-
Dear Rajesh
Thank you for the video. It is the dubbed version of NT's film THULI VISHAM.. Directed by A.S.A. Samy and music by the legendary choreographer, K.N. Dhandayuthapani Pillai. K.R. Ramaswamy was the hero and NT villain. Besides this, Pennin Perumai, was also the film for NT as a villain, wherein Gemini Ganesh was Hero.
Raghavendran.
-
Raghavendran,
thanks for the info. probably a bilingual because Krishnakumari's song and video are in telugu(lip sync).
yes i'm aware of pennin perumai .Thanks anyways..
-
-
Thanks for link, Joe. Good piece, looking forward for the part 2.
-
Thanks Mr.Joe for the article link
-
-
-
-
இங்கே நண்பர்கள் பலரும் குறிப்பிட்டது போல நேற்று திருவருட்செல்வர் பார்க்கும் போது பல நுணுக்கமான விஷயங்களை கூட நடிகர் திலகம் எப்படி தன் உடல் மொழியில் கொண்டு வந்திருக்கிறார் என்பது இப்போதும் ஆச்சரியம் தரும் காட்சியாகவே இருக்கிறது. அது அவர் அறிமுகமாகும் படத்தின் முதல் காட்சியிலிருந்து படத்தின் இறுதிக் காட்சி வரை நம்மால் உணர முடியும் என்பது தனி சிறப்பு.
ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஏற்ப மாறும் அவர் உடல் மொழி. மன்னன் வில்லவன் அரியாசனத்தில் அமர்ந்திருக்கும் போது காட்டும் arrogance, நாட்டிய மங்கை கலையரசியிடம் தனிமையில் உரையாடும் போது மோகம், தாபம்,காமம் என உணர்வுகள் கொப்பளிக்கும் பாவங்கள், voice modulation, காமத்தால் அறிவிழக்க இருந்தோமே என்ற கோப உணர்வும், இறை உணர்வை தேடும் வேட்கையுமாக அந்தபுரத்திலிருந்து வெளியேறும் அந்த நடை, அதே வேகத்தில் அதே உடல் மொழியில் மீண்டும் அரண்மனையில் நுழையும் வேகம் [இரண்டு காட்சிகளின் படப்பிடிப்பிற்கும் நடுவே எத்தனை நாள் இடைவெளியோ? இருப்பினும் அதே உடல் மொழி], அரசவையில் நடக்கும் அந்த ராஜ நடை, சிம்மாசனத்தின் படிகளில் கையில் செங்கோலுடன் நிற்கும் அந்த கம்பீரம், புலவரின் சிறு வயது பேத்தி வெகு எளிதாக தன் கேள்விகளுக்கு பதிலளித்தவுடன் தன் அறியாமையை நினைத்து வரும் அந்த வெட்க உணர்வு மன்னவன் வில்லவன் நடிகர் திலகத்தின் முத்திரை தாங்கிய வேடம்.
அடுத்த காட்சியில் அதே நடிகர் திலகம் சேக்கிழார் பெருமானாக தோன்றும் போதுதான் எத்துனை வேறுபாடு? தமிழாய்ந்த புலவர் ஆனால் சிவனடியார்களான நாயன்மார்களின் வரலாற்றை திருமறையாக தொகுத்து பாடும் தகுதி தனக்கு இருக்கிறதா என ஒரு தாழ்வு மனப்பான்மை, புலவர் பாட தயங்க, ஏன் என்று மன்னவன் கேட்க, பயம் என்ற வார்த்தையை அவர் இரண்டு முறை மென்று முழுங்கி மூன்றாம் முறை முகமெங்கும் வேர்வை துளிகள் பெருக வார்த்தையே வராமல் வாய் அசைப்பது, அவரின் நிலையை கண்ட அநாபாய சோழ மன்னன் சேடி பெண்ணிடமிருந்து கவரி வாங்கி தான் வீச, பதறி எழுந்து தடுப்பது, ஐந்து நிமிடமே வந்தாலும் சேக்கிழார் மனங்களை வென்று விடுவார்.
அடுத்து திருக்குறிப்பு தொண்டர். சலவை தொழிலை நம்பி பிழைப்பு நடத்தும் ஆனால் தினசரி ஒரு சிவனடியாரின் துணியை இலவசமாக துவைத்துக் கொடுத்த பிறகே மற்றவர்களின் துணியை துவைக்கும் அந்த இரக்கமுள்ள தொண்டன், ஒரு நாள் எந்த சிவனடியாரையும் காணாமல் தன் கொள்கை தோற்று போய் விடுமோ என்று கலங்கி நிற்கும் நேரத்தில் எங்கிருந்தோ இறைவனை போற்றி பாடும் பாடல் கேட்க, தான் காத்து நிற்கும் ஒரு சிவனடியாராக இவர் இருப்பாரோ என முகத்தில், உடலில் அந்த தேடுதலை வெளிப்படுத்திக் கொண்டே ஒரு நடை நடப்பாரே, ஆஹா! [வேறு ஒருவர் வையசைக்கும் பாடல் காட்சி, ஆனாலும் அதில் கூட தன் நடிப்பால் கைதட்டல் வாங்க கூடிய ஒரே நடிகன் நடிகர் திலகம் மட்டுமே!] தன்னை சோதிக்க இறைவனே நேரில் வந்திருகின்றான் என தெரிந்ததும் வரும் அந்த புல்லரிப்பு!
[இந்த பாடலின் சில வரிகள் நடிகர் திலகத்தின் பொது வாழ்க்கைக்கு மிகவும் பொருந்தும் என்பதால் அதிலும் குறிப்பாக
தொண்டுக்கென்றே அலைவான் கேலிக்கு ஆளாவான்
கண்டு கொள்வாய் அவனை ஞானத் தங்கமே
என்ற வரிகளின் போது தியேட்டரில் கைதட்டல். அதே போல் ஆற்று வெள்ளம் காத்திருக்கு பாடலின் போது பின்னணியில் காய போடப்பட்டிருக்கும் துணிகள் காங்கிரஸ் பேரியக்கத்தின் மூவர்ண கொடியை நினைவுபடுத்தும் வண்ணம் திரையில் தோன்ற நடிகர் திலகம் அதன் முன் நின்று சத்தியத்தின் முத்திரை இது என்ற வரியை பாடும் போது 1967-ல் மதுரை நியூசினிமா அரங்கமே அதிர்ந்தது நினைவுக்கு வந்தது].
அடுத்தவர் சுந்தரர். பெயருக்கு ஏற்றவாறு அழகான நடிகர் திலகம், இறைவனே தன்னுடன் நேரில் வந்து விளையாடுகிறான் என்பது புரியாமல் காட்டும் அந்த கோபம், சாட்சியங்கள் எல்லாம் தனக்கு எதிராக இருக்க எதுவும் செய்ய முடியாத இயலாமையை மறைக்க சீறும் அந்த முகம், விரும்பிய பெண்ணை மணக்க முடியாமல் அடிமையாய் பித்தனின் பின்னால் நடக்கும் அந்த தளர்ந்த நடை, திருவெண்ணெய்நல்லூர் கோவிலின் உள்ளே சென்ற பிறகு உண்மை தெரிய வர மெய் சிலிர்த்து கை கூப்பி சித்தமெல்லாம் எனக்கு சிவ மயமே என பாடல் புனையும் அந்த உணர்வு, உடலின் எந்த பாகமும் அசையாமல் நின்று பாடுவது, சரணத்தில் திருவெண்ணெய்நல்லூர் உறையும் என்ற வரிகளின் போது தனக்கே உரித்தான வலது கையை மட்டும் லேசாக மேலே உயர்த்தும் அந்த நேர்த்தி! பிரமாதம்.
Last but not the least -அப்பர் என்ற திருநாவுக்கரசர். பெரும்பாலான மக்களை பொறுத்தவரை இந்த ரோல்தான் சிகரம். இரண்டு மணி நேரங்களுக்கு முன் மன்னவன் வில்லவனாக வேடமிட்டவர்தான் இப்போது இந்த 80 வயது பெருமகனாக வேடம் மாறியிருக்கிறார் என்று சொன்னால் நம்புவது பலருக்கு கடினமாக இருக்கும்.
திருஞானசம்பந்தரின் பல்லக்கு தூக்கிகளில் ஒருவனாக அறிமுகமாகும் அந்த நிமிடத்திலிருந்து அவரின் ஆதிக்கம் துவங்கி விடும். கடலின் அருகாமையில் அமைந்திருக்கும் விடுதியில் தங்கியிருக்கும் போது கடல் மாதாவை தரிசிக்க சம்பந்தர் அழைக்க சின்ன படியேறி ஓடமுடியாமல் ஓடும் அந்த காட்சி, பூட்டியிருக்கும் கோவில் மணி கதவு திறக்க பாடும் அந்த முகம், சம்பந்தரின் பாடலில் மீண்டும் கதவு தாழிட்டுக் கொள்ள மயங்கி விழும் பெரியவர், காரணம் கேட்கும் சம்பந்தரிடம் சிறிய வயதில் அவர் மேல் இறைவன் வைத்திருக்கும் கருணையை பற்றி குறிப்பிடும் அந்த நெகிழ்ச்சி, தன்னுடைய இறை பயணத்தில் திங்களூர் செல்லும் நாவுக்கரசர், அங்கே பல தர்ம காரியங்களும் தன் பெயரால் நடை பெறுவதை பார்த்து யார் இதை செய்வது என ஆவல் மேலிட விசாரிப்பது, அப்பூதி அடிகள் என்ற அந்த தனவானை தேடி செல்லும்போது உடுத்தியிருக்கும் காவி ஆடையை தலையை மறைத்து சுற்றி ஒரு கையில் தண்டத்தை பிடித்துக் கொண்டு நடக்கும் நடை, அவர் வீட்டு திண்ணையில் ஒரு காலை மடித்து ஒரு காலை குத்திட்டு அமர்ந்து உள்ளே ஒலிக்கும் ஆதி சிவன் தாழ் பணிந்து வணங்கிடுவோமே பாடலுக்கு சின்ன குழந்தை போல் இரண்டு கைகளையும் மாறி மாறி தட்டிக் கொண்டே தானும் சேர்ந்து பாடுவது, அப்பூதி அடிகளிடமும் அவர் மனைவி அருள்மொழியிடமும் தன்னை யார் என்று வெளிப்படுத்தாமல் அவர்கள் தன் மேல் வைத்திருக்கும் அன்பை அறிந்து கொள்வது என அமர்களப்படுதியிருப்பார் சிவாஜி! [படம் பார்க்கும் பலருக்கும் இந்த காட்சிகளின் போது மறைந்த காஞ்சி மகாப் பெரியவரின் நினைவுகள் வந்துக் கொண்டேயிருக்கும்!]
ஒரு வேளை உணவருந்தி விட்டு செல்கிறேன் என சொல்லி விட்டு திரும்பி வரும் போது அவர்களின் ஒரே மகன் அரவம் தீண்டி இறந்து விட்டான் என தெரிய வரும்போது அவர் முகத்தில் வரும் அந்த அதிர்ச்சி! அவனை தூக்கி சென்று கோவிலின் முன் கிடத்தி சோகத்துடன் பாம்பை வேண்டி பாடுவது, அப்போதும் அரவம் வரவில்லை என்றதும் ஆவேசம் பொங்க பாடும் அந்த இறுதி வரிகள், பாடலை கேட்டு அவர் பக்திக்கு கட்டுப்பட்டு பாம்பு தன் விஷத்தை தானே இறக்க அந்த குழந்தையை காப்பாற்றி விட்டோம் என்ற பெருமிதம்! எதை சொல்வது எதை விடுவது!
44 வருடங்களுக்கு முன்பே இதையெல்லாம் செய்து விட்டார் என நினைக்கும்போது பிரமிப்பு பன்மடங்காய் பெருகிறது. அன்றைய நாளில் இதற்கு முழு அங்கீகாரம் கிடைத்ததா, அவரின் ரசிகர்கள் கூட இதை தெரியாதவர்களுக்கு சொல்லி முன்னெடுத்து சென்றார்களா என்று கேட்டால் இல்லை என்றே சொல்ல வேண்டும். இதைப்பற்றி பேசும்போது ஒரு நண்பர் ஒரு காரணம் சொன்னார். அதாவது தொடர்ந்து நடிகர் திலகத்தின் படங்களே ஒன்றன் பின் ஒன்றாக வந்துக் கொண்டிருந்ததால் நிறுத்தி நிதானமாக இதை ரசிக்கும் வாய்ப்பை தவற விட்டு விட்டோம் என்று சொன்னார். மன்னவன் வந்தானடியை ரசித்துக் கொண்டிருக்கும் போதே மாதவி பொன்மயிலாள் அங்கே மாலை மயக்கம் யாருக்காக என கேள்வி கேட்டபடியே வந்து விட அவர்களை ரசிக்கும் போதே மலர்களிலே பல நிறம் கண்டேன் என பெரியாழ்வார் பாட்டிசைக்க நம் கவனம் அங்கே போனது, அது முழுமை பெறுவதற்குள் மெல்ல வரும் காற்று என ஒரு மெல்லிசை காற்றில் படர்ந்தது, அதையாவது முழுமையாக ரசித்தோமா என்றால் இல்லை அந்த நேரத்தில் முத்து நகையே உன்னை நான் அறிவேன் என குரல் வர அங்கு பறந்தோம். மறைந்திருந்து கூட பார்க்க முடியாமல் நலந்தானா என சிக்கலார் நம்மை நாயனத்தில் கட்டிப் போட அங்கு சென்றோம். ஆக Embarrassment of Riches என்று சொல்வார்களே அதை மிக சரியாக அனுபவித்தவர்கள் நாம்.
எப்படி இருப்பினும் மீண்டும் அந்த தெள்ளிய இன்பத்தை நாம் உணர அனுபவிக்க வாய்ப்பளித்த பட வெளியிட்டாளாருக்கும், அரங்க உரிமையாளருக்கும் நமது இதயம் கனிந்த நன்றி! தங்களின் மேன்மையான ரசனையை வெளிப்படுத்திய நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கும் கோடானு கோடி நன்றி!
அன்புடன்
-
முரளி சார் சொல்வது போல் 1967ல் வரிசையாக நம்மை விருந்தளித்து திக்கு முக்காட வைத்து எதை எடுப்பது எதை தொடுப்பது என்று நம்மை தீர்மானிக்க முடியாமல் செய்து விட்டார் நடிகர் திலகம். அதற்கெல்லாம் வட்டியும் முதலும் சேர்த்தாற்போல் தற்பொழுது ரசிகர்கள் அணுஅணுவாய் ஆர்ப்பரிக்கிறார்கள். எப்படி இருந்தவர் இப்படி ஆகிவி்ட்டாரே என்று ஒரு நகைச்சுவைக் காட்சி ஏதோ ஒரு படத்தில் வரும் .அது போன்று கீழே அந்தக் காலகட்ட்த்தில் நடிகர் திலகத்தின் உருவம் பொம்மை அட்டையில் பிரசுரமானதைப் பாருங்கள்.
http://i872.photobucket.com/albums/a...p12A575722.jpg
அவரா இவர்
இந்தப் பாடல் காட்சியைப் பாருங்கள்
http://www.youtube.com/watch?v=ibynDVPlkqM
சமீபத்தில் ஜெயா தொலைக்காட்சியின் திரும்பிப் பார்க்கிறேன் நிகழ்ச்சியில் மாஸ்டர் பிரபாகர் அவர்கள் தம்முடைய நினைவுகளைப் பற்றி நம்மிடம் பகிர்ந்து கொள்ளும் போது இந்தப் படத்தைப் பற்றிப் பேசினார். அவர் பேசியதை விட அவர் கண்கலங்கியதே அதிகம். அந்த அளவிற்கு அவர் சிலாகித்தார்.
இந்த அரிய வாய்ப்பினை நல்கிய சாந்தி திரையரங்கிற்கும், வெளியீட்டாளருக்கும் நம்முடைய நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புடன்