-
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
நம் நாடு எனும் தோட்டத்திலே
நாளை மலரும் முல்லைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
நம் நாடு எனும் தோட்டத்திலே
நாளை மலரும் முல்லைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம்
அறிவூட்டும் தந்தை நல் வழிகாட்டும் தலைவன்
பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம்
அறிவூட்டும் தந்தை நல் வழிகாட்டும் தலைவன்
துணையாக கொண்டு நீ நடை போடு இன்று
துணையாக கொண்டு நீ நடை போடு இன்று
உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று
உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
நம் நாடு எனும் தோட்டத்திலே
நாளை மலரும் முல்லைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
கிளி போல பேசு இளங்குயில் போல பாடு
மலர் போல சிரித்து நீ குறள் போல வாழு
மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம்
மெய்யான தெய்வீகமாகும்
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்
விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்
தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும்
தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும் ஜனநாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர் ஜனநாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர் தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார்
தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார்
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
நம் நாடு எனும் தோட்டத்திலே
நாளை மலரும் முல்லைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
லாலல லாலல லாலல லாலல
-
1965
“எங்க வீட்டுப் பிள்ளை“யின் ஆண்டு- இதில் வரும், “நான் ஆணையிட்டால்” என்ற எம்ஜிஆர் பாடல்,மிகப் பிரபலமானது என்பது மட்டுமல்ல, மிகவும் பகடி செய்யப்பட்டதும்கூட. அதன் சக்தி வாய்ந்த, தொடர்ந்து ஒலிக்கும் தாளம், டிஎம்எஸ்சின் குரல், எம்ஜிஆரின் வசீகரத் தோற்றம், பாடல் வரிகள்- அனைத்தும் ஒன்று சேர்ந்து எம்ஜிஆரின் பிம்பத்தை நம் மனங்களில் உயர்த்தி நிறுத்துகின்றன. இடையிசையில் ஸ்பானிஷ் புல்-ஃபைட்டுகளை நினைவுபடுத்தும் கிடார் இசைப்பது இந்தப் பாடலுக்கு கச்சிதமாகப் பொருந்தி வருகிறது.
மற்றொரு மறக்க முடியாத பாடல், “அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்“, படம் “ஆயிரத்தில் ஒருவன்”
வழக்கமான விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடல்களிலிருந்து மாறுபட்ட பாடல் இது- கோரஸ் பாடுபவர்களின் பங்களிப்பு அதிகம். ஜாஸ் இசையை நினைவுபடுத்தும் டிரம்ஸ் வேறுபட்ட ஒரு கதியில் இசைக்கிறது, பியானோகூட பாடலுக்கு ரிதம் அளிப்பதாகவே இருக்கிறது.
இடையிசையில் வழக்கமான விஸ்வநாதன் ராமமூர்த்தி முத்திரை இருக்கிறது, சரணத்திலும் அதைச் சொல்லலாம்- ஆனால் இசைக்கருவிகள் தொகுக்கப்பட்ட முறையில் நம்மால் ஒரு மாற்றத்தைப் பார்க்க முடிகிறது. அவர்களின் படைப்புலகில் பெருமைக்குரிய மற்றுமொரு பாடல்.
courtesy - solvanam
-
இந்த சுதந்திர நாளில் நமக்கு விடுதலை பெற்றுக் கொடுத்த தியாகிளை போற்றி பாராட்டுவோம். புரட்சித் தலைவர் தியாகிகளுக்கு மரியாதை செய்தார். பெருந்தலைவர் காமராஜர், தியாகி கக்கன் போன்றவர்களை மதித்தார். தேசியகவிஞர் பாரதியார் மனைவிக்கு புரட்சித் தலைவர் முதல்வர் ஆனபிறகுதான் தியாகிகள் பென்ஷன் கிடைக்கச் செய்தார். அந்த பணம் முதல் மாதம் வரும்போதே அந்த அம்மா மறைந்துவிட்டார். எவ்வளவு துயரம். பாரதியார் நூற்றாண்டு விழா கொண்டாடியதோடு, டெல்லியில் அவருக்கு சிலை அமைக்க புரட்சித் தலைவர் ஏற்பாடு செய்தார். நாட்டுப்பற்று கொண்ட புரட்சித் தலைவர் மீது அய்யா ஜி.கே.மூப்பனார் உட்பட தேசியவாதிகள் உயர்ந்த மதிப்பு கொண்டிருந்தனர். புரட்சித் தலைவர் வழியில் தியாகிகளை போற்றுவோம். சுதந்திரதின வாழ்த்துக்கள்.
*******8***
தியாகி கக்கனுக்கு புரட்சித் தலைவர் செய்த உதவி
M.G.R. முதல்வராக இருந்த சமயம். 1978-ம் ஆண்டு இறுதியில் ஒருநாள். முதல்வரை சந்தித்து மனுக்கள் அளிக்க எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்ட வீட்டில் மக்கள் குழுமியிருக்கின்றனர். அவர்களிடையே ஒரு பெண்மணி தயங்கித் தயங்கி நிற்கிறார். எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் அந்தப் பெண்மணியிடம் விசாரிக்கின்றனர். தனது கணவர் பற்றிய விவரங்களைச் சொல்லி தானும் தனது குடும்பமும் படும் கஷ்டங்களை கூறி முதல்வரை சந்தித்தால் நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு வந்திருக்கிறார் அந்தப் பெண்மணி.
வீட்டில் இருந்து வெளியே வந்து மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டு கோட்டைக்கு காரில் ஏறிப் புறப்பட தயாரான எம்.ஜி.ஆரிடம் அந்த பெண்மணி பற்றிய விஷயம் தெரிவிக்கப்பட்டது. காரில் இருந்து இறங்கி பெண்மணி நின்றிருந்த இடத்துக்கே சென்று வணக்கம் தெரிவித்து வரவேற்று முதலில் அவரது கணவரின் நலன் பற்றி விசாரிக்கிறார். அவரை சாப்பிடச் சொல்லிவிட்டு, பின்னர், அவரது குடும்ப நிலைமை அறிந்து கொண்ட பின், தனது டிரைவரை அழைத்து அந்த பெண்மணியை வேறு காரில் அவரது வீட்டில் கொண்டு விட்டு வருமாறு கூறுகிறார். கவலை தீரும் என்ற நம்பிக்கையில் அந்தப் பெண்ணும் நிம்மதியாக எம்.ஜி.ஆரின் காரில் சென்றார்.
அ ந்தப் பெண்மணி... பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் அமைச்சராக இருந்த தியாகி கக்கனின் மனைவிதான். மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைப்பட்டி என்ற ஊரில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்தவர் தியாகி கக்கன். சுதந்திரப் போராட்ட வீரரான அவர் 10 ஆண்டுகள் தமிழக அமைச்சரவையில் பணியாற்றியவர்.
அமைச்சர் பதவிக் காலத்துக்குப் பின் மக்களோடு மக்களாக பஸ்ஸில் சென்றவர் என்பதிலிருந்தே பொதுவாழ்வில் அவர் எவ்வளவு புடம் போட்ட தங்கமாக வாழ்ந்திருக் கிறார் என்பது விளங்கும். வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்த கக்கனுக்கு வாடகைப் பணம் 170 ரூபாயை கூட கொடுக்க முடியாத துரதிர்ஷ்டவசமான நிலைமை.
பல மாதங்களாக வாடகை பாக்கி இருந்ததால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பினர் அதிகாரிகள். இருந்தாலும் தன் கஷ்டம் தன்னோடே இருக்கட்டும் என்று காலம் கடத்தி வந்தார் கக்கன். ஒருநாள் வீட்டுக்கு சீல் வைப்பதற்காக அதிகாரிகள் வந்துவிட்டார்கள். ‘‘வாடகையை கட்டுங்கள் இல்லை, வீட்டிலிருந்து வெளியேறுங்கள்” என்று கூறுகின்றனர். அவர்களிடம் ஒரு நாள் அவகாசம் கேட்கிறார் கக்கனின் மனைவி.
கிடைத்த ஒருநாள் அவகாசத்தில் தங்கள் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று நம்பிய கக்கனின் மனைவிதான் ஆரம்பத்தில் உள்ளபடி, ராமாவரம் தோட்டத்துக்கு சென்று முதல்வர் எம்.ஜி.ஆரிடம் தங்கள் நிலைமையை விளக்கிவிட்டு நம்பிக்கையுடன் சென்ற அந்தப் பெண்மணி.
அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. யாருமே கஷ்டப்படுவதை பொறுத்துக் கொள்ளாதவரான எம்.ஜி.ஆர்., நாட்டுக்கு தொண்டாற்றிய தியாகி கக்கனின் குடும்பம் சிரமப்படுவதை பொறுத்துக் கொள்வாரா? வீட்டு வசதி வாரியத் துக்கு கட்ட வேண்டிய வாடகை பாக்கி மொத் தத்தையும் எம்.ஜி.ஆர். அன்றே கட்டிவிட்டார். இங்கே, ஒன்றை கவனிக்க வேண்டும். முதல்வர் எம்.ஜி.ஆர். நினைத்திருந்தால் வாடகை பாக்கி முழுவதையும் தள்ளுபடி செய்து உத்தரவிடச் செய்திருக்க முடியும். ஆனால், தனது சொந்தப் பணத்தில் இருந்து வீட்டு வாட கையை கட்டியிருக்கிறார் என்றால் அதுதான் தியாகத்துக்கு எம்.ஜி.ஆர். கொடுத்த மரியாதை. தான் மட்டும் மரியாதை காட்டினால் போதாது, அரசு சார்பிலும் கக்கனின் தியாகத்துக்கு மரி யாதை செய்யப்பட வேண்டும் என்று விரும்பிய எம்.ஜி.ஆர். மறுநாளே உத்தரவு போட்டார்.
‘‘முன்னாள் அமைச்சரும் சுதந்திரப் போராட்ட வீரருமான தியாகி கக்கனின் மகத்தான தேச சேவையை கருத்தில் கொண்டு அவர் வாழ்நாள் முழுவதும் வசிக்க இலவசமாக வீட்டு வசதி செய்யப்படும். அவரது குடும்பத்துக்கு மாதம் 500 ரூபாய் அரசு உதவித் தொகை வழங்கப்படும்’’ என்பதுதான் எம்.ஜி.ஆர். போட்ட உத்தரவு.
அதோடு நில்லாமல் அந்த உத்தரவுக்கான அரசாணை சான்றிதழையும் வெள்ளிப் பேழையில் வைத்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 1979-ம் ஆண்டு நடந்த திருவள்ளுவர் தின விழாவில் கக்கனிடம் முதல்வர் எம்.ஜி.ஆர். வழங்கினார்.
எம்.ஜி.ஆர். ஒருமுறை மதுரை சென்றார். உடல் நலம் சரியில்லாமல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தனது கட்சிக்காரர் ஒருவரை பார்ப்பதற்காக அங்கு செல்கிறார். கட்சிக்காரரைப் பார்த்துவிட்டு புறப்பட்டுக் கொண்டிருக்கும்போது, உடல் நலம் பாதிக்கப்பட்டு தியாகி கக்கனும் இங்கே சிகிச்சை பெற்றுவருகிறார் என்று அவருடன் இருந்தவர்கள் தெரிவித்தனர். உடனே, எம்.ஜி.ஆரின் முகம் மாறியது. ‘‘இதை ஏன் முதலிலேயே தெரிவிக்கவில்லை?’' என்று கேட்டு, கக்கன் எந்த வார்டில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்று அறிந்து அவரை காணச் சென்றார்.
http://i67.tinypic.com/15gker.jpg
அங்கு சாதாரண அறையில் சிகிச்சை பெற்று வந்த கக்கனைக் கண்டதும் எம்.ஜி.ஆருக்கு கண்கள் கலங்கின. மருத்துவமனையில் தனக்கு தெரி விக்காமல் சேர்ந்தது பற்றி கக்கனிடம் அன்புடன் தனது கவலையை வெளிப்படுத்தியதோடு, மருத்துவர்களை அழைத்து கக்கனுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார்.
கக்கனின் மறைவுக்குப் பிறகும் அவரது குடும் பத்தினருக்கு இலவச வீடு, அரசு உதவித் தொகை, வைத்திய வசதிகள் கிடைக்கும்படி செய்தார்.
தியாகி கக்கனுக்கு செய்த உதவிக்காக முதல்வர் எம்.ஜி.ஆரை கட்சி வேறுபாடு இல்லாமல் எல்லா தரப்பினரும் பாராட்டினர். கவியரசு கண்ணதாசன் தெரிவித்த பாராட்டு சற்று வித்தியாசமானது, உண்மையும் கூட. அவர் சொன்னார்... ‘‘கக்கனைப் போன்ற உண்மை யான தியாகிகளுக்கு உதவி செய்யும் எம்.ஜி.ஆரை எந்தக் கட்சிக்காரனும் பாராட்டித்தான் ஆகவேண்டும்.’’
**********
எம்.ஜி.ஆரின் ‘நாடோடி மன்னன்’ படத்தில், ‘தூங்காதே தம்பி தூங்காதே....’, ‘ அரசிளங் குமரி' படத்தில் ‘சின்னப் பயலே... சின்னப் பயலே சேதி கேளடா...’ போன்ற கருத்தாழம் மிக்க பாடல்களை எழுதியவர் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். 1959-ம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி இளம் வயதிலேயே அவர் மறைந்துவிட்டார். அவரது குடும்பத்தினருக்கு பண உதவி செய்து ஆறுதல் கூறிய எம்.ஜி.ஆர்., ‘நாடோடி மன்னன்’ படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் அந்தப் படத்தின் பாடல்கள் ரெக்கார்டு உரிமையை அவர்களுக்கே கொடுத்துவிட்டார்!
நன்றி - தி இந்து
-
மக்கள் திலகம் எம்ஜிஆர் தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த மிகப்பெரிய போராட்டங்கள் .
http://i63.tinypic.com/o6e547.jpg
சீர்காழி நாடகம் -1959
ராமாவரம் தோட்டம் -1967
திருப்பரங்குன்றம் பொதுக்கூட்டம் -1972
அப்போலோ மருத்துவமனை - 1984
1958 நாடோடி மன்னன் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு சீர்காழியில் நடைப்பெற்ற நாடக விபத்தில் அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டு ஓராண்டு காலம் ஓய்வு எடுக்க வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டது .சக நடிகர்களின் பல படங்கள் வெற்றி பவனி வந்த நேரத்தில் எம்ஜிஆரின் எதிர்காலம் ஒரு கேள்வி குறியாக இருந்தது . மீண்டும் படங்களில் நடிக்க முடியுமா ? முன்னர் போல் ஓடி ஆடி சண்டைக்காட்சிகளில் தோன்ற முடியுமா ? பல் வேறு யூகங்கள் அவரை பற்றி எதிர் மறையாக வந்த வண்ணம் இருந்தது . ஒரு சாரார் எம்ஜிஆரின் கதை முடிந்து விட்டது என்று முடிவு கட்டி விட்டார்கள் .
மக்கள் திலகம் தன்னுடைய கடுமையான பயிற்சியினால் ,பழைய நிலைக்கு திரும்பினார் .தன் நம்பிக்கையோடு
மீண்டும் களத்தில் இறங்கினார் . நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த தாய் மகளுக்கு கட்டிய தாலி படத்தை 1959ல் ஒரே படமாக 31.12.1959ல் வெளியிட்டார் .
தன்னுடைய எதிர் காலத்தை மிகவும் துல்லியமாக நிர்ணயித்து திரை உலகிலும் , அரசியலிலும் தன்னுடைய புதிய
அணுகு முறையை துவங்கினார் .தன்னுடைய கொள்கைக்கு உட்பட்ட கதா பாத்திரங்கள் ,தன்னை நேசிக்கும் ரசிகர்களின் ஆவல்களை பூர்த்தி செய்யும் காட்சிகள் , தன்னையே நம்பி இருந்த ஸ்டன்ட் நடிகர்களின் வாழ்க்கைக்காக எல்லா படங்களிலும் புதுமையான சண்டை காட்சிகள் இடம் பெற செய்தார் . மறு புறம் தான் சார்ந்திருந்த திமுக இயக்கத்தின் வளர்ச்சிக்காக பட்டி தொட்டி எங்கும் கட்சி பிரச்சாரங்கள் செய்து அடி தட்டு மக்களிடையே மாபெரும் புகழ் பெற்று மக்கள் திலகம் எம்ஜிஆர் மேலும் உயர்ந்தார் .
தொடரும் ........
-
http://i67.tinypic.com/o8arfl.jpg
நல்ல topic சார்.
சீர்காழியில் இன்பக்கனவு நாடகத்தில் நடித்தபோது நடிகர் குண்டுமணியை மக்கள் திலகம் தூக்கிப் போடும்போது திடீரென்று எதிர்பாராமல் balance தவறிவிட்டது. மக்கள் திலகத்தின் காலிலேயே குண்டுமணி விழுந்துவிட்டார். இதில் மக்கள் திலகத்தின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுவிட்டது. இன்பக் கனவு நாடகம் பாதியில் நிறுத்தப்பட்டது. அப்போதும் எழுந்து நிற்கவே முடியாத நிலையில் வலியைப் பொறுத்துக் கொண்டு நாடகம் பார்க்க வந்தவர்களிடம் மக்கள் திலகம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். சிகிச்சையால் பல மாதங்கள் அவர் படங்களில் நடிக்க முடியவில்லை.
இந்த சம்பவம் நாடோடி மன்னன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு திருஸ்டி பரிகாரம் போல அமைந்துவிட்டது. உடைந்த காலில் கடும் பயிற்சி எடுத்து முன்பைவிட சுறுசுறுப்பான பலமான காலைப் பெற்றார். நன்றாக குணம் ஆனதும் பத்திரிகையாளர்களை கூட்டி மறுபடியும் அதே குண்டுமணியை அவர்கள் முன்னிலையிலேய அலாக்காக தூக்கி தனது பலத்தை திறனை மக்கள் திலகம் நிரூபித்தார். விபத்தால் நின்ற தாய் மகளுக்கு கட்டிய தாலி படத்திலும் மீண்டு வந்து முதல் நாள் ஷூட்டிங்கில் சண்டைக் காட்சியே படமாக்கப்பட்டது. தன் மேலே விழுந்து காலை உடைத்துவிட்டாரே என்று குண்டுமணியை மக்கள் திலகம் கோபிக்கவில்லை. கடைசிவரை குண்டுமணி அவருடனே இருந்தார்.
துப்பாக்கியால் சுடப்பட்டபோதும் சரி, அரசியலில் சோதனை வந்தபோதும் சரி, உடல் நலம் பாதிக்கப்பட்டபோதும் சரி, சூழ்நிலைகளோடும் இயற்கையோடும் எதிர் நீச்சல் போட்டு ஜெயித்தார்.
தன்னம்பிக்கையின் மறுபெயர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.! நான் பதிவிட்டுள்ள படம் அவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பிய பிறகு உடல் நலம் பாதிக்கப்பட்ட நேரத்தில் வண்டலூர் உயிரியல் பூங்கா திறப்பு விழாவில் எடுக்கப்பட்டது. (அவர் அணிந்திருக்கும் பேட்ஜை பார்த்தால் தெரியும்) பாதிப்பு இருந்தாலும் அப்பவும் எவ்வளவு ஸ்டைலாக உட்கார்ந்திருக்கிறார். அவரது தன்னம்பிக்கை உணர்வு அவரது படங்களை பார்க்கும்போது நமக்கும் வருகிறது. புகைப்படத்தைப் பார்த்தாலே நமக்கு மகிழ்ச்சியும் தெளிவும் தைரியமும் நம்பிக்கையும் வருகிறது. தெம்பு டானிக் குடித்தது போல இருக்கிறது.
-
பிரபல தொழிலதிபர் திரு. வி.ஜி.சந்தோசம் அவர்களின் 80 வது பிறந்த நாள் குறித்து பல்வேறு தலைவர்களுடன் புகைப்படங்கள் தினத்தந்தி நாளிதழில் 15/08/2016 அன்று பிரசுரம் ஆனது. அதில் புரட்சி தலைவருடன் திரு. வி.ஜி.சந்தோசம் ஒரு நிகழ்ச்சியில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள்.
http://i64.tinypic.com/2uzdjr5.jpg
-
-
இன்று (16/08/2016) பிற்பகல் 3 மணிக்கு புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த
"நல்ல நேரம் " திரைப்படம் பாலிமர் டிவியில் ஒளிபரப்பாகியது
http://i65.tinypic.com/24cxenm.jpg
-
நாளை (17/08/2016) காலை 11 மணிக்கு பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். நடித்த
"தாய் சொல்லை தட்டாதே " திரைப்படம் சன் லைப் தொலைக்காட்சியில்
ஒளிபரப்பாக உள்ளது .
http://i65.tinypic.com/sy8rpy.jpg
தகவல் உதவி: மடிப்பாக்கம் திரு. சுந்தர்.
-
மதுரை நண்பர் திரு. எஸ். குமார். 14/08/2016 அன்று சென்னையில் நடைபெற்ற
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்தார். பின்னர் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். சதுக்கத்தில் அஞ்சலி செலுத்தியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
- உடன் திரு. சத்யா (சென்னை ) சில புகைப்படங்களில் உள்ளார்.
http://i65.tinypic.com/2z9l27d.jpg