தன்னைக் காண வந்தவர்களுடன் கலைச்சுடர் எம். ஜி. ஆர்.
http://i60.tinypic.com/21cicmb.jpg
ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
Printable View
தன்னைக் காண வந்தவர்களுடன் கலைச்சுடர் எம். ஜி. ஆர்.
http://i60.tinypic.com/21cicmb.jpg
ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
CONGRATULATIONS Mr. YUKESH BABU FOR COMPLETION OF 3000 POSTINGS, IN A SHORT TIME.
ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
ஒரே பாடலில் எத்தனை முக பாவனைகள்
அத்தனை நவரசத்தையும் 4 நிமிட பாடலில் நம் மக்கள் திலகம் எம்ஜிஆர் எப்படி எல்லாம் வெளிப்படுத்தி உள்ளார்
என்பதை இந்த பாடல் மூலம் காணலாம் .
வர்ணிக்க வார்த்ததைகள் இல்லை .
நகை
அழுகை,
இளிவரல்,
மருட்கை,
அச்சம்,
வெகுளி,
பெருமிதம்,
உவகை,
அமைதி
குடியிருந்த கோயில் படத்தில் இடம் பெற்ற இந்த பாடல் காட்சியில் மக்கள் திலகம் எம்ஜிஆர் நம் எல்லோரின் மனதையும் கவர்ந்துள்ளார் .
http://youtu.be/-QvcL3BOFzE
நண்பர்களுக்கு வணக்கம்.
100 பதிவுகள் நிறைவு செய்ததற்காக எனக்கு வாழ்த்து தெரிவித்த திரு.திருப்பூர் ரவிச்சந்திரன் சார், திரு.ரூப் குமார் சார், திரு. ராமமூர்த்தி சார், திரு. யுகேஷ் பாபு, திரு.சைலேஷ் பாசு சார் ஆகியோருக்கு நன்றிகள். ஆயிரக்கணக்கில் பதிவிட்டுள்ள ஜாம்பவான்கள் வெறும் 100 பதிவுகளை முடித்துள்ள என்னை பாராட்டுவது அன்பின் மிகுதியாலும் ஊக்கப்படுத்தவுமே என்று எடுத்துக் கொள்கிறேன்.
திரு.சைலேஷ் பாசு சார், உங்கள் பதிவுகளில் வார்த்தைகள் குறைவாக இருந்தாலும் அர்த்தம் அதிகமாக இருக்கிறது. எனக்கு வாழ்த்து தெரிவித்து திரு.கலைவேந்தன் 100 என்ற தங்களின் பதிவில் தன்னையே சுட்டிக் காட்டுவது போல இருக்கும் தலைவரின் படத்தை நீங்கள் தேர்ந்தெடுத்து பதிவிட்டது சூப்பர். என் பெயர் கலைவேந்தன் என்று இருந்தாலும் உண்மையான கலைவேந்தன் அவர்தானே. எனக்கு வாழ்த்து தெரிவித்து திரு.திருப்பூர் ரவிச்சந்திரன் திரு.யுகேஷ் பாபு அவர்கள் வெளியிட்ட படங்களும் அருமை.
100 பதிவுகளை கடந்துள்ள திரு.முத்தையன் அம்மு அவர்கள் தலைவரின் படங்களுடன் அந்த படத்தின் ஸ்டில்களையும் இணைத்து வெளியிடுவது அற்புதம். அவருக்கு வாழ்த்துக்கள். 3000 பதிவுகள் முடித்துள்ள திரு.யுகேஷ் பாபு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
திரு.செல்வகுமார் சார், தலைவர் தீவிர அரசியலுக்கு வந்ததால் வராமல் நின்றுபோன படங்கள் பட்டியல் அருமை. அதுபற்றிய விளம்பரங்கள் பின்னர் என்று கூறியிருக்கிறீர்கள். அந்த விளம்பரத்தை பார்க்கும் புண்ணியமாவது நமது கண்களுக்கு விரைவில் கிடைக்கட்டும்.
திரு.லோகநாதன் சார், தலைவர் பற்றிய செய்திகள் எந்த பத்திரிகையில் வந்தாலும் நமது திரியில் உடனுக்குடன் பதிவிடுவதற்காக, தாங்கள் எங்கு சென்றாலும் கூடவே ஸ்கேனிங் மெஷினையும் எடுத்துச் செல்கிறீர்களோ என்று எனக்கு சந்தேகம். நீரும் நெருப்பும் படத்தின் 50வது நாள் விளம்பரம் அதிலும் கொழும்பில் 91வது நாள் ஓடியது பற்றிய தகவல் ஆவணக் களஞ்சியம்.
திரு.எஸ்.வி.சார் தாழம்பூ பட தினத்தை நினைவூட்டியதற்கு நன்றி. தினமும் காலையில் காலண்டரை பார்ப்பதுபோல தலைவர் பட பட்டியலையும் தேதியையும் பார்ப்பீர்களா? படம் தொடர்பான தங்கள் பதிவுகள் பிரமாதம். தாழம்பூ படம் குறித்த விளம்பர நோட்டீஸ்களை பதிப்பித்துள்ள திரு.ராமமூர்த்தி சாருக்கு நன்றி.
http://i59.tinypic.com/2prae4n.jpg
நமது திரியை ஊன்றி கவனித்தால் நமக்குள் ஒரு போட்டி நடப்பது புலப்படும். தலைவரின் புகழை யார் முடிந்த வரையில் ஓங்கி உரத்துக் கூறுவது என்ற போட்டிதான் அது. இந்தப் போட்டியின் வினோதம் என்னவென்றால் இதில் நம் யாருக்கும் தோல்வியே கிடையாது. எல்லாருக்குமே வெற்றிதான். தலைவர் என்றாலே உற்சாகம், உழைப்பு, வெற்றிதானே. போட்டியை தொடர்வோம்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
திரு. ராமமூர்த்தி சார்,
இதயவீணை படத்தின் விமர்சனத்தின்போது, ஏசுநாதர் என்ற பெயரில் தலைவர் நடிக்கவிருந்த படம் பின்னர் கைவிடப்பட்டதை குறிப்பிட்டிருந்தேன். படத்தில் தலைவர் நடிப்பதற்கு அப்போது எதிர்ப்பு எழுந்தது. இது தொடர்பாக திருவனந்தபுரத்தை சேர்ந்த எஸ்.எஸ்.மணி என்பவர் போப்பாண்டவருக்கு எழுதிய கடிதத்தையும் அதற்கு போப்பாண்டவர் சார்பில், தலைவர் நடிப்பதற்கு ஆட்சேபம் இல்லை என்று தெரிவிக்கப்பட்ட கடிதத்தையும் அது தொடர்பான மாலை முரசு செய்தியையும் திரு.மணி அவர்களின் நன்றி அறிவிப்பு விளம்பரத்தையும் பதிவிட்ட உங்களுக்கு எப்படி நன்றி கூறுவது என்று தெரியவில்லை.
நற்பண்புகள் நிறைந்த எம்.ஜி.ஆர். ஏசுநாதராக நடிப்பது தவறில்லை என்று போப்பாண்டவரே கூறியிருப்பது தலைவரின் தொண்டர்களான நமக்கெல்லாம் கிடைத்த பெருமை. எந்த நடிகருக்கு இதுபோன்று சான்று அதுவும் போப்பாண்டவரிடம் இருந்து கிடைக்கும்? இதயவீணை விமர்சனத்தில் ஏசுநாதர் படம் தலைவர் நடித்து வெளிவந்திருந்தால் ஒரு சரித்திரம் ஆகியிருக்கும் என்றும் கூறியிருந்தேன்.
திரு.சிவாஜி கணேசன் அவர்களின் ரசிகர்கள் கூட தன்னை பாராட்டியதாக நன்றி அறிவிப்பு விளம்பரத்தில் திரு.மணி கூறியுள்ளார். அவர் கூறியது மிகையில்லை என்பதற்கு ‘தலைவரின் ஏசுநாதர் வேஷப் பொருத்தம் நன்றாக இருந்ததாகவும் அந்தப் படம் வெளிவராதது நஷ்டமே’ என்றும் சிவாஜி கணேசன் அவர்களின் தீவிர ரசிகரான ஆருயிர் நண்பர் திரு.கோபால் கூறியிருப்பதே சான்று. (தலைவர் இருந்தவரை அவருக்கு தொல்லை கொடுத்தவர்கள் அவர் மறைந்த பின் 40 ஆண்டு கால நண்பர் என்று கூறிக் கொள்ளும்போது கோபாலை நான் ஆருயிர் நண்பர் என்று சொல்லக் கூடாதா? ஆயிரம் சொல்லுங்கள். கோபால் இல்லாமல் எனக்கே ‘சப்’பென்று இருக்கிறது. விரதத்தை முடித்து வந்து விட்டாரா? என்று இன்று கூட அந்தப் பக்கம் பார்த்தேன். ஏமாற்றமே. நம்பிக்கையுடன் காத்திருப்போம்)
இப்படிப்பட்ட பெருமையுடைய ஆவணத்தை வெளியிட்ட திரு.ராமமூர்த்தி சார், உங்களுக்கு நன்றி என்று சொல்வதெல்லாம் வெறும் சம்பிரதாய வார்த்தையாகவே இருக்கும். அதற்கு பதிலாக என்ன சொல்லலாம் என்று தெரியாமல் கலங்கும் கண்களுடன் கைகூப்பி வணங்குகிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
சன் லைப் தொலைகாட்சியில் இன்று இரவு 7மணி முதல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அளிக்கும் "ரிக்க்ஷாக்காரன்" ஒளிபரப்பாகிவருகிறது.
http://i58.tinypic.com/fcilie.jpg
Thanks for information sir