http://i1302.photobucket.com/albums/...ps7d40494a.png
Printable View
http://i1302.photobucket.com/albums/...psd5ff9785.jpg
வெற்றியை தோல்விக்கு மாற்றாகவும்.,
வெளிச்சத்தை இருட்டுக்கு மாற்றாகவும்
வைத்த இறைவன் ஜூலை 21க்கும்
மாற்றாக வைத்தான் ஒன்றை.
அக்டோபர் ஒன்றை.
அக்டோபர் 1 -
அருமையானதொரு கலைஞன்
இனி இந்த பூமிக்கு வரப்போவதில்லை
எனும் அவநம்பிக்கைகள் இறந்த தினம்.
அதாவது, அய்யா..
நீங்கள் பிறந்த தினம்.
எண்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால்
அந்த அதிசயம் நிகழ்ந்தது.
காலகாலமாயிருந்து வரும் இயற்கையின் விதிமாற்றி
அன்னை ராஜாமணியாரின் வயிற்றிலிருந்து..
கலை பிறந்தது.
இதய வேந்தரே..
இன்று நாங்கள் ஒருவருக்கொருவர்
பரிமாறிக் கொள்கிற இனிப்பை..
1952 ல் தேசத்துக்கே தந்தவர்
நீங்கள்தானே?
ஒரு ஆயிரம், இரண்டாயிரம்
பேருக்கான புகழையெல்லாம்
ஒருத்தரே கொண்டவர்
நீங்கள்தானே?
தூக்கக் கலக்கத்தோடு இரண்டாவது
ஆட்டம் சினிமாவுக்குப் போனவனை,
நடுநிசிக் காட்சிக்கும் விழிக்க வைத்தது
நீங்கள் தானே?
நாங்கள் இடறிவிழுந்த இடத்தில்
கூட புதையலாய் இருந்தது
நீங்கள்தானே?
நீண்ட காலத்திற்கு உத்தரவாதமில்லாத
கீற்றுக் கொட்டகைகளை
சாமான்யர்களின் சொர்க்கமாக்கியது
நீங்கள் தானே?
ஒரு நூறு வருஷங்களுக்கு முன்னால்
சினிமா என்கிற வடிவத்தை
முதல் முறையாகப் பார்த்தவர்கள்
முகத்திற்கெதிராய் திரையில் ஓடி வரும்
ரயில் பார்த்து மூர்ச்சையானார்கள்.
அதற்கப்புறம் வெகுநாள் கழித்து
'பராசக்தி'யில் உங்கள் நடிப்பழகு
பார்த்தும் மூர்ச்சையானார்கள்.
முதல் சினிமாவில் பொம்மையை
உண்மையென்று பயந்து மயங்கினார்கள்.
பராசக்தியில் உண்மையே பொம்மையாயிருந்ததை
வியந்து மயங்கினார்கள்.
எங்கள் உலகமே..
நடிகர் திலகமே..
உலகத்தின் உதடுகள் உற்சாகமாக
உச்சரிக்கும் உன்னத வாசகமே.!
பழைய சோறே போதுமென்று
நீட்டிய எங்கள் பாத்திரங்களில்
விழுந்த அமுத யாசகமே.!
இன்று நாடு கொண்டாடுவது ஒரு
நடிகனின் பிறந்த நாளல்ல.
நடிப்பின் பிறந்த நாள்.
கலைக் கோயில் தீபமே..
கலை அன்னையின் தவப்புதல்வனே..
அத்தனை நெஞ்சங்களும் ஆனந்தத்தில்
திளைத்திருக்கும் இந்தத் திருநாளில்
நன்றிகள் பனிக்க உங்களை
நினைத்துக் கொள்கிறோம்.
நீங்களன்றி வேறொன்றுமறியாத
நிரந்தர ரசிகர் கூட்டத்தில் எங்களை
இணைத்துக் கொள்கிறோம்.
காலக் கரையானை தன் பக்கம்
நெருங்க விடாத சரித்திரப் புத்தகமே..
இன்னும் பல நூறு தலைமுறைகள் கடந்தாலும்
யாரேனும் ஒருவன் உன் சாதனைப்
பக்கங்களில் லயிப்பான்
சிறப்புக்கு நான் ரசிகனென்று
அந்த சிவாஜி ரசிகன் சிரிப்பான்.
ஜெயிப்பான்