Quote:
ஏ.எல்.எஸ். புரொடக்ஷன் தயாரித்த சாந்தி என்ற படத்தில் சிவாஜிகணேசன், எஸ்.எஸ்.ஆர், நான், எம்.ஆர்.ராதா ஆகியோர் நடித்தோம். டைரக்டர் பீம்சிங். இந்தப் படத்தில் சிவாஜிகணேசனுக்கும், எனக்கும் முதல் இரவு காட்சி. அந்தக் காட்சியில், முதல் இரவு நடக்கக்கூடாது என்பதற்காக என் புடவையை எரியும் விளக்கில் போட்டு புடவை எரிய ஆரம்பித்ததும் முதல் இரவு அன்று இப்படி நடந்தது அபசகுனம் என்று காரணம் காட்டி, சிவாஜிகணேசன் முதல் இரவை தள்ளி வைத்துவிடுவார்.
இது அன்றைய தினம் படமாக்கப்பட வேண்டிய காட்சி. அப்போது எதிர்பாராமல் என் புடவையில் தீ மள மளவென்று பரவியது. நான் பயந்து போய், என் கையால் அதைக் கசக்கி தீயை அணைத்துவிட்டேன். இதனால் என் கையில் தீக்காயம் ஏற்பட்டு, நான் துடித்துப்போனேன். உடனே, சிவாஜி மருந்து வாங்கி வரச்சொல்லி, அவரே என் அருகில் அமர்ந்து தீக்காயத்திற்கு மருந்து தடவினார். அந்த மனிதாபிமானத்தை இன்றும் என்னால் மறக்க முடியவில்லை. வித்தியாசமான கதை அமைப்பை கொண்டிருந்த சாந்தி, நன்றாக ஓடியது.
மாலைமலர் நாளிதழின் இணையப் பக்கத்திலிருந்து..