-
அன்பு சுப்பிரமணியம் ராமஜயம் சார் ,
தங்கள் ரசனை மிகுந்த பாராட்டுதல்களுக்கு என் மனமார்ந்த நன்றி. ராஜ்கபூரின் சங்கம் வெற்றிக்காக தன் சொந்த தயாரிப்பையே சாந்தியில் வெளியிடாமல் விட்டுக்கொடுத்த அவரின் பெருந்தன்மையை எப்படிப் புகழ்வது? மனிதப் புனிதரல்லவா அவர்! இந்த மாதிரி ஒரு classic movie இனி வருமா?
அன்புடன்,
வாசுதேவன்.
-
பம்மலாரின் புதிய பறவை பொக்கிஷப் பதிவுகள் (வழக்கம்போல்) அருமை. பாரகன் திரையரங்கை நடிகர்திலகம் தனது சொந்த செலவில் புதுப்பித்துக் கொடுத்தார் என்பது புதிய செய்தி. திரு.ராகவேந்திரன் அவர்களின் பதிவுகளும், மெருகூட்டச் செய்யும் திரு. வாசுதேவன் அவர்களின் புகைப்படப் பதிவுகளும் அருமை. இந்த மூவர் கூட்டணியின் வெற்றி பவனி தொடரட்டும்.
-
ADRIAM
this will be your last chance, next if it continues, it will be not good'
regards
kumar
-
டியர் சந்திரசேகரன் சார்,
நன்றிகள் சார். நம் எல்லோருடைய கூட்டணியும் ஒன்று சேர்ந்து சரித்திர நாயகனின் சாதனைகளை உலகெங்கும் பறை சாற்றிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் அவரவர்கள் பங்களிப்பில் தங்கள் முழு ஈடுபாட்டையும் தந்து அசத்துகிறார்கள். குறிப்பாக அன்பு பம்மலார் அவர்களும், திரு.ராகவேந்திரன் சார் அவர்களும் இந்ததத் திரித்தேருக்கு சாரதிகளாக நின்று சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது.
பம்மலார் அவர்களின் கடின உழைப்பு அதிசயிக்க வைக்கிறது. நன்றிகள் சார்!
அன்புடன்,
வாசுதேவன்.
-
அன்புள்ள பம்மலார் சார்,
எதிர்பார்த்து போலவே, எதிர்பார்த்ததை விட 'புதிய பறவை' பதிவுகள் மிக அற்புதமாக அமைந்துள்ளன. விளம்பர வரிசை வெகு அற்புதம். ஜெமினி லேப் நிறுவனம் வெளியிட்ட விளம்பரம், பாரகன் திரையரங்க புதுப்பித்தல் விளம்பரம் என்று எதையும் விட்டுவிடவில்லை. தமிழ், ஆங்கிலம் என்று அனைத்து விளம்பரங்களும் அசத்தலோ அசத்தல். 100-வது நாள் விளமபரம் வெகு விரைவில் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஏனென்றால் உங்களுக்கு கிடைத்த சில நிமிடங்களில் உலகெங்கிலும் உள்ள நடிகர்திலகத்தின் ரசிகர்கள் பார்வைக்கு கிடைத்து விடும் என்பது திண்ணம்.
சென்னை பாரகன் திரையரங்கம் புதிய பறவை படத்திற்காக புதுப்பிக்கப்பட்டபோது, அதன் திரை (ஸ்கிரீன்) கிட்டத்தட்ட சாந்தி தியேட்டர் ஸ்கிரீன் போலவே வடிவமைக்கப்பட்டது. பிற்காலத்தில் (70, 80களில்) பாரகனில் படம் பார்க்க வரும் அன்றைய இளம்தலைமுறையினர், 'இந்த தியேட்டர் ஸ்க்ரீன், சாந்தி தியேட்டர் ஸ்கிரீன் மாதிரியே இருக்கிறது' என்று பேசிக்கொள்வது என் காதில் விழுந்தபோதெல்லாம் அவர்களிடம், புதிய பறவைக்காக பாரகன் (சிவாஜி பிலிம்ஸ் செலவில்) புதுப்பிக்கப்பட்ட விஷயத்தை அவர்களிடம் விளக்குவதை வழக்கமாக வைத்திருந்தேன்.
ஜெமினி வண்ணநிலையத்தில் உருவான இரண்டாவது ஈஸ்ட்மன் வண்ணச்சித்திரம் 'புதிய பறவை'. (ஜெமினியில் ப்ராஸஸ் செய்யப்பட்டமுதல் வண்ணப்படம் 'காதலிக்க நேரமில்லை' என்பது அனைவரும் அறிந்தது). தொலைக்காட்சிகளில் சில அரைகுறை காம்பியர்கள், தமிழில் உருவான முதல் ஈஸ்ட்மன் கலர்ப்படம் 'காதலிக்க நேரமில்லை' என்ற தவறான தகவலைச்சொல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். ஜெமினியில் உருவான முதல் வண்ணப்படம்தான் காதலிக்க நேரமில்லையே தவிர, தமிழில் முதல் ஈஸ்ட்மன் வண்ணப்படம் 1964 பொங்கலன்று வெளியான 'கர்ணன்'திரைக்காவியம்தான். (1964 பொங்கலன்று வெளியான 'கர்ணன்' வண்ணப்படமும், 1964 தீபாவளியன்று வெளியான 'படகோட்டி' வண்ணபடமும் பம்பாய் 'பிலிம் செண்ட்டர்' கலர் லேபில் ப்ராஸஸ் செய்யப்பட்டவை). இனிமேலாவது காம்பியர்களும் அவர்களுக்கு எழுதிக்கொடுப்போரும் சரியான தகவல்களைத்தரட்டும்.
ஆவணக்காப்பகம், ஆதாரச் சுரங்கம் பம்மலார் அவர்களின் சீரிய சேவைக்கு எங்கள் அனைவரின் வாழ்த்துக்களும், நன்றிகளும்.
-
http://i1087.photobucket.com/albums/...sudevan108.jpg
(இந்த விளம்பர கட்டிங்கும் நம் பம்மலார் அவர்கள் நடிகர் திலகத்தைப் பற்றிய ஒரு சிறப்பு மலர் வெளியிடுவதற்காக கொடுத்து உதவிய கட்டிங் தான்).
நன்றியுடன்,
வாசுதேவன்.
-
DEAR KUMARESAN SIR,
I had sent some NT stills from my email ID senkan1926@yahoo.com.Did you like them?
how was the meeting held in coles park?please explain us about the decisions you have taken in the meeting for sunday gala.what is the release date of VasanthaMaaligai ?
DEAR PAMMAL SIR ,RAGHAVENDRA SIR AND VASUDEVAN SIR,
Thankyou very much for the paper ads,rare photos and movie stills of pudhiya paravai.
DEAR MURALI SIR,
your write up on paalum pazhamum was simply superb.Special thanks for the ananlysis of NT's style
-
அன்புள்ள வாசுதேவன் சார்,
'புதிய பறவை' வெளியீட்டு தினத்தை முன்னிட்டு தங்களின் நிழற்பட வரிசை படு அமர்க்களம். ஒவ்வொரு நிழற்படமும் ஒரு முக்கிய காட்சியை நினைவூட்டுகின்றன. 'உன்னை ஒன்று கேட்பேன்' பாடலில் துவங்கி, 'பெண்மையே நீ வாழ்க' வசனம் வரையில் அனைத்து காட்சிகளையும் கவர் பண்ணி விட்டீர்கள். அதிலும் சிறப்பு நிழற்படம் இரண்டும் கண்ணைக்கவரும் வண்ணம் அமைந்துள்ளன. இதுவரை சௌகாரின் கருப்பு சேலையைப்பற்றி மட்டுமே சிலாகித்துப்பேசி வந்த நம்மை, சரோஜாதேவியின் பொன்னிற சேலையும் பேச வைக்கிறது. இந்நிழற்படங்களைப் பதிப்பிக்க நீங்கள் எடுத்துக்கொண்ட ஆர்வமும், சிரத்தையும் போற்றற்குரியது.
நடிகர்திலகத்தின் திரைப்பட வெளியீட்டு தினங்கள் ஒவ்வொன்றும், நமது திரியில் திருவிழாக்கோலம் காண்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. பணி தொடர வாழ்த்துக்கள்.
-
"உன்னை ஒன்று கேட்பேன். உண்மை சொல்ல வேண்டும்"..
புதிய பறவை திரைக் காவியத்தில் இரண்டாவது முறையாக வரும் 'உன்னை ஒன்று கேட்பேன்' பாடலில் தான் எவ்வளவு மென்மை! எவ்வளவு இனிமை! என்ன ஒரு மனதை வருடும் மெல்லிசை! மிக அழகாக நகரும் உணர்வுபூர்வமான காட்சிகள். தன்னையே மறந்து, காதல்வயப்பட்ட உணர்வுகளின் சங்கமத்தால் தவிக்கும் நடிகர் திலகம்.. அதே மனநிலையில் அபிநய சரஸ்வதி. கப்பலில் பாடிய அதே பாடலை அவர் விரும்பிக் கேட்க, காதல் உணர்வுகளை அற்புதமாய் சரோஜாதேவி அவர்களும் பாடலின் மூலம் பிரதிபலிக்க ....மனதில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் காதல் தீயை அங்கே குளிர் காய்வதற்காக எரிந்து கொண்டிருக்கும் விறகுக் கட்டைகள் சாட்சியமாய் சொல்ல, நாற்காலியில் தலை சாய்த்தபடியே பாடலின் இனிமையில் நடிகர் திலகம் உறங்கிப்போக ஒரு காதல் உருவாகி காவியமாக ஆகத் தொடங்கும் அந்த அமைதியான அழகான இரவுப் பின்னணிக் காட்சி...அற்புதத்திலும் அற்புதம்.
முதல்பாடல் ஆர்ப்பாட்டமும்,அளப்பரையும் என்றால் பின்னது அமைதியும் மென்மையும் குடி கொண்டது.
மெல்லிசை மன்னரின் மிக மெல்லிய மனதை வருடிக் கொடுக்கும் மெல்லிசையும், இசைக்குயிலின் இன்னிசைக் குரலும் நம்மைத் தென்றலாய்த் தாலாட்டுகின்றன.
அந்த அற்புத பாடல் இதோ...
http://www.youtube.com/watch?v=YA50A...yer_detailpage
அன்புடன்,
வாசுதேவன்.
-
Hello Mr. PAMMALAR,
What you are doing in this thread is a very very wonderful job, which this thread needs now a days. That is giving very strong evidences for the great achievements of Thiru Sivaji Ganesan, the great artists, by publishing Newspaper ads.
Comparing with Raghavendar’s and Vasudevan’s posts, yours are very worthful tribute to the giant..
Now a days CDs and DVDs are available in every street corner for any films we want to watch. Particularly the DVDs of the wonderful movies like Pallum Pazhamum and Puthiya Paravai are purchased and kept owned by most of Tamil movie likers, infact I too have the DVDs of both the movies.
Apart from that, these movies and songs are being telecasted by all Tamil TV channels, frequently and the songs almost everyday. Also we can get them easily at a cost of Rs. 200/- if we want.
But what you are doing here cannot be get even if we are ready to spent thousand of rupees. Yes, I am mentioning the Newspaper Advertisements which were published in those days, which are all the very strong evidences of the achievements of Box Office of the the great legend. You have collected them, that too in clear copies and publishing here with great task.
Definitely your service should be appreciated by each and every Shivaji fan.
Hats off for your great job Mr. PAMMALAR.