியிடப்பட்டு, தமிழ் திரைப்பட வரலாற்றில் வசூல் சாதனைகள் புரிந்த பெரும் காவியங்களாக திகழ்கின்றன . மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இயக்கத்தில் நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் ஆகிய படங்கள் வெளிவந்தன . கணவன் என்கிற திரைப்படத்தின் கதையை எம்.ஜி.ஆர். எழுதியுள்ளார் .
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த காவல்காரன் (1967), அடிமைப்பெண் (1969) ஆகியன சிறந்த படங்களாகவும், எங்கள் தங்கம் (1970) சிறந்த 2வது படமாகவும் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (1978) சிறப்பு விசேஷ படமாகவும் தமிழக அரசால் விருதுகள் வழங்கப்பட்டன .
மலைக்கள்ளன் திரைப்படம் , ஜனாதிபதியின் வெள்ளி பதக்கத்தை 1954ல் வென்றது .எங்க வீட்டு பிள்ளை படத்திற்கான சிறந்த நடிகர் விருது 1965ல் சினிமா ரசிகர் சங்கம் சார்பில் அளிக்கப்பட்டது . குடியிருந்த கோயில் படத்திற்கான சிறந்த நடிகர் பரிசை 1968ல் தமிழக அரசு அளித்தது .
மத்திய அரசின் பாரத் விருது 1971ல் ரிக் ஷாக்காரன் படத்துக்காக எம்.ஜி.ஆருக்கு அளிக்கப்பட்டது .மக்கள் திலகம் , மக்கள் தலைவராக , முதல்வராக 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி 1987ல் மறைந்த பின்னர் 1988ல் மத்திய அரசால் "பாரத ரத்னா ' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது .
.