-
எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாற்று குறிப்புகள்
தோற்றம் 17/1/1917.
பிறந்த இடம் கண்டி - இலங்கை
தந்தை பெயர் திரு. கோபாலமேணன்
தாயார் பெயர் திருமதி. சத்தியபாமா
சகோதரர் பெயர் திரு.எம்.ஜி.சக்கரபாணி
பள்ளியின் பெயர் கும்பகோணம் ஆணையடி பள்ளி.
படிப்பு 3-ம் வகுப்பு
கலை அனுபவம் 7 வயது முதல்
நாடக அனுபவம் 1924 முதல் 1963 வரை - 40 வருடங்கள்
சென்னை வருகை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில்-1932 யானைகவுனி
சென்னையில் முதலில் வசித்த இடம் பங்காரம்மாள் வீதி
திதையுலகில் அறிமுகம் செய்தவர் திரு.கந்தசாமி முதலியார்
திரை உலக அனுபவம் 1934 முதல் 1977 வரை - 44 வருடங்கள்.
நடித்து வெளிவந்த படங்கள் 137 படங்கள்
கதாநாயகனாக நடித்த திரைப் படங்கள் 115 படங்கள்
முதல் படம் வெளியான தேதி 28/03/1936 - சதிலீலாவதி
முதல் வேடம் காவல் துறை அதிகாரி - சதிலீலாவதி
முதல் கதாநாயகன் வேடம் ராஜகுமாரி - ஜுபிடர் நிறுவனம்
100 வது படம் தமிழில்-ஒளி விளக்கு - 20/09/1968
கடைசி படம் வெளியான தேதி 14/01/1978 மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
மறைவுக்கு பின் வெளியான படம் அவசர போலீஸ் 100
அரசியல் அனுபவம் 1933 முதல் 1987 வரை - 55 ஆண்டுகள்
முதன் முதலாக இருந்த இயக்கம் இந்திய தேசிய விடுதலை காங்கிரஸ்
தி.மு.க.வில் இருந்த ஆண்டுகள் 1950 முதல் 1972 வரை
அ.தி.மு.க. துவங்கிய ஆண்டு 1972
தமிழக முதல்வரானது 1977 முதல் 1987 வரை - 11 வருடங்கள்
சென்ற வெளிநாடுகள் மலேஷியா, இலங்கை, பர்மா, சிங்கப்பூர்,ஹாங்காங், பாங்காக், தாய்லாந்து, ஜப்பான்,பிரான்ஸ், கிழக்கு ஆப்பிரிக்கா, லண்டன்,ரஷ்யா, அமெரிக்கா, மொரீஷியஸ்.
மறைவு 24/12/1987
-
சிறப்பு விருதுகளும் பட்டங்களும்
எம்.ஜி.ஆர் என்கிற எம்.ஜி.ராமச்சந்திரன் தனது திரைச்சேவைக்காகவும், பொதுச்சேவைக்காகவும் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். அவைகளில் குறிப்பிடத்தக்க சில மட்டும்.
விருதுகள்
பாரத் விருது - இந்திய அரசு
அண்ணா விருது - தமிழ்நாடு அரசு
பாரத ரத்னா விருது - இந்திய அரசு
பத்மஸ்ரீ விருது - இந்திய அரசு (ஏற்க மறுப்பு)
சிறப்பு டாக்டர் பட்டம் - அமெரிக்கா அரிசோனா பல்கலைக் கழகம்,சென்னைப் பல்கலைக் கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் (ஏற்க மறுப்பு), சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் (ஏற்க மறுப்பு)
வெள்ளியானை விருது - இந்திய சாரணர் இயக்கம்.
திரைச்சேவைக்கான பட்டங்களும் வழங்கியவர்களும்
இதயக்கனி - அறிஞர் அண்ணா
புரட்சி நடிகர் - கலைஞர் மு. கருணாநிதி
நடிக மன்னன் - சென்னை ரசிகர்கள் (சி.சுப்பிரமணியம் அவர்களால் வழங்கப்பட்டது.)
மக்கள் நடிகர் - நாகர்கோவில் ரசிகர்கள்
பல்கலை வேந்தர் - சிங்கப்பூர் ரசிகர்கள்
மக்கள் கலைஞர் - காரைக்குடி ரசிகர்கள்
கலை அரசர் - விழுப்புரம் முத்தமிழ்க் கலை மன்றம்
கலைச்சுடர் - மதுரை தேகப்பயிற்சிக் கலை மன்றம்
கலை மன்னர் - நீதிபதி ராஜமன்னார்
கலை மன்னன் - சென்னை ரசிகர்கள்
கலை வேந்தர் - மலேசிய ரசிகர்கள்
திரை நாயகன் - சேலம் ரசிகர்கள்
பொதுச்சேவைக்கான பட்டங்களும் வழங்கியவர்களும்
கொடுத்து சிவந்த கரம் - குடந்தை ரசிகர்கள்
கலியுகக் கடவுள் - பெங்களூர் விழா
நிருத்திய சக்கரவர்த்தி - இலங்கை ரசிகர்கள்
பொன்மனச் செம்மல் - கிருபானந்த வாரியார்
மக்கள் திலகம் - தமிழ்வாணன்
வாத்தியார் - திருநெல்வேலி ரசிகர்கள்
புரட்சித்தலைவர் - கட்சித் தோழர்கள்
இதய தெய்வம் - தமிழ்நாடு பொதுமக்கள்
மக்கள் மதிவாணர் - இரா. நெடுஞ்செழியன்
ஆளவந்தார் - ம. பொ. சிவஞானம்
-
courtesy- rudhran - net
மாறும் ரசனை....
மீசையும் கொஞ்சமாய் தாடியும் வளர்த்து, தோளில் ஒரு ஜோல்னா பையுடன் ருஷ்ய-ஃப்ரென்ச் எழுத்தாளர்களை மட்டுமே படிப்பதாய் ஒரு பாவ்லா/ பாவனை காட்டிக் கொண்டிருந்த வயதுகளில் எனக்கு எம்ஜியார் பிடிக்கவில்லை – நடிகராக மட்டுமல்ல, அரசியல் தலைவராகவும்.
ஆனால் அப்புறம் எனக்கு எம்ஜியார் பிடித்தது...ரொம்ப வருடங்களுக்குப் பிறகு, ஐந்திலிருந்து பத்து வயது வரை பிடித்த அளவுக்கு. நான் படிக்க வீட்டிலிருந்த சின்ன மேஜையின் மேல் எம்ஜியார் படம் மாட்டி வைத்திருந்தவன் நான். எம்ஜியார் ஏன் பிடிக்கும் என்று கேட்டால்,”பிடிக்கும்” என்று மட்டுமே பதில் தெரிந்திருந்த அறுபதுகளின் முற்பகுதி அது. எழுபதுகளில் அறிவுஜீவித்வ ஒப்பனை. பிறகு ஒவ்வொரு வேடமாய் மாறி நடிப்பு மட்டுமல்ல நாடகங்களும் சலித்தபின், என் ரசனை எளிமையான நேர்மையான ஒன்றாய் மாறியிருக்கிறது (என்று இப்போது கருதுகிறேன்).
இப்போதெல்லாம் எனக்கு எம்ஜியார் பாடல்களைக் கேட்க மட்டுமல்ல பார்க்கவும் பிடித்திருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன் கூட இதை நான் இப்படி வெளிப்பையாகச் சொல்லாமல் டிஎம்எஸ்க்காக, கண்ணதாசனுக்காக, விஸ்வநாதனுக்காக என்றெல்லாம் என்னிடமேயும் காரணம் சொல்லித்தான் எம்ஜியார் பாடல்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
நான் சொல்லிக்கொண்டிருந்த காரணங்களுக்காகக் கேட்கலாம் பார்க்க முடியாது, பார்ப்பது எம்ஜியாருக்காகத்தான்!
பதின்வயதுகளுக்கு முன் ஏனென்று தெரியாமல் எனக்குப் பிடித்த எம்ஜியார் முகம், ஐம்பதுகளின் பிற்பகுதியில் அடிக்கடி தொலைகாட்சியில் தென்பட்டதாலோ மீண்டும் பிடித்திருக்கிறது. என் வயதில் எம்ஜியார் ஆடிய ஆட்டங்கள் என்னுள் வியப்பை மேலிட வைக்கின்றன.. ஒரு வேளை அது வயிற்றெரிச்சலோ என்றும் யோசிக்க விருப்பமில்லை1
இப்போது ஏன், எது பிடிக்கிறது? “தொட்டு விடத் தொட்டுவிடத் தொடரும்” என்ற டூயட்டானாலும், “உன்னையறிந்தால்..” எனும் ஸோலோவானாலும், எம்ஜியாருக்கென்று ஒரு பாணி புரிகிறது. பல் தெரியச் சிரித்துக்கொண்டே பாடுவதாய் வாயசைப்பதும், க்ளோஸப் காட்சிகளில் காமெரா நோக்கி உற்றுப்பார்த்து, கண்கள் குறுக்கிச் சிரிப்பதும் அந்த நேரத்து ஸென் ZEN. அப்போது டிஎம்எஸ், கண்ணதாசன், விஸ்வநாதன் மட்டுமல்ல, உடன் ஒலிக்கும் சுசீலா குரலும் உடன் நடிக்கும் நாயகியின் முகமும்கூட மனத்துள் வந்து விடாது. முழுமையாய் அந்தக் கணத்தை ஆக்ரமிப்பதே எம்ஜியாரின் சாகசம்.
எம்ஜியாருக்கு நடிப்பு வராது, சும்மா கதாநாயகியாக இளம் வயதுப் பெண்களை வைத்து ஒப்பேற்றினார், அழத்தெரியாது, வெவ்வேறு பாத்திரங்களிலும் வெவ்வேறு ஒப்பனைகளிலும் தோன்ற மாட்டார், தன் வயதைக் காட்டும்படி காட்சி வைக்க மாட்டார் என்றெல்லாம் நாற்பதாண்டுகளுக்கு முன் நானும் எல்லாரும் சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தவன்தான், இன்று புரிகிறது எம்ஜியாரின் வெற்றி எது, எப்படியென்று.
கண்களை நேரே பார்க்கவும், அப்போது மனத்திலும் முகத்திலும் இருக்கும் புன்னகையை விழியிலும் கொண்டு வந்ததுமே அவரது வெற்றி. இதைத் திட்டமிட்டுச் செய்திருந்தாலும் அது ப்ரம்மாண்டம்தான்!
ஒன்று பிடிக்காததால் இன்னொன்றைத் தேர்ந்தெடுக்கும் நிலை அல்ல இது, ஒன்று பிடித்திருக்கிறது என்றால் அதை வெளிப்படையாய்ச் சப்தமாய் அறிவிக்கும் நேர்மை இது. வயதும் வசதியும் தரும் சௌகரியம்.
-
-
-
-
-
-
-