http://s17.postimg.org/98nylkw1r/DSC00882.jpg
Printable View
http://s1.postimg.org/3roft3uhr/WP_2..._07_27_Pro.jpg
நானும் எனது நண்பர் திரு ஹரிதாஸ் மற்றும் எனது புதல்வர் ராகுல்
ஆகியோர் நேற்று கோவை டிலைட் திரை அரங்கம் சென்றோம்.
மக்கள் திலகத்தின் நடிப்பில் உருவான வண்ணக்காவியமான
உழைக்கும் கரங்கள் காவியத்தை( பகல் காட்சி) கண்டு மகிழ்தோம்.
எராளமான ரசிகர்கள் வந்திருந்தனர்.
படத்தில் நாளை உலகை ஆளவேண்டும் உழைக்கும் கரங்களே
மற்றும் வாரேன் வழி காத்திருப்பேன் போன்ற பாடல்களில்
தலைவரின் சுறுசுறுப்பு அனைவரையும் கவர்ந்தது.
மான்கொம்பு சண்டைக்காட்சி அனைவரையும்
ஆச்சரியப்பட வைத்தது.
வந்திருந்த அனைவரும் ஏற்கெனவே பல முறை பார்த்து
ரசித்த படம். சென்ற வருடம் ராயல் திரை அரங்கில்
பொங்கலுக்கு திரையிட்டு இருந்தார்கள். இருப்பினும்
புதிதாக ஒரு படத்தை பார்ப்பதுபோல் ஒவ்வொரு காட்சியையும்
ரசித்து கைதட்டி தங்களின் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
இடைவேளையின்போது மக்கள் திலகத்தின் பிறந்த
தினத்தை முன்னிட்டு திரை அரங்கில் பணியாற்றும்
பணியாளர்களுக்கு கேக் வழங்கினோம்.
வருகைபுரிந்த அனைவருக்கும் சாக்லேட் வழங்கினோம்.
இப்படத்தை வெளியிட்ட திரு சந்திரசேகர் அவர்களுக்கு பொன்னாடை
அணிவித்து மகிழ்தோம்.
மக்கள் திலகத்தின் பிறந்த தினத்தில் அவரின் திரைக்காவியத்தை
ரசிகர்களோடு பார்ப்பதில் கிட்டும் மகிழ்ச்சிக்கு அளவில்லை.
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
இனிய நண்பர் திரு கலைவேந்தன் அவர்களுக்கு
மக்கள் திலகம் அவர்களுக்கு பாரத் விருது ஏன் கொடுத்தார்கள் என்பதல்ல விவாதம் என்று நினைக்கிறன்.
திரு கருணாநிதியின் செயல்பாடு குறித்துதான் பெரும்பாலான பதில். பரத் விருது தொடங்கப்பட்ட ஆண்டு 1967 என்று நினைக்கிறன். 67 முதல் 71 வரை மக்கள் திலகம் நடித்த படங்களில் மிக சிறந்த நடிப்பை 1969இல் வந்த அடிமைபெண் படத்திற்கு வேங்கய்யன் பாத்திரத்திற்கு கொடுத்திருக்கலாம் என்று அப்போதே பலர் பேசிக்கொண்டனர். அனால் அந்த வருடம் நடிகர் திரு உத்பல் தத்திற்கு கொடுக்கப்பட்டது.
பரத் பட்டம் பெற முழு தகுதி உடையவர்தான் மக்கள் திலகம் அதில் சந்தேகம் இல்லை ...ஆனால், கதாநாயகன் சிறந்த நடிப்பை வெளிபடுத்த கூடிய காட்சியமைப்போ , கதையமைப்போ 1971இல் வெளிவந்த ரிக்க்ஷாகாரன் திரைப்படத்திற்கு நிச்சயம் இல்லை கலைவேந்தன் சார் ...ஆகையால் தான் அந்த சர்ச்சை எழுந்தது !!
கருணாநிதி அவர்கள் மற்றும் மக்கள் திலகம் இடையே உள்ள கருத்தவேருபாடு 1970 கடைசி முதலே கசிந்து வெளிவரதொண்டங்கியது அனைவரும் அறிந்ததே. இத்துணைக்கும் திரு mgr அவர்கள் அண்ணா மரணத்திற்கு பிறகு நெடுஞ்செழியனுக்கு எதிராக கருணாநிதிக்கு ஆதரவு கொடுத்தும்கூட !
மு க முத்து திரை உலக வரவு, இருக்கும் மன்றங்களை மு க முத்து மன்றங்களாக மாற்ற வற்புறுத்தல் அதை தொடர்ந்த அடக்குமுறை அதனால் mgr ரசிகர்கள் மீது கருணாநிதி காட்டம் ஆகிய நிகழ்ச்சிக்கள் ஒருபுறம் மேலும் mgr அவர்களை கோபம் அடைய செய்ய...1971 தேர்தல் நேரம் ....தி மு க நல விரும்பிகள் இந்த தருணத்தில் mgr ஐ பகைத்துகொள்ளுதல் கட்சியை பலவீன படுத்தும் ஆகையால் அவரை சமாதானபடுத்துங்கள் என்று கூறியதன் பலன் தானே 1971 பரத் விருது ? இது உண்மை என்பது அக்கால நண்பர்கள் அறியாதது அல்ல !
திரு மு கருணாநிதி , திரு அன்பழகன், திருமதி சௌந்தரா கைலாசம் இந்த மூவரும் திரு சிவாஜி கணேசன் அவர்களுக்கு தொடர்ந்து மூன்றுமுறை தேசிய விருது கிடைக்கவிடாமல் camp செய்து வெற்றிகரமாக அதை சாதித்தது யாரும் அறியாதது அல்லவே.!
இதன் வெளிபாடாகதான் தான் கௌரவம் திரை படத்தில் வியெட்னாம் வீடு சுந்தரம் அமைத்த அந்த காட்சியே !!
ஆதீமுகா ஆட்சி காலத்தில் நடிகர்திலகம் அவர்களுக்கு ஏதாவது செய்தார்களா என்ற கேள்விக்கு ..தி மு க கட்சியை விட அதிகமாகதான் செய்தார்கள் என்பதே எனது கருத்து.
முதுகில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் குத்திவிட்டு ...பொய்யான இழிவு பெயர் எவ்வளவு ஏற்படுத்தமுடியுமோ அவ்வளவும் ஏற்படுத்திவிட்டு....நடிகர் திலகத்தின் பெருமையை இவர்கள் பெருமை என்று திருடிவிட்டு...இவர்கள் சிறுமையை நடிகர் திலகம் தலைமேல் சுமத்தி .....இப்போது ஊர் ஊராக சிலையை திறந்து கண்ணீர் விடும் நடிப்பை கண்டு சிவாஜி ரசிகர்கள் யாரும் ஏமாந்து விடமாட்டார்கள்.
காரணம்..இந்த சென்னை சிலை திறப்பும்.... பாண்டியில் திரு ரங்கசாமி முதலில் திறந்துவிட்டாரே என்ற அங்கலாய்ப்பில் ...தேர்தல் நெருங்குகிறதே.....ஒரு கணிசமான வாக்கு வங்கி போய்விட்டால் என்ன செய்வது என்ற அரசியல் தந்திர யோசனைதான் முக்கிய காரணம் என்பதுதான் இன்றும் முக்கால்வாசி ரசிகர்கள் கருத்து...கலைவேந்தன் சார்
rks
‘மன்னாதி மன்னன்’ - 1
விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான மன்னாதி மன்னன் நிகழ்ச்சி குறித்து எழுதுகிறேன் என்று கூறியிருந்தேன். அதிலும் ‘தலைவரை கடைசி வரை நேரில் பார்க்க முடியவில்லை’ என்று கதறிய அம்மையாரிடமிருந்து தொடங்குகிறேன் என்று சொல்லியிருந்தேன். அதற்கு காரணம் என் உள்ளத்தை அப்படியே அவர் பிரதிபலித்தார்.
ஏற்கனவே, நான் ஒருமுறை குறிப்பிட்டதுபோல, தலைவரை பல கூட்டங்களில், நிகழ்ச்சிகளில் பார்த்திருந்தாலும் நேரில் பார்த்து ஆசி பெற வேண்டும் என்பது என் வாழ்நாள் லட்சியமாக இருந்தது. அது கடைசிவரை நடக்காமலே போய்விட்டது. என் வாழ்நாளில் ஆற்ற முடியாத மனப்புண் அது. இப்போது கொஞ்சம் முயற்சி செய்தால் யாரையும் பார்க்கலாம் என்றாலும் யாரையும் சந்திக்க நான் விரும்பவில்லை. அப்படிச் சொல்வது கூட சரியாக இருக்காது. இவரைப் பார்க்க வேண்டும், ஆசி பெற வேண்டும், புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும், நண்பர்கள், உறவினர்களிடம் காட்டி பெருமைப்பட வேண்டும், வீட்டில் அந்தப் படத்தை மாட்டி பெருமிதம் கொள்ள வேண்டும், பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டும் என்றெல்லாம் நினைக்கும் அளவுக்கு என்னைப் பொறுத்த வரையில் என் மனம் கவர்ந்தவர் யாரும் இப்போது இல்லை.
விஜய் டி.வி.யில் அந்த ஆற்றாமையை சொல்லி அழுத அம்மையார் பேசியது நானே பேசியது போலிருந்தது. அவர் அழுதபோது அவரையே தொலைக்காட்சியில் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். என் கன்னங்களில் சூடாக கண்ணீர் இறங்கியபோதுதான் நானும் என்னையறியாமல் அழுததை உணர்ந்தேன். தலைவரை நேரில் சந்தித்து ஆசி பெறமுடியவில்லையே என்று ஏங்கும் என்னைப் போன்றோர் பலர் உள்ளனர் என்பதுதான் எனக்கு அந்த அம்மையார் மூலம் கிடைத்த லேசான ஆறுதல். இப்போதும், ராமாவரம் தோட்டத்தை தினமும் கடந்த செல்லும்போது தலைவரை நினைத்து கையெடுத்து கும்பிடுகிறேன் என்று அந்த அம்மையார் கூறினார். என்ன ஒரு பக்தி.
மாட்டுக்கார வேலன் திரைப்படத்துக்கு டிக்கட் எடுத்ததை அவர் கூறியது சுவாரசியமாக இருந்தது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே டிக்கட் கவுன்டர். அந்த கூட்டத்தில் எப்படியோ கவுன்டரில் கையை நுழைத்து டிக்கட் எடுத்து விட்டார். அவர் கையில் டிக்கட் உள்ளது. ஆனால், கையை எடுக்க முடியவில்லை. அந்த அளவுக்கு சிறிய கவுன்டரில் ஒரே நேரத்தில் பல கைகள். அவர் கதறியிருக்கிறார். அப்போது யாரோ ஒருவர் வந்து வெடுக்கென அவர் கையைப் பிடித்து வெளியே இழுத்திருக்கிறார். அப்படி இழுத்ததில் அந்த அம்மையாருக்கு கையில் ரத்தம் ஒழுகுகிறது. இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் கையில் டிக்கட் இருக்கிறதா? என்று பார்த்திருக்கிறார்.
காயத்தால் வலி இருந்தாலும் உள்ளே சென்று அமர்ந்ததும், தலைவர் திரையில் தோன்றி, சத்தியம் நீயே.. பாடலுக்கு முன் வரும் ‘ட்ரியோ.. ட்ரியோ...ட்ரியோ... ட்ரியோ.. டுர்ர்ர்....’ என்று ஆரம்பித்ததும் வலியெல்லாம் போய்விட்டது என்பதை உணர்ச்சி வசப்பட்டு கூறினார். அப்படியே நாம் பேசுவதைப் போல இருந்தது. இந்த அனுபவம் எனக்கும் உண்டு. ஆண் ரசிகர் இதைக் கூறினால் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டேன். ஒரு பெண் இதை கூறியது பெண்களும் எவ்வளவு உணர்வுபூர்வமாக தலைவர் மீது அன்பை பொழிந்திருக்கிறார்கள் என்ற நினைவோடு அந்த அம்மையாரை பார்த்தபோது நெஞ்சம் பெருமிதத்தால் விம்மியது. தொடர்ந்து பார்ப்போம்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம்...சேலத்தில்... http://i60.tinypic.com/2myojcz.jpg