http://i59.tinypic.com/2re386o.jpg
Printable View
அகர வரிசையில் மக்கள் திலகத்தின் அட்டகாசமான நிழற்படங்களை அழகாக பதிவிட்ட இனிய நண்பர் திரு சைலேஷ்
பெற்றால்தான் பிள்ளையா - ஒருதாய் மக்கள் பட ஆல்பம் பதிவிட்ட திரு லோகநாதன்
super.
பெற்றால்தான் பிள்ளையா - 9.12.1966
1966 ல் மக்கள் திலகத்தின் 9 படங்கள் வெளிவந்தது .9 வது படம் . பெற்றால்தான் பிள்ளையா . மக்கள் திலகத்தின்
சிறந்த நடிப்பில் வெளிவந்து எல்லோரின் பாராட்டை பெற்ற படம் .மக்கள் திலகத்தின் நடிப்பு - இனிய பாடல்கள்
நேர்த்தியான திரைக்கதை - அருமையான இயக்கம் என்று வந்த படம் . மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒரு பேட்டியில் தான் நடித்த படங்களில் மிகவும் பிடித்த படம் என்று இந்த படத்தை கூறியிருந்தார் . சோகமான காட்சிகளில் தானும் சிறப்பாக நடிக்க முடியும் என்று எம்ஜிஆர் நிரூபித்த படம் .. மறக்க முடியாத மக்கள் திலகத்தின் படங்களில் பெற்றால்தான் பிள்ளையா- படமும் ஒன்று .
ஒரு தாய் மக்கள் - 9.12.1971
நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த வந்த படம் .படபிடிப்பு துவங்கிய நேரத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் - ஜெய்சங்கர் - சரோஜாதேவி நடித்த சில காட்சிகள் 1966ல் எடுக்கப்பட்டு சில ஸ்டில் ஸ் பேசும் படம் இதழில் வந்தது . .மீண்டும் படபிடிப்பில் மாற்றங்கள் வந்தது .மக்கள் திலகம் - முத்துராமன் - ஜெயலலிதா என்று படம் வளர்ந்தது .
ஒருதாய் மக்கள் - மக்கள் திலகத்தின் நடிப்பு சிறப்பாக இருந்தது . எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் . குறிப்பாக
பாடினால் ஒரு பாட்டு - கண்ணன் எந்தன் காதலன் பாடல்கள் இனிமை - அருமை . படத்தில் இடம் பெற்ற வசனங்கள்
பிரமாதமாக இருந்தது .குடியின் தீமைகள் - விவசாய புரட்சி - சகோதர பாசம் என்று குடும்ப கதையாக வந்து ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திய படம் .
ஒரு தாய் மக்கள் -9.1.2 1971 இன்று முதல் விளம்பரத்தில் அடியில்
''எமது அடுத்த வெளியீடு ''
நாஞ்சில் புரடெக் ஷன்ஸ் வழங்கும்
மக்கள் திலகம் எம்ஜிஆர் - ஜெயலலிதா இணைந்து நடிக்கும்
''நம்மை பிரிக்க முடியாது ''- வண்ணப்படம்
விளம்பரத்தோடு நின்று போனது .
மக்கள் திலகம் எம்ஜிஆரின் 18 படங்களுக்கு வசனம் எழதிய திரு முரசொலி சொர்ணம் அவர்களின் இணய தளத்திலிருந்து கிடைக்கபெற்ற மக்கள் திலகத்தின் படங்களின் அபூர்வ விளம்பரங்கள் - மக்கள் திலகம் கலந்து கொண்ட திருமண விழா படங்கள் - அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி படங்கள் - உலகம் சுற்றும் வாலிபன் படப்டிப்பின் போது எடுக்கப்பட்ட தனி ஸ்டில்ஸ் -லொகேஷன் ஸ்டில் - பதிவுகளை பார்த்து மகிழ்ந்து பாராட்டிய இனிய நண்பர்கள் திரு யுகேஷ் , திரு கலைவேந்தன் - திரு ரவிச்சந்திரன் - நன்றி .