[QUOTE=RAGHAVENDRA;964376]டியர் சாரதி,
மறக்க முடியாத மற்றொரு பாடல் - படம் - நெஞ்சிருக்கும் வரை. கிட்டத் தட்ட இந்தப் பாடலின் பெரும் பகுதி படப் பிடிப்பைப் பார்த்த நினைவுகள் இன்றும் பசுமையாக உள்ளது. காலையில் துவங்கி மதியம் வரை நடைபெறும் படப்பிடிப்பில் மக்கள் கூட்டத்தை மிகவும் சிரமப் பட்டு கட்டுப் படுத்த போலீஸ் முயன்ற போது, நடிகர் திலகம் தன் வேண்டுகோளின் மூலம் அந்தப் படப்பிடிப்பை சுமுகமாக நடக்க வைத்த சாதுர்யம் மறக்க முடியாது. காலையிலேயே பெருமளவில் மக்கள் கூட்டம். அப்போதெல்லாம் நாங்கள் கடற்கரையில் காலையில் விளையாடும் வழக்கம் உண்டு. இந்தக் காட்சியிலேயே நீங்கள் கவனிக்கலாம். ஒரு கட்டத்தில் மணலுக்கு முன்புறம் இளைஞர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் காட்சி இதில் வரும். வி.கோபால கிருஷ்ணன் முத்து ராமன் இருவரும் மிகச் சிறந்த கலைஞர்கள். அதில் சந்தேகம் இல்லை. இருந்தாலும் இந்தப் பாடல் காட்சியில் அவர்கள் நடிகர் திலகத்திற்கு ஈடு கொடுக்க முடிய வில்லை என்பதை நாங்கள் கண் கூடாகப் பார்த்தோம். அதுவும் அந்த மக்கள் கூட்டத்தில் நிறைய பேர் எம்.ஜி.ஆர். அவர்களின் ரசிகர்கள் இருந்தார்கள். அவர்களே வியந்து போனார்கள் என்ற அளவிற்கு நடிகர் திலகத்தின் திறமை பளிச்சிட்டது. பாடலில் காலணி இருக்காது. ஒரு கட்டத்தின் போது காலணியுடன் மூவருமே நடந்து விட்டார்கள். அது படமும் பிடிக்கப் பட்ட போது நடிகர் திலகம் திடீரென அதனை நிறுத்தச் சொல்லி விட்டு தன் காலில் வெயில் உரைக்க வில்லையே என காலைப் பார்த்து செருப்பினைக் கழட்டி விட்டு மீண்டும் நடநது வந்தார். அடிக்கடி டேக் எடுக்க வேண்டி வந்ததால் [காரணம் நடிகர் திலகமல்ல] ஷாட் எடுக்கும் போது வெயில் வந்து விடும். அந்த சுட்டெரிக்கும் வெயிலில் வெறும் காலுடன் நடந்து பாடல் முழுவதையும் மூவரும் நடித்து கொடுத்தது பாராட்டத் தக்கது. சாலையில் கடற்கரை ஒட்டிய நடைபாதையை ஒட்டிய பகுதி படப்பிடிப்பிற்காக ஒதுக்கப் பட்ட போது வாகனங்கள் அதனை ஒட்டிய பகுதியில் சாலையில் கடந்து சென்றன. அதனை மிகவும் திறமையுடன் காவல் துறையினர் ஒழுங்கு படுத்தித் தந்தது பிரமிக்கத் தக்க கடமையுணர்வாகும்.
It must had been a privilege to watch NT in action! I missed that opportunity in my life. You are really lucky! But please mention the good memories of NT only.