http://youtu.be/0ttbU2wssoA
Printable View
1967- VIVASAYEE
http://youtu.be/j3951F7Q5xY
1967-KAVALKARANhttp://youtu.be/0HnEPVGGA4w
http://youtu.be/-8Og0Oosym81967- ARASAKATTALAI
http://youtu.be/2IN5AD23GJ0
1967- THAIKKU THALAIMAGAN
http://youtu.be/gDxClDoDYSs
நமது தெய்வத்தின் ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகளுக்கு வணக்கம்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் குண்டடி பட்டபோது பலபேர் செய்த ரத்ததானம் தலைவரின் உயிரைக் காத்தது ..அதனால்தான் அவர் 'ரத்தத்தின் ரத்தமே என்று அனைவரையும் அழைத்தார். அந்த மாமனிதருக்கு மரியாதை செலுத்தும் நோக்கோடு பெத்துசெட்டிப் பேட்டை பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அறக்கட்டளை சார்பில் ரத்ததான முகாம் நடத்த முடிவு செய்யப்பட்ட செய்தி தாங்கள் அனைவரும் அறிந்ததே...இந்த ரத்த தான முகாம் 03.02.2013 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடத்தப்பட்டது...அறக்கட்டளையின் தலைவரான என்னுடைய தலைமையின் கீழ் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது..இது நாங்கள் நடத்தும் இரண்டாவது ரத்ததான தான முகாம். ஞாயிற்றுக்கிழமை காலை 08.00 மணிக்கு தலைவரின் பாடலுடன் விழா தொடங்கியது..தலைவரின் படத்துக்கு மாலை அணிவித்து சிறுவர்களுக்கு இனிப்புகள் மற்றும் நோட்புக் பேனா வழங்கப்பட்டன.. இந்த ரத்ததான முகாமில் சுமார் 70க்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். அதில் 51 பேர் தகுதி பெற்று ரத்ததானம் செய்தனர். இதில் என்ன விசேஷம் என்றால் குறைந்த இளைய தலைமுறையினர் பலர் தலைவருக்காக ரத்ததானம் செய்தனர்..அதில் பன்னிரெண்டாம் பயிலும் மாணவன் ஆர்வமுடன் கலந்துகொண்டது மட்டுமல்லாமல் 'தலைவனின் புகழ் எல்லா இடங்களிலும் பரவவேண்டும் அண்ணே" என்று சொன்னதும் நான் உண்மையில் உணர்ச்சிவசப்பட்டேன்..இப்போது கூட அந்த மாணவன் கூறியதை நினைத்தால் உடம்பு புல்லரித்து போகிறது...
மேலும் ரத்த தான முகாமிற்கு வந்திருந்த கூட்டத்தை பார்த்து இந்த பகுதியில் இப்படியொரு முகாம் நடந்ததே இல்லை என்று அனைவரும் வியந்தனர்..இன்னும் சொல்லப்போனால் புதுச்சேரி சட்ட மன்ற உறுப்பினர் ஒருவர் தன்னுடைய பிறந்த நாளுக்கு ரத்ததான முகாம் நடத்தி 15 பேர் வராத நிலையில் மருத்துவமனையில் இருந்து வந்தவர்கள் வந்தது வீண் என்று திட்டி விட்டு சென்றனர்... ஆனால் நமது தெய்வத்தின் பெயரில் நடந்த இந்த முகாமை பாராட்டி விட்டு சென்றார்கள்..அது தான் நமது தெய்வத்தின் அருள்...
திரு கலியபெருமாள் சார்
மிகவும் உன்னதமான ரத்ததானம் - உங்களின் தலைமயில் 51 அன்பர்கள் மக்கள் திலகத்தின் பிறந்த நாள் அன்று ரத்த தானம் செய்த அனைவருக்கும் நன்றி .
தொடரட்டும் உங்களது சேவை
மக்கள் திலகம் திரியின் சார்பாக உங்களனைவருக்கும் நன்றி