சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாழ்க்கை வரலாறு இந்தியில் சினிமாவாகிறது!
Wednesday, May 4, 2011 at 12:00 pm | 406 views
Leave a Comment
சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாழ்க்கை வரலாறு இந்தியில் சினிமாவாகிறது!
சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது, தமிழில் அல்ல இந்தியில்!
இந்தியாவில் நடிகர் ஒருவரின் முழு வாழ்க்கை வரலாறு சினிமாவாக எடுக்கப்படுவது இதுவே முதல்முறை.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாழ்க்கை வரலாற்றைப் படித்த அத்தனை பேருமே சொன்ன கமெண்ட், சினிமாவில் கூட பார்க்க முடியாத அத்தனை சுவாரஸ்யமான, நெகிழ்ச்சியான நிகழ்வுகள் ரஜினி சாரின் வாழ்க்கையில் அடங்கியிருக்கிறது, என்பதுதான்.
ஏற்கெனவே சிலர் ரஜினியின் வாழ்க்கைக் கதையை படமாக்கும் முயற்சியில் இருந்தாலும், அதற்கு ரஜினியின் அனுமதி கிடைக்கவில்லை. இப்போது ரஜினியின் அனுமதியுடனே ஒருவர் ரஜினி வாழ்க்கையை சினிமாவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். அவர் பெயர் அதுல் அக்னிஹோத்ரி. பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர்.
இதுகுறித்து அதுல் அக்னிஹோத்ரிக்கு நெருக்கமானவர்கள் கூறுகையில், “ரஜினி சார் அனுமதியோடு இந்தப் படம் எடுக்கப்பட உள்ளது. கிட்டத்தட்ட எல்லாமே முடிவாகிவிட்டன. விரைவில் படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும்.
இந்தப் படத்தில் நடிப்பவர்கள் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லையாம். ரஜினியின் முக அமைப்யையொத்த சில புதுமுகங்களைத் தேர்வு செய்துள்ளார்களாம். ரஜினியின் உடல்மொழி, மேனரிஸங்கள் யாருக்கு சரியாக வருகிறதோ அவரை ரஜினியாக நடிக்க வைக்கப் போகிறார்களாம். படத்துக்கு ரஜினியின் முன்னுரையைப் பெறவும் திட்டமுள்ளதாம்.
பல வெளிநாட்டு விளம்பரப் படங்களை இயக்கிய லாயிட் பாப்டிஸா என்ற இயக்குநர்தான் ரஜினி படத்தை இயக்கப் போகிறாராம் .
இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள டைம்ஸ் ஆப் இந்தியா கொடுத்துள்ள முன்னுரையில், “பொதுவாக தமிழ் அல்லது தெலுங்குப் பட ஹீரோக்கள் என்னதான் ஹிட்ஸ் கொடுத்தாலும், பாலிவுட்டில் பெரிய அளவில் பேசப்பட மாட்டார்கள். ஆனால் இந்த மொழி, மாநில எல்லைகளை வெற்றிகரமாக உடைத்தவர் ரஜினி ஒருவராகத்தான் இருக்கும். போர்ப்ஸ் பத்திரிகையின் மிகுந்த செல்வாக்கு மிக்க இந்தியர் பட்டியலில் இடம்பெற்றுள்ள ரஜினி, பாலிவுட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் தனித்த ஹீரோவாக ஜொலிக்கிறார்…”, என்று குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை எந்த சினிமா கலைஞரின் வாழ்க்கை வரலாறும் முழுமையாகப் படமாக்கப்பட்டதில்லை. முன்பு, பிரபல பாடகர் அமரர் கிஷோர் குமாரின் வாழ்க்கையைப் படமாக்க முயன்றனர். ஆனால் பின்னர் அந்த முயற்சி கைவிடப்பட்டது நினைவிருக்கலாம். எனவே இந்தியாவில் முதல் முதலில் படமாகும் நடிகரின் வாழ்க்கை வரலாறு ரஜினியுடையதுதான்!!
http://www.envazhi.com/?p=24848