Originally Posted by
vasudevan31355
'நீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன்' பாடலில் நடிகர் திலகம்.
ஆரம்பத்திலிருந்து இப்பாடலின் இறுதி வரை இந்த அற்புதப் பிறவி கை,கால்கள், நிற்கும் ஸ்டைல், நடக்கும் ஸ்டைல், அலட்சியம், சுறுசுறுப்பு, வேகம், விவேகம், கொப்பளிக்கும் குறும்பு, காதல், அத்தோடு சேர்ந்த ஊடல், நினைத்ததை சாதிக்கும் கெட்டிக்காரத்தனம், புத்திசாலித்தனம், கிண்டல் கேலி சேர்ந்த நையாண்டி, உடைகளின் அழகு, ஒல்லியான ஸ்லிம்மான பிரம்மிக்க வைக்கும் ஸ்வீட் அழகு என்று ஏகத்துக்கும் இந்த ராஜா நம்மை ஆள்கிறாரே!
கொடுத்து வைத்த குடிமக்கள் நாம் அல்லாமல் வேறென்ன!