இன்று (17-09-2014) தந்தை பெரியார் 136-வது பிறந்தநாள்.
http://i1234.photobucket.com/albums/...ps091a9767.jpg
Printable View
இன்று (17-09-2014) தந்தை பெரியார் 136-வது பிறந்தநாள்.
http://i1234.photobucket.com/albums/...ps091a9767.jpg
From the facebook:
ஓடி விட்டன பனிரெண்டு வருடங்கள் ...
ஓர் உன்னதத்தை நாங்கள் பறிகொடுத்து.
நீர்க்கோர்த்த தலையாய் நெஞ்சு கனக்க
உங்களுக்கு விடைகொடுத்து.
கடிகாரம் அணியாத இடதுகை மணிக்கட்டு போல்
பளீரென ஒரு வெறுமை..
நீங்களற்ற நடிப்புலகில்.
எப்போதும் அரிதாரம் கலைக்காத திரை வாழ்க்கையும்,
வேஷமிடலை அறியாத பொது வாழ்க்கையும்
உங்களுடையதாயிருந்தது.
நமக்கு பிரியமானதை இவர் தருவார் எனும்
நம்பிக்கையும், அந்த நம்பிக்கையை உண்மையாக்கிய உங்கள்
திரைப்படங்கள் தந்த சந்தோஷங்களும்
எங்களுடையதாயிருந்தது.
அற்புதக் கலைஞரே..
செவ்வகமான சினிமாத்திரையில் நீங்கள் வந்து
சிலிர்ப்பூட்டிய நிமிஷங்களில் தீர்மானித்தோம்..
எங்கள் உலகம் செவ்வகமானது.
நிற்றல், சிரித்தல், நடத்தல், அழுதல்..
உங்களது தனித்திறமைகள் உங்கள் ரசிகர்களின்
எண்ணிக்கையைத் தாண்டும்.
அய்யா..
கடந்தோடிப் போன நாட்களில் அழுவதைத் தவிர்க்க
முடியாவிட்டாலும் அழுவதைக் குறைக்கக் கற்றுக்
கொண்டோம்
அழுவதெதற்கு?
நடிகனுக்குண்டு..
நடிப்புக்கேது மரணமென்று காலம் சொன்ன ஆறுதல்
கேட்டு கண்ணீர் குறைத்தோம்.
ஆன்றோரும், சான்றோரும் அருகிருந்து உங்கள் அருமை பேச நீங்களில்லாத கவலை குறைத்தோம்.
என்றாலும் அய்யா..
அழுவதில்லை இனியென்று ஆண்டுக்கு ஆண்டு இதே நாளில்.
நாங்கள் எழுதுகிற தீர்மானங்களுக்கு நாங்கள் சிந்தும் கண்ணீர்த் துளிதான் முற்றுப்புள்ளி வைக்கிறது.
நிலையான இவ்வுலகில் நிலையில்லா வாழ்வினிலே உண்டு உறைந்திட வந்தோரும் மாண்டு மறைந்து சென்றோரும் எத்தனையோ? வாழ்க்கையை வென்று சென்றோர் மிகச்சிலரே! அதிலும் மக்கள் மனதில் மலரும் நினைவுகளில் நிலைத்து நின்றோர் சொற்பமே! நடிகர் திலகம் அப்படி நிலைத்து நின்றோரில் மக்கள் நினைவுகளில் நீக்கமற நிறைந்தவர். யார் சொன்னது அவர் இல்லையென்று ? எம் வாழ்வில் எக்கணமும் மறக்க இயலாத 'மனிதருள் மாணிக்கமாக' குளமான எம் கண்களில்ஒளிவீசி ஜொலித்துக்கொண்டுதானே இருக்கிறார்! அவரை மறந்தால்தானே நினைப்பதற்கு ?!மனித உணர்வுகளின் மச்ச அடையாளமே உலகின் நவரச பாவங்களின் உச்ச நடிக வேந்தர் எம் கலைக்குரிசில் நடிகர்திலகமே!He sings for us .... dances for us ...lives in our hearts and minds forever as the immortal Legend is invincible!
https://www.youtube.com/watch?v=8PljHuFQ6vk
https://www.youtube.com/watch?v=TwRkv0yk_OQ
சிவாஜிக்காக முதன் முதலில் எஸ்.பி.பி பாட வந்த போது... ----'யாழ் சுதாகர்'
நடிகர் திலகத்திற்காக முதன் முதலாக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாட வந்த போது ...
எனக்காக நீங்கள் குரலை மாற்றிப் பாட வேண்டாம்..
உங்கள் பாணியிலேயே பாடுங்கள்...
நடிக்கும் போது உங்கள் குரலுக்கு இசைவாக எனது நடிப்பை அமைத்துக்கொள்கிறேன் என்றாராம் சிவாஜி.
சிவாஜி சொன்னபடி எஸ்.பி.பி. தமக்கே இயல்பான 'நளினம் கொஞ்சும்' நந்தவனக் குரலில் அந்தப் பாடலை மிக சுதந்திர உணர்வோடு பாடினார்.
பாடல் பிரமாதமாக பதிவானது.
ஆனால் பாடலைக் கேட்ட போது,
டி.எம்.எஸ்ஸின் குரலைப் போல இந்த புதிய குரல்... அதுவும் மென்மையான குரல் நடிகர் திலகத்தின் நடிப்போடு இசையுமா?
என்று சிலர் சந்தேகப் படவும் செய்தனர்.
ஆனால் அந்தப் பாடல் காட்சி படமாக்கப் பட்ட போது...
எஸ்.பி.பியின் நளினமான குரலுக்கு ஏற்ப தமது நடையையும் பாவனைகளையும் அசைவுகளையும் குழையக் குழைய வெளிப்படுத்தினார் நடிகர் திலகம்.
சந்தேகப் பட்டவர்கள் பிரமித்துப் போனார்கள்.
பிரமிப்பின் மறு பெயர் தானே நடிகர் திலகம் !
அந்தப் பாடல் ...'சுமதி என் சுந்தரி' படத்தில் மெல்லிசை மன்னரின் இசை வார்ப்பில் மலர்ந்த' பொட்டு வைத்த முகமோ'.
காலப் புயலில் கலைந்து போகாத பாட்டு தீபங்களில் இன்றும் இளமை ஊஞ்சலாடும் இந்தப் பாடலும்...
பாடல் காட்சியும் ஒரு வசந்த வரலாறு.
=================
30 வருட பாலுவின் சேவையை பாராட்டி சென்னையில் ஒரு
நிகழ்ச்சியில் திரு.கங்கை அமரன் சொன்னது. இந்த பாடலைப்பற்றி
மேலும் ஒரு தகவல். இந்த பாடல் பதிவு செய்த நாள் அன்று இரவே
சென்னை வானோலி நிலையம் சுடச்சுட ஒலிப்பரப்பட்டது என்பது மகிழ்ச்சியான விஷயம் தானே சார்..
=====================
டி.எம்.எஸ் என்னைப் பற்றி என்ன நினைப்பார்? - சிவாஜி
''வியட்நாம் வீடு ' சுந்தரத்தின் 'கௌரவம்' படத்தில் மெல்லிசை மன்னரின் இசையில் ' கண்ணா நீயும் நானுமா? என்ற பாடலைப் பாட வந்த போது,
படத்தின் கதை,அந்தப் பாடலைப் பாடப் போகும் கதா பாத்திரத்தின் குண நலன்கள் ,மற்றும் மனோ பாவம், ஆகியவற்றைப் பற்றி நன்கு கேட்டுத் தெரிந்து கொண்டு அந்தக் கதா பாத்திரமாகவே தம்மையும் மாற்றிக் கொண்டு,
இன்னும் சொல்லப் போனால் கூடு விட்டுக் கூடு பாய்வது போல அந்தக் கதா பாத்திரத்தின் உடலில் புகுந்து கொண்டு உணர்வு பூர்வமாகப் பாடிக் கொடுத்தார் டி.எம்.எஸ்.
அந்தப் பாடல் காட்சியில் நடிப்பதற்காக படப் பிடிப்புத் தளத்துக்கு வந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனிடம் பாடலைப் போட்டுக் காட்டினார்கள்.
'இன்னும் ஒரு தடவை போடுங்கள்...இன்னும் ஒரு தடவை'...என்று...பல தடவை...திரும்பத் திரும்ப அந்தப் பாடலை மிக உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டே இருந்தார் சிவாஜி.
இது அங்கிருந்த பலருக்கும் மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது!
காரணம், பொதுவாக சிவாஜி ஒரு பாடல் காட்சியில் நடிப்பதற்கு முன்பு ஒரு தடவை அல்லது மிஞ்சிப் போனால் இரண்டு தடவை தான் அந்தப் பாடலின் ஒலி நாடாவை ஒலிக்க விடச் சொல்லிக் கேட்பது வழக்கம்.
ஆனால் இந்தப் பாடலை அவர் பத்துத் தடவைக்கு மேலாக கண்களை மூடிக் கொண்டே மறுபடியும் மறுபடியும் கேட்டுக் கொண்டே இருந்தார்.
இதை நீண்ட நேரமாகவே கவனித்துக் கொண்டிருந்த வியட்நாம் வீடு சுந்தரம் நடிகர் திலகதின் அருகே சென்று அவரிடம் மிகவும் பணிவான குரலில் தமது சந்தேகத்தை வெளிப்படுத்தினார்.
'ஒரு தடவை, அல்லது இரு தடவை பாடலைக் கேட்டு விட்டு உடனே நடிக்க வந்து விடும் நீங்கள் இந்தக் குறிப்பிட்ட பாடலை மட்டும் பத்து தடவைக்கு மேல் திரும்பத் திரும்பக் கேட்பதன் ரகசியம் என்ன?'...
'சுந்தரம்!...டி.எம்.எஸ் அவர்கள் இந்தப் பாடலை, மிகுந்த உணர்ச்சிப் பிரவாகமாகப் பாடி இருக்கின்றார்.
பல்லவியில்...ஒரு விதமான பாவம்..ஆக்ரோஷம்...அடுத்த சரணத்தில்..இன்னொரு விதமான..தொனி.மற்ற சரணத்தில்...இன்னொரு பரிமாணம்...என குரலால் அற்புதமாக நடித்துக் கொடுத்திருக்கிறார் டி.எம்.எஸ்.
ஒரே வரியையே இரண்டு இடத்தில் 'ரிபீட்' பண்ணும் போது இரண்டு விதமான தொனிகளில் பாடுகிறார்.
உதாரணமாக ' நீயும் நானுமா?' என்ற வரியை ஒவ்வொரு முறை உச்சரிக்கும் போதும் ஒவ்வொரு பாவத்தில் அர்த்தத்தில் உச்சரிக்கிறார்.
இப்படியெல்லாம்..அற்புதமாக அவர் பாடிக் கொடுத்த பாட்டை கவனமாக நான் நடித்துக் கொடுகா விட்டால் இதைப் பாடிய டி.எம்.எஸ் என்னைப் பற்றி என்ன நினைப்பார்? என்றாராம் சிவாஜி.
நடிகர் திலகத்தின் செய் தொழில் நேர்த்திக்கும்,ஆத்மார்த்தமான தொழில் ஈடுபாட்டுக்கும் ,தன்னடக்கத்திற்கும் ,சக கலைஞர்களின் திறமைகளைப் பகிரங்கமாக மதிக்கும் பரந்த தன்மைக்கும் ஒரு சிலிர்க்க வைக்கும் எடுத்துக் காட்டு.
--'யாழ் சுதாகர்'
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த பாசமலர், குங்குமம் போன்ற படங்களைத் தயாரித்த மோகனகிருஷ்ணன் கடந்த ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி காலமானார்.
இவருடைய தந்தையார் பிரபல நீதிபதியும், பிரபாத் திரையங்கின் மேலளாருமான திரு கண்ணபிரான் ஆவார். அவரே பிரபல மோகன் ஆர்ட்ஸ் நிறுவனத்தை தோற்றுவித்தவர். இந்த நிறுவனம் 1951 ஆம் ஆண்டுமுதல் கட் அவுட் மற்றும் பேனர் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தது.
தமிழ்த்திரையின் மிகப்பழமையான இந்நிறுவனம், மிக உயராமான கட் அவுட்களை உருவாக்கி சாதனை படைத்தது. வணங்காமுடி திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்ட 80 அடி உயர கட் அவுட் பலருடைய பாராட்டுகளைப் பெற்றது.எலிசபெத் அரசி இந்தியா வந்த போது இவர் வைத்த பல கட் அவுட்கள் அனைவரையும் கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் அரசியே தனியே அழைத்து நன்றி கூறியதும் குறிப்பிடத்தக்கது.
காந்தி திரைப்படத்திற்கான இவரின் உழைப்பு உலகெங்கிலும் பலரின் பாரட்டுதலைப்பெற்றது. இந்திய ஒவியத்தின் தனிப்பாணியை உருவாக்கிக்கொண்டவர் திரு.மோகன். நடிகர் சிவகுமார் உட்பல பல ஓவியர்களுக்கு வழிகாட்டியாக விளங்கியவர், நடிகர் திலகத்தின் மிக நெருங்கிய நண்பர். பல திரைப்படங்களுக்கு கலை இயக்குனராக பணியாற்றி பல விருதுகளை வென்றிருக்கிறார்.இவருக்கு இந்திய அரசு விகாஸ் ரத்னா விருது வழங்கி சிற்ப்பித்தது.
நண்பர்களுக்கு
நக்கீரன் குழுமத்தில் இருந்து வெளி வரும் சினி கொத்து பத்திரிகையில் ஆகஸ்ட் 25 திரு மோகன் காலமானார் என்று வந்து உள்ளது . நாரதர் வலை பூவில் ஆகஸ்ட் 28 என்று வந்து உள்ளது .எது சரியான தகவல் என்று தெரியவில்லை
நேற்று வெளியான மங்கையர் மலர் மாதமிருமுறை இதழில் கேட்கப்பட்ட கேள்வியும் அதற்கு ஆசிரியையின் பதிலும்
சிவாஜிக்கு மிகப் பெரிய விருது எதுவும் கிடைக்கவில்லையே?
{கேட்டவர் ஸ்வேதா ராஜ் கன்னியாகுமாரி]
அவர் சிரிச்சா நாம சிரித்தோம். அவர் அழுதால், நாம் அழுதோம். இதை விட பெரிய விருது என்ன இருக்கப் போகிறது?
அன்புடன்
15.09.2014 முதல் பழனி சந்தானகிருஷ்ணாவில் தினசரி 4 காட்சிகளாக உயர்ந்த மனிதன் வெற்றி நடை போட்டுக்கொண்டிருகிறது. தகவல் உதவி திரு. ராமஜெயம். நன்றி சார்.
அன்புடன்