-
-
பாரதியாராக நடிகர் திலகம் அசத்தும் ஸ்டில்ஸ் இரண்டு மட்டுமே பதிவிடலாம் என்று இருந்தேன்.முடிய வில்லை. எந்த பாவனையை விடுவது? ஒவ்வொரு போஸும் ஒன்னரை கோடி பெறுமே. அதுதான்.....
அன்புடன்,
வாசுதேவன்.
-
-
டியர் குமரேசன் சார்,
தாங்கள் கேட்டுக் கொண்டபடி 5 நடிகர் திலகத்தின் photo images ஐ தங்கள் e-mail முகவரிக்கு அனுப்பி வைத்துள்ளேன். அதில் 4 standing stills உள்ளது. பிடித்திருந்தால் உபயோகப் படுத்திக் கொள்ளவும்.
'வசந்த மாளிகை' ரிலீஸ் தேதியை தெரியப் படுத்தவும். விழாக் கொண்டாட்டங்கள் எந்த தேதி, எந்த ஷோவில் நடைபெறும் என்றும் தெரியப் படுத்தவும்.
'வசந்த மாளிகை' மீண்டும் இமாலய வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள். பெங்களூரில் சந்திப்போம்.
வாழ்த்துக்களுடன்,
வாசுதேவன்.
-
Welcome back Dhanusu. வரவேற்ற பாராட்டிய அனைவருக்கும் நன்றி.
தனுசு, நீங்கள் கேட்டது சரிதான், அது பரம்பரை நாணம் தோன்றுமா தான். அது மட்டுமல்ல வேறு சில வார்த்தைகளும் மாறியிருக்கின்றன. புதுமணப் பெண் என்பதே சரி. நான் திருமணப் பெண் என்று எழுதியிருக்கிறேன், சிலையாய் இருந்தால் என்பதே சரி. நான் சிலையாய் நின்றால் என்று சொல்லியிருக்கிறேன்.
காரணம் அந்த பதிவு உணர்வுகள் என்னை ஆட்கொண்டபோது எழுதியது. அதனால் நேர்ந்த பிழைகள். மன்னிக்கவும்.
அன்புடன்
-
நேற்று சென்னை ச்ரோம்பெட் யில் ஒரு திருமண மண்டபத்தில், ஒரு நாள் காட்டி கண்டேன்- மத்திய சென்னை சிவாஜி பக்தர்கள் படைத்த து.
சிவாஜி அன்னை கமலாவுடன் அட்டையில் இருக்கும் காட்சி, கண்டு உள்ளம் மகிழ்ந்தது.
-
புவியில் புதுமைகள் புரிந்திட்ட 'புதிய பறவையே' வருக! வருக!
http://i1087.photobucket.com/albums/...n31355/ppp.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
-
அன்புள்ள பம்மலார் சார்,
வாழ்த்துக்கள். 'பாலும் பழமும்' பட அரிய விளம்பரங்களை அள்ளித்தந்துவிட்டீர்கள். சமீப காலம் வரை, அந்நாளைய திரைப்பட விளம்பரங்களை செய்தித்தாள்களில் பார்த்ததோடு, அவற்றை சேகரிக்காமல் விட்டோமே என்ற ஆதங்கம் ஏற்படும். ஏனென்றால் "சிலர்", நடிகர்திலகத்தின் வெற்றித் திரைப்படங்களைக் குறிப்பிட்டு அவை சரியாக ஓடவில்லை என்று வேண்டுமென்றே சீண்டும்போது, அவர்களின் மூக்கை உடைக்கும் வண்ணம் அள்ளி வீச, ஆதரங்களான செய்தித்தாள்களின் விளம்பரங்கள் இல்லையே என்று மிகவும் வருத்தப்படுவோம்.
தங்களின் வருகைக்குப்பின் அக்குறை முற்றிலுமாகத்தீர்ந்து விட்டது. ஆதாரக்குவியலின் பொக்கிஷமாக நீங்கள் விளங்குகிறீர்கள். அந்த வகையின் 'பாலும் பழமும்' திரை ஓவியத்தின் ஏராளமான விளம்பரங்களோடு, இயக்குனர் பீம்சிங் அவர்களின் திரையரங்க விஜயத்தையும், படங்களோடு கூடிய கட்டுரைகளாகத் தந்து அசத்தி விட்டீர்கள். முரளி அவர்கள் சொன்னதுபோல நன்றி சொல்லும் நிலைக்கெல்லாம் அப்பாற்பட்டு உயர்ந்து நிற்கிறீர்கள். உங்களைப்போன்ற ஒரு 'நன்மை செய்யக்கூடிய தீவிரவாதி'யைத்தான் இவ்வளவு காலம் தேடிக்கொண்டிருந்தோம்.
இதுநாள்வரை, நடிகர்திலகத்தின் திரைப்படங்கள் பற்றி, தங்கள் வலைப்பூக்களில் 'வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ' என்று இஷடத்துக்கும் குறைசொல்லி எழுதிக்கொண்டிருந்த பிரகஸ்பதிகள் இப்போது பம்ம ஆரம்பித்து விட்டனர். அவர்கள் குறை சொல்லிய மறுநாளே இங்கே அவர்கள் மூக்கு உடைபடுவது நிச்சயமாகி விட்டது. இதை சாத்தியமாக்கிய உங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்.
தொடரட்டும் உங்கள் தூய நற்பணி. கோபாலை வரவேற்க சென்னை துறைமுகத்தில் மாலைகளுடன் காத்திருக்கிறோம்.
-
கார்த்திக் சார்,
மிகச் சரியாகச் சொன்னீர்கள். நம் பம்மலார் இருக்கும் போது நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த பிரகஸ்பதிகள் பம்ம வேண்டியதுதான். உங்களது அற்புதப் பாராட்டுகளை அப்படியே நான் வழிமொழிகிறேன். நன்றி சார்!
அன்புடன்,
வாசுதேவன்.
-
திரு தனுஷ் அவர்களே,
தங்களின் பதிவை கண்டேன் மிக்க மகிழ்ச்சி, தொடர்ந்து தங்கள் பங்களிப்பை எதிர்பார்கின்றோம் `,