-
http://i61.tinypic.com/ztghuu.jpg
புரட்சித் தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த திரு.ரவிகிரண் சூர்யாஅவர்கள், திரு.ஜோ அவர்கள், மற்றும் அற்புதமான பதிவுகளை பதிவிட்ட பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்கள், திரு.வினோத் அவர்கள், திரு.பெங்களூர் குமார் அவர்கள்,திரு.ஜெய்சங்கர் அவர்கள், திரு.ரவிச்சந்திரன் அவர்கள், திரு. வேலூர் ராமமூர்த்தி அவர்கள், திரு.லோகநாதன் அவர்கள், திரு.சைலேஷ் பாசு அவர்கள், திரு.வி.பி.சத்யா அவர்கள், திரு.தெனாலி ராஜன் அவர்கள், திரு.யுகேஷ் பாபு அவர்கள் மற்றும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.
அன்புடன் :கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
-
Quote:
Originally Posted by
Sathya VP
அநீதி யாருக்கு?
பொதுவாகவே புரட்சித் தலைவருக்கு கிடைத்த பாரத் விருது குறித்து பல்வேறு வதந்திகள் அது வழங்கப்பட்ட காலத்திலிருந்து பரப்பப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. உண்மையிலேயே அந்தப் பட்டத்துக்கு அவர் தகுதியுள்ளவர் என்பது மறுக்க முடியாத உண்மை. சதிவலை பின்னப்பட்டது என்றால் அதை கூறுபவர்கள் ஆதாரபூர்வமாக தெரிவித்தால் நன்றாக இருக்கும். மேலும், இதுபோன்ற வதந்திகள், அரசியல் காரணமாகத்தான் தனக்கு அந்தப் பட்டம் கிடைத்தது என்று திமுகவில் இருந்து தலைவர் விலகிய பின்னர், திமுகவினரால் கூறப்பட்டபோது பாரத் பட்டத்தையே தூக்கி எறிந்தவர் புரட்சித் தலைவர் அவர் எந்தப் பட்டத்துக்கும் பதவிகளுக்கும் ஆசைப்பட்டவரல்ல.
இன்னொன்று, திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு புரட்சித் தலைவர் எதுவும் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. அதிமுக ஆட்சி அவருக்கு அநீதி இழைத்ததாகவும் குற்றம் சாட்டுகின்றனர். வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்துக்கு கெய்ரோவில் திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் தமிழகம் திரும்பியதும் அவர் கழுத்தில் விழுந்த முதல் மாலை தலைவருடையது. சிவாஜி கணேசன் அவர்களுக்கு பாராட்டு விழாவும் தலைவர் நடத்தினார்.
காங்கிரஸ்காரர்கள் செய்யத் தவறினாலும் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்துக்கு புரட்சித் தலைவர் ஆட்சியின்போது வரி விலக்கு அளிக்கப்பட்டது.
1991-96 அதிமுக ஆட்சிக் காலத்தில் திரு.சிவாஜிகணேசன் அவர்களுக்கு செவாலியே விருது கிடைத்தபோது அப்போதைய முதல்வர் தலைமையில் அவருக்கு பாராட்டு விழா நடந்தது. அவர் வசித்து வந்த சாலைக்கு செவாலியே சிவாஜி கணேசன் சாலை என்று பெயர் வைக்கப்பட்டது.
சொல்லப்போனால், காங்கிரஸ் ஆட்சியில் புரட்சித் தலைவருக்குத்தான் அநீதி இழைக்கப்பட்டது. திரைப்படங்களில் திராவிட இயக்க கருத்துக்கள், அண்ணா பெயர் நீக்கப்பட்டதெல்லாம் இருக்கட்டும். சர்வதேச விருதுக்கு நாடோடி மன்னன் படத்தை அனுப்ப இருந்த நிலையில், அதற்காக படத்தை குறைத்துக் கொடுங்கள் என்று டெல்லியில் கேட்டிருக்கிறார்கள். அதை ஏற்று தலைவரும் படத்தை 11 ரீல்களாக குறைத்துக் கொடுத்திருக்கிறார். இருந்தும் படம் கடைசி நேரத்தில் விருதுக்கு அனுப்பாமல் தடுக்கப்பட்டு விட்டது. இதை, பாரத் விருது கிடைத்ததற்காக அவருக்கு சென்னை ஓட்டலில் நடந்த பாராட்டு விழாவில் தலைவரே குறிப்பிட்டுள்ளார். அந்தப் பேச்சு பின்னர், திரு.சிவாஜி கணேசன் அவர்களின் ஆதரவாளரான மதிஒளி பத்திரிகை நடத்தி வந்த மதி ஒளி சண்முகம் என்பவரால் ‘எம்.ஜி.ஆரின். தீர்க்க தரிசனம்’ என்ற பெயரில் ஒலிநாடாவாக வெளிவந்தது.
திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு ஒரு கலைஞர் என்ற முறையில் உரிய மரியாதைகள் அளிக்கப்பட்டுதான் வருகின்றன. இன்னும் என்னதான் செய்ய வேண்டும்? மணி மண்டபம் வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்படுகிறது. நியாயமான கோரிக்கைதான். அவருக்கு மணி மண்டபம் அமைந்தால் மகிழ்ச்சிதான். அரசு நிலம் ஒதுக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. அதன்பிறகு, அந்தப் பணியில் சுணக்கம் ஏற்பட்டது வருந்தத்தக்கது.
இதுபோன்று பின்னால், யாரையும், எந்த அரசையும் எதிர்பார்க்கக் கூடாது என்பதற்காகத்தான் தலைவர் தனது சொந்த இடத்தையே மாம்பலம் ஆபிஸ் என்று அழைக்கப்படும் அலுவலகத்தையே தனது பெயரில் நினைவு இல்லமாக்க வேண்டும் என்று உயிலிலேயே எழுதிவிட்டுச் சென்றார். அது இப்போது சிறப்பாக இயங்குகிறது.
திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு அதிமுக அரசு ஒன்றும் செய்யவில்லை என்றும் அநீதி இழைக்கப்பட்டது என்றும் குறைபட்டுக் கொள்வோருக்கு சொல்கிறேன். இப்போதும் ஒன்றும் கெட்டு விடவில்லை. சென்னை சாந்தி தியேட்டர் இடிக்கப்பட்டு வணிக வளாகம் வரப்போகிறது என்று செய்திகள் வந்துள்ளன. அந்த இடத்திலேயே ஒரு பகுதியில் மணி மண்டபம் அமைய வேண்டும் என்று உண்மையான சிவாஜி ரசிகர்கள், மன்றங்கள் குரல் கொடுக்கலாமே? அப்படி குரல் கொடுக்கப்பட்டு மணிமண்டபம் அமைந்தால் மகிழ்ச்சி அடைவோம். புரட்சித் தலைவர் அவர்கள் யாரையும் எதிர்பார்க்காமல் தனக்கு நினைவு இல்லத்துக்கு ஏற்பாடு செய்ததைப் போல திரு.சிவாஜி கணேசன் அவர்கள் குடும்பத்தாரும் தங்கள் இடத்திலேயே திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு மணிமண்டபம் கட்ட ஏற்பாடு செய்யலாமே? அதற்கு உண்மையான சிவாஜி ரசிகர்களும் அவர்களை கோரலாமே?
‘அது எங்கள் விவகாரம். நீங்கள் யோசனை சொல்ல வேண்டாம், நீங்கள் யார் அதைச் சொல்ல?’ என்று திரு.சிவாஜி கணேசன் அவர்களின் ரசிகர்கள் கேட்கலாம். அதிமுக ஆட்சி அவருக்கு அநீதி இழைத்தது என்றும் அவரது சகோதரரான பொன்மனச் செம்மல் என்ன செய்தார்? என்றும் கூறப்படுவதாலும் கேட்கப்படுவதாலும் இதைச் சொல்கிறேன். அதுவும் ஒரு தமிழ் கலைஞனுக்கு மணிமண்டபம் அமைய வேண்டும் என்ற அக்கறையோடு சொல்கிறேன் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். சாந்தி தியேட்டர் பகுதியில் மணி மண்டபம் அமைய திரு.சிவாஜி கணேசன் அவர்களின் ரசிகர்கள் குரல் கொடுக்கத் தயாரா?
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
-
-
http://s13.postimg.org/k9czmaokn/WP_..._29_53_Pro.jpg
OPP TO AIADMK COIMBATORE DISTRICT OFFICE, COIMBATORE
-
-
-
-