Inthis songs performance by all three very very naural fine
Inthis songs performance by all three very very naural fine
வாசு,
எனக்கு மிக மிகப் பிடித்த அந்த நெஞ்சிருக்கும் வரை போஸிற்கு கோடானு கோடி நன்றிகள்!
அன்புடன்
மிக்க நன்றி வாசு சார்.
எங்கள் தங்க ராஜா(1973 )
வசந்த மாளிகைக்கு பிறகு தெலுங்கு தயாரிப்பாளர்களின் பிரிய நடிகர் ஆனதுடன் ,இரு மடங்கு ஊதியம், மொத்த தேதிகள் இத்யாதிகளுடன் தயாரிக்க பட்ட தெலுங்கு தழுவல் படம். ராஜேந்திர பிரசாத் இயக்கம் ,தயாரிப்பு. (மற்றவை- உத்தமன், பட்டாகத்தி பைரவன்).நான் பெங்களுருவில் தொலைந்து போக இருந்த த்ரில் அனுபவத்தை எழுதி விட்டேன்.
கதை ஜன ரஞ்சகமாக பொழுபோக்கு நிறைந்த suspense அம்சம் கொண்டது. தனது குடும்பத்தை நிர்மூலமாக்கிய வில்லனை டாக்டர் கதாநாயகன்,அவர் மகளை காதலித்து பழி வாங்கும் கதைதான் என்றாலும், பட்டாகத்தி பைரவன் கதாபாத்திரம் படத்தை உச்சத்தில் நிறுத்தி, அந்த வருடத்திய அதிக பட்ச வசூல் சாதனை நிகழ்த்திய சிவாஜி படம் ஆனது. மஞ்சுளா ஜோடியாக வெளிவந்த முதல் படம்.(அறிமுகம்-மன்னவன் வந்தானடி)
படம் வழக்கமான துவக்கம்,பிறகு டாக்டர் கதாபாத்திரத்தின் நற்பண்புகள்(ஏழைகள் ,உதவி இத்யாதி), கல்லூரி மோதல் ,tease பாட்டு, காதல் , என்று என்னடா கொஞ்சம் தொய்கிறதே என்று பார்த்தால், பட்டாகத்தி பைரவன் அறிமுகம். சூயங் கம் மென்று கொண்டு, தோசைகல் கூலிங் க்ளாச்சுடன்,பைக்கில் அறிமுகம். பாரில் கலாட்டா. வில்லன் உடன் அறிமுகம். அவன் பெண்ணை தட்ட கூடாத இடத்தில் தட்டி கலாட்டா.மாடி வரை ஸ்போர்ட்ஸ் கார் ,சகுந்தலாவுடன் கொட்டம், போலீசுடன் நக்கல், பிறகு கொஞ்சம் சீறியேஸ் ஆக கற்பாம் மானமாம் பாடல் என விரிந்து ,எதிர்பாராத முடிவுடன் முடியும். NT அவருடைய அதிரடி பாணியில் (உத்தம புத்திரன் விக்ரம், நவராத்திரி DSP ) வெளுத்து வாங்கி பின்னியிருப்பார். அட்டகாச சிரிப்பு, restless ஆன திமிர் நடை,அகந்தையாய் ஈர்ப்புடன் வசன உச்சரிப்பு, துரு துருப்பு , rowdiyish handsome தோற்றத்தில்(ஒல்லியாக) ரசிகர்களை பைத்தியம் ஆக்கி இருப்பார். இந்த படத்தில் முத்தங்கள் நூறு பாட்டை பார்த்தவர்கள், ரஜினி ஸ்டைல்,நடை, நடனம் எங்கிருந்து உற்பத்தியானது என உணர்வார்கள்.
பாடல் மாமா மகாதேவன் பின்னியிருப்பார். இரவுக்கும் பகலுக்கும் அழகான ஓட்ட நடை பாடல்.(மற்றது விடிவெள்ளியின் கொடுத்து பார்),கல்யாண ஆசை ,சம்ப்ஹோ,கற்பாம்,முத்தங்கள், கோடியில்(ஆண்டவனே ஒளி விளக்கு பாணி) என நல்ல ஹிட் பாடல்கள்.
படம் நடு நடுவில் தொய்ந்தாலும் , மொத்தத்தில் விறுவிறுப்பாய் போவதே தெரியாமல் போகும்.
எதற்காக இல்லாவிட்டாலும் பட்டாகத்தி பைரவனுக்காக நூறு முறை பார்க்கலாம்.(ஏனென்றால் அவர் ஒரு முறை நடித்து விட்டதை மற்றவர்கள் நூறு முறை நடித்து பெயர் வங்கி விட்டார்கள்)
அன்புள்ள திரு. ராகவேந்தர், திரு. முரளி, திரு. வாசுதேவன், திரு. கார்த்திக், திரு. கோபால் மற்றும் திரு. சசி,
என்னுடைய "நெஞ்சிருக்கும் எங்களுக்கு" படப் பாடல் ஆய்வைப் படித்து பாராட்டி ஊக்குவித்ததற்கு மிக்க நன்றி.
திரு. ராகவேந்தர்:- எனக்கு இருந்த ஒரு சந்தேகத்தை நிவர்த்தி செய்ததற்கும், உடனே, அந்தப் பாடலை பதிவிட்டதற்கும் மிக்க நன்றி.
திரு. முரளி:- இந்தப் பாடல் கவிஞர் வாலி இயற்றினாரா அல்லது கவியரசுவா என்று முதலில் இருந்தே ஒரு சந்தேகம் இருந்தது. என்சைக்ளோபீடியவான உங்களிடம் வேறொரு சந்தேகத்தை நிவர்த்தி பண்ணுவதற்கு தொடர்பு கொண்ட நான், இந்த சந்தேகத்தை நிவர்த்தி பண்ணாமல் விட்டு விட்டேன். உடனே, அந்தத் தவறை சரி செய்து விட்டேன். சரியான நேரத்தில் தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றிகள். என்ன செய்வது, எனக்கும் பல விவரங்கள் (மற்ற மொழிகள் உட்பட) தெரிந்திருந்தும், சில விவரங்களில் இன்னமும் நெடுந்தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. நீங்கள் குறிப்பிட்டபடி, "நல்லவன் எனக்கு நானே நல்லவன்" பாடலும் "நெஞ்சிருக்கும் எங்களுக்கு" பாடலும் பெரும்பாலும் உடல் மொழியை சுற்றியே பின்னப் பட்டிருக்கும். இந்த ஒரு விஷயம் தான் நாடக நடிப்புக்கும் சினிமா நடிப்புக்கும் வித்தியாசத்தை - நடிகர்களிடமிருந்து - வர வேண்டியிருக்கும் மிக முக்கியமான வித்தியாசம். இந்த வித்தியாசத்தை முதலில் அதுவும் பரிபூரணமாகக் காட்டிய நடிகர், நடிகர் திலகம் என்பது துவக்கத்திலிருந்தே தெரியும். இருப்பினும், இந்தப் பாடல்களும் அந்தக் கட்டுரையும், நடிகர் திலகத்தின் வித்தியாசமான முயற்சியையே பெரிதும் எடுத்துக் கொள்கிறது.
திரு. வாசு:- பாராட்டியதோடு நிற்காமல், உடனடியாக அந்தப் பாடலின் விடியோவையும் பதிந்ததற்கு மிக்க நன்றி. அதோடு நிற்காமல், "நெஞ்சிருக்கும் வரை" படத்தின், புகழ் பெற்ற நடிகர் திலகத்தின் போஸின் நிழற்படத்தையும் பதிந்து மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தி விட்டீர்கள். மிக்க நன்றி. நடிகர் திலகத்தின் படம் ஒவ்வொன்றையும், அது இன்ன படம் என்று அவருடைய கெட்டப் மற்றும் சில போஸ்களை வைத்தே எளிதாகக் கண்டு பிடித்து விடலாம் - ஒரே சிகை அலங்காரம் மற்றும் கிருதாவாக இருந்தாலும் (செல்வம் முதல் என் தம்பி/லக்ஷ்மி கல்யாணம் வரை) - விக்குடன் இருந்தாலும் - குறிப்பிட்ட போசை வைத்து (உதாரணத்திற்கு செல்வத்தில் க்ளோசப் சைட் போஸ்:- முத்து முத்தாக வியர்வைத் துளிகள்; என் தம்பி:- கத்தியுடன் நிற்கும் போஸ் - இப்படிப் பல படங்கள்). இந்த வரிசையில், நெஞ்சிருக்கும் வரை என்றாலே ஒவ்வொரு ரசிகனுக்கும் நினைவு வருவது நீங்கள் பதிந்த போஸ் தானே! முதலில் பார்த்த போது, அந்தப் போஸுக்கு தியேட்டர் அதிர்ந்தது இன்னும் என் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றது!!
திரு. கார்த்திக்:- இந்தக் கட்டுரை, நடிகர் திலகத்தின் நடிப்பை மட்டுமே ஆராய்வதால், பங்களித்த மற்ற கலைஞர்களின் பங்களிப்பைப் பெரிய அளவில் தொடுவதில்லை. ஒரே ஒரு வாக்கியத்தில் மற்ற கலைஞர்களைப் பற்றிக் குறிப்பிட்ட போது, மெல்லிசை மன்னரின் பங்களிப்பை முதலில் சுட்டிக்காட்டத் தவறி விட்டேன். பின்னர், மறுபடியும், படித்த போது, தவறை உணர்ந்து திருத்தி விட்டேன். மற்றபடி, எனக்கும், ஆதர்ச இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் தான். என்னைப் பொறுத்த வரை, திரை இசைப் பாடல்களுக்கு (குறிப்பாக, தமிழில்) டியூனுக்கு இலக்கணம் வகுத்தவர் அவர் தான் என்பேன். சினிமா பாடல்கள் 1961-க்கு முன்பு வரை, ஒன்று சாஸ்த்ரிய அடிப்படையிலோ இல்லை நாட்டுப் பாடல்களின் (folk) அடிப்படையிலோ தான் இருந்து வந்தன. பாவ மன்னிப்பு படத்திற்குப் பின்னர் தான் சினிமா பாடல்கள் வேறு ஒரு பாட்டையில் பயணிக்க ஆரம்பித்தது. அதாவது, கொஞ்சம் சாஸ்த்ரிய சங்கீதம், கொஞ்சம் மேலை நாட்டு சங்கீதம் சேர்ந்த கலவையாக. எப்படி இன்றைய கர்னாடக சங்கீதக் கச்சேரிகள் பின்பற்றுகின்ற முறையை, மறைந்த அரியக்குடி அவர்கள் முதலில் வகுத்தாரோ, சினிமாவில், இன்றைய சங்கீதத்தின் அடிப்படையை மெல்லிசை மன்னர் அவர்கள் தான் (மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி) முதலில் வகுத்தார். அந்த அடிப்படையில் தான், இன்று வரை, தமிழ் சினிமா பாடல்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதை ஏற்கனவே ஒரு முறை எழுதியிருக்கிறேன்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
அன்புள்ள வாசுதேவன் சார்,
எங்கள் தங்க ராஜாவின் சண்டைக்காட்சி பதிவு வெகு அருமை. சற்றே கருமையான முகம், வித்தியாசமான விக், வழக்கத்துக்கு மாறாக பெரிய கூலிங் கிளாஸ், சற்று காடியான வண்ணத்தில் உடை என அசத்தியிருப்பார் தலைவர். இம்மாதிரி சண்டைக்காட்சிகள் அம்சமாக எடுபட்டதற்கு பெரிய மூலதனமாக அமைந்தது அந்த அட்டகாசமான ஸ்லிம் உடல்வாகு. தச்சோளி அம்பு மலையாளப்பட ஷூட்டிங்கில் அடிபட்டு ஓய்வெடுத்ததிலிருந்து அவரது உடல்வாகு மீண்டும் 1960 முதல் 65 வரையான கட்டத்தை நோக்கித்திரும்பி விட்டது.
கோபால் சார் சொன்னதுபோல, படம் துவங்கி சிறிது நேரம் இரண்டு சிறுவர்கள், மேஜர், சௌகார் என்று ஓடத்துவங்கியபோது, 'என்னப்பா இது இருதுருவம் போலல்லவா இருக்கிறது?' என்ற முணுமுணுப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இருந்தாலும் ஸ்டில்களில் பட்டாக்கத்தியாரின் போஸ்களைப் பார்த்திருந்ததால் அவரது தரிசனத்துக்காக மனம் ஏங்கிக்கொண்டிருந்தது. அதனால் மஞ்சுளாவின் 'சாமியிலும் சாமியிது' பாடலெல்லாம் பொறுமையை ரொம்பவே சோதித்தது உண்மை. பாடலை தெலுங்கு மெட்டில் வேறு போட்டிருப்பார் கே.வி.எம். அவர் பண்ணிய இன்னொரு மிஸ்டேக், எல்.ஆர்.ஈஸ்வரி பாடியிருக்க வேண்டிய 'முத்தங்கள் நூறு' பாடலை சுசீலாவுக்குக் கொடுத்தது.
நீங்கள் தந்திருக்கும் சண்டைக்காட்சி அட்டகாசமாக உள்ளது. வெறும் சண்டையாக இல்லாமல் அதில் ஸ்டைலையும் கலந்து தந்திருப்பதுதான் இதில் சிறப்பு. ஏ.டி.வெங்கடேசன் அமைத்த சிறந்த சண்டைக்காட்சிகளில் இதுவும் ஒன்று எனலாம். (சண்டைக்காட்சி வரிசையில், தங்கள் பதிவின்போது அந்தந்த படங்களின் சண்டைப்பயிற்சியாளரின் பெயரை படத்தின் ஒரிஜினல் டைட்டில் கார்டோடு சேர்த்து பதிவிடும் தங்கள் பாணி மிக மிக போற்றுதலுக்குரியது).
ஒருபக்கம் நடிகர்திலகத்தின் திரை நாயகியர் வரிசை ஆய்வு, இன்னொருபக்கம் சண்டைக்காட்சிகள் பற்றிய ஆய்வு, மறுபக்கம் படங்களின் ஸ்டில்கள், வேறொருபக்கம் பார்த்தசாரதி அவர்களின் பாடல் ஆய்வுகள், ராகவேந்தர் சாரின் ஸ்பெஷல் பதிவுகள் என திரி கனஜோராகச் செல்கிறது. பம்மலார் அவர்கள் விடுமுறை முடிந்து எப்போது திரும்புவார்?. அவர் பதிவுகளைக்காண மனம் ஏங்குகிறது.
'எங்கள் தங்க பைரவன்' சண்டைக்காட்சியைப் பதிவிட்டு திரியில் சுறுசுறுப்பு ஏற்றியமைக்கு மிக்க நன்றி. பாராட்டுக்கள்.
As written by Mr.Partha sarathy,
(Quote)
திரு. கார்த்திக்:- இந்தக் கட்டுரை, நடிகர் திலகத்தின் நடிப்பை மட்டுமே ஆராய்வதால், பங்களித்த மற்ற கலைஞர்களின் பங்களிப்பைப் பெரிய அளவில் தொடுவதில்லை. ஒரே ஒரு வாக்கியத்தில் மற்ற கலைஞர்களைப் பற்றிக் குறிப்பிட்ட போது, மெல்லிசை மன்னரின் பங்களிப்பை முதலில் சுட்டிக்காட்டத் தவறி விட்டேன். பின்னர், மறுபடியும், படித்த போது, தவறை உணர்ந்து திருத்தி விட்டேன். மற்றபடி, எனக்கும், ஆதர்ச இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் தான். என்னைப் பொறுத்த வரை, திரை இசைப் பாடல்களுக்கு (குறிப்பாக, தமிழில்) டியூனுக்கு இலக்கணம் வகுத்தவர் அவர் தான் என்பேன். சினிமா பாடல்கள் 1961-க்கு முன்பு வரை, ஒன்று சாஸ்த்ரிய அடிப்படையிலோ இல்லை நாட்டுப் பாடல்களின் (folk) அடிப்படையிலோ தான் இருந்து வந்தன. பாவ மன்னிப்பு படத்திற்குப் பின்னர் தான் சினிமா பாடல்கள் வேறு ஒரு பாட்டையில் பயணிக்க ஆரம்பித்தது. அதாவது, கொஞ்சம் சாஸ்த்ரிய சங்கீதம், கொஞ்சம் மேலை நாட்டு சங்கீதம் சேர்ந்த கலவையாக. எப்படி இன்றைய கர்னாடக சங்கீதக் கச்சேரிகள் பின்பற்றுகின்ற முறையை, மறைந்த அரியக்குடி அவர்கள் முதலில் வகுத்தாரோ, சினிமாவில், இன்றைய சங்கீதத்தின் அடிப்படையை மெல்லிசை மன்னர் அவர்கள் தான் (மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி) முதலில் வகுத்தார். அந்த அடிப்படையில் தான், இன்று வரை, தமிழ் சினிமா பாடல்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதை ஏற்கனவே ஒரு முறை எழுதியிருக்கிறேன்.
Unquote
சாரதி சார்,
நீங்கள் தகுதிக்கு மீறியே விஸ்வநாதன்-ராமமூர்த்திக்கு கிரெடிட் கொடுக்கிறீர்கள். அவர்கள் trend -setter என்பது தவறான தகவல்.1952 இல் சுப்பராமன் மறைவுக்கு பிறகு ஒன்று சேர்ந்த விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஜோடி உருப்படியாக 52 - 60 இல் தந்த படங்கள் புதையல்,பதிபக்தி, சிவகங்கை சீமை,பாகபிரிவினை, மன்னாதி மன்னன்,மாலையிட்ட மங்கை ஆகியவை மட்டுமே. நீங்கள் சொன்ன trend -setter பட்டத்துக்கு தகுதியானவர்கள் சுப்பராமன்,ஜி.,ராமநாதன், ஏ.எம்.ராஜா,மகாதேவன் ஆகியோரே.இவர்கள்தான் சரியான விகிதத்தில் கர்நாடகம்,ஹிந்துஸ்தானி,வெஸ்டேர்ன்,folk கலந்து தமிழ் பட மெல்லிசையை தூக்கி பிடித்த நால்- வேந்தர்கள்.(trend -setters )
ஆனால், 60 களில்,மெல்லிசை மன்னர்கள் ,வடக்கில் சங்கர்-ஜெய்கிஷன்,நவஷாத்,நய்யார்,பர்மன்,,சலீல் சௌதரி,மதன் மோகன்,லட்சுமி-பியாரி இவர்கள் அத்தனை பேருடைய சாதனையையும் மிஞ்சி, அத்தனை variety கொடுத்தனர். பீம்சிங்,ஸ்ரீதர், சங்கர்,பந்துலு,ராமண்ணா, கோபாலக்ருஷ்ணன்,வேலுமணி ,சிவாஜி படங்களில் இசை ராஜ்ஜியம் தான். இதே காலகட்டத்தில் மாமா மகாதேவன் சாதனையும் அளப்பரியது.
ஆனாலும், 60 இல் இருந்து 65 வரை வருடம் நான்கு படங்கள் சராசரியாக கொடுத்து தங்கள் ஜோடியை ஆதரித்த சிவாஜியிடம், தனியாக வந்த பிறகு ,விஸ்வநாதன் நன்றி பாராட்டினாரா என்பது கேள்வி குறியே.தனியாக வந்த பிறகு விஸ்வநாதன் திறமை அந்த அளவு ஜொலிக்கவும் இல்லை.
ஆஹா! ஆரம்பிச்சிட்டாருய்யா...ஆரம்பிச்சிட்டாருய்யா.. . 'மெல்லிசை மன்னர்' திரி நண்பர்கள் கண்களுக்குப் படாமல் ஏதாவது செய்ங்கப்பா...
அப்டியா?!Quote:
தனியாக வந்த பிறகு விஸ்வநாதன் திறமை அந்த அளவு ஜொலிக்கவும் இல்லை
ஒரு அழகான உரையாடலை தொடங்கியுள்ளீர்கள். தங்களுடன் உடன் படுகிறேன். Grandeaur என்று பார்த்தால் சிவந்த மண்தான் அவர் உச்சம். உயர்ந்த மனிதனை நான் தேர்ந்தெடுத்தது classical touch (பால் போலவே,வெள்ளி கிண்ணம் தான் ) Experimental genre (அந்த நாள்) ஆகியவற்றுக்குத்தான்.
அவர்கள் பிரிந்தபின் balancing of archestra , அதிசய ராகங்கள்(உள்ளத்தில் -சக்ரவாகம் தொடங்கி,சரசாங்கியில் தொடரும்) ,ரெகார்டிங் ஸ்டாண்டர்ட்ஸ் பாதிக்க பட்டது உண்மை. ராம மூர்த்தி அவர்களுக்கு வியாபார திறமை அற்றதாலும்,தங்க சுரங்கம் எதிர் பார்த்த வெற்றியை பெறாததாலும் ஒதுக்க பட்டார்.
விஸ்வநாதன் தனியே வந்த பின் சில நல்ல படங்களை (sivaji) 1975 வரை கொடுத்துள்ளார். நீலவானம்(ஓஹோஹோ ஓடும் ,ஓஹ் லிட்டில் flower ),மோட்டார் சுந்தரம் பிள்ளை(காத்திருந்த), Thangai(Sugam,Iniyadhu),நெஞ்சிருக்கும் வரை(அனைத்தும்),இரு மலர்கள்(மாதவி,மன்னிக்க, அன்னமிட்ட),ஊட்டி வரை உறவு(அனைத்தும்),உயர்ந்த மனிதன் (அனைத்தும்),அன்பளிப்பு(தேரு வந்தது,வள்ளிமலை), சிவந்த மண்(அனைத்தும்),எங்க மாமா(என்னங்க,சொர்க்கம்,எல்லோரும்),ராமன் எத்தனை ராமனடி(சித்திரை மாதம், நிலவு வந்து),சொர்க்கம்(பொன்மகள்,muthaaraththil),எங் கிருந ்தோ வந்தாள்(ஒரே பாடல்,சிரிப்பில்),பாதுகாப்பு(ஆற்றுக்கு),இரு துருவம்(தேரு பார்க்க),தங்கைக்காக(அங்க முத்து),Praptham (Allsongs)சுமதி என் சுந்தரி(அனைத்தும்), பாபு(வரதப்பா), ஞான ஒளி(மண மேடை),பட்டிக்காடா பட்டணமா(என்னடி,கேட்டுக்கோடி),தர்மம் எங்கே(பள்ளியறைக்குள்),தவ புதல்வன்(நானொரு,இசை கேட்டால்),பொன்னூஞ்சல்(ஆகாய, நல்ல காரியம்),கவுரவம்(யமுனா,அதிசய),ராஜபார்ட் ரங்கதுரை(அம்மம்மா,மதன),
சிவகாமியின் செல்வன்(இனியவளே,மேளதாளம்),தாய்(எங்க மாமனுக்கும்),அவன்தான் மனிதன்(ஊஞ்சலுக்கு,அன்பு நடமாடும்,ஆட்டுவித்தால்)மன்னவன் வந்தானடி(காதல் ராஜ்ஜியம்),அன்பே ஆருயிரே(மல்லிகை முல்லை),வைர நெஞ்சம்(நீராட),டாக்டர் சிவா(மலரே,கன்னங்கருத்த),பாட்டும் பரதமும்(மான் தோரண,கற்பனைக்கு), சித்ரா பவுர்ணமி (வந்தாலும்).
ரோஜாவின் ராஜா(ஜனகனின் மகளை)