-
நண்பர்கள் அனைவரின் எல்லாப் பதிவுகளும் சிறப்பாக உள்ளன. ஒவ்வொன்றையும் தனித்தனியே பாராட்ட வேண்டும். அவ்வளவு அரிய தகவல்கள், புகைப்படங்கள், பேட்டிகள், ஆவணங்கள் என்று கலக்குகிறீர்கள். ஒவ்வொருவருக்கும் பணிவான நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Quote:
Originally Posted by
puratchi nadigar mgr
உயர்(த்தும்)ந்த உள்ளம்
கடந்த 27-ம் தேதியன்று நமது திரியில் லதா அவர்களின் பேட்டியை நண்பர் திரு.ஆர்.கே.எஸ். அவர்கள் பதிவிட்டிருந்தார். (பதிவு எண்.1229) அதன் ஒரு பகுதி கீழே:
//அதுபற்றி லதா கூறுகிறார்:- "எம்.ஜி.ஆர். வந்து என் நடனம் பார்க்க விரும்பியதும் எனக்குள் உதறல். கால்களை கட்டி வைத்துக் கொண்டதுபோல் உணர்ந்தேன். நடனம் பார்த்து என்ன சொல்வாரோ என்ற பயம்தான். நான் அவரிடம், "உங்களை பார்த்ததும் எனக்கு ஆடவரலை'' என்றேன். அவரோ, "அப்படியானால் உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் ஹீரோவை மாற்றி விடலாமா?'' என்று வேடிக்கையாக கேட்டார். பிறகு அவரே சகஜமாக பேசி, பயம் தெளிவித்து இயல்பாக நடனமாட வைத்தார்.'' //
இதற்கு நான் 28-ம் தேதி நன்றி தெரிவித்து, இதைக் கூறியிருந்தேன். (பதிவு எண் 1281)
//லதா அவர்களின் பேட்டியை பதிவிட்டதற்கும் நன்றி. அதில் தலைவரின் டைமிங் நகைச்சுவையையும் வேறு ஒரு சம்பவத்தையும் பின்னர் கூறுகிறேன். நன்றி.//
நேரமின்மையால் உடனடியாகக் கூறமுடியவில்லை. இப்போது கூறுகிறேன்....
லதா அவர்களின் பேட்டியில் மேலே குறிப்பிட்ட பகுதியைப் பார்த்தீர்களா? திரையுலகில் மட்டுமல்ல, அரசியல் துறையிலும் தலைவர் புகழின் உச்சியில் இருந்த நேரம். அவரைப் பார்த்ததும் அவரோடு நடிப்பதில் லதா அவர்கள் நெர்வசாகி இருப்பது இயற்கை. ஆனால், அவரது பயத்தை போக்கும் விதமாகவும் டைமிங்காகவும், ‘உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் ஹீரோவை மாற்றி விடலாமா?’ என்ற தலைவரின் அதிரடி நகைச்சுவையை கவனித்தீர்களா?
தலைவர் நகைச்சுவை உணர்வு மிக்கவர். இதற்கு பல சம்பவங்களை கூற முடியும். தான் மட்டுமல்லாது, மற்றவர்களின் நகைச்சுவையையும், அவர்கள் எதிர்முகாமில் இருந்தாலும், தலைவர் அதை மிகவும் ரசிப்பார். அதற்கு உதாரணம் இந்த சம்பவம். மறைந்த நடிகர் திரு.எஸ்.எஸ்.சந்திரன் அவர்கள் அதிமுகவில் சேர்ந்த பிறகு ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதைத்தான் இங்கே கூறுகிறேன்.
தலைவர் முதல்வராக இருந்த நேரம். அவரது தலைமையில் திரைப்பட விழா ஒன்று. திரு.எஸ்.எஸ்.சந்திரன், திரு.ராதாரவி உட்பட கலைஞர்களை முதல்வர் புரட்சித் தலைவர் மோதிரம் அணிவித்து கவுரவிக்கிறார். திரு.எஸ்.எஸ்.சந்திரனும், திரு.ராதாரவியும் அப்போது திமுகவில் இருந்தனர்.
அவர்கள் எதிர் முகாமில் இருக்கிறார்கள் என்று பார்க்காமல் கலைஞர்கள் என்ற முறையில் அவர்கள் இருவருக்கும் மலர்ந்த முகத்தோடு மோதிரம் அணிவித்து வாழ்த்தியிருக்கிறார் தலைவர். திரு.ராதாரவி அவர்களுக்கு தலைவர் மோதிரம் அணிவித்துள்ளார். அது சற்று சிறியதாக இருந்திருக்கிறது. அதனால், விரலில் சேரவில்லை.
தலைவர் உடனே, ‘சேரமாட்டேங்குதே?’ என்று கூறியிருக்கிறார். அருகில் இருந்த திரு.எஸ்.எஸ்.சந்திரன், ‘அவர் (ராதாரவி) ஏற்கனவே திமுகவில் சேர்ந்திருக்கிறார். அதான் சேரமாட்டேங்குது’ என்று கூறியுள்ளார். சாதாரணமாக, கலைஞர்களை கவுரவிக்கும் பொதுமேடையில் இதுபோன்று, அதுவும் முதல்வராக இருக்கும் தன்னிடமே இப்படி கூறியதற்காக தலைவர் கோபப்பட்டிருந்தாலும் அதில் தவறு காணமுடியாதுதான். ஆனால், தலைவர் அந்த நகைச்சுவையை ரசித்து பலமாக சிரித்திருக்கிறார்.
பிறகு, திரு.ராதாரவி அவர்களின் சுண்டு விரலில் மோதிரத்தை அணிவித்து விட்டு, அவரது தோளில் தட்டிக் கொடுத்து, ‘அப்பா மாதிரி (திரு.எம்.ஆர்.ராதா) வரணும்’ என்று வாழ்த்தியுள்ளார் தலைவர்.
அதற்கு, ‘அப்பா (திரு.ராதா) மாதிரி துப்பாக்கியோடு வந்துடப் போறாரு’ என்றிருக்கிறார் திரு.எஸ்.எஸ்.சந்திரன். உணர்ச்சிவசப்படும் தொண்டர்கள் அருகில் இருந்தால் அவரை அடித்தே இருப்பார்கள். ஆனால், நகைச்சுவை உணர்வு மிக்க மனிதநேயரான நம் தலைவரின் அன்றலர்ந்த செந்தாமரை போன்ற முகம் கூட மாறவில்லை. முந்தைய ஜோக்கைக் காட்டிலும் இந்த முறை இன்னும் பலமாக திரு.எஸ்.எஸ்.சந்திரனைப் பார்த்து சிரித்திருக்கிறார். இதற்கு எவ்வளவு பெரிய மனமும் நகைச்சுவை உணர்வும் வேண்டும்.
இந்த தகவலை பின்னர், திரு.சந்திரனே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இந்த சம்பவம் நடந்தபோது, ‘நான் திமுகவில் இருந்ததால் புரட்சித் தலைவர் மீது கொண்டிருந்த காழ்ப்புணர்ச்சியும் அப்படி பேசுவதற்கு காரணம்’’ என்று ஒளிக்காமல் சொல்லியிருந்தார் திரு.சந்திரன்.
அப்படிப்பட்ட, திரு.சந்திரனும் திரு.ராதாரவி அவர்களும் கால ஓட்டத்தில் புரட்சித் தலைவர் தொடங்கிய அதிமுகவிலேயே சேர்ந்து பல மேடைகளில் தலைவரின் புகழ் பாடினர். திரு.எஸ்.எஸ்.சந்திரன் அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தார். திரு.ராதாரவி அவர்கள் எம்எல்ஏ.வாக இருந்தார். இப்போதும் அதிமுகவில் தொடர்கிறார்.
தன்னை திட்டியவர்கள், கிண்டல் செய்தவர்கள், காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களுக்கும் கூட தான் மறைந்தாலும் (தலைவர் இருக்கும்போதே இந்த வகையை சேர்ந்தவர்கள் பதவி பெற்றதற்கு திரு. மதுரை முத்து உதாரணம்) அவர்களுக்கும் தனது கட்சி மூலம் பதவி கிடைக்கும்படி செய்திருக்கிறது தலைவரின் உயர்ந்த உள்ளம். மற்றவரை உயர்த்தும் உள்ளம்.
மாற்றுக்கருத்தை கொண்டவர்களை கூட, தான் மறைந்தாலும் தன் பக்கம் ஈர்க்கும் சக்தியும் அருளும் தலைவரின் தங்க முகத்துக்கு உண்டு. ‘முகத்தைக் காட்டினாலே போதும், 30 ஆயிரம் வாக்குகள் விழும்’ என்று தலைவரைப் பற்றி சும்மாவா கூறினார் பேரறிஞர்?
மற்றவர்கள் அடிக்கும் ஜோக்குகளுக்கும் தலைவர் மனம்விட்டு சிரிப்பார் என்று கூறினேனே. மேலே, உள்ள படத்தைப் பாருங்களேன். பல்லாண்டு வாழ்க படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படம். படத்தில் இந்தக் காட்சி கிடையாது. படப்பிடிப்பு இடைவேளையில் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. படத்தைப் பார்த்தால் நம்பியார் சாமி ஏதோ ஜோக் அடிக்கிறார் என்று தெரிகிறது. அவரும் லொள்ளு பார்ட்டிதான். தலைவர் உட்பட எல்லாரும் ரசித்து சிரிக்கிறார்கள்.
நகைச்சுவை உணர்வு இருக்கும் இடத்தில் கோபம் வராது. திரு.எஸ்.எஸ்.சந்திரன் சொன்ன தகவல் பற்றி ‘மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம்’ பதிவிலேயே சொல்லலாம் என்று நினைத்தேன். பதிவும் நீளும், நேரமும் இல்லை என்பதால் அப்போது சொல்லவில்லை. இப்போது சொல்லிவிட்டேன்.
தலைவரிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய எவ்வளவோ பண்புகளில் கோபப்படாமல் இருப்பதும் ஒன்று. அப்போதுதான் சிந்தனை தெளிவாக இருக்கும். மேலும், ‘கோபத்தோடு எழுபவன் நஷ்டத்தோடு உட்காருவான்’ என்பது முதுமொழி.
கோபப்பட்டவருக்கு நேர்ந்த கதியை, நான் சமீபத்தில் ரசித்த நகைச்சுவையை பகிர்ந்து கொள்கிறேன்.......
சென்னை விமான நிலையத்தில் ஜப்பான் செல்ல வேண்டிய பயணி ஒருவர், பெரிய மனிதர், நிறைய லக்கேஜ்களுடன் வந்தார். அவரது லக்கேஜ்களை எடுத்து வைக்கும் தொழிலாளி ஒரு பெட்டியை கீழே போட்டு விட்டார். வேண்டுமென்றே அந்த தொழிலாளி செய்யவில்லை. தவறுதலாக கை நழுவி பெட்டி விழுந்து விட்டது. சேதமும் ஒன்றும் இல்லை. இருந்தாலும் வந்ததே கோபம் அந்த பெரிய மனிதருக்கு. அந்த தொழிலாளியை பொது இடம் என்றும் பாராமல், சூழ்நிலையை மறந்து, மரியாதைக் குறைவாக வாய்க்கு வந்தபடி திட்டினார்.
அந்த தொழிலாளி பதிலுக்கு ஒருவார்த்தை கூட பேசவில்லை. அதுமட்டுமல்ல, முகம் கூட சுளிக்கவில்லை. சுற்றும் முற்றும் உள்ளவர்கள் தன்னையே பார்ப்பதும், பெரிய மனிதர் சகட்டுமேனிக்கு திட்டுவதும் சங்கடமாக இருந்தாலும் பதில் பேசாமல், ‘இதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை’ என்பதுபோல லேசான இளநகையுடன் இருந்தார். இதனால், கோபம் அதிகமாகி அந்த பெரிய மனிதர் அடிக்கப் போவதுபோல பாய்ந்தும் கடமையே கண்ணாக லக்கேஜ்களை எடுத்து வைத்தார் தொழிலாளி. எல்லாம் முடிந்து அந்த பெரிய மனிதர் ஜப்பான் விமானத்திலும் குறித்த நேரத்தில் ஏறிச் சென்று விட்டார்.
வேறொரு விமானத்துக்கு காத்துக் கொண்டிருந்த பயணி ஒருவர், நடந்ததை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தவர், திட்டு வாங்கிய தொழிலாளியின் பொறுமையைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு பொறுமைசாலியா? இல்லை, ஒரு வேளை ஏழ்மையின் இயலாமையா? எப்படியோ?.... பரிதாபமாக இருந்தது அவருக்கு.
தொழிலாளியிடமே கேட்டு விடலாம், மேலும், எந்த வகையில் தொழிலாளி கோபத்தை கட்டுப்படுத்தினார் என்பதை அவரிடமே கேட்டுத் தெரிந்து கொண்டால் நமக்கும் உதவும் என்ற எண்ணம் வந்தது அவருக்கு.
கேட்டும் விட்டார்....
லக்கேஜ்களை ஏற்றும் தொழிலாளி பதில் சொன்னார்...
‘இவர்கிட்ட எல்லாம் எதுக்கு சார் பதிலுக்கு பதில் பேசிக்கிட்டு? எல்லாரையும் மாதிரி எனக்கும் கோபம் வரத்தான் செய்யும். ஒவ்வொருத்தரும் அதை டீல் பண்ற விதம்தான் வேற. என் பாணி தனி.’
‘அதைத்தான் கேட்கிறேன்... எப்படி கோபத்தை கட்டுப்படுத்தறே? சொல்லேம்பா’
‘ஒண்ணுமில்ல சார். என்னைத் திட்டிய பெரிய மனிதர் ஜப்பானுக்கு போய்கிட்டிருக்கார். அவரது லக்கேஜ்கள் வேறு விமானத்தில் அமெரிக்கா போவுது’
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
பின்குறிப்பு: நான் கூறிய நகைச்சுவையை படிப்பவர்கள் கோபப்பட்டால் நஷ்டம் ஏற்படும் என்ற நீதியைத்தான் இதன்மூலம் எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, கோபப்படுபவர்களை தொழிலாளியைப் போல டீல் செய்ய வேண்டும் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அன்புடன் கோருகிறேன்.
-
தாயிடத்தில் அன்பு, தாந்தயிடத்தில் மரியாதை, ஆசானிடத்தில் பயபக்தி,
நண்பனிடத்தில் பாசம், ஏழைகளிடத்தில் இறக்கம் என்ற இந்த பண்புகள் தான்
தெய்வ பக்தி. மனதில் தூய்மை ஏற்பட்டால் அதுதான் பக்தி. அந்த தூய்மையை
எற்படுதுவதக்கு நான் கடவுள் வேஷம் போட்டுதான் நடிக்க வேண்டுமா என்ன?
- புரட்சித்தலைவர்
-
-
Quote:
Originally Posted by
Sathya VP
ஆஹா அற்புதம் அற்புதம்
-
Quote:
Originally Posted by
esvee
THE PERENNIAL FOUNTAIN OF GENEROCITY THAT MGR IS. --காமதேனு போல் என்றும் வாரி வழங்கும் வள்ளல் திரு எம். ஜி. ஆர்.
PHILANTHROPY - இல்லாதவர்களுக்கு இல்லை என்றாது உதவும் - பணத்தை கணக்கிலாமல் வாரி வழங்கும்
AUGUST PRESENCE OF MGR :inspiring reverence or admiration; of supreme dignity or grandeur; majestic PRESENCE OF MGR
இதய தெய்வத்தை பார்த்ததை
எத்தனை அற்புதமான வர்ணனைகள்
ஆங்கிலத்தில் ,
Dictionery இல் meanings
பார்த்து மகிழ்ந்தேன்
-
-
-
-