Originally Posted by
Murali Srinivas
நம்முடைய ரசிகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். இப்போது வெளியாகியிருக்கும் படத்தை பற்றிய கமன்ட்களை நமது திரியில் தவிர்க்கலாமே. பாச மலர் வெளியான நேரத்தில் அவர்கள் அப்படி நடந்துக் கொண்டனர் என்பதற்காக நாமும் அதை செய்ய வேண்டாமே! இன்றைய கால கட்டத்தில் அனைத்து தகவல்களும் நமக்கு மட்டுமல்ல பொது மக்களுக்கும் தெரியும். ஆகவே யாரும் யாரையும் ஏமாற்ற முடியாது. தவறான தகவல்களை சொல்லி பிம்பத்தை வளர்க்க முடியாது.
இப்போது என்றல்ல எப்போதும் உண்மை செய்திகள் தமிழ்கமெங்கும் நடக்கும் உண்மை செய்திகள் நம் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் யார் மனதையும் புண்படுத்தும் எண்ணம் நமக்கில்லை.ஆகவேதான் நடிகர் திலகத்தைப் பற்றிய தவறான செய்திகளுக்கு மட்டும் அல்லது வரலாற்று பிழைகளுக்கு மட்டும் நாம் பதில் சொல்கிறோம்.
எனவே அனைவரும் நமது படங்களைப் பற்றி மட்டும் பதிவிடுவோம். உண்மைகளை காலம் உரக்க சொல்லும். அதை மனதில் இருத்தி பதிவிடுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்