https://lh6.ggpht.com/_bQVMgvwda6DzK...dNUFXoJOQ=s113http://cdn.spicyonion.com/cache/imag...an-175x250.jpg
http://www.tamilstar.com/profile/upl...ishankar_5.jpg
அம்மன் அருள் 1973
அம்பிகா movies தயாரிப்பு
பட்டு என்ற பட்டாபிராமன் இயக்கம்
ஜெய் ஷங்கர்,மஞ்சுளா விஜயகுமார்,நடிப்புசுடர் ஏவிஎம் ராஜன்,
அசோகன் நடித்து வந்த கருப்பு வெள்ளை
இசை இன்னிசை வேந்தர்கள் சங்கர் கணேஷ்
AVM ராஜன் அம்மன் கோயில் பூசாரி அவர் மகள் மஞ்சுளா .அசோகன் அந்த ஊர் பண்ணயார் அவர் மகன் ஜெய்சங்கர் இவர் மேல்நாட்டில் டாக்டர் பட்டம் படித்து விட்டு வரும் பகுத்தறிவு வாதி .கடவுள் உண்டா இல்லையா என்ற வாக்கு வாதம் அடிக்கடி நடக்கும்
ஏவிஎம் ராஜன் இந்த படத்தில் இருந்து தான் 'மகமாய் மகமாய் அம்மா கருமாரி ' என்று அடிகடி சொன்னதாக நினவு
இப்போது கிறிஸ்துவ மத போதகர் ஆக இருக்கிறார் .
ஜெய்சங்கர் மஞ்சுளாவை விரும்புவார் ஆனால் இதை அசோகன் விரும்பமாட்டார் . அம்மன் கோயிலில் சீட்டு போட்டு பார்த்து விபுதி வந்த காதலை கை விடுவது ,குங்குமம் வந்தால் காதலியுடன் சேர்வது என்று முடிவாகும் .ஏவிஎம் ராஜனே எல்லா பொட்டலதிலும் விபுதி வைத்து விடுவார் .ஜெய் கோபித்துகொண்டு ஊரை விட்டு போவார் அசோகன் கோபம் கொண்டு கோயிலையும் அம்மன் சிலையையும் உடைக்க முயற்ச்சி செய்வார். இதற்கு நடுவில் ஒரு சங்கிலி ஒன்று காணமல் போகும் . அது அம்மன் கழுத்து சங்கிலியா அல்லது மஞ்சுளா கழுத்து சங்கிலியா என்று நினைவில் இல்லை
முடிவு dvd (கிடச்சா வாங்கி ) பாருங்க
இரண்டு பாடல்கள் நன்றாக இருக்கும்
radha jayalakshmi சகோதரிகள் குரலில்
'அகிலமெல்லாம் விளங்கும் அம்மன் அருள் ' என்ற பாடல்
நவராத்திரி சமயத்தில் எல்லா அம்மன் கோயில்லும்,ஆடி மாத கொடை விழாக்களிலும் கலந்து கட்டிய பாடல்
http://www.mediafire.com/?p9k42abuh9d64p2
பாலா சுசீலா குரல்களில்
கொஞ்சம் மாணவன் "கல்யாண ராமனுக்கும் " பாடலை நினைவு படுத்தும் . ஆனால் பாலாவின் ஆரம்ப குரல் ஹம்மிங் தொடர்ந்து சுசீலாவின் குரல் இனிமை நம்மை மயக்கும் .வழக்கம் போல் கவிஞர் வழங்கிய தேவரின் இன்னிசை வேந்தர்கள் வீணை flute கலந்து
ஒன்றே ஒன்று நீ தர வேண்டும்
ஒன்றென நூறாய் நான் தருவேனே
இன்றல்ல நாளை சூடட்டும் மாலை
கேட்டதை தருவேன் நான்தானே
ஒன்றே ஒன்று நீ தர வேண்டும்
ஒன்றென நூறாய் நான் தருவேனே
பட்டு தளிர் கோடியில் பச்சை பசும் கிளிகள்
தொட்டு கொண்டு பேசும் சிந்து
புன்னை மர நிழலில் சின்னஞ்சிறு அணில்கள்
கொஞ்சட்டும் முத்தங்கள் தந்து
ஓடை நீரில் வாலை மீன்கள்
ஜாடையில் சொல்லும் நாடகம் என்ன
ஓடும் தென்றல் பூவை பார்த்து
கூறும் கதைகள் என்னனென்ன
ஒன்றே ஒன்று நீ தர வேண்டும்
ஒன்றென நூறாய் நான் தருவேனே
http://cdn.600024.com/store/image/ca...ul-500x500.jpg
http://www.youtube.com/watch?v=MmUpkPvYd2U