Originally Posted by
Gopal,S.
As written by Mr.Partha sarathy,
(Quote)
திரு. கார்த்திக்:- இந்தக் கட்டுரை, நடிகர் திலகத்தின் நடிப்பை மட்டுமே ஆராய்வதால், பங்களித்த மற்ற கலைஞர்களின் பங்களிப்பைப் பெரிய அளவில் தொடுவதில்லை. ஒரே ஒரு வாக்கியத்தில் மற்ற கலைஞர்களைப் பற்றிக் குறிப்பிட்ட போது, மெல்லிசை மன்னரின் பங்களிப்பை முதலில் சுட்டிக்காட்டத் தவறி விட்டேன். பின்னர், மறுபடியும், படித்த போது, தவறை உணர்ந்து திருத்தி விட்டேன். மற்றபடி, எனக்கும், ஆதர்ச இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் தான். என்னைப் பொறுத்த வரை, திரை இசைப் பாடல்களுக்கு (குறிப்பாக, தமிழில்) டியூனுக்கு இலக்கணம் வகுத்தவர் அவர் தான் என்பேன். சினிமா பாடல்கள் 1961-க்கு முன்பு வரை, ஒன்று சாஸ்த்ரிய அடிப்படையிலோ இல்லை நாட்டுப் பாடல்களின் (folk) அடிப்படையிலோ தான் இருந்து வந்தன. பாவ மன்னிப்பு படத்திற்குப் பின்னர் தான் சினிமா பாடல்கள் வேறு ஒரு பாட்டையில் பயணிக்க ஆரம்பித்தது. அதாவது, கொஞ்சம் சாஸ்த்ரிய சங்கீதம், கொஞ்சம் மேலை நாட்டு சங்கீதம் சேர்ந்த கலவையாக. எப்படி இன்றைய கர்னாடக சங்கீதக் கச்சேரிகள் பின்பற்றுகின்ற முறையை, மறைந்த அரியக்குடி அவர்கள் முதலில் வகுத்தாரோ, சினிமாவில், இன்றைய சங்கீதத்தின் அடிப்படையை மெல்லிசை மன்னர் அவர்கள் தான் (மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி) முதலில் வகுத்தார். அந்த அடிப்படையில் தான், இன்று வரை, தமிழ் சினிமா பாடல்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதை ஏற்கனவே ஒரு முறை எழுதியிருக்கிறேன்.
Unquote
சாரதி சார்,
நீங்கள் தகுதிக்கு மீறியே விஸ்வநாதன்-ராமமூர்த்திக்கு கிரெடிட் கொடுக்கிறீர்கள். அவர்கள் trend -setter என்பது தவறான தகவல்.1952 இல் சுப்பராமன் மறைவுக்கு பிறகு ஒன்று சேர்ந்த விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஜோடி உருப்படியாக 52 - 60 இல் தந்த படங்கள் புதையல்,பதிபக்தி, சிவகங்கை சீமை,பாகபிரிவினை, மன்னாதி மன்னன்,மாலையிட்ட மங்கை ஆகியவை மட்டுமே. நீங்கள் சொன்ன trend -setter பட்டத்துக்கு தகுதியானவர்கள் சுப்பராமன்,ஜி.,ராமநாதன், ஏ.எம்.ராஜா,மகாதேவன் ஆகியோரே.இவர்கள்தான் சரியான விகிதத்தில் கர்நாடகம்,ஹிந்துஸ்தானி,வெஸ்டேர்ன்,folk கலந்து தமிழ் பட மெல்லிசையை தூக்கி பிடித்த நால்- வேந்தர்கள்.(trend -setters )
ஆனால், 60 களில்,மெல்லிசை மன்னர்கள் ,வடக்கில் சங்கர்-ஜெய்கிஷன்,நவஷாத்,நய்யார்,பர்மன்,,சலீல் சௌதரி,மதன் மோகன்,லட்சுமி-பியாரி இவர்கள் அத்தனை பேருடைய சாதனையையும் மிஞ்சி, அத்தனை variety கொடுத்தனர். பீம்சிங்,ஸ்ரீதர், சங்கர்,பந்துலு,ராமண்ணா, கோபாலக்ருஷ்ணன்,வேலுமணி ,சிவாஜி படங்களில் இசை ராஜ்ஜியம் தான். இதே காலகட்டத்தில் மாமா மகாதேவன் சாதனையும் அளப்பரியது.
ஆனாலும், 60 இல் இருந்து 65 வரை வருடம் நான்கு படங்கள் சராசரியாக கொடுத்து தங்கள் ஜோடியை ஆதரித்த சிவாஜியிடம், தனியாக வந்த பிறகு ,விஸ்வநாதன் நன்றி பாராட்டினாரா என்பது கேள்வி குறியே.தனியாக வந்த பிறகு விஸ்வநாதன் திறமை அந்த அளவு ஜொலிக்கவும் இல்லை.